முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

பனி 6


 

அத்தியாயம்: 6


"இந்த ஹைவேஸ்ல டார்ச் அடிச்சி லாரிய மடக்கி தொழில் பண்ற கும்பல சேந்தவ தான நீ. இல்ல லிஃப்ட் கேட்டு ஏறுற மாதிரி ஏறி மயக்க மருந்து அடிச்சி கார ஆட்டைய போடுற கும்பலா? பாக்க அப்ரானி மாதிரி காட்டீட்டு ஆளுங்கள கொல பண்ற கூட்டமா! என்ன நீ மட்டும் தனியா இருக்க? எங்க உ கூட்டாளிங்க? " என ராக்கி சுற்று முற்றிலும் பார்த்து கேட்க, 


"ஸார், நீங்க நினைக்கிற மாதிரில்லாம் கிடையாது. என்னைத் துரத்திட்டு வர்றாங்க ஸார். அவங்க கைல நான் மாட்டுனா என்னாகும்னே தெரியல ஸார். ப்ளிஸ் ஸார். அவெங்கல்லாம் ரவுடி பசங்க ஸார். என்னை ஆள் நடமாட்டம் இருக்கிற, இல்ல மதுர பஸ்ல ஏத்தி விட்டிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் ஸார்.. " எனக் கெஞ்சவும் அவளைத் தேடி வந்த அடியாள்களில் ஒருவன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. 


"டேய் இங்க இருக்காடா." என அவர்களில் ஒருவன் குரல் கொடுக்க, மற்ற அனைவரும் ஓடி வந்து காரைச் சுற்றிக் கொண்டு நின்றனர். 


"ம்... வா... " என அழைக்க, அவள் ராக்கியின் பின்னே ஒழிந்து நின்றாள்‌‌.‌


"ம்ச்... ஒழுங்கா வந்திடு. இல்லன்னா அடிச்சி இழுத்திட்டு போக வேண்டி இருக்கும். " எனத் தலைவன் போல் இருந்தவன் பேச, மற்றவர் ஆமோதித்தனர்‌


அனைவரும் தடி மாடுகள் போல் பல்க்காக இருந்தனர். பரட்டைத் தலையுடன் கைலி அணிந்து, கையில் ஃபோனுடனும் டார்ச்சுடனும் வந்திருந்தனர். 


"அண்ணே, ஐயா அவளத் தூக்கிட்டு வரச் சொன்னாரு.. சீக்கிரம்.. " எனச் சொல்லி தலைவனை உசுப்ப, அவன் வேகமாக வந்து அந்தப் பெண்ணின் கரத்தை‌ப் பற்றி இழுக்க வர,


பெண்ணவள் ராக்கியின் கரத்தைக் கட்டிக் கொண்டு, "ப்ளீஸ் ஸார்... ப்ளிஸ் ஸார்... காப்பாத்துங்க ஸார்… ப்ளீஸ்... " எனக் கெஞ்ச, அவன் கரத்தை உறுகிக் கொண்டான். பெண் அவனை ஏக்கமாக பார்த்தபடி நிற்க, அவர்கள் அவளை இழுத்து சென்றனர். 


"பாஸ்! எதுக்கு இந்தப் பொண்ண இழுத்திட்டு போறீங்கன்னு சொல்றீங்களா.” என்றான் ராக்கி.


"வீட்டுல கல்யாணம் தலைவா. பொண்ணு ஓட பாக்குது." என்றான் ஒருவன்.


"எங்கன்னு சொன்னா நானே ட்ராப் பண்ணிடுவேன். இன்னேரம் கால் டாக்ஸி பிடிக்கிறது கஷ்டம். அதுலயும் இத்தனப் பேருக்குன்னா… குட்டி யான தான் தேவப்படும்." என்றவனைத் தலைவன் போல் இருந்தவன் திரும்பி பார்த்து முறைத்தான்.


"நீ எதுக்குத் தலைவா சிரமப்படுற! எங்கள்ட்டயும் டாடா சுமோ இருக்கு. அதோ! அங்க தான் நிப்பாட்டீட்டு வந்தோம். வா... " என்றவன் பெண்ணை இழுக்க அவனால் அவளை இழுக்க முடியவில்லை. அவளின் கரம் ஆடவனின் கையில் சிக்கி இருந்தது. 


"பிடிக்காத ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது தப்பில்லையா பாஸ்… " எனக் குறுஞ்சிரிப்புடன் ராக்கி கேட்க, பெண்ணவளுக்குள் சிறு நம்பிக்கை‌ வந்து. 


"தப்பா இருந்தாலும் நாங்க பண்ணா சரி. டேய் இவன கொஞ்சம் கவனிங்க டா. "  என மற்ற ஆட்களை ஏவ, ராக்கி அவர்களுடன் சண்டை போட ஆரம்பித்தான்‌. குனிந்து வளைந்து நெளிந்து பறந்து என அவன் சண்டே போடத் தொடங்கினான்.


இருபது பேர், ஒற்றை ஆள். அதுவும் அந்த அடியாள் காரில் அந்தப் பெண்ணை ஏற்றி செல்வதற்குள் காப்பாற்றிவிட வேண்டும். முடியாது போய் விடுமோ! என அச்சம் பிறக்கும் நேரம் வந்தான் மதுசூதனன். 


வந்தவன் நேராக அந்தத் தலைவனின் வயிற்றில் குத்தி, கழுத்தில் ஒரு அடி கொடுக்க, அவன் சுருண்டு விழுந்தான். 


அந்தப் பெண்ணைப் பார்த்து "கார்ல ஏறி உக்காந்துக்கம்மா." என்க, வேகமாக அவள் ஓடிச் சென்றாள். அவள் ஓடும் பாதையை மறித்து நின்றவர்களை ராக்கி தூக்கிப் போட்டு பந்தாட, இந்தப் பக்கம் மது பந்தாட எனச் சண்டை காட்சி சிறப்பாக இருந்தது. காவல் நிலையத்திற்கு அழைத்து தகவல் சொல்ல போக, பெண் தடுத்தாள்.


"அண்ணா வேண்டாம் ப்ளீஸ். என்ன எங்க ஊருக்கு பஸ் ஏத்தி மட்டும் விடுறீங்களா. வீட்டுல தேடுவாங்க. ப்ளிஸ்…" என இறைஞ்ச, காலையில் ஏற்றி விடுவதாக சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்தனர். 


"யாரு ம்மா நீ... எந்த ஊரு…" என்று விசாரிக்கத் தொடங்கினான் மது.


"மதுரன்னு சொன்ன. அங்க இருந்து எதுக்கு இங்க வந்த. உங்கப்பாம்மா என்ன பண்றாங்க." என்றான் ராக்கி. 


"எப்படி இவனுங்க கிட்ட மாட்டுன? எதுக்கு உன்ன துரத்துனாங்க? " மது..


"உன்னத் துரத்தின ஆளுங்க யாருன்னு தெரியுமா? " ராக்கி.


இருவரும் பல கேள்விகள் கேட்டனர். ஆனால் பதில் சொல்லாது பெண் ஓ வென அழ... பாவம் பயந்திருப்பாள் என நினைத்து இருவரும் ஒன்று பேசாது அறைக்குள் சென்றனர்.


அறைக்குள்… 


"மச்சான் எனக்கு என்னமோ நாம இவள நம்மோட கூட்டீட்டு வந்து தப்பு பண்ணிட்டமோன்னு தோணுது." ராக்கி 


"ஏன்?" 


"ஏன்னா பெண்ணு வயசு பொண்ணா இருக்கு. நம்ம ஊரு கிடையாது. காலேஜ்ல படிக்கும்ன நினைக்கிறேன். நீ இல்லன்னாலும் நான் பேச்சுலர் டா. " என்றவனை மது முறைக்க,


"விவாகரத்து பண்ணாலும் உனக்குக் கல்யாணம் ஆகி, அடுத்து நடக்க வேண்டியது எல்லாம் தரமா, சிறப்பா நடந்து முடிஞ்சி ஒரு அறை குறை வாழ்க்கையவாது நீ வாழ்ந்திட்ட... ஆனா‌ நான்? " 


"இப்ப என்னடா சொல்ல வர்ற?" 


"ம்... இந்தப் பொண்ணு உன் வீட்டுல இருக்குன்னு உம் முன்னாள் பொண்டாட்டிக்கி தெரிஞ்சா என்ன ஆகும்? அதுவும் இன்னைக்கி தான் உனக்கு விவாகரத்து கிடைச்சிருக்கு. அதுக்குள்ள இன்னொரு பொண்ண கூட்டீட்டு வந்து நைட் ஸ்டே பண்ண வச்சது தெரிஞ்சா… அரஸ்ட் பண்ணி டயம் வேஸ்ட் பண்ண மாட்டா பைரவி. ஸ்டெயிட்டா என்கவுண்டர்ல போட்டு தள்ளிட்டு சூசைட் பண்ணிக்கிட்டோம் கேஸ்ஸ முடிச்சிடுவா. 


உங்கூட சேர்ந்த பாவத்துக்கு நானும் ஃபோட்டோ ப்ரெம்ல தொங்கணுமா! அதா சொல்றேன், கொண்டு போய் எங்கையாது விட்டுட்டு வருவோம். அப்படி இல்லன்னா மகளிர் போலிஸ்ட்ட ஒப்படைப்போம். வா.." என்றவனைத் தடுத்து மது நிறுத்த, அப்போது ராக்கியின் பாக்கெட்டில் இருந்து ஒரு பர்ஸ் கீழே விழுந்தது.


"யாரிது டா இது.?" 


"நாம அடிச்சோம்ல அவனுங்கள்ல ஒருத்தெங்கிட்ட இருந்து எடுத்திட்டு வந்தேன். ஏன்னா ஆள் அட்ரஸ் தெரியாத அடியாள அடிச்சி நமக்கு பழக்கம் இல்லல்ல. அடிவாங்குனவே பேரு விசிட்டிங் கார்டுல இருக்கும்னு நினைச்சேன். கஞ்சப்பயே பத்து ரூபா கிழிஞ்ச தாளு மட்டும் தான் வச்சிருக்கான்." எனச் சலித்துக் கொள்ள, அதில் ஒரு பில் இருந்தது. அது வாகனத்திற்கு பெட்ரோல் போட்டதற்கான பில். கூடவே திருநீர் போன்று ஒரு பொடி காகிதத்தில் மடித்து வைக்கப்பட்டிருந்தது.‌


"என்னாது டா இது?" 


"தெரியல மச்சி. அந்த அடியாட்கள் கிட்ட இருந்தது. அப்பப்ப அவங்களுக்குள்ளேயே சப்ளை பண்ணிக்கிட்டாங்க. கோலமாவா இருக்குமோ?. "


"இருக்கலாம்." என பாக்கெட்டைப் பிரித்து முகர்ந்து தான் பார்த்தனர். நல்ல போதை, அவர்களின் நடு மண்டைக்கி‌ ஏறி நின்றது. 


அது அதீத போதை தரும் போதை பொடி. நுகர்ந்து பார்த்த சிறிது நேரத்திலேயே இருவரும் விண்ணுலகில் பறக்க தொடங்கினர். போதை விடிந்து பின்னர்தான் தெளியவே ஆரம்பித்தது.


செந்தாமரை செல்வி.. 


அவளைத்தான் இருவரும் காப்பாற்றி கூட்டி வந்துள்ளனர். ராக்கி சொன்னது போல் பருவப் பெண் தான். வயது இருபத்தி இரண்டு இருக்கும்‌. இந்தப் போதை கும்பல் யார் என்று அவளுக்கே தெரியாது. 


ஒரே நாளில் தன் வாழ்க்கையின் ஒட்டு மொத்த பயத்தையும் பார்த்துவிட்டாள் பெண். 


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தாமரைக்கு அப்பா அம்மா ஒரு அண்ணன் என ஒரு குடும்பம் அரசனூரில் உள்ளது. 


அங்கிருக்கும் கல்லூரி ஒன்றில் இளநிலை பட்டம் படித்து முடித்த அவள், அரசு ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்கிறாள், தன் அன்னையின் கட்டளையால். 


அவளுக்கு கவர்மென்ட் வேலையில் விருப்பமில்லை. 'சென்னைக்கி வாடி.. இங்கு அவ்ளோ வேல கொட்டி கிடக்கு..' என அழைத்த தோழியின் அழைப்பை ஏற்று சென்னையில் வேலைக்கு முயன்று வருகிறாள்‌. தெரிந்தவர்கள் மூலம் ஆப்ளே செய்த வேலைகக்கான நேர்காணலில் பங்கு பெற சென்னை வந்தாள். 


'காலனா காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசாத்தா இருக்கணும்.' என்ற சினிமா டயலாக்கை அடிக்கடி சொல்லும் அவளின் அன்னையிடம் பொய்கள் பல சொல்லி சென்னை வந்துள்ளாள். 


முதல் முதலில் மதுரையை விட்டு வெளியே வருகிறாள் அவள். அதுவும் தனியாக. இரவு ஏறி அதிகாலையில் சென்னையில் இறங்கி, நேர்காணலை முடித்து விட்டு, தோழியுடன் ஊர் சுற்றி விட்டு, இரவு பஸ் ஏற திட்டமிட்டிருந்தாள் தாமரை. 


இதுவரை புகைப்படங்களிலும், யூட்யூப் வீடியோக்களிலும் மட்டுமே சென்னையைப் பார்த்தவளுக்கு, நேரில் பார்ப்பது உற்சாகத்தை அதிகமாகியது.‌


பீச்... பார்க்… தியேட்டர் என பல இடங்களுக்கு ஊர் சுற்றியவளை இரவு ஏழு மணி போல் பஸ் ஏற்றி விட்டு விட்டு சென்றாள் தோழி. 


பஸ் தாம்பரத்தில் நிற்க, கழிவறைக்குச் சொல்ல இறங்கியவளைச் சிலர் கேலி செய்த படி பின் தொடர்ந்தனர். பயந்து போனவள் யாரை உதவி கேட்க எனத் தெரியாது முழித்த போது காக்கி உடை அணிந்த ஒருவன் வந்தான். காவலன் தான் என நம்பி அவனை உதவிக்கு அழைத்தாள்.


பின் தான் தெரிந்தது அவனும் தன்னைத் துரத்தி வந்த கும்பலை சேர்ந்தவன் என்று. அசால்டாக அவளைக் கடத்திக் கொண்டு வந்து விட்டனர். பார்க்கவே அவர்கள் கொடூரமாக இருக்க, அவர்களின் பேச்சும் காது கூசும் அளவுக்கு மோசமாக இருந்தது. தப்பிக்க நல்லதொரு சந்தர்ப்பத்தைத் தேடினாள் பெண்.


அந்த சந்தர்ப்பம் டயர் பஞ்சர் ஆனதால் கிடைத்தது. சிலர் கீழே இறங்கி என்னானது என்று பார்க்க, கிடைத்த சிறிய கேப்பில் தப்பித்து ஓடி, நம் ஹீரோக்கள் கண்ணில் சிக்கி தப்பித்துள்ளாள். ஆனால் அவர்களிடம் தான் யார் என்று  சொல்ல யோசித்தாள் பெண்.


"நான் இப்ப இருக்கிற சூழ்நிலைல யாரையும் நம்ப முடியாது."  எனத் தன்னைப் பற்றி சொல்லவில்லை தாமரை.


"நல்லவங்களாத்தான் தெரியுறாங்க. ஒரு வேளை இவங்க கண்ணுல சிக்காமா, துரத்தி வந்தவங்க கிட்ட சிக்கியிருந்தா!." என்று நினைக்கும் போது உதறல் எடுத்தது அவளுக்கு. கூடவே பசியும் வந்து வயிறு நானும் இருக்கிறேன் என்றது.


ஊர் சுற்றும் ஆர்வத்தில் கடைசியாக எப்பொழுது சாப்பிட்டோம் என்ற நினைவு இல்லை. கூடவே இரு ஆண்களுடன் ஒரு வீட்டில், என்ற நினைப்பும் எழ, பல வித சிந்தனைகளில் சிக்கி தவித்தாள் பெண்.


வேண்டாம் வீட்டில் இருப்பதை விட பஸ் ஸ்டாண்டில் இருப்பது நல்லது என முடிவு செய்து ஆண்களை தேட, அவர்கள் இருவரும் அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்தனர். சொல்ல போனால் போதையில் மட்டையாகி இருந்தனர். 


அதைப் பார்த்து பயந்து போனவள் ஓடி விடலாம் என்று நினைத்தாள். வெளியே செல்லும் கதவு‌ம் பூட்ட பட்ட நிலையில் வெளியில் செல்லாது பயந்து மூளையில் முடங்கி உட்கார்ந்து அழுத் தொடங்கினாள். விடியும் வரை அழுதாள் தாமரை. அதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை அவளால். 


வீட்டில் என்ன சொல்வது? அப்பாவிற்குத் தெரிந்தால்.. பாவம்..‌. மனம் நொந்து விடுவார். அம்மா, என்னை அடித்தே கொன்று விடுவார். 


'உன்னைய யாரு டி வேல தேடி போகச் சொன்னா. ' எனச் சொல்லி காலை உடைத்தாலும் உடைத்து விடுவார். அண்ணா என்ன செய்வான். இப்போழுது என்ன செய்வது எனத் தன் நிலையில் உழன்றவளுக்குப் பசியும் சேர்ந்து கொள்ள மயக்கம் வந்தது. 


"எப்ப ராக்கி எந்திரிக்கும் இந்த பொண்ணு?" மது. 


"எங்கிட்ட சொல்லிட்டுதான மயங்குச்சி பாரு. எப்ப எந்திரிக்கும்னு சொல்ல. போய் டாக்டருக்கு கூப்பிடுடா. " என ராக்கி கத்தினான். 


அந்தப் பெண்ணிற்கு எதாவது ஆகிவிடுமோ என்ற பயம் அவனுக்குள் வந்தது. எனோ நேற்று அவன் திட்டிய போது அவள் முகம் மாறிய விதம் அவன் கண்முன்னே வந்து சென்றது. 


"கால் பண்ணிட்டேன் ராக்கி. வந்திடுவாங்க. ஆனா அவங்க வரும் போது இந்தப் பொண்ணு இங்க படுத்திருந்தா நம்மல என்ன நினப்பாங்க."


"தூக்கிட்டு வந்து பலானது பண்ண பாத்தோம் நினைப்பாங்க." என்ற ராக்கியை முறைத்தான் மது. 


"தெரியிதில்ல. தூக்கி பெட்ல படுக்க வப்போம்." 


"எம்பொட்டுலயா?" என்றவனை ராக்கி முறைக்க,


"அப்ப சோஃபால போடுவோமா?" 


"டேய் சோஃபாக்கிறது படுக்குறதுக்குக் கிடையாது உக்காந்து டீவி பாக்க மட்டும் தான்." 


"அப்ப படுத்து தூங்குற மாதிரி சோஃபா ஆர்டர் பண்ணி வரச் சொல்லு. அது வர்ற வர இந்தப் பொண்ண என்ன பண்ணலாங்கிறதையும் நீயே சொல்லிடு. " என்று கடுப்புடன் ராக்கி சொல்ல, மது மிகவும் தீவரமாக யோசித்தான். 


அவனின் படுக்கையில் துகில் கொள்ளும் உரிமை அவனுக்கு மட்டுமே ஆனது. ராக்கிக்கு கூட கிடையாது. ஏன் பைரவியைக் கூட சில மாதங்களாக அவன் அனுமதித்தது இல்லை. அப்படி இருக்கும் போது. 


"டாக்டர் எப்ப வர்றதா சொன்னாங்க?" என ராக்கி காட்டமாக கேட்கவும், 


"ம்ச்... சரி ஓகே..." என வேண்டா வெறுப்பாக சம்மதித்தான் மது.


ராக்கி தான் அவளைத் தன் கைகளில் ஏந்தினான். மூடிய விழிகளுக்குள் மொட்டாய் அந்தக் கருவிழிகள் அசையாது இருப்பதைப் பார்த்தவனுக்குள்ள ஓர் உணர்வு. அது என்வென்று தெரியாது, மெல்லிய புன்னகையுடன் அவளைக் கட்டிலில் கிடத்த,


அணிந்திருந்த சுடிதார் ஆங்காங்கே கிழிந்து அவளின் பால் நிற மேனியைக் காட்டியது. சிறு சங்கடத்துடன் அவன் நிற்க, மது போர்வை கொண்டு அவளின் கழுத்து வரை மூடினான். 


சாப்பிட எதையாவது செய்வோம் எனச் சமையலறை செல்ல, காலிங் பெல் அடித்தது. 


"ராக்கி டாக்டரா இருக்கும். போய்த் திறந்து விடு. " எனக் குரல் கொடுத்தான் மது.


வேகமாக சென்றவன் கதவைத் திறக்க அதன் கைப்பிடியில் கை வைத்தான். பின் என்ன நினைத்தானோ திறக்காது கதவில் இருக்கும் சிறிய லென்ஸ் வழியே எட்டி பார்த்தான். 


"மச்சான்... சிஸ்டர் டா.. " எனக் கத்தினான் ராக்கி.


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...