முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

பனி 13

அத்தியாயம்: 13


" ஹாய் மாம்ஸ்... லிஃப்ட் வேணுமா… ‍" என்றபடி மதுசூதனன் வழியை மறித்துக் கொண்டு நின்றாள் பைரவி.. 


மது எதுவும் சொல்லாது நிற்க, பைரவி ராக்கியிடம் கண் காட்டினாள். 


'அவனை எப்படியாவது என் சாப்பரில் ஏற்றி விடுங்கள்.' என்று. அதை உணர்ந்தவனும்,


" நல்ல வேளம்மா நீ வந்த. மச்சான் நீ தங்கச்சி பின்னாடி போ. நான் பைக்குக்கு பெட்ரோல் போட்டுட்டு ஆஃபீஸ் போயிடுறேன்." என்றவனை மது கண்களால் பஸ்பம் செய்தான்.


" என்ன மாம்ஸ் நீங்க! மாமா வேற கால் பண்ணி கூப்பிட்டிருக்காருன்னா முக்கியமான வேலையாத்தா இருக்கும். சீக்கிரம் போகணும்ல. வாங்க நான் உங்களப் பத்திரம கூட்டீட்டு போறேன்‌‌. ப்ராமிஸ்... " எனத் தலையசைத்து அசைத்து கூற,


" பைரவி சொல்றது சரி தான் மச்சி‌.‌‌ அங்கில் உனக்கு கால் பண்ணிருக்காருன்னா முக்கியமான வேலையாத்தா இருக்கும். லேட் பண்ணாத ஏறி உக்காந்துக்க. " 


"ஏன் இந்த ஊருல ஆட்டோவே கிடைக்காத. நான் அதுல போய்கிறேன். " என்றவன் அவளைத் தாண்டி செல்ல,


" ச்ச… இந்த ஹீரோன்னு சொல்லி அறிமுகப்படுத்துறவனுங்க கூட மட்டும் ஃப்ரெண்ட்டா இருக்கவே கூடாது. " என்றான் ராக்கி சலிப்பாக.


"ஏன் பாய்? " 


"பின்ன அவெ ஆட்டோல்ல போய்க்கிவானாம். நான் மட்டும் இவரு பைக்க தள்ளிக்கிட்டே போய் பெட்ரோல் போடணுமாம். என்னடா நியாயம் இது?" என ராக்கி உரிமை குரல் எழுப்ப, மது வந்து பைக்கை வாங்கி கொண்டு அவனை அனுப்பி வைத்தான்.


"பாய்... ஹெல்ப் பண்ணாம போறீங்க. அப்றம் நானும் லோட்டஸ் கூட உங்களச் சேத்து வைக்க மாட்டேன்." எனக் கத்த,


"தன்கையே தனக்குதவி கேள்வி பட்டது இல்லயா. படலன்னாலும் பரவாயில்ல. உனக்கு அவெ கூட ரொமான்ஸ் பண்ணணும்னா நீ தான் போகணும். பொம்ம வேஷம் போட்டு என்னைக் களத்துல இறக்காத. பை... " 


"பாய்… ராக்கி பாய்… " என அவனின் பின்னே செல்ல,


"எதுக்கு எம்பின்னாடி வர்ற. உம்புருஷனுக்குத் தெரியாத ஆளுங்களே கிடையாது. இந்த ஜீம்மே அவனோடது மாதிரித்தான். அப்படி இருக்குறப்ப ஒரு லிட்டர் பெட்ரோல் குடுக்க மாட்டாங்களா. இல்ல வந்து ஏறிக்கன்னு லிஃப்ட் குடுக்க மாட்டாங்களா. 


அந்த ரெஜினா உள்ளதா இருக்கா. நீ இப்ப உள்ள போகல. அவ கொத்திட்டு போய்டுவ உன்னோட மதுவ. ஜாக்கிரதை… " என எச்சரிக்க, அவள் வேகமாக உள்ளே சென்றாள். 


ராக்கி சொன்னது போல் மதுவுக்கு உதவி செய்ய ரெஜினா முன்வர, அவளுக்கு முன் வந்து நின்றாள் பைரவி. முகம் சிவக்க நின்ற பைரவி பார்த்த பார்வையில் ரெஜினா சென்றே விட்டாள். மற்ற யாரும் பைரவிக்குப் பயந்து மதுவுக்கு லிஃப்ட் கொடுக்க முன்வரவில்லை.


'இவனுங்க இல்லன்னா என்ன‌! நான் டாக்ஸில போக்கிவேன். இல்ல பஸ்ல புட்போர்டு கூட அடிச்சி போவேன். ' என நினைத்தவன் பைரவியைத் தவிர்த்து பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு வெளியே வந்து ஆட்டோவிற்காகக் கை அசைத்தான்.


பைரவி அவனின் அருகிலேயே நின்று கொண்டு, வந்து நின்ற ஆட்டோக்காரர்களை மிரட்ட, யாரும் நிற்கவில்லை. நேரம் செல்ல சிதம்பர ராஜன் மீண்டும் அழைத்தார் மதுசூதனனுக்கு. 


"சித்தப்பா, நம்ம ஜிம்ல தான் இருக்கேன். இதோ பத்து நிமிஷம். " என்க,


அந்தப் பக்கம் இருந்து என்ன வந்ததோ தெரியாது, வேகமாக வந்து பைரவியிடம், "கீ தா… நானே ஓட்டுறேன். " என எங்கோ பார்த்த படி கூறினான்.


"நீங்க யாருக்கிட்ட பேசுறீங்க ஸார்? உங்களுக்கு என்ன வேணும்?" என்க, அவளை முறைத்துக் கொண்டு ஸ்கூட்டியில் இருந்த சாவியை எடுத்தான். 


'இது என்னோட சாப்பர். நாந்தா ஓட்டுவேன். நீங்க வேணும்னா பின்னாடி உக்காந்துக்கங்க.' எனச் சொல்ல வந்த வார்த்தையை மென்று தின்றவள், அப்படியே பின் சீட்டிற்கு நகர்ந்து உட்கார்ந்தாள். இறங்கி ஏறினால் அவன் சாப்பரை எடுத்துக் கொண்டு தனியாகச் சென்று விடுவான் அல்லவா. அதான்…


பைரவியின் சாப்பரை ஸ்டாட் செய்தவன் அவனின் ஜிம் பேக்கை இருவருக்கும் இடையே வைத்தான். 'நோ டச்சிங்.. ' என்பது போல்‌‌.


ஆனால், உன்னைத் தொந்தரவு செய்ய, தொட வேண்டிய அவசியம் இல்லை என்பதை பைரவி நிறுபித்தாள். ஹெல்மெட் அணியாது சென்ற அவனின் காதுகளில் தன் இதழைக் குவித்து மூச்சை இழுத்து  ஊதி விட, மதுவின் தேகம் சிலிர்த்தது. 


"ஏய்… என்னடி பண்ற?" 


"உங்களோட காதுல தூசி மாம்ஸ்..  நீங்க தான் தொடக்கூடாதுன்னு சிம்பாளிக்கா சொன்னிங்கள்ல. அதா ஊதி விடுறேன்." எனக் குறும்புடன் சொல்லி ஊத, அவன் தன் காதுகளைத் தேய்த்து விட்டான். குறுகுறுத்தது அல்லவா. அவன் கரம் கீழே இறங்கியதும் மீண்டும் ஊத, திரும்பி பார்த்து அவளை முறைத்தான் மதுசூதனன். மெல்லிய சிரிப்புடன் அதைக் கண்டு கொள்ளாது அவனின் காது மடலைத் தன் இதழ் பதித்து முத்தமிட,


"சும்மா வர முடியாத டி உன்னால."


"முடியாது மாம்ஸ். உங்களுக்கு சாப்பர ஓட்டுற வேல இருக்கு. ஆனா எனக்கு… உங்கள ஓட்டறது மட்டும் தான் வேல. " எனச் சொல்லி அவனின் காதைத் தன் பற்களால் லேசாக கடிக்க, சட்டென ப்ரெக் போட்டு நிறுத்தினான் மது.


"இந்தாடி நீயே ஓட்டிக்க. " என இறங்கி நடக்க ஆரம்பிக்க, 


"மாம்ஸ்… மாம்ஸ்… நில்லுங்க. சிதம்பரம் மாமா சீக்கிரம் வரச் சொன்னாரு. நீங்க கால் நடையா போனா பத்து நிமிஷத்துல போய்ட முடியுமா? " என வழி மறித்து வம்பு செய்ய, இம்முறை அவன் ஏறிக் கொண்டு அவளை ஓட்ட சொன்னான். 


பின் பக்க கம்பியைப் பிடித்துக் கொண்டு அவளை விட்டு தள்ளி அமர்ந்திருந்தவன் பையை இருவருக்கும் இடையை வைக்க, அதை கடுப்புடன் தட்டி விட்டாள் பைரவி.‌ 


"எனக்கு இந்த டிஸ்டபென்ஸ்ஸே பிடிக்காது. அதுவும் சாப்பர ஓட்டும் போது ரொம்ப ஃப்ரியா இருக்கணும். இல்லன்னா சாப்பர் புளிம மரத்தில தான்… ஸாரி புளியமரம் இப்ப ரோட்டுல இருக்குறது இல்ல. ரோட்டுக்கு நடுவுல இருக்குற சிமெண்ட் தடுப்புல போய் முட்டி நிக்கும் பரவாயில்லயா." என்க, அவன் தலையில் அடித்துக் கொண்டு செல் என்றான். 


அவள் நடைபயிற்சிக்குச் செல்பவர்கள் முந்தி செல்லும் அளவுக்கு  சாப்பரை உருட்ட, " ம்ச்.. கொஞ்சம் ஸ்பீடாத்தா போயேன் டி." எனக் கடிந்து கொண்டான்.


" இன்னைக்கி நான் பத்து கிலோமீட்டர் வேகத்துலதான் போவேன்னு எங்கம்மாக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன். சத்தியத்த மீறுனா சாமி வந்து கண்ண குத்திடுமாம்." எனப் பாவமாய்ச் சொல்ல,


மது அவளைச் சட்டென நெருங்கி வந்து அவளின் கரத்தின் மேல் தன் கரம் வைத்து ஸ்கூட்டியின் கண்ட்ரோலை அவன் எடுத்துக் கொண்டான். பின்னால் இருந்தபடியே ஸ்கூட்டியை ஓட்டத் தொடங்கினான்.


அவன் திடீரென நெருங்கி வருவான் என்று எதிர்பார்க்காத பைரவிக்கு அது ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. அவனின் அணைப்பு தந்த இதத்தில் கணவனின் நெருக்கத்தை ரசிக்கத் தொடங்கினாள். தன் கன்னம் தொடும் தன்னவனின் மூச்சிக் காற்றில் உடலில் சூடேற முகம் நாணமெனும் சிவப்பு ஊற்றெடுத்தது. தன் முதுகில் சாய்ந்து கொண்டு வந்த மன்னவனின் உடல் பாரமாய்த் தெரியவில்லை மங்கைக்கு. 


பேசுக்கள் காணது போக, மௌனியாய் மாறியிருந்தாள் பேதை‌. சிதம்பர ராஜனின் இல்லம் உலகின் கடைக்கோடியில் இருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தை விதைக்க,‌ கணவனின் மீதுள்ள ஆசை மரமாய் வளர்ந்த விரிந்து, பின்னால் சாய்ந்து அவளின் புஜத்தில் தலை வைத்து சாலையில் கவனம் செலுத்தும் தன்னவனின் கூரிய விழிகளையும், அடர்ந்த மீசைக்கு இடைய பூத்திருக்கும் அவனின் இதழை கண்டவன், தன் இதழ் கூப்பி அவனின் இதழில் ஊதினாள். இரண்டு இன்ச் முன்னே போய் விழும் அளவுக்கு ஸ்கூட்டர் குளுங்கி சடன் ப்ரோக் போட்டு நிறுத்தப்பட்டிருந்தது. 


பயணம் எப்படி இருந்தாலும் அதற்கு முடிவு உண்டல்லவா. பைரவியின் பயணமும் சிதம்பரம் இல்லம் வந்ததும் முடிந்து மதுசூதனன் அவளுக்கு நன்றி கூட கூறாது இறங்கி கொண்டான்.


" ஹஸ்பெண்ட் அண்டு வைஃப் குள்ள ஸாரி, தேங்க்ஸ் இருக்க கூடாதுன்னு தேங்க்ஸ் சொல்லாம போறீங்களா மாம்ஸ்.. " எனச் செல்லும் அவனிடம் கண்சிமிட்டி கேட்க, அவன் தோள்களைக் குளுக்கியபடி சென்றே விட்டான்.


"இன்னைக்கி பொழுதுக்கு இது போதும். அதுவே ஒரு வாரம் தாங்கும். ஹிம்… ஐ ஆம் ஹப்பி யா. " எனப் பெருமூச்சை விட்டு முணுமுணுத்தவள் திரும்பி செல்ல,


"ஹாய் பையூ. அதிசயமா இருக்கு. சண்டே அதுவுமா இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சிருக்க. " என்றபடி வந்தாள் மோகனா. சிதம்பர ராஜனின் இளைய மகள். மதுசூதனனின் தங்கை. 


சொல்லப் போனால் அந்த வீட்டில் பைரவியுடன் நட்பு பாராட்டும் ஒரே ஜீவன் அவள் தான். சிதம்பரம் எதிர்க்க மாட்டார் ஆனால் ஆதரவும் சப்போட்டும் கிடைக்காது. முழு நேரமும் அவளை வில்லியாகப் பார்க்க ஜெயஸ்ரீயும் சைந்தவியும் தான் இருக்கிறார்களே. 


"எவ்ளோ சீக்கிரம் எழுந்தாலும் உங்கண்ணன கரெட் பண்ண முடிய மாட்டேங்கிது." எனச் சொல்லி சோகமாக முகத்தை வைக்க, 


"நீ எதுக்கு டி கரெக்ட் பண்ணணும் அதா எல்லாத்தையும் கோர்ட்டுல வச்சி முடிச்சாச்சே. இனி எங்கண்ணே சிங்கிள்." என்க,


"அதுனால தான் அவர மறுபடியும் கரெட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். என்னோட ஜாதகத்துல எனக்கு ரெண்டு கல்யாணம் நடக்கும்னு போட்டிருக்காம். நேத்து தான் எங்கம்மா என்னோட ஜாதகத்தத் தூக்கிட்டு போய் ஜோசியக்காரெங்கிட்ட என்னோட எதிர்காலத்த கேட்டிருக்காங்க. 


ஜோசியம் உண்மையாகணும்னா உங்கண்ணன இன்னொருக்க கல்யாணம் பண்ணிக்கிட்டா போச்சி. " என்க, மோகனா சிரித்தாள். 


"ஏதாவது பண்ணி எங்கண்ணன நீ இம்ச படித்திட்டே இருக்க பையூ. பாவம் அவரு." 


"இம்சை…. உன்னோட அவர நீ பண்ணாத இம்சையையா நான் பண்ணிடப் போறேன்.. போன வாரம் ஃபோன் போட்டு அவரு உன்னைப் பத்தி சைனா கேட் அளவுக்கு நீளமா புகார் பத்திரம் எழுதி வச்சி வாசித்தாரு. தெரியுமா!" 


"நாலாம் எதுவும் பண்ணல. அவரு தான். " என்ற போது முகத்தில் வெட்கம் படர்ந்தது மோகனாவிற்கு. திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் தான் ஆகியிருக்கும்.


 பிரவீன்… அவனும் காவலதிகாரிதான். பைரவியை விட உயர் நிலையில் இருக்கும் CBI அதிகாரி.


"புது பொண்ணுக்கு வெட்கத்த பாரு. ஹாஸ்பிட்டல் போனதா அண்ணா சொன்னாங்க. என்னாச்சி?" எனக் கண்சிமிட்டி கேட்க,


"போடி… எல்லாம் தெரிஞ்சிட்டு தெரியாத மாதிரி கேக்குற." எனச் சிணுங்கினாள் மோகனா.


" எனக்கு மருமகெந்தா வேணும். மருமகளா இருந்தா டபுள் சந்தோஷம். வாழ்த்துக்கள்." என்றவள் சாப்பரை ஸ்டாட் செய்தாள். 


"உள்ள வா பையூ. " என அழைத்தாள் மோகனா.


"உங்கண்ணனுக்குப்‌ பொண்டாட்டியா இருக்கும் போதே, எனக்கு இங்க வர்ற உரிம கிடையாது. இப்ப டைவர்ஸ்ஸூம் ஆகிடுச்சி. கேட் பக்கத்தில நான் இவ்ளோ நேரம் நின்னதே தப்பு. உள்ள இருந்து குரல் வர்றதுக்குள்ள நான் போய்டிருறேன்ப்பா." என அவள் கேலி‌ செய்வதற்கும்‌, சைந்தவியின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.


பைரவி, மோகனாவிற்கு டாடா காட்டி விட்டு சென்று விட்டாள். இனிமையாக தொடங்கிய இந்த நாளை சைந்தவியின் குரல் கெடுத்து விடும் என்பதால் ஓடி விட்டாள். சற்று தூரம் சென்றவள் திரும்பி அந்த வீட்டை பார்த்தாள்.‌ 


மூன்று அடுக்குகளைக் கொண்ட தனி வில்லா அது. கேமரா, செக்யூரிட்டி எனப் பலத்த பாதுகாப்பு இருக்கும் அந்த வீடு ஆரம்பர வசதிகளுக்குக் குறைவில்லாத மாடமாளிகை. 


வீடு அமைந்திருக்கும் இடம் தன் கணவனுக்குச் சொந்தமானது. வீடு தன் கணவனின் உழைப்பில் கட்டியது. ஆனால் அதில் ஒரு சில நாள்கள் மட்டுமே தங்கியிருப்பாள். திருமணம் முடிந்து விருந்திற்கு என வந்த போதும் கூட ஒரு வாரம் சேர்ந்தார் போல் விருந்துண்ணவில்லை.


இந்த விசயத்தில் நாம் மதுவைப் பாராட்டியே ஆக வேண்டும். தன் திருமணம் பைரவியுடன் நடப்பது தன் சித்திக்குப் பிடிக்கவில்லை என்பதை அறிந்தவன், தேவையற்ற சச்சரவுகளைத் தவிர்க்க மனைவியுடன் தனி குடித்தனம் தான் சென்றான். 


அது தாய்க்கும் மகளுக்கும் கடுப்பாக இருந்திருக்கும். 


" நாம என்ன பேயா பூதமா... நம்மக்கிட்ட பேசவே விடாம இழுத்திட்டு போறான் உங்க மச்சினன் மகெ." என்பாள் சைந்தவி கோபமாக.


" அதான... குரங்கு குட்டிய தூக்கிட்டு சுத்துற மாதிரி அந்தக் குரங்க இந்தக் கொரங்கு தூக்கிட்டு சுத்து. ஹிம்... " என முகம் சுளிப்பாள் ஜெயா. 


" அவ மேல அவனுக்கு அவ்வளவு லவ்வு போல. அதான் நாம எவ்வளவு சொல்லியும் கேக்காம அந்தப் பூசணிக்காய கல்யாண பண்ணிருக்கான். ரொம்ப சந்தோஷமா இருக்கான் பாரும்மா." என்பாள் வயிற்றெரிச்சலுடன்.


"விடக்கூடாது டி..‌ இவன அப்படியே விட்டோம்னா முழு சொத்தும் அவனுக்கும் அவெ குடும்பத்துக்கும்னு மட்டுமே போட்டும். நமக்கு ஒன்னுமே இருக்காது. உங்கப்பன்ட்ட எவ்வளவோ சொன்னே. இந்த வீட்டுக்குன்னு இருக்குற ஒரே ஆண் வாரிசு அவெ மட்டும் தான். அதுனால சொந்ததுக்குள்ள எங்கண்ணே மகளக் கட்டி வச்சா, சொத்து நம்ம கூடவே இருக்கும்னு. கேட்டாரா... அவனுக்குப் பிடிச்சிருக்கு, அவெ நம்மல விடமாட்டான்னு சொல்லி அண்ணெ மகன நம்பிட்டு இருக்காரு."


"நாளைக்கி இவனோட பொண்டாட்டி பிள்ளன்னு உரிமையா இந்த வீட்டுல ‌நடமாடுங்க. நாம வேலக்காரங்க மாதிரி பம்மிபோய் நிக்கணும்.‌.. விட்டுடாதம்மா நமக்கு பணிஞ்சி நம்ம பேச்ச கேக்குற பொண்ணு தான் அவனுக்கு மனைவியா வரணும். வேற யாரும் இருக்க கூடாது." 


"சரியா சொன்ன. தனியாப் பொண்டாட்டிய கூட்டீட்டு போய்ட்டா எங்களால ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைக்கிறானா! பாத்துக்கலாம். நானா அவனான்னு." எனக் கங்கனம் கட்டிக் கொண்டு ஜெயாவும் சைந்தவியும் மது வரவில்லை என்றாலும் அவனின் வீடு தேடி செல்வர்.‌ மதுவிடம் பைரவியைப் பற்றி எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார். 


அவர்களும் இவர்கள் பிரிவிற்கு ஒரு காரணம்.. முக்கிய காரணம் வேறு..‌

 தொடரும் ...



💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...