அத்தியாயம்: 9
A1 Tele communication Industry...
பெரிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த நேம் ஃபோர்டை சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தாலே தெரியும். ஃபோர்டே அத்தனை பெரிது என்றால் அதன் வளாகம்… ஏக்கர் கணக்கில் இருக்கும்.
கிட்டத்தட்ட பல ஏக்கர் நிலத்தை அடக்கி பல வானுயர கட்டிடங்களைக் கொண்டிருந்தது. இளைஞர்கள் பலரை வரவேற்று வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் அந்த நிறுவத்தின் தலைமை பெங்களூரில் உள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் தகவல் தொடர்பு நிறுவனத்தில் இதுவும் ஒன்று.
ப்ளாக் கலர் ரோல்ஸ் ராய்ஸ் கம்பெனியின் கார் ஒன்று நுழைந்தது அந்த நிறுவனத்தின் கேட்டைத் தாண்டி வந்தது. அதிவேகத்தில் வந்த அதில் இருந்து ஓர் இளைஞன் இறங்கினான். தன் வேக நடையுடன் உள்ளே சென்ற அவனின் நடையை வைத்தே அவன் அவசரமாக செல்கிறான் என்பதை உணர முடியும்.
க்ரே கலர் கோர்ட் சூட்டில் இருந்த அந்த இளைஞன் லிஃப்ட்டில் ஏறி அதன் கடைசி தளத்திற்குச் செல்லும் பொத்தானைப் பல முறை அழுத்தினான். அது மேலே செல்லும் வரை கூட அவனுக்குப் பொறுமை இல்லை போலும். அவனின் வலிய உதடுகள், 'கமான்... கமான்... ஸ்பீட் அப்... ஸ்பீட்டப்... ' என முணுமுணுக்க, லிஃப்ட் அதன் வேலையை நிதானமாகச் சரியாய்ச் செய்து அவன் இறங்க வேண்டிய இடத்தில் கதவுகளைத் திறந்தது.
விழி மூடித் திறந்தவன் தோளைக் குளுக்கிய படி வேகமாக உள்ளே நடந்து சென்றான். அவன் தான் தீஷிதன். தகவல் தொழில்நுட்ப துறைக்குப் புதிது. வளர்ந்து வரும் ஒரு தொழிலதிபன்.
அவன் இறங்கிய அந்தத் தளத்தில் தான் இன்று இந்தியாவில் உள்ள அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஒன்று கூடி இருந்தனர்.
தங்களின் பிஸ்னஸ்ஸை எவ்வாறு லாபகரமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சரட்டெனக் கண்ணாடி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் தீஷித்.
"Excuse me gentle man... sorry for the delay. you may continue. " எனத் தாமதமாக வந்ததற்குப் பொதுவாக ஒரு மன்னிப்பைத் தெரிவித்தவன், தன் கம்பெனியின் பெயர் எழுதியிருந்த சீட்டில் சென்று அமர்ந்து கொண்டு மீட்டிங்கை கவனிக்க தொடங்கினான். சொல்லப்போனால் மிகவும் தீவிரமாகக் கவனித்தான்.
"இந்தியாவோட மொத்த பாப்புலேஷன் 130 கோடிய தாண்டிடுச்சி. எக்கச்சக்கமானத் தொழில் நிறுவனங்கள் வந்திடுச்சி. But still India has not developed...." என வருத்தப்பட்டார் இந்தியாவின் முன்னனி செல்போன் சர்வீஸ் தரும் கம்பெனியின் GM.
"Yes... He is correct... நம்மல விட பொருளாதாரத்துல மக்கள் தொகைல பின் தங்கிருக்குற நாட்டுல கூட 6G 7G ன்னு வேகமாப் போய்க்கிட்டே இருக்காங்க. பட் இங்க… 3G… 4G… 5G கே படாத பாடு பட்டுட்டு இருக்கோம்."
"நம்ம கவர்மென்ட் இதுக்கு இன்ஷியேட் எடுத்தே ஆகணும். நாட்டோட மூளை முடுக்குல எல்லாம் செல்ஃபோன் டவர்ஸ்ஸும் இன்டர்நெட் கனெக்ஷனும் கிடைக்க உதவி செய்ற நம்மோட சேலையால நாடு முன்னேற்றம் அடையும். நம்மோட திட்டங்களுக்கு இந்தியன் கவர்மென்ட் முன்னுரிம குடுத்தே ஆகணும்." என்று பலர் தங்களின் தொழில் வளர்ச்சி பற்றியும் அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேச, தீஷிதனின் உதடுகள் எளனமாய் வளைந்தன.
"நாட்டோட எல்லா மக்களுக்கு நெட்வொர்க் போய் சேரணும்னா ரீஜினல் ஃபாரஸ்ட், அப்றம் ரிமோட் வில்லேஜ்னு எல்லாத்தையும் நாம கவர் பண்ணணும்."
"எஸ்… வீ அக்ரி." என அனைவரும் தங்களின் செல்ஃபோன் டவர்களை எங்கெல்லாம் வைத்து, எப்படி எல்லாம் செயல் படுத்த வேண்டும் என்று கலந்து பேசி கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது தீஷிதனுக்கு ஒன்று நினைவு வந்தது. அதாவது படிக்காதவன் படத்தில் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் சொல்வாறே, " ஹைத்ராபத் உன்து, செக்கந்தராபாத் என்து. குன்டூர் உன்து, நெல்லூர் என்து. கடப்பா உன்து, மடப்பா என்து." என்ற காமெடி சீன் தான் அது.
எல்லாம் பெரிய பெரிய நிறுவனங்கள் தான். தொழிலில் போட்டிகள் பல இருந்தாலும், மக்களை சுரண்டி தின்பதில் அவர்கள் அடித்துக் கொள்வதே இல்லை. சண்டை வராது இருக்க இந்தியாவைப் பங்கு பிரித்து கொள்கின்றனர். எரியா வாரியாகப் பங்கீடு செய்யவே இந்த மீட்டிங்.
பெரிய பெரிய தலைகள் எல்லாம் பங்கும் பெரும் இந்த மீட்டிங்கிற்கு எப்படி தனக்கு அழைப்பு வந்தது என்ற ஆவல் தான் அவனை இங்கு வரவைத்தது. ஏனென்றால் அவன் இந்தத் துறைக்கு வந்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது. ஆனாலும் அவன் கண்ட வளர்ச்சி அளப்பரியது. அவனின்
சில மணி நேரத்திற்குப் பின் ஆலோசனைகள் முடிய, அனைவரும் கலைந்து சென்றனர். நான்கைந்து பேரை தவிர.
சம்பிரதாயத்திற்காகக் கூட யாரும் தீஷிதனிடம் பேசவில்லை. பேசக் கூடாது என்ற உத்தரவு. அதைப் பற்றியெல்லாம் அவனுக்குக் கவலையில்லை. பணமிருக்கிறது என்ற திமிரில் கொளுத்துப்போய் இருந்த அந்த முதலாளி முதலைகளைச் சுவாரசியமாகப் பார்த்தான் அவன்.
இங்கு அவர்கள் அவனை வர வைத்தற்கானக் காரணத்தை அவன் அறிவான். ஆனாலும் அதை அவர்களின் வாயால் கேட்க வேண்டும். அப்போது தான் ரிவென்ஜ் எடுக்க வசதியாக இருக்கும்.
'நானும் உங்கள மாதிரி வில்லன் தான். ' என்பது போல் கால் மேல் கால் போட்டுக் கெத்தாக அமர்ந்திருந்தவனின் முன் வந்து நின்றனர் அந்த நான்கு பேரும். வந்தவர்கள் அவனை மிரட்டத் தொடங்கினர்.
" எவ்ளோ எதிர்பாக்குற. பணமா… நிலமா… பொண்ணா… இல்ல மூணுமே வா.. " என்றான் ஒருவன்.
" எத்தன தந்தாலும் முடியாது." தீஷித்.
" இதோ பாரு இந்த இன்டெஸ்ரில எங்களப் பகச்சிட்டு உன்னால வளர முடியாது. வளர விடவும் மாட்டோம். மரியாதையா உன்னோட கம்பெனிய எங்க கம்பெனிகூட ஜாயின் பண்றது தான் நாங்க உனக்கு தர்ற ஒரே வழி. ம்… சைன் இட்." எனச் சில காகிதங்களைத் தீஷிதனின் முன் வைத்தான் சிராஜ் குப்தா.
"பண்ணிடலாம். ஆனா எனக்கு இன்னொரு வழியும் கண்ணுக்கு தெரியுதே." என்றபடி எழுந்து நின்றான் தீஷித்.
" என்னோட எல்லா பிஸ்னஸ் சீக்ரெட்டை உங்க கூட சேர் பண்ணிக்கிறதுலயும், என்னோட கம்பெனிய உங்க டெலிக்காம் கூட இணைக்கிறதுலயும் எனக்கு முழு சம்மதம்." என்றபோது மற்றவரின் முகம் மலர்ந்தாலும் சிராஜ் தீஷிதனை நம்பவில்லை.
ஏனெனில் யார் எவர் என்றே தெரியாது, பெரிய அளவிளானப் பணம், பக்க பலம் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த மிடில் க்ளாஸ் இன்ஜினியர், ஒரே வருடத்தில் புதிய டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்து, முக்கியமான செல்ஃபோன் நிறுவனங்களின் லாபத்தில் சிறு மாற்றத்தைக் கொண்டு வரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறான் என்றால், அவனின் திறமை எப்படி பட்டது என்று தெரியாத அளவுக்கு சிராஜ் ஒன்றும் முட்டாள் இல்லை.
தென்னிந்தியா முழுவதும் சிராஜின் நெட்வொர்க் என்றே சொல்லலாம். எனெனில் சிராஜ் தரும் செல்ஃபோன் சேவையில் தான் ஐந்து மாநிலங்களும் இயங்குகிறது. இந்தியாவில் தவிர்க்கவே முடியாத முக்கியமானப் பல நிறுவனங்களுக்குச் சொந்தக்காரன்.
சிராஜிற்குத் தீஷிதனின் இந்தத் திடீர் வளர்ச்சிக்கானக் காரணம் தேவை. அவனின் திறமை தேவை. எனவே அவனிடம் சென்று பிஸ்னஸ் பேசினான். தீஷிதன் மறுத்துவிட்டான். மறைமுகமாக மிரட்டியும் பார்த்து விட்டான். மசிய மறுக்கும் அவனைப் பணிய செய்யவே இங்கு வரவைத்துள்ளான், நேரடியாக மிரட்ட.
'இதுவும் புதுவித கட்டாப்பஞ்சாயத்து தான். ஆலமரத்தின் அடியில் அமர்ந்து இரு கும்பலையும் இரு பக்கமும் நிற்கவைத்து பொதுவான ஓரிடத்தில் வைத்து மிரட்டி அடித்து எழுதி வாங்குவது பழைய ஸ்டெயில்.
பல அடுக்கு கொண்ட கட்டிடத்தில், ஏசி ரூமில், நேருக்கு நேர் வைத்து அமரவைத்து உயிர் பயம் காட்டி பணிச் செய்வது நியூ ஸ்டெயில் போல. ' என நினைத்து தீஷிதனின் உதடுகள் எளனமாய் வளைய,
" என்ன வழி அது?." என்றான் சிராஜ், தீஷிதனின் கண்களை உற்று பார்த்த படி,
"அரசனுர் கேஸ்... அதுல இருந்து நீ தப்பிச்சா நானே வர்றேன் டில் பேச. தோத்திட்டா…" என்க, சிராஜின் கண்கள் அக்கினி சூவாளையாய் மாறின.
" உன்னோட கம்பேனிய என்னிதா மாத்திக்க எனக்கு தெரிஞ்ச மூனாது வழி… அரசனூர் கேஸ்.. இன்னும் சில மாசத்திலா தீர்ப்பு வந்திடும். அது உம்பக்கம் நிச்சயமா இருக்காது. மேல் முறையீடு செய்ய முடியாத அளவுக்கு ஸ்ராங்கானத் தீர்ப்பா அது இருக்க போது.
உன்னோட சாம்ராஜ்யம் அனாமத்த நிக்கும். அதுக்கு ஆதரவு தர என்னை விட்டா யாரும் இருக்க மாட்டாங்க. இருக்கவும் விட மாட்டேன்.
அதுனால உன்னோட நியூ இன்ட்ரஸ்ட்டிஸ்ஸ சுத்தி பாத்திட்டு போகலாம்னு வந்திருதேன். ஆமா இங்கு மொத்தம் எத்தன பேர் வெர் பண்றாங்க. இதோட சேர் ஹோல்டர்ஸ் யார் யாரு. ஃபோர்ட் ஆஃப் டைரக்டர்ஸ. " என அந்த வளாகத்தை விலை பேச, சிராஜ் கோபமாக அவனின் சட்டையைப் பற்றினான்.
"எங்க வந்து யார் கம்பெனிய வில பேசுற. I will show you hell while you are still alive…" அதாவது நீ உயிரோடு இருக்கும் போதே நரகத்தைக் காட்டிடுவேன், எனக் கோபமாக உறுமினான். சிராஜின் கரத்தை அசால்ட்டாக தட்டி விட்டவன்,
"நான் உனக்கு முன்னாடி அந்த நரகமாத் தான் நிறுத்தி வச்சிருக்கேன். கூடிய சீக்கிரம் எங்கிட்ட சிக்கி தவிப்ப. உயிரோட சிக்கி சின்னா பின்னமாவ." என மிடுக்காகச் சொன்னவன், அங்கிருந்து தன் கம்பீர நடையுடன் வெளியே சென்றான்.
சிராஜ், அவன் தலை மறையும் வரை கோபமாக நின்றவன், "இந்தர்... " என உச்ச சுரத்தில் கத்தினான். மற்றவர்கள் கலைந்து செல்ல, அந்த நாகேந்தர் மட்டும் முன் வந்தான். அவன் வலது கை… அடியாள்... எப்படி வேண்டுமாலும் சொல்லலாம்.
" நான் சொன்ன விசயம் என்னாச்சி?" எனக் கோபமாகக் கேட்க, பதில் சொல்ல பயமாக இருந்தது நாகேந்தருக்கு.
" Speak up…"
" ஸார்… நாங்க டிரெய் பண்ணோம். பட் முடியல." எனத் தயங்கி தயங்கி சிறிய குரலில் சொல்ல, அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் சிராஜ்.
" ஸ்கூல் படிக்கிற பிள்ள மாதிரி காரணம் சொல்லிட்டு இருக்க உனக்கு வெட்கமா இல்ல. சின்ன பொண்ண கடத்தீட்டு வர முடியாத அளவுக்கா உங்கிட்ட அடியாளுங்க இருக்காங்க! நீயெல்லாம் ஆம்பளன்னு சொல்லிக்காத. நீ என்ன பண்ணுவியோ எது பண்ணுவியோ தெரியாது. அந்த அரசனூர் கேஸ்ல தீர்ப்பு எனக்குச் சாதகமாக இருக்கணும். அதுக்கு அந்த கேஸ்ஸ போட்டவனே அதை வாப்பஸ் வாங்க வைக்கணும்.
நேத்து மொளச்ச காளான். அவெ வந்து வாய் பேசுற அளவுக்கு அந்த கேஸ் முக்கியமானதா மாறிடுச்சி. நான் அதுல ஜெயிக்கணும். அதுக்கு அந்தப் பொண்ணு வேணும். போங்க... அவள உயிரோட தூக்கிட்டு வாங்க.. " என நாகேந்தரனைப் பார்த்து கத்த, அவன் தலையசைப்புடன் வெளியே சென்றான்.
தன் அலுவலக அறைக்கு கோபமாக வந்தவன், தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு இரு கால்களையும் தூக்கி மேஜை மேல் வைத்தான். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க, அறையின் கதவு தட்டப்பட்டது.
" எஸ்… " எனக் குரல் கொடுக்க, உள்ளே நுழைந்தார் ஒருவர்.
" கேஸ் எந்த நிலைல இருக்கு?" என்றவன் குரலில் அத்தனை கடுமை.
" நம்ம பக்கம் தான் ஸார். அதுல எந்த டவுட்டும் வேண்டாம்." என்றார் அவர்.
"இதுவர எந்த கேஸ்ஸையும் இத்தன நாள் இழுத்தது இல்லயே மணி. இது மட்டும் ஏன்.. " என்றான் கேள்வியாக.
"ஸார் இதுக்கு முன்னாடி நம்ம மேல கம்ப்ளைண்ட் குடுக்கும் போதே கேஸ்ஸாகாம சரிக்கட்டுவோம்.. பட் இந்த முறை கேஸ் ரொம்ப ஸ்ராங்கா இருக்கு. நமக்கு எதிரா எல்லா எவிடென்ஸ்ஸையும் பக்காவா ரெடி பண்ணி வச்சிருக்காங்க. அத நாம வெளிய வர முடியாத படி பண்ணிட்டா கேஸ் நிக்காது.. " என்றார் அந்த மனிதன்.
அவர் தான் வக்கீல் மாசிலாமணி. சட்ட புத்தகங்களைக் கரைத்து குடித்தவர். சிராஜிக்குச் சட்ட ஆலோசகர். ஆண்டு ஒன்றிற்கு பல புகார்களைச் சந்தித்தாலும், பெரிய அளவில் எதுவும் மாறியது இல்லை. மாறிவிட்டதும் இல்ல.
தங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பினாலே அவர்களின் குரல்வளை நெரிக்கப்படும். பணமோ பொருளோ அவர்களின் ஆசையை நிறைவேற்றி கேஸ்ஸாகாது பார்த்துக் கொள்வர். இல்லையேல் போலிஸ்ஸையோ ரவுடிகளையோ விட்டு மிரட்டி பணியவைப்பர்.
ஆனால் இம்முறை சிராஜ்ஜின் மீது கம்ப்ளைண்ட் கொடுத்தவன் மிகவும் உறுதியுடன் இருக்கிறான், எனக்கு நீதி வேண்டும் என்பதில். ஏழு ஆண்டுகளாக நடக்கிறது அந்த வழக்கு. அது சிராஜின் மீது விழுந்த கருப்புள்ளியாகவே அவனின் வட்டாரங்களில் பேசப் படுகிறது.
" அந்தாளு கோர்ட்டுக்கே வரக்கூடாது. அவனோட வீக்னஸ் என்னன்னு விசாரிச்சிங்களா. "
" விசாரிச்சிட்டோம் ஸார். அந்தாளோட ஒரே வீக்னஸ், அந்தப் பொண்ணும் அவனோட குடும்பமும் தான். அது தான் அவனோட பலவீனம்.. அத உருத்தெரியாம அழிச்சிட்டா, விரக்தில கோர்ட்டுக்கு என்ன வீட்ட விட்டு வெளில கூட வர மாட்டான்.." என்க,
"விசாகன் கிட்ட சொல்லி அவளக் கவனிக்க சொல்லு." எனத் தன் ஃபோனில் நாகேந்திரனுக்கு உத்தரவிட்டிருந்தான். ஆனால் முடியாது போயிற்று.
"இப்ப அது பிரச்சன இல்ல ஸார். பிரச்சனை… சுடர்விழி கேஸ் தான்." என்க, சிராஜ்ஜின் விழிகள் கூர்மையின.
" சில மகளிர் அமைப்புங்க அந்தப் பொண்ணோட மரணத்துக்கு நீதி வேணும்னு வீதில இறங்கி போராடப்போறதா தகவல் வந்திருக்கு. அரசனூர் கேஸ்ஸ விட, சுடர்விழி கேஸ் ரொம்ப சென்சிட்டில் ஆனது. " என்க, சிராஜ் எளனமாய் சிரித்தான். அதை கண்டு மாசிலாமணியும் சிரித்து கொண்டே சென்றார்.
சுடர்விழியின் பெயரைக் கேட்டதும் உடல் சூடாகியது. கோபமும் ஆத்திரமும் வந்தாலும் அவள் மீதான மோகம் தலை தூக்க, இன்டர்காமை எடுத்து அவனின் பீஏவிற்கு அழைப்பு விடுத்தான். கதவைத் தட்டாது அவன் அழைத்தும் குதுகலத்தில் உடையைச் சரி செய்து தன்னைக் கவர்ச்சியாகக் காட்டிய படி வந்தாள் ஒரு பெண்.
" ஹே பேபி... " என்றபடி துள்ளி வந்தவளைகா கையில் அள்ளிக்கொண்டு தன் தனிப்பட்ட அறைக்குச் சென்றான், தன் உடல் சூட்டை தணிக்க.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..