முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

பனி 12


 

அத்தியாயம்: 12


"எனக்குத் தெரிஞ்சி இதுல உனக்கு உபயோகமா எதுவுமே இருக்காது, இந்தக் கோலமாவ தவிர. அதுவும் ரொம்ப கொஞ்சமா தான் இருக்கு. உம்புருஷெந்தான் இத டாய்லெட்ல ஊத்தி டிஸ்போஸ் பண்ண சொன்னான். நாந்தா பத்திரமா எடுத்து வச்சேன்.  " என பர்ஸ்சை பைரவியிடம் நீட்டினான் ராக்கி.


அதில் சிறிய காற்று புகாத நெகிழியில் சிறிய அளவில் வெள்ளை நிற பொடி இருந்தது. அதைப் பிரிக்காது திரும்பி திரும்பி பார்த்தாள் பைரவி. 


" என்ன மாதிரியான கோலமாவு இது?" 


"தெரியல பாய். லேப்ல டெஸ்டுக்கு குடுக்கணும். நாங்க தேடுறதும் இதுவும் ஒன்னா இருந்தா கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்கு. " 


"என்ன கேஸ்? அபீஸ்யல்ல இல்ல அன்-அபீஸ்யல்லா. " என வழக்கைப் பற்றி கேட்டான் அவன்.


"அன்-அபீஸ்யல் தான். மூணு வாரத்துக்கு முன்னாடி நம்ம ஜாயின் கமிஷ்னர் பொண்ணு ஜிம்ல ஓர்க் கவுட் பண்ணும் போது மயக்கம் போட்டு விழுந்திருக்கு.


வெய்ட் லாஸ் பண்றதுக்காக fat burner Gym க்கு போறது வழக்கமாம். நல்லா இருந்த பொண்ணு எப்படி மயங்கும்னு விசாரிக்கும் போது தான் தெரிஞ்சது, அங்க fat burnerக்குன்னு சில டிரிங்ஸ் குடுக்குறது.


இந்த மாதிரி இன்ஸ்டென்ட் ஃபேட் பர்னர் ஜூஸ்ல போத மருந்து பயன்படுத்துறது வழக்கம் தான். பட் இவனுங்க குடுத்ததுல யூஸ் பண்ண போத பொருள் கொஞ்சம் ஸ்ராங்கானது.


அதக் குடிச்சிட்டு எப்பயும் போல உற்சாகமா சந்தோஷமா தான் அந்த நாள ஆரம்பிச்சிருக்கா. கொஞ்ச நேரத்திலயே பயங்கரமா கத்தி… சுத்தி இருக்குறவங்கள அடிக்கிறது கடிக்கிறதுன்னு வயலென்ட்டா மாறி மயங்கிருக்கா.


ஹாஸ்பில்ல ரெண்டு நாள் கழிச்சி தான் கண் முழிச்சிருக்கா. ஆனா யார் கிட்டயும் பேசல. சித்த பிரம்மை பிடிச்ச மாதிரி எதையோ பாத்திட்டு உக்காந்திருந்திருக்கா. திடீர்னு சிரிக்கிறா. கத்துறா. ஏன்னு கேட்டப்ப, அவளோட நரம்பு மண்டலம் முழுசும் பாதிக்க பட்டதா டாக்டர்ஸ் சொல்லிருக்காங்க. கிட்னி ஒன்னு மொத்தமா பெயிலியர் ஆகி ரொம்ப சீரியஸ்ஸா இருந்திருக்கா. அங்க சேந்து ஒரு மாசம் தான் ஆகுதாம். சீக்கிரம் எடைய குறைக்கிறேன்னு கண்ட சாப்பிட்டுருக்கா.


எப்படி நடந்ததுன்னு விசாரிச்சதுல அன்னைக்கி அவ எடுத்துக்கிட்ட ஜூஸ்ல கலந்தது ரொம்ப ரொம்ப பயங்கரமான போதை வஸ்துன்னு தெரியவந்தது. இல்லீகலா யார் கிட்டயோ அந்த வெயிட் லாஸ் ஜூஸ்ஸ வாங்கிருக்கா. 


ஜிம் மேனேஜர விசாரிச்சதுல, எங்களோட டிரிங்ஸ் கிடையாதுன்னு சொல்றான். சரி அந்தப் பொண்ணு வாங்குனவெ கிட்ட போனா வேற ஒருத்தன கைக் காட்டுனான். அவெ இன்னொருத்தனன்னு போய்க்கிட்டே இருக்கு. அனுமான் வால் மாதிரி, முடிவே இல்லாம. நாங்க விசாரிச்ச எல்லாருமே ரொம்ப சாதாரண மக்கள் தான்.


அப்படி இந்த பயங்கறமான வஸ்து சாதாரண மக்களுக்கு கிடைக்கிற அளவுக்கு புழக்கத்துல வந்ததுன்னு கண்டுபிடிக்க பாக்குறோம். ஏன்னா இந்தப் போதைப் பொடி ரொம்ப டேஞ்சரஸ்னு டாக்டர்ஸ் வான் பண்ணிருக்காங்க.  


இதுவர நம்ம தமிழ் நாட்டுல புழக்கத்தில அதிகமா இந்த type of வஸ்து கிடையாது. சமீப காலம் இதோட பயன் பாடு அதிகமா இருக்குன்னா, ஒரு கும்பலே இறங்கி வேலை பாக்குதுன்னு அர்த்தம். அது பணத்துக்கு ஆசைப்படுற யாரா வேணும்னாலும் இருக்கலாம். " எனப் பீடிகையுடன் சொன்னாள் பைரவி.


"ப்பா... ரொம்ப சிலிர்ப்பா இருக்கு. நேரடியா போத வேணும்னு சுய புத்தியோட எடுத்துக்கிற‌ முட்டாளுங்க ஒரு பக்கம்னா, எதுலயாது கலந்து குடுத்து சீரழிக்கிறது இன்னொரு பக்கம். எதையுமே நம்ப முடியுறது இல்ல. பாரு உன்னோட ஸ்பீச்ல அண்ணே கை முடி நட்டுட்டு நிக்கிது. " எனக் கேலியாக சொல்ல, பைரவி சிரித்தாள்.


"ஆமா‌, அப்படி என்ன கோலமாவு அது?" 


"அது சாதாரண கோலமாவு இல்ல. ஸ்பெஷல் கோலமாவு. கிரிஸ்டல் மெத். இத Ice ன்னும் சொல்லுவாங்க. பாக்க கற்கண்டு மாதிரி கலர்லஸ்ஸா இருக்கும். பொடியாக்கி முகர்ந்து பாக்குறது மூலமாவும், ஊசி மூலமாவும், இத உடம்புல ஏத்திக்கிவாங்க. கொஞ்ச நேரத்திலேயே ஒரு பரவச நிலைக்கி போய்டுவாங்களாம்.


மெக்சிகோல தயாரிக்க பட்டுற இதுக்கு கள்ள சந்தைல பெத்த லாபம் கிடைக்குமாம். குறிப்பா நம்ம நாடு, இலங்கை, மலேசியா மாதிரியான நாட்டுக்குக் கடத்தினா, நீங்க தான் டான் ராக்கி பாய்." என்க,


"என்னைக் கடத்தல் காரனாகச் சொல்லுற? அப்படி எவ்ளோ கிடைச்சிடும்?" என்றான் ஆர்வமாக, தாடையில் கை வைத்து யோசித்த படி.


"எனக்கு எப்படி தெரியும்? உங்க ஃப்ரெண்டு கிட்ட கேளுங்க ராக்கி பாய். டீட்டெய்ல்ஸ் பக்காவா சொல்லுவாரு. " என்க,


"க்கும்… அவெ ஒரு பாட்டிலுக்கு மேல பியர் அடிக்க சொன்னா கூட என்னைய அடிப்பான். அந்தச் சுய ஒழுக்க மண்புழுக்கிட்ட போய் வாட நாமலும் கோலமாவு விக்கலாம்னு சொன்னா!! " 


"குழி தோன்டாமலேயே உங்கள பார்வையாலயே புதச்சிடுவாரு. " என்று சொல்லி சிரித்தாள் பைரவி.


"ஆமா, உனக்கு எப்படித் தாமர பத்தித் தெரியும். மது வீட்டுக்கு அவளக் கூட்டீட்டு வரும் போதும், பஸ் ஏத்தி விடும் போதும் யாருக்கும் தெரியாதுன்னுல நினைச்சோம். " 


"தெரியும்…”


“எப்படிம்மா?”


“பூன கண்ண மூடிக்கிட்டா உலகம் இருட்டாகிடாது." எனக் கள்ளத்தனமானப் புன்னகையுடன் சொன்னவளை ஏற இறங்க பார்த்து, 


"அடிப்பாவி புருஷன வேவு பாக்க ஆள் வச்சிருக்கியா?." 


"ஐய்யோ பாய்!! ஆள்ளெல்லாம் வைக்கல. நானே களத்துல இறங்கிட்டேன். என்னைத் துரத்தி விட்ட வேகத்துலயே தெரிஞ்சிக்கிட்டேன், எங்கிட்ட இருந்து அவரு எதையோ மறைக்கிறாருன்னு. அதான் ரோட்டுலயே வெயிட் பண்ணேன். 


உங்க கார நான் பாத்ததுமே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன். என் வீட்டுக்காரரு கார் ஓட்டும் போது ரோட்ட தவிர வேற எதையும் பாக்க‌ மாட்டாருங்கற நம்பிக்கைல ஃபாலோ பண்ணேன். நான் நினைச்ச மாதிரி என்னை அவரு பாக்கவே இல்ல. ஆனா நீங்களும் யாரு பின்னாடி வர்றான்னு கூட பாக்காம லோட்டஸ்ஸ மட்டுமே பாத்திட்டு என்னைக் கோட்ட விட்டுடீங்க. என்ன லவ்ஸ்ஸா... லோட்டஸ்ஸ அவ்ளோ பிடிச்சிருக்கா பாய். " என்க, அவனின் முகத்தில் புன்னகை வரவில்லை.. இறுக்கம் வந்தது.


" ஒரு பொண்ண கடத்த பாத்திருக்காங்க பைரவி. கடத்தி என்னென்ன பண்ண ப்ளான் போட்டிருப்பானுங்களே. என்னால அத நினைக்கவே முடியல. எனக்காக அது யாருன்னு கண்டு பிடிப்பியா வைரவி. ப்ளிஸ்…" என்றவனின் குரலில் தவறு செய்பவர்களை நிச்சயம் கண்டுபிடித்து தண்டனை தர வேண்டும் என்ற உறுதி இருந்தது. 


"கவலயே படாதீங்க பாய்... உங்க மனசுல பூத்த லோட்டஸ்ஸ கசக்கி எறிய நினைச்ச அவனுங்கள நாம தூக்குவோம். தூக்கி நார் நாரா கிழிச்சி தோரணம் கட்டுறோம். Don't worry பாய்.." என அவனின் புஜத்தில் தட்டி விட்டு,


"அவ்ளோ தான் இதுக்கு மேல என்னால சைக்கிள் ஓட்ட முடியாது." என்று கீழே இறங்கியவளின் கண்கள் கணவனைக் காண பரபரத்தன. அங்கு ஒரு மூளையில் தன் உடமைகளைக் கையில் அள்ளிக் கொண்டு மது யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான். அவன் புறப்படுகிறான் என்பதை அறிந்து அவளும் பின்னாலேயே தன் உடமையைத் தூக்கி கொண்டு ஓடினாள். அவளுடனேயே ராக்கியும் சென்றான். 


" ஏ ஒத்த தாமரை எப்படி? மேட்சா இருக்குமா? எங்க ஜோடி பத்திக் கருத்து சொல்லாம போற." என்றபடி உடன் நடக்க, 


"சூப்பர் ஜோடி பாய் நீங்க ரெண்டு பேரும். கார்ல இருந்து நீங்க ரெண்டு பேரும் இறக்கும் போது அண்ணனும் தங்கச்சியும் சேந்த மாதிரி… சும்மா பாசமலர் படம் காட்டுனீங்க.. " எனச் சொல்லி ஓடியவளைத் துரத்தினான் ராக்கி.


"பாய்… எனக்கு லோட்டஸ்ஸ எங்கயோ பாத்த மாதிரி ஒரு ஃபீல் வருது பாய்... ஏன்?." என்றவள் தாமரையை நேரில் அப்போது தான் கண்டாலும் அவளின் ஜாடையில் யாரையோ பார்த்த நினைவு வந்தது. 


" உனக்கும் தோனுச்சா.. எனக்கும் அப்படித் தான் தோணுச்சி. எங்கேயோ பார்த்த மயக்கம்… எப்போதோ வாழ்ந்த நெருக்கும்னு.. " என்றவனை பைரவி கிண்டலாக பார்க்க, 


"போச்சி பாய்க்குக் காதல் ஆசை வந்திடுச்சி.. என்ன பாய் ஆள் விட்டு அந்த பொண்ணு யாரு என்னனென்னனு விசாரிக்க சொல்லவா பாய்?" 


"தேவையில்லாத ஆணி.. நாங்க ஆல்ரெடி எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டோம். பேரு செந்தாமரை செல்வி. ஊரு மதுரைல அரசனூர். அப்பா பேரு கண்ணாயிரம். அம்மா தமிழரசி. ஒரே ஒரு அண்ணே பேரு பாண்டியராஜன். படிப்பு அவனுக்கு வரவே இல்ல. பத்தாப்பு கூட தாண்டல. மிடில் க்ளாஸ் விவசாயக் குடும்பம் தான். ஆனா சந்தோஷமா இருக்க தெரிஞ்ச குடும்பம். 


அவளுக்கு பிடிச்ச பூ மட்டுமில்ல, பிடிச்ச கவரும் வாடா மல்லி தானாம். பார்ட் டயம்மா ஏரியா பிள்ளைங்களுக்கு படிப்பு சொல்லி குடுக்குறா.. புல் டயம்மா கவர்மென்ட் எக்ஸாம்க்குப் படிக்கிறா. டீச்சர் ஆகணுமாம்.


அவங்க வீட்டு நிலத்தில திரட்ச சாகுபடி பண்ணிருக்காங்க. சமந்தி, தக்காளி, கீரன்னு கொஞ்சம் கொஞ்சமா போட்டு விவசாயம் செய்றாங்க. அம்மா தோட்டத்தில வேல பாக்க, அண்ணனும் அவனோட ஃப்ரெண்ட்ஸூம் குட்டி யானைல காய்கறிய ஏத்திட்டு போய் கூவி கூவி வியாபாரம் பண்றாங்க. 


இந்த இடத்துல தான் ஒன்ன நீ கவனிக்கணும். அம்மா பொண்ணு பையன்னு எல்லாரும் வீட்டுக்காக உழைக்கும் போது. அவளோட அப்பா கண்ணாயிரத்த மட்டும் நாட்டுக்குன்னு தண்ணி தெளிச்சி விட்டிருக்காங்க போல.


ஜோக்கர் படத்துல வர்ற ஹீரோ மாதிரி வித்தியாச வித்தியாசமா போராட்டம், தர்ணான்னு கலெக்டர் ஆஃபிஸ் வாசல்லயே குடிசையக் கட்டி கவர்மென்ட்டுக்கு எதிரா எதையாது பண்ணிட்டே இருப்பாராம். கவர்மென்ட் கெஸ்ட்டா போய் அப்பப்ப ஜெயில சுத்தி பாத்திட்டு வருவாராம். சமூக ஆர்வலர்ன்னு சொல்லிட்டு திரியுற கும்பலுக்குத் தலைவர் அவருதான். " என நீண்ட தன் உரையை முடிக்க,


"பாய்!? இவ்ளோ ஃபாஸ்ட்டா இருக்கீங்க. உங்க வேகம் எனக்குப் புல்லரிக்கிது பாய்… புல்லரிக்கிது... ‌" 


" மாடு மேய்ச்சிடாம பாத்துக்க. " 


"எப்படி பாய்? யாரு தந்த தகவல் இது?"


"ஈர்ப்புன்னு ஒன்னு இருக்கும் போதே இழுத்திடணும். இல்லன்னா தூரம் போய்டுவா." 


"அதுவும் சரிதா.‌ அவளோட அப்பா பேரு என்ன சொன்னிங்க? கண்ணாயிரமா!" 


"நோ... பெட்டிஷன் கண்ணாயிரம். எங்க எது தப்பா நடந்தாலும் அத உடனே கலெக்டர்ட்ட பெட்டிஷன் போட்டு விட்டுடுவாரு. கூடவே பல வயசானவங்களுக்கு முதியோர் உதவி தொகை, விதவைகளுக்கு உதவி தொகை, சென்டர் கவர்மெண்ட் தர்ற மானிய உதவி தொகைன்னு கவர்மென்ட்டுகிட்ட இருந்து மக்களுக்குக் கிடைக்கிற சில நல்ல விசயங்களையும்  காசு வாங்காம மக்களுக்காக வாங்கி தர்றாரு.


சில தொண்டு நிறுவனங்கள் கூட சிலரைக் கூட்டி வந்து,  கம்மாய சுத்தம் பண்றேன், மரம் நடுறேன்னு எனி டயம் பிஸியா இருக்குற, ஒரு சமூக ஆர்வலர், கண்ணாயிரம். அப்பப்ப தாமரையும் அப்பாக்கு உதவி பண்ண போகுமாம்." என்க, பைரவிக்கு இதுவும் எங்கேயே கேள்வி பட்டது போல் இருந்தது. 


"ஓகே பாய்... அப்ப லோட்டஸ் குடும்பத்த உங்களுக்குப் பிடிச்சி போச்சி. அடுத்து என்ன? பேசி பழகி கல்யாணத்த முடிச்சிட வேண்டியது தான. அவளோட ஃபோன் நம்பர யார்க்கிட்டையாதுக் கேட்டு வாங்குறது." என்க, 


" இதுவும் தேவையில்லாத ஆணி. ஏன்னா தாமரைட்ட ஃபோனே கிடையாது. அவளோட அண்ணேங்கிட்ட அம்மாக்கிட்ட மட்டும் தான் ஃபோன். அந்த நம்பரும்.‌.. " என நம்பரை சொல்ல, பைரவி வாயைப் பிளந்து கொண்டு நின்றாள்.


"பாய்... பாய்… நீங்க சாதா பாய் இல்ல... லவ்வர் பாய் நீங்க… ஒரே நாள்ல இவ்வளோ விசயம் தெரிஞ்சி வச்சிருக்கும் போது… தாமர உங்களுக்கு தான் பாய்… கட்டிக்கங்க… " 


" கல்யாணம்… அது கொஞ்சம் கஷ்டம் தான்." 


"ஏன் வீட்டுல சம்மதிக்க மாட்டாங்கன்னா?" 


"இல்ல… தாமர சம்மதிக்க மாட்டா." 


ஏன் என்றவளிடம் அவளை முதல் முறை பார்த்த போது திட்டியதைச் சொல்ல,


" ச்ச… என்ன பாய் நீங்க?. உங்க வாய வச்சிட்டு அமைதியா இருக்க மாட்டேங்கிறீங்க. உங்க ஃப்ரெண்டு கூட சேந்து சேந்து அவர மாதிரி லூசுத்தனமா பேச ஆரம்பிச்சிட்டிங்க. எதுக்கும் நீங்க அவர விட்டு தள்ளி இருக்குறது தான் நல்லது. டைவர்ஸ் பண்ணுங்க. அப்பதா பேச்சில சுத்தம் வரும்.. காதலிக்க பொண்ணும் வரும். " என்க,


"நானும் அவனை டைவர்ஸ் பண்ணணுமாம்மா. எந்த கோர்ட்க்கு போகணும். தீர்ப்பு வந்ததுக்கு அப்றம் அவன மாதிரியே பாட்டு பாடி டான்ஸ் ஆட தெரியாதே எனக்கு." என்க,


"அவருக்கிட்டயே கத்துக்கங்க. செம்மையா டான்ஸ் ஆடுவாரு அவரு. " என பைரவி மதுவைக் கேலி செய்து சிரிக்க, இருவரையும் முறைத்த படி மது வந்து நின்றான்.


"ராக்கி, சாவி தா.. " என பைக் சாவியைக் கேட்க, ராக்கி எடுத்துக் கொடுத்து,


"எங்க மச்சி?" 


" சித்தப்பா வர சொன்னாரு. நாளைக்கி மினிஸ்டர் பங்களால மீட்டிங். அதுக்கானப் பாதுகாப்பு ஏற்பாட்ட பத்தியும், செய்ய வேண்டிய ஏற்பாட பத்தியும் பேச வரச் சொன்னாரு." என்றவன் பைரவியைக் கண்டுகொள்ளாது சென்றான்.


'கண்டுக்காமலா போற. சுவத்துல அடிச்ச‌ பந்து மாதிரி எங்கிட்ட தான் நீ வந்து ஆகணும்.. curd rice.. ' என இதழ் திறக்காது முணுமுணுத்தவள் தன் சாப்பரை எடுத்துக் கொண்டு கேட் வாசலிலேயே நின்றாள்.


அவள் எதிர்பார்த்தது போல் மது பெட்ரோல் இல்லாத தன் பைக்கைத் தள்ளிக் கொண்டு வந்தான்.


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி




கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...