முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 111

 

அத்தியாயம்: 111


செயலை செய்வதற்கு மட்டுமே 


           உனக்கு அதிகாரம் உண்டு.


பலனில் ஒரு போதும் இல்லை.


             பலன் என்பது இல்லவே இல்லை 


என்று எண்ணிக் கொள்ள.


               ‌பலனின் மீது ஆசை கொள்ளாதே.


செயல் செய்வதிலும் அவநம்பிக்கை கொள்ளாதே.. 


இது பகவத் கீதையின் பொன் மொழிகள். எப்பொழுதெல்லாம் மனம் சுணங்கி வீழ்ந்து விடுவோமோ என்ற அச்சம்  வியாபிக்கிறதோ, அப்போது இதைக் கூறி மனத்தைத் தேற்றுக் கொள்ளவார் கண்ணாயிரம். 


இன்றும் அதையே மந்திரமாக உச்சரித்த படி அவர் இருக்க சாரதா பூஜை அறை விட்டு வெளியேற வில்லை. 


இன்று இறுதி நாள். 


தீர்ப்பு நாள். 


ஜர்ஜ்மெண்ட் டே. 


இன்று தவறி விட்டால் மீண்டும் முதல் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எத்தனை வருடங்கள் எடுக்குமோ. அப்போதும் நீதி கிடைப்பது என்பது குதிரை கொம்பு தான். அனைத்தும் அனைவருக்கும் மறந்து போயிருக்கும். நினைவில் நிற்பது என்பதே இருக்காது. மறதி, அந்த நோய் மனிதனுக்குப் பிடித்திருப்பதால் தான் இன்னும் மனிதன் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறான்‌.


இன்று எல்லாம் சரியாக நடக்க வேண்டும். அந்த சிராஜ் செய்த செய்து கொண்டிருக்கும் அனைத்தையும் சட்டத்தின் முன் நிருபிக்க வேண்டும். உன்னையன்றி யார் எனக்குத் துணை என இருவரும் இறைவனை வேண்டியபடி இருந்தனர். 


"ப்பா... சாப்பாடு. " என்றபடி வந்த பாண்டிக்கும் இன்று அனைத்தும் சரியாக நடக்க வேண்டும் என்ற பெரிய வேண்டுதல் இருந்தது. 


" வேண்டாம் பாண்டி. கோர்ட்டுக்கு நேரமாது. " என இருவரும் ஒரு சேர மறுத்து விட்டு நீதிமன்றம் புறப்பட்டனர். 


"இந்தா! திங்காம கொள்ளாம இருந்தா எல்லாம் சரியாகிடுமா!. நடக்குற கழுதய என்ன செஞ்சாலும் தடுக்க முடியாது. வந்து சாப்பாட்ட உள்ள தள்ளுங்க. உங்களுக்கு வேற தனியா சொல்லணுமா. வாங்க. " என வாடியிருக்கும் அனைத்து ஜீவன்களையும் அதட்டி உருட்டி உணவை இறங்கச் செய்தார் தமிழரசி. 


கணத்த மனதுடன் அனைவரும் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தனர்.  தீஷித்தின் நண்பர்கள் உட்பட அனைவருக்குமே கலக்கம் இருந்தது. ஏனெனில் மதுவையும் தீஷித்தையும் நேற்று மாலையில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை.‌ அதனால் அவர்கள் அனைவரும் பைரவியைத் தேடி சென்றனர். 


அவளோ கையில் ஃபோனை வைத்துக் கொண்டு காதில் ஹெட் செட்டை மாட்டியபடி அமர்ந்திருந்தாள். அவளைக் கண்டதும் வேகமாக வந்த தீஷித்தின் நண்பர்கள்,


நந்திதா, "பைரவி மதுகிட்ட இருந்து எதுவும் தகவல் வந்ததா?"


ரத்தன், " எங்க இருக்காங்க.?"


கருணா, " இன்னேரம் வந்து சேந்திருக்கணுமே?."


அப்சரா, " ஏ வரல.?".


" கால் பண்ணாங்களா? " என மித்ரன் உட்பட அனைவரும் கேள்விக் கணைகளைத் தொடுக்க, பைரவியோ காதில் இருந்ததைக் கலட்டாது தலையை உயர்த்தி வான்கோழி போல் பார்த்தாள். காண்டான நந்திதா அதைப் பிடுங்கி,


"ராக்கி எங்க? " 


"அவனுக்கு நாங்க காலைல இருந்து கால் பண்றோம். ரெஸ்பான்ஸ் இல்ல. " 


"எங்க ஃப்ரெண்ட் எங்க?." எனச் சுற்றி நின்று கேட்க,


"இதுக்கு அர்த்தம் சொல்லுங்க. நான் ராக்கி பாய் எங்கன்னு நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன். " எனத் தன் ஃபோனை நீட்டினாள். 


அது தீஷித்திடம் இருந்து வந்திருந்த வாய்ஸ் நோட். அதிகாலை வந்திருக்கிறது. அப்படியெனில் காலை வரை நலமாக இருந்திருக்கின்றனர் என நிம்மதி பெருமூச்சை விட்டவர்கள், 


" என்ன பாத்துட்டே இருக்கிங்க. அத ப்ளே பண்ணி மீனிங் சொல்லுங்க. " என அரட்டினாள் பைரவி. 


" மீனிங் சொல்லவா. தீஷ் உனக்குக் கன்னடத்துல பேசியா வாய்ஸ் நோட் அனுப்புனான்? " எனக் குழம்பி போய் கேட்ட நண்பர்களே திருதிருவென முழிக்கும் படி தகவல் இருந்தது. 


அப்படி என்ன இருந்தது என்றால், " பையூ நாங்க இப்ப வரைக்கும் சேஃப் தான். காலைல பதினோரு மணிக்கு தீஷித் அங்க இருப்பான். நீ ராக்கிட்ட code red ன்னு மட்டும் சொல்லு. " என்றது மதுவின் குரல். 


அதற்கு பதிலாக பைரவி, " இப்ப எங்க இருக்கிங்க நீங்க? " எனக் கேட்க, பதிலாக தீஷித்தின் குரல் கேட்டது. 


"டாம், உன்னோட முன்னாள் கணவன, காதல் கணவான மாத்த சில ட்ரெயினிங் குடுக்க வேண்டி இருக்கு. அடுத்து பண்ணப்போற கல்யாணம் நிலைக்கணும்ல. அதுனால காதல் சின்னமா உலகமே ஏத்துக்கிட்ட தாஜ்மகால சுத்தி காட்டீட்டு சில பல மேட்டர சொல்லி குடுத்திட்டு. கூட்டீட்டு வர்றேன். ஓகே. " என்றிருக்க. அனைவரும் முழித்தனர்.‌


கருணா, "என்னடா சொல்றான் இவெ. "


அப்ரா, " தாஜ்மகால சுத்தி பாக்குற நேரமா இது. "


" அதுவும் மதுசூதனன் கூட. " ரத்தனின் முகம் அஷ்டகோணலாக மாறியது. 


நந்திதா, " எனக்கு தெரிஞ்சி எதுக்கு ஒரு பொண்ணுக்காக நாம ரெண்டு பேரும் அடிச்சிக்கணும். அதுக்கு நாம ரெண்டு பேரும் ஒன்னு சேந்திடலாம்னு அவனுங்களா மாறிட்டானுங்களோ. "


"ஐய்ய ச்சீ... கண்ராவி. அப்படி பேசாதிங்க. கேக்கவே சகிக்கல. அவங்க நல்லா இருக்காங்க. அதுவும் ஆக்ரால இருக்காங்க. வந்திடுவாங்க. " என்றவள் சாருவின் பக்கம் சென்று அமர்ந்து கொண்டாள். 


சாரு தன் கணவனின் கரத்தை‌ அழுத்த பிடித்தபடி அமர்ந்திருக்க, "பாண்டிண்ணா நடப்பது எல்லாம் நன்மைக்கே. தைரியமா இருங்க." எனப் பைரவி தான் அவ்வபோது எதையாவது பேசிக் கொண்டே இருந்தாள். 


பவதாரிணி கருப்பு அங்கியை மாட்டிக் கொண்டு, கரத்திற்குள் வழக்கிற்கு தேவையான பல காகிதங்களை மடித்து வைத்துக் கொண்டு துணிச்சலுடன் நடந்து வந்தாள். 


எதிரே நாகேந்திரன். 'நீயெல்லாம் எனக்கு நிகரா. ' என்பது போன்ற அலட்சியம் பார்வையுடன் வர. அவருக்கு பக்கத்தில் சிராஜ் பவதாரணியை முறைத்தபடி வந்தான்.


இவர்களின் வழக்கிற்கு என ஒதுக்கப்பட்டிருந்த நேரம் வர அழைப்பு வந்தது. உள்ளே சென்றமர்ந்தனர் அனைவரும். வழக்கு நடைபெற பவதாரிணி ஒவ்வொன்றாக விளக்கி கூறினாள். பொலோனியம் என்ற தனிமத்தை ஆராய்ச்சி செய்ய போய்த்தான் அரசனூர் மக்கள் பாதிப்பட்டிருக்கின்றனர் என்று அவள் கூற.


நாகேந்திரன் எழுந்தார். 


"மை லார்ட் வழக்குக்கு தேவ சாட்சி. இது இப்படித்தா இவங்களால தான் நடந்ததுன்னு குறி பாத்து அடிக்கிற மாதிரி சரியா நிறுபிக்கணும். வக்கிலம்மாவோட கற்பனைக்கும் யூகத்துக்கும் என்னோட கட்சிக்காரர் குற்றவாளியா மாறிட முடியாது. 


இவங்க சொல்ற அந்த தனிமத்த அரசனூர்ல வச்சி ஆராய்ச்சி பண்ணப்பட்டிருக்குன்னா. அந்தத் தனிமம் எப்படி வந்தது? விசாகன் கிட்ட இருந்து வாங்கப்பட்டிருக்குன்னு மேடம் சொன்னா. விசாகனும் செந்திலும் ஒரு போதமருந்து சம்பளை செய்ற கும்பலோட தலைவன். அத்தோட சில பல இல்லீகல் கட்டபஞ்சாயத்துக்கு ஆட்கள் சப்ளை பண்ற சட்டத்துக்கு விரோதமான உயிரோட இல்லாத ஒருத்தனோடத சாட்சியா எப்படி ஏத்துக்க முடியும். 


அத்தோட இது வழக்குக்கு தேவையே இல்லாதது. ஏன்னா என்னோட கட்சிக்காரர் மீது சுமத்தப்பட்ட குற்றம் அரசனூர்ல நிலங்கள வில பேசி வாங்கி டவர் கட்டி. " 


"அப்ஜக்ஷன் மை லார்ட். டவர் மட்டுமில்ல டவருக்கு கீழ கட்டின ஒரு கட்டிடம். ரிசர்ச் சென்டர். அங்க நடந்த தீ விபத்து. கதிர்வீச்சால பாதிக்கப்பட பலர கொன்னு தீ விபத்துல இறந்து போய்ட்டதா நாடகமாடிருக்காங்க." 


"தீ விபத்து எதுனால நடந்ததுன்னு போலிஸ் கண்டுபிடிச்சி சொல்லிட்டாங்களே மேடம். " 


"இல்ல அது நீங்க ஜோடிச்சு விட்ட கட்டுக்கதை. அந்தக் கட்டிடத்துல ஏதோ மர்மம் இருக்குன்னும். அந்த மர்மம் கதிர்வீச்சுன்னு தான்னு நாங்க நிறுபிக்க போராடுறோம். " 


"சரி தான் மேடம். நீங்க இப்ப நிறுபிக்க வேண்டியது மர்மம்னு சொன்னிங்களே அதுக்கான காரணத்த தான தவிர. கற்பனைகள கட்டவிழ்த்து விடுறதுக்கு இல்ல. அரசனூர் கதிர்வீச்சால பாதிக்கப்பட்டிருக்கா இல்லயா. மக்கள் இறந்து போக காரணம் கதிர் வீச்சுன்னா அதுக்கும் என் கட்சிக்காரர் சிராஜ் குப்தா கட்டின டவருக்கும் மெய்டனஸ்காக கட்டின கட்டிடத்துக்கும் என்ன தொடர்பு. அதுக்கான சாட்சிகள் மட்டும் தான் தேவ. வழக்கை திசை திரும்பாம ஆதரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். " என்றவர் வாதம் சரியாத்தான் இருந்தது. 


"மிஸஸ் பவதாரிணி அந்த ஊர் மக்கள் கதிர்வீச்சு தாக்குதலால தான் இறந்தாங்கங்கிறதுக்கான ஆதாரம் இருக்கா. எனி மெடிக்கல் ரிப்போர்ட்ஸ். " என நீதிபதி இருக்கையில் அமர்ந்திருந்த மூவரில் ஒருவர் கேள்விகளை கேட்க, 


"எங்கிட்ட இருக்கு யுவர் ஹானர். நீங்க அனுமதி குடுத்தா அத நான் சமிட் பண்ணுவேன். " என்ற தீஷித்தின் குரல் கேட்க திரும்பி பார்த்தனர் அனைவரும்‌‌. ராக்கி பாய் சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு வந்தான். 


தீஷித்தின் நண்பர்கள் நண்பனை முழுதாக கண்ட நிம்மதியில் பெருமூச்சு விட, பைரவி வேகமாக பார்வையை சுழல விட்டபடி ராக்கியின் அருகில் சென்றாள். 


இருவரும் நலமாக வந்திருக்கின்றனர். ஆனால் மது வரவில்லயே. எங்கே அவன். தன் மணாளன் பற்றிய கவலையில் இதயம் எக்குத்தப்பாக குதிக்க, " அண்ணா அவரு எங்க?" எனப் பதறிப் போய் கேட்டாள்.‌  


"பையூ மது அண்ணாக்கு எதுவும் ஆகிருக்காது. ப்ளீஸ். கொஞ்ச நேரம் அமைதியா இரு. அது கோர்ட்டு."  எனச் சாரு தான் இழுத்து வந்தாள். தீஷித்தைச் சாட்சி கூண்டில் ஏற்றி விட்டு ராக்கியும் வந்து பைரவிக்கு நடந்ததை சொல்ல முயல‌,


"சைலன்ஸ். " என நீதிபதியின் குரலில் பேச்சை இழந்தனர். 


" யாரு ஸார் நீங்க. " என ஆரம்பித்த விசாரணை தீஷித் தந்த ஆதரங்களால் சூடு பிடித்தது.


அவனிடம் தான் எல்லாம் இருந்ததே. அரசனூரில் இருக்கும் தனிமங்களை சுரண்டி எடுக்க குப்தா குழுமம் நிலங்கள் அபகரிக்கப்பட்டது முதல். அரசனூரில் பொலோனியம் என்ற தனிமத்தைத் தங்களின் தொழில் வளர்ச்சிக்காக ஆராய்ச்சி செய்தது. அதனால் இறந்த மக்களை தீ விபத்து என்று காட்டியது. அதை கண்டு பிடிக்க வேண்டி வழக்கு தொடர்ந்த கண்ணாயிரத்தையும் சுடர் விழியையும் மிரட்டி கடைசியில் சுடர் பழி தீர்க்கப்பட்டது. சுடர் கடத்தப்பட்ட அன்று தீஷித் கையில் அவள் ஒப்படைத்த மெடிக்கல் ரிப்போர்ட். அதை வெளிநாட்டு ஆய்வுக்கூடத்தில் பரிசோசித்து கதிர் வீச்சு தாக்குதல் நடந்தது என்பதை உறுதி படுத்திய காகிதங்கள் அடங்கிய கோப்பு. சிராஜ் நட்டு வைத்திருக்கும் செல் டவரில் அரசு அனுமதித்த அளவை விட அளவுக்கு அதிகமாக அலைவரிசைகளை பயன்படுத்துவது வரை தான் சேகரித்த ஆதாரம் மதுவிடம் இருந்ததே அது என அனைத்தையும் ஆதாரத்துடன் விளக்கி கூறினான். 


" அவர் சொல்றது சரி தான். அந்த தனிமம் ரொம்பவே ஆபத்தானது. " என ஆரம்பித்து ராக்கி அழைத்து வந்த நாசாவில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஆய்வாளர் எடுத்து கூற, பவதாரிணி எழுந்து தன் கடைசி வாதத்தை பேசி முடித்தாள். 


"மை லார்ட். நீர் இன்றி அமையாது உலகு. ஆனா சில நீரே பல ஆயிரம் மக்களோட உயிர் போறதுக்கு காரணமா அமைச்சிடுச்சி. நம்ம எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். மறக்க முடியாத மறக்கவும் கூடாத ஒரு சம்பவம். 


போபால் விச வாயு தாக்குதல். 


மத்தியப்பிரதேசம் மாநிலத்துல போபால்கிற கிராமத்துல ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஆரம்பிச்ச ஒரு பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கிற தொழிற்சாலைல நடந்த விபத்து. இல்ல பேரழிவு. 1984 ல நடந்த அதுல இரவு நேரத்துல மக்கள் ஆழ்ந்த உறக்கத்துல இருந்த சமயம் சில துளி நீர் அங்க சேமிப்பாக கிடங்குல வச்சிருந்த மெத்தில் ஐசோசயனேட் கூட கலந்து வேதி வினை புரிஞ்சதால விச வாயுவா மாறி காத்துல கலந்து கிட்டத்தட்ட பல லட்ச மக்கள பாதிச்சி பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களோட இறப்புக்கு காரணமா அமைஞ்சது. அதுக்கு அவங்க கவர்மென்ட் போட்ட ரூல்ஸ சரியா பின்பற்றாதது தான் காரணம்.


இப்ப எதுக்கு நான் இத இங்க சொல்றேன்னா. அலட்சியம். அரசு அதிகாரிகள்ல தொடங்கி கார்ப்பரேட் நிறுவனம் வர எல்லாருக்கும் இருக்குற அலட்சியம். 


ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் சில சட்ட திட்டங்கள விதிச்சி தான் அரசு அனுமதி தருது. ஏன்னா தொழில்ல துறைல முன்னேறாம இந்திய நாடு முன்னேற்றம் காணாது. ஆனா அந்த முன்னேற்றம் மக்களோட கல்லறைகள் மேல கட்டக்கூடாது. மக்கள் சோதனை கூடத்து எலிகளா பரிசோதிச்சி பாத்திட கூடாதுங்கிறதுக்காக அரசு பல நிபந்தனைகள பின்பற்றச் சொல்லி தான் அனுமதி தருது. 


ஆபத்து சமயத்துல செய்ய வேண்டியது, செய்ய கூடாதது, தொழிற்சாலைல அவசியம் இருக்க வேண்டியதுன்னு நிறைய விதி முறைகள் இருந்தாலும் அத கார்ப்பரேட் ஃபாலோ பண்ணுதான்னு கேட்டா அது கேள்வி குறி தான். 


அதச் சரியா, கண்கானிக்க வேண்டிய அதிகாரிகளோட வாய் பணத்தால நிரப்பப்படுதுங்கிறது தான் அவமானத்துக்குரிய ஒன்று. 


இந்த குற்றம் சாட்டப்பட்டிருக்குற A1 communication industry யும் எந்தச் சட்டத்தையும் ஃபாலோ பண்ணல. சட்டத்துக்குப் புறம்பான ஆராய்ச்சில தொடங்கி செல்ஃபோன் frequency ய அளவுக்கு அதிகமா வச்சது வர எதையும் அதிகாரிக கண்டுக்கல. நம்ம‌ நாட்டுல ஒவ்வொரு குடி மகனும் தன்னோட கடமைய சரியா செஞ்சாலே போதும். அலட்சியம் இல்லாம, யாரு நம்மல கேள்வி கேக்கப்போறாங்கிற எக்களிப்பு இல்லாம மனசாட்சியோட வேல செய்யணும். 


திரு கண்ணாயிரம் ஒரு இந்திய குடிமகனா தன்னோட கடமைய எத்தன இன்னல் வந்தாலும் எத்தன இழப்புகள் வந்தாலும் அத எதிர்‌கொண்டு சரியா செஞ்சி இங்க இந்த நீதி மன்றத்துக்கு வந்திருக்கார். 


இந்த வழக்கு காரணமா அவருக்கும் அவர சுத்தி இருக்குற பலருக்கும் ஏற்பட்ட இழப்பு அதிகம். இந்த வழக்கு இப்ப வர இறந்து போகாம உயிர்ப்போட இருக்க காரணம் சுடர்விழிங்கிற ஒரு இளம் மங்கை. ஆனா அந்த பொண்ணையும் அநியாயமா படுகொல பண்ணி வீசி உறிஞ்சிருக்காங்க. " என்ற‌ போது அப்ஜக்ஷன் சொல்லி எழுந்த நாகேந்திரனிடம் சிராஜ்ஜை கைது செய்ய வந்துள்ள சீபிஐ அதிகாரிகள்,  செந்தில் ஃபோனில் இருந்த வீடியோவைக் காட்டி சுடர் மரணத்திற்கு சிராஜ் தான் காரணம் என நீதிபதியிடம் கூறினர். 


" நீதி, தீர்ப்பு, நியாயம்  ஏழைங்களுக்கு ஆரம்பர பொருளா மாறிட்டே வருது‌ யுவர் ஹானர். எத்தன வில குடுத்தும்‌ கிடைக்க வேண்டிய நீதி கிடைக்கலன்னா அவங்க இழந்த அத்தன உயிருக்கும் மதிப்பில்லாம போய்டும். அரசனூர்ல இன்னேரு போபால் சம்பவம் நடக்க விடாம தடுக்குற அதிகாரம் இந்த நீதி மன்றத்துக்கு மட்டும் தான் இருக்கு. உங்க தீர்ப்புல தான் இருக்கு. நன்றி. " என கூறி கணத்த மனதுடன் அமர்ந்தாள் பவதாரிணி. 


அத்தனை ஆதாரங்களும் சரியானதா என ஆராய்ந்து தீர்ப்பானது மாலை மூன்று மணிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 


அனைவரும் கோர்டு அறையை விட்டு வெளியேறி வளாகத்திற்கு செல்ல பவதாரிணியைச் சூழ்ந்து கொண்டனர் செய்தி சேகரிப்பாளர்கள். 


உணவு இடைவேளை முடிந்தது மாலை நேரமும் வந்தது. ஆனால் வர வேண்டிய மதுசூதனன் இன்னும் வந்து சேரவில்லை.


எங்கே அவன்....?


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன்


பனி 110


பனி 112

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...