அத்தியாயம்: 11
"என்ன ராக்கி பாய் சொல்றீங்க! இதெல்லாம் உண்மையா?" என்று சாரு ஆச்சரியமாக, ஹஸ்கி வாய்ஸில் கேட்டாள்.
" எனக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்திடுச்சி சாறு. அவெ அந்தப் பொண்ணுக்கு நம்ம பைரவியோட சுடிதார எடுத்துக் குடுத்தான். அந்தப் பிள்ளையும் அவெ சுட்ட சப்பாத்தி நல்லாருக்குன்னு போற போக்குல ஒரு குண்ட தூக்கிப் போட்டு திரும்ப திரும்ப வாங்கி சாப்பிடுது.
நான் போய் பஸ் ஏத்தி விடுறேன்டான்னு சொன்னேன். ஆனா எம்பேச்ச கேக்காம அவனே கார எடுத்தான். விட்டா மதுர வர அவனே கொண்டு போய்விட்டு விருந்து சாப்டுட்டு வந்திருப்பான். அந்தப் பொண்ணு தான் பஸ் மட்டும் ஏத்தி விடுங்க போதும்ன்னு சொல்லி ஏறி ஓடிடுச்சி. துணைக்கி நம்ம காளியோட அக்காவ அக்கரையா அனுப்பி விட்டான்னா பார்த்துக்கங்க." என்றவன் கடைசி வார்த்தையைச் சோகமாக சொன்னான்.
" ராக்கி பாய் குரல்ல ஏதோ ஒரு காண்டு தெரியுற மாதிரி இருக்கே!" என்றாள் பைரவி சந்தேகமாக.
காண்டு தான்… காண்டு தான்... ஏன்னா பஸ் ஏறும் கடைசி நொடி வரை கூட அவனைத் திருப்பி பார்க்க வில்லை தாமரை. மதுவுடன் மட்டுமே பேசி விட்டு சென்றாள் பெண். அது தான் நம்ம ராக்கி பாயை கடுப்பாக்கி இருக்க வேண்டும். பைரவியிடம் போட்டு கொடுக்கவும் வைத்திருக்க வேண்டும்.
" ஏய்! நான் உம்புருஷன பத்தி சொல்ல வந்தா.. நீ என்னை… உங்கண்ணனையே சந்தேகப்படுற. உன் போலிஸ் புத்திய எங்கிட்ட காட்டுற பாத்தியா." ராக்கி.
"இதுவரைக்கும் காட்டல. இப்ப கேக்குறேன். யார் அந்தப் பொண்ணு? "
"பேரு செந்தாமரை செல்வி. பேரு மட்டுமில்ல. ஆளும் தாமரை மாதிரி தான் அழகா இருப்பா. குண்டு குண்டுன்னு கண்ணு, இருக்குறதே தெரியாத மாதிரி மெல்லிச்சான புருவம், வட்ட முகம், அவளோட கன்னத்தில அங்கங்க சின்ன சின்ன பரு, இந்த ஆப்பிள் பழத்து மேல வாட்டர ஸ்ப்ரே அடிச்சி விட்ட மாதிரி அழகா இருந்துச்சி." என ரசனையுடன் வர்ணித்துக் கொண்டே செல்ல,
"ராக்கி பாய்! ரசிக்கிறீங்களோ!" என்றாள் சாரு. அந்தப் பக்கம் பதில் வரவில்லை.
" ராக்கி பாய் வெட்கமா?" பைரவி.
"எஸ்..."
" ஊரு மதுர ஓகே. வேற என்னென்ன தெரியும். எப்படி உங்க கிட்ட வந்து சேந்தா. அதைச் சொல்லுங்க.. " என்றவளுக்கு நேற்று இரவு நடந்ததை விலாவாரியாக சொல்லி,
" அது பேரத்தவிர குடும்பத்த பத்தி எதுவும் சொல்லல. மதுர… அரசனூர்... காலேஜ்ஜி… அது மட்டும் தான் டீடெயில்லு.. " எனச் சோகமாகச் சொன்னான்.
"இது போதுமே, ஆள கண்டு பிடிச்சி உங்க முன்னாடி கூட்டி வர. " என்று சாரு சொல்ல, உற்சாகமானான் ராக்கி.
" உன்னால அவளக் கூட்டீட்டு வர முடியுமா சாறு.. " என ஆவலுடன் கேட்டான்.
" எங்களோட ராக்கி பாய்க்காக நானும் பைரவியும் எது வேணும்னாலும் செய்வோம். சரி தான பையூ." எனத் தோழியை திரும்பி பார்க்க, பைரவி யோசனையில் இருந்தாள்.
" இதுவர எப்படியோ! இனி அந்தப் பொண்ணு கிடச்சா சந்தோஷமா வாழலாம்னு மனசுல தோணுது. பாக்கலாம் நமக்குக் கல்யாண ராசி இருக்கா இல்லையான்னு. "
"பாய், நீங்க கவலையே படாதீங்க. நான் பாத்துக்கிறேன். " என்ற பைரவி,
" எனக்கு அந்த பர்ஸ் வேணும் ராக்கி பாய்." என்றாள்.
"எதுக்கு பையூ?"
" கடந்த ரெண்டு வாரமா எங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க எல்லாரும் ஊருக்குள்ள புதுசா நுழைஞ்சிருக்கிற போதை கும்பல தேடிட்டு இருக்கு. அந்தக் கும்பல் தான் உங்க லோட்டஸ்ஸ கிட்னாப் பண்ணிருக்குமோன்னு சின்ன சந்தேகம்.
அவனுங்க யாரு என்னன்னு இதுவர எந்த க்ளூவும் கிடைக்கல. நீங்க சொல்ற அந்தக் கோலமாவ பாத்தா, நாங்க தேடுறதும், நேத்து நீங்க அடிச்சிப் போட்ட ஆளுங்களும் ஒரே கேங்கா இருக்கானு தெரிஞ்சிக்கலாம்."
" அவனுங்களப் பிடிச்சி குடுத்து நீ புரமோஷன் வாங்கிப்ப. சரியா பையூ!"
"எஸ்... எத்தன நாளைக்கி தான் அடுத்தாளுக்கு சல்யூட் அடிக்கிற சப்இன்ஸ்பெக்டராவே இருக்குறது. நமக்கும் யாரது சல்யூட் அடிச்சா நல்லாத்தான இருக்கும். அதுக்கு அந்த ஸ்மெக்லிங் கேங்க கண்டு பிடிக்கணும். நேத்து அடிவாங்குனது அவனுங்களான்னு உறுதி படுத்த அந்தக் கோலமாவு வேணும் பாய் எனக்கு."
"ஓகே… அப்ப நாளைக்கி காலைல நம்ம ஜிம்முக்கு வந்திடு." என்க, பைரவிக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. ஏனெனில் அங்கு தான் மது இருப்பான்.
தினமும் காலை உடற்பயிற்சி செய்யாது அவனின் நாட்கள் தொடங்குவதே இல்லையே. மாலையிலும் அப்படித்தான். சில நாட்களாக அந்த ஜிம்மில் பைரவியும் சேர்ந்திருந்தாள்.
எக்ஸஸைஸ் செய்ய அல்ல. கணவனை சைட் அடிக்க. வியர்வை ஊற்றி ஓடும் அவனின் திடகாத்திரமாக உடலையும் அவன் முகம் காட்டும் பாவனையையும் ரசித்துக் கொண்டே த்ரெட்மில்லில் நடப்பாள். ஆனால் இருவரும் பிரிந்து இருக்கும் இந்த ஆறு மாதத்தில் அவன் செல்லும் எந்த இடங்களிலும் அவளை விடக்கூடாது என செக்யூரிட்டியிடம் ஸ்டிட்டாக சொல்லி விட்டான்.
ராக்கி பாய் வரச் சொல்கிறான் என்றால் அவன் பார்த்துக் கொள்வான் எனக் கணவனை காண வழி கிடைத்ததை எண்ணி மனம் துள்ளிக் குதிக்க, உறங்க சென்றாள் பெண்.
உறக்கம் என்பது பலருக்கு கிடைக்காத வரமாக மாறியிருக்கிறது இந்த போட்டி நிறைந்த உலகில். அந்த வரம் வேண்டி விழி மூடிக்கிடந்தவனின் விழிகளில் வந்து நின்றாள் மங்கை.
உதடுகள் புன்னகையை சிந்த, மூடிய கண்களுக்குள் வந்தவளுடன் உரையாடத் தொடங்கியிருத்தான் ஆடவன்.
" இதுவர யாரும் என்னை இவ்ளோ டிஸ்டப் பண்ணது இல்ல."
"எதுக்கும் தொடக்கம்னு ஒன்னு இருக்கும்ல."
"எஸ்.. என்னோட தொடக்கம்.. அது நீ தான்.. "
"ஹாஹாங்.. "
"எனக்கு கேர்ள்ஸ் கிட்ட பேசும் போது தடுமாற்றம் வந்தது இல்ல. பட், உங்கிட்ட பேச நான் வார்த்தைகள தேடிட்டு இருக்கேன். எனக்கு அது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. யாரு நீ? " என்ற கேள்வியை நேரில் சந்திக்கும் போது கேட்டிருந்தால் பதில் இருந்திருக்கும். ஆனால் கானல் நீராய்க் கனவில் தோன்றியவளிடம் கேட்டால் பதில் எப்படி வரும்! சட்டென கண் திறந்தவன், தன் பீஏவிற்கு அழைப்பு விடுத்தான்.
" ஸார்.. " எனப் பதறிப்போய் அந்த அழைப்பை எடுத்தான் சர்வேஷ். இரவு ஒரு மணிக்கு வரும் அழைப்பு. அதுவும் முதலாளியிடம் இருந்து வரும் அழைப்பு. பதட்டம் இருக்கத்தானே செய்யும்.
"கூல் டவுன் சர்வேஷ். நத்திங் சீரியஸ்." எனப் புன்னகையுடன் கூறினான் தீஷிதன். பின்,
"I need a favour.. நேத்து ஒரு பொண்ணு நம்ம அக்கோன்ஸ் செக் பண்ண வந்தாங்கள்ல."
"எஸ் ஸார். பட் வந்தது ரெண்டு பொண்ணு."
"யா… ஐ நௌ… எனக்கு வேண்டியது சாருலதா. " என அவளின் இருப்பிட விவரத்தைச் சொல்லி,
"எனக்கு ஃபுல் டீட்டெய்ல்ஸ் வேணும். " என்க, சர்வேஷ் ஒரு கணம் யோசித்தான். ஏனெனில் தீஷிதன் இதுவரை பெண்களின் மீது ஆர்வம் காட்டியது இல்லை. எத்தனையோ பெண்கள் அவனிடம் நேரடியாகவே திருமண ஆசையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சிலர் அவன் மீதான இச்சையைப் பகிரங்கமாக கூறி அழைக்கவும் செய்திருக்கின்றனர்.
ஆனா போதும் யாரையும் நெருங்க விடாதவன், நெருங்கியும் செல்லாதவன் இப்போது ஒரு பெண்ணை பற்றி கேட்கிறான். ஏன் என்று யோசித்தவன்,
"நாளைக்கி மார்னிங் உங்க டேபிள்ல மிஸ் சாருலதா பத்தின இன்பர்மேஷன் இருக்கும் ஸார்." என்றான்.
"சாருலதாவோடது மட்டுமில்ல. கூட வேற ஒரு பொண்ணு இருந்தது. **** ஸ்கூட்டர் நம்பர். அந்தப் பொண்ணோடதும் வேணும். " என்க, அவன் சரி கூறியதும் ஃபோன் அணைத்தான் தீஷிதன்.. மனம் பைரவியிடம் நிலைத்து நின்றது. ‘டாம் கேர்ள்.’ என்ற படி மீண்டும் கண்களை மூடி காட்சியாய்த் தெரிந்த அவளுடன் பேசத் தொடங்கினான் தீஷித்.
காலை ஏழு மணி..
lat pull down
அதிக எடை கொண்ட சில கற்களை ஒரு முனையில் கட்டி, அதன் மறு முனையில் சைக்கிள் ஹண்ட் பார் போல் பிடி வைத்திருப்பர். சேரில் அமர்ந்து அந்த பாரை இரு கரங்களாலும் பிடித்து இழுக்க வேண்டும். அது கைகளை மட்டுமல்ல உடலில் மேல் பகுதி அனைத்தையும் வலு சேர்க்கும்.
அந்த இயந்திரத்தில் தான் மது அமர்ந்து கொண்டிருந்தான். உடலில் வியர்வை வடிய, அவ்வ போது அதைத் துடைத்துக் கொண்டு நேரத்தைப் பார்த்தான். ஒவ்வொரு இயந்திரத்திற்கும் பத்து நிமிடங்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாது சீரான இடைவெளி விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிதானமாக செய்வான்.
அவனின் அருகில் இருந்த ராக்கியும் நேரத்தைப் பார்த்தான்.
"போலிஸ்காரனுங்க எல்லாம் முடிஞ்சதுக்கு அப்றம் தான் ஜீப்ப தூக்கிட்டு வருவாங்கன்னு சொல்றது சரியாத்தான் இருக்கும் போலயே.." என நினைத்து கொண்டு, வாசலையும் கடிகாரத்தையும் பார்த்த படி இருந்தான் அவன்.
"என்ன டா பாக்குற. செய்டா ஒழுங்கா. " என மது அவனை அதட்ட, 'இதோ..' என்றவன் மதுவைப் போல் பயிற்சி செய்ய, பைரவி வாட்சன் மேனுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள். அவளைத்தான் உள்ளே விடக்கூடாது எனச் சொல்லி இருக்கிறானே. எப்படி விடுவான் அவன்.
"ச்ச... இந்தத் தயிர் சாதத்துக்கு எவ்வளோ திமிரு இருந்தா என்னைய உள்ள விடக்கூடாதுன்னு சொல்லி வச்சிருப்பான். வர்றேட்டா, உன் பைக்ல ப்ரேக் வயர பிடிங்கி வைக்க. " என்றவள் நிஜமாகவே அவனின் பைக்கின் அருகில் சென்று ஃபுல் டேங்க் இருந்த பெட்ரோலை இல்லாமல் செய்து விட்டுத் தான் ராக்கியை அழைத்தாள்.
வந்து அவன் வாட்ச் மேனைத் திட்டி விட்டு பைரவியை உள்ளே அழைத்துச் சென்றான்.
"ஏன் லேட்.. "
"எர்லி மார்னிங் எப்படி எந்திரிக்க முடியும்." என்றவளை முறைத்தான் அவன்.
"மணி எட்டு இது உனக்கு எர்லி மார்னிங்கா. உன்னை என்னமோ நாலு மணிக்கே எழுப்பி விட்டது மாதிரி சிலுத்துக்கிற. "
"எனக்குப் பத்து மணி தான் மார்னிங். அதுக்கு முன்னாடி எல்லாம் எர்லி மார்னிங் தான். எங்க ஏன் ஆளு. காணும்… " என மதுசூதனனினைத் தேடினாள். கண்டு விட்டவள் வேகமாக சென்று அவனுக்கு எதிரில் இருந்த fitness cycle என்ற சைக்கிளில் ஏறி அமர்ந்து கொண்டு ஓட்டத் தொடங்கினாள்.
காலை வேளையில் அவளை கண்டது கடுப்பு. பின் அவள் அணிந்திருந்த உடையை கண்டது அதீத கடுப்பு. பொத்தென அந்த ஹன்ட் பாரை விட்டவன் எழுந்து சென்று விட்டான். முகத்தில் இருந்த கோபத்தை மனைவியால் உணர முடிந்தது. அது அவளையும் சோகத்தில் தள்ளியது.
"ஏன் அவெ கோபமா போறான்." என்றான் ராக்கி அவளை போலவே ஒரு சைக்கிளில் ஏறிக் கொண்டு,
"நான் போட்டிருக்குற டிரெஸ் அவருக்குப் பிடிக்கல.. " என்றாள் சோகமாக.
"ஏன் இதுக்கு என்ன குறை. ஜீம்முக்குப் போகும் போது இப்படித்தான டிரெஸ் பண்ண முடியும். இங்கயும் சேல கட்டீட்டா வர முடியும். சரியான லூசு இவெ." என நண்பனை திட்டினான் ராக்கி.
த்ரீ பை ஃபோர்த் என்று சொல்லப்படும் கணுக்கால் அளவுவரை இருக்கும் ஜீன்ஸ் பேண்ட், கருப்பு நிறத்தில் உடலை இறுக்கி பிடித்த டீ சர்ட், அதை டக்கின் செய்து தன் இளமையை பிறர் பார்வையில் இருந்து மறைக்க லூசா ஒரு நீள கோர்ட். அது ஆபாசமாகத் தெரியவில்லை. ஆனால் ஆபாசம் என்பது பார்பவர்கள் கண்களில் உள்ளது அல்லவா.
மதுவிற்கு அப்படி தான் தெரிந்தது. பல திரைப்பட நடிகைகளையும் தொழிலதிபர்களின் வீட்டு பெண்களையும் பார்த்து பழகி இருக்கிறான் அவன்.
ஃபேஷன் என்ற பெயரில் உடலை மறைக்காத உடை அணிந்து கொண்டு வளம் வரும் அவர்களைப் பார்த்தவனுக்கு உடல் என்பது தன் இணை மட்டுமே ரசிக்க வேண்டிய ஒன்றாக பட்டது.
அதனால் திருமணத்தின் போது அவன் இட்ட இரண்டாவது முக்கிய நிபந்தனை, உடை. இதைத்தான் அணிய வேண்டும் என்று சொல்ல வில்லை. ஆனால் இதெல்லாம் அணியக்கூடாது என்று சொல்லியிருந்தான் அவன்.
உடலை இறுக்கி பிடித்து அங்கங்களை எடுத்துக்காட்டும் எல்லா உடைக்கும் தடை. முக்கியமாக லெகின்ஸ், ஜீன்ஸ் டீசர்ட், கையில்லாத உடை, மெல்லிதாக இடை தெரிந்தால் கொஞ்சம் ஓகே.. ஆனால் தொப்புள் தெரியும் அளவுக்கு கூடாது. முட்டிக்கு மேல் ஏறி தொடையழகை காட்ட கூடாது.
" எனக்குத் தெரியும் கவர்ச்சிங்கிறது பார்க்குறவெ பார்வைல இருக்குன்னு. பட் நாமலும் கொஞ்சம் பொறுப்போட நடந்திப்போம். " என்றவனும் மேலாடை இன்றி இருந்தே இல்லை. திரண்டு நிற்கும் தன் சோல்டர் வரை மூடும் பனியன், ஷாட்ஸ் தான் அணிவான். அதுவும் அவனின் முட்டியைத் தொட்டு தான் இருக்கும். ஆண்களுக்கும் டிரெஸ்ஸிங்க கோர்டு உண்டு என்பவன்.
பைரவிக்கும் அதுபோன்ற உடைகள் பிடிக்காது தான். ஆனால் ஜீன்ஸ் மிகவும் பிடிக்கும். அதை விட்டு தர அவளுக்கு மனமில்லை.
"கோபமா இருந்தான்னா போய் அவன்ட்ட சட்டையப் பிடிச்சி சண்ட போட வேண்டியது தான. திட்டுவான்னு பயம்மா." என ராக்கி, மதுவையே வைத்த கண் வாங்காது பார்த்த பைரவியை பார்த்து கேட்க,
"ம்ச்... திட்டினாக் கூட பரவாயில்லைண்ணா. இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டிடுவேன். ஏன்டி அப்படி டிரெஸ் பண்ணன்னு கேட்டு அடிச்சா கூட அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். பட் அவரு அப்படி எதுவும் பண்ண மாட்டாரு.
பொம்பளப்பிள்ளைய கை நீட்டுறது தப்புன்னு சொல்லுவாரு. திட்டுறதும் அப்படித்தான்.
அதுனால அவரு பேசவே மாட்டாரு. முகத்த உம்முன்னு வச்சிட்டு, மூஞ்சிய மூன்னுறு கிலோ மீட்டருக்கு தூக்கி வச்சிட்டு நான் பக்கத்தில வந்தா எந்திரிச்சி போய்டுவாரு. அப்படி பட்டவரு கிட்ட எப்படிப் பேசி சமாதானம் பண்றது." என்றாள் சோகமாக.
'நீ பத்து நிமிஷ வித்த தெரிஞ்ச வச்சிருக்கியே. அது போதாது. ' என ராக்கி முணுமுணுக்க,
"எல்லா நேரமும் அது வெர்க்கவுட் ஆகாது ண்ணா. அதுவும் உங்க ஃப்ரெண்டு மாதிரியானத் தயிர் சாதத்துக்கிட்ட… முடியவே முடியாது." என்றவளின் முகத்தைத் திருப்பி பார்க்க அதில் பலவித உணர்வுகள் கலவையாக இருந்தன.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..