முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

பனி 45

 

அத்தியாயம்: 45



ஒவ்வொரு உறவிற்கும்…


எதிர்பார்ப்புகள் உண்டு… 


ஆனால் எதிர்பார்ப்பு இல்லாமல்…


கிடைக்கும் ஒன்று அன்பு…


எவ்வளவு தான் காயப்படுத்தினாலும்…


நாம் நேசித்த இதயத்தை மட்டும்… 


மறக்கவோ வெறுக்கவோ…


முடியவில்லையெனில் அது…


உண்மையான அன்பு… 


பைரவியிடம் இருப்பது போல். மதுவின் காயத்தைத் தவிர வேறு எதுவும் அவளின் கண்களுக்குத் தெரியவில்லை. மையிட்ட விழிகள் கலங்கி கண்ணீரைத் தேக்கி வைத்து நின்றன. 


மதுவிற்கு அழுபவரை பிடிக்காது. ஏமாற்றி காரியம் சாதிக்க சுரக்கும் கானல் நீர்,  கண்ணீர் என்பான். திருமணம் முடிந்த புதிதில் பைரவிக்கு எதற்கெடுத்தாலும் கண்ணீர் வரும்‌. தான் எதிர்பார்த்தது போல் திருமண வாழ்வு அமையவில்லை என்ற ஏமாற்றத்தில் அழுகை வர,


"இதோ பாரு… கண்ணீர் விட்டுட்டே பேசுறதா இருந்தா தயவு செய்து போய்டு. நீ சொல்ற எதையும் நான் கேக்கவோ நம்பவோ மாட்டேன். போ... " எனத் தன் முன் அழும் மனைவியைத் துரத்தி விடுவான். அவளும் அப்போது எதுவும் சொல்லாது சமயலறை புகுந்து தன் அழுகையைத் தொடர்வாள். 


இப்போது வந்த அந்த நீர் எதற்கானது என உணரும் போது மதுவின் உள்ளம் பைரவியின் அன்பில் கரைய காத்திருந்தது.


இதழ் குவித்து தன் காயத்தை மெல்ல ஊதி ஊதி அவள் மருந்திடும் தோரணையும், இதமாய் அவளின் மேலிருந்து வந்த வாசமும், நாசியில் பெண்ணவளின் நிறைக்க, கட்டுப்பாடின்றி துடித்த தன் இதயத்தை அடக்க அவளிடம் பேசத் தொடங்கினான். அதாவது அந்தப் போதை ஆசாமியைப் பற்றிய கேள்விகளைக் கேட்டான்.


"அவன நல்லா தெரியும்னு சொன்னியே! எங்க பாத்த? யார் கூட பாத்த?"


"பொறு மாமா. நாந்தா மருந்து போட்டுட்டு இருக்கேன்ல. கவனமா போடணும். இல்லன்னா ப்ராப்ளம் வரும்." எனக் காயத்தை‌ விட்டு விழி எடுக்காது பேச, 


"நீ என்ன ஆப்பரேஷனா பண்ணிட்டு இருக்க. கவனம் சிதறாம மருந்து போட. கண்ணாடிய பாத்து நானே போட்டிருப்பேன்." எனச் சலிப்பாக குரல் வர,


"ம்ச்… போட்டிருப்பிங்க தான். ஆனா அது நான் போடுற மாதிரி இருக்காது. அடுத்து சண்ட போடும் போது நாலு பக்கமும் கண்ண தொறந்து பாருங்க. அப்படிப் பாத்திருந்தா அடி பட்டிருக்காது. கவனமா இரு மாமா. ப்ளிஸ்… எனக்காக…" என்றாள் கெஞ்சலோடு.


"இப்ப எதுக்கு நீ சாவித்திரி மாதிரிக் கண்ணீர் வடிக்கிற. எதுக்கு இந்த ஓவர் ஷீனு. உனக்கு நார்மலா நடந்துக்கவே தெரியாதா! ஏன் எதுக்கெடுத்தாலும் டிராமா போடுற?" என்க, அவள் புன்னகையுடன்,


"அது அப்படித் தான். உங்க கிட்ட மட்டும், இந்த மாதிரிப் பண்ணணும்னு தோணுது." எனச் சொல்லி கன்னத்தைக் கிள்ளி முத்தமிட, அவளின் கரத்தைத் தட்டி விட்டு விட்டு எழுந்து நின்று கொண்டான். 


"நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு. அவெ யாருன்னு உனக்கு தெரியுமா? எங்க பாத்த? யார் கூட?" என்க, அவனின் தோளில் தன் இரு கரத்தையும் மாலையாக போட வர, அவன் விலக நின்றான், சலிப்புடன். 


"எனக்கு இந்த மாதிரி நின்னுட்டு பேசுனாத்தா பேச்சு‌ வரும். அப்றம் நான் வாய மூடிக்கிட்டு போய்டுவேன். யாருன்னு கண்டுபிடிக்க முடியாது." என்க, அவன் அசையாது நின்றான். நெருங்கி அவனின் கன்னத்தில் தன் ஈர உதடுகளால் எச்சில் பதிய அழுத்தி முத்தமிட்டவளிடம், 


"பைரவி you crossing your limits." என்றான் கன்னத்தின் ஈரத்தைத் துடைத்த படி.


"தப்பில்ல மாமா…" என்றவள் மீண்டும் நெருங்க, அவள் முகம் பிடித்து நிறுத்தியவன், 


"அப்ப உனக்குத் தெரியாது. பொய் சொல்லிருக்க. சரியா?" என அவளின் விழிகளை உற்று பார்த்து கேட்க, அவள் திருதிருவென முழித்தாள். 


'என்ன இந்த முழி முழிக்கிறா! அப்ப தெரியாதா இவளுக்கு! பொய் சொல்லிருக்கு போல இந்த பயபக்கி.'


"இல்ல நான்... அவன பாத்திருக்கேன்… பட்... "


"பட்…”


"எங்கன்னு தான் நியாபகம் இல்ல. ஹீ… " என அசட்டு சிரிப்பு சிரிக்க, அடுத்து என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று நம்புகிறேன்.


கண்களில் கலைந்த மையைத் தன் கர்ஷீப் கொண்டு சுத்தப்படுத்திக் கொண்டே வந்தவள் ராக்கி பாயின் முன் நின்று, அழுவது போல் நடிக்க தொடங்கினாள். 


"பாருங்க ராக்கி பாய். உங்க ஃப்ரெண்டுக்கு கொஞ்சம் கூட இரக்கமே கிடையாது. இரும்பு மனுஷனா இருந்தா கூட ஒரு பொண்ணுக்கிட்ட இப்படியா நடந்துப்பாரு. அதுலயும் நான் அவருக்கு பொண்டாட்டி. என்னை கையப் பிடிச்சி, வெளில இழுத்திட்டு வந்து விட்டுட்டாரு. நான் அவருக்கு உதவி பண்ணத் தான் வந்தேன். டிராஃபிக் அதிகம். கிடைக்கிற கேப்லலாம் காத்து மாதிரி புகுந்து புகுந்து, சந்து பொந்து இண்டு இடுக்குன்னு பாம்பு மாதிரி வளஞ்சு வளஞ்சி வந்தேன்.


யாருக்காக? அவருக்காகத்தான!! அதப் புரிஞ்சிக்காம… என்னை... என்னை... Get out ன்னு சொன்னாக் கூட பரவாயில்லை, தாங்கிருப்பேன். Get lost னு சொல்லிட்டாரு." என அழ, ராக்கியும் உடன் சேர்ந்து அழுதான். 


"அவெ அவ்வளவே பெரிய கொடுமக்காரனா இருப்பான்னு தெரியாம அவெங்கூட நான் நட்ப வளத்துக்கிட்டேனேம்மா. தப்பு பண்ணிட்டேன். நான் தப்பு பண்ணிட்டேன். " என தன்னை தானே அடித்துக் கொள்ள,


"விடுங்க ராக்கி பாய். அவரு பண்ண தப்புக்காக நீங்க அழாதிங்க.” என ஆறுதல் சொல்ல,


"இல்லம்மா பைரவி. நீ எனக்குத் தங்கச்சி தான. கடந்த ஐஞ்சி வர்ஷமா நீயும் நானும் அப்படி தான பழகிருக்கோம்‌. ஆனா அப்படி இருந்தும் நான் இப்படி பண்ணது ரொம்ப பெரிய தப்பு. தப்பு பண்ணிட்டேம்மா. நான் தப்பு பண்ணிட்டேன். " எனக் குளுங்கி குளுங்கி அழுதான்.


'தப்புன்னு எதைச் சொல்றாரு!' எனப் புரியாது அவள் முழிக்க.


"இங்க வாயேன்…" என அவளை அழைத்து சென்றான். எங்கே என்றால், அது மது அலுவலக அறையின் பின் புறம். 


" போலிஸ் வாக்கிடாக்கில டவர் கிடைக்கலன்னு சொல்லி, அதக் கைல வச்சிட்டே, டவர் தேடீட்டு இந்தப் பக்கமா வந்தேன்னா! அப்ப மதுவும் நீயும் நிக்கிறது தெரிஞ்சது.


எனக்கு ரொம்ப நாளாவே ஒரு ஆசை. அது என்னன்னா நீங்க ரெண்டு பேரும் அப்படி என்னதா பேசி, அடிச்சிக்கிறீங்கன்னு. ஏன் உங்களுக்குள்ள சண்ட மட்டுமே வருதுன்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டு அந்தப் பக்கம் நகர்ந்து போகாம நின்னுட்டேன்.


தப்பு தான்... தப்பு தான்... ஆனா நீயும் அவனும் பேசுனத காதால கேக்காம இருந்திருந்தேன்னா!! சத்தியமா நீ சொன்னது பொய்யின்னு என்னால கண்டு பிடிச்சிருக்கவே முடியாது. உன்னோட அழுகைய உண்மன்னு நம்பி நண்பன சந்தேகப்பட்டிருப்பேன்." என்க, பைரவி அவனை அடிக்கத் துரத்தினாள்.


"ஒட்டு கேட்டுட்டா நின்னிருக்கிங்க. புருஷெ பொண்டாட்டி பேசுறத ஒட்டு கேக்கலாமா! ம்…" எனக் கட்டையை எடுக்க, 


"ஏய்! நான் ரொம்ப டீசன்ட்டான ஆளு. ஒட்டுலாம் கேக்கல. நீங்க கத்தி கத்தி பேசவே இல்லயே. அப்றம் எப்படி கேட்டிருப்பேன்!"


"அப்றம் எப்படி தெரிஞ்சது."


"கேக்கல... ஆனா பாத்தேன்.. " 


"பாத்தேன்… means… "


"ஒரு ரொமாண்டிக் ஷீன் பாக்க ஆசைப்பட்டு ஜன்னல் வழியா எட்டி பாத்தேன். ஆனா ஹாலிவுட் ஷீன் இல்லாம சப்புன்னு முடிஞ்சிடுச்சி." என்றவனை என்ன செய்ய!! 


"உங்கள… ச்ச... அஞ்சி நம்பர நான் சொல்லவே மாட்டேன். இனி தாமரைய மறந்திடுங்க. தாமர உங்களுக்கு கிடையாது. கிடையவே... கிடையாது…" எனக் கத்தியவளின் முன் பிரவீன் வந்து நின்றான்..


"என்ன! போலிஸ்ஸு ஸ்டேஷன் போகம இங்க இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கிங்க?" என ராக்கி கேட்க, அவனுக்குப பதில் சொல்லாது, பைரவியைக் கோபமாக திட்ட தொடங்கினான் பிரவீன். 


"உன்னை அந்த கேஸ்ல இன்வால் ஆகாதன்னு சொன்னேனா இல்லையா! ஏன் கேக்கவே மாட்டேங்கிற பைரவி நீ. உனக்குச் சுடர் முக்கியமான ஆளு தான். நான் இல்லன்னு சொல்லல. ஆனா அந்தப் பொண்ணுக்காக நீ இப்ப இறக்கிருக்குற பாதை ரொம்ப ரொம்ப தப்பு. புதைகுழில காலை விட்டு தேடுறதுக்கு சமம், இப்ப நீ பண்ணிட்டு இருக்குறது. " எனக் கண்டபடி பேச,


"ஏன்.. ஏன் போலிஸ் பையூவ திட்டுறீங்க. பாவம்…" என சப்போட்டிற்கு வந்தான் ராக்கி, பைரவியின் வாடிய முகம் பொறுக்காது. 


"திட்டாமா என்ன பண்ண சொல்றிங்க. இவளுக்கு டிப்பார்ட்மெண்ட்ல என்ன வேலையோ அத மட்டும் பாக்க சொல்லுங்க. அத விட்டுட்டு துப்பறியும் சாம்பு மாதிரிக் கிளம்பிட்டா… புடிச்சிட முடியுமா அவனுங்கள!" 


"முடியும்… அந்த போதைத் கூட்டத்த கண்டு பிடிச்சா எல்லாத்தையும் கண்டு பிடிக்க முடியும். சுடரக்கா மரணத்துக்கு காரணமானவங்கள என்னால கண்டு பிடிக்க முடியும்." என்றாள் சிறிய குரலில்.


"அதா அடுத்தடுத்த வாரத்துல மகளிர் அமைப்புகளோட சேந்து போராட்டம் பண்ணப் போறதா சொன்னேல. அத்தோட நிப்பாட்டிக்க வேண்டியது தான. ஏன் உனக்குச் சம்மந்தமில்லாத விசயத்துல தலைய விடுற. உன்னால சுடர் மரணத்துக்கு காரணமானவங்கள கண்டுபிடிக்கச் சொல்லி அழுத்தம் தான் குடுக்க முடியும். நீயா கொலகாரனுக்கள கண்டு பிடிக்க முடியாது. முட்டாள்தனமா எதையாது பேசிட்டும்‌ பண்ணிட்டும் திரியாத. " என்றான்.


"நான்… இப்ப என்ன தான் பண்ணணும்.

எது பண்ணாலும் தப்பு தப்புன்னு சொல்லிட்டு இருக்கிங்க. எனக்கு அவங்கள கொன்னது யாருன்னு தெரிஞ்சே ஆகணும். சுடர் அக்கா கேஸ்ஸ விசாரிக்க கூடாதுன்னு ஏன் சொல்றிங்க?" 


" நான் சுடர் கேஸ்ஸ பத்தி பேசல. அத கண்டுபிடிக்கிறேன்னு நீ அந்த ஸ்மெக்லிங் கும்பல் பின்னாடி போகாதன்னு தான் சொல்றேன். did you understand. " எனக் கோபமாகவே கத்தினான் பிரவீன். பைரவி எதுவும் சொல்லாது நடக்க,


"எனக்கு பதில் சொல்லிட்டு போ. இனி நீ அந்த கும்பல தேட கூடாது. " 


"போக மாட்டேன். போதுமா." எனக் தடக் தடக் எனக் கோபமாக கால்களை உதறிய படி நடந்து சென்றாள் பைரவி.


" ஏன் பிரவீன் இவ்ளோ கோபம்?" என்றான் ராக்கி.. 


" ராக்கி உங்களுக்கு தெரியாது. அந்த கும்பலால சில ஏரியா முழுசும் பாதிக்கப்பட்டிருக்கு. ஸ்கூல் காலேஜ்ன்னு ஆரம்பிச்சி வயசு வித்தியாசம் இல்லாம அதுக்கு அடிமையாகி திரியிதுங்க.‌


போத பழக்கத்தால ப்ளாக் மெயில்ல தொடங்கி, கற்பழிப்பு, கூட்டு பலாத்காரம்னு பல க்ரைம் நடந்திட்டு இருக்கு. சைபர் க்ரைமால கூட அவனுங்கள ட்ரேஸ் பண்ண முடியல. 


டிப்பார்ட்மெண்ட்ல எத்தன பேர் இந்த கும்பல பிடிக்கப் போய் இறந்து போயிருக்காங்கன்னு தெரியுமா? ஏன் இப்பவர தன்னோட மகளுக்கு போத மருந்து குடுத்தவன அந்த ஜாயின் கமிஷ்னராலயே பிடிக்க முடியல. புலி வாலைப் பிடிக்கிறதுக்குச் சமம், அவனுங்களத் தேடி போறது. 


சுடர் கேஸ்ல கிரிஸ்டல் மெத் சம்மந்தப் பட்டிருக்குன்னு விசாரிக்க போனா எல்லா கதவு மூடிருக்கு. எதையும் அழுத்தமா அடிச்சி கேக்க முடியாத இடத்துல போலிஸ்ஸே இருக்கும் போது… சின்னப் பொண்ணு… அவளால என்ன பண்ண முடியும். இல்ல பண்ண விட்டுடுவாங்களா. 


இதுல பெரிய ஆளுங்க சம்மந்தப்பட்டிருக்கனும். அதான் இதைப் பத்தி விசாரிக்கவே முடியல. பயங்கர ப்ரஷ்ஷர். இதுல பைரவி தலையிடுறது எனக்குப் பிடிக்கல. இப்ப நான் அனுபவிக்கிற என்னோட ஹப்பியான லைஃப்க்கு காரணமே பைரவி தான். she is like my sister. அவளுக்கு ஒன்னுன்னா... முடியாது… "  என்றான் தீவிரமானக் குரலில்.


"எல்லாம் ஓகே. யாரு அந்த சுடர்?" 


"சுடர்விழி தெரியாதா!!" 


"அட தெரியலன்னு தான கேக்குறேன்?"


"ஒரு பொண்ணு. இறந்திட்டா. யாருக்கும் நடக்க கூடாதா ரொம்பவே கொடூரமான கொலை அது. அந்தப் பொண்ணோட இறுதி சடங்குக்குப் போய்ட்டு வந்ததுனால தான் பைரவிக்கும் ஜெயஸ்ரீ அத்தைக்கும் பெரிய சண்டையே வந்தது. ஞாபகம் இருக்கா. " எனக் கேட்க,


"ம்ஹிம்… நான் சைந்தவி விசயத்துக்கு அப்றம் அந்த வீட்டு பக்கமே போறது இல்ல. அதுனால எனக்கு தெரியாது."


" அப்ப சுடர் யாருன்னு பைரவிட்டே கேட்டு தெரிஞ்சுக்கங்க. நான் வர்றேன்." என்றவன் சென்றுவிட, ராக்கி பைரவியை தேடிச் சென்றான். 


சாப்பரை ஸ்டாட் செய்தவள் அதை அணைத்துவிட்டு அதன் ஹன்டுபாரில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள் பைரவி. அவளுக்கு ஆயாசமாக வந்தது. கிரிஸ்டல் மெத் ஒன்று தான் யார் சுடரை கொலை செய்தார் என்ற கொலைக்காரனுக்கான பாதையைக் கண்டு பிடிக்கும் ஒரே வழி என நினைத்தவளுக்கு பிரவீனின் காட்டமான திட்டுக்கள் கவலை அளித்தது.


எப்போதும் பிரவீன் அப்படி கிடையாது. பைரவிக்கு அண்ணனாக பல உதவிகளை செய்வான். ஆனால் இன்று விலகி இருக்கச் சொல்லி கேட்கிறான் என்றால் அதன் வீரியம் பெரிது என பட்டது பைரவிக்கு. ஆனாலும் இருந்த ஒரு பாதையும் கருங்கல் கொண்டு அடைக்கப்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாது அமர்ந்திருக்க, ராக்கி வந்தான்.. 


"இப்ப என்ன அவெ உன்ன அதுல இன்வால் ஆகக் கூடாதுன்னு தான சொல்லிருக்கான். என்ன மேட்டருன்னு எங்கிட்ட நீ தெளிவா சொன்னேன்னா நான் உதவி பண்ணிடப் போறேன்." 


"என்ன உதவி பண்ண முடியும் உங்களால? " 


" எல்லாமே முடியும். என்னால இல்லன்னாலும் உம் புருஷனால முடியும். ஏன்னா அவனும் இப்ப அந்த கும்பலத்தா தேடிட்டு இருக்கான். நம்ம அகாடமில இந்தக் குப்பைய கொண்டு வந்து வச்சி, மாட்டி விட நினச்ச எங்க எதிரிய பிடிக்கணும்னா இந்த கும்பலயும் பிடிக்கணும். அவெ என்னென்ன பண்றான்? யார் யார? விசாரிக்கிறாங்காற தகவல, நான் உனக்கு சொல்றேன். பதிலுக்கு நீ.‌" 


"தாமர நம்பர் வேண்டும் சரியா!!"


"இல்ல… யார் அந்தச் சுடர்னு சொல்லணும். ஜெயா ஆன்டி கூடவே உன்னைச் சண்ட போடுற அளவுக்கு நீ முக்கியத்துவம் குடுக்குற ஆளு யாருன்னு தெரியணும்." 


பைரவி சுடர் விழியின் மரணத்தைப் பற்றி கூறினாள். தாமரையை கடத்தி இருக்கிறார்கள் என்பதே அவனுக்கு அதிர்ச்சியாகவும் கவலையாகவும இருக்கும் போது, சுடரின் மரணம் ராக்கியைக் கண்கலங்க வைத்தது. 

தொடரும் ...


💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி

பனி 44

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...