முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

பனி 8


 

அத்தியாயம்: 8


" என்ன மச்சி கையில் மிதக்கும் கனவா நீ மொமென்ட்டா." எனக் கேலியாக ராக்கி கேட்க, அவன் முறைத்தானே தவிர பதில் சொல்லவில்லை.


"டாட்டா மட்டும் தான் காட்டி வழி அனுப்பி வச்சியா… இல்ல வேற மாதிரி பதினொரு மணி காட்சிகள் எதாவது... " எனக் கிண்டலாக கேட்க, மனைவியின் அருகாமையில் கிடைத்த இதத்தை நினைத்து சிறு வெட்கத்துடன் அவனைக் கடந்து சென்றான் மதுசூதனன். 


"நம்ம தங்கச்சி சொன்னது சரியாத் தான் இருக்கும் போலயே. இவனுக்குப் பத்து நிமிஷம் போதும் போலயே. பத்து நிமிஷம்.. ம்..‌ம்.. " என்றபடி அவனை தொடந்து படுக்கை அறைக்குள் நுழைந்தான் ராக்கி. 


"இப்ப எப்படிம்மா இருக்கு. டாக்டர்க்குக் கூப்பிட்டிருக்கோம். வந்திடுவாங்க. ஒரு செக்கப் பண்ணிட்டு உன்னைச் சேக்க வேண்டிய இடத்துல சேத்து விடுறோம். இப்ப வந்து சாப்பிடு." என ஒரு லிட்டர் சாத்துக்குடி ஜூஸைக் காலி செய்த தாமரையை உணவுன்ன அழைத்தான் மது.


கூடவே ஒரு செட் சுடிதாரை அவளின் கையில் கொடுத்து அணிந்து கொண்டு வரச் சொன்னான். அது பைரவியுடையது. பெண்ணவளின் உடலை எடுத்துக் காட்டு அளவுக்கு ஃபிட்டாக இல்லை அந்த சுடிதார். ஆனாலும் அது அவளுக்கு அழகாக இருப்பதாக தோன்றியது. வேறயாருக்கு ராக்கிக்கு தான்.


அவளின் முகத்தை‌ப் பார்த்த படியே இருந்தவனின் முன் தட்டை வைத்து சப்பாத்திகளைப் பரிமாறினான் மது. 


'ஐய்யோ இதுவா!!' என முகம் சுளித்தாலும் எழுந்து செல்லவில்லை. பசி ருசி அறியாது என்பதால், கண்ணை மூடுக் கொண்டு குருட்டுக் கோலி தவிட்டை முழுங்குவது போல் 

நாக்கிற்கு வேலை வைக்காது அப்படியே முழுங்கினான் அவன். 


"உங்காருமா.. சாப்பிடு.." என அவளுக்கும் பரிமாற,


"விருந்தாக்கி போடுறதுக்கு முன்னாடி இவ யாரு என்னன்னு கேக்க மாட்டியா நண்பா." என்றான் ராக்கி. பெண்ணவளின் பெயரை அறிந்து கொள்ளும் ஆவல் இருந்தது அவனிடத்தே. 


தாமரை அமைதியாக இருந்தாள். சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் அவள் யோசித்தபடியே தட்டில் இருந்த சப்பாத்தியைப் பார்க்க, பைரவி சொன்னது நினைவு வந்து இதழ் விரிய சத்தமில்லாமல் சிரிக்கத் தொடங்கினாள் தாமரை. ஏன் சிரிக்கிறாள் என்பதை அறிந்து கூடவே ராக்கியும் சேர்ந்து கொள்ள, 


"இதுல சிரிக்கிற அளவுக்கு என்ன இருக்கு. சப்பாத்தி தான். சாப்பிடுங்க." அமைதியாகச் சொன்ன மது, சப்பாத்தி இரண்டை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டு உண்ணத் தொடங்கினான்.


தாமரை வாயை மூடிக்கொண்டு உணவை, அதாவது சப்பாத்தியை எடுத்து ஒரு வாய் வைத்து டேஸ்ட் பார்க்க, பைரவி சொன்னது போல் தான் இருந்தது தாமரைக்கு. 'காஞ்சி போன சப்பாத்தி..‌' திரு திருவென முழித்த படி எடுத்து உண்ண, 


"ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லிடு. நான் போய் இட்லி வாங்கிட்டு வர்றேன்." ராக்கி அக்கறையுடன் சொல்ல, மது அவனை முறைத்தான்.


"இல்ல மச்சான் இட்லி சீக்கிரம் டயஜிஸ்ட் ஆகிடும். சாப்பாத்திய விட. வீக்கா இருக்கால்ல. அதான்." எனத் தயக்கமாக சொன்னான். ஏனெனில் சப்பாத்தியைக் குறை சொன்னால் மதுவிற்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லை.


"இதுவும் ஆகும். மூடீட்டு தின்னு." 


"ஏன் எதுலயும் எண்ணெய் சேக்கல." என்றாள் தாமரை சந்தேகமாக. 


"நாங்க பாடி பில்டர்ஸ்மா. எங்களுக்கு ஹெல்த் ரொம்ப முக்கியம். எண்ணெய், ஸ்வீட் அதிகமா சாப்பிட மாட்டோம்." 


'அதிகமாவா… சாப்பிடவே மாட்டோம்னு சொல்லு… அதுவும் நீ மட்டும் தான். என்னைக் கூட்டுல சேக்காத. எண்ண சேக்காத விசித்திர பிறவிடா நீ. ' இது ராக்கி மைண்ட் வாய்ஸ்.


"வேக வச்ச காய்கறி, பழம், ஓட்ஸ், பருப்பு வகைறாக்கள், சிறு தானியம். இது தான் முக்கியமா சாப்பிடுவோம். ப்ரோட்டின் கன்டென்ட் இருக்குற ஃபுட் சாப்பிட்டா உடம்பு வெய்ட் போடாது. அப்றம் எக்ஸசைஸ். " என்று தன் உணவு முறைகளை எடுத்துச் சொன்னான் மது. 


"ஆமாங்க காலைல எந்திரிச்சதும் ஒரு மணி நேரம் வாக்கிங்கு.‌ மூளக்கட்டின பச்ச பயிறு ஒரு கப்பு. அவிச்ச முட்ட ரெண்டு. ஒரு பவுல் ஓட்ஸ். மதியானம் நாலு சப்பாத்தி. ராத்திரி வெறும் பழம். இத நீங்க ஃபாலோ பண்ணா சூப்பாமேன் ச்சி… சூப்பர் விமென்னா மாறிடுவிங்க." என்றான் ராக்கி. 


"என்னடா டயட் மெனு சொல்லிட்டு இருக்கியா.. " மது கேட்க, தாமரை சிரித்தாள்.


"சிரிப்பா இருக்கில்ல. இத ஒருத்தே முப்பது வர்ஷமா ஃபாலோ பண்ணிட்டு வர்றான்னா எப்படிப்பட்ட ஆளா இருப்பான்னு யோசிச்சிக்கங்க. இதுல ஹைலைட் என்னன்னு முட்டைய வேக வச்சி தரலன்னு பொண்டாட்டி கூட சண்ட. சரின்னு சமச்சி தந்தா, இவெ ஃபாலோ பண்ற டயட்டத் தான் அந்த பொண்ணும் ஃபாலோ பண்ணணும்னு ஆர்டர் பண்ணா என்ன பண்றது." என்றவன்,


"குடும்பம் நடத்த சொன்னா! குட்டி மிலிட்டரிய நடத்திட்டு இருக்கான். அப்றம் எப்படிப் பொண்டாட்டி கூட இருப்பா. விட்டுட்டு தான் போவா." என மதுவிற்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுத்தான். 


"இப்ப என்ன சொல்ல வர்ற? நான் தான் அவள டார்ச்சல் பண்ணேன்னா. அவ ஒன்னுமே செய்யலன்னா. அப்படி தான. அந்த ராச்சஸி செஞ்சதெல்லாம் யாருக்கும் தெரியாது டா. உங்களுக்குச் சொன்னாலும் என்னோட கஷ்டம் புரியாது. நல்ல வேளை எங்களுக்கு டைவர்ஸ் குடுத்து அந்த ம்மா எனக்கு மிகப் பெரிய உதவி செஞ்சிருக்காங்க. இல்லன்னா… என்னோட நிலம.. அவளயெல்லாம்... " எனக் கண்டபடி திட்டத் தொடங்க, 


"மச்சான் மச்சான் ஒரு நிமிடம் ப்ரேக் விடு. பைரவி கண்டு பிடிச்சிருப்பாளா? " என்றான் சந்தேகக் குரலில்.


"எத?" 


"அதா நீ‌ ஒரு பொண்ண கூட்டீட்டு வந்து வீட்டுல தங்க வச்சத." என்றவனை முறைக்க, 


"கண்டிப்பா கண்டு பிடிச்சிருப்பா. ஏன்னா அவளுக்கு மோப்ப சக்தி அதிகம். நாய விட பவர்புல்லான மூக்கு அவளுக்கு." என்றவனை‌ ராக்கி முறைக்க,


"அப்ப என்கவுண்டர்.‌" 


"சீக்கிரம் நடக்கும்." 


"எப்படியோ தெரியுறதுக்கு பதிலா நம்மலே இந்தப் பொண்ண பைரவிக்கிட்ட தள்ளி விட்டிருந்தா! சேர்க்க வேண்டிய இடத்துக்குக் கொண்டு போய் சேத்திடுப்பாள். ஏன்னா பைரவி ஒரு போலிஸ்." என்க, 


"ஐய்யையோ… அப்படிலாம் பண்ணிடாதீங்க.. நான் இங்க வந்ததே அம்மா கூட சண்ட போட்டு தான்.. இதுல என்னைக் கடத்துனது… தப்பிச்சது… போலிஸ்ஸோட வீட்டுக்கு வர்றது... எல்லாம் எனக்கு நானே குழி வெட்டிக்கிற மாதிரி தான்.  


போலிஸ்லாம் வேணாம். என்னை எங்கூருக்கு பஸ் மட்டும் ஏத்தி விடுங்க. நான் சமாளிச்சிப்பேன். அது போதும்." எனப் படபடப்புடன் தாமரைச் சொல்ல,


"எங்களுக்குப் போதாதே அது." என்ற ராக்கியைத் தாமரை எறெடுத்து பார்த்தாள்.


" யாரு? எந்த ஊருன்னு சரியா தெரியாம… ஒரு பொம்பளப்பிள்ளைய பஸ் ஏத்தி விட்டுட்டு நாங்க எப்படி நிம்மதியா இருக்குறது. சொல்லு உம் பேரென்ன?" மது.


"என்னோட பேர் தாமரை செல்வி." என ஆரம்பித்து தன்னைப் பற்றி கூறினாள். பாத்ரூம் சென்ற சமயம் கும்பலிடம் சிக்கியது. தப்பித்து இவர்களின் கைக்குக் கிடைத்து என அனைத்தையும் கூறினாள். 


"எங்கப்பாக்கும் போலிஸ்க்கும் ஆகாது. எப்ப பாரு வந்து வீட்டு வாசல் நின்று அப்பாவ திட்டிக்கிட்டே இருப்பாங்க. விசாரிக்கிறேன்னு கூட்டீட்டு போவாங்க. சில நேரம் அடிக்க கூட செஞ்சிருக்காங்க. அதுனால எனக்கு போலிஸ் மேல் பயம். நம்பிக்கையும் கிடையாது. ஊருக்கு பஸ் ஏற மட்டும் உதவி பண்ணுங்க. ப்ளிஸ்.. " என்றாள் இறைஞ்சலோடு. 


"அப்பாவ போலிஸ் விசாரிக்கிதுன்ன உங்கப்பா தீவிரவாதியா இருக்காரா?" ராக்கி.‌ 


" இல்ல.. எங்கப்பா தீவிரவாதி இல்ல. அவரு ரொம்ப நல்லவரு. எப்பவுமே எல்லாருக்கும் நல்லதே நடக்கணும்னு நினைக்கிறவரு." தாமரை ரோசமாகவும் சிறு கோபமாகவும் சொல்ல,


"ஓ… இந்தப் புது யுக காந்தியோட பேரு என்னம்மா?" எனக் கேலியாகக் கேட்க, தாமரை வாய்த் திறக்கும் முன், மீண்டும் காலிங் பெல் அடித்தது.


" மறுபடியுமா?" என ராக்கி அதிர, 


"டேய் டாக்டர் சந்திரகலா டா. " என்றவன் எழுந்து வந்து கதவைத் திறக்க டாக்டர் வந்தார். தாமரையைப் பரிசோதித்து விட்டு சில சத்து மாத்திரைகளைத் தந்துவிட்டு சென்றார். 


யார் என்று கேட்ட டாக்டரிடம் ஏதேதோ சொல்லி சமாளித்து அனுப்பி வைத்தனர் இருவரும். அவரை மட்டுமல்ல, தாமரையையும் தான். அவளின் தோழியைத் தொடர்பு கொண்டு, தாமரையின் வீட்டிற்குத் தகவல் சொல்ல சொல்லி விட்டு, மதுரைக்கு ஏற்றி விட்டு‌, துணைக்கு ஓர் ஆளையும் அனுப்பி வைத்தனர். 


'ச்ச... இன்னும் கொஞ்ச நேரம் கூட இருந்திருக்கலாம்..' என்ற எண்ணம் ராக்கிக்கு வராமல் இல்லை. அது அப்பட்டமாக அவனின் முகத்தில் தெரிய, அதைக் கவனித்த படி காரை ஓட்டினான் மது. 


"என்ன ராக்கி... பிடிச்சிருக்கா… வீட்டுல பேசிடலாமா…" என்றான் மது சந்தோஷமாகவே.


"என்ன பேசப்போற? " 


"அதா உன்னோட உள்ளத்தில மலர்ந்த தாமரைய பத்தி." என ஓரக் கண்ணால் நண்பனை பார்த்து கேலியாகவும் சீரியஸ்ஸாகவும் சொல்ல,


"மறுபடியும் மறுபடியும்  பொண்ணுங்கள நம்பி நான் ஏமாற விரும்பல. ஒருக்க பட்ட சூடே போதும். " என்றவன் முகத்தில் வேதனை நிரப்பியது. 


"‌ம்ச்... ஒரு பொண்ணு உன்ன ஏமாத்துச்சின்னா எல்லா பொண்ணும் அப்படியே இருக்கணும்னு அவசியம் இல்ல." 


"ஒரு பொண்ணு… போடா… எனக்கும் பொண்ணுங்களுக்கும் ராசி கிடையாது மச்சி. விட்டுடு. சைட் அடிக்கிறதோட நிப்பாட்டிக்கிவோம். " என விரக்தியுடன் சொன்ன நண்பனைப் பார்த்து மது புன்னகைத்தான்.


"பழகிப் பாரு. உன்னோட மனசுக்குப் பிடிச்சா மேக்கொண்டு நடக்க வேண்டியது தன்னால நடக்கும்." என்று மது சமாதானம் சொல்லுயும் ராக்கி இறுகிப் போய் தான் இருந்தான்.. 


இருவரும் ஒரே கல்லூரியில் தான் படித்தனர். ராக்கி மிடில் க்ளாஸ். ஒரே ஒரு அப்பா அம்மாவை மட்டுமல்ல, அவனின் அத்தை குடும்பத்தையும் அவன் தான் தூக்கி சுமக்கிறான். 


வரிசையாக அவனுக்கு ப்பெண்களிடம் கிடைத்தது எல்லாம் ஏமாற்றம் மட்டுமே. ஒன்றா.. ரெண்டா… முதலில் அவனின் அத்தை பெண், காதல் என்று அவன்‌ கல்லூரி காலத்தில் ரோஜாவை நீட்ட, சரி அத்த பொண்ணு தானே என்று சரி சொன்னான். ரெண்டு வருடம் அந்தக் காதல் நீண்டது.


அதாவது, அவள் கல்லூரி முடிக்கும் வரை. முடிந்த பின், "நெருங்குன சொந்ததுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கிட்டா…பிறக்க போற குழந்தைங்க ஊனமா பிறக்குமாம். நம்ம சந்தோஷத்துக்கா‌, ஒரு உயிர ஊனமா ஆக்குறது தப்பு மாமா. " என்று சொல்லி அவளுக்கு கம்ப்யூட்டர் க்ளாஸ் எடுத்த ஒருத்தனைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிட்டாள். 


காதல் தோல்வியால் வீட்டிற்குக் கூட போகாம தாடி கூட வளக்காம, மதுவே கதி என்று நம்ம மதுசூதனன் கூட சேந்து செக்யூரிட்டி ஏஜென்சில வேலைக்கு சேர, இந்த முறை அவனின் பார்வை விழுந்தது ஒரு தொழிலதிபரின் மகள் மீது. 


நன்றாக கம்பெனி குடுத்தாள். அவள் செல்லும் இடம் எல்லாம் அவனைக் கூடவே வைத்துக் கொண்டு ஊர் சுற்றி, நெருங்கி பழகி, கடைசியில் அவளும்,  'உன்னோட ஸ்டேட்ஸ் வேற என்னோட ஸ்டேட்ஸ் வேற. நமக்குள்ள லவ், மேரேஜ் எல்லாம் செட்டாகாது..' என்று சொல்லி டாட்டா காட்டிவிட்டாள். 


அடுத்து மதுசூதனனுடைய தங்கை. சிதம்பரம் ஜெயஸ்ரீயின் முதல் மகள், சைந்தவி. அப்பொழுதும் மது சொன்னான், 'அவளுக்கு நீ டயம் பாஸ்டா. எங்கச் சித்தி இதுக்கு ஒத்துக்காது.' என்று. ஆனால் ராக்கியின் மானங்கெட்ட மனசு இருக்கே, அது கேக்கவில்லை.. 


"எம்மகள கட்டிக்கணும்னா சொந்த வீடு இருக்கணும்.. அதுவும் EMI இல்லாம.. சொந்த பிஸ்னஸ் வச்சிருக்கணும்.. பேங்க் லோன் வாங்காம.. கடன் வாங்காம காஸ்லி காரு ஏசின்னு எல்லா வசதி இருந்தாத் தான் எம்பொண்ணு சந்தோஷமா வாழுவா. உனக்கு நான் ஒரு வர்ஷம் டயம் தாறேன். இதெல்லாத்தையும் வாங்கிட்டு வந்து எம்பொண்ணக் கேளு. நான் தாறேன். " என ஜெயிஸ்ரீ கண்டிஷன் போட்டார்.


ஒரு வர்ஷமென்ன ஒம்போது வருஷமே ஆனாலும் கடன் வாங்காமல் வீடு கட்டுவது சாத்தியப்படாத ஒன்று. ஆதலால், 'நீங்க வேற இடம் பாத்து உங்க பொண்ண கட்டி வச்சிடுங்க..' எனப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தவன் அவளின் கல்யாணத்தைச் சூரியவம்சம் சரத்குமார் போல் முன் நின்று நடத்தி வைத்தான்.


இதுவரை கூட அவன் சீரியஸ்ஸாக காதலிக்க வில்லை. அவர்கள் காதல் என்றதும், 'வாங்க பழகலாம்..' என்ற ரீதியில் இருந்ததே தவிர, அது நிலைக்காது நிறைவேறாது என்று உள்ளுக்குள் ஒரு பக்ஷி சொல்லும். 


ஆனால் தீவிரமாக அவனும் காதல் செய்தான். திருமணம் நிச்சயம் வரை வந்த அது நின்று போனது தான் அவனுக்குப் பெண்கள் மீது வெறுப்பைத் தந்தது. 


இரு வீட்டாரின் சம்மதத்துடன் விரைவில் திருமணம் என்று நிச்சயிக்க பட, நிச்சயத்தன்று, " ராக்கி உங்களோட அப்பா அம்மா நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் எங்க தங்குவாங்க.. " எனக் கேட்டாள் அவள் 


"இது என்ன கேள்வி! நம்ம கூட தான்." என்றான் அவளின் வார்த்தையில் இருந்த பொருள் புரியாது. 


"அப்ப உங்க அத்தை. " என்ற போது அவளை நிமிர்ந்து பார்த்தான்.


"அப்பா அம்மா மட்டுமில்ல அத்தையும் அவங்களோட பையனும் எங்கூட தான் இருப்பாங்க. இதுல உனக்கு என்ன பிரச்சன?" எனக் காட்டமாக வந்தது ராக்கியின் குரல்.


ஏனெனில் காதலிக்கும் போதிருந்தே அவன் கூறியது தான். கணவனை இழந்த அத்தைக்கு எங்கள் குடும்பம் தான் ஆதரவு என்று. இப்போது அவள் கேட்பது வில்லங்கமாக பட்டது அவனுக்கு. 


"அப்பா அம்மா ஓகே. அத்தை கூட ஓகே தான். அந்தப் பையனுமா? அவனுக்கு மனவளர்ச்சி இல்ல ராக்கி. ரொம்ப ரூடா பிகேவ் பண்றான். அவனக் கூடவே வச்சிக்கிறது முடியாது. முதல்ல அவன நல்ல ஹாஸ்டல் வசதி இருக்குற ஸ்கூலா பாத்து சேத்து விடுங்க. அப்றம் மத்தவங்கள முதியோர் இல்லத்தில சேத்திடலாம்.. சரியா. " 


"நான் முடியாதுன்னு சொன்னா?" 


"நம்ம கல்யாணம் நடக்காது. " என்றாள் தீர்க்கமாக. 


இதைத் திருமணத்திற்குப் பின் கூறியிருந்தால் கூட யோசித்திருப்பான். ஆனால் தாலி கட்டும் முன்னரே இவள் இப்படி என்றால், வீட்டிற்கு வந்தால் அவளாலும் நிம்மதியாக இருக்க முடியாது. நம்மையும் நிம்மதியாக இருக்க விடமாட்டாள். என்று அவளை விட்டு விட்டான். 


ஒரு கோபத்தில் அப்படி சொல்லியிருந்தாலும் பின் அவளைச் சமாதானம் செய்ய நினைக்க, அதற்குள் அவள் வேறு ஒருவனுக்குச் சொந்தமாகிப் போனாள். அவ்வளவு தான் பெண்களின் காதல் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் ராக்கி. 


விளையாட்டாக வெளியே பேசி சிரித்து பழகினாலும், உள்ளுக்குள் அவள் தந்த ரணம் இன்றும் உள்ளது, ஒரு ஓரத்தில்.


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...