முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

பனி 46


 

அத்தியாயம்: 46



சாரதா ஹோம்ஸ்.. 


பைரவி உற்சாகமாக தன் சாப்பரை நிறுத்தினாள் அன்று. உடன் சாருவையும் இழுத்து வந்திருந்தாள்.


"குட் மார்னிங் பாண்டிண்ணா." என காரை சுத்தம் செய்து கொண்டிருந்த பாண்டியிடம் புன்னகையுடன் சொல்ல, 


"காலை வணக்கங்கள் மேடம்.” என்றான் சிரித்த முகத்துடன். ஆனால் பார்வை சாருவிடம் இருந்ததால் அவள்  அவனை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.


"கார உங்க பொறுப்புலயே விட்டுட்டாரா உங்க முதலாளி.‌ நல்லா அழுத்தி அழுத்தி சொந்த காரு மாதிரி தொடக்கிறீங்க." என்றாள் கேலியாக.


"சொந்தம் இல்லன்னாலும் எங்கிட்ட இருக்குற வர அது என்னோடது தான். ஊர் திரும்புற வர இது தான் எனக்கு சம்பாதிச்சி தர்ற கடவுள். அந்தப் பகவானுக்கு அபிசேகம் பண்றதுல தப்பில்லயே. அத்தோட மதுரைல இருக்குற என்னோட வண்டிய காட்டிலும் அந்த செல்லம் அதிகமா வருமானம் குடுக்குதே!" 


"அப்ப கவனிப்பு சிறப்பாகத் தான் இருக்கணும். " எனச் சொல்லி உள்ளே செல்ல போக, பாண்டி அவனைத் தடுத்தான்.


"செல்வி அடையாளம் காட்டுன காருக்கு சொந்தக்காரன கண்டுபிடிச்சாச்சா? எந்த நிலவரத்துல இருக்கு செல்வியோட கடத்தல் கேஸ்." 


"லோட்டஸ் காட்டுன கார் ஒரு திருட்டுக் கார். செங்கல் பட்டு பக்கத்துல இருந்து திருடீட்டு வந்திருக்கானுங்க. அதுனால அடுத்து மூவ் பண்ண முடியல. ஆனா சீசி டீவி கேமரால பதிவான சில முகங்கள் யாரோடதுன்னு கண்டுபிடிச்சா வழி இருக்கும்.  


அதுக்கு சில சாஃப்ட்வேர்ஸ் ஹெல்ப் வேணும். எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட கேட்டிருக்கேன். எப்படியும் ஒரு வாரத்துல நமக்கு க்ளியரான ஃபோட்டோ கிடைச்சிடும். டிப்பார்ட்மெண்டுல இருக்குற அக்யூஸ்ட் லிஸ்ட்ல மேச் ஆனா‍, லோட்டஸ்ஸ கடத்துனவங்கள பிடிச்சிடலாம்." என்றாள் நம்பிக்கையுடன்.


'ச்ச இந்தப் புள்ளைக்கு எவ்ளோ தன்னம்பிக்க. முடியுமா முடியாதால்லாம் யோசிக்காம. எவ்ளோ பாசிட்டிவ்வா பேசுது!'


"என்னென்னத்தையோ சொல்றிங்க. பாப்போம். " எனக் கேலியாக சிரிக்க,


"சிரிங்க… நல்லா சிரிங்க... நான் லோட்டஸ் கடத்துனவன கண்டுபிடிச்சி அரஸ்ட் பண்ணுவேன்ல அப்ப நான் சிரிக்கிறேன். நீங்களே பாப்பிங்க." என ரோசமாக சொன்னவள், "லோட்டஸ் எங்க?" எனக் காட்டமாக கேட்டாள்.


"உள்ள சாரதாம்மாக்கு சமைக்க உதவி பண்ணிட்டு இருக்கா. இன்னைக்கி அப்பா வர்றார், போராட்டத்த பத்தி பேச. அதான் ஒத்தாசையா வேலை பாக்குறா. நீ சாப்டியாம்மா? " 


"அதெல்லாம் கரெக்ட் டயத்துக்கு ஆச்சி. ஆமா நீங்க ஏன் வேலைக்கி போகல." 


"இன்னைக்கி ஒரு நாள் வேலை நிறுத்தமாம். ஸ்டெய்க்குன்னு சொல்லி இன்னைக்கி கிடைக்க வேண்டிய வருமானத்துல மண்ணள்ளி போட்டுட்டானுங்க." என வருத்தப்பட,


"டேன்ட் வாரி பாண்டிண்ணா. எல்லாம் ஒரு நாள் சரியாகிடும். நாளைக்கு முக்கியமான ஒருத்தர பாக்கணும். அதுக்கு நான் தாமரைய மாலுக்கு கூட்டீட்டு போகட்டுமா? நீங்களும் வாங்க. ஏன்னா தாமர கடத்தல் கேஸ்ல ஒரு போதப் பொருள் சிக்குச்சில்ல. அந்தக் கூட்டத்த சேர்ந்த சிலரோட ஃபோட்டோ கிடைச்சிருக்கு. அதுல யாராவது இருந்தா அடையாளம் காட்டி சொல்லாம். அதான்… " என சிறு பயத்துடனே சொன்னாள்.


'பின்ன பாண்டி விட்ட அடில கன்னம் பன்னு மாதிரி வீங்குனத அவளும் தான் பாத்தால்ல. அப்ப பயம் இருக்கத்தான செய்யும்.' 


"சரிம்மா நான் நாளைக்கி அவளக் கூட்டீட்டு வர்றேன்." 


"தேங்க்ஸ் பாண்டிண்ணா.. " என்றபடி ஓடிச் சென்றாள் சாரதாவின் வீட்டிற்குள். 


அங்கு பல நோட்டிஸ்கள், பதாகைகள், சில பேனர்கள் என அனைத்திலும் சுடரின் புகைப்படத்தைத் தாங்கி பல அட்டைப் பெட்டிகள் இருந்தன. அதைப் பிரித்து படித்துப் பார்த்தாள் பைரவி.


பெண்களை நுகர்வுப் பொருளாக பாவிக்கும் கொடுஞ்செயலை துடைத்தெறிவோம்.


மாணவர்களையும் இளைஞர்களையும் கலாச்சார சீரழிவில் இருந்து பாதுகாத்திடுவோம். 


ஆண் பெண் சமத்துவத்தை நிலைநாட்ட சூளுரைப்போம்.. 


இன்னும் பல இருந்தது. ஒவ்வொரு பதாகைக்களுக்கு கீழும் வெவ்வேறு இயக்கங்களின் பெயர் எழுதி இருந்தது‌‌. பல பெண் அமைப்புகள் ஒன்று கூடி சுடரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தை நடத்த உள்ளது. அதன் தலைமை சாரதாவும் கண்ணாயிரமும் தான். 


அச்சிட்டு வந்திருந்த அனைத்து பெட்டிகளையும் கணத்த மனதுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்த சாரதா, பைரவி வந்து, 'அம்மா'  என்று அழைக்கவும், அந்தக் குரல் மகளின் குரலாக காதுகளில் விழுந்திருக்க வேண்டும். ஆசையுடன் நிமிர்ந்து பார்த்து நிராசை அடைந்து மனம் உடைந்து கண்ணீரைத் துடைத்தபடி அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார்..


பத்து திங்கள் வயிற்றில் சுமந்து, ரத்தத்தை பாலாய்க் கொடுத்து. பல ஆண்டுகள் நெஞ்சில் சுமந்து பெற்றெடுத்து வளர்த்த மகள். இன்று இல்லை என்பதே கொடூரம். அதிலும் பலரால் பலாத்காரம் செய்து கொள்ளப்பட்டாள் என்பது அதை விட கொடூரம். அத்தனையையும் தாங்கிக் கொள்ளும் தைரியம் சாரதாவிற்கு இல்லை.


கண்ணீர் சிந்திக் கொண்டே என்றாலும் மகளின் மரணத்திற்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்‌, என்பதற்காகவே திடமாய் இருப்பது போல் காட்டிக் கொள்கிறார். ஆனால் இன்று அது முடியவில்லை. மகளின் புகைப்படத்தைப் பார்க்க பார்க்க பெற்ற வயிறும், உடலும் பற்றி எரிவதை போல் உயிர் வலியை உணர்ந்தார். 


சாரதாவின் கண்ணீரை கண்ட பைரவியின் உற்சாகம் முழுதும் வடிந்து விட்டது. அவள் சாரதாவிடம் கேட்க நினைத்தை ஒதுக்கி விட்டு ஆறுதல் கூறி மற்ற வேலைகளைப் பார்க்கச் சென்றார். 


ராக்கி கேட்ட சில கேள்விக்கள் அவளை தெளிவு படுத்தி அவளுள் ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருந்தது. என்ன கேள்வி என்பதை அறிய முந்தைய அத்தியாயத்தில் இறுதியில் பேசிய ராக்கி பைரவி உரையாடல்களுக்குள் நாம் செல்ல வேண்டும். 


வாங்க போகலாம்…


" எனக்கு சுடரக்காவ கொஞ்ச வர்ஷமாத் தான் தெரியும். ஆனாலும் எங்களுக்குள்ள நல்ல பழக்கம். சுயநலமா தங்கள பத்தி மட்டுமே யோசிக்கிற இந்தக் காலத்துல அவங்க செய்ற பொது சேவ பாராட்டுக்குறியது. அவங்களுக்கு நிகர் யாருமே இல்ல.‌ அவங்க இந்த உலகத்துல இருந்து காணாம ஆக்கப்பட்டாங்கன்னு நினைக்கும் போது வேதனையா இருக்கு. 


ஒரு அரை... நடு ரோட்டுல அவன நிக்க வச்சி என்னோட செருப்பால ஒரு அரை நான் அரையணும். அப்பத்தா எனக்கு நிம்மதியா இருக்கும். அதுக்கு நான் அவனக் கண்டுபிடிக்கணும். கண்டுபிடிக்க எனக்கு கிடச்ச வழி தான் அந்த கும்பலோட ஹெட். " என்றவளின் பேச்சு ஊசியை வைக்கோல் போருக்குள் தேடுவதற்கு நிகரானது என்று தோன்றியது ராக்கிக்கு..


" பிரவீன் அண்ணா மட்டும் தலையிடாம இருந்தா எல்லாமே ஸ்மூத்தா போக்கிட்டு இருந்திருக்கும். ச்சா… குறுக்க வந்து கெடுத்துட்டாங்க. இல்லன்னா நான் யாருன்னு கண்டு பிடிச்சிருப்பேன். என்ன பாய் நான் சொல்றது சரி தான? இதுக்கு எனக்கு நீங்க உதவி பண்ணுவிங்க தான." என ஆவலுடன் கேட்க,


"பண்ணலாம்… ஆனா பிரவீன் சொல்றதுல எனக்கு நியாயம் இருக்குற மாதிரி தெரியுது." என்றான்.


"நீங்களும் அவரு கூட சேந்துட்டிங்களா! ச்ச… யாரும் எனக்கு உதவி செய்ய வேண்டாம். நானே பாத்துப்பேன் எல்லாத்தையும்.‌" என்ற பைரவி கோபமாக தன் சாப்பரை ஸ்டார் செய்ய, அதன் சாவியைத் திருகி எடுத்தவன்,


"ஆத்தா மல இறங்கு. ஏன் ஏறுற? நீ தேடுறது டிரக் டீலரா இல்லாமா கஸ்டமரா இருந்தா? எப்படி தாமரைய கடத்துனவனுக்கு அது போச்சோ அதே ‌மாதிரி சுடர கடத்துனவங்களுக்கும் வாங்கி யூஸ் பண்ணிருக்கலாம். ஏன்னா காசு இருந்தா அந்த கோலமாவ நாங்கூட வாங்கி உனக்கு தர முடியும். 


ஒருத்தர் மாத்தி ஒருத்தர்னு கை மாறிக்கிட்டே இருக்குற ஒன்னு இவெந்தா குடுத்தான்னு கண்டுபிடிக்கிறது கஷ்டம். " என்க.


"அப்ப நீங்களும் என்னைச் சும்மா இருக்க சொல்றிங்களா? உங்களுக்கு ஒன்னு தெரியுமா! நான் வேலைக்கி போகணும்னு முடிவு பண்ணதுவேணும்னா அவரு போட்ட கன்டிஷன ப்ரேக் பண்றதுக்காக இருக்கலாம். இந்த வேலை தேர்ந்தெடுக்க சுடர் தா காரணம். அவங்களுக்காகத்தா நான் போலிஸ்ஸே ஆனேன். " என ஆவேசமாக பேச, ராக்கி விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினான். 


" ஏன் சிரிக்கிறீங்க?" 


"நீ போலிஸ்ஸா!" 


"ஹாங்...‌" என இரு கரங்களையும் இடையில் வைத்து கொண்டு தன் முன் நின்றவனை முறைக்க,


" நல்ல வேளை நியாபகப்படுத்தின. இல்லன்னா நீ யாருன்னு படிக்கிறவங்களுக்கு மறந்தே போயிருக்கும். நீ எதுக்கும் ஸ்கூல்ல imposition எழுதுவாங்கள்ல! அந்த மாதிரி ஒரு நூறு தடவ எழுதி… அத நீயே டெயிலி நாலு வாட்டி சத்தமா படி. அப்பத்தா ஃபோலிஸ் மாதிரி யோசிப்ப." 


" இப்ப என்ன யோசிக்காம இருக்கேன்னு சொல்றிங்க?" 


"நிறைய இருக்கு. முதல்ல நீ ரொம்ப emotional லா இந்த விசயத்த ஹன்டில் பண்ற. அது ரொம்ப தப்பு. ஒரு டாக்டர் கோர்ட் போட்ட ஒருத்தனுக்கு, தன்னோட கண்ணு முன்னாடி இருக்குறவெ ஃபேஷன்ட்டாத்தா தெரியணும். சொந்தக்காரனா தெரியக் கூடாது. 


போலிஸ் ஜர்ஜ் டீச்சர் இந்த மாதிரி responsibility அதிகமா இருக்க பொறுப்ல வேலை பாக்குறவங்க உணர்ச்சிவசப்படக்கூடாது. இது தான் எங்க செக்யூரிட்டி கேம்ப்ல சொல்லித்தர்ற முதல் விசயம். டியூட்டி தான் ஃபஸ்ட். மத்தெல்லாம் நெக்ஸ்ட். சோ நீயும்…" 


"அப்படி தான் இருக்கேன். ஒரு போலிஸ்ஸா என்னென்ன வழில விசாரிக்க முடியுமோ! அது எல்லாத்தையும் ட்ரெய் பண்ணிட்டேன். பட் எனக்கு எந்த வழியும் கிடைக்கலயே. தேடி போய் தட்டுற எல்லா கதவும் இறுக பூட்டி கிடந்தா என்ன தான் பண்றது?"


"சரியான கதவ நீ தட்டலன்னு அர்த்தம்." என்றவனை முறைத்தாள் பைரவி. 


" நீ ரொம்ப பக்கத்துல நின்னு ஒரு குறிப்பிட்ட இடத்த மட்டும் பாக்குற பைரவி. கொஞ்சம் தள்ளி நின்னு பார்வைய அகலப்படுத்தி எல்லா இடத்தையும் பாக்கணும்."


"எனக்கு புரியவே இல்ல."


"சுடர் காணாம போன அன்னைக்கி சரியா என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா? எப்ப எத்தன மணிக்கி வீட்ட விட்டு போனா? ஏன் போனான்னு…. எங்க கிடைச்சாங்க? யார் முதல்ல பாத்தா? எப்படி அந்த இடத்துக்குப் போனாய் சுடர சரியா பாத்தாங்கன்னு விசாரிச்சிருப்பியே சொல்லு கேப்போம். " என்க, 


"ஓகே… அன்னைக்கி சன்டே. சாரதாம்மா ஊர்ல இல்ல. எட்டு மணிக்கி யார் கூடவோ ஃபோன்ல பேசிக்கிட்டே கிளம்புனதா மங்கையர்கரசி மேம் சொன்னாங்க." என அடுத்து அவள் பேசும் முன் ராக்கி இடை மறித்தான். 


" போகும் போது சுடர் முகம் எப்படி இருந்ததது? ஐ மீன் யாராது மிரட்டி வர சொன்னதுக்கான அடையாளமா பயந்து போய் இருந்ததா!" 


"இல்ல. ரொம்ப சந்தோஷமா கிளம்பிருக்காங்க. ‘இதுவர அப்படி ஒரு சிரிப்ப அது முகத்துல நான் பாத்தது இல்ல’ன்னும் மங்கை சொன்னாங்க."


" அப்ப ஃபோன்ல சுடருக்கு தெரிஞ்ச யாராவதா தான் இருக்கணும்." 


"எஸ்… அவங்க நடந்து மெயின் ரோட்டுக்கு போனதுக்கான சாட்சியா சீசிடீவி பதிவு இருக்கு. கூடவே ஒரு ஹீரோ பைக்ல ஹெல்மெட் போட்ட ஒருத்தேன் அவங்கள பிக்கப் பண்ணிட்டு போயிருக்கான். பைக் நம்பர் ப்ளேட் fake. பைக் போன திசைய வச்சி டிராஃபிக் கோமராவ செக் பண்ணதுல அந்த பைக் எந்த ஒரு கேமராலயும் பதிவாகல. 


நைட் ஒம்போது மணியானதும் மங்கை சுடரக்காக்கு கால் பண்ணிருக்காங்க. கால் போகல சுவிட்ச் ஆப்ன்னு வந்திருக்கு. சரி கொஞ்ச நேரம் கழிச்சி ட்ரெய் பண்ணலாம்னு பத்து மணிக்கு கூப்பிட்டுருக்காங்க. அப்பயும் அதே நிலம தான்.


இந்த மொற விடாம கால் பண்ணிருக்காங்க. நேரம் ஆக ஆக பயம் அதிகமாகி சாரதாம்மாக்கு விசயத்த சொல்ல, நேரா போலிஸ்ட்ட போய்ட்டாங்க. நைட் பதினோரு மணிக்கு மிஸ்ஸிங் கேஸ் பதிவாகிருக்கு. போலிஸ்ஸும் தேடிருக்காங்க. பட் எதுவும் கிடைக்கல. "


"மிரட்டல் கால்ஸ் ஏதாவது?" 


"நோ… விடிஞ்சதும் சாரதாம்மா கமிஷனர் ஆபீஸ்க்கு போய் நேரா கமிஷனர்ட்ட பேசி சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லி கேட்டிருக்கங்க. ஒரு நாள் ரெண்டு நாளா மாறி… மூனு நாள் நாலு நாள்ன்னு...‌ முழுசா ஒரு வாரம் ஆச்சி.‌ எங்கையும் கிடைக்கல. 


கண்ணாயிரம் அங்கில் கைல தான் சுடர்  கடைசியாக கிடைச்சாங்க. மதுரைல அவரோட ஊர்ல தான் கிடைச்சது உடம்பு. " என்ற போது பைரவியின் விழிகள் கலங்கி நின்றன. 


"இப்ப தான சொன்னேன். எமோஷனல் ஆகாதன்னு. " 


"எஸ்... எப்படி சென்னைல காணாம போனவங்க மதுரைல அரசனூருக்கு போனாங்கன்னு தெரியல. எந்த ஐடியாவும் கிடைக்கல. எனக்கு தெரிஞ்ச ஒரு வழி அந்த கும்பல் தான்." 


"இதத்தா சொன்னேன். ஒரு இடத்துல ஃபோக்கஸ் பண்ணாத. உன்னோட பார்வைய அகலப்படுத்துன்னு." 

ராக்கி சொல்ல, பைரவி மண்டைக்குள் மணியடித்து. ஒரு புது நம்பிக்கை கிடைத்தது. ராக்கியின் ஆதரவான பேச்சு ஒரு வித தெம்பை தந்தது. 


"அரசனூர் தாமரையோட ஊர் தான? " ராக்கி.


"எஸ்... ரெண்டும் ஒன்னோட ஒன்னு சம்மந்தம் இருக்கும்னு இப்ப தோனுது."  என்றாள் பைரவி.


"கண்டிப்பா இருக்கு. அதுக்கு முன்னாடி தாமரையோட அப்பாக்கும் சுடருக்கும் என்ன உறவு?" 


" சுடரக்காவோட அப்பா ரகுவரனும் தாமரையோட அப்பா கண்ணாயிரமும் நண்பர்கள். ஒரே ஊரும் கூட. அவருக்கு சொந்தமா ஒரு வீடு கூட அந்த ஊர்ல இருக்கு. வர்ஷத்துக்கு ஒருக்க கோயில் திருவிழான்னு கண்டிப்பா குடும்பத்தோட அந்த வீட்டுல ரெண்டு நாள் தங்குவாங்க. அந்த வீட்டுல தான் சுடர் கிடைச்சாங்க."


" யாரு கடைசியாக சுடருக்கு கால் பண்ணாங்கன்னு கண்டுபிடிச்சியா?" 


"இல்ல…" 


"கால் ஹிஸ்டரிய கண்டுபிடிக்கிறது ஈசி தான."


"அத நாங்க பாத்துக்கிறோம்னு சொல்லி பிரவீன் அண்ணா என்னைத் துரத்திட்டாங்க." 


“ஆமா நீ பிரவீன் சொன்ன எல்லாத்தையும் கரெக்ட்டா கடைபிடிக்கிறவ மாதிரி பேசுற." என்க‍, அவள் புன்னகையுடன்,


"தேங்க்ஸ் ராக்கி பாய் எனக்கு இப்ப ஒரு க்ளாரிட்டி வந்திரு." 


"என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்க?" 


"சொல்ல மாட்டேன். பட்‌ செஞ்சி காட்டுறேன். " என்றவள் சுடரின் மரணத்தை விரைவாக கண்டு பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உடன் சென்றாள்.


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...