முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 113

 

அத்தியாயம்: 113


எனக்கான… 


சிறிய உலகில்…


நானமைத்த…


பெரிய உறவு…


நீ… 



" ஆக்ஸிடென்ட்டா. என்ன சொல்றீங்க ஸார். அவரு இப்ப எங்க? நான் உடனே பாக்கணும். " என விழி மட்டுமல்லாது தேகம் கலங்க துடிதுடித்து போய் பைரவி கேட்டாள். ஏனெனில் சிறு சிறு காயங்களுடன் விக்னேஷும் அவனின் நண்பர்களும் வந்து சேர்ந்திருந்தனர். வந்தவர்கள் சிராஜ் அனுப்பிய ஆட்களுடன் நடந்தேறிய கலவரத்தை பற்றி சொல்லி பைரவியை பயங்காட்டினர் என்று தான் சொல்ல வேண்டும். 


" விக்னேஷ் விளையாடாத. கிட்டத்தட்ட பத்துமணி நேரம், அவன பாக்காம சாப்பிடாம பயந்து போய் பனி மாதிரி உறைஞ்சி இருக்கா. மேக்கொண்டு நீ வேற எதையாவது சொல்லாத. " எனக் கணவனை அதட்டினாள் பவதாரிணி. 


"உன்னோட அவருக்கு எதுவும் ஆகிடல. ‍" என அவளின் தோளில் கரம் வைத்து வெளியே அழைத்து வந்த விக்னேஷ் எதிரே ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினான்.‌


அங்கு மதுவின் கார் நின்றுக் கொண்டிருந்தது. இல்லை அது வெறும் எலும்புக்கூடு என்று சொல்லும் அளவுக்கு தேய்ந்து நசுங்கிப் போயிருந்தது‌‌. 


"காய்லாங்கடைல போட்டா கூட எவனும் பேரிச்சப்பழம் தர மாட்டான் போலயே. " என ராக்கி கேலியாக கூற, அந்த எலும்புக்கூட்டின் அடியில் இருந்து எழுந்து வந்தான் மது. 


"ச்ச… என்ன பண்ணாலும் இனி இது ஓடாது. " எனப் புலம்பியபடி அவனும் வெகு நேரமாக அதை ஸ்டாட் செய்ய முயன்று தோற்றுக் கொண்டிருந்தான். அதை விட்டுச் செல்ல மனம் வரவில்லை. 


பைக்கில் சேலை கட்டி ஏறி அமர சிரமமாக இருக்கும் என்று ஆசை மனைவிக்காக வாங்கியது அது. எனவே எப்படியேனும் சென்னை வரை அதை ஓட்டிச் செல்ல நினைத்து கையில் சில பல tool லுடன் காரைச் சுற்றி சுற்றி வந்தவனைக் கண்டு வேகமாக ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள் பைரவி.. 


திடீரென தன்னை பின்னால் இருந்து அணைத்த மனைவியின் காதலயும், அவளின் இதயம் துடிக்கும் ஓசையையும் அவளைப் பார்க்காமலேயே ஆடவனால் உணர முடிந்தது.‌ திரும்பி தன்னவளை மார்போடு அணைத்தவனின் கிழிந்து போன சட்டையை கண்ணீரால் நனைத்தாள் பாவை.


அந்த நொடி இருவருக்குமான இதம் தரும் நொடி. காதலை உணரவும் உணர்த்தவும் கிடைத்த நொடி. 


சில நிமிடங்கள் தான் பின் சரமாரியாக திட்ட ஆரம்பித்து விட்டாள்.‌


" கொஞ்சம் கூட அறிவில்லயா உங்களுக்கு. நான் பயந்து போய் உங்களுக்காக காத்திருப்பேன்னு தெரிஞ்சும் சாவகாசமா இந்த டப்பாவ நோண்டிட்டு இருக்கிங்க. பழி வாங்குறீங்களா. இல்ல கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டா இனி அவளக் கண்டுக்காம இருக்கலாங்கிற அசால்ட் வந்துட்டுச்சா." என அழுது கொண்டே பேச, மதுவிற்கு அவளின் நிலை புரிந்தாலும்,


"ஏன் இப்ப ரோட்டுல நின்று ஸீன் போடுற. நான் டியூட்டில இருந்தேன். உனக்கு தெரியும்‌ தான. " எனச் சாதாரணமாக சொல்ல, 


"ஹாங். தெரியும்‌ தான். ஆனா அது முடியவும் என்னைத் தான முதல்ல பாத்திருக்கணும். பாக்கலன்னாலும் பரவாயில்லை ஒரு கால், மெஸ்சேஜ் இப்படி எதையாது செஞ்சிருக்கலாம்ல. வழக்கம் போல என்னோட எந்த ஒரு ஃபீலிங்ஸ்குமே உங்க கிட்ட மதிப்புங்கிதே இல்ல. என்னோட பயம் பதபதப்பு இப்படி எதுவுமே உங்களுக்கு புரியாது. 


குட் பாய். இனி உங்கள நான் பாக்கவே விரும்பல. ச்ச.. நான் ஒரு பைத்தியக்காரச்சி. கைல ஃபோன வச்சிட்டு இப்ப கால் வரும் அப்பறம் கால் வரும்னு ரெண்டு நாளா தூங்காம சாப்பிடாம நோம்பு கிடந்தேன் பாரு. என்னை சொல்லணும். " எனப் புலம்பிய படி நடக்க,


"சாப்பிடலயா!! டெடி என்ன சொல்ற. " என நண்பனை பார்த்தான்.


"நான் குடுத்தேன் மச்சான். தட்டு நிறைய உள்ள போச்சி. காலைல நாலு செட் பூரி. " என ராக்கி வேகமாக கூறினான். ஏனெனில் அவனைத் தான் மனைவிக்கு காவலாக வைத்து கவனித்துக் கொள்ளும்‌ படி செய்திருந்தானே. தினமும் அவளின் நலத்தைப் பற்றி அவனிடம் தான் வினவுவான். 


" பாய்க்கிட்ட கேட்டு என்ன பிரயோஜனம். பாய்யா உங்களுக்கு  பொண்டாட்டியா இருக்காரு. எங்கிட்ட பேசிருக்கலாம்ல. நான் உங்க மேல வச்சிருக்குற லவ்ல ஒரு சதவிகிதமாது உங்களுக்கு எம்மேல இருக்கும்னு நினைச்சது எந்தப்பு. " என்றபடி நடந்தவளைப் பின் தொடர்ந்தான் மது.


"டெடி நில்லு. இது பப்ளிக் ப்லேஸ். அதுலயும் கோர்ட். என்னை கெஞ்ச வைக்காத. " என்றாலும் கெஞ்சிய படியே பின்னால் சென்று கரம் பற்றி இழுத்தான். போன முறை போல் இந்த முறையும் அவள் கத்தி ஊரைக் கூட்டி கோர்ட்டிலேயே பஞ்சாயத்தை இழுத்து வைக்க, அவர்களின் சண்டையை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியது. 


" பைரவி இங்க பிரச்சன வேண்டாம். நாம தனியா பேசலாம். " என அங்கிருந்து இழுத்துச் செல்ல பார்த்தான். அவளும் போட்ட நாடகம் போதும் என்ற முடிவுடன் கணவனை கெஞ்ச வைக்காது அவன் இழுத்த இழுப்பிற்கு நடந்து சென்றாள். ஆனால் அவன் நின்று விட்டான். 


" பிரச்சன கம்பிள். நீங்க எங்க இங்க? ஜோடியா கைய பிடிச்சிட்டு நிக்கிறிங்க. உங்களுக்கு தான் நான் டைவர்ஸ் குடுத்திட்டேனே. அப்றமும் ஏன் ரெண்டு பேரும் ஒன்னா சுத்துறிங்க. உங்கிட்ட வம்பு பண்றானா இவெ. " எனப் பைரவியை பார்த்து கேட்டபடி வந்தது முதல் அத்தியாயத்தில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி அப்போதைய மதுவிற்கும் பெரும் உதவி புரிந்த குடும்பநல நீதிபதியம்மா. 


" ஐய்யோ ஜர்ஜம்மா நீங்களா! நீங்க நினைக்கிற மாதிரி பெரிய பிரச்சனலாம் எதுவும் இல்ல. சின்ன பிரச்சன தான். ஆனா ஆரம்பத்துல பிரச்சன சைஸ் சின்னதா தான் இருக்கும். அடுத்து அத இவளே பெரிய பிரச்சனையா ஆக்கிடுவா. இப்ப கூட பாருங்க எனக்கு என்ன பிரச்சனன்னு கொஞ்சம்‌ கூட யோசிக்காம. அவளோட பிரச்சனைய மட்டுமே பெரிய பிரச்சன மாதிரி பேசி பிரச்சன பண்றா மேடம்.‌ கொஞ்சம் பிரச்சன பண்ண வேண்டாம்னு நீங்களே சொல்லி புரிய வைங்க மேடம். என்னோட பிரச்சன முடிஞ்சிடும். ப்ளீஸ்.  " என்க, 


'மறுபடியும் பிரச்சனைய பத்தி பிரச்சாரமா. ' எனத் தலை சுற்றி அவர் வேகமாக அந்த இடத்தைக் காலி செய்ய நினைத்து நடக்க, 


"உங்களுக்கு நாந்தான பிரச்சன. என்னை விட்டுட்டா பிரச்சன இருக்காது. " எனக் கரம் உதறி விட்டு பைரவி நடக்க, மதுவின் குரலோ அவனோ அவளைப் பின் வரவில்லை. 


'என்ன!! காணாம போய்ட்டானா. ' எனப் பைரவியுடன் சேர்ந்து நாம் மதுவைத் தேடினால், அவன்… அவன்… 


'இவனுக்கு என்ன டேஸ்ட்டுனே தெரியல. பைரவிய விட்டுட்டு அந்த ஜர்ஜம்மா பின்னாடியே போறான். ' மீ.


பாவம், அந்த ஜர்ஜ் தன் இத்தனை வருட சர்வீஸ்ஸில் இப்படி ஒரு விசித்திர வினோத தம்பதியினரைப் பார்க்காத காரணத்தால் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார். 


கணவன் மனைவியை கொடுமை படுத்துவான். இல்லையேல் மனைவி படுத்துவாள். இங்கு இருவருமே சேர்ந்து கொண்டு அடுத்தவர்களை அல்லவா படுத்துகிறார்கள். 


எதற்கு விவாகரத்து வாங்கிச் சென்றான் என்று அவருக்கு தெரியாது. இப்போது கையை பிடித்து இழுத்துக் கொண்டு நிற்கிறான். அதற்கான காரணமும் தெரியாது புலம்பிய படியே வந்தவர் தன் காரில் ஏறி அமர, கதவை மூடும் முன் மதுசூதனன் வந்து சேர்ந்தான். 


" நானே உங்கள பாக்கணும்னு நினைச்சேன் மேடம். ப்ளீஸ் உங்க அட்ரஸ் இருந்தா குடுத்திட்டு போகங்களே. ஃபோன் நம்பர் கிடைச்சா கூட போதும். நானே விலாசத்த கண்டு பிடிச்சிப்பேன்.‌" 


" எதுக்கு விலாசம். வீட்டுக்கு வந்து பிரச்சனை பத்தி பேசி பிரச்சன பண்ண போறியா. " என அவர் காண்டாக கேட்க, 


"ச்சச்ச… இனி பிரச்சனையே பண்ணக்கூடாதுன்னு தான் நாங கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். அதுக்கு பத்திரிக்க வைக்க கேட்டேன். " 


'பாவம். இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய பாழாக்கப் போறதுக்கு எவ்ளோ ஆர்வம். ' என அவனை ஏற இறங்க பார்த்தவரின் பார்வைக்கான அர்த்தத்தை மது புரிந்து கொண்டு, 


" கவலையே படாதிங்க மேடம் இந்த முறை நான் பண்ணிக்கப் போற கல்யாணத்துல விவாகரத்தே வராது. நம்புங்க. " 


"யாரு பொண்ணு?" 


"அது எனக்கு விவாகரத்து வாங்கி குடுத்திங்களே அந்த பொண்ணையே பண்ணிக்கலாம்னு இருக்கேன். " என்றவனை பைத்தியமா இவெ, 


'அவளயே கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எதுக்கு டா டைவர்ஸ் வாங்கனும். ' என நினைத்தவர் அதை அவனிடம் கேட்கவில்லை. கேட்டால் கதை அளப்பானே அதனால் அந்த கேள்வியை தவிர்த்து விட்டு. 


"வாழ்த்துக்கள் பா. இது என்னோட வீட்டு அட்ரஸ். " எனத் துண்டு சீட்டில் விலாசத்தை எழுதி தந்து விட்டு அவனை இறங்கி விட்டார். 


"தங்கமான மனசு. இல்ல அவங்க ஒரு தெய்வம். நடமாடும் தெய்வம். கேட்டத கேட்ட உடனே குடுத்திடுறாங்க. அன்னைக்கி டைவர்ஸ் கேட்டேன். இந்தா வச்சிக்கன்னு தந்தாங்க. இன்னைக்கி கல்யாண பத்திரிக்க அனுப்ப அட்ரஸ் கேட்டேன். அதையும் தந்திட்டு போறாங்க.‌ " என வாய் விட்டு புலம்பியபடி தன் கூட்டத்துடன் இணைந்து கொண்டான். 


அனைவரும் கால் டாக்சி புக் செய்து ஏறிக் கொண்டனர். பைரவி ராக்கி மதுவைத் தவிர.


" கல்யாணமா?. எப்ப? யார் கூட மச்சான்?. " ராக்கி பாய் தான் அது. 


" உ தங்கச்சி கூட. வர்ற வெள்ளிக் கிழம. " 


"அதாவது நாளக்கழிச்சி வர்ற வெள்ளிக்கிழமை. " 


"ஆமாண்டா. மண்டம். பூ. டெக்கரேஷன்னு நமக்கு நிறைய வேல இருக்கு. ஏறு டாக்ஸில. சீக்கிரம் சென்னை போகணும்." 


"ஹலோ... ஹலோ... ஹலோ. எங்க அவசரம கிளம்புறீங்க. "  


"கல்யாணம்.‌" 


"நான் சொன்னேனா?. " 


"சரின்னியே. " 


" அது அப்ப. " 


"அப்ப இப்ப. " 


"யோசிக்க வேண்டி இருக்கு. " 


"என்னென்னு. " 


"அதா யோசிக்கணும்னு சொல்றேன். என்னன்னா என்ன அர்த்தம். " 


"அதா ஊடால ஒரு நாள் இருக்கே 24 மணி நேரம். அதுல யோசிச்சுக்க. " 


" நான் எவ்ளோ நேரம் வேண்ணாலும் யோசிப்பேன். யோசிக்கிட்டே இருப்பேன். உங்களுக்கு என்ன. " எனக் குழந்தைதனமாக சண்டை போட,


" அதா நம்ம ராக்கி பாய்க்கும் தாமரைக்கும் அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருக்கே. அதுவர யோசிச்சி அந்தக் கல்யாணத்தப்ப உங்க கல்யாணத்தப் பத்தி நல்ல முடிவ சொல்லு. இப்ப வாங்க. சாரதாம்மாவும் மாமாவும் சுடரக்காவோட நினைவிடத்துக்கு போகணும்னு சொன்னாங்க. ப்ளைட்க்கு நேராச்சி. " எனச் சொல்லி சண்டைக்குத் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தாள் சாரு. 


பைரவியின் யோசனையிலும் மது அவளைச் சீண்டி சீண்டி சின்ன சின்ன சேட்டைகள் செய்வதிலும் அந்த ஒரு மாதமும் ஓடியது. 


நம் ராக்கி பாயின் திருமணம்.


மதுரையில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு சென்னையில் நடக்கவிருக்கும் வரவேற்பிற்கும் மதுரையில் நடைபெற இருக்கும் கல்யாண வைபவத்திற்குமான வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. 


தன் ஒரே உயிர் நண்பனின் ஒரே திருமணம். அதுவும் முதல் திருமணம் அதை மதுசூதனன் அனைவரும் வியக்கும் படி ஏற்பாடு செய்திருந்தான். மதுரையில் நடந்தாலும் ராக்கியின் உறவாக நின்றது மதுசூதனன் தான். 


குளத்தில் மலர்ந்திருக்க வேண்டிய தாமரை மணமேடையில் செந்தாமரை செல்வியாய் பூத்திருக்க, மணமகனான நம் ராதாகிருஷ்ணனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. 


'ஒரு வழியாக நமக்கும் கல்யாணம் ஆகப் போது. ' என்று பூரித்துப் போனான். அத்தோடு தன் மனத்தைப் புரிந்து கொண்டு தன் வாழ்வில் இணையும் தாமரையுடன் முழு வாழ்க்கையையும் வாழ தயாராகி விட்டான்.


ராக்கியின் அன்னை, தந்தை, அத்தை, அவரின் மகன், மகள் என அவனின் சொந்தங்கள் முன்னிலையிலும் தாமரையின் உறவினர்களைச் சாட்சியாய் வைத்து மாலை மாற்றி மங்கள பொன் நாண் பூட்டி தன் சரி பாதியாய் ஏற்றுக் கொண்டான் ராதாகிருஷ்ணன்.


அணிந்திருந்த மாலைக்கு பின் பிறரின் கவனத்தைக் கவராது மனையாளின் கரம் பற்றி விரல் அழுத்தி செல்ல சேட்டைகள் செய்து தாமரையை நிஜத் தாமரையாக நிறம் மாறச் செய்திருந்தான். 


"பாய் பாய் இது மண மேட. சுத்தி ஊருக்காரனுங்க இருக்காங்க. இப்படி பப்ளிக்கா வழிஞ்சா மாப்ள காஞ்சி போயிருக்காருன்னு கண்ட படி பேசுவாங்க. " என்றபடி கையில் பரிசுடன் மேடைக்கும் வந்தாள் பைரவி. 


"இனி எவெ பேசுற பேசுற பேச்சுக்கும் நான் காத குடுக்குறதா இல்ல. ஏன்னா she is my wife. all rights I have. " எனத் தோளைக் குளுக்கியவன் காதில்,


"பாய் இந்த கிஃப்ட்ட நீங்க ரெண்டு பேர் மட்டும் தனியா இருக்குற சமயத்துல ஓப்பன் பண்ணுங்க. குடும்பமா உக்காந்து தான் கிஃப்ட்ட பிரிப்போம்னு சொல்லி உங்க மாமனாரு குடும்பமோ இல்ல உங்க குடும்பமோ கூப்பிட்டாலும் இத அடுத்தாளுங்க முன்னாடி ஓப்பன் பண்ணிடாதிங்க. இந்த கிஃப்ட் உங்க ரெண்டு பேருக்கும் மட்டும் ஸ்பெஷல்லானது. " என ஒரு மார்க்கமாக சொல்ல, கிஃப்ட் கையில் வாங்கியவன் அதைக் குளுக்கி பார்த்தான்.


'அப்படி என்னத்த வச்சிருக்குப்போறா. வால் க்ளாக்கா இருக்கும். இல்ல கண்ணாடி டின்னர் செட்டா இருக்கும். இதுக்கு போய் ஓவர் பில்டப்பு. ஒரு வேளை வேற மாறி ஏதாவது. இருக்கும் இருக்கும் பைரவி சொன்னா சரியாத்தா இருக்கும். ' என அந்தப் பரிசை பிறர் கையில் கொடுக்காது கவனமாக பார்த்துக் கொண்டான். 


"பாய் உங்க அகாடமி ஆளுங்க மட்டும் தான் வந்திருக்காங்க. ஏன் ஏஜென்சில இருந்து யாருமே வரல? சிதம்பரம் அங்கில் கூட வரலயே. ஏன்?" எனச் சாரு கேட்க, 


"உனக்கு தெரியாதா?" என ஆரம்பித்த ராக்கி மது ரூபியைத் திருமணம் செய்யாததால் ஏஜென்சியில இருந்து விரட்டி அடிக்கப்பட்ட கதையை கூற, பைரவிக்கு அது புதிய செய்தியாக இருந்தது. 


" இப்போதைக்கி எங்க வீட்டுல தான் தங்கிருக்கான். ஜாமான் எல்லாம் அகாடமி ஸ்டோர் ரூம்ல இருக்கு. " என்ற போது பைரவி வேகமாக தன் மணாளனைத் தேடிச் சொன்றாள். 


திருமணம் முடிந்து விட்டது அல்லவா. அடுத்து என்ன?. மொய் தான். பாண்டி வந்தவர்கள் தந்த கவரின் மீது எழுதியிருந்த பெயரையும் விலாசத்தையும் சொல்ல, மது ஒரு நோட்டை எடுத்துக் கொண்டு பெயரை எழுதிக் கொண்டிருந்தான். 


இருவரின் முன் வந்து நின்ற பைரவியை மது ஏறிட்டு பார்த்து, " உங்கண்ணனெ கல்யாணத்துக்கு மொய்யா எவ்ளோ தரப்போற. " எனக் குறும்பாய் கேட்டான் மது. 



"கொஞ்சம் அந்தப் பக்கமா வாங்க… நிறையா தர்றேன். கட்டு கட்டா. " என அவனை முறைபடி சொல்லி முன்னே நடக்க, மது புன்னகையுடன் எழுந்து பின்னே சென்றான். 


தொடரும் ...


💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி


பனி 112


பனி 114

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...