முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

பனி 5

 

அத்தியாயம்: 5


'அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க

சற சற சற சரக்க

மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்


கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க

முடி முடியல அடியே அடி மனசுல

வெம்பி வெடிச்சேன்'


இது காரில் ஒளிபரப்பாக, ராக்கி தான் தலையை அசைத்து அசைத்து பாடலை ரசித்து ராகம் படிக் கொண்டும் தாளம் தட்டிக் கொண்டும் வந்தான்.


மது அமைதியாக இன்று நடந்தவற்றை நினைத்த படியே காரை இயக்கினான். இருவருமே குடித்திருந்தனர். ஆனால் அளவாக.


"மச்சி‌ அதிசயமா இருக்கு கார்ல ப்ளேயர நீ ஆன் பண்ண விடுறதும்.. அத நான் உம்பக்கத்துல உக்காந்து பாடிக்கிட்டே வர்றதும்… இன்னைக்கி நீ பண்ணதும் ரொம்ப பிடிச்சிருந்தது. உன்னைப் புதுசா பாத்த மாதிரி இருக்கு." என ராக்கி சொல்ல, மது சைடு மிரர் வழியே தன் முகம் பார்த்தான்.


கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் போது, ‘இது நானா?’ என்றிருந்தது மதுவிற்கு. இன்று கோர்ட்டில் அவ்வாறு ஆடியது நானா.


"போன மாசம் மச்சி… லைசன்ஸ் எக்ஸ்பயர் ஆகிடுச்சி போல. அது தெரியாம நாம் பாட்டுக்கு வண்டிய ஓட்ட… போக்குவரத்து போலிஸ் பிடிச்சி நிப்பாட்டி, 'ஏன்டா லைசன்ஸ ரென்யூ பண்ணல. ஃபைன்ன எடு'ன்னு சொல்லி வண்டிய ஓரங்கட்டி சாவிய வாங்கிடுச்சி. 


நான் உடனே நம்ம பைரவிக்கு கால் பண்ணேன்டா. அவளும் போலிஸ் தான. புருஷனோட உயிர் நண்பன்… உதவின்னு கேட்டா ஓடி வருவா... வந்து ஏதாவது சொல்லி வண்டிய வாங்கி குடுப்பான்னு." எனச் சொல்ல, மதி அவனை நோக்கி திரும்பி பார்த்து,


"நீ எதுக்கு டா அவளுக்கு கால் பண்ண. அவ திமிரு பிடிச்சவ டா. உங்கால அட்டன் பண்ணிருக்கவே மாட்டா. சரியா…"  


"அட்டன் பண்ணலன்னா கூட பரவாயில்ல மச்சி. நம்ம ஊரு போலிஸ்ஸு பிஸியா கேஸ்ஸ இன்வெஸ்ட்டிக்கேஸ் பண்ணுதுன்னு விட்டிருப்பேன். அட்டன் பண்ணா. பண்ணிட்டு நான் சொன்ன அத்தன கதையையும் பத்து நிமிஷம் காது குடுத்து கேட்டுட்டு... ராங் நம்பர்ன்னு சொல்லி கட் பண்ணிட்டா மச்சி.." என்க, மது சிரித்தான் சத்தமாக.


"ராங் நம்பராம்... ராங் நம்பர்... நான் ராங் நம்பரா மச்சி. இல்ல நாம தான் ராங் நண்பர்ஸ்ஸா. கால் கட்டானதும் அந்த டிராஃபிக் போலிஸ் என்னைப் பாத்து சிரிச்ச சிரிப்பு இருக்கே. 'எனக்கு ஐஜிய தெரியும்.. ஆனா அவருக்கு என்னைத் தெரியவே தெரியாது' ங்கிற மொமெண்டாட மாறிடுச்சி.


ச்ச.. என்னால உம்பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ண முடியாதுங்கிறதுக்கா சும்மா விட்டேன். எப்படி மச்சா அவ கூட இத்தன வர்ஷமா குடும்பம் நடத்தின." எனக் கேட்க மதுசூதனனின் சத்தம் நின்று போனது.


"அது என்னோட டார்க் பேஜ்.. " என ஒரு மாதிரியானக் குரலில் கூறியவன்,


"உனக்கு மட்டுமில்ல, நம்ம கேங்ல இருந்து யாரு கூப்பிட்டாலும் அப்படித்தா பதில் சொல்லுவா. ராச்சஸி... திமிரு மச்சி அவளுக்கு. உடம்புல ஒவ்வொரு அணுவுலயும் திமிரு மட்டும் தான் இருக்கு. ஏங்கூட இருந்திட்டே என்னை அத்தன கொற சொல்லுவா. அவளெல்லாம்..." எனக் கோபமாக மனைவியைக் குறைபாடத் தொடங்க,


"நீ சொல்றது கரெக்ட் மச்சி. ஒரு பொண்ணுக்கு இவ்வளவு திமிரு இருக்க கூடாது." என ராக்கியும் உற்சாகப்படுத்த, மது வாய் மூடாது பேசிக் கொண்டே சென்றான். நண்பனைப் பேச விட்டு சில நிமிடங்கள் ரசித்தவன்,


"நீ பைரவிய கல்யாணம் பண்ணதுக்கு அப்றம் நிறையவே மாறிட்ட மது. " என்க, மதுவை யாரோ சைலண்ட் மோடில் வைத்துவிட்டார்கள் போலும். அமைதியாகிப் ‌போனான்.


"யார்க் கிட்டயும் தேவையில்லாம பேசாத உன்ன, கோர்டு வாசல்ல ஜர்ஜம்மாவ கட்டிப்பிடிச்சி சுத்த வைச்சிட்டா. கம்பீரமா நேர் பார்வ மட்டும் பாக்குற உன்னைப் பாட்டு படி ஆட வச்சிட்டா. உன்னோட பேச்சு இப்பல்லாம் அளவுக்கு அதிகமா சத்தமாவே இருக்கு. காரணம்... பைரவி.. இல்லயா.... உன்ன உன்னோட இயல்புல இருந்து தடம் மாத்துனது. " என ஒரு மாதிரி குரலில் கேட்க, கார் புறநகர் சாலையில் வேகமாக பறந்தது. 


மதுசூதனன் யோசனையுடனேயே காரை ஓட்டினான். உண்மை தான். மதுசூதனன் இருக்கும் இடத்தைப் பூதக் கண்ணாடி வைத்து தேட வேண்டும் என்பார்கள் அவனின் ஆசிரியர்கள். 


'மச்சி எதாவது கருத்து சொல்லு. அடுத்து என்ன பண்ணலாம்?' எனப் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களுக்குப் புன்சிரிப்பையே பதில் அளிப்பான். உதவாத, வேண்டா எதையும் செய்ய சொல்லி தூண்டி விட மாட்டான். அதே நேரம் தேவைப்படும் போது அவர்களின் அருகில் நிற்பான். நிற்பான் அவ்வளவே. தேவயற்று குரல் எழுப்பி சண்டை போட்டு அவனை யாரும் பார்த்து இல்லை. 


பைரவி தான் அவன் சண்டை போடும் முதல் ஆள். 


அதே நேரம் அவனின் காதல் உணர்வையும், காம உணர்ச்சியையும் தூண்டி தன்னையே மறக்க வைக்கும் இடம் பைரவியின் அருகாமை.


முப்பத்தி ஒரு வயது கொண்ட ஆணிற்கு காதல் கடிதங்களை நீட்டாத பெண்கள் இல்லை. பள்ளி இறுதியில் தொடங்கி கல்லூரி, வேலை எனப் பலர் அவனுக்கு வலை விரித்தாலும், அவனாக வந்து சிக்கியது பைரவியிடம் தான். இல்ல சிக்க வைத்தார் அவனின் சித்தப்பா. 


திருமணம் செய்து கொண்டால் தான் சில பொறுப்புகளை உனக்கு தர இயலும். இல்லயேல் கிடைக்காது என்க பெண் வேண்டி திருமண தரகு மையங்களை அனுகினான். அதில் அவன் நேரில் பார்த்தது பைரவியை மட்டும் தான். பார்த்தும் பிடித்து விட தன் நிபந்தனைகள் அனைத்தையும் கூறினான். 


திருமணம் நடந்தேறியது. ஆனால் ஆறு மாதங்கள் கூட அவன் போட்ட எந்த கன்டிஷனையும் அவளால் ஃபாலோ செய்ய முடியவில்லை. அந்த ஆறு மாதமும் அவர்களின் இளமைக்கானத் தேடல் தான் ஆட்சி செய்ததால் அந்த கண்டிஷன்கள் கால்மிதயாகிப் போனதைக் கவனிக்கவில்லை அவன்.


ஆசையும் மோகமும் மெல்ல மெல்ல வடிய, இருவரின் உண்மை குணம் தலை தூக்கியது. அது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டையும் வாக்குவாதத்தையும் ஏற்படுத்தியது, மாதம் ஒரு சண்டை... பின் வாரம்… பின் நித்தம் மூன்று வேளை என மூன்று ஆண்டுகள் சென்று விட்டன.


என்று தன் கையில் விலங்கிடாது குற்றவாளி போல் அழைத்துச் சென்றாளோ அன்றே பிரிந்து விட்டனர். ஆறு மாதங்களாக எவ்வித ஒட்டும் இல்லை. அவனுக்கு மட்டும் தான் அப்படி. ஆனால் பைரவி தினமும் ஃபோன் மூலமாகவோ நேரில் சந்தித்தோ அவனிடம் பேசிக் கொண்டு தான் இருப்பாள். அவனின் பாஷையில் டார்ச்சல்... 


எப்பொழுதும் பைரவி செய்யும் பல செயல்கள் அவனை எரிச்சலடைய செய்தாலும், ரசிக்காத நாளே இல்ல. இரவு அவளுடன் கூடாமல் உறக்கமானது வராது. இந்த ஆறு மாதம் அந்த உறக்கத்தை இழந்து தான் வாழ்கிறான் அவன். 


சின்ன சின்ன கங்குகளாக இருந்த இருவரின் உரசல் தீப்பொறியாக மாறி விவாகரத்து வரை வெடிக்க காரணம் அந்த நிகழ்வு தான்.


Blue whale bodyguard security agent... 


security agent என்றதும் பீஸ்ட், குர்கா படத்தில் வருவது போல் வாட்ச்மென் வேலைக்கு ஆள் எடுக்கும் இடம் என்று நினைக்காதீர்கள். அது இல்லை இது.


பாடி கார்ட். அதான் கருப்பு கலர்ல பனியன் அணிந்து பெரிய பெரிய வீஜபிக்கள் கூடவே, பாதுகாப்பிற்குக் கையை விரித்துக் கொண்டே, ஃபோட்டோ எடுக்க, ஆட்டோகிராப் வாங்க என்று கூட்டமாக வரும் ரசிகர்கள், செய்தியாளர்கள் இடம் இருந்து காப்பாற்றிக் அழைத்துச் செல்வார்களே  பாடிகார்ட்ஸ்.‌ அந்த எஜென்ஸி தான் அது. 


தமிழ் நாட்டின் பல நடிகர் நடிகைகள் தொடங்கி, அரசியல் வாதிகள் தொழிலதிபர்கள் வரை முக்கிய புள்ளிகள் அனைவருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருபவன். பவுன்ஸ்ஸர்களுக்கும் பயிற்சி கொடுப்பவன்.


ட்ரெயினிங்கே அவந்தான் கொடுப்பான் எனும் போது அவனும் பாடி பில்டராகத் தான் இருப்பான்.


Exercise செய்து உடலை திடகாத்திரமாக வைத்திருப்பவனை பார்க்கையில் 'என்னடா பாடி இது பழநி படிக்கட்ட அடுக்கி வச்ச மாதிரி..' என்ற விவேக் ஸார் சொல்வது தா‌ன் ஞாபகம் வரும். 


ஆறடி உயரம். அடர்ந்த காடு போல் கருகருவென இருக்கும் கேசம். அகல நெற்றி. அதில் அவனின் உணர்வுகளைப் பேசும் புருவம். கூர்மையானப் பார்வை கொண்ட கண்கள். சாந்தமாகத் தெரிந்தாலும் அத்தனை திசைகளிலும் சுற்றி வரும். யார் என்ன செய்கிறார்கள் என்பதில் கவனமாய் இருப்பான். 


உதடுகள் எப்பொழுதும் புன்னகையைச் சிந்தாது இருக்கும். ஆனால் சிந்தும் போதும் எதிரில் இருப்பவர்கள் காலி என்று சொல்லும் அளவுக்கு வசீகரமாக இருக்கும். ஆனால் சிரிக்கத் தான் காசு கேட்பவன் போல நிற்பான். சிறு வயதில் இருந்தே யாருடனும் அதிகம் பேசியது இல்ல. நட்பு வட்டம் பெரிதாக இருந்தாலும், நெருங்கிய நட்பு ராக்கியைத் தவிர யாரும் இல்லை. அவனிடம் கூட மனம் திறந்து பேச மாட்டான் மது. ஆனால் ராக்கி மதுவைத் தனியாக விட்டது இல்லை. 


மிகவும் அமைதியானக் குணம் கொண்ட அவனை நான்கே வருடத்தில் கோர்ட் வாசலில் ஆடி பாட வைத்திருக்கிறாள் பைரவி. 


தந்தை முத்துராமன் முன்னாள் ராணுவ வீரர். மதுசூதனன் பத்து வயது இருக்கும் போது எல்லையில் நடந்த கலவரத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் தந்தையை இழந்தவன். தாய் சரண்யா. கணவனின் மரணத்திற்குப் பின் யாருடனும் பேசாது உடல் நலம் சரியில்லாது போக உயிர் நீத்தார். அடுத்தடுத்து பெற்றவரின் இழப்பு அதிர்ச்சியாகி மனத்தைப் பாதித்தது.


இப்போது அவனுக்கு என இருக்கும் ஒரு உறவு அவனின் சித்தப்பா சிதம்பரம். அவரின் மனைவி ஜெயஸ்ரீக்கு விடலை பையனான மதுசூதனனின் பொறுப்பைத் தன் கணவன் ஏற்றது பிடிக்காது, சுமை என நினைத்து ஜாடை மாடையாக பல முறை திட்டுவார்.


அது புரிந்ததாலோ என்னவோ மது விடுதியில் தங்கி படிப்பதாக சிதம்பரத்திடம் சொன்னபோது அவர் மறுக்கவில்லை. அவனை மிலிட்டரி ஸ்கூலில் சேர்ந்து விட்டார். ஏனெனில் அவரும் ஒரு ராணுவ வீரர். 


அண்ணன் இறப்பிற்குப் பின் குடும்பத்தைப் பார்க்க யாராவது ஒரு ஆண் வேண்டும் என்பதால் வேலையை விட்டு விட்டு வந்துள்ளார். அவர் தான் இந்த ஏஜென்ஸியை தொடங்கினார். 


அதீத லாபம் பார்க்காது ஓரளவு சென்று கொண்டிருந்த ஏஜென்ஸி விஸ்வரூபம் வளர்ச்சி கண்டு இன்று தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத bodyguard security agent டாக வளர்ச்சி கண்டது பள்ளி முடித்த உடன் மதுசூதனன் சிதம்பரத்திற்கு ஊன்றுகோலாய் நின்ற பிறகு தான்.


இளம் ரத்தம், புது புது முயற்சியால் தொழில் வளரவும் ஜெயஸ்ரீக்கு மதுசூதனன் மீது அன்பு பிறந்தது. பெரிய வீடு. பல ஏக்கர் நிலம். இரண்டு பெண் குழந்தைகளுக்கும் நல்ல இடத்தில் பல சவரன் நகை போட்டு திருமணம் முடிந்தது அவனின் உழைப்பால் எனும் போது வராதா என்ன? 


ஆனால் அந்தத் திடீர் பாச மழையில் நனைய அவன் தயாராக இல்லாது விலகியே இருந்தான். சிதம்பரம் வீட்டில் தங்குவது இல்லை. தங்கைகளுடன் அவ்வபோது பேசுவான் அவ்வளவே. ஆனால் இருவர் மீதும் கொள்ளை பிரியம் வைத்திருந்தான். அதிலும் இளைய தங்கையை மிகவும் பிடிக்கும் அவனுக்கு.


தனியாக ஒரு அகாடமி ஆரம்பிக்க ஆசைப்பட்ட அவனுக்குச் சிதம்பரம் இட்ட நிபந்தனை தான் திருமணம். தனித்து சென்று விட்டால் தங்களின் எதிர்காலம். சிதம்பரத்திற்கு பிறகு மதுவையும் அவனின் மனைவியையும் அண்டி பிழைக்கும் நிலை வந்துவிடுமோ என நினைத்து தன் அண்ணன் மகளை மதுசூதனனுக்கு முடிக்க திட்டமிட்டார் ஜெயா. அதை மது நிறைவேற்ற விடவில்லை.


அதற்கு பைரவி தான் காரணம் என அவருக்கு பைரவியின் மீது வெறுப்பு. அவருக்கு மட்டுமல்ல அவரின் மூத்த மகள் சைந்தவிக்கும் தான். 


"ஹாய் மதுசூதனன்… ஐ ஆம் பைரவி.. " என புன்னகையுடன் அவள் கரம் நீட்ட, சிறு புன்னகையுடன் அதை இறுக பற்றிக் கொண்டான் மது.


ஒரு காஃபி ஷாப்பில் நடந்த தங்களின் முதல் சந்திப்பை நினைத்து கொண்டே காரை ஓட்ட, காரின் முன் யாரோ வந்து விழுந்தனர். 


" கண்ணு தெரியாத கபோதி. சைக்கில் வேகத்துல வர்ற கார் முன்னாடி விழுந்தா சாக முடியாதுங்கிற அறிவு கூட ‌இல்லாம வந்து விழுறான் பாரேன்." என ராக்கி கத்த, மது அவனை முறைத்தபடி இறங்கி சென்று பார்த்தான்.  யாரும் காரின் முன் பக்கம் இல்லை.


" என்னடா ஆளக்காணும்.. ஒரு வேள பேயா இருக்குமோ... நைட் நேரம்... மணி பன்னெண்டு இருக்கும். இது கண்டிப்பா பேய் தான். வா மச்சான் போய்டலாம்." என ராக்கி சுற்றி இருந்த இருளை வெறித்து பயந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது மதுவின் காதில் சில ஓசை கேட்டது.


"ஸூ... எதோ சத்தம் கேக்குது. இந்த பக்கம் தான்.. வா." என காரை விட்டு விலகி இருளுக்குள் செல்ல,


ராக்கி, 'சாகுறதுன்னா நீயே போய் தனியா செத்துக்க.. என்னைத் துணைக்கு கூப்பிடாத.. ' என்பது போல் காரின் அருகிலேயே நின்று கொண்டான். அவனைத் திரும்பி பார்த்துவிட்டு மது துணிச்சலாக நடந்து சென்றான். 


"பயத்துல என்னென்னமோ தோனுதே. இரு நாம உள்ள கொஞ்சம் சரக்க ஊத்தினா பயம் வெளில தெரியாது." எனத் தூரத்தே கேட்ட சில பறவைகளின் சத்ததை கேட்டு பயந்து போனவன் காரின் கதவை திறந்து பாட்டிலை எடுக்க, காரின் பின்பக்கம் இருந்து சத்தம் கேட்டது, யாரோ‌ ஓடுவது போல்.


'இதுக்கு மேலயும் பயந்தா வீட்டுக்கு அனுப்புறதுக்கு பாடி கூட கிடைக்காது.' என நினைத்தவன், 


"யாரு அது... யாரு…" என‌க் குரல் உயர்த்தி கேட்க, பதில் சொல்ல யாரும் முன் வரவில்லை. 


அதே கேள்வியைப் பல முறை கேட்டுவிட்டு சலித்து போன ராக்கி, பாட்டிலை எடுக்க காரை திறக்க, அங்கு பின் சீட்டில் ஒரு உருவம் பயத்துடன் அமர்ந்திருந்தது. 


"ஏய்… யாரு நீ… கார்ல எப்படி ஏறுன‌...‌" எனக் கத்த,


"ஸார்.. ஸார் ப்ளிஸ்.. ஸார்.. கத்தாதீங்க ஸார்.. என்னைத் தேடிட்டு இருக்காங்க ஸார்... என்னைக் கொஞ்ச தூரத்தில இறக்கி விட்டுடுங்க ஸார்… ப்ளிஸ்.. " எனக் கெஞ்சினாள் ஒரு பெண்.


"முதல்ல இறங்கு கீழ. அர்த்த ராத்தில ஒரு பொண்ணு கார்ல வந்து ஏறுனா என்ன சொல்லுவாங்கன்னு தெரியுமா. நான் கேள்வி பட்டிருக்கேன். உன்ன மாதிரியான ப்ராஸ்ட்யூட் கும்மல பத்தி. அந்த மாதிரி ஆளு நாங்க கிடையாது. நான் அக்கமார்க் நல்லவன். நீ கீழ இறங்கு.. " எனக் கத்தவும். 


பெண் கெஞ்சிக் கொண்டே இறங்கினாள். 


யார் இவள்…


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...