முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 112

 

அத்தியாயம்: 112


"எப்படி இது நடந்தது. அவெ எப்படி கோர்ட்டுக்கு வந்தான்? வந்தவெங்கிட்ட எப்படி அந்த மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் கிடைச்சது? அந்த சுடர எப்படி மீட் பண்ணான்?. எங்க நடந்தது? " என ஆத்திரம் பொங்க பொங்க கண்டதைக் கத்திக் கொண்டு இருந்தான் சிராஜ். 


அவனுக்குத் தான் தெரியுமே சுடரிடம் ஒரு மருத்துவ பரிசோதனை அறிக்கை உள்ளது என்று. அதை மட்டும்‌ தந்திருந்தால் இன்னேரம் உயிரோடு இருந்திருப்பாள். ஆனால் அது எங்கே எனச் சொல்லாது, " ஆம்பளயா இருந்தா இந்த கேஸ்ல நியாயமா நடந்து ஜெயிச்சிருப்ப. அப்படி இல்லங்கிறப்பவே தெரியுது நீ ஒரு bitchன்னு. " என அவனின் முகத்தில் காரி உமில, பெண்ணிடம் வீரத்தை காட்டுவதை ஆண்மை என்ற எண்ணத்தில் சிதைத்துவிட்டான் அவளை. 


ஆணின் உடல் தேவைக்கும், பணி விடை செய்து சேவை செய்யவும் பணிக்கப்பட்டவள் பெண் என்ற எண்ணம் கொண்ட அவனால் சுடர் விரல் நீட்டி சவால் விட்டதையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னைக் காரி உமிழ்ந்தவளை எப்படி ஒன்றும் செய்யாமல் விடுவது. ஆத்திரமும் வெறியும் ஏற பெண்ணவள் பலருக்கு விருந்தாக்கப்பட்டு பல சித்தரவதைகளை அனுபவித்தாள். உடலில் உயிரை மட்டும் விட்டு வைக்க நினைத்தான். ஆனால் பட்ட துன்பங்கள் போதும் என எமன் உயிரை உடல விட்டு பிரித்துக் கொண்டு சென்று விட்டது.


யாருக்கும் தெரியாது என இறுமாப்புடன் இருந்த சிராஜ்ஜிற்கு ஆதாரத்துடன் வந்த தீஷித்தின் வருகை பிடிக்கவில்லை.‌ 


"எங்க உமேத். இவனுங்கள அவன் பாத்துக்கிறேன்னு சொல்லிருந்தானே. எங்க அவன்." எனத் தன் அண்ணனுக்கு அழைக்க அழைப்பு எடுக்கப்படவில்லை. வெகு நேரம் ரிங் சென்று கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட நூறு அழைப்புகள் சென்றிருக்கும். அனைத்திற்கும் தானியங்கியில் பதிவு செய்த பெண் குரல் மட்டுமே பதிலாக வர, நூற்றி ஒன்றில் ஆண் குரல் கேட்டது‌.


"நீங்கள் டயல் செய்யும் வாடிக்கையாளர் தற்சமயம் வவ்வாலை போல் தலைகீழாக தொங்கிக் கொண்டு இருப்பதால் சிறிது நேரத்திற்கு பின்… இல்லை தயவு செய்து அழைக்கவே வேண்டாம். " என்ற மதுவின் குரலில் கடுப்பானவன், 


"உமேத் எங்க? என்ன பண்ண அவன? " எனக் கத்தினான் நரம்பு புரைக்க. 


"ப்பா...‌ என்ன சவுண்டு. காது கிழிஞ்சி ரத்தம் வந்திடும் போல. உன்னோட உடன் பிறப்புக்கு காதுலாம் கிழியல. பட் கண்ணு ரெண்டும் ஸ்ட்ராபெரி மாதிரி சிவந்து ரத்தம் கட்டி நிக்கிது. இரு உனக்கு நான் ஃபோட்டோ அனுப்புறேன். " என்றவன் புகைப்படத்தை அனுப்பியும் வைத்தான். அதைக் கண்ட சிராஜ்ஜிற்கு சிறு நடுக்கம் வந்தது. அப்படி ஒரு கோரமான காட்சியாக அதில் பதிவாகியிருந்தது. பேச்சற்று நின்றான் அவன்.


"ப்பா பாக்கவே படு பயங்கரமா இருக்கு, பயந்திடாத. இன்னும் கொஞ்ச நேரம் தா. அடுத்து காதுல மூக்குலன்னு எல்லாத்துலயும் ரத்தம் வந்து செத்திடுவான்.‌ மேட்டர் ஓவர். எப்படின்னு நீ உ வாயல கேக்கலன்னாலும் உன்னோட மைண்ட் வாய்ஸ் எனக்கு கேக்குறதுனால விளக்கமா சொல்றேன். கேட்டுக்க.


உனக்கு க்ராவிட்டின்னா என்னன்னு தெரியுமா? அதாம்பா புவி ஈர்ப்பு விசை. அதாவது பூமி தன்ன நோக்கி தன்னோட எல்லைக்குள்ள வர்ற எல்லாத்தையும் இழுத்து பிடிச்சி வச்சிக்குமாம். அது காரணமா நம்ம உடம்புல ஓடுற ரத்தம் கால்ல  தேங்காம இருக்க ஹார்ட், அதான் உங்கிட்ட இல்லாத ஒன்னு, இதயம் அது எல்லா உறுப்புக்கும் பம்ப் பண்ணும். சப்ளயர் மாதிரி யாருக்கு என்ன தேவையோ அந்த அளவு.  


நீ என்னைக்காச்சும் யோசிச்சிருக்கியா இதயம் ஏன் நம்ம உடம்போட நடு பகுதியான வயித்துல இல்லாம மூளைக்கி கொஞ்சம் தள்ளி நெஞ்சுல இருக்குன்னு. மூளைக்கி ரத்தத்த குடுக்கும் போது புவி ஈர்ப்பு விசைக்கி எதிரான வேலைய இதயம் செய்றதுனால அதால கொஞ்ச தூரம் தான், மேல பம்ப் பண்ண முடியும். 


இதயத்துக்கு கீழ இருக்குற பகுதிக்கு வேகமா சப்ளே ஆகிடும். அதுனால தான் ஹாட்டுக்கு கீழ நிறைய ஆர்கன் இருக்கு.‌‌ மேல ஒரே ஒரு ஆர்கன் மட்டும் தான் இருக்கு. அத்தோட அதுக்கு அதிகமான ரத்தம் தேவை. 


மனுஷன தலைகீழா தொங்க விட்டா  உடம்புல இருக்குற ஒட்டு மொத்த ரத்தமும் மூளைக்கி போய், அது குளம் மாறி தேங்கி, பனி மாறி உறைஞ்சி போய் அதோட வேலைய செய்யாமா செத்திடுமாம். அப்படின்னு ஒரு ரிசர்ச் சொல்லுது. அது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்க உங்கெண்ணே வாலண்டரியா வந்தான். ஆராய்ச்சிக்கு நான் ரெடின்னு. கப்புன்னு புடிச்சி தொங்க விட்டுட்டேன். " என மது நடத்திய உடல் கூறி அனாடமி பிடிக்காது சிராஜ் கத்தினான். 


' தலகீழ தொங்க விட்டுருக்கேன்னு சொல்றதுக்கா டா நீ இவ்ளே பெரிய க்ளாஸ் எடுத்த. ச்ச... இப்படி எல்லாத்துக்கும் அறிவியல் பாடம் நடத்துறதுனால தான் உம் பொண்டாட்டி உன்ன வெறுக்குறா போல. வில்லனுக்கு கூட டயலாக் கம்பி தான். ஆனா நீ கிளாஸ் எடுக்குற எடுக்குற எடுத்துக்கிட்டே இருக்கியேப்பா. ' உங்க மைண்ட் வாய்ஸ் இதுவா தான் இருக்கும். 


"உன்ன உயிரோட விட மாட்டேன் மதுசூதனனா. " 


"அதுக்கு நீ முதல்ல கோர்ட்ட விட்டு வெளில வா. ஏன்னா உன்ன அள்ளிட்டு போய் ஜெயில்ல விருந்து வைக்க ஒரு கூட்டமே ஆவலா காத்திருக்கு. அவனுங்க பாச மழைல இருந்து தப்பிச்சி, அப்றம் சாவகாசமா வந்து என்னைக் கொல்லு. நான் அங்க தான் வந்திட்டு இருக்கேன்‌‌. உன்ன கவர்மென்ட் கெஸ்ட்டா கைல விலங்கு போட்டு கூட்டீட்டு போற கண்கொள்ளா காட்சிய பாக்க. ஓகே பை. " என வைத்து விட,


"இந்தர். " என அவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தான் வக்கீல். 


"மாசிலாமணி எங்க?" 


" நம்ம ஆளுங்களோட கோர்க்கு வெளில இருக்கான். " 


"போடச் சொல்லு. அந்த ஜிம் பாய் உயிரோட இருக்க கூடாது. " என்று விட்டு கோபமாக அமர்ந்தவனை மேலும் கோபமேற்றவது போல் வந்தது மேதவ் குப்தாவின் அழைப்பு. தான் மாட்டிக்கொண்டது மட்டுமல்லாது தன்னையும் சேர்ந்து மாட்ட வைத்து விட்டானே என்ற ஆதங்கத்தில் பொங்கிக் கொண்டிருந்தார். 


பைரவியின் முகம் வெளிறிப் போய் இருந்தது. உடலும் உதடும் காய்ந்து போய் கிடக்க மனம் மதுவின் நலத்தை அறிய வேண்டி தவிக்க, ராக்கியிடம் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தாள் அவள். 


"என்ன நடந்தது பாய்? எதுக்கு ஆக்ரா போனிங்க. தீஷித்த எப்படி கூட்டீட்டு வந்திங்க? அவரு எங்க பாய்?. " என்றவளின் கேள்விக்கு ஒவ்வொன்றாக பதில் கூறிக் கொண்டே வந்தான் ராக்கி. 


அதாவது மதுவின் திட்டம் என்னவென்றால் அரசனூரில் நடக்க இருந்த சுரங்க திட்டம் அடங்கி டாக்குமெண்ட்டும், சுடர் ஒப்படைத்த மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்ஸும் வழக்கின் தீர்ப்பை மாற்றவல்ல ஆதாரங்கள். அதைத் தங்களிடம் தந்து விடுகிறோம் எங்களை உயிருடன் மட்டும் விட்டால் போதும் என உமேத்திற்கு ஒரு மெஜ்ஏஜ்ஜை தட்டிவிட்டவன் ஓரிடத்திற்கு வரச் சொல்லி அட்ரஸ்ஸையும் சேர்த்து அனுப்பி வைத்தான். 


இருவரையும் ஒரே நேரத்தில் கொலை செய்ய இது தான் சமயம். ஆதாரங்களும் கிடைக்கும் எதிரியும் அழிந்து போவான் என எண்ணி மது விரித்து வைத்த எலி பொறியில் தானா வந்து சிக்கினான் உமேத். 


இருவர் மட்டும் தான். அதிலும் ஒருவனால் நடக்க இயலாது. எனவே மதுவை மட்டும் சமாளித்தால் போது எனச் சாதாரணமாக எண்ணி மூன்று கார்களில் ஆட்களை ஏற்றிக் கொண்டு கையில் துப்பாக்கிகள் சகிதமாக மது சொன்ன இடத்திற்கு வந்தான் உமேத். 


அங்கு மதுவோ, ராக்கியை அழைத்து தீஷித்தை வேறு காரில் அழைத்துச் சொல்ல சொல்லி உத்தரவு போட்டவன் தனியாக உமேத்தை எதிர் கொள்ள  துப்பாக்கி தோட்டாக்களையும் ஃபுல்லெட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளையும் அணிந்து தயாராகிக் கொண்டிருந்தான். வந்தது ராக்கி மட்டுமல்ல விக்னேஷ்வரனும் அவனின் மூன்று நண்பர்களும். 


தீஷித்தை ராக்கியுடன் முதலில் அப்புறப்படுத்தி விட்டு ஐவரில், மது, கார் ஓட்டுனர் இருக்கையில் இருக்க, விக்னேஷின் நண்பன் மனோகர் காலில் கட்டுடுடன் தீஷித்தாக அமர்ந்தான். 


"எந்த ஷீனா இருந்தாலும் நமக்கு இந்தக் கால்ல கட்டு போடுறத மட்டும் விட மாட்டேங்கிறானுங்க. " என நெந்து கொண்டே அமர்ந்திருக்க விக்னேஷும் மற்ற மூவரும் மறைந்து நின்று கொண்டனர். 


அவர்களின் வியூகம் தெரியாத உமேத், சொன்ன நேரத்தில் வந்திறங்கி ஆவணங்களுக்காகக் கை நீட்ட நீட்டிய கரத்தை உடைத்து வந்திருந்த ஆட்களை பந்தாடி‌ முடித்தனர் அனைவரும். 


"இவன என்ன பண்ண? அரஸ்ட் பண்ணி இழுத்திட்டு போறிங்களா?" என விக்னேஷிடம் மது கேட்க, 


" எனக்கு இப்ப போலிஸ் வேல பாக்குற மூடு இல்ல லீவ்ல இருக்கேன். அதே நேரம் தப்பு பண்ண ஒருத்தன சும்மா விட்டுட்டும் போகக் கூடாது. அதுனால இந்த வழக்க இங்கயே முடிச்சிட்டு போய்டலாம். " என்ற விக்னேஷின் ஐடியாவைக் கேட்டு தலைகீழாக தொங்கி விட்டு விட்டு வந்து கொண்டிருக்கின்றனர். 


இப்பொழுது சிராஜ் அனுப்பிய ஆட்களை வேறு சமாளிக்க வேண்டி உள்ளது. 


" பைரவி உன்னோட ஹஸ்பெண்ட் நல்லா இருக்கான். இங்க தான் வந்திட்டு இருக்காங்க. ஓகே. அழுறத நிப்பாட்டு. " எனப் பவதாரிணி தான் அதட்டலாக கூறினாள். 


"உங்களுக்கு எப்படி தெரியும். இங்க தான் வர்றாங்கன்னு. " என்றவளிடம் விக்னேஷ் அவளுக்கு அனுப்பிய மெஸ்ஏஜ்ஜை காட்டிச் சென்றார் அவர். 


" அவ அவ பொண்டாட்டிக்கி அவெ அவெ புருஷெ சரியாத்தா இருக்கான். ஆனா எனக்கு மட்டும் என்னைக் கட்டுன தயிர்சாதம் ஒழுங்காவே இல்ல. கடமையே கண்கண்ட தெய்வம் மாதிரி பிகேவ் பண்றான். வரட்டும் அவனுக்கு. கல்யாணம் பண்ணிக்கலாம் தான சொன்னா. யாரு உன்ன பண்ணிக்கிறான்னு பாக்குறேன். " எனக் கருவிய படியே வாசலில் விழி வைத்தபடி இருந்தாள் பைரவி. 


" அவெ உன்ன மிரட்டுனதும் சட்டுன்னு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டியேன்னு நான் ரொம்ப ஃபீல் பண்ணேன் டாம். இப்ப சொன்னியே அது நல்லது. ரிவென்ஜ் எடுக்காம பண்ணிக்காத.‌ மை அட்வைஸ். " என எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றினான் தீஷித். 


" நீ எப்ப இருந்து இவங்க ரெண்டு பேரும் சேரணும்னு யோசிக்க ஆரம்பிச்ச. " என்ற கேள்வியைத் தாங்கி அவனின் நண்பர்கள் பார்க்க,


" யார் யாருக்கு எதெது எப்பெப்ப தேவையோ அதது அப்பப்ப அவங்க பக்கத்துல இருந்தாத்தா வாழனுங்கிற எண்ணமே வரும். மதுவுக்கு பைரவி தேவ. He deserves her. " என்ற நண்பனை அனைவரும் சேர்ந்து அணைத்துக் கொண்டனர். 


நந்திதா, "இப்பயாது இத புரிஞ்சிக்கிட்டியே. movies on ஆகு. அது தான் உன்னோட லைஃப்க்கு நல்லது. "


"திடீர் ஞானோதயம் எப்பருந்து வந்தது. ஏன்னா அவன அறுக்காம ஆராய்ச்சி பண்ணி அவெங்கிட்ட இருக்குற குறைய கண்டுபிடிச்சி பைரவிய அவெங்கிட்ட இருந்து காப்பாத்தப் போறதா சொன்ன. எந்த குறையும் இல்லயா. " 


"இருக்கு நிறைய இருக்கு. பட் என்னோட டாம் பாத்துப்பா. அவளோட மனசு முழுக்க அவெ மட்டும் தான். அதுக்குள்ள நுழைய சின்ன கேப் கூட கிடையாது. that's my bad luck. பொறாமையா இருந்தது மச்சான் ரெண்டு பேரையும் பாக்கும் போது. " என்ற போது தீஷித்தின் குரல் முற்றிலும் உடைந்திருந்தது. சிறு துளி கண்ணீர் எட்டிப்பார்க்க, கலங்கிய விழிகளும் பைரவியைத் தான் பார்த்தது. தெளிவற்ற காட்சிகளாக அவள் தெரிந்தாலும். அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை சொல்ல பார்வை தேவையே இல்ல. 


கணவனைத் திட்டி திட்டு வாய்ஸ் நோட் அனுப்பிக் கொண்டிருந்தாள். ராக்கி வந்து பிடுங்கிச் சென்றான் அலைபேசியை. "டபுல் டார்ச்சரு... கம்முன்னு இரேன். " என்ற ராக்கியுடன் சண்டைக்குச் செல்ல, தீஷித் அவளை மனத்தில் நிறைத்துக் கொண்டான். அது உயிர் இருக்கும் வரை அவனுக்கான ஆற்றலைத் தரும்‌‌. 


"அவ கூட சேந்து வாழ கல்யாணம் அவசியமானதா இருக்கலாம். ஆனா எனக்குள்ள இருக்குற அவளோட, நான் வாழ என்னோட காதல் மட்டும் போதும். ஏன்னா நான் பைரவிய விரும்புனேன். இப்ப இருக்குறது மிஸஸ் மதுசூதனன். நாட் மை பைரவி. நான் விரும்புன பைரவி கிடையாது. " என்றவனின் தோளில் ஆறுதலாக பல கரங்கள் வந்து விழுந்தன. 


அப்போது மது சொன்ன வார்த்தைகளும் சேர்ந்து வந்து விழுந்தது. 'நல்ல நட்பு. நல்ல குடும்பம். நல்ல வாழ்க்கை. இது மட்டும் கிடைச்சா போதும். சந்தோஷம் தானா தேடி வரும். ' அது சரியே என்பது போல் அவன் நண்பர்களுடன் ஒன்றிப் போனான். 


தீர்ப்பு சொல்லும் நேரம் வந்தது. இந்திய தண்டனை சட்டப்படி A1 communication industry மட்டுமல்லாது மேதவ் குப்தாவின் அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டு கைது செய்து தண்டனையானது வழங்கப்பட்டது. 


அது சரியான தீர்ப்பு அல்ல என நாகேந்திரன் மீடியா முன் பொங்கினாலும் சிராஜ்ஜை கைது செய்ய மது சொன்னது போல் சீபிஐ அதிகாரிகள் ஆவலுடன் காத்திருந்தனர். 


கண்ணாயிரத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி. எத்தனை ஆண்டுகளாலும் நீதி கிடைத்ததை எண்ணி உள்ளம் உவகையில் பொங்க, அதைக் கொண்டாட முடியாமல் தவித்தார். கிடைத்த வெற்றியை சுவைக்க இதற்கு காரணமாக சுடர் இல்லாதது வருத்தத்தைத் தந்தது. 


பாண்டிக்கோ இந்த வழக்கில் தந்த தண்டனையில் திருப்தி இல்லை. ‍" தன்னோட சுய லாபத்துக்காக ஒரு ஊரையே சுடுகாடாக்கி ஒரு பொண்ண நாசம் பண்ண அவனுக்கு இந்தத் தண்டன சரியில்ல. " எனக் குதிக்க,


"இது அரசனூர் கேஸ்க்கு தந்தது. சுடரக்கா கேஸ்க்கு கிடையாது. அவனோட மரணத்துல தான் சுடரோட ஆத்மா சாந்தி அடையும். கண்டிப்பா அந்தத் தண்டனைய வாங்கி குடுப்போம். " எனச் சாரு ஆறுதல் சொல்ல, எல்லாம் திட்டமிட்ட படி நலமாக சுபமாக முடிந்தது. 


சுபம் போட வேண்டிய தருணம் வந்து விட்டது. 


தொடரும் ...


💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி


பனி 111

பனி 113


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...