அத்தியாயம்: 115
மது மீதி வைத்திருந்த மது பாட்டில்களில் உள்ள சரக்கை தன் தொண்டைக்குள் ராக்கி சரிக்க,
"டேய்… டேய். இன்னைக்கி உனக்கு ரிசப்ஷன். பாக்குறவங்க மட்டுமில்ல உன்னோட வைஃப்பும் ஃபேமிலியும் உன்ன தப்பா நினப்பாங்க. வேண்டாம். " எனச் சொல்லி அவனின் கையில் இருந்த பாட்டிலை தீஷித் நண்பர்கள் பிடுங்க பார்த்தனர்.
"இதுக்கும் போல தப்பா நினைக்க என்ன தான் இருக்கு. என்னோட லைஃப்ல எல்லாமே தப்பு தப்பாத்தான நடக்குது. "
"ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேருமே ஒரே மாதிரி தானா. அவெ பிரச்சனைய பத்தி பிரசாரம் பண்ணா நீ தப்ப பத்தியா. " எனத் தீஷித் சடைக்க,
" ஏய் என்ன சடைக்கிற. அவெ அவெ வலி அவெ அவெனுக்கு தான் தெரியும். சும்மா கருத்து சொல்றேன்னு கண்டத பேசக்கூடாது. " என மது பொங்க,
ராக்கி, " அதான. அதுலயும் இவன மாதிரி ஒருத்தன ஃப்ரெண்டாவும். இவனுக்கு வாச்ச பொண்டாட்டிய தங்கச்சியாவும் ஏத்துக்கிட்ட எனக்கு வாழ்க்கைல நடக்குறது எல்லாமே தப்பு தப்புத்தா நடக்கும். ".
தீஷித், "இப்ப எதுக்கு நீ பைரவி திட்டுற. ".
மது, " அப்படி என்ன அவளால உனக்கு தப்பா நடந்திடுச்சி. "
" என்னடா அவளப் பத்தி பேசுனா, ரெண்டு பேருமா எகுறுறிங்க. அவ என்ன பண்ணான்னு தெரியுமா?" என்க,
'அட சொல்லித் தொலப்பா. ' என மற்றவர்கள் பார்க்க,
"ஒரே ஒரு கிஃப்ட். என்னோட ஒட்டு மொத்த வாழ்க்கையயே அழிச்சிட்டா. என்னோட முப்பது ஆண்டு கால தவ வாழ்வ கல்யாணம் ஆகியும் தவமாவே வச்சிட்டா. "
கருணா, "என்ன டா சொல்ற. தவம் கிவங்கிற. அப்ப ஃபஸ்ட் நைட் நடக்கலயா. ".
" ஃபஸ்ட் நைட் மட்டுமில்ல லாஸ்ட் நைட்டாவாது அது நடக்குமான்னு சந்தேகப்படுற அளவுக்கு செஞ்சுட்டா. இவெ பொண்டாட்டி. "
" பைரவி இப்பயும் சிங்கில் தான். " என தீஷித்தை நோக்கி மது நகர,
'கொஞ்ச நேரம் கழிச்சி வச்சிக்கங்கப்பா உங்க மோதல..' என்பது போல் தீஷித் நண்பர்கள் இருவருக்கும் நடுவில் வந்து நின்று கொண்டனர்.
நந்திதா, "என்ன கிஃப்ட்?"
அப்சரா, "என்ன நடந்தது?"
ரத்தன், "கல்யாணமே இப்ப தான் முடிச்சிருக்கு. அதுக்குள்ள நீ ஏன் என்னென்னமோ பேசுற. " என மாற்றி மாற்றி கேள்விகளை கேட்க, ராக்கி பைரவி கொடுத்த பரிசை நீட்டினான். அதைக் கண்ட மதுவிற்கு பைரவி தந்த பரிசின் பொருள் புரிய விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டான்.
"எல்லாம் உன்னால தான்டா. உன்னைய மட்டும் தான் பாக்காம இருந்திருந்தா. உன்ன நண்பனா தோள்ல தூக்காம இருந்திருந்தா. உம்பொண்டாட்டிய பாசமலர ஏத்துக்காம இருந்திருந்தா இன்னேரம் நான் உருப்பட்டிருப்பேன். " எனச் சொல்லி சிரிக்கும் மதுவை அடிக்க, மற்றவர்கள் புருவ முடிச்சுடன் பார்த்தனர்.
தீஷித், " எனக்குப் புரியல. உனக்கு மேரேஜ் கிஃப்ட்டா லைட் தந்திருக்கா. இதுல நீ கடுப்பாக என்ன இருக்கு."
ராக்கி, "அது சாதா லைட் இல்ல. "
"டார்ச் லைட். நைட் நேரம் அத யூஸ் பண்ணி என்னென்னமோ பண்ணலாம். அதுலயும் 'ஹை வே'ல." என்ற மது ராக்கியின் முகத்தில் அதை ஒளிர விட, கோபமாக அதைப் பிடுங்கிக் கொண்டவன்,
" கூடவே ஒரு லெட்டர் வந்தது. 'மறக்க கூடாத முதல் அனுபவம்.' ன்னு ப்ளூ சட்ட மாறன் விமர்சனம் சொல்ற மாதிரி டார்ச் லைட் படத்துக்குக் கைக்கு வந்தத விமர்சனமா எழுதி தாமரைய படிக்க வச்சி. 'என்னை நீங்க அந்த மாதிரிப் பொண்ணுன்னு நினைச்சத மறக்கவே முடியல.'ன்னு சொல்லி குய்யோ முய்யோன்னு அழுது வீட்டாளுங்கள கூட்டி எம்மாமியார நடுவுல நிக்க வச்சி ஏழரைய ஃபஸ்ட் நைட் ரூம்க்குள்ள இழுத்துட்டா.
அந்தம்மா 'அதெப்படி எம்மகள, கண்டபடி ஊர் மேய்ர சிறுக்கின்னு நினைக்க முடிஞ்சது. எம்பொண்ண நான் அப்படி வழக்கல.'ன்னு ஆரம்பிச்சி நடந்து முடிஞ்ச அத்தனையையும் பேசி… பேசி... பேசிக்கிட்டே இருக்க, கடைசில பாண்டி தான் வந்து எனக்கு சாதகமாக பேசினான். "
அப்சரா, "மாமியார் வீட்டுல உனக்கு அவமானமாகிப் போச்சின்னு தான் சோகமா இருக்கியா. "
" ச்சச்ச... அதெல்லாம் அவமானமா. பேசிட்டே இருந்ததுல நேரத்த பாக்கல. விடிஞ்சிடுச்சி. அடுத்து என்ன சாந்தி முகூர்த்தத்த நாள் சரியில்லன்னு சொல்லி ஒரு வாரம் தள்ளி போட்டுட்டாங்க. சரியா மச்சி. " மது கேலியாக உண்மையைச் சொல்ல,
"எல்லாம் உன்னாலயும் உன் பொண்டாட்டியாலயும் தான். ரெண்டு நாளைக்கி முன்னாடி உன்னை எங்கன்னு கேட்டு சண்டைக்கி வந்தவள, தண்ணி தெளிச்சி விட்டு கண்டுக்காம போனதுக்கு பழி வாங்கிட்டா பாதகத்தி. " என்க, பாவமாக இருந்தது நம் பாயைப் பார்க்க.
'ஒரு கல்யாணத்த பண்ணி ஃபஸ்ட் நைட் முடிக்கிறதுக்குள்ள so much of disturbance. ' நம் பாயின் புலம்பல்.
"அதா ஒரு வாரத்துக்கு அப்றம்னு சொல்லிருக்காங்கல்ல. அப்றம் என்ன. சில் ராக்கி. இவன எவ்ளோ வேண்ணாலும் திட்டிக்க. பட் டாம்ம திட்டாத. " என்ற தீஷித்தை முறைத்து பார்த்த மது,
" டாம் இல்ல பைரவி. " எனக் கடுகடுக்க தீஷித் தோள்களைக் குழுக்கினானே தவிர பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 'நான் பைரவியை டாம் என அழைக்க உன்னுடைய அனுமதி தேவையே இல்லை. ' என்ற அலட்சியம் அது.
கல்யாணம் முடிந்தும், ஒரு வாரம் தான் பேச்சுலராக இருக்க வேண்டி தன் நிலை சொல்லி ராக்கி மீண்டும் புலம்ப,
"ஹேய் மது!!! உன்னோட மேரேஜ் ப்ரப்போஷல் என்னாச்சி? ராக்கி கல்யாணம் முடியவும் உங்க கல்யாணத்துக்கு நாள் குறிக்கப் போறதா சொன்னியே. பைரவி என்ன சொன்னா? " என நந்திதா ஆவலாக கேட்க, பாவம் மதுவின் முகம் என்னவென்று விவரிக்க இயலாது மாறியது.
"என்னாகிருக்கும். அவனோட ப்ரபோஷல ரிஜெக்ட் பண்ணிருப்பா. கரெட்டா. " எனச் சந்தோஷமாக தீஷித் கேட்டான். அவனை விழி இடுங்க பார்த்தவன்,
"ரிஜெக்ட் ஆகல. " என்று விட்டு சில நொடி மௌனத்திற்கு பின்,
"அக்சப்டும் ஆகல." எனச் சொல்லி ராக்கியின் கையில் இருந்த பாட்டிலை வாங்கிக் காலி செய்து முடித்தான்.
' என்ன பாதி பாட்டிலுக்கே ஃபுல் போதை ஏறுன மாதிரி உலறல ஆரம்பிச்சிட்டான். ' என்பது போல் ராக்கி பார்க்க,
"என்னாச்சி?"
" ஏன் குழப்புற?"
"கல்யாணத்துக்கு ஓகே சொன்னாளா இல்ல?"
"சொன்னா! ஆனா சொல்லல. " என்ற மதுவின் பேச்சில் காண்டானவர்கள்,
"ஒழுங்கா சொல்லு. " என ஒரு சேர கத்த,
"கல்யாணத்துக்கு எத்தன கண்டிஷன் போட்டா. " தீஷித் உதடுகளுக்குள் மறைக்கப்பட்ட புன்னகையோடு கேட்டான். ராக்கியின் கண்கள் பளபளத்தன.
" நீ தான அது. அவளுக்கு இந்த மாதிரி யோசிக்க ஐடியா குடுத்தது. " என மீண்டும் தீஷித்தின் மீது பாய,
" என்ன கண்டிஷன் எத்தன கண்டிஷன்னு தெளிவா சொல்லிட்டு கட்டி உருளுங்க. " எனத் தீஷித்தின் நண்பர்கள் ஆவலாக கேட்க,
"என்ன சொல்லிருப்பா. ' தெரிஞ்சோ தெரியாமலோ தீஷ் தனிமரமா நிக்க நானும் ஒரு காரணமாகிட்டேன். என்னால அவர ஃபேஸ் பண்ணவே முடியல. கில்டியா இருக்கு. அதுனால தீஷித் கல்யாணத்துக்கு அப்றம் தான் நம்ம கல்யாணம். ' ன்னு சொல்லிருப்பா. சரியா மச்சி. " என ராக்கி கேலியாக சொல்ல,
தீஷித் சத்தமாக சிரித்து. "அப்ப எனக்கு இன்னொரு வாய்ப்பிருக்குன்னு சொல்ற. " விளையாட்டாக,
"பேராசை. " என்றவன்,
"கல்யாணம் முடிவாகல. ஆனா நாங்க living together ல வாழ்ந்திட்டு இருக்கோம். " மது
"வாவ்… வட்டா ஐடியா சார் ஜீ. கல்யாணம் பண்ணி டைவர்ஸ் வாங்குன பொண்டாட்டி கூட, கெட்டு கெதர் ரிலேஷன் ஷிப். ஒரே வீட்டுல வாழ்ற. " ரத்தன் குதுகலமாக சொல்ல,
"நீ குதுகலிக்கிற அளவுக்கு அதுல ஒன்னுமில்ல. ஒன்னா ஒரே வீட்டுல ஸ்லீபி டைவர்ஸ் மெத்தர்டுல வாழணுமாம். "
"ஸ்லீபி டைவர்ஸ்ஸா.???"
" வித்தியாசமா இருக்கே. "
"இது தெரியாதா. ஒரே வீடு பட் பெட் ரூம் ரெண்டு. ஒரு கிச்சன். பட் சமையல் ரெண்டு. மொத்ததுல பாதி வாடக குடுத்து வீடு சேர் பண்ணிக்கிற மாதிரி. நோ டச்சிங். ஒன்னில் டாக்கிங் அன்டு சேரிங். எல்லா வேலையயும் பகிர்ந்து செய்வது. " ராக்கி விளக்கம் கொடுத்தான்.
நந்திதா, "ஆனா ஏன் இந்த விசித்திர முடிவு.. "
" நான் கேட்டேன். அது அவ, ' எனக்கு லவ் பண்ணணாம். என்னை லவ் பண்ணணும். காலை எழுந்ததுல இருந்து நைட் நான் தூக்குற வர எனக்கு என்னென்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு பாத்து பாத்து பண்ற ஒரு லவ்வர் வேணும். ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கணும் விட்டு குடுக்கணும் நல்ல அன்டர்ஸ்டிங் ரெண்டு பேருக்குள்ள இருக்கணும். அதுனால தான் இந்த முடிவு. living together.
அத்தோட living together எப்படி இருக்கும்னு வாழ்ந்து பாக்கணும்னு ஆசை. சாந்திக்கிட்ட இதப் பத்தி கேட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி. பட் அது விஜய சாந்தியா மாறி காத்துல கரண்டிய பறக்க விட்டு சண்ட போட்டிடுச்சி.
சரி மேரேஜ் பிக்ஸ் ஆகும் போது நிச்சயதார்த்துக்கும் கல்யாணத்துக்கு இடைல சில மாசம் கேப் இருக்கும். அந்த கேப்ல மாப்ளகூட பழகி, லவ் பண்ணலாம்னு நினைச்சேன். அந்த வாய்ப்ப மதுசூதனன் குடுக்கல.
பாத்த மூனாது சந்திப்லயே கல்யாணத்த முடிவு பண்ணி நாலாது சந்திப்ல கழுத்துல தாலி. காதலிக்க நேரமே கிடைக்கல. அதுனால இந்த மொற ஒன்லி லவ் மட்டும் தான். நோ லஸ்ட். ' அப்படின்னு சொல்லிட்டா. அத்தோட இந்த எரும மாட்டுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் லிவ்விங் டுகெதர்ன்னு சொல்லி என்னை அப்பார்ட்மெண்ட்க்கு கூட்டீட்டு போய்ட்டா. " என்றவனின் புலம்பலைக் கேட்டவர்களுக்குப் பாவமாக இருந்தது.
"அப்ப மேட்டரே கிடையாது. ஒன்லி ரொமான்ஸ். அதுவும் வெஸ்ஜிடேரியன் தானா. " எனக் கேலியாக கருணா கூற,
"அதவிட பெரிய கொடுமலாம் இருக்கு. எங்கல்யாணத்துக்கே மேட்ரிமோனியல்ல நான் ரிஜிஸ்டர் பண்ணது கிடையாது. வர்ற எந்த கால்ஸ்ஸையும் அட்டன் பண்ணது கிடையாது. எந்தப் பொண்ணுக்கிட்டையும் போய் பேசுனது கிடையாது. ஆனா இன்னைக்கி இவெ பேர சொல்லி பத்து கால்ஸ் வருது. அத்தன பேரையும் சமாளிச்சி அதுல ஒன்ன இவனுக்குக் காட்டுனா… ஒரே வார்த்தைல நோ ன்னு சொல்லிட்டு போய்டுறான். அவ என்னடான்னா டெய்லியும் 'பொண்ணு பாத்திடிங்களா. பேசிட்டீங்களா'ன்னு என்னைய குடையிறா. "
ராக்கி, "எல்லாம் சாபம் மச்சான்."
"யாரோட சாபம்? "
" என்னோட சாபம் தான். கொஞ்ச வர்ஷத்துக்கு முன்னாடி இப்ப நீ இருக்குற அதே நிலமைல தான் நானும் இருந்தேன். எத்தன பேரு? எத்தன காலு? எத்தன பொண்ணு? பேரக்கூட கேக்காம பேசாம போவியே ஞாபகம் இருக்கா. இல்லன்னா சொல்லு நான் நியாபகப்படுத்துறேன். " எனச் சமயம் பார்த்து ராக்கி வார,
தீஷித், " கர்மா இஸ் பூமராங். அது உன்னோட விசயத்துல ரொம்ப சரியா இருக்கு மதுசூதனா. ".
" அது என்னமோ சரிதா. அவள மீட் பண்ணப்ப நான் போட்டத விட அதிகமா கண்டிஷன் போட்டிருக்கா. வீட்டுல பண்ற டார்ச்சர் பத்தாதுன்னு அகாடமி வாசல்ல வந்து வேற நிக்கிறா. "
"ஏன் "
"வேலைய விட்டுட்டா மச்சான். இப்ப அவ அகாடமி பார்ட்னராம். அதுனால அத டெவலப் பண்றேன்னு சொல்லி யூட்யூப் சேனல் ஓப்பன் பண்ணி என்னென்னத்தையோ வீடியோ எடுத்திட்டு போட்டிட்டு இருக்கா. "
"நீ இப்ப சொன்ன பாத்தியா. அகாடமி டெவலப். அதுக்கு ஐடியா நான் குடுத்தேன். பட் லிவ்விங் டுகெதருக்கு நான் கிடையாது. ப்ராமிஸ். " என்றான் தீஷித்.
சின்ன கேள்வி கேட்டு அவளுக்குச் சாதகமான பதில் வரவில்லை என்றாலே அவர்களை வைத்து செய்து விடும் ரகம் நம் பைரவி. விவாகரத்து வாங்கி கோர்ட்டில் டான்ஸ் ஆடி கொண்டாடிய கணவனை அத்தனை எளிதாக மன்னித்து ஏற்றுக் கொள்வாளா என்ன?
மதுசூதனன் சொல்ல சொல்ல அவனின் புலம்பல் மொழியைக் கேட்டு அனைவரும் சிரிக்கத்தான் செய்தனர்.
"நான் என்னோட பாவக்கதைய கவலயோட சொல்லிட்டு இருக்கேன். உங்களுக்கு சிரிப்பா வருதா. " எனக் கடுப்புடன் மது கேட்க,
ரத்தன், " சிரிக்காம வேற என்ன பண்ண சொல்ற? உனக்கு தான் நல்லா வாய்ப்பு கிடைச்சது, நீ தூக்கி சுமக்குற பாவத்த வெட்டி விட. வெட்டியும் விட்டுட்ட. அப்றம் லூசு மாதிரி முடிச்சி போட்டு மறுபடியும் அவளத் தூக்கி சுமக்குற. "
"எல்லாம் விதி. " என்ற ராக்கி மதுவிற்கு ஆறுதல் சொல்ல, அந்தக் கூட்டத்தில் இருந்த பெண்கள் வேகமாக பைரவியைக் காணச் சென்றனர்.
கருணா, " எதுக்காம்?"
மது" உனக்கு புரியலயா?"
ரத்தன், " என்ன புரியணும்?".
" பைரவி திறத்து வச்சிருக்குற ஹஸ்பெண்ட் டார்ச்சர் டுட்டோரியலுக்கு அப்ளிகேஷன்ஸ் போட்டு ஜாயின் பண்ணப் போறாங்க. அடுத்த கோர்ட்டு வாசல் டான்ஸ் உங்களோடது தான். பட் அவன மாதிரி நீங்க கலட்டி விட்ட பொண்டாட்டியவே திரும்ப கல்யாணம் பண்ணிக்கிற முடிவ எடுக்க மாட்டேன்னு சத்தியம் செய்ங்க. " எனக் கரம் நீட்ட அதை தட்டி விட்டு விட்டு இருவரும் தத்தம் மனைவிமார்களை பின்தொடர்ந்தது சென்றனர். பைரவி வகுப்பெடுக்கும் முன் பிடிக்க வேண்டும் அல்லவா.
அனைவரும் பைரவியைத் தேட, அவளோ ஒரு நீள கண்ணாடி டம்பளரில் பாயாசத்தை ஊற்றி, அதை எடுத்து உண்ணும் ஸ்பூனாக அப்பளத்தை மாற்றி ரசித்து ரசித்து இரண்டையும் உண்டு கொண்டிருந்தாள்.
இவர்களை பார்த்தும் வேகமாக அருகில் வந்து. " பாய்... பாய்… " என்க,
ராக்கி, "என்ன பாயாசத்துல முந்திரி பருப்பு போடலயா. "
"அஞ்சர அடி உசரத்துல ஒரு முந்திரி கொட்ட நிக்கிதே. அப்றம் எதுக்கு முந்திரின்னு போடாம விட்டிருப்பாங்க. " என மது கவுண்ட் கொடுக்க, அவனை முறைத்தவள்,
" **** குடிச்சிருக்கிங்களா. " என அவன் உள்ளே இறக்கிய மது வகையை சரியாக சொல்லி கேட்க, நந்திதா தான் வேகமாக சென்று பைரவியை அணைத்துக் கொண்டாள்.
"குடிச்சிருக்கியான்னு கேக்குறவ பொண்டாட்டி. இது தான் குடிச்சியான்னு ப்ராண்டு பேர கரெக்ட்டா சொல்ற பாத்தியா நீ லெஜன்ட்ம்மா. பைரவி இஸ் எ லெஜன்ட். " எனப் பாராட்ட, மித்ரன் அவளை இழுத்து சென்றனர். தன் நல்வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி.
"ஏன் எல்லாரும் தெறிச்சி ஓடுறாங்க?" பைரவி குழப்பமாக கேட்க, மது திரும்பிய கேப்பில் எஸ்கேப் ஆகி விட்டான். இல்லையேல் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்குமே.
" நத்திங் டாம். " என்றவனின் விழிகள் பைரவியைப் பார்க்க, அவளின் கால்கள் மதுவைத் தேடிச் சென்று சண்டை போட்டது.
விழா முடியும் வரையும் அங்கும் இங்குமாய் இருவரும் கரம் கோர்த்து தோள் சாய்ந்து நிற்பது, சிரிப்பது, சண்டை போடுவது எல்லாம் ஓவியமாக தெரிந்தது தீஷித்திற்கு.
அந்த விசித்திர தம்பதியினர் புறப்படும் வரை தன் கண்களெனும் கருவியால் மூளையில் பதிவு செய்து கொண்டிருந்தான். அதிலும் பைரவியின் புன்னகை செலவு செய்ய மனம் வராத செல்வமாக தோன்றியது அவனுக்கு.
பைரவியின் உடைந்த சாப்பரை ஒட்ட வைத்து சரி செய்து தந்திருந்தான் மது. அதில் அவளின் பின்னால் அமர்ந்து பைரவியெனும் சுடும் பனியின் இடையணைத்து குளிர் காய்ந்த படி செல்ல, இருவரும் மறைந்து செல்லும் வரை பார்த்துக் கொண்டே நின்றான் தீஷித்.
தான் காதலிக்கும் மங்கையின் மகிழ்வைக் காட்டிலும், அந்தக் காதலனுக்கு வேறு எதுவும் தேவையே இல்லை.
இது தீஷித்க்கு சோக முடிவு அல்ல. ஏனெனில் அவனின் சந்தோஷம் அவளின் சந்தோஷத்துடன் சந்தோஷமாக இருக்கிறதே. அந்த சந்தோஷமே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
சுபம்..
நன்றி..
மீண்டும் சந்திப்போம்..

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..