அத்தியாயம்: 114
சமையல் கூடத்தில் நின்றவள் திரும்பி கணவனை நோக்கி கோபமாக,
"அவங்களே உங்கள ஏஜென்சிய விட்டு போகச் சொன்னாலும் நீங்க அ அத விட்டு வந்திங்க. அது உங்களோட பல வர்ஷ உழைப்பு. உங்க வேர்வைல வளந்த அதுக்கு வேற ஒருத்தே ஸ்டிக்கர் ஒட்டி தன்னோடதா மாத்திக்கிறத எப்படி உங்களால வேடிக்கை பாக்க முடியுது. " எனப் படபடவென பொரிந்து தள்ளிவிட்டாள் பெண்.
அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எனக்குப் பின் நீ தான். நீ மட்டும் தான். என்று சொல்லி சொல்லி மதுவிற்கு கிடைத்த பெரிய பெரிய வேலை வாய்ப்புகள் அனைத்தையும் தட்டி விட்டவர் சிதம்பரம்.
"அது சித்தப்பா.. "
"அவரு சொன்னா உடனே தலைய அசச்சிருவிங்களா. இத்தன வர்ஷமா தன்னோட பையன் மாதிரின்னு சொல்லிட்டு இருந்தவங்களால எப்படி உங்கள ஏஜென்சில இருந்து வெளில அனுப்ப மனசு வந்தது. இப்ப தங்க வீடு கூட இல்லாம ராக்கி அண்ணா வீட்டுல. ச்ச… எப்படி மாமா?" என்ற போது பைரவிக்கு கண்ணீர் வடிந்தது.
சிறு தூசி தன்னைச் சுற்றி கண்ணில் கண்டால் கூட மதுவிற்கு பிடிக்காது. இப்போது மொட்டை மாடியில் கட்டாந்தரையில் துயில் கொண்டிருக்கிறான். அதுவும் இயற்கை அமைத்துக் கொடுத்து ஏசியில் ப்ளாஸ்டிக் சீட்டுகளைக் கொண்டு கூடாரம் அமைத்து.
மெத்தையின் போர்வை மடிப்பு கசங்கினால் கூட உறக்கம் வராது அவனுக்கு. ஆனால் கடந்த ஒரு மாதமாகவே மெத்தையின்றி உறங்குகிறான் தன் கணவன் என்ற நினைப்பு அவளை அழச் செய்ய,
"ஏய் இப்ப எதுக்கு டி ஓவர் சீன் போடுற. நிப்பாட்டு அழுகைய. " என்றவனைக் கண்டு கொள்ளாது அவள் கண்ணீர் வடிக்க, சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் நிமிர்ந்து வேடிக்கை பார்த்தனர்.
'இவ மறுபடியும் தர்மடி வாங்கி குடுத்திடுவா போலயே. ' என நினைத்தவன் பிறருக்கு காட்சி பொருளாக நிற்காது அவளை மணமகன் அறைக்கு இழுத்து வந்து கதவை மூட, வேகமாக வந்து அணைத்துக் கொண்டாள் பைரவி.
"வேண்டாம் மாமா. இப்படி யாருமில்லா தனியா நீங்க மொட்ட மாடில தங்குறது எனக்கு பிடிக்கல. கஷ்டமா இருக்கு. வாங்க. நாம நம்மோட அப்பார்ட்மெண்டுக்கு போகலாம். உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்." எனச் சொல்லி அவனின் மார்பில் தலைசாய்ந்தாள்.
"கல்யாணம் பண்ணிக்கலாம்னு சிரிச்சிட்டே சொல்லணும் டெடி. அழுதிட்டு இல்ல. " என்றவன் மனைவியின் கன்னத்தை கரங்களுக்குள் ஏந்தி நெற்றி முட்டி அதில் தன் இதழைப் பதித்தெடுத்தான்.
"ஏன் இத எங்கிட்ட சொல்ல. "
" சொன்னா வருத்தப்படுவியே. " என்றவனின் பேச்சில் 'சொல்ல நீ விடலயே. ' என்ற பொருள் மறைந்திருந்ததை உணரவில்லை அவள்.
" அதுக்குன்னு சொல்லாம இருக்குறதா. எங்கிட்ட மட்டும் சொல்லுவிங்க 'எதையும் மறைக்காத ஓபனா இரு'ன்னு. நீங்க அத செய்ய மாட்டிங்க. நான் ஒரு கிறுக்கு. எப்ப பாத்தாலும் என்னைப் பத்தி மட்டுமே நினைச்சிட்டு உங்க பக்கத்து காரணத்த யோசிக்காம சண்ட போட்டுட்டே இருந்திருக்கேன். நான் நல்ல வைஃப்பே கிடையாது. " எனத் தன்னைத் தானே திட்டிக் கொள்ள, மது அதைக் குறுஞ்சிரிப்புடன் பார்த்து ரசித்தான்.
"இப்படி ஒருத்தவங்க தன்ன தானே திட்டிக்கிட்டா, ' அப்படிலாம் இல்ல. வீணா கற்பன பண்ணி உனக்கு நீயே பழி போட்டுக்காத.' ன்னு ஆறுதல் சொல்லணும். அத விட்டுட்டு ரசிக்கக் கூடாது. " என்றவளைத் தன்னுடைய மார்பில் சாய்த்தவன்,
" நமக்கு எதுக்கு டெடி ஏஜென்சி. அடுத்தவெ குடுக்குற காசுக்காக, நாய விட மோசமா நடத்துறவிங்க கிட்ட கை கட்டி வேலை பாக்க பிடிக்காமத்தான் அகாடமியே ஆரம்பிச்சேன். நம்ம அகாடமி. உன்னோட அகாடமி அது. அது போதும் நாம குடும்பம் நடத்த."
"ஆனா அதுவும் ஏகப்பட்ட பிரச்சனல ஓடிட்டு இருக்குறதா பாய் சொன்னாறே. கடன் இருக்காம். லைசென்ஸ் கேன்சல் ஆகிடுச்சாம். விமன் அப்யூஸ்னு கேஸ் கூட இருக்காமே. " எனச் சிராஜ் செய்து வைத்த சிக்கலைச் சொல்லி தலை தூக்கி விழி விரிய கேட்க,
" நம்ம கிட்டத்தா பவர்புல்லான ஃபோலிஸ் இருக்கே. சட்டத்த காக்கும் தேவதை அவங்க. கைல துப்பாக்கிய எடுத்து டம்மு டம்மு எல்லாத்தையும் சுட்டு தள்ளிட்டு போய்ட்டே இருப்பாங்க. என்னோட வைஃப்பா அவங்க எனக்காக என்ன வேண்ணாலும் செய்வாங்க. " என நீ இருக்கையில் கவலை எனக்கேது என்று சொல்ல, அது உள்ளுக்குள் உவகையைத் தந்தாலும்,
"ஓ... ஸாருக்கு கல்யாணம் ஆகிடுச்சா. " எனக் குறும்பாய் கேட்டாள்.
"பண்ணிக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு. மேடம் சம்மதிச்சா. " எனக் கண்சிமிட்டினான்.
"ப்ரப்போஸ் பண்றிங்களா? மேரேஜ்காக?. "
"எஸ்... கல்..யாணம் பண்ணிக்கலாமா. " என்றவனின் குரலில் தெரிந்த மென்மை பெண்ணவளின் கன்னங்களைக் சூடாக்கினாலும்,
"உங்க மேரேஜ் ஃப்ரொபைல பாக்காம என்னால எதுவும் சொல்ல முடியாது. ஏன்னா நீங்க தான் கண்டிஷன் போட்டு கல்யாணம் பண்ணிக்கிற ஆளாச்சே. இந்த முறையும் அது மாதிரி கண்டிஷன் இருந்தா நமக்கு அது செட்டாகாது.. ரிஜக்ட் பண்ணிட்டு எனக்கு ஏத்த ஆள பாத்துப்பேன். " என இரு கரங்களையும் கட்டிக் கொண்டு அவனின் திருமணம் குறித்த சுயவிவரங்களைக் கேட்க, அவன் ஒரு காகிதத்தை நீட்டினான்.
வாங்கி பார்த்தவள், " கண்டிஷன்ஸ் எதுவும் இல்லயா. " எனப் புருவங்களை உயர்த்தி கேட்க,
'நோ கண்டிஷன். நீ வந்தா மட்டும் போதும். வா வாழலாம். ' என்பது போல் அவன் பார்வை பார்க்க,
"அது என்ன வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால் சிறப்பு ன்னு போட்டிருக்கிங்க. பொண்டாட்டி காசுல வயிறு வளக்க போறிங்களா. " என்றாள் நக்கலாக.
"தப்பில்லயே. ஷீ!! இப்ப அகாடமிக்கு ஏகப்பட்ட கடன் இருக்கு. நான் அத அடைக்க சம்பாதிச்சி நம்ம எதிர்காலத்த வளமானதா பாத்துக்கிறேன். நீ நம்மோட நிகழ்காலத்த பாத்திரமா வச்சிக்கிவ. அப்படி நாம பண்ணலன்னா நாம இறந்த காலமா மாறிடுவோம்.
ஏன்னா இந்தக் காலத்துல ஹஸ்பெண்ட் அண்டு வைஃப் ரெண்டு பேருமே சேந்து ஓட்டுனாத்தா குடும்பங்கற வண்டிய ஸ்மூத்த ஓட்ட முடியும். எதுக்கும் நீ இத பத்தி சமூக வலைதளத்துல கருத்து கேளு. கேர்ள்ஸ் சம்பாதிக்கிறத பத்தி கமெண்ட்ஸ் வரும். " என்றவனின் ப்ரெபைலை மடித்து அவனிடத்தே கொடுத்தவள், வெளியேறி செல்ல,
" மேடம் இன்டர்வீயூ பண்ணிங்க ரிசல்ட் சொல்லாம போறிங்க. "
" ரிசல்ட். ஓகே… எனக்கு உங்களுக்கு ஹஸ்பெண்ட் ஜாப் போட்டுக் குடுக்குறதுல எந்த ஒரு பிரச்சனையும் இல்ல. பட்… " என அவனைச் சொல்லி முடிக்கும் முன் அவளை தூக்கி, " தேங்க்ஸ் டெடி. எனக்கு தெரியும் நான் செலக்ட் ஆகிடுவேன்னு. " என்றபடி சுற்றினான்.
" மாமா... இறக்கி விடுங்க கீழ. " எனப் பெண்ணவளின் கத்தல் மதுசூதனனின் மகிழ்ச்சிக்குத் தடையாய் அமைந்தது.
" பட்..ன்னு சொன்னேன். அப்படி சொன்னா நான் ரெண்டாவதா சொல்லப்போறத செஞ்சாத்தா முதல்ல சொன்ன வாக்கியம் செல்லும். இல்லன்னா எதுவும் நடக்காது.ன்னு அர்த்தம். "
"அப்படி என்ன சொல்லிடப்போற. ஹோம்க்கு போணும் அடுத்த மதர் தெரசா அவார்டு இல்லன்னா ஐஜீ கையால அவார்டு இது தான. உனக்கு உலகத்துல இருக்துற எல்லா அவார்டையும் காசு குடுத்தாவது வாங்கி தர்றது என்னோட கடம. ஓகே வா. "
"ஓகே இல்ல. எனக்கு சில கண்டிஷன் இருக்கு. உங்களுக்கு ஓக்கேன்னாலும் ஓகே இல்லன்னாலும் ரெண்டு நாள்ல பதில் சொல்லுங்க. " என்று அவள் கூற, இருவருக்கும் சிரிப்பு வந்தது. ஏனெனில் அது அவர்களின் முதல் சந்திப்பையும் பேச்சையும் நினைவு படுத்தியது.
அவளை நெருங்கி இடையோடு சேர்ந்தணைத்தவன். " எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே. "
"அப்படி டக்குன்னு ஓகே சொல்லிட கூடாது மாமா. " என்றவளின் பேச்சு மட்டுமல்ல கன்டிஷனும் பூதாகூடமாகத் தான் இருந்தது.
இம்முறையும் எதையும் கேட்காது மங்கையின் மீது கொண்ட மயக்கத்தால் இதழணைத்து விட்டான். சாந்தியால் கூட காப்பாற்ற முடியாத படுகுழியில் மீண்டும் விழுந்து விட்டான்.
மதுவின் பக்கம் எதிர்ப்பு ஏதும் இல்லாத போது மதுசூதனன் மற்றும் பைரவி இணைந்து வாழும் முடிவை மகிழ்வுடன் ஏற்றனர் அனைவரும்.
அது ஒரு விடுதி.
ராக்கி பாயின் கல்யாண விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமணத்திற்கு வர இயலாது போன சென்னையில் உள்ள அவனின் உறவினர்கள், தாமரை வேலை பார்க்கும் பள்ளியின் ஆசிரியர்கள், சாரதாவின் ஹோமில் இருக்கும் சொந்தங்கள், அகாடமி கோச்ட், மெம்மர்ஸ், இன்ன பிற பலரும் கலந்து கொள்வதற்காக விருந்து + ரிசப்ஷன்.
பஃபே முறையில் பரிமாறப்பட்டது உணவு மட்டுமல்ல அனைத்தும் அன்லிமிடெட் தான். அனைவரும் தங்களின் நண்பர்களுடன் தனி தனி கூட்டமாக சேர்ந்து பேசி சிரித்தபடி இருக்க, அங்கிருந்த மேடையில் வாயெல்லாம், இல்லங்க பாய்க்கு ஏதோ மூடு சரி இல்ல போல. தாமர எப்பயும் போல தான் இருக்கா.. மலர்ந்த வாடாத அழகிய சிரிப்பு என்று. ஆனா அவளுக்கு பக்கத்தில் நின்றிருந்த பாய் சோகமே உருவாய் நின்று கொண்டு இருந்தார்.
'ஏன். என்னாச்சி? முந்தாநேத்து தான கல்யாணம் முடிஞ்சது. அதுக்குள்ள பாய் முகத்துல வாட்டம். வெய். ' என்ற நம் கேள்விக்கான பதிலை பிறகு பார்ப்போம்.
வந்து பொக்கே கொடுத்து கை குலுக்கிச் சென்ற யாருக்கும் பாய் சிரிப்பைச் சிந்த விடவில்லை. பாவம் சற்று சோகமாக உள்ளான்.
அந்த ஹாலில் தன் வீர நடையுடன் நீளக்கால்களை எட்டு வைத்து கம்பிரமாக நடந்து வந்தான் தீஷிதன். கோர்ட்டு சூட்டில் அவனின் தோற்றம் வியக்க வைக்கும் படி இருந்தது. முகத்தில் புது தேஜஸ். அது ஏன் என்று தான் புரியவில்லை. அவன் எப்பொழுதுமே அழகு தான். அதிலும் புதிதாக கிடைத்த மதுவின் நட்பு அவனுக்கு திருப்திகரமாதாக இருந்தது.
தினமும் மதுவின் அகாடமிக்கு சென்று மதுவுடன் சேர்ந்து விளையாடி விட்டு தான் தன் அலுவலகத்திற்கே செல்வான். மதுவைக் கட்டாயப்படுத்தி தன் இல்லம் அழைத்து வருவான் தீஷித். அவன் அனுபவித்திடாத தாய் பாசத்தை அபிராமியின் மூலம் கிடைக்கச் செய்தான் தீஷித். அக்ஷரா மதுவின் செல்ல தங்கையாகிப் போனாள். அபிராமிக்கு சொல்லவே தேவையில்ல மகனின் உயிரை காப்பாற்றி கொடுத்து கடவுள் என்ற ரேஜ்ஜிற்கு மதுவை பார்த்துக் கொண்டார். மொத்தத்தில் மதுவை தீஷித் குடும்பம் தத்தெடுத்து கொண்டது.
இப்போது தன் தாய் தங்கை நண்பர்களுடன் தீஷித் வர, வரவேற்றது பைரவி.
" ஹாய் ஹைஸ். வாங்கம்மா. " என்றவள் தீஷித்தை வரவேற்காது அவனை முறைத்தபடி அபிராமியை அழைத்துக் கொண்டு அக்ஷரா உடன் பேசிய படி உள்ளே நடந்து சென்றாள். பார்வை மாற்றாது அவளையே பார்த்த படி தீஷித் நின்றான்.
அவளின் முறைப்பிற்கு காரணம் உள்ளது. அபிராமியின் புலம்பலால் பைரவி தீஷித்திற்கு பெண் பார்த்து வைக்க,
"டாம். உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. "
"தீஷ் இது ஃப்ரெண்ட் ஷிப். நம்ம தோஸ்த் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது தப்பில்லயே. " என்ற பைரவிக்கு அவன் தந்த பதில்கள் எதுவும் பிடிக்கவில்லை.
பைரவியை என்னால் மறக்க இயலாது எனப் பிடிவாதமாக இருந்தவன் லண்டனுக்கு செல்ல முடிவு செய்துள்ளான்.
'கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டியோட போ. ' என்ற யாரின் பேச்சிற்கும் அவன் செவி மடுக்கவில்லை. அது தான் பைரவிக்கு கோபம். செல்லும் அவளையே பார்த்தபடி அவன் நிற்க,
"என்னடா ஃபீலிங்ஸ்ஸா. "
"அது ஒரு ஓரமா இருக்கத்தா செய்து. அத ஒன்னுமே பண்ண முடில." எனக் கசந்த குரலில் சொன்னவன்,
"டாம் இப்ப முன்ன விட அழகா தெரியுறா எங்கண்ணுக்கு. " எனப் பைரவியின் திசை பார்த்து ரசித்தபடி கூறினான்.
" கண்டிப்பா அழகாத்தா தெரிவா. ஏன்னா கல்யாணம் பொண்ணுங்களுக்கு தனி அழக குடுக்கும். அத்தோட மனசுக்கு பிடிச்சவெ கூட வாழ்றது சொர்க்கத்துலயே இருக்குற உணர்வ குடுக்கும் போது அழகு தானா வந்து ஒட்டிக்கும். " என்ற நந்திதாவை அவன் முறைக்க,
"விடு மச்சான் நீ இதயம் முரளி மாதிரி பார்த்து பதமா காதலிச்ச, அதான் உன்ன கண்டுக்காம போறா. இதே இது அனிமல் படத்து ஹீரோ மாதிரி ஆல்பா மேல்லா அடிதடியா புகுந்து லவ் பண்ணிருந்தா உனக்கும் செட்டாகிருக்கும். " எனக் கருணாகரனும் வார,
'யார பாத்து ஆன்டி ஹீரோ அவதாரம் எடுக்கச் சொல்ற. ' என்று மற்றவர்கள் அவனை மொத்தி எடுத்தனர்.
" வாங்க தீஷித் ஸார். ஏ நிக்கிறீங்க. " என நண்பர்கள் ஐவரையும் இடம் பார்த்து அமர வைத்து விருந்து பரிமாற ஏற்பாடு செய்தனர் பாண்டியும் சாருவும்.
"மறுபடியும் வேலைல ஜாயின் பண்ணிட்டிங்களாமே. நேத்து அக்கௌன்டென்ட் சொன்னாரு. " தீஷித் சாருவைப் பார்த்து கேட்டான்.
"ஆமா ஸார். மதுரைய காலி பண்ணிட்டு சென்னைல கொஞ்ச நாள் இருக்கலாம்னு தோனுச்சி. சாரதாம்மாவ தனியா விட முடியல. அவங்க கொஞ்சம் டிப்ரஷன்ல இருக்காங்க. அத்தோட தாமரைக்கும் இங்க ஸ்கூல்ல வேலை கிடைச்சிருக்கு. அவருக்கும் டாக்ஸி ஓட்டுறது கம்ஃபர்ட்டபிள்ளா இருக்குன்னு சொன்னாரு. அத்தைய மட்டும் தனியா இருக்க விடாம ஹோம்க்கு இன்சார்ஜ்ஜா கொஞ்ச நாள் போட்டிருக்கு. அதுனால அடுத்த ஆறு மாசத்துக்கு சென்னைவாசி தான். " என்றவள் சில நிமிடங்களில் சென்று விட, அனைவருக்கும் ராக்கி ஏன் சோகமாக உள்ளான் என்ற கேள்வி எழுந்து.
ரத்தன், " எதுவும் பிரச்சனையா இருக்குமோ?"
கருணா, "நல்லா தேடி பாத்திட்டேன் மதுசூதனன காணும்."
" ஃப்ரெண்டோட ரிசப்ஷனுக்கு இல்லாம எங்க போய்டான். " என்ற தீஷித் ராக்கியிடம் கேட்க,
அவனோ, " தெரியாது. எங்கன்னு தெரிஞ்சா எனக்கும் தகவல் சொல்லுங்க. நானும் அவனத்தா தேடிட்டு இருக்கேன். " எனப் பதில் கூறினான்.
தீஷித் மதுவிற்கு அழைக்க, அவன் அதே ஹோட்டலில் ஓர் அறையில் இருப்பதாக சொல்லி வைத்தான். நண்பர்கள் மதுவைப் பார்க்கச் சென்றனர்.
தீஷித் தான் முதலில் வேகமாக சென்றது. ஏனெனில் மதுவின் குரலில் சிறு தடு மாற்றம் வந்து போதையில் உள்ளான் என்று சொல்லியது. மதுவிற்கு கண்ட நேரத்தில் கண்ட படி குடிக்கும் பழக்கம் கிடையாது அதுவும் நண்பனின் விழாவில் அவ்வாறு செய்யும் பொறுப்பற்றவன் கிடையாது.
ஒரு வாரத்திற்கு முன் ராக்கி கொடுத்த பேச்சுலர் பார்ட்டியின் போதே ஒரு க்ளாஸிக்கு மேல் அருந்ததாதவன் குடித்திருக்கிறான் என்பதால் ஏன் என தீஷித் ஓடிச் சென்று அறைக் கதவை திறக்க,
மது பாய்ந்து வந்த தீஷித்தைத் தாக்கினான்.
"உன்னால தான்டா எல்லாமே உன்னால தான். நீ மட்டும் இல்லன்னா நான் நிம்மதியா இருந்திருப்பேன். " எனச் சொல்லி அடிக்க, மற்றவர்கள் தீஷித் மீதிருந்த பயில்வானை பிரித்தெடுத்து தடுக்க முயன்றனர்.
"நான் என்னடா பண்ணேன். " எனத் தீஷித் குழப்பமாக கேட்க,
" பண்றத எல்லாம் பண்ணிட்டு பச்ச குழந்த மாதிரி மூஞ்சிய வச்சிக்கிட்டு நான் என்ன பண்ணேன்னு கேட்டா உன்ன நம்பிடுவேனா. " எனச் சொல்லி மீண்டும் தீஷித்தின் சட்டையை பிடித்து உலுக்க பாய, இம்முறை இருவருக்கும் இடையே ராக்கி வந்து நின்றான்.
சண்டையை விலக்கி விட அல்ல. சண்டை போட.
வந்தவன் சற்று முன் தீஷித்தைப் பார்த்து மது சொன்ன அதே டயலாக்கை பேசி மதுவை அடிக்கத் தொடங்கினான்.
"நான் என்னடா பண்ணேன். " இம்முறை குழம்பியது மது மட்டுமல்ல நாமும் தான்.
உயிர் நண்பனின் உயிரை எடுக்கும் அளவுக்கு ராக்கிக்கு என்ன தான் ஆச்சி?
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..