முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 59

அத்தியாயம்: 59 சிறிய மூளை தான். ஆனால் அது செய்யும் வேலைகள் பல. ஒற்றை மூளை ஒட்டு மொத்த உடலையே இயக்கும் வல்லமை படைத்தது. பார்ப்பது கேட்பது தொடங்கி, சின்ன சின்ன அசைவுகளைக் கூட அதன் உத்தரவு இல்லாது செய்ய முடியாது.   ஆனால் இங்கு மூளை எந்த வேலையையும் செய்யாது டம்மியாக இருந்தது. ஒரே ஒரு வேலையைத் தான் மும்மரமாக செய்ய முயன்றது அது. சிந்திப்பது, அதை தவிர்த்து வேறு எதற்கும் முக்கியத்துவம் தரவில்லை அது. யாரு அந்த வேலை செய்யாத மூளைக்கு சொந்தக்காரி என்றால், வேறு யார் நம் பைரவி தான். அவளின் சிந்தனை மொத்தமும் சுடர் பற்றியே இருந்தது.  "நமக்கு அரசனூர் கேஸ் தேவையில்ல‌‌. சுடரக்கா கேஸ் மட்டுமே போதும். ஏன்னா அது ரொம்ப பயங்கரமான கேஸ்ஸா இருக்கு. புரியாத மாதிரியும் புரியிற மாதிரியும் நிறைய விசயங்கள வக்கீல் சொன்னாலும். அந்த கேஸ் கொஞ்சம் டேஜ்சரானது தான். கொலை எல்லாம் நடந்திருக்கு.  சுடரக்கா கூட காணாம போன எவிடென்ஸ்ஸ தேடி நாம போறது புதை குழில குதிச்சி குதிச்சி விளையாடுறதுக்கு சமம். அதுனால நம்மோட கான்ஸ்டன்ட்டேட் மொத்தமும் சுடரக்காவ யாரு கடத்துனாங்கங்கிறதுல  தான் இருக்கனுமே தவிர வேற எதுலயும் ...

பனி 42


 

அத்தியாயம்: 42


காதில் இருக்கும் ஃபோன் சூடாகி எப்பொழுது வேண்டுமானாலும் வெடித்து உன் காதை பொசுக்கி விடுவேன் என்று  சொல்லும் அளவுக்கு கொதித்தது‌. ஆனாலும் அதை உணர்ந்தும் உணராதது போல் விடாது அதில் இருந்து ஒருவருக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தான் ராக்கி. 


"ச்ச… சமயம் பாத்து பழி வாங்குறா பாரேன். கேடி… இவளத் தங்கச்சியா தத்தெடுத்ததுக்கு மாமியார தத்தெடுத்திருக்கலாம். என்ன ஒரு வில்லத்தனம் இந்த பொம்பளப்பிள்ளைக்கி.. " எனப் பைரவியைத் திட்டிய படி ஃபோனில் அழைக்க‌‌, அது செல்லவில்லை. எப்படிச் செல்லும் அவள் தான் அவன் நம்பரை ப்ளாக் செய்து விட்டாளே! பிறகு எப்படி ரிங் போகும்... 


எவ்வளவுக் கெஞ்சியும் அவளின் பிறந்தநாள் அன்று மது எங்கே என்ற உண்மையைச் சொல்லாது மறைத்தான் அல்லவா! அதான் இன்று பழிவாங்குகிறாள்.


"இது சரிப்படாது. நேர்ல பாத்து பேசிக்கிறேன். " என்றவன் வேகமாக தன் காரை எடுத்துக் கொண்டு பைரவி பணியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு வண்டியை விட்டான்..


மகளிர் காவல் நிலையம் ராக்கி பாயை அன்புடன் வரவேற்றது. 


அது பின் மாலை நேரம். பணி முடியும் நேரம். பலர் தங்களில் இருக்கையைக் காலி செய்து விட்டு இரவு பணிக்காக வந்திருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்க, ராக்கி அந்தக் கூட்டத்தில் பைரவியின் தலை எங்காவது தெரிகிறதா என்று தேடினான்.


"என்ன தம்பி? யார் வேணும்? கம்ப்ளைண்ட் பண்ண வந்திருக்கிங்களா?" எனக் கேட்டார்.


"இல்லங்க உங்க சப்இன்ஸ்பெக்டர் மேடம்ம பாக்கணும். " 


"இந்த ஸ்டேஷன்ல மொத்த மூணு SI இருக்காங்க. உங்களுக்கு யாரு வேணும்?" 


"பைரவி." 


"ஓ… அந்தம்மாவா! உள்ள போய் பாருங்க." என வழியை காட்ட, 


"அம்மாவா… பையூ நீ எப்ப கிழவி ஆன!" என அவனுக்கு அவனே கேட்டபடி உள்ளே சென்று அவளைப் பார்க்க, பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. கூடவே மது பைரவியைப் பற்றி சொன்ன சில வார்த்தைகளும் சேர்த்து நினைவு வர, சத்தம் போட்டு சிரித்தான் அவன்.


'அவளுக்கு வேலை செஞ்செல்லாம் பழக்கம் கிடையாது. நல்லா கால் நீட்டு கிழவி மாதிரி சோஃபால உக்காந்திட்டு, சுத்தி இருக்குற எல்லாத்தையும் வேலை வாங்குவா. நாமெல்லாம் சேர்ல கால தொங்க போட்டு தான உக்காருவோம். ஆனா அவ மட்டும் ஒரு கைப் பிடில கால தூக்கி போட்டுட்டு, இன்னொரு கைப்பிடில தலவாணிய வச்சி சாஞ்சி டிசைனா உக்காந்திட்டு, கைல ரீமோட்ட வச்சிட்டு, டிவி முன்னாடி உக்காந்திருப்பா. அவளாது போலிஸ் ஆகி திருடன பிடிக்கிறதாது.


ச்ச… வீட்டுல சாப்பிட்ட தட்டக் கூட எடுத்து வைக்காதவ ரோட்டுல மரம் நடப்போறேன்னு சொல்றதும், துப்பாக்கிய தூக்கிட்டு திருடன துரத்தப் போறேன்னு சொல்றதும் காமெடியா இல்ல. ' என அடிக்கடி புலம்புவான் மது. நண்பனின் புலம்பல் மொழிகள் உண்மை தான் என்று இன்று அறிந்து கொண்டான்‌ ராக்கி. 


சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, கால்களை ஆட்டியபடி, ஆன் செய்யப்பட்ட கணினியின் முன் அமர்ந்து கொண்டு ஃபோனில் கேண்டி க்ராஸ் விளையாடிக் கொண்டிருக்க, "மேடம் டீ.. " "மேடம் நீங்க கேட்ட பைஃல்." எனப் பைரவி செய்யாத வேலைக்கி உதவி‌ செய்ய என ஒரு பெண் காவலர் நின்று உபச்சாரம் செய்து கொண்டிருந்தார். 


காக்கி உடையில் தொப்பியைக் கலட்டி வைத்துவிட்டு சொகுசாய் வீட்டில் இருப்பது போல் அமர்ந்திருந்தவளைப் பார்க்கையில், அவனின் மனம்.. ' அந்த டிரெஸ்ல பைரவிய பாத்தா கோவை சரளா மாதிரி இருக்கு. சிரிப்பு போலீஸ்.’ என கமெண்ட் தர, பக்கத்தில் மதுவின் நிழல் உருவம் வந்து அவனின் தலையில் தட்டி,


'தமிழ் சினிமால இருக்குற சில நல்ல பெண் காமெடியன்ஸ்ல பெஸ்ட்டானவங்க அவங்க. அவங்க கூட போய் இந்த ஒன்னத்துக்கும் உதவாத பீஸ்ஸ கம்பேர் பண்ணி அவங்கள அசிங்கப்படுத்த கூடாது.’ என்றது அது. 


‘யாருடனும் ஒப்பிட்டு பேச முடியாத ஒரிஜினல் பீஸ் எங்க பைரவி.’ என நினைத்து சிரித்தவனின் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் பைரவி. வேலை பார்ப்பது போல் கீபோர்ட்டை தட்டிக் கொண்டே அவனைக் கடைகண்களால் பார்க்க,


"ஐய்யையோ மேடம் பாக்குறாங்களே! ரொம்ப ஸ்டிட் ஆஃபீஸ்ஸரோ!" என எண்ணிக்கொண்டு அவளைப் பார்த்து வணக்கம் வைக்க, அவள் இவனை யாரென்றே தெரியாதது போல்,  "என்ன ஸார் வேணும் உங்களுக்கு? ஏன் வாசல்ல நின்னுட்டு சிரிச்சிட்டு இருக்கிறிங்க? " என அவள் மிரட்டல் தோனியில் கேட்டாலும், அவனுக்கு அது சிரிப்பைத் தான் தந்தது.


"ஒரு கம்ப்ளைண்ட் குடுக்கணும். ஒரு பொண்ணு மேல. " என்க, அவள் வேகமாக கணினியை அணைத்து வைத்துவிட்டு எழுந்து நின்றாள்.


"எதுவா இருந்தாலும் SI சித்ரா வருவாங்க அவங்கட்ட சொல்லுங்க.. " எனச் சொல்லி நடந்து செல்ல,


" அப்ப நீங்க SI இல்லையா! காண்ஸ்டபுள்? இல்ல ஏட்டு? இல்ல ஜீப் டிரைவர்.. பஸ் டிரைவரா.. " என நக்கலாக கேட்க, பைரவி அவனை முறைத்துக் கொண்டே சென்றாள். 


"காக்கி சட்டையப் பாத்ததும் கன்டெக்டர் நியாபகம் வந்திடுச்சி. அதான்… ஆமா நீ என்ன வேலை பாக்குற இந்த ஸ்டேஷன்ல? இந்தக் காக்கி உடைல என்ன வேலை பண்ணுவ?" என அவனும் விடாது பின்னாலேயே சென்று வம்பு பேசி, அவளின் முறைப்பை வாங்கி கட்டிக் கொண்டான்.


"இந்த மொறப்ப நான் மொறைக்கணும். நீ மொறச்சா என்ன அர்த்தம்? " 


"மொறைக்கிறேன்னு அர்த்தம்." 


"ம்ச்… பைரவி என்னோட ஒத்த தாமரையா இன்னைக்கி நான் பாத்தேன். தெரியுமா?" 


"ஓ... " எனப் புருவம் உயர்த்தி கேட்க, காண்டானது அவனுக்கு.


"மதுரைல மலர்ந்திருந்த தாமர, எப்பச் சென்னைல பூத்தது. இந்த ஊர்ல அவளுக்கு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சும் ஏன் வந்ததுன்னு எல்லாம் உனக்கு தெரியும் தான? ஒரு நல்ல தங்கச்சியா அத அண்ணெங்கிட்ட அப்டேட் பண்ணிருக்கணுமா வேண்டாமா! " எனக் காட்டமாக கேட்க,


" அண்ணேங்கிற மாதிரி நீங்க நடந்துக்கிட்டு இருந்தா! நானும் உங்க ஒத்த தாமரைய சென்னைல நட்டுவச்சத பத்தி சொல்லிருப்பேன். நீங்க தான் எனக்கு எந்த சர்ப்ரைஸ்ஸும் வேண்டாம்னு சொல்லி என்னோட ப்ரப்போஷல ரிஜக்ட் பண்ணிட்டிங்க. அதா சொல்லல. ஆனா சொல்லிருந்தாலும் நோ யூஸ். என்ன பண்ணிடப்போறிங்க! வழக்கம் போல வெட்டி கடல வறுக்க பாப்பிங்க. வேகலன்னா அடுத்த ஆள பாத்திட்டு போய்டுவிங்க சரியா." 


" நோ‌... இனி தாமரை மட்டும் தான் எல்லாம். என் மனசுல நட்டு வச்ச தாமரைக்கு, நல்ல உரமா வாங்கி போட்டு சிறப்பா வளத்து விட்டு மனசார ரசிச்சி பாப்பேன். மை தாமர. மை ஒத்த தாமர." எனக் கனவுகளில் மிதந்தவனுக்கு, மாலை வேளையில் மலர்ந்த தாமரை பார்த்த நினைவு வந்தது. 


சைந்தவியின் குழந்தை ஹிரானா, தாமரை வேலை பார்க்கும் அந்தப் பள்ளியில் தான் எல்கேஜி படிக்கிறாள். சிறுமியை அழைத்துவர சொல்லி சிதம்பரம் சொல்ல, அங்கு அவனுக்காகப் பூத்த தாமரையைக் காண நேர்ந்தது.


" மஞ்ச கலர் புடவைல… தலைல கொண்டைய போட்டுட்டு… கைல புக்கையோ நோட்டையோ வச்சிட்டு, என் தாமர வரும்போது எப்படி இருந்ததுன்னு தெரியுமா! கடலோர கவிதைகள் ரேகா மாதிரி… ம்‌… ‘ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே..’ ன்னு நான் பாடுற மொமெண்டா இருந்துச்சி தெரியுமா!" எனக் கைகளை மேலே கட்டிக்கொண்டு கண்களை மூடி தன் தாமரையை ரசிக்க, 


"தம்பி யாரு வேணும்‌? அப்பத்துல இருந்து ஸ்டேஷனயே சுத்தி சுத்தி வந்திட்டு இருக்க. என்ன விசயம்? ஏன் தனியா நின்னு உலறீட்டு இருக்க. தண்ணிய போட்டுட்டு வந்திருக்கியா. " எனக் கேட்டார் அவர். அதான் அவன் உள்ளே நுழைந்த போதே யார் வேண்டும் என்று கேட்க காண்ஸ்டபிள்.


"தண்ணிய போட்டுட்டு தனியா உலறுரேனா! எங்க அந்தப் பைரவிய." எனத் தேட, அவள் எழுந்த நாற்காலியிலேயே மீண்டும் அமர்ந்து கொண்டு, விட்ட வேலையை அதான் கேண்டி க்ரஸ் விளையாடுவதைத் தொடர்ந்தாள். ராக்கி முறைத்தபடி நின்றான். அவனின் முன்னால் வந்த வேறு ஒரு கான்ஸ்டபிள் அவனை உற்று உற்று யோசனையுடன் பார்க்க,


'ஏன் இப்படி குறுகுறுன்னு பாக்குறாரு?' என நினைத்தவன் அதை அவரிடம் கேட்டான்.


"அது.‌.. உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கு. ஆனா எங்கன்னு நியாபகம் வரல." எனத் தன் தாவாங்கொட்டையை தடவி யோசிக்க, ராக்கி "நல்லா யோசிங்க மேடம்.. நான் அப்றமா வந்து உங்கள பாக்குறேன். " என்று நகர்த்தி விட்டு விட்டு பைரவியுடன் சண்டை போட சென்றான்.


"பைரவி, தாமர எப்படி வந்தா? எதுக்கு வந்தா? எங்க தங்கிருக்கா?" என கேள்விகளை அடுக்க,


"எதுக்கும் பதில் சொல்ல முடியாது. நான் என்னோட தயிர் சாதம் எங்கன்னு கேட்டப்ப நீங்க பதில் சொன்னிங்களா! இல்லைல. அப்ப நானும் சொல்ல மாட்டேன். எவ்ளோ கெஞ்சினேன். கொஞ்சமாச்சும் மனசிறங்குனீங்களா! பாறை மாதிரி நின்னுட்டு தன் கையைத் தனக்கு உதவின்னு டயலாக் பேசுனீங்கள்ல. இப்ப பேசுங்க."‌ என்க, 


"அடிப்பாவி… உனக்காக, உன்னோட வாழ்க்கைக்காக, அண்ணே தான் உன்னோட கை அறுத்த ஃபோட்டோவ பாத்திட்டு உம்புருஷன தூக்கிட்டு வந்து உன் வீட்டு வாசல்ல வச்சது. தெரியுமா? நான் மட்டும் சொல்லலன்னா அவெ நீ இருக்குற திசைப்பக்கமே திரும்பியிருந்திருக்க மாட்டான். நீ போட்டது நாடகம்னு தெரிஞ்சும் அண்ணெ பெர்பாமஸ் பண்ணி உன் பிறந்த நாளாலன்னைக்கி ரொமான்ஸ் பண்ற வாய்ப்ப ஏற்படுத்தி குடுத்திருக்கேன். சோ அண்ணோட உதவி கண்டிப்பா உனக்கு தேவ. " என்க, அவள் முகம் ராக்கிக்கு உதவலாமா வேண்டாமா என்ற பட்டிமன்றம் உள்ளுக்குள் நடப்பதை காட்ட, 


"நீ எனக்கு தாமரய செட் பண்ணி குடு. நான் உனக்கு உம்புருஷன செட்லாம் பண்ணி குடுக்க முடியாது. வேணும்னா உனக்கு ஸ்பையா வேலை பாக்குறேன். 24/7 உன் புருஷெ எங்க போறான், யார்? யார? பாக்குறான்னு எல்லா டீட்டெய்ல்ஸையும் உனக்கு குறுந்தகவலா அனுப்பிட்டே இருப்பேன். என்ன சொல்ற?" 


"தேவையில்ல. நான் டெய்லி எம்புருஷன பாக்குறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். " 


"என்ன ஏற்பாடு?"


"உங்க அகாடமி பக்கத்துலயே இருக்குற வேற ஒரு நல்ல அகாடமில நான் ஜாயின் பண்ணிட்டேன். சோ, அவர நான் என்னோட கண்கானிப்பு வளையத்துக்குள்ள வச்சிக்கிவேன். உங்க உதவி தேவையில்ல." 


" அந்த அகாடமிலயா!! " என அஷ்டகோணத்திற்கு முகத்தை வைத்தவன், 


"ஆமா அதுல என்ன கத்துக்கு போற?"


"குறி பாத்து துப்பாக்கி சுட கத்துக்க போறேன்."


"கத்திட்டு... கத்திட்டு என்ன பண்ண போற? " என்றவன் குரலில் ஏகப்பட்ட கேலி. 


" உயர் அதிகாரியா ப்ரமோஷன் வாங்க போறேன்." என்றவுடன் சிரித்து விட்டான் வயிற்றை பிடித்துக் கொண்டு. 


" சிரிங்க. இன்னைக்கி சாதாரண SI யா இருக்குற நான் பெரிய CBI ஆபீஸ்ஸரா ஆகும் போது நான் சிரிப்பேன் உங்கள பாத்து." என ரோசமாக சொல்ல, அவன் சிரிப்பதை நிறுத்தவில்லை.


"ஹா… தம்பி நீங்க பைரவிம்மாவோட புருஷெ கோர்டு வாசல்ல பாட்டு பாடிட்டே குத்தாட்டம் ஆடும் போது பக்கத்துல இருந்து கைத் தட்டி சிரிச்சவர் தான. நான் அந்த வீடியோல பாத்திருக்கேன் உங்கள.." என்றபடி வந்து நின்றார் அந்த கான்ஸ்டபிள்.


அதைக் கேட்டு பைரவி கோபமாக இருவரையும் முறைக்க, " அட ஆமாங்க அது நாந்தா. எனக்கு இவா புருஷன மாதிரி குத்தாட்டம் போட வராது. அதா கைத் தட்டி உற்சாப்படுத்தி… கொண்....டாடி... " என்றவனின் பேச்சு பைரவியின் கோவைப்பழ விழிகளின் சிவப்பைக் கண்டு அமைதியாகி விட, அந்த கான்ஸ்டபிள் விடவில்லை. விடாது மதுவின் பாவக்கதைகளை பேச, பைரவி எழுந்து சென்று விட்டாள் அவளின் சாப்பரில் பயணம் செய்ய. 


" யாரு பாவம்! அந்த தயிர் சாதமா? விஜயசாந்தி மாதிரி ஆக்ஷன் போலிஸ்ஸா இருக்க வேண்டிய என்னை டையிப்ரேட்டர் மாதிரி மாத்தின அவனா பாவம்." எனக் கடுப்புடன் ஸ்டேஷனுக்கு வெளியே வந்தவள் அந்தக் கட்டிடத்தைக் கோபமாக பார்த்தாள். 


முதலில் வேறு ஸ்டேஷனில் இருந்த அவளை, பெண்கள் மட்டும் பணிபுரியும் இந்த மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்ற பட்டது மதுவால் தான் என்றதால் வந்த கடுப்பு தான் அது.


'பின் அவெ மூஞ்சி முன்னாடி போய் ‘கன்’ன நீட்டுனா! அதா உன்ன இங்க கொண்டு வந்து போட்டுட்டான்.'


"நான் போலிஸ் எக்ஸாம்ல பாஸ் ஆகிட்டேன்னு சொன்னதும், காக்க காக்க சூர்யா மாதிரி க்ரைம் ப்ரான்ஜ் பக்கம் போய், அக்யூஸ்ட்ட வேட்டையாடுவேன்னு நினச்சேன். முடியல… சிங்கம் பட சூர்யா மாதிரி தப்பு பண்றவன ஓங்கி அடிச்சி உச்சான்னு கட்ட குரல்ல கத்தி கத்தி பன்ச் டயலாக் பேசலாம்னு நினச்சேன். 


பட்... இங்க கேஸ் டீட்டெய்ல்ஸ் எல்லாத்துயும் கம்யூட்டர்ல ஏத்தணுமா நான். அந்தத் தூசி துப்பட்டையத் தட்டி தட்டி கூடிய சீக்கிரமே நான் ஆஸ்துமா பேஷன்ட்டா ஆகிடுவேன். என்னை இந்த நிலைக்கு ஆக்குன தயிர் சாதத்த வழிச்சி சாப்பிடாம விட மாட்டேன்." எனக் கணவனைத் திட்டிய படி சாப்பரை ஸ்டாட் செய்ய, ராக்கி பாய் வந்து வேகவேகமாக அதன் சாவியை எடுத்துக் கொண்டான். 


" அப்ப உதவி பண்ண மாட்ட? " என்க, 


" நோ…" என்றாள் அவளும் கோபமாக.


"ஆனா நான் உனக்கு உதவி பண்றேன்." என பேண்டு பாக்கெட்டிற்குள் இருந்த கவரை எடுத்து பைரவியின் முன் நீட்ட, அவள் கண்கள் இரண்டும் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே குதித்தி விடும் எனும் அளவுக்கு விரிந்தன 


அப்படி என்ன காட்டிருப்பான்???


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...