முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

பனி 7

அத்தியாயம்: 7


"சிஸ்டரா! என்னோட சிஸ்டரா?" மது.


"இல்ல மச்சான் என்னோட சிஸ்டர்…" 


"உனக்கு‌ ஏது டா சிஸ்டர்? நீ வீட்டுக்கு ஒத்த பையனாச்சே." 


"ஐய்யோ நீ வேற நேரங்காலம் தெரியாத காமெடி பண்ணிட்டு. வந்திருக்குறது பைரவி டா." என்றான் குரலைத் தணித்து. 


மது கோபமாகக் கையில் கரண்டியுடன் கதவை வேகமாகத் திறந்தான். 


"ஹாய் மாம்ஸ்… என்ன! சமையலா?" எனக் கேட்டபடி உள்ள நுழைய பார்க்க, மது வழி விடாது கதவைப் பிடித்த படி நின்றான்.


"உன்ன யாரு டி இங்க கூப்பிட்டா? போ டி. உனக்கு எனக்கும் இடைல இனி ஒன்னுமே இல்லன்னு அந்த ஜர்ஜம்மா சொன்னது காதுல கேக்கல... போ டி… " எனக் கதவை மூடப்போக, 


"என்ன மாம்ஸ் நீங்க… ஒரு சின்ன கையெழுத்து. அது நமக்குள்ள இருக்குறத இல்லாம ஆக்கிடுமா. இல்ல நமக்குள்ள நடந்த எல்லாத்தையும் நடக்காத மாதிரி மாத்திடுமா என்ன? இன்னும் நீங்க வளர வேண்டி இருக்கு. " என்றவள் கதவை மூட விடாது பிடித்துக் கொண்டு பேசினாள்.


'இன்னும் வளரணுமா! அப்ப வீட்ட இடிச்சில்ல கட்டணும். இப்பவே சீலிங் உரசுற மாதிரி தான் நிக்கிறான். இன்னும் வளந்தா எப்படி? இப்ப விக்கிற சிமிண்ட் விலைக்கி இடிச்சி கட்டுறது பயங்கற செலவாச்சே. ' ராக்கியின் மைண்ட் வாய்ஸ்.


" நான் எப்படி இருந்தா உனக்கு என்னடி வந்தது. போய்டு… இல்ல… நீ எங்கிட்ட சொன்ன டயலாக் தான். இது என்னோட வீடு. உனக்கு அதுல இடம் கிடையாது. எதாவது அசிங்கமாகுறதுக்குள்ள இடத்தைக் காலி பண்ணிடு." என்றவனின் இடையில் கை வைத்து கிச்சி கிச்சி மூட்டினாள்.


" ரொம்ப சீரியஸ்ஸ எங்கிட்ட பேச ட்ரெய் பண்ணாத மாம்ஸ்... நான் அத நம்பி கோபமோ ரோசமோ பட மாட்டேன்." என்க, அவன் நெளிந்த கேப்பில் உள்ளே வந்து விட்டாள் பைரவி. 


" இன்னும் எப்படித் தான் இந்த மியூசியத்த மெயின்டென் பண்றீங்களோ. ப்பா... பாக்கவே படு பயங்கரமாக இருக்கு." எனச் சுற்றி சுற்றி பார்த்தவள்,


"அடுப்புல என்ன இருக்க மாம்ஸ். தீஞ்சி போன ஸ்மெல் வருது." என்று சமையலறைக்குள் செல்லப் பார்க்க, அவளைப் பிடித்து இழுத்து தள்ளி விட்டு அடுப்பை அணைத்தான் மது. 


" அச்சோ… நீங்க எப்பயும் சாப்பிடுற ஓட்ஸ் கஞ்சி தீஞ்சிடுச்சா... பாவம் உங்க நாக்கு. பூரி மாதிரியான நல்ல சாப்பிட்ட டேஸ்ட் பண்ணாம, காஞ்சி போன சப்பாத்தியையும், தீஞ்சி போன ஓட்ஸ்ஸையும் சாப்பிட்டு சாப்பிட்டு உணர்ச்சியே இல்லாம இருக்கு. எதுக்கும் நீங்க அந்தத் தீஞ்சி போன ஓட்ஸ்ல உப்ப கொஞ்சம் ஜாஸ்தியாவே போட்டு சாப்பிடுங்க. அப்ப தான் சுரக்க வேண்டிய முக்கியமான ஹார்மோன்ஸ் எல்லாம் அதோட வேலைய சரியா செய்யும்." என கண் சிமிட்டி சொல்ல, 


அதை ரசிக்க சொல்லிய மனத்தை வேறு பக்கம் திரும்ப மிகவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது மதுசூதனனுக்கு.


" ஆமா! ஏன் காலைல நான் கால் பண்ணும் போது எடுக்கல?" 


" ம்ச்… நான் எதுக்கு டி உங் கால அட்டன் பண்ணணும்.. நீ என்ன எம்பொண்டாட்டியா?" எனக் கடுப்பாகக் கேட்டவன் அவளின் கரத்தைப் பிடித்து இழுத்து வந்தான் வாசலுக்கு. 


" எதுக்கா!! அதுல தான நாம ஆறு மாசமா குடும்பம் நடத்தீட்டு இருக்கோம். நேர்ல நடத்த நமக்கு வாய்ப்பே கிடைக்கலயே. ஹிம்... ஏதோ வெளிநாட்டுல ஹஸ்பெண்ட் வேல பாக்குறதா நினைச்சிட்டு வாழ்ந்திட்டு இருக்கேன்." என்றவளை முறைத்தான் அவன். 


" சரி விடுங்க. ‌எங்க என்னோட உடன் பிறவா சகோதரன். ராக்கி அண்ணா… அண்ணா…. உள்ள இருக்காரா?" என ராக்கியைத் தேடி உள்ளே செல்ல பார்க்க,


" எதுக்கு‌ டி நீ அவனத் தேடுற. முதல்ல கிளம்பு டி." என்றான் பற்களை கடித்துக் கொண்டு, அவளை வாசலை விட்டு உள்ளே செல்லவிடாது தடுத்தான் அவன்.


"என்னங்க நீங்க ரொம்பத்தா கோபப்படுறீங்க. எங்க அண்ணா மேல ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. நீங்க ராக்கி அண்ணாவ உங்க கூடவே வச்சிக்கிறதாகவும், அவர வீட்டுக்கே வர விடாம வேல வேலன்னு கொல்றதாலும், அண்ணாவோட அம்மா புலம்பினாங்க. அதான் அவர நேர்ல பாத்து பாசம்னா என்னன்னு பாடம் நடத்திட்டு போலாம்னு வந்தேன். நட்ப விட தாய்மை தான் முக்கியம் இல்லையா. அன்பு வைக்கிறவங்கள உங்க ஃப்ரெண்டு மாதிரி ஏமாத்தாதிங்கண்ணான்னு சொல்லிட்டு போலாம் வந்தேன்." என்க,


"அவ்வளோ தான. நான் சொல்லிக்கிறேன் நீ கிளம்பு." என விரட்ட, அவனை ‌ஒரே மாதிரியாகப் பார்த்தவள்,


"இல்ல... நானே அவர நேர்ல பாத்து தான் சொல்வேன். எங்க அண்ணா? உள்ள இருக்காரா?" எனக் கேட்டுக் கொண்டே படுக்கை அறைக்குள் நுழையப் பார்த்தாள். 


அங்கு ராக்கி மட்டுமல்ல தாமரையும் உள்ளாளே. அதான் மனைவியைப் போக விடாது தடுத்தான்.


எப்பொழுது பைரவி வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாளோ அப்பொழுதே ராக்கி அறைக்குள் சென்று பதுக்கிக் கொண்டான்.


'பட்டாசு வெடிக்கிற இடத்துல ரொம்ப நேரம் நின்னாத்தா ஆஸ்துமா வரும்… ஆனா அணு குண்டு வெடிக்கிறப்ப தூரம இருந்தாக் கூட அதோட கதிர் வீச்சால கேன்சர் வருமாம். வந்திருக்கிறது அணு குண்ட விட அபாயகரமானது. அதான் கண் பார்வைல படாம ஒழிச்சிக்கிறேன். அண்ணே அண்ணேன்னு  பாசமா கூப்பிடுறான்னா கன்பார்ம் என்கவுண்டர் தான்.' என நினைத்து அவன்‌ படுக்கை அறைக்குள் நுழைந்து கதவை சாத்தவும், அந்தச் சத்தத்தில் தாமரை கண் விழிக்கவும் சரியாக இருந்தது. 


திருடன் போல் பதுக்கி நின்று கொண்டு, கதவில் காதை வைத்து, வெளியே என்ன நடக்கிறது என்று ஒட்டு கேட்டுக் கொண்டு நின்ற விதமும், கதவை மூடிய விதமும் சரியில்லாது போக, கண் திறந்தவள் வாய்த் திறந்து கத்தும் முன் வாயைப் பாய்ந்து வந்து மூடினான் ராக்கி.


" ஷூ... ஷூ... கத்திடாத... அப்றம் நாம மாட்டிக்கிவோம்.‌" என ஹஸ்கி வாய்ஸ்ஸில் சொல்ல, அவனின் முகத்தை‌ ஏறெடுத்துப் பார்த்தாள் பெண்.


ராக்கி, அவனும் அந்த ஏஜென்ஸில் தான் வேலை செய்கிறான். அகாடமி பார்ட்னர் என்றும் கூட சொல்லலாம். கலையான நீள் வட்ட முகம். ஏர் நெற்றி. அளவான மீசை. ஃப்ரெஷ்ச் தாடி. கோதுமை நிறம். மொத்ததில் கம்பீரமான அழகான ஆண்மகன்.


பெண்ணவளின் பார்வையை அறிந்தவன், "நான் கைய எடுக்குறேன். நீ கத்தி காட்டிக்குடுக்க கூடாது. சரியா.. " என்க, அவள் தலை அசைந்ததும், அவளின் வாயில் இருந்து மெல்ல கரத்தை விலக்கினான் ராக்கி. 


கைக் குறுகுறுத்தது அவனுக்கு, அவளின் இதழின் மென்மையில். அதை ரசித்தவன் அவள் முகம் பார்க்க, அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள், சிறு மிரட்சியுடன்.


" ஸாரி... நேத்து நான் அப்படி பேசிருக்க கூடாது. பட் ப்ராமிஸ்ஸா அது எந்தப்பு இல்ல. ஏன்னா இதுக்கு முன்னாடி கிடைச்ச அனுபவம் அப்படி. 


மூச்சில டார்ச்ச அடிச்சி புதருக்கு வரியான்னு கூப்பிடுவாங்க. அப்படி வரலன்னா ஆளுக்களக் கூட்டீட்டு வந்து சண்ட போட்டுக் காசப் புடுங்கிட்டு தான் விடுவாங்க. அந்த மாதிரி ஆளுங்க கண்ணுல சிக்கினாலே ஆப்பு நமக்குத் தான்" என விளக்கம் தர,


'என்னைப் பாத்தா அப்படியா தெரியுது?' எனக் கேட்க துடித்த இதழைக் கட்டுப்படுத்தி, அவன் தந்த விளக்கத்திற்குத் தன் தாமரை இதழ் விரிய குறுநகை பூத்தவளைப் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை ஆடவனுக்கு. 


இருவரும் பேச்சின்றி அமைதியாக இருக்க.. இருவருக்கும் சேர்ந்து வைத்து வெளியே ஒரு ஜோடி கத்திக் கொண்டு இருந்தது. அது இருவரின் காதுகளிலும் விழ, குறுநகை இப்போது சத்தமில்லாத புன்னகையாக மாறி இருந்தது.


"எங்கடி போற?" 


"அண்ணாவ பாக்க." என்றவள் பெட் ரூமிற்குள் சென்றே தீருவேன் என அடம்பிடிக்க…


"அவெ இங்க இல்ல.." 


"செருப்பு இருக்கே." 


"அது அவனோடது இல்ல. அவனும் இங்க இல்ல. முதல்ல வெளில போடி." என அவளின் கரம் பற்றி இழுக்க, இன்னும் அவன் கையில் அந்தக் கரண்டி இருக்கத்தான் செய்தது. சற்று சூடுடன் இருந்திருக்கும் போலும். அது அவளின் கரத்தில் பட்டதும், அவள் ‘ஆ..‌.’ எனக் கத்தி ஊரைக் கூட்டி நாடகம் போட்டாள். 


நான்கு ஆண்டுகள் வாழ்ந்த அவனுக்குத் தெரியாத, மனைவியின் நடிப்பு. அதனால் அமைதியாக இருந்தவன் மீண்டும் கரண்டியை அவளின் மேல் வைக்க வருவது போல் பாசாங்கு செய்து விரட்டப் பார்த்தான்.


"இதோ பாருங்க... எங்கைல காயம் ஆச்சின்னா நான் சும்மா விட மாட்டேன். வைலன்ஸ்னு சொல்லி உள்ள தூக்கி வச்சிடுவேன்." எனப் பின்னால் நகர்ந்து கொண்டே சொல்ல, 


“உனக்கு பொய் கேஸ் போடுறது என்ன புதுசா?” என்றவனுக்கு குதுகலமாக இருந்தது போலும். 


“வேண்டாம்… அது சுட்டுடும்… முதல்ல அதக் கீழ போடுங்க.”


"முடியாது டி. நீ வெளில போடி. " எனக் கரண்டியை ஆட்டிக் கொண்டும் சூடு வைப்பது போல் அருகில் வர, அவள் சற்று குனிந்து அவனின் வயிற்றைப் பிடித்துத் தள்ளி விட்டாள். விட்டவள் பேலன்ஸ் மிஸ்ஸாகி அவன் மேலேயே விழ, இருவரும் சோஃபாவில் சரிந்தனர். தன்னிச்சையாக அவனின் கரம் அவளின் இடையணைத்து கொண்டது. 


ஆறு மாதங்கள் கழித்து கிடைக்கும் கணவனின் அணைப்பு. வெகு நாட்களுக்கு பின் கிடைக்கும் இந்த நெருக்கம். அவளை ரசிக்கச் சொல்லியது. ஆனால் ஆடவன் தான் கத்தினான். 


" எந்திரிடி பாண்டா... புளி மூட்ட மாதிரி இருந்திட்டு… மேல வந்து விழுற." என்றவன் அவள் எழாது இருந்ததால் மூச்சி வாங்க, விழுந்த சோஃபாவிலேயே தலை சாய்த்து ரெஸ்ட் எடுத்தான். ஆசுவாசத்துடன் ஏறிய இறங்கிய நெஞ்சும், சரிந்து கிடந்தவனின் முகமும் அவனை வசீகரனாகக் காட்ட, பார்வை மாற்றாது பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் கண்களால் என்ன எனக் கேட்டதும்,


" மாமா... சோஃபா உக்காருறதுக்கு, படுக்குறதுக்கு கிடையாது." என எம்பி அவனின் காதில் சொல்லி கண்களை உற்று நோக்க, சிமிட்ட, அவன் அவளைத் தரையில் தள்ளி விட்டான்.


'நான் மட்டும் தனியாப் போக மாட்டேன் நீயும் வா‌...‌' என்பது போல் அவனையும் சேர்ந்து இழுத்துக் கொண்டு தரையில் விழுந்தாள் பைரவி.


மதுவுக்கு இப்போது தான் மெத்தையில் விழுந்த உணர்வு. சோஃபா பஞ்சு போல் மிருதுவாக இல்லை. ஆனால் அவனவளின் மேனி பஞ்சை விட அதிகமாகவே சாஃப்ட்டாக இருந்தது. 


நம் பைரவிக்குச் சற்று பூசினார் போன்ற உடல் தான். இவளெல்லாம் எப்படி போலிஸ்ஸானால் என்று கேட்கும் அளவுக்கு கிடையாது. ஆனால் தேகம் சற்று சதை வைத்து தான் இருக்கும். 


மெத்து மெத்தென்ற அவளின் உடல் எப்பொழுதும் மதுவிற்கு மது குடித்த போதையை தரும்.


மதுவின் மிகப் பெரிய வீக்னஸ் மனைவியின் அருகாமை. எத்தனை சண்டை வந்த போதும் அவளை அணைக்காது ஒரு இரவு கூட தூங்கியது இல்லை. தன் பலவீனத்தை வெல்லும் பொருட்டு கடந்த ஆறு மாதங்களாக அவளை நெருக்க விடுவது இல்லை. பின்னென்ன சண்டை போட்டு அடித்துக் கொண்டு கட்டில் சமாதானம் செய்தால். அதான் அவளை விலக்கி வைக்க நினைத்தான்.


ஆனால், பைரவி விட மாட்டாள். உன்னை நான்‌ அறிவேன் என்பது போல் அவன் மேல் விழுந்து விழுந்து தான் பழகவே செய்வாள். அவனின் ஆண்மையைத் தூண்டிவிட்டு அவஸ்தையில் அவன் நெளிவதை வேடிக்கை பார்ப்பது அத்தனை சந்தோஷமாக இருக்கும். பாவம் மது...


இன்று அவளின் மேல் மொத்தமாக விழுந்து கிடைக்கும் போது, உடலில் அங்கங்க அழுத்த, உணர்ச்சிகள் அனைத்தும் ஊசி முனையில் வந்து நின்றது. கரம் தானாக அவளின் மேனியில் படர, கண்கள் எல்லை மீறியிருந்தது. அவளின் சட்டையில் திறந்திருந்த முன் இரண்டு பட்டன்களையும் அதில் தெரிந்த இளமையின் அழகையும் மோகத்தீக்குள் தள்ள, இதழ்களால் அவளின் வென்கழுத்தில் கோலம் போடத் தொடங்கினான்.


கணவனின் ஆசை தீயை உணர்ந்தவள் அவனுக்கு ஈடு கொடுக்கும் பொருட்டு அவனை அணைத்து அவனுக்கு வளைந்து கொடுக்க, சட்டென தன்னிலை உணர்ந்தவன் விலக நினைத்து எழத் தொடங்கினான்.


கணவனின் செயலில் தாப பிடிக்குள் தவித்து கொண்டிருந்தவள் அவனின் விலகல் பிடிக்காது அணிந்திருந்த பனியனை பிடித்து இழுத்து அவனின் இதழில் தன் இதழ் பதித்தாள். ஆளுமை நிறைந்த ஆணின் வலிய உதடுகள் மென்மையான பெண் அதரங்களுக்குள் வதைப்படத் தொடங்கியது. இடை விடாது இதழமுதம் பருகி, நீண்ட ஆழ்ந்த முத்தமாக அது தொடர்ந்தது.


இருவருக்கும் இடையே முத்தச் சண்டை நடக்க அது மோக கடலில் இறக்கி, ஹாலையே பெட்ரூமாக மாற்றி இருக்கும்.


"என்ன ரொம்ப நேரமா சத்ததையே காணும்." என ராக்கி தன் மொபைலில் இருந்து மதுவிற்கு கால் செய்ய, அந்தச் சத்தத்தில் அவளை உதறி விட்டு வேகமாக எழுந்தவனுக்கு தன் உணர்ச்சிகளை அடக்க சில நிமிடங்கள் பிடித்தது. 


தலைக்கு ஒன்றும் இடைக்கு ஒன்றுமாம் கையை வைத்துக் கொண்டு ஆயாசமாக அவன் நிற்க,


"மாம்ஸ்... திரும்பவும் சொல்றேன் ஒரு பத்து நிமிடம் நீயும் நானும் மட்டும்… தனியா பேசிக்கிட்டா எல்லாமே சால்வ் ஆகிடும். பேசலாமா!. பத்து நிமிசம்... " என பெட் ரூமை கண்களால் காட்ட, 


"உனக்கு வெட்கமே இல்லையாடி." 


"இதுல வெட்கப்பட என்ன இருக்கு! நீங்க என்னோட புருஷன் தான. எனக்கு ஆசை வந்தா உங்களத்தான கூப்பிட முடியும். வேற யாரையும் கூப்பிட்டா அது தப்பு. நாம எப்ப வேணும்னாலும் எத்தன தடவ வேணும்னாலும் கசமுசா பண்ணிக்கத் தான் கல்யாணமே பண்ணி வைக்கிறாங்க. நீ எனக்குன்னும், நா உனக்குன்னும் பதிவு செஞ்சி வச்ச லைசன்ஸ் ப்ராப்பர்டி. சோ இதுக்கு வெட்கம் தேவையே இல்ல. நீயும் வெட்கப் படாத." என்றவன் அவனின் நெஞ்சை நீவி விட்டு, அதில் இதழ் பதிக்க, அவளை உதறியவன்,


" ஏய்… ஏய்… வாய மூடு டி. நமக்கு டைவர்ஸ் ஆச்சி டி.. புரியுதா. உனக்கும் எனக்கும் செட்டாகாதுன்னு சொல்லி கோர்ட்டே நம்மல பிரிச்சி வைச்சிடுச்சி. இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ணா ஒரிஜினல் போலிஸ்ட்ட பிடிச்சி குடுத்திடுவேன். போடி வெளிய.. " என்க, அவள் நகர மாட்டேன் என்று அடம்பிடிக்க, அவனே அவளைத் தூக்கி கொண்டு அலுவலக வாசலில் விட்டான்.


விட்டதோடு வாட்ச்மென்னிடம், "இனிமே இவ என்னோட வைஃப் கிடையாது. சோ என்னோட அனுமதி வாங்காம இவள உள்ள விட‌கூடாது. புரியுதா.. கொண்டு போய் முக்கு ரோட்டுல டாக்ஸி ஏத்தி விட்டுட்டு வாங்க. போங்க. " என்று சொன்னதோடு மட்டுமில்லாது, அவளை டாக்ஸி பிடித்து தன் ஏரியாவை விட்டே அனுப்பி விட்டான், மதுசூதனன். 


" உஃப்…. கொஞ்ச நேரம் விட்டிருந்தா என்னென்னமோ நடந்திருக்கும்." எனப் பெரு மூச்சு விட்டபடி தன் இதழை மடித்து சுவைத்தபடி, புன்னகையுடன் உள்ளே சென்றான்.

 தொடரும் ...

💛அனிதா குமார்💛

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...