முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

பனி 44


 

அத்தியாயம்: 44


"ஹலோ ராக்கி பாய்… ராக்கி பாய்… லையன்ல இருக்கிங்களா? ஹலோ... ஹலோ..‌." என மெதுவாக ஹஸ்கி வாஸ்ஸில் பேசினாள் பைரவி. ஆனால் பேசிக் கொண்டே இருந்தாள். 


"ஒரு நிமிஷம் இரு பக்கி... ஒரு பொசிஷனுக்கு வந்துக்கிறேன். உன் புருஷனுக்கு மட்டும் நான் உங்கூட கூட்டு வச்சது தெரிஞ்சது…" 


"உங்களக் கூட்டு பொரியலாக்கிடுவாரு. சரியா… " எனச் சொல்லி சிரிக்க, 


"தெரிஞ்சிட்டே கேக்குறியேம்மா நீ… ஆமா நான் ஹஸ்கி வாய்ஸ்ல பேசுறேன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஏன்னா எம்முன்னாடி தான் உன் புருஷெ உக்காந்திருக்கான். நீ ஏன் ஹஸ்கி வாஸ்ல பேசுற?" என அவனும் அவளை போல் மெதுவாக பேச, 


"சும்மா உங்களுக்கு கம்பெனி குடுப்போமேன்னு தான் பேசி பாத்தேன்." 


"கம்பெனியெல்லாம் தேவையில்லை நார்மலாவே பேசு. காதுக்குள்ள நீ பேசுறது பிசாசு படத்துல வர்ற பேய் பேசுனா மாதிரி ஃபீல் ஆகுது." 


"ஓகே. இப்ப நீங்க எங்க இருக்கிங்க?" 


" இப்ப தான் அகாடமிக்கி வந்திருக்கான் உம்புருஷெ. ஆஃபிஸ் ரூம்ல இருக்கோம். இன்னும் பத்து நிமிசத்துல நாங்க கிளம்பிடுவோம். ஓவர்... ஓவர்… பட் இது ரொம்ப ஓவராத்தா இருக்கு. ஓவர் ஓவர்… "


"இருந்திட்டு போட்டும். எங்க போறிங்க? நானும் வர்றேன். அவனுங்க முகத்த நான் பாக்கணும். நல்ல தெளிவான ஃபோட்டோ கிடைச்சா டிப்பார்ட்மெண்ட் அக்யூஸ்ட் லீஸ்ட்ல தேட முடியும்." என்க,


"க்கும்..‌. நீ தேடிட்டாலும். செயினு கலண்டு போன ஓட்ட சைக்கள தூக்கி ஓரம வைக்கிற மாதிரி உன்ன ஸ்டேஷனுக்கு மூளைல போட்டு, ஆயித பூஜ கொண்டாடிட்டு இருக்காங்க. இதுல டிப்பார்ட்மெண்ட்ல சொல்லி தேட போறாளாம். பகல் கனவுல கண்டுட்டு கிடக்கா." என முணுமுணுக்க,


"ராக்கி பாய்… இப்ப என்ன சொன்னிங்க?" எனக் குரல் உயர்த்தினாள்.


"ஒன்னுமில்லம்மா… உம் ‌புருஷெ அவனுங்க ரெண்டு பேரையும் நம்ம அகாடமி ஸ்டோர் ரூம்ல போட்டு அடச்சி வச்சிருக்கான். இன்னைக்கி ஒரு நாள் தான் இருப்பானுங்க. விசாரிச்சிட்டு பிரவீன் கிட்ட ஒப்படைக்க போறதா இருக்கோம். நான் அங்க போகயும் உனக்கு வீடியோ கால் பண்றேன். இப்ப ஃபோன வைச்சிடும்மா." என்றவனை மதுவை அழைத்துக் கொண்டு சென்றான் ஸ்டோர் ரூம்க்கு. 


இடம் வந்ததும்‌ ராக்கி சொன்னது போல் ஃபோனை ஆன் செய்து, அனைத்தும் தெரியும் படி ஒரு மூளையில் கேமராவை ஆன் செய்து வைத்தவன். ப்ளூ டூத் மூலம் அங்கு நடக்கும் உரையாடல்களை பைரவி கேட்கும் படியும் செய்தான். 


மது, அவர்களிடம் யார் தன்னை மாட்டி விட நினைத்து போதை பொருட்களைத் தந்தது என விசாரிக்க, அந்த கடப்பாரை முழுங்கிகள் பதில் சொல்லாது இருந்தனர். 


"நீ எங்கள எம்மா அடி அடிச்சாலும் எங்க தலைய நாங்க காட்டி குடுக்க மாட்டோம்.. " என்க, மது அவர்களுக்கு உணவு பொட்டலங்களைக் கொடுத்து உண்ணச் சொன்னான். 


'விருந்துக்கு வந்த மாப்பிள பாரு இவனுங்க... வட பாயசத்தோட இலை விரிச்சி விருந்து பறிமாறிட்டு இருக்காரு. ஹீரோவா லட்சணமா யாருடா அவன்னு கன் பாயின்ட்ல கேக்குறத விட்டுட்டு கெஞ்சிட்டு இருக்கு… தயிர் சாதம்…' எனப் பைரவி முணுமுணுத்தாலும் அவளுக்கு மதுவை பற்றி தெரியும். யாரையும் பசியுடன் இருக்க விட்டது இல்லை. எந்த நேரமானாதும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வித ஏற்றத்தாழ்வும் பார்க்காது, தான் உணவில் கை வைக்கும் முன் கட்டாயப்படுத்தியாவது சாப்பிட வைத்து விட்டுவான். 


அதுபோல் நாற்காலியில் கட்டியிருந்த அவர்களின் கட்டுகளைப் பிரித்து சாப்பிட சொல்ல, அவர்கள் அதைச் சாதகமாகப் பயன்படுத்தி இட்டிலியை கையில் அள்ளி மதுவின் முகத்தில் விட்டெறிந்து விட்டு, ராக்கியின் வயிற்றில் நாற்காலியால் தாக்கி விட்டு செல்ல பார்க்க, கதவை மூடியிருந்தான் மது. அதனால் அறைக்குள்ளேயே சண்டை நடந்தது. 


சண்டை செய்ய ஏதுவாக அங்கு சில விளையாட்டு எக்யூப் மெண்ட்ஸ் இருக்க, ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டனர்.  சண்டை சிறப்பாக இருந்தது. அதைப் பைரவி கைத் தட்டி உற்சாகமாக ரசித்தாள். ஆனால் பாவம் அவளால் பாதிக்கப்பட்டது என்னவோ நம் ராக்கி பாய் தான். எனெனில் அவள் விசிலடித்து குதுகலமாக கத்த, அது அணிந்திருந்த ப்ளூ டூத் மூலம் அவன் காதில் தானாக விழ, அது fight ஐ டிஸ்டப் செய்து சில அடிகள் விழுந்தது ராக்கி பாய்க்கு. 


"ஏய் வாய மூடிட்டு பாரு. இல்லன்னா கனெக்சன கட் பண்ணிடுவேன் பாத்துக்க. " என மிரட்ட பைரவி, விரலை வாயில் வைத்துக் கொண்டு தலையை தலையை அசைத்து ரசித்துக் கொண்டிருந்தாள்.


ராக்கி பைரவியிடம் பேசிய நேரத்தில் ப்ரேக் எடுத்துக் கெள்ள, இருவரையும் சமாளிக்கும் பொறுப்பு மதுவின் மேல் விழுந்தது. மது, ஒருவனை வயிற்றில் குத்த, அவன் வலியில் குனிந்த நேரம் முதுகில் தன் முழங்கைகலாம் அடியை இடி என இறக்கினான். பைரவி பாயின் காதில் மீண்டும் கத்தினாள். " மாமா… " என அலறியவள் சத்தத்தில் ராக்கி திரும்பி பார்க்க, அடுத்தவன் மதுவின் தலையில் ஒரு பேட்டால் தாங்கியிருந்தான். நெற்றியில் ரத்தம்‌ கசிய தொடங்கியது.


அதைக் கண்டு பைரவி துடித்து விட்டாள். தன் மணாளனுக்கு மண்டையில் காயம் என்பதால், உடனே புறப்பட்டு விட்டாள் கணவனைக் காண. 


லேசான அடி தான். அந்த அடிக்காக மது தந்த பதிலடியில் இருவரும் எழவே இல்லை. சுருண்டு போய் விழுந்தனர். பிரவீன் அடுத்த சில நிமிடங்களில் வந்துவிட, அவர்கள் போலிஸ்ஸில் ஒப்படைக்கப்பட்டனர்.


"இவனுங்க யார் யார் கூட டீல் வச்சிருக்காங்கன்னு முழு டீட்டெய்ல்ஸ்ஸும் வேணும் பிரவீன். கேஸ் ஃபைல் பண்ணுங்க." என்றான். பிரவீன் என்ன நடந்தது என்று மதுவிடம் கேட்க, அவன் விலக்கி சொல்லிக் கொண்டிருந்தான். 


"யாரு இதுக்கு காரணம்னு உனக்கு ஏதாவது கெஸ் இருக்கா?" என்றான் பிரவீன். 


"நிறைய இருக்கு. பட் பாயின்ட் ஆவுட் பண்ற அளவுக்கு ரீசன் தான் ஸ்ராங்கா இல்ல. நீங்க விசாரிங்க. அதை வச்சி தான் லீட் எடுக்க முடியும்." என்க, பிரவீன் கிளம்பிச் செல்ல இருக்கும் நேரம் பைரவி வந்து நின்றான். 


எமனிடம் இருந்து கணவனைத் காப்பாற்ற வந்த சாவித்ரியாய். 


'இவா எதுக்கு இங்க வர்றா?' எனப் புருவ முடிச்சிட்டவன் திரும்பி ராக்கியைப் பார்க்க,


'என்ன ஸ்டேரிங்க நம்ம பக்கம் திரும்புறான்!' என்பது போல் பார்த்து வைத்தான்.


"நீ தான் அவள வரச் சொன்னியா?" எனக் கேட்டு அவனின் ஃபோனை கேட்டான். 


"நான்.. இல்ல… மச்சான்... " என அவன் மறுக்கும் முன்னரே முறைப்பை தொடங்கிவிட்டான் மது. ஏனெனில் நடந்த களேபரத்தில் பைரவியுடனான வீடியோ காலை அவன் இன்னும் கட் செய்யவில்லை. அவள் mute ல் போட்டு வைத்துவிட்டு கிளம்பி விட்டதால் அவள் அழுகிறாள் என்று நினைத்து, கட் செய்யாமல் இருக்க, அதைக் கண்டு கடுப்பான மது, ஃபோனை தூக்கி வீச எண்ணி ஓங்க, 


"மச்சான் காஸ்லி ஃபோன்டா… ஐ ஃபோனும் கூட. உடச்சிட்டேன்னா வேற ஃபோனும் எங்கிட்ட கிடையாது. புதுசாய் நீ தான் உங்கைகாசு போட்டு வாங்குற மாதிரி ஆகிடும். எதுக்கு செலவு பண்ணிட்டு. அதுனால ப்ளிஸ் பத்திரமா எங்கிட்டையே குடுத்திடு." என இரு கரத்தையும் சேர்ந்து வைத்து யாசகம் வேண்டுவது போல் வேண்ட, ஃபோனைக் கொடுக்காது தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டவன், 


"அவள இப்பவே இங்கருந்து துரத்தி விடு. இல்ல ஃபோன மறந்திடு. " என்று விட்டு உள்ளே சென்றான். 


பாவம், பிரவீனும் ராக்கியும் உள்ளே விடாமல் தடுத்தும், முடியாது போக பைரவி புயலாய் அலுவலக அறைக்குள் நுழைந்தாள். 


"என்ன மாமா நீங்க? இன்னும் ஹாஸ்பிட்டலுக்கு போகாம இங்க உக்காந்திருக்கிங்க. ஒரு டீடீ இன்ஜக்ஷனாது போட்டிருக்கலாம்ல. வடிஞ்ச ரத்தத்த கூட துடைக்காம அப்படியே காய விட்டுட்டு உக்காந்திருக்கிங்க. சின்ன குழந்தையா மாமா நீங்க?" என்றவள் கையில் டெட்டால் பாட்டிலும், பஞ்சும் சில டியூப்களில் மருந்தும் இருந்தன. 


'டிரிப்ஸ் ஏத்துற பாட்டில மறந்திட்டு வந்துட்டம்மா நீ.' ராக்கியின் மைண்ட் வாய்ஸ்.


"ராக்கி நான் அவளை உள்ள விடாதன்னு சொன்னேன். அவளப் போச் சொல்லு." எனக் கடுப்புடன் கத்தினான். 


'ஆமா, புருஷெ பேச்சுக்கே மதிப்பில்லயாம். இதுல விவாகரத்தான புருஷெ ஃப்ரெண்டு பேச்ச கேட்டுட்டு கிளம்பி போய்டுவாளாக்கும்.' என முணுமுணுத்தவனை மது நிமிர்ந்து பார்த்து முறைக்க, 


"மச்சா அது நாம அடச்சி வச்சோமே அவனப் பத்தி நம்ம பைரவிக்கி எதுவோ தெரியும்னு சொல்றா. அதா என்ன ஏதுன்னு விலாவாரியா உங்கிட்ட சொல்லட்டும்னு கூட்டீட்டு வந்தேன்." என்றான். 


"என்ன தெரியும்? ம்… தெரியும்னு சொன்னாத்தா நீ விடுவன்னு பொய் சொல்லிருப்பா. அந்தப் புளுகு மூட்டைய நான் பாக்க விரும்பல. போச் சொல்லு." என அவளை பார்க்காது திரும்பிக் கொள்ள,


" ம்ச்... நான் நிஜமாத்தா சொல்றேன். நான் அவன பாத்திருக்கேன். நம்புங்க ராக்கி பாய். உங்க மேல சத்தியம்." எனக் கையை உயர்த்த, நல்ல வேளையாக அதைப் பிடித்து விட்டான். 


"அப்பாடா தலைல கை வைக்கல. ஏய்… உனக்கு எவ்வுயிரு என்ன கிள்ளுக்கீரையா போச்சா. புசுக்குன்னு பொய் சத்தியம் பண்ண வர்ற. வேணும்னா இவரு தலைல பண்ணு. உன் டிப்பார்ட்மெண்ட் ஆளு தான். போலிஸ், போலிஸ் மேல சத்தியம் பண்ணாத்தா சரியா இருக்கும். இந்தா… " எனப் பிரவீனை இழுத்து முன்னால் விட, அவனும் அரண்டு விட்டான்.


"எனக்கு இன்னும் எட்டு மாசத்துல குழந்த பிறக்க போது." என்க, 


"வயித்துல இருக்குறது பேபி யா? நாங்கூட தொப்பையத்தான் இம்மா பெருசா வளத்து வச்சிருக்கிங்கன்னு நினைச்சேன்." என்ற ராக்கியை முறைத்தவன்.


"பாவம் மோகனா. முதல் குழந்த… அதுக்கு அப்பாவா எனக்குச் சில கடமை இருக்கு. இவெ சும்மாத்தா இருக்கான். மொட்ட பையன். " என ராக்கியை கோர்த்து விட, இருவரும் ஒருவரை ஒருவர் பைரவி முன் இழுத்து விட்டு விளையாட, கோபம் வந்து விட்டது பைரவிக்கு.


"நான் சொல்றது நிஜம். எனக்கு அவன தெரியும். " எனக் கத்தினாள்.


"எப்படி நம்பச் சொல்ற?" என்றான் மது.


"அந்த கிரிஸ்டல் மெத் பத்தி நாந்தான ராக்கி பாய் உங்க கிட்ட சொன்னேன். நீங்க தா‌ன இவனுங்கள விசாரிக்கிறப்ப அதோட டிலர்ஸ் யார்னு கேட்டு சொல்றேன்னு சொன்னிங்க. இப்ப நம்ப மாட்டேங்கிறாங்க. பிரவீன் அண்ணா சொல்லுங்க அந்த போத கும்பல பத்தி நான் விசாரிச்சிட்டு தான இருக்கேன். " என இருவரையும் கேட்க,


ராக்கி, " நான் இல்லன்னு சொல்லல. நான் உனக்கு உதவியா இருக்கும் தான் கால் பண்ணவே செஞ்சேன். உனக்கு அவன எப்படி தெரியும் அத சொல்லு. எங்கேயோ பாத்திருக்கேன்னு சொன்னியே. அந்த சம்பவத்த சொல்லு. நீ சொல்றது உண்மையா! பொய்யா! நம்பவா வேண்டாமான்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம். " என்க, 


பிரவீன் யோசனையுடன் நின்றான். அவள் ஏன் அந்தக் கும்பலை தேடுகிறாள் என்று அவனுக்குத் தெரியுமே அதனால் வந்த அமைதி. அதை இப்போது சொன்னால் மதுவுடன் பைரவிக்கு சண்டை மூளும். அதனால் அமைதியாகிப் போனான்.


"நான் சொல்லணும்னா இந்த மருந்த அவரு காய்த்து மேல போடணும். " என்க,


"அவ்வளவு தான. கொண்டா!! " என ராக்கி வாங்க போக,


"நீங்க போட்டு விடவா நான் கடைக்கி போய் கால் கடுக்க நின்னு மருந்து வாங்கிட்டு வந்தேன். மரியாதையா இங்கருந்து போயிடுங்க. இல்லன்னா மீதி அஞ்சி நம்பர் கிடைக்கவே கிடைக்காது." என இதழ் திறக்காது ராக்கியை மிரட்டினாள்.


"பிரவீன், உங்க வாக்கி டாக்கில ஏதோ சத்தம் வருது. கடமை உங்களை அழைக்கிதுன்னு நினைக்கிறேன். வாங்க போய் என்னன்னு கேட்டுட்டு வருவோம். ஆமா இதுல எப்எம் frequency இருக்கா. மிர்சில பாட்டு கேக்கலாமா?" எனச் சம்மந்தம் இல்லாமல் பேசியபடி பிரவீனை இழுத்துக் கொண்டு சென்றான் ராக்கி. 


"நீயும் தயவு செய்து கிளம்பிடு. நான் ஏற்கனவே ஊர்பட்ட டென்ஷன்ல இருக்கேன். போய்டு." என மது பைரவியிடம் கதவை நோக்கி காட்ட, சென்று விடுவாளா அவள்!


"மாமா ப்ளீஸ். இத மட்டும் போட்டுக்கங்க. நான் போறேன். " என்க, அதை வாங்கி டேபிளில் வைத்தவன்.


"ஓகே வா... நான் போட்டுக்கிறேன் நீ கிளம்பு." எனத் துரத்தினான். வாடிய முகத்துடன் கதவை நோக்கி நடந்தவளை மதுவின் குரல் தடுத்தது. 


"நிஜமாவே நீ அவன பாத்திருக்கியா? எங்க? யாருன்னு தெரியுமா?" எனக் கேட்க,


"ம்… நல்லாவே தெரியும். பக்கத்துல பாத்திருக்கேன். அது எங்கன்னா!!" என உற்சாகமாக சொல்ல, மது ஆவலுடன் அருகில் வந்தான்,


"எங்க?" எனக் கேட்டபடி.‌


"அதச் சொல்லணும்னா இத போடணுமே." 


"நாந்தா போட்டுக்கிறேன்னு சொன்னேனே." 


"இல்ல நானே போட்டு விடுவேன்." என்க, அவன்‌ சலிப்புடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.


"அப்ப சரி நான் போறேன். இந்தப் போத கும்பல் ஒரு சிலந்தி வலை மாதிரி. சரியான நூல பிடிக்கலன்னா கடைசி வரை அதோட ஆரம்பத்த கண்டுபிடிக்கவே முடியாது. சுத்து சுத்துன்னு சுத்தி நேரம் தான் செலவாகி போகும். " என்றபடி நடக்க,


"போட்டு விட்டுத் தொல." 


"அதச் சிரிச்ச‌ மாதிரி முகத்த வச்சிட்டு சொல்லலாமே." என்றவள் வேகமாக வந்து அவனின் காயத்தைச் சுத்தம் செய்ய தொடங்கினாள். 


எங்கே அவனுக்கு வலியை உண்டாக்கி விடுமோ என்ற பயத்தில் காற்றை விட மிருதுவாக அவள் அதைச் சுத்தம் செய்ய, அந்த காதலையும் அன்பையும் மது தான் அனுபவிக்க முடியாது தவித்தான்.  


ஈகோ அவனைக் கீழிறங்க விட வில்லை. மீண்டும் மீண்டும் அவள் செய்த செயல் தான் நினைவிற்கு வந்து ஆத்திரத்தைத் தூண்டியது. அவ்வ போது எழும் மனைவியின் நினைப்பும் அவளின் காதலும் அவனை வலுவிழக்கச் செய்வதால் அதை நினைப்பது இல்லை. அந்த நினைப்பே வரவும் வளரவும் விடுவதில்லை.


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி 

 


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...