அத்தியாயம்: 47
பைரவியின் சிறிய மண்டைக்குள் பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன. ராக்கியுடனான உரையாடலுக்கு பின் பல விசயங்களை நாம் கவனிக்காது தவற விட்டிருக்கிறோம் என்று தோன்றியது.
முதல் விசயம் சுடரின் உடல் அரசனூரில் கிடைத்திருக்கிறது என்றால் அரசனூருக்கும் சுடருக்கும் இடையே தொடர்பிருக்க வேண்டும்.
இரண்டாவது கடைசியாக யாருடன் சுடர் பேசினார் என்பதை தீவிரமாக விசாரிக்க தவறியது. பிரவீன் சம்மதிக்கவில்லை என்றாலும் வேறு வழியில் சுடரின் செல்ஃபோன்னின் நம்பரை வைத்து சில ஹக்கர்களின் உதவியுடன் அதைச் செய்திருக்கலாம்.
அடுத்தது சுடரின் பர்ஸ்னல் லைஃப்ப பத்தி விசாரியாமல் விட்டது. அவளுடன் பகைமை வைத்திருந்தவர்களை மட்டுமே இலக்காக்கி விசாரனை வளையத்திற்குள் வைத்திருந்தவள், நெருங்கிய நண்பர்களின் பக்கம் பார்வையைச் செலுத்தவே இல்லை.
"நாந்தா லூசு மாதிரி இருந்திருக்கேன். ச்ச... எனக்கே என்னை நினச்சா அசிங்கமா இருக்கு. ராக்கி பாய் சொன்னது சரிதான். நான் ஒரே இடத்த மட்டும் பாத்திருக்கேன். விசாரிக்க எத்தனையோ வழி இருந்தும் நான் ஏன் அந்த கும்பல துரத்துறதுல மட்டும் concentrate பண்ணேன்னு இப்பவரைக்கும் தெரியல. மத்த எதையும் பாக்காம குருடியா இருந்திருக்கேன்.
சுடரக்காவோட கால் ஹிஸ்டரி வேணும். அண்ணா குடுக்க மாட்டாரு. அப்ப யாரு குடுப்பா. " என யோசிக்கும் போதே அவளின் கண் முன் தீஷித் வந்து நின்றான்.
"ம்... அவெந்தா கரெட்டு. telecommunication company வச்சிருக்குற அவகேடோ கிட்ட கேட்டா சரியா இருக்கும். " என நினைத்து நேராக சாருவைப் பார்க்க அவளின் அலுவலகத்திற்குச் சென்றாள். உள்ளே செல்லாது கட்டிடத்தின் பார்க்கிங்கில் இருந்து கொண்டு சாருவிற்கு கால் செய்தாள்.
" சாரு அவசரம். வா…" என அழைக்க,
"ஏய் வேலை பாத்திட்டு இருக்கேன். வான்னா எப்படி!"
"பாட்டிக்கி உடம்புக்கு முடியலன்னு சொல்லிட்டு வா. "
"லூசா டி. அப்படிலாம் சொல்ல முடியாது."
"ஏன்?"
"ஏன்னா எனக்கு பாட்டியே கிடையாது. அது செத்து பல வர்ஷம் ஆகுது."
"அப்ப ரொம்ப நல்லது. சீக்கிரம் செத்த பாட்டிய மறுபடியும் சாகடிச்சிட்டு வா."
"வாட்?"
"பாட்டி செத்துடுச்சின்னு சொல்லி கண்ணுல தண்ணியோட போய் நில்லு உன்னோட மேனேஜர் லீவ் குடுத்திடுவான்."
"அப்படில்லாம் சொல்ல முடியாது."
"அப்ப நான் நேர்ல வந்து சொல்றேன். பாட்டி உடம்ப பேத்தி இல்லாம எடுக்க கூடாதுன்னு தர்ணா பண்ணிட்டு இருக்கோம். தயவு செய்து அனுப்பி வைங்கன்னு சொல்றேன். " வம்பாக சொல்ல,
"வந்து தொலையிறேன். நீயெல்லாம் வராத. ஆமா எங்க கூப்பிடுற? ஹலோ… ஹலோ… வர்றேன்னு சொன்னதும் கட் பண்ணிட்டா. எரும." எனத் திட்டப்படி பர்மிஷன் கேட்டுக் கொண்டு கீழே வர, பைரவி அவளை ஏற்றிக் கொண்டு சாப்பரை ஸ்டாட் செய்தாள்..
"அரமணி நேரத்துக்கு முன்னாடி தான் வேலைக்கி வந்து சீட்டுல உக்காந்தேன். உடனே வான்னு எங்க கூட்டீட்டு போற?"
"உனக்கு அவகேடோ ஆஃபிஸ் தெரியுமா? "
"ஹாங்… அவகேடோ வா! அது ஒரு பழம் தான. அதுக்கு யாரு ஆஃபிஸ் வச்சி குடுத்தா?" என யோசிக்க,
" ம்ச்... அவகேடோ டி.. நம்ம மேல கார ஏத்தி கொல பண்ண பாத்து, புது டிரெஸ்லாம் வாங்கி குடுத்தானே அவன்."
"தீஷித் ஸாரையா சொல்ற!"
"எஸ். அந்த வெண்ணை பழத்தா சொல்றேன். எந்த ஏரியால இருக்கு? இப்ப எங்க போனா அவன பாக்கலாம்?"
"ரெண்டு மூணு இடம் இருக்கு. ஆனா இப்ப எங்க இருப்பாருன்னு சரியா தெரியலயே." என்ற சாருவின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.
'மனம் கவர்ந்தவன்னு சொல்லிட முடியாது. அத க்ரஸ் ன்னு வேணும்னா சொல்லலாம். அழகா இருக்கான் அதான். இந்த சினிமா ஆக்டர்ஸ் மேல நமக்கு வருமே அது மாதிரி தான் இது.' சாருவின் மைண்ட் வாய்ஸ்.
" ம்ச்... இப்ப எந்தப் பக்கம் வண்டிய விட. கரெட்டா சொல்லத்தான் உன்னக் கூட்டீட்டு வந்தேன். "
"அது சரியா தெரியலயே. " எனச் சாரு சொல்ல, ஒரு வழியாக இருவரும் சண்டை போட்டு, இங்கி பிங்கி பாங்கி போட்டு முதலாவதாக அவனின் construction வளாகத்திற்கு சென்றனர். அங்கு அவன் இல்லை எனச் சொல்லி வேறு இடத்திற்கு அனுப்பி விட்டனர்.
அங்கும் 'இப்போது தான் மற்றொரு ப்ரான்ச்சிற்கு சென்றார்.' எனச் சொல்லி விரட்ட,
'இந்த மணிமகுட இளவரசன பாக்க எத்தன இடம் ஏறி இறங்க வேண்டிய இருக்கு.' என நொந்து கொண்டு மூன்றவதாக ஒரு அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அந்த ரிஷப்சனிஸ்ட் “அப்பாய்ண்மெண்ட் இருக்கா?” எனக் கேட்டாள்.
"அப்பாய்ண்மெண்ட் இல்ல மேம். ஆனா அர்ஜென்ட்டா பாக்கணும். அவரு தான் எங்கள வரச் சொன்னாரு. நீங்க வேணும்னா அவருக்கு கால் பண்ணி கேளுங்க." என வாய்க்கு வந்ததை அடித்து விட்டாள் பைரவி.
அந்தப் பெண் 'அப்பாய்ண்மெண்ட் இருந்தா இரு. இல்லன்னா இடத்த காலி பண்ணு.' என்க, பைரவி கெஞ்சிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த கருணாகரன்.
" What is the problem? Why are you standing here shouting?" எனக் கேட்க, பைரவி உடனே,
"ஸார் நாங்க மிஸ்டர் தீஷிதன் ஸாரோட ஃப்ரெண்ட்டு. இப்ப நாங்க அவர பாக்கணும். வெரி அர்ஜன்ட். ரொம்ப முக்கியமான விசயம்.. " என்க,
"ஸாரி மேம், அவரு முக்கியமான மீட்டிங்கல இருக்காரு. ஃப்ரெண்ட்டு சொல்றிங்க ஒரு அப்பாய்ண்மெண்ட் வாங்கிட்டு வந்திருக்கலாம்ல." என ரிஷப்சனிஸ்ட் கேட்ட அதே கேள்வியை கேட்க,
"அது… அது… அவரு தாக நீங்க எப்ப வந்தாலும் என்ன பாக்கலாம், முன்னனுமதிலாம் தேவையில்லன்னு சொன்னாரு. வேணும்னா நீங்களே அவருக்கிட்ட கேளுங்க. நீங்க எங்க பேர சொன்னிங்கன்னா! அவரே எழுந்து வந்து எங்கள கூட்டீட்டு போவாரு. பைரவி... சாருலதா.." எனத் தங்களின் பெயரை சொல்ல,
'எனக்குத் தெரியாம என் நண்பனுக்கு முக்கியமான பெண் தோழியா! அதுவும் ரெண்டா! ' என்பது போல் கருணா பார்த்துவிட்டு காத்திருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.
' எம்டியே இறங்கி வந்து பாப்பாரா! அவ்ளோ பெரிய அப்பாடக்கராம்மா நீ!' ரிசப்ஷனிஸ்ட் மைண்ட் வாய்ஸ்.
"அடிப்பாவி!! எந்த நம்பிக்கைல அவரே வந்து கூட்டீட்டு போவாருன்னு சொன்ன."
" எல்லாம் ஒரு கணக்கு தான்."
"என்ன மாதிரியான கணக்கோ. உங்கணக்கு தப்பாச்சின்னா நமக்கு தான் பெரிய அசிங்கமா போய்டும். குறிப்பாக எனக்கு. நாளப்பின்னா நான் எப்படி அவரு முகத்த பாப்பேன்."
"அப்ப பாக்காத." என்றபடி வரவேற்பில் போடப்பட்டிருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
நீள் வட்ட மேஜை. அதில் அமர்ந்து கொண்டிருந்தவர்களுக்கு தான் அணிவகுத்து வைத்திருந்த ஐடியாக்களை projector ன் உதவியுடன் நந்திதா தெளிவு படுத்திக் கொண்டிருக்க, மித்ரன், தீஷிதன், ரத்தன் என மூவர் மட்டுமல்லாது சில போர்ட் மெம்பர்ஸ்ஸும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
"Sorry for the delay.. " என்றபடி வந்த கருணாகரன், தீஷித்தின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.
"மச்சி உன்ன தேடி ரெண்டு பேர் வந்திருக்காங்க."
"ம்ச்… மீட்டிங் போய்க்கிட்டு இருக்கு ஏன் குசுகுசுன்னு காதுல பேசுற. அமைதியா இரு... மித்ரன் பாத்தா கத்துவான்." என்றவன் மிகவும் கவனமாக நந்திதாவின் வாயை பார்க்க.
" நானும் சொன்னேன் மச்சி. ஆனா எங்க பேர சொல்லுங்க உடனே வந்து எங்களக் கூட்டீட்டு போவாருன்னு சொன்னாங்க. " என்க, தீஷித் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
"பேரு என்னமோ சொல்லுச்சே. ம்… சாருலதா. இன்னோரு பொண்ணோட பேரு என்னமோ… பை..ல ஆரம்பிச்சிச்சி." என்ற போது வேகமாகத் திரும்பிப் பார்த்தவன்.
"என்ன பேரு சொன்ன?" எனக் கத்த, அனைவரின் கவனமும் தீஷித் பக்கம் திரும்பியது. ஆனால் அவன் எதையும் கவனியாது நண்பனிடம் மீண்டும் கேட்டான்.
"பைரவி மச்சான். அப்படித்தான் சொல்லுச்சி அந்தப் பொண்ணு. வேணும்னா நீயே செக் பண்ணிக்க." என்க, அவன் வேகமாக எழுந்து சென்றான்.
'அந்தப் பொண்ணு உண்மையதான் சொல்லிருக்கு போலயே!' என்பது போல் பார்த்தபடி இருந்தான்.
"கருணா என்ன நடக்குது இங்க? மீட்டிங் போய்க்கிட்டு இருக்கு! இந்த நேரத்துல எங்க போறான் அவெ?" என்றான் மித்ரன் சிறு கோபத்துடன்.
"பொண்ணப் பாக்க போயிருக்கான்."
"வாட் பொண்ணா!!" என அதிர்ந்து தான் போயினர். மித்ரனைத் தவிர மற்ற நால்வரும் தீஷித்தை வாட்ச் பண்ண மீட்டிங்கை விட்டு செல்ல, மித்ரன் தான் தலையில் அடித்துக் கொண்டான்.
விடலைப் பையன் போல் வேகவேகமாகத் துள்ளிக் குதித்துச் சென்றவன், மின் தூக்கிக்காகக் காத்திராது படிக்கட்டி இறங்கிச் சென்றான். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மூச்சைச் சீராக மாறிய பின் பைரவியைக் காண ரிசப்ஷனுக்குச் செல்ல, ரிசப்ஷனிஸ்ட்டுக்கு ஒரு ஆச்சர்யம்.
"வெல்கம் மிஸ் பைரவி. என்ன இந்த பக்கம்!" எனப் புன்னகையுடன் கேட்டபடி வந்தான்.
"குட் மார்னிங் தீஷித். சும்மா தான் பாக்க வந்தேன்." என அவள் எழுந்து அவனை வரவேற்றாள்.
"சும்மா…" என நம்பாத பாவனையில் பார்த்தான் அவன்.
"உங்க கிட்ட வாங்குன காச திருப்பித் தந்திட்டு போலாம்னு வந்தேன்." என்றாள் ரோசமாக.
"எது அந்த சூப்பர் மார்க்கெட் பில்ல செட்டில் பண்ண ரெண்டு வாரம் கழிச்சித் தேடி வந்திருக்கிங்க! சரியா.?" எனக் கேட்க, அதே கேள்வியைச் சாருவும் கேட்க இருந்தாலும்,
"எஸ்... இப்படியே இங்கயே வச்சி செட்டில் பண்ணிட்டு போகவா... இல்ல... " என இழுக்க, அவன் புன்னகையுடன் தன் கரத்தை முன்னே செல்லுமாறு காட்டிப் பின் தொடர்ந்தான்.
'ஆமா இவா பெரிய கப்பல் வியாபாரி... கோடி கணக்குல வாங்குன கடன செட்டில் பண்ண வந்திருக்காப் பாரேன்… ஐநூறு ரூபா குடுக்குறதுக்கு ஆஃபிஸ் ரூம் போகணுமா என்ன!' என யாருக்கும் கேட்காதபடி புலம்பியது சாரு தான்.
"Please sit down…" என நாற்காலியைக் காட்டியவன், தன் கேபினுக்கு இரண்டு காபிகளை எடுத்துவர சொல்லி உத்தரவிட்டான்.
"அப்றம் சொல்லுங்க மிஸ்… என்ன உதவி செய்யணும் நான்." என நேரடியாகக் கேட்க, பைரவி திருதிருவென முழித்தாள்.
"எப்படி தெரியும்? நாங்க உங்க கிட்ட ஹெல்ப் கேக்கத்தா வந்தோம்னு. " எனக் கேட்க, அவளின் வெள்ளந்தி பாவனையுடனாப் பேச்சை ரசித்தவன், உண்டான புன்னகையை இதழில் மூடி மறைத்தான்.
"சின்ன கெஸ்… இதுக்குத் தான் வந்திருப்பிங்கன்னு." என்றவனின் பேச்சு பைரவிக்குத் திமிராகத் தெரிய,
"எனக்குக் கடங்காரியா இருந்து பழக்கம் இல்லை. அதுனால உங்க காச திருப்பி குடுக்கத்தா வந்தேன். வேற எதுவும் இல்ல." என வீராப்பாய் பேசி காசை நீட்ட, அதை வாங்கி கொண்டவன் அவளை ஏற இறங்க பார்த்தான்.
'இப்ப என்ன! குடுத்தாச்சி கிளம்புன்னு சொல்றானா என்ன!' என்பது போல் பார்க்க,
"நீங்க கேக்க போற உதவி எதுவா இருந்தாலும் கண்டிப்பா நான் செய்வேன். உங்கள மாதிரி பிகு பண்ணி, பந்தா காட்ட மாட்டேன்."
"ஹலோ! யாரு பிகு பண்றா?" எனக் குரல் உயர்த்த, சாரு தான் அவளின் கரத்தை இறுக்கி பிடித்தாள்.
"ஓகே… நான் நேரவே கேட்டுடுறேன். இது என்னோட ஃப்ரெண்டோட ஃபோன் நம்பர். *** கம்பெனி சிம். இப்ப அது அக்டிவ்ல இல்ல. இந்த சிம்ம என்னென்ன சோஷியல் மீடியாலலாம் யூஸ் பண்ணிருக்காங்கன்னு தெரியணும். அத்தோட அந்த நம்பருக்கு வந்த கால்ஸ். அப்றம் டயல் பண்ண நம்பர்ஸ்னு எல்லாமே வேணும். கிடைக்குமா? உங்களால இத எடுத்து தர முடியுமா?" என்க, அவன் யோசிப்பது போல் சிறு நேரம் தன் தாடையைச் சொரிந்தான்.
" முடியாதா… ஹேக் பண்ணி எடுத்திடலாம்னு நினச்சேனே."
"ஏன் ஹேக் பண்ணணும். இந்த கம்பெனிக்காரெங்கிட்டையே உங்க போலிஸ் பவர யூஸ் பண்ணி கேக்கலாம்ல."
"எனக்கு அவங்க தந்த டேட்டால நம்பிக்க இல்ல. பாதி டேட்டா பொய்ன்னு தோணுது. அதா நம்பிக்கையான ஒருத்தர்ட்ட கேக்கணும்னு உங்க கிட்ட வந்திருக்கேன். ப்ளிஸ்..." என்க, கடைசியாக ப்ளிஸ் எனும் போது உயர்ந்து நின்ற புருவங்கள் வில்லாய் மாறி தாக்கியது.
"ஓகே ஹெல்ப் பண்ணிடலாம். ஆனா!! " எனச் சிறு குறும்புடன் இழுக்க, அதை உணராது,
"எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல. என்னோட பட்ஜெட் குள்ள முடிச்சி குடுத்திடுங்க." என முரணாக பேச, சிரிப்பு வந்தது அவனுக்கு.
"ஓகே.. உங்களோட டீல நான் ஏத்துக்கிறேன். ஒன் வீக் குள்ள எல்லா டேட்டாவும் உங்க கைல ஒப்படைக்கிறேன். " என்றான்.
"ரொம்ப நன்றி. ஆமா எவ்ளோ காசு தரணும்னு நீங்க சொல்லவே இல்ல."
"வேலை முடியவும் கால் பண்றேன். நம்பர் குடுத்திட்டு போங்க." என்றவன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு அனுப்பி வைத்தான். அலுவலக வாயிலை விட்டு பைரவியின் சாப்பர் செல்லும் வரை கேமராவில் அவளைப் பார்த்துக் கொண்டே தீஷித் நிற்க,
ஹே... என்ற கூச்சலும் வந்து நின்றனர் அவனின் நண்பர் கூட்டம்.
"என்னடா நடக்குது இங்க?"
"யாரு அது?"
"கமிட் ஆகிட்டியா! சொல்லவே இல்ல!" எனக் கேட்டபடி அவனை மொய்த்துக் கொண்டனர். தீஷித் எதுவும் சொல்லவில்லை. மௌனப் புன்னகையுடன் நின்றான். தன்னைத் தேடி வந்த டாம் கேர்ள் நினைத்து ஆனந்தமாக இருந்தது, என் நினைவு அவளின் சிந்தனையில் இருக்கிறது என்று.
ஒருவழியாக முதல் வேலையை முடித்து விட்டாள். அடுத்ததாக சுடரின் நெருக்கிய வட்டங்களை விசாரிக்க வேண்டும்..
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..