அத்தியாயம்: 10
தான் சேர்ந்து வைத்த நீர் திவளைகளை மேகங்கள் கொட்டித் தீர்க்க உள்ளோம் என்ற அறிவிப்பைக் குளிர்ந்த காற்று மூலமாகவும், தன்னிடம் உள்ள கருமேகங்கள் உரசிய இடி முழக்கத்தினாலும், மின்னல் மூலமாகவும் பறை சாற்றிக் கொண்டு இருக்க, நிலவு மகள் வேறு பயந்து முகிலின் பின்னால் ஓடி விட்டாள்.
"ஐய்யோ… மழை அடிச்சி ஊத்தப்போது போல.. பஸ் பிடிக்கணும்னா மெயின் ரோட்டுக்கு போகணும். பேசாட்டிக்கி நான் கேப் புக் பண்றேன்." என ஃபோனை பார்க்க, அது உயிர் நீக்கும் நொடிகளை எண்ணிக்க கொண்டிருந்தது.
" ச்ச… வேலை மும்மரத்துல நான் இதைக் கவனிக்கவே இல்ல. இப்ப என்ன பண்றது." எனச் சாருலதா, பல அடுக்குகளைக் கொண்ட கட்டிடத்தில் பார்க்கிங்கில் நின்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
வருமானவரி தாக்கல் செய்யவேண்ய காலம் நெருங்குவதால் அவளின் வேலை பளு அதிகமாகவே இருந்தது. இன்று காலை அவளையும் மற்றொரு ஊழியரையும் அழைத்த அவளின் மேலாளர்.
" மிஸ் சாரு லதா, அண்டு மிஸஸ் ஹேமா, நீங்க இன்னைக்கி SRJ constructionக்கு போகணும்... அங்க அக்கௌன்ட்டென்ட் கணபதி தர்ற சில கணக்குளச் சரி பாத்து டேலி பண்ணிட்டு வரணும். " என்க, மறுக்க முடியாது இருவரும் அங்கு சென்றனர், ஹேமாவின் ஸ்கூட்டியில்.
வேலையில் நேரம் போனதே தெரியாததால் இருட்ட தொடங்கியதை இருவரும் கவனிக்கவில்லை. வரும் போது ஆட்கள் நிரம்பி இருந்த இடங்கள் இப்போது எம்டியாக காட்சி தந்தது. அனைவரும் பணி முடித்து வீடு திரும்பியிருந்தனர்.
"ஸாரி ம்மா லேட்டாகிடுச்சி. நீங்க எப்படி போவிங்க? நான் வேண்முனா ட்ராப் பண்ணவா?" என அவர் கேட்க, இருவரும் மறுத்து ஹேமாவின் ஸ்கூட்டியைத் தொட்டால் அது ஸ்டாட் ஆகவில்லை. நேரம் செல்ல செல்ல காற்று குளிர்ந்து வீசத் தொடங்கியது. ஹேமா தன் கணவனுக்கு ஃபோன் செய்து வரவைத்து அவருடன் சென்று விட்டாள்.
"எல்லாருக்கும் நல்ல நல்ல புருஷனா கிடைக்கிறாங்க.. எனக்குன்னு தான் ஒருத்தே இருந்தானே. பத்து நாள் புருஷெ. ச்ச... பையூக்கு கால் பண்ணுவோம்." எனத் தன் தோழிக்கு அழைத்து விசயத்தை சொல்ல,
" ஒரு அரமணி நேரம் வெயிட் பண்ண முடியுமா சாரு?" என்றாள் பைரவி..
"ஏன்டி? டிராஃபிக்கா இருக்கா!"
"இல்ல… நான் KFC வந்திருக்கேன். இப்பதா பர்கர் ஆர்டர் குடுத்திருக்கேன். பதினஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ண சொன்னாரு. அதுக்கு பத்து நிமிஷம் ப்ளஸ் நான் அதச் சாப்பிட பத்து நிமிடம். அப்றம் நீ இருக்குற இடத்துக்கு வர பத்து நிமிசம். மொத்தும் முப்பது நிமிஷம்.. " என்றவளைச் சாரு மானாவாரியாகத் திட்ட, வருவதாகச் சொல்லி வைத்தாள் பைரவி.
அரைமணி நேரம் தாண்டி பத்து நிமிடங்கள் சென்று விட்டது. அவளைக் காணவில்லை. மழை மொழிவதற்காக அறிகுறிகள் தெரிய, ஆட்டோ பிடித்தாவது செல்ல நினைத்து சாலைக்கு வந்தாள். ஆள் நடமாட்டம் இல்லை.
"இந்த ரோட்ட பாத்தாலே பயம்மா இருக்கே. மூவி, டீவி சீரியல்லலாம், எல்லா பயங்கரமான வேலையும் இந்த மாதிரி ரோட்டுல தான் நடக்கும்." என வாய்விட்டு புலம்ப,
" மிஸ் சாருலதா… கரெட்டா." என்ற குரல் அவளுக்குப் பின்னால் இருந்து கேட்டது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனைக் காலையில் தான் பார்த்தாள். அவனின் அலுவலகத்தில் தான் மாலை வரை இருந்தாள். அதனால் பயம் நீங்கி புன்னகை படர்ந்தது.
"மிஸ்டர் தீஷிதன்." என்றாள் முகம் கொள்ள புன்னகையுடன்.
"ஏன் இன்னும் இங்கயே நிக்கிறீங்க. ட்ராப் பண்ணட்டுமா? " எனப் புன்னகையுடன் கேட்க, அவனுடன் செல்லும் ஆவல் வரத்தான் செய்தது. ஆனால், நான் இவனுடன் சென்று விட்டால் பைரவி தேடுவாள். துப்பாக்கியைத் தூக்கி மண்டையில் வைத்து ட்ரிகரை அழுத்தி விடுவாள். அதனால் அவனிடம் தோழியின் வருகையைப் பற்றி கூறி, அவனைச் செல்ல சொன்னாள்.
"Are you sure… உங்க ஃப்ரெண்டு வந்திடுவாங்களா?"
"கரெட்டா வந்திடுவா ஸார்… Don't worry.. " என்க, அவன் தன் காருக்குள் சென்றான்.
முப்பத்தி இரண்டு வயது இளைஞன் அவன். கம்பீரமான உருவம். எங்கும் அதிக சதை போடா அந்த க்ரேக்க சிலையைக் கண்டவர்கள் சொக்கித்தான் போவர். முதலாளி என்ற பந்தா இல்லாது, கடைநிலை ஊழியர்கள் வரை இதமாய்ச் சிரிப்புடன் அவன் பழகும் விதத்தைக் கண்டவளுக்கு, 'நாமலும் அந்த வேலைய விட்டுட்டு இவெங்கிட்ட வேல பாத்தாதத்தா என்ன?' என்ற எண்ணம் தோன்றியது.
கோபம் என்பது சிறிதும் இன்றி அவனின் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் திறமையைக் கண்டவளுக்கு, அவனின் சிரித்த முகம் பிடித்து விட்டது. அவன் செல்வதை ரசித்து பார்த்தாள். அவன் கைக் கோர்த்து நடந்தால் எப்படி இருக்கும் என்று எழுந்த தன் எண்ணங்களுக்குத் தடை போட்டவள், அவனை சைட் அடித்தாள்.
தீஷிதன் தன் கம்பேனி கணக்கு வழக்கு பார்க்க வந்த பெண், தனியா நிற்கவும் உதவி வேண்டுமா எனக் கேட்க வந்தான். அவள் மறுப்பு சொன்னதும் காரை ஸ்டார்ட் செய்தான். பின் என்ன நினைத்தானோ அவள் சென்ற பின் செல்லலாம் என ஆஃப் செய்து விட்டு மடிக் கணினியை விரித்து அதில் ஒரு பார்வையும், தனியா நின்றிருந்தது சாருவின் மீது மற்றொரு பார்வையையும் பதித்திருந்தான்.
தன் பாதுகாப்பிற்காகக் காவல் காத்த தீஷிதனின் செயல் சாருவைக் கவர்ந்தது. வெற்று சாலையைப் பார்ப்பதும் பின் சற்று தள்ளி காரில் அமர்ந்திருக்கும் தீஷிதனைப் பார்ப்பதுமாக இருக்க, அவளின் முன் வந்து தன் ஸ்கூட்டியை நிறுத்தினாள் பைரவி.
ஹெல்மெட் அணிந்து ஆண் போல் ஜெர்கினும் ஜீன்ஸ்ஸூமாக, ஹாரனை அலறவிட்டு கொண்டு மேலே ஏற்றுவது போல் வந்த பைரவியைப் பார்த்த சாரு அலறினாள். தீஷிதன் காரைவிட்டு வேகமாக இறங்கினான், சாருவைக் காப்பாற்ற. ஆனால் அது தேவையில்லாதச் செயல் என அறிந்தவன், காரில் சாய்ந்து கொண்டு இருவரின் மீதும் கவனத்தைச் செலுத்தினான்..
"இடியட்… பயந்திட்டேன்.. ஏண்டி லேட்.. " எனக் கேட்டு அவளை அடித்தாள் சாரு.
"நான் லேட் இல்ல.. அந்த பர்கர் கடைக்காரெந்தா லேட் பண்ணிட்டான். போதாததுக்கு ஊர்வலம் போற மாதிரி எல்லா காரும் வரிசையா போக, கிடைக்கிற கேப்ல பாம்பு மாதிரி புகுந்து புகுந்து வித்தைக் காட்டீட்டு வர்றதுக்கு லேட் ஆகிடுச்சி. " என்றவள் ஹெல்மெட்டை கலட்டி சாருவின் தலையில் கவுத்தினாள்.
" எதுக்குடி... "
"நீ தான டிரைவ் பண்ண போற. ஹெல்மெட் போடமா ஓட்டுனா 1000 ரூபா பைன் தெரியுமா?"
"தெரியும்... ஆனா லைசன்ஸ் இல்லாம ஓட்டுனா எவ்வளவுன்னு தெரியுமா? "
"ஒரு போலிஸ் அதிகாரியான எனக்கு தெரியாதா என்ன? ஒரு பத்து நிமிஷம் தான். நான் இந்த பர்கர சாப்பிடுற வர. அப்றம் நான் வாங்கிக்கிவேன். " என்க, சாரு முறைத்தாள்.
"ஓகே, அப்ப இப்பவே சாப்பிட்டுறேன்." என்றவள் நடு ரோடு என்றும் பாராது, கவரை பிரித்தாள். சாருவிற்கும் ஒன்றை நீட்டினாள். அதை வாங்கிய சாரு பிரிக்கவில்லை. சாருவிற்குத் தீஷிதன் முன் உண்ணவா எனச் சங்கடப்பட்டு அவனைப் பார்த்த படி கவரைப் பார்க்க, அவன் சுவாரஸ்யமான இவர்களை பார்த்தான். பார்வை பைரவியின் மீது நிலைத்திருந்தது.
டாம் கேர்ள் என நினைத்து புன்னகையும் வந்தது.
ஒவ்வொரு கடியையும் மெல்ல சுவைத்து ரசித்து, உதடுகளில் ஒட்டிய சாஸ்ஸையும் விட்டு வைக்காது விரல் சூப்பி உண்டு முடித்தவள், சாருவின் பிரிக்காத கவரை பார்த்து,
"வேண்டாமா.. " எனக் கேட்டு அதையும் வாங்கி உண்டாள். கன நேரத்தில் இரண்டையும் காலி செய்தவள் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு, " வா போலாம்.." என்க, சாரு 'பாவி மக... என்னோடதையும் சேத்து முழுங்கிட்டா. ' எனப் பொருமிய படியே ஏறி அமர்ந்தாள்.
தன்னைக் கடந்து செல்லும் இரு மகளிரையும் பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ! தன் காரை ஸ்கூட்டி சென்ற பாதையில் ஓட்டினான்.
மழை தூர தொடங்கியது. ஹெல்மெட்டைச் சாருவின் கையில் குடுத்தவள், ஸ்கூட்டியை வளைத்து வளைத்து மழை தந்த இதத்தை ரசித்துக் கொண்டே யாருமற்ற சாலையில் ஓட்ட, தீஷிதனுக்குள் புது உணர்வு பிறந்தது. வீடு வரை இருவரையும் பின் தொடர்ந்து அவர்கள் வீட்டினுள் செல்வதைப் பார்த்து விட்டு தான் சென்றான்.
வீட்டுக்குள் வந்ததும் சாரு பைரவியைத் திட்ட தொடங்கினாள்.
"என்னோடத சேத்து சாப்பிட்டுயே! இது உனக்கு செமிக்குமா?" எனக் கேட்டு அடி மொத்த,
"நீ சாப்பிடல அதான் நான் சாப்பிட்டேன்."
"நான் வீட்டுக்கு வந்ததும் சாப்பிடலாம்னு நினைச்சேன்." என்றவளை ஏற இறங்க பைரவி பார்க்க,
"நடு நோட்டுல நின்னு சாப்பிட வேண்டாம்னு நினைச்சேன்." என்னால் மெல்லிய குரலில்.
" ஏன் இந்த திடீர் சீன்னு. எத்தன மொற அப்படி சாப்பிட்டிருக்கோம்.." எனப் பைரவி சந்தேகமாக கேட்டாள்.
"அது அவரு அங்க தான் இருந்தாருடி. அவரு முன்னாடி எப்படி ஆன்னு வாயத்திறக்கன்னு சாப்பிடல. ஆனா நீ எனக்காக வச்சிருந்திருக்கணும்.." எனக் குற்றம் சுமத்தினாள்.
" யாரு டீ அவரு?" என ஆவலுடன் கேட்டாள் பைரவி.
"அது… அது... " எனச் சிறு தயக்கத்துடன் தீஷிதனைப் பற்றிக் கூறினாள்.
"ஆளு ஜாலி டைப்பா?"
"ம்… காலைல இருந்து பாத்திட்டேத்தான் இருந்தேன். இதுவர நான் பாத்த CEO வ விட அவரு வித்தியாசமா இருந்தாரு. டீ காஃபி லன்ச் கூட டயத்துக்கு வந்திடுது.. ஆறு மணிக்கு மேல அந்த பில்டிங்ல ஆளே இல்ல. டயம், அத கரெக்ட்டா கீப்பப் பண்ணானாரு." எனப் புகழாரம் சூட்ட,
"அப்ப இன்டோ குடுடி. லைஃப் போரிங்கா போகுதேன்னு நினச்சேன். இப்படி ஒரு ஆள் கம்பெனி குடுத்தா நல்லாத்தா இருக்கும்." என்றாள் உற்சாகமாக, பின் தோழியைப் பார்த்து,
"பிடிச்சிருக்கா சாரு உனக்கு? " எனக் கேட்க,
"லூசா நீ! " என்றவளின் குரலில் சிறு வெறுமை.
" ஏண்டி இந்த சோக கீதம்?"
"வீட்டுல மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்க. இன்னைக்கி மட்டும் நாலு பேர் கால் பண்ணாணுங்க. மீட் பண்ணலாமான்னு கேட்டு."
" சாரு, உன்னோட ஃபேரன்ஸ் அவங்க கடமையத்தான செய்றாங்க. பத்து நாள் வாழ்ந்த ஒருத்தனுக்காக மீதி வாழ்க்கைய வேஸ்ட் பண்ண போறியா?" என்க, சாரு அமைதியாக இருந்தாள்.
"அவன லவ் பண்றியா சாரு? " என்ற பையூ, அவள் முறைத்த முறைப்பில் அடங்கி விட்டாள்.
"அப்ப ஏன் மேரேஜ்க்கு ஒத்துக்க மாட்டேங்கிற. அவ்ளோ ஸ்வீட் மெமோரிஸ் இருந்ததா உங்களுக்குள்ள. "
"அந்த சனியெ மூஞ்சி மட்டுமில்ல பேரு கூட எனக்கு நியாபகம் இல்ல. அவெங்கூட ஸ்வீட் மெமோரிஸ்... ச்சீ…
எனக்குப் பிடிக்கல பையூ.. வர்ற ஒவ்வொருத்தெங்கிட்டையும் என்னோட பாஸ்ட்ட சொல்லி அவனும் அவெங்குடும்பமும் என்னைப் பரிதாபமா பாக்குறது, அக்கறப்படுறேங்கிற பேர்ல குத்தி குத்தி பேசுறதுன்னு எதுவுமே பிடிக்கல. "
"அப்ப இப்படியேவா இருக்க போற… தனியா.. ஒண்டியா..."
"எவனோ செஞ்ச தப்புக்கு நான் ஏன்டி பட்டுப்போய் நிக்கணும். கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா அது என்னோட மனசு சொல்ற ஒருத்தனுக்கு தான். அவனப் பாக்குறதுக்கும் பழகுறதுக்கும் டயம் தான் கேக்குறேன். ஏன்னா ஒருக்க சூடு பட்டுட்டோம், அடுத்த மொற கவனமா இருக்கணும்ல. " என்க,
பைரவி புருவங்களை உயர்த்தி "பெரிய பெரிய கொள்கையெல்லாம் வச்சிருக்காய்யா!" எனக் கேலி செய்து தலையை ஆட்டினாள்.
"நம்ம மது அண்ணா மாதிரி ஒருத்தெ கிடைச்சாருன்னா கூட ஓகே தான்.. " என்றாள் சாரு, பைரவியை சைடு பார்வைப் பார்த்த படி.
"யாரு அந்தத் தயிர் சாதம் மாதிரியா? அதுக்கு நீ கடைசி வர வாழா வெட்டியாவே இருந்திடலாம். அவெங்கூடலாம் குடும்பம் நடத்தணும்னா அதுக்கு ஸ்பெஷல் டெலண்ட் தேவ. நீ இந்த உலகத்த விட்டு வேற ஒரு உலகத்துல வாழணும். அந்த உலகம் உன்னோட இன்ஸ்டா கிராம் உலகம் மாதிரி கன்ராவியா இருக்கும்.
அதச் சகிச்சிக்கவும் முடியாம, அத விட்டு வெளில வரவும் முடியாம, பூன சுவத்து மேல ஏறி உக்காந்த கதையா மாறிடும் உன்னோட வாழ்க்கை. அதச் சமாளிக்க முடியாது உன்னால. அவன மாதிரி ஒருத்தன நீ கல்யாணம் பண்ண நினைச்சா... நானே உன்னை வெட்டிப் புதச்சிடுறேன். " என வில்லத்தனமாகச் சொல்ல,
"அண்ணன திட்டாத டி. அவரு ரொம்ப நல்லவரு." என மதுசூதனனுக்கு சப்போட்டாக சாரு பேச,
" அவெ… நல்லவே..
சரி தான்.. அந்த நல்லவெ பண்ண வேல என்னென்னு தெரியுமா உனக்கு? நேத்து நைட் ஒரு பொண்ண கூட்டீட்டு வந்து அவங்கூட தங்க வச்சிருக்கான். "
"என்னடி உலறுற?"
"நான் சொன்னா நம்ப மாட்டா. நம்ம ராக்கி பாய்க்கு ஃபோன் பண்றேன். நீயே கேளு." என்றவள் ராக்கிக்கு அழைப்பு விட்டுத்தாள்.
"சொல்லும்மா விஜய சாந்தி. இப்ப யார பறந்து பறந்து அடிக்க ப்ளான் போட்டுட்டு இருக்கீங்க. " ராக்கி.
"சத்தியமா உங்கள இல்ல… அண்ணா… " என்க, அந்த பக்கம் கீச் என்ற சத்தத்துடன் கார் நிற்கும் ஓசை கேட்டது.
" பைரவி... நீ என்ன வேண்ணாலும் சொல்லு, நான் தாங்கிப்பேன். அண்ணேன்னு மட்டும் கூப்பிடாதம்மா. பயம்மா இருக்கு." என நெஞ்சில் கை வைத்துக் கொண்டு சொல்ல,
"ராக்கி அண்ணா இவ நம்ம மது அண்ணனாவப் பத்தி தப்பு தப்பாச் சொல்றா." எனச் சாரு முறையிட்டாள்.
" ஏய் உன்னையும் தான், எத்தன தடவ சொல்லிருக்கேன், என்னை அண்ணான்னு கூப்பிடாதன்னு. " எனச் சாருவை அதட்டினான்.
"ஏண்ணா.. "
"அழகானப் பொண்ணுங்க அத்தான்னு தான் கூப்பிடணும். அண்ணான்னு இல்ல.."
" அப்ப சாருவ அழகான பொண்ணுன்னு சொல்றீங்களாண்ணா?" பைரவி..
"அதுல என்ன சந்தேகம். சாரு எப்பயுமே என்னோட மனசுக்கு இதமானச் சாத்துக்குடி சாறு தான்.. " என்க, இருவரும் சேர்ந்து அவனைத் திட்டினர்.
இப்படியே பேசி உண்மையை சொல்லாமல் இருக்க போகிறானா.. அல்லது ஓட்டை வாய்ப் போல் உலறிக் கொட்ட போகிறானா?
அப்படிச் சொன்னால் மதுவின் கதி…

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..