முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

பனி 43

 

அத்தியாயம்: 43



" கோலமாவா! இது எப்படி உங்க கிட்ட? நீங்களும் டிரக்ஸ் டீலிங் பண்றீங்களா! போத கும்பலுக்கும் உங்களுக்கு தொடர்பு இருக்கா? இருங்க நான் இத இப்பவே ஸ்டேஷனுக்கு இன்ஃபார்ம் பண்றேன். அந்த கமிஷனர் தன்னோட பொண்ணோட நிலமைக்கு காரணமானவன இன்னும் தேடிட்டு தான் இருக்காரு. இப்பவே போட்டு குடுக்கிறேன். " என வேகமாக இறங்க,


"வெறும் தகவலா மட்டும்‌ சொன்னா! உனக்கு எப்படி ப்ரமோஷன் கிடைக்கும். நான் இத யார்க்கிட்ட இருந்து வாங்குனேன்னு தெரிஞ்சிட்டு அவன ஆதரத்தோட அரஸ்ட் பண்ணி கூட்டீட்டு போய் கமிஷ்னர் முன்னாடி நின்னேன்னு வை! அடுத்து இன்ஸ்பெக்டர் நீ தான். எவனுக்கும் கூனக்கும்பிடு போடாம ஸ்டேஷன்ல ராணி மாதிரி வளம் வரலாம்." என்க, பைரவி யோசித்தாள்.


ஏனெனில் அவள் அந்த கமிஷனர் மகள் சென்ற ஜீம்மிற்குச் சென்று, தீவிரமா விசாரித்த போதே அந்த கமிஷனர் மிகவும் கடுமையாக அவளைக் கண்டித்தார், உன் அதிகார வரம்பை விட்டு மீறாதே என்று. இப்போது அதே வழக்கில் மூக்கை விட்டால் என்ன ஆகும் என்று யோசிக்க!


" ரொம்ப யோசிக்கிற மாதிரி இருக்கு. இது fat burner ஜிம்ல யூஸ் பண்ற சாதா கோலமாவு இல்ல. நீ எங்கிட்ட விலாவாரியா சொன்னியே அந்த ஸ்பெஷல் கோலமாவு. என்ன சொல்ற? நாம டீல் பேசலாமா! பக்கத்துல இருக்குற பார்க்குக்கு போகலாம். சுண்டல் சாப்டிட்டே டீலிங் பேசலாம்." என்று விட்டு முன்னே நடக்கும் முன், பைரவி அவனின் கரத்தை பிடித்து இழுத்து தன் சாப்பரில் தூக்கி போட்டுக்  கொண்டு ஸ்டேஷனை விட்டு சென்றாள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு. 


" பைரவி பக்கத்துல இருக்குற பார்க்குலயே சுண்டல் நல்லாத்தான இருக்கும். அத வாங்கி சாப்பிடிட்டே பேசுறத விட்டுட்டு. நீ ஏன் பீச் வரைக்கும் கூட்டீட்டு வந்த. பீச்சுல தான் சுண்டல் இனிக்குமா என்ன! ‌" 


"ம்ச்… அண்ணா நிஜமாவே இது கிறிஸ்டல் மேத் தானா?" என்றவள் அவன் சட்டை பாக்கெட்டில் இருந்த கவருக்காகக் கை நீட்டினாள்.


"எஸ்…" என்றவன் அவளிடம் அதைத் தர, பிரித்து பார்த்தவளின் முகத்தில் இருந்த ஏதோ ஒன்று ராக்கிக்கு வித்தியாசமாக பட்டது. அவளின் ஆர்வம் ஏன் என்று தெரியாது அவளை பார்த்த படி நிற்க.. 


"எப்படி அது தான்னு உறுதி பண்ணீங்க? எங்கருந்து கிடைச்சது? டீலர் யாருன்னு அடையாளம் காட்ட முடியுமா?” எனப் படபடப்புடன் கேள்விகளை அடுக்கி பதிலை எதிர் நோக்க,


" நம்ம அகாடமில கிடைச்சது. லேப்ல டெஸ்ட் பண்ணி இது அது தான்னு முடிவு ஆனதுக்கு அப்றம் தான் உன்னப் பாக்க வந்தேன்." 


"நம்ம அகாடமிலயா!" என அதிர்யடைய, ராக்கி நடந்தவற்றை அவளிடம் கூறினான். 


" உம்புருஷெந்தா வலை விரிச்சி தேடிட்டு இருக்கான். அந்த வலைல தானா வந்து ரெண்டு ஆடுங்க சிக்கிருக்கு." 


"ரெண்டு பேரா!! எப்படி? யாரது? ஃபோட்டோ காட்ட முடியுமா!" என வேகமாகவும் ஆர்வமாகவும் வந்தது குரல்‌‌, ஏனெனில் பிடித்தது அவளின் கணவன் அல்லவா‌‌! அந்த ஆக்ஷன் பிளாக்கை எப்படி மிஸ் செய்வது? அதான் காதால் கேட்டு கற்பனையில் காட்சி படுத்த கேட்கிறாள்.


"முடியாது." என ராக்கி பாய் சொல்ல… பைரவியின் முகம் சோகத்தைத் தத்தெடுத்து சுருங்கி போனது‌.


" ஃபோட்டோ காட்ட முடியாது. ஆனா நேர்ல காட்ட முடியும். அதுவும் வீடியோ மூலமா!" எனத் தன் மொபைலை எடுத்து காட்ட, அதில் இருவர், ஒரு இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. 


"ஒரே டார்க்கா இருக்கு. லைட் போட்டு நல்ல வெளிச்சத்துல எடுக்க கூடாது. மூஞ்சியே தெரியல." எனக் குறை சொல்ல,


"சரியாத்தான் சொல்லிருக்கான். உன்னப் பத்தி எல்லாம் அவனுக்கு தெரிஞ்சிருக்கு." 


"யாருக்கு?" 


"உன்னோட அவருக்கு. " என்க,


அவள், "அப்படி என்ன சொன்னாரு?" என உற்சாகமாக கேட்டாள். 


"உனக்கு யாரு என்ன செஞ்சாலும் அதுல இருக்குற கொற மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். செய்றவங்களோட பாசம், அன்பு, நேசம்னு எந்தக் கண்றாவியும் கண்ணுக்கு தெரியாதுன்னு மதுசூதனன் சொன்னான்." என்க, அவள் கோபப்படாமல் அந்த வீடியோவையே உற்று உற்று பார்த்தாள். 


"எப்படிச் சிக்கினானுங்க?" என்றவளுக்கு அவன் ஃப்ளாஷ் பேக் ஓட்டி காட்டினான்.


அதாவது சில தினங்களுக்கு முன் அந்த ராகுலை அடித்து துவைத்து எடுத்த சமயம் மதுவின் வீட்டில் மிகப் பெரிய பூகம்பம் வெடித்தது. ‘தன் தம்பியை எப்படி அடிக்கலாம்?’ எனக் கேட்டு கௌசிக் சண்டைக்கு மதுவிடம் வரவில்லை. சைந்தவிக்குச் சாவி கொடுத்து விட்டு  நின்றான் அந்த ஆண்மகன். 


மதுவால் தன் வாழ்க்கையே பறிபோகி விட்டது எனக் கூப்பாடு போட்டு தாய் வீட்டை ரெண்டாக்க, சிதம்பரம் “என்ன நடந்தது?” என்று கேட்டார். அவ்வளவு தான். மதுவைக் கண்டிக்கவில்லை எனத் தந்தையிடமும் சண்டை போட, அது வேறு ஒரு கதையாகிப் போனது. 


அந்த ராகுலை சுதந்திரமாக நடமாட விட்டு, அவனைத் தன் பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்திருந்தான் மது. முதல் சில நாட்கள் ராகுல் வீட்டை விட்டு வெளியே‌ வராததால் சுவாரசியமாக எதுவும் நிகழாமல் இருக்க, பின் அது சூடு பிடித்தது. பொந்தில் இருந்து தலையை மெல்ல நீட்டி எட்டிப் பார்க்கும் பாம்பை போல் வீட்டை விட்டு வெளியே வந்தான் ராகுல். 


அவன் செல்லும் இடங்களில் எல்லாம் பின் தொடர்ந்து வந்த மதுவிற்கு அவனின் எதிரி யார் என அறிய நல்ல சந்தர்ப்பமும் கிடைத்தது. 


காலில் அடி பட்டிருந்தாலும் மூன்று காலில் நடந்து அவன் வெளியே வர  காரணம் உள்ளது‌. ராகுலும் ஒரு டீலர் தான். மொத்தமாக ஒரு ஏஜென்ட்டிடம் வாங்கி அதை மதுவின் அகாடமி உட்பட பள்ளி கல்லூரி இளைஞர்களுக்கு சப்ளை செய்து வருகிறான். சில மில்லி கிராம் எடையுள்ள போதைப் பொருள் அவனின் லாக்கரில் இருந்தாலும், பல கிலோ எடையுள்ள வஸ்துவை மதுவின் அகாடமிக்குள் பிறரின் சந்தேகத்திற்கு இடமில்லாமல் வைக்க வேண்டும். அது தான் ராகுலுக்கு செந்தில் போட்ட உத்தரவு. 


நம் நாயகனைப் போதை பொருள் வியாபாரி எனக் காவலர்களின் பிடியில் சிக்க வைத்து, அவனின் அகடாமிக்கும் செக்யூரிட்டி ஏஜென்சிக்கும் மூடு விழா நடத்த சிராஜ் போட்ட திட்டம் அது. அதை நிறைவேற்ற செந்திலால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள் தான் ராகுல். ஆனால் அவனால் திட்டத்தை செயல்படுத்த முடிய வில்லை.


அத்தனை கிலோ வஸ்துவை ஒரே இடத்தில் வைத்திருப்பது ரிஸ்க் என்பதால் அதை அந்த கும்பலிடமே ஒப்படைக்க வந்துள்ளான் ராகுல். அது ஒரு கைவிடப்பட்ட குடியிருப்பு பகுதி. சொல்லப் போனால் புயல் வந்து விட்டுச் சென்ற எச்சம் போல் காணப்பட்டது அந்த இடம்.


அவனை நிழல் போல் ராக்கியும் மதுவும் அவன் அறியாது பின் தொடர, ராகுல் ஒரு இடத்தில் நின்று சுற்றி முற்றி யாரும் உள்ளனரா? என்று பார்வையைச் சுழற்றி, தன் கட்டு போட்ட கையால் சரியாக ஏழு முறை தட்டினான். அவன் தட்டி முடித்த அந்த நேரம் மனிதர்கள் குடி புகாதா அந்த சிதிலமடைந்த ஓட்டு வீட்டில் இருந்து நான்கு பேர் நான்கு திசைகளில் இருந்து வெளியே வந்தனர். 


அவர்களிடம் ராகுல் வஸ்துக்கள் அடங்கிய பையை நீட்ட, அதை வாங்காது நான்கில் அதிகார தோரணை கொண்ட ஒருவன் புருவ முடிச்சிடு ராகுலை பார்த்தான். அவன் தான் மூன்று பேரையும் வழி நடத்தும் தலைவன் போன்று தெரிந்தான்.


"என்னதிது?" 


" சரக்கு.‌" என்றான் சின்ன குரலில். 


"சொன்ன‌ வேலை என்னாச்சி? அத முடிக்காம எதுக்காக இன்னைக்கி மீட் பண்ண கூப்பிட்ட?" என்றான் ஹெட்.


"அது… என்னால நீங்க சொன்ன வேலைய முடிக்க முடியல. அவெ என்னைக் கண்டு பிடிச்சி வேலைய விட்டு அனுப்பிட்டான். அதான் சரக்க ஒப்படைச்சிடலாம்னு வந்தேன்." எனப் பையை நீட்ட, அந்த தலைவன் ராகுலை ஓங்கி அறைந்தான். தரையில் விழுந்த அவனை பீப் சவுன்டு போடும் அளவுக்கு திட்டி விட்டு, யாருக்கோ ஃபோனில் தகவல் சொல்ல, மதுவிற்குப் புரிந்து விட்டது தலைவனும் தன்னை நோக்கி எய்தப்பட்ட அம்பு என்று. அவனுக்கு எய்தவன் தெரியலாம். இல்லை எய்தவனிடம் செல்லும் மார்க்கத்தை அவன் அறிலாம் என்று, தன் கூர் விழிகளால் அவனின் இதழசைவுகளை உற்று நோக்கி அவன் என்ன பேசுகிறான் என்பதை கணிக்க முயன்றான் மது.


"உனக்கு எவ்ளோ தையிரியம் இருந்தா சொன்ன வேலைய முடிக்காம எங்க முன்னாடி வந்து நிப்ப. "


"என்ன பயம் உட்டுப்போச்சா?"


"நாங்க சொன்னத செய்றேன் சொல்லித்தா துட்டையும் சரக்கையும் கைல வாங்குன!"


"இப்ப வந்துக்கின்னு முடியாதுங்கிற. பொருள் கீது…. துட்ட எங்கேக்கிது." என ஒவ்வொருவராக மிரட்ட, ராகுலுக்கு பயப்பந்து உருளத் தொடங்கியது.மிகவும் மோசமானவர்கள் அவர்கள் என்று அவர்களுடன் பழகிய சில நாட்களிலேயே அறிந்து கொண்டான். அதான் உயிர் பயம் கண்ணில் தெரிய,


"துட்டு எங்ககிது?" 


"காசு… காசு… அது கொஞ்சம் செலவாகிப் போச்சி. நான் அடுத்த வாரம் தந்திடுறேன். " 


"குடுத்த வேலைய ஒழுங்கா செய்யத் தெரியாத பேமானி… உனக்குத் துட்ட மட்டும் செலவு பண்ண தெரியுதோ!" எனச் சொல்லி ராகுலை எட்டி உதைக்க, அவன் தூர சென்று விழுந்தான்.. ஏற்கனவே மது தந்த அடிகளால் சேதப்பட்டு இருந்த அவனின் உடலை அவர்கள் உளி இல்லாமல் கையால் சிலை எனச் செதுக்கி விட்டனர்.‌ அதை தூர நின்று சிறு நேரம் ரசித்து பார்த்தவர்கள் களத்தில் இறங்கினர். ராகுலைக் காப்பாற்ற அல்ல. அவனுக்கு இந்த‌ டாக்ஸ்கை கொடுத்தவனை கண்டறிய. 


அதில் தலைவன்‌ மட்டும் தப்பி செல்ல, மற்ற மூவரில் மதுவின் கைக்கும் ராக்கியின் கைக்கும் தலா ஒருவர் என இருவர் சிக்க, ஒருவன் தப்பி ஓடுகிறேன் என்று ஓடும் காரில் பாய்ந்து உயிர் விட்டான். பிடிபட்ட இருவரும்‌ தான் இப்போது இருட்டு அறையில் கத்திக் கொண்டிருக்கின்றனர். 


போதைப் பொருள் சப்ளை செய்யும் ஆசாமி பலி என்ற செய்தி நியூஸ்ஸில் வர, அதைக் கண்டு தான் விசாகன் செந்திலைத் திட்டினான்.


"நிஜமாவே ஃபைட் சீன் நடந்ததா? ச்ச... நான் மிஸ் பண்ணிட்டேன். தயிர் சாதத்தோட ஆக்ஷன் ப்ளாக் சூப்பரா இருக்கும். டீவில ரெஸ்லிங் மேட்ச் பாக்குற மாதிரிச் செம்மையா இருந்திருக்கும்ல." எனச் சிலாகித்தவள்.


"ஆமா ராகுல் கைல வச்சிருந்த அந்த கோலமாவுவ என்ன பண்ணிங்க?" 


"அதத் தப்பிச்சிப் போன ஆளு எடுத்திட்டு போய்டான். செத்தவென் டிரக் டிலர்ன்னு தெரிய வந்ததா பேச்சு. அதுனால ராகுல கைது பண்ணி கவர்மென்ட் கெஸ்ட்டா ஜெயில் வச்சி விசாரிக்கிறோம்னு சொல்லி தூக்கிட்டு போய்டாங்க. எங்க கிட்ட கிடைச்ச கொஞ்சோண்டு கோலமாவ டெஸ்டுக்கு குடுத்ததுல, நீ சொன்ன ஜஸ் ன்னு தெரிய வந்துச்சி. அதான் உங்கிட்ட சொல்லாம்னு வந்தேன். ஒரு தங்கச்சியா, நாலு வர்ஷம் பழகுன அண்ணனா! எனக்காக எதுவும் பண்ணலன்னாலும் நான் உனக்காக இறங்கி செய்வேன். எவ்ளோ நல்லவன்னு இதுல இருந்து நீ தெரிஞ்சிக்கலாம். " எனப் பெருமை பாட,


பைரவி முகத்தில் பல சிந்தனை ரேகைகள் வந்து சென்றன. சுடரின் இறப்புக்கு காரணமானவர்களுக்கும் இந்தப் போதை கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதி செய்ய இந்தக் கும்பலின் தலைவனைக் கண்டறிய வேண்டும்‌. ஆணி வேர் யாராக இருக்கும் என யோசித்தவள், 


"ராக்கி பாய் எனக்கு இன்னொரு உதவி செய்ய முடியாமா?" என இறைஞ்சும் குரலில் கேட்க,


"என்ன?" 


"அது நீங்க பிடிச்சி வச்ச ரெண்டு பேரையும் நான் விசாரிக்கணும். இத சிட்டிக்குள்ள சப்ளை பண்ற கும்பலோட தலைவன் யாருன்னு அவனுங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அதா.... " 


"முடியாது. ஏன்னா உம்புருஷெ அவனுங்களுக்கு சோறு தண்ணி குடுத்து, நேத்துல இருந்து அடச்சி வச்சி விசாரிக்கிறான். ஆனா அந்த மௌனவிரததுக்கு பிறந்த பயலுங்க, வாய திறந்து ஒத்த வார்த்த கூட சொல்ல மாட்டேங்கிறானுங்க. ஏன் வாயில இருந்து ரத்தம் ஒழுகுனாலும் வலில கூட கத்த மாட்டேங்கிறானுங்க. அடமென்ட்‌டா இருக்கானுங்க." 


"பட், எனக்கு அவனுங்க யார் யார் கூட டீல் வச்சிருக்கானுங்க, யாரு பாஸ்னு தெரிஞ்சிக்கனுமே! " 


"அதுக்கு அண்ணேங்கிட்ட ஒரு வழி இருக்கு. பட் அத சொல்ல முடியாது. நீ எவ்ளோ கெஞ்சினாலும் உனக்கு ஒத்த வார்த்த வராது என் வாய்ல இருந்து." என ஸ்டெயிலாக கடலைப் பார்த்தபடி கரங்கள் இரண்டையும் தலைக்கு மேல் தூக்கி கொண்டு சொல்ல,


"உங்க லோட்டஸ் சாரு கூட என்னோட அப்பார்ட்மெண்ட்ல தான் தங்கியிருந்தா. ஸ்கூல்ல மேக்ஸ் டீச்சரா வேலை பாக்குறா. ஆறு மாசம் இங்க தான் இருப்பா. கூடவே கவர்மென்ட் எக்ஸாம்க்கு பிரிப்பர் பண்றா. போதுமா?" என்க, ராக்கி வேகமாக திரும்பி.. 


" நிஜமாவா... ஆறு மாசம்.. இங்க… எங்கூட… " 


"ஹலோ... உங்க கூடலாம் இல்ல. அவ அண்ணேங்க கூட. அவளுக்கு இருக்குற அண்ணன பாத்தா முறுக்கு மீச வச்ச ஐயனார் கணக்கா இருக்காரு. எனக்கே பேச பயம்மா இருக்கு. அப்றம் கரெக்ட் பண்றேன்னு வீட்டுப் பக்கம் வந்திடாதீங்க. ஏன்னா இப்ப அவ ஹோம்ல இருக்கா.‌ சோ, பாத்து பேசுறது கஷ்டம்‌ தான்." 


"பரவாயில்ல. நான் ஸ்கூல் விட்டு போகும் போதும் பாத்து பேசி கரெக்ட் பண்ணிக்கிறேன்."


"வாய்ப்பில்லை. ஏன்னா அவள எல்கேஜி பிள்ள கணக்கா கூட்டீட்டு போய் கூட்டீட்டு வர அவளோட அண்ணெ கார எடுத்திட்டு வந்திடுவாரு. தனியா பாக்குறது கஷ்டம். ஆனா பேசலாம்." 


"எப்படி? சாரு மூலமா தான. எனக்குத் தெரியும். ஆமா சாரு எப்ப வேலை முடிஞ்சி ஃபிரியா இருப்பா. அவள ஹோம்க்கு போகச் சொல்லுவோம். போய் தாமரை கைல ஃபோன தரச் சொல்லுவோம்." என்க பையூ, முறைத்தாள்..


"69 ஐ ஸ்டாட் ஆகி 157 முடியும். " 


"எது தாமரயோட வேய்ட்டும் ஹைட்டுமா! " 


"இல்ல. ஃபோன் நம்பர்." 


"அஞ்சி நம்பர் தான் சொல்லிருக்க. மீதி?" 


"அது வேணும்னா…" 


"நான் அவனுங்கள விசாரிக்கும் போது உனக்கு அப்டேட் பண்ணணும். சரியா! " 


"அதுமட்டுமில்ல கால் பண்ணணும்… அதுவும் வீடியோ கால். " என்க, ஒரு வழியாக இருவரும் டீல் பேசி முடித்து கிளம்பிச் சென்றனர்.‌..

தொடரும் ...


💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

என்னை சுடும் பனி

  அத்தியாயம்: 1 சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது.  இந்தியாவில் தவிர்க்க முடியாத நகரம். நம் தலைநகரும் கூட. அது எப்பொழுதுமே பிஸியாகத்தான் இருக்கும்.  மெட்ரோ ரயில், மெரினா பீச், கட்சி ஊர்வலங்கள், மறியல் போராட்டம் எனப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத அந்த நகரில் பைக் ரிப்பேராகி ஓர் இளைஞன் அதனுடன் போராடிக் கொண்டிருந்தான்.  "நமக்கு ஒரு நல்லது நடக்க போதுன்னா இதுக்கு பொறுக்காதே… ச்ச... " எனக் காலால் அதை உதைத்தவனின் அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது.  "மச்சான் எங்க இருக்க? அவங்க வந்துட்டாங்கடா.. அடுத்து நீ தான்.. " என நண்பன் கதற,  "இதோ டூ மினிட்ஸ். " என்றவன் பைக்குடன் போராடிக் கொண்டிருந்தான். "வந்திடு மச்சான். இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியும் தான! " என மிரட்டலாக கேட்க…  " ஆன் தி வே. அதுவர சமாளி. " என்றவன் பைக்கை ஓரங்கட்டி லாக் செய்து விட்டு, பின் இருக்கையில் இருந்த ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்டோவிற்காகக் கை அசைத்தான்.  அவனின் அவசர தேவை புரியாது எந்த ஆட்டோக்காரரும் நிப்பாட்டவில்லை. மணிக்கட்டைப் பார்ப்பதும் பின் நிமிர்ந்து சூ...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...