முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

பனி 4


அத்தியாயம்: 4

காலை வேளை.. 


நேரம் ஒன்பது மணி...


பைரவி மிடுக்காய் தன் கஞ்சி போட்ட யூனிபார்மை அணியாது, ஃபார்மல் ஷர்ட் மற்றும் காக்கி பேண்ட் அணிந்திருந்தாள். காலில் இருந்த காக்கி ஷூ வின் லேஸ்ஸை, அங்கிருந்த ஸ்லிப்பர் ஸ்டான்டில் காலை தூக்கி வைத்து கட்டி முடித்துவிட்டு புறப்பட தயாராக இருந்தாள்.


சாரு, "குட் மார்னிங் பையூ… டிப்பன்?"  


"வேண்டாம்பா. அம்மா எனக்காகச் சமச்சி வச்சிட்டு காத்திட்டு இருப்பாங்க. அவங்க கிட்ட திட்டு வாங்கிக்கிட்டே சாப்பிட்டாத்தான் வயிறு நிறைஞ்ச ஃபீல் வரும். அத்தோட இன்னைக்கி வியாழக்கிழம. சாய் பாபா கோயிலுக்குப் போவாங்க. நான் தான் அவங்கள இறக்கி விடணும்.‌" என்றவள் தன் சாப்பரை எடுத்துக் கொண்டு அன்னை வீட்டிற்குச் சென்றாள். அங்கு அவள் சொன்னது போல் சாந்தி அவளுக்குப் பிடித்த பூரியைச் சுட்டு வைத்துவிட்டு, அதை வாயில் வைக்க விடாமல் திட்டுக் கொண்டே இருந்தார். 


கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற கொள்கை கொண்டவள் பைரவி. அதான் அன்னையிடம் திட்டு வாங்கினாலும்‌ மகளாய் அவருக்குச் செய்ய வேண்டியதைச் செய்ய தவறியது இல்லை. ஏனெனில் அவள் அந்த வீட்டின் பெண் வாரிசு மட்டுமல்ல, ஆண் வாரிசும் அவள் தான். 


திட்டிய அன்னையுடன் போராடி மூன்று பூரியை முழுங்கி விட்டாள். நான்காவதை வாய்க்குள் வைக்கும் முன் சாந்தி அவளின் முன்னாள் கணவனின் துதி பாட,  கடுப்பாகி போனவள் எழுந்து விட்டாள்.


'ச்ச… பூரியும் மசாலாவும் நல்லா இருக்கேன்னு ஒன்னு எக்ஸஸட்ராவா சாப்பிட நினைச்சேன். அது பொறுக்கல என்னோட அம்மாக்கு...‌' என முணுமுணுத்தபடி சாந்தியைக் கோயிலில் இறக்கி விட்டு விட்டு ஸ்டேஷனுக்குச் சென்றாள்.‌ அங்கும் அவளைக் கடுப்பேற்ற எனப் பலர் முன் வந்தனர்.‌


'இன்னைக்கி உனக்கு நாளே சரியில்ல பைரவி.'


"என்ன பைரவி! நேத்து நல்லா இருந்துச்சாமாமே கோர்ட்டு ஸீனு. ஆனாலும் நீ அந்த தம்பிய இவ்ளோ கொடும படுத்திருக்க கூடாது. பாவம் அது. " என உடன் பணிபுரியும் அனைவரும் அவளின் கணவனைப் பற்றி மட்டுமே கேட்டு கேலி செய்ய ஆரம்பித்தனர்.


"நாங்களும் தான் தினமும் புருஷனத் தூக்கி போட்டு அடிக்கிறோம். யாருக்காது தெரியுமா. இல்ல வெளில எல்லாருக்கும் தெரியுற அளவுக்கு விட்டுடுவோமா. நீ தான் இப்படி பண்ணிட்ட. 


புருஷனுங்க பொண்டாட்டிக்கிட்ட அடங்கி போக நினப்பானுங்க. எப்பன்னு தெரியுமா… கட்டில்ல மட்டும் தான்.. மத்த இடத்துல அவனுங்கள அடக்கி ஆள நினைச்சா இப்படித்தான் அசிங்கப்பட வேண்டி இருக்கும். 


அடுத்த கல்யாணம் பண்ணா புருஷன வீட்டுக்குள்ள தூக்கி போட்டு பந்தாடு. வெளில அவனுக்குக் குடுக்க வேண்டிய மரியாதைய குடு. அப்பத்தான் அடுத்த கல்யாணமாது நிலைக்கும். நீ இப்படியே விரைப்பா நின்னா அதுவும் ஒட்டாது.‌" எனக் கேலி செய்ய, காண்டாது பைரவிக்கு. 


'இதெல்லாத்துக்கும் அவெ ஒருத்தெ மட்டும் தா‌ன் காரணம். இருடா வர்றேன்.. ' என்றவள் முன்னாள் கணவன் காணச் சென்றாள்.


விடியும் வரை தன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய மதுசூதனன். அவன் தான் பைரவியின் கணவனாக இருந்தவன்.‌ மெல்ல போதையின் பிடியில் இருந்து தெளிந்து எழுந்து அமர்ந்தான். சுற்றி தன் பார்வையைச் சுழல விட்டான், எங்கே இருக்கிறோம் என்று யோசித்தபடி. 


"எப்ப வீட்டுக்கு வந்தோம்... ம்... ம்ச்… நியாபகமே இல்லயே. நைட் ராக்கிகூட பாருக்கு போனோம். நல்லா ஊத்திக்கிட்டோமா. இல்லயே அளவாதன குடிச்சோம். அப்றம்… அப்றம் ஏன் மண்ட வலிக்கிது... எப்படி வீட்டுக்கு வந்தோம்." என நேற்று இரவு நடந்தவற்றை நினைவு கூர்ந்து பார்க்க, அது வர மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது. 


படுக்கைக்குக் கீழே அவனின் நண்பன் ராக்கி என்கிற ராதா கிருஷ்ணன் துயில் கொண்டிருக்க, "டேய் ராக்கி.. ராக்கி.. உனக்குத் தெரியுமா நாம எப்படி எப்ப வீட்டுக்கு வந்தோம்னு. டேய்... ராக்கி… எந்திரி ராக்கி..." என உசுப்பி கேட்க, அவன் மலை போல் அசையாது இருந்தான்.


"ச்ச… அதிகமா குடிச்சிட்டோம் போல. இனி கொஞ்சமா குடிக்கணும். ம்... தலையெல்லாம் ரங்க ராட்டினம் மாதிரிச் சுத்துதே. போய் ஃபிரிட்ஜ்ல என்ன இருக்குன்னு பாப்போம். " என எழுந்து நிற்க, காலில் சுர் என்ற வலியை உணர்ந்தான். அடிபட்டிருந்தது. கையிலும் முகத்தில் சில இடங்களிலும் ரத்தம் கட்டியிருப்பது போல் கருப்பாக தடித்து இருந்தது. விரல்கள் மடக்க முடியாத படி வலி எடுத்தது.


"அடிச்சோமா... இல்ல அடி வாங்குனோமா... தெரியலயே... " எனக்  குழப்பியபடி ஹாலிற்கு வந்தான். 


சிறிய இடம்... ஒரு ரூம்… ஹால் கிச்சன்... குளியலறை என மொத்த இடத்தையும் ஒரு சதுரப் பெட்டிக்குள் அடைத்து வைத்து விடலாம். ஆனால் வெகு சுத்தமாக, நீட்டாக, இருக்க வேண்டிய பொருட்கள் மட்டும் இருந்தது. தேவையற்று என எதையும் அங்கும் பார்க்க முடியாது. 


அவன் தங்கி இருப்பதை வீடு என்று சொன்னால் அவனின் முன்னாள் மனைவி சண்டைக்கி வருவாள். ஏனெனில் பைரவி விஜய் படக் கொள்கையை கடைபிடிப்பவள். 


அதான், 'கலஞ்சிருந்தாத்தா வீடு. அடுக்கி வச்சா அது மியூசியம். ' 


அவளின் அறை கலைந்து தான் கிடக்கும். அப்போது தான் அது உயிர்ப்புடன் இருப்பது போல் உணர்வாள். அவளிடம் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் வைத்திருப்பாள். ஏன் வாங்கினேன் என்று தெரியாது, 'அழகா இருக்கு.' எனக் கண்ணில் சிக்கும் அனைத்தும் அவள் அறையில் இருக்கும். அதற்கு ஒரு பெயரும் இருக்கும். 


அவளின் ஸ்கூட்டிக்கு சாப்பர் என்று பெயர். 'ஹெலிகாப்டர்ல பறக்குறது முடியாத காரியம். அதுனால நான் வாங்கிருக்குற ஸ்கூட்டிக்கு அதோட பேர வச்சிட்டேன்.'


அவளின் கடிகாரத்திற்கு sprint, அதாவது வேகம் என்று பொருள், ' கடிகாரத்த பாக்கும் போதெல்லாம் வேகமா இருக்கணும்னு தோனணும். அதுக்கு தான் இந்த பேரு.‌' 


பட்டம் விட தெரியாது. ஆனால் அவளிடம் இருந்தது.‌ மந்திரி கலந்துகொள்கிறார் என்று பந்தோபஸ்திற்கு சென்ற பட்டத்திருவிழாவில் வாங்கி வந்து வைத்தாள். அதற்கு racket என்று பெயர். அது ஒரு ஓரத்தில் கிடக்கிறது. இன்னும் நிறைய இருக்கு. அததுக்கு ஏற்றார் போல் காரணங்களோடு பேர் வைப்பாள். மதுவுக்குத் தயிர் சாதம் என்று வைத்தது போல். 


எப்படித் தயிர் சாதம் என்ற பெயர் பொருந்தும் என்பது போகப் போகத் தெரியும். 


ஆனால் மதுசூதனன். அதான் பைரவியின் கணவன். அவளுக்கு நேர் எதிரானவன். சிறு தூசியைக் கண்ணில் கண்டால் கூட பிடிக்காது. அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பவன்.‌ எந்தப் பொருளும் அதன் இடத்தை விட்டு நகரவோ நகர்த்தவோ கூடாது.‌ 


இப்போது அவன் இருக்கும் வீடு அவனின் அலுவலகத்திற்கு மேல் அடுக்கு. திருமணத்திற்கு பின் இங்கு தான் அழைத்து வந்தான் மனைவியை. 


'நீ நம்ம ரூம குப்பமேடாக்குற.. சுத்தமான வச்சிக்க...' எனத் திருமணமான நாளில் இருந்து பாடம் நடத்துகிறான். அவனின் மனைவி தான் சரியாகப் பாடங்களைக் கவனிப்பது இல்லை. 


க்ளிங் என்று பாட்டில்கள் உரசும் சத்தத்துடன் ஃப்ரிஜ்ஜை ஓப்பன் செய்தவனின் கண்களுக்கு இரு முட்டையும், இரு எலுமிச்சை பழங்களும் தென்பட்டன. கூடவே பால் ஓட்ஸ் எனச் சகலமும் இருக்க, தேவையானதை எடுத்துக் கொண்டு கதவை மூடி விட்டு சமையலறைக்குள் சென்றான்..


அடுப்பைப் பற்ற வைத்து முட்டையைக் கழுவி, ஓடிலாமல் உடைத்து ஊற்றி ஆம்லெட் போட்டவன், லைட்டரை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு, பழத்தைப் பிழிந்து சிறிதளவு உப்பும் நீரும் சேர்ந்து பருகினான். அதன் புளிப்பு சுவைச் சுற்றெனத் தலையில் ஏற, அதைத் தட்டியபடி போட்ட ஆம்லேட்டைத் தட்டில் போட்டு ப்ரெட்டை டோஸ்ட் செய்து, அதில் வெண்ணையைத் தடவி எடுத்து வைத்தான். சமயல் முடிந்த பின் அனைத்தையும் டிஸ்யூ கொண்டு துடைத்து எடுத்தான்.


டைனிங் டேபிளில் அமர்ந்து தட்டில் இருக்கும் ஆம்லேட்டின் வாசத்தை முகர்ந்து பார்த்தவனின் புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டன. மீண்டும் தட்டை முகர, 


"என்ன ஸ்மெல் வித்தியாசமா இருக்கு... ஆம்லேட் ஸ்மெல் இல்லயே இது… இது... இது... " எனக் காற்றை முகர்ந்த படி வந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


"what the hell is this... " என அலறியவன்,


"ராக்கி... ராக்கி... டேய் பரதேசி... எங்கடா இருக்க. எந்திரி டா... " எனக் கத்திக் கொண்டே படுக்கை அறைக்குள் சென்று நண்பனை எழுப்பினான். 


"தலைவா அஞ்சி நிமிசம் தலைவா… இப்பத் தான் நயன்தாரா என்டரி. அடுத்து தமன்னாவும், சமந்தாவும், க்யூல நிக்கிறாங்க. என்னைப் பாக்கணுமாம். இதோ வந்திட்டேன். நயன்... " எனச் சினிமா கதாநாயகிகளுடன் செல்ஃபீ எடுத்து மகிழ்ந்தவனின் முகத்தில் தலையணையைத் தூக்கி எறிந்து, 


"எந்திரிடா பரதேசி... " என்க, அவன் முகத்தில் விழுந்த தலையணையைத் தலைக்கு வைத்துக் கொண்டு தமன்னாவுடன் செல்ஃபீ எடுக்க சென்றான் ராக்கி. 


இவன இப்படியே விட்டா எந்திரிக்க மாட்டான் என நினைத்த மது, சுற்றி முற்றி பார்த்தான். ஐயன் பாக்ஸ் கண்ணிற்குத் தெரிந்தது. உடனே அதை ப்ளக்கில் சொருகி சூடேற்றி நண்பனின் கையில் வைக்க, 


"அம்மா...ஆ...‌" என அலறிக் கொண்டே எழுந்து அமர்ந்தான் ராக்கி. 


"*** எதுக்குடா என்னை எழுப்புன. மணி பதினொன்னு தான ஆகுது. லூசுப் பயலே… " எனக் கத்தி விட்டு மீண்டும் படுத்துக் கொள்ள, 


" டேய் நேத்து என்ன நடந்ததுன்னு உனக்கு நியாபகம் இருக்கா? " 


" I know… பாருக்கு போனோம். நாலு பாட்டில் உள்ள விட்டோம். அப்றம் வந்து சமத்தா படுத்திட்டோம். ரொம்ப நல்ல பசங்கல்ல டா நாம. " என்க,


"மூதேவி வெளில வந்து பாரு. நாம என்னத்தையோ‌ பண்ணிருக்கோம். வாடா... வா... " என அவனை ஹாலிற்கு இழுத்துச் சென்றான் மது. 


அங்கு செருப்புகளைக் கலட்டி வைக்க என ஒரு ஸ்டாண்ட் இருக்க, அதன் அருகில் ஒரு உருவம் தன் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தது. அதன் வடிவத்தைப் பார்த்தால்‌ சந்தேகமே இல்லை ஒரு பெண் தான். 


" யாரு மது இது.. இவளுக்காகத்தான் உம்பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணியா. ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் தைரியம். விவாகரத்து வாங்குன அந்த நாளே வேற ஒரு பொண்ண கூட்டீட்டு வந்து வீட்டுல வச்சிருக்கன்னா தைரியத்தின் மறு உருவமாடா என் நண்பன். சும்மா வா சொன்னாங்க பொண்டாட்டி செத்தா புருஷெ புது மாப்பிள்ளன்னு. என்ஜாய்.. " எனச் சொல்லி விட்டு உள்ளே செல்ல அவனை அடித்து இழுத்தான் மது. 


"ஏண்டா.. " 


"நேத்து முழுக்க நீயும் நானும் ஒன்னாத்தானாடா இருந்தோம். அப்றம் எப்படி டா இந்த பொண்ணு எவ்வீட்டுக்குள்ள வந்தது. " 


"எனக்கு எப்படித் தெரியும். நீங்க தான் காதலர்களாச்சே. எனக்குத் தெரியாம எப்படிக் கூட்டீட்டு வந்திருக்க. வந்ததுதா வந்த ஒரு மூளைலயாப் படுக்க வப்ப. பாரு பாக்கவே பாவமா இருக்கு." என்க, அவனை முறைத்தான் மது. 


"டேய் இது யாருன்னே தெரியலடா. எப்படி வந்ததுன்னும் தெரியல. நீ போய் அந்தப் பொண்ண எழுப்பி, என்னன்னு விசாரி.. போ. " என்க,


" நான் எதுக்கு எழுப்பணும்? உன்னோட காதலி தான.. " என்க, இருவரும் சண்டை போட ஆரம்பித்தனர், யார் அந்தப் பெண்ணை உசுப்புவது என்று. 


நீ செய்... நீ செய்.. என அடித்துக் கொள்ள, அந்தப் பெண்ணிடம் இருந்து சிறு அசைவு தெரிந்தது. அப்பாடா நமக்கு வேலை வைக்காம அதுவே எந்திரிச்சிருச்சி. 


" ஹலோ... மேடம்... மேடம்... யாரு நீங்க? எதுக்கு எங்க வீட்டுக்குள்ள வந்திருக்கீங்க." என மதுசூதனன் கேட்க,


" எப்படி வந்தம்மா நீ? சுவரேறி குதிக்க வாய்பில்லை. ஏன்னா இது மூனாவது மாடி. சுத்தி பல செக்யூரிட்டி இருக்கும் போது யார் கண்ணுலயும் படாம வந்திருக்க முடியாது. எப்படி வந்தம்மா நீ. " என ராக்கி மீண்டும் அதே கேள்வியை கேட்க பதில் இல்லை. 


எப்டி வரும் அசையத் தான் செய்தாள் பெண். அதற்குள் இவர்கள் பேச அவளுக்கு எதுவும் காதில் விழ வில்லை. அவள் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு தரையில் சரிந்தாள். துயில் கொண்டிருக்கும் அவளிடம் தான் இவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.‌


துயில் கொள்கிறாளா! அல்லது மயங்கி விட்டாளா! இல்லை உயிர் போயிருக்குமோ? என்ற சந்தேகம் வர, மதுசூதனன் சென்று தண்ணீரை எடுத்து வந்து முகத்தில் தெளித்தான். 


உயிர் இருக்கிறது என்பதை அவளின் புருவங்கள் அசைவில் இருந்து தெரிய, மங்கை மயங்கி தான் சரிந்திருக்கிறாள் என்பது புரிந்தது. 


"ஏ ராக்கி மயங்குச்சி அந்த பொண்ணு." மது,


"நம்ம மூஞ்சிய பக்கத்துல கூட பாக்கலயே." ராக்கி. 


"அப்றம் ஏன் மயங்குச்சி?" மது.


"பசில மயங்கிருக்கலாம்.. எதாவது இருந்தா எடுத்திட்டுவா. தண்ணி இன்னும் கொஞ்சம் ஊத்தி எழுப்பி சாப்பிட சொல்லுவோம்.‌" என்ற ராக்கி பயந்து விட்டான் போலும்.


"கரெக்ட்டு… சாப்பிட்டால்தான் தெம்பு வரும். தெம்பு வந்தா வீட்ட விட்டு வெளில போகும்." மது. 


"ஏன்டா உனக்கு மனசாட்சியே இல்லயா?" 


"அதெல்லாம் இருக்கு.. இப்ப உனக்கு அதுல என்ன வேணும்." என மது எரிந்து விழ, ராக்கியின் மூளையில் மின்னல் வெட்டியது‌.‌ 


"டேய்...‌ நேத்து நைட் சண்ட போட்டு நாம இந்தப் பொண்ண காப்பாத்திருக்கோம்டா. நியாபகம் இல்ல. " என்றான் ராக்கி. போதை தெளிந்து விட்டது போலும். ஆனால் இன்னும் தெளியாமல் இருந்த மது,


"காப்பாத்துனோமா! யார் கிட்ட இருந்து?" என்றவனுக்கு நேற்று இரவு நடந்ததை விளக்கத் தொடங்கினான்‌ ராக்கி. 


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...