முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 6


 

அத்தியாயம்: 6


காலைப் பத்து மணி...


விக்னேஷ் தன் பைக்கை எடுத்துக் கொண்டு போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று SI வெங்கட்ராமனை அழைத்துக் கொண்டு அன்னை காப்பகத்திற்கு செல்ல முடிவு செய்தான். இன்றைய நிகழ்வுகளைத் திட்டமிட்ட படி காவல் நிலையம் வர, அதில் ஓரிருவர் தவிர வேறு‌ யாரும் இல்லை. 


" SI வெங்கட்ராமன் ஸார் எங்க.?" என அங்கிருந்த காவலாளிகளிடம் கேட்க,


" அவரு பாதுக்காப்பு பத்தோபஷ்த்துக்காக இங்கருக்குற சர்ச்சுக்கு போயிருக்காரு தம்பி. நீங்க வந்தா உங்கள அங்க வரச் சொல்லிச் சென்னாரு." என அவர் சொல்ல, விக்னேஷ் அங்குக் கிளம்பினான். 


அது தேவாலயம். இரு கரம் நீட்டி நம்மை அரவணைக்க வருவது போல், கருணைக் கடலாய் தோற்றம் தந்தார் தேவன். ஆலயம் அளவில் சிறியதாய் இருந்தது. ஆனாலும் மக்கள் கூட்டமாக இருந்தனர். அங்கு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. பின் பக்கம் கல்லறைத் தோட்டம். ஒருவரின் இறப்புக்கு பின் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொண்டிருந்தனர். 


பாதிரியார், அந்த ஏரியா மக்கள். சில காவலர்கள், ஏன் வெங்கட்ராமனே அங்குத் தான் இருந்தார்.‌ அனைவரும் மனமார பிராத்தனை செய்ய, அவர்களைத் தொந்தரவு செய்யாது வெளியிலேயே நின்றான் அவன். 


இரு குழந்தைகளுடன் அங்கிருந்த இறைவனின் முன் மண்டியிட்டு அமர்ந்து கண்ணீரால் இறைவனுடன் உரையாடிக் கொண்டிருந்தார் ஒரு பெண். அவரின் அருகில் தாய் எதற்கு அழுகிறது என்று தெரியாமலேயே அழும் ஒரு ஐந்து வயது பெண் குழந்தை. மற்றொரு ஆண் குழந்தையோ தாயின் அருகில் இருக்காமல் எழுந்து விளையாடிக் கொண்டிருந்தது. 


சுற்றி தன் பார்வையை சுழல விட்டவன் கண்களுக்கு ஒரு கல்லறையில் நிறைய பூக்கள் போடப்பட்டு இருந்தது பட்டது. இப்போது தான் அதை வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்து அதன் அருகில் சென்று பார்த்தான். ஆரோக்கியராஜ் என எழுதி அதில் தோற்றம் மறைவு என இரு வெவ்வேறு தேதிகள் போடப்பட்டு இருந்தன. அவர் இறந்து நான்கு நாட்கள் தான் ஆகிறது. 


"குட்மார்னிங் ஸார்." என வெங்கட் சல்யூட் அடிக்க,


"‌குட்மார்னிங் ஸார். யாரு இது?. எப்படி இறந்தாங்க?." எனக் கேடட்டான் விக்னேஷ்.


" ஸார், இங்கருக்குற டீ எஸ்டேட்டுல அசிஸ்டன்ட் மேனேஜ்ர் ஸார். நாலு நாளைக்கி முன்னாடி தா தற்கொல பண்ணிக்கிட்டாரு." என்க விக்னேஷ் அவனை நக்கலான சிரிப்புடன்‌ உற்று பார்த்தான்.


" ஸார் உறுதியாத்தா ஸார் சொல்றேன். அவரு கைப்பட லெட்டர் எழுதி வச்சிட்டு தா ஸார் செத்திருக்காரு." என்றான் அவசர அவசரமாக.


" ஓ.! என்ன எழுதியிருந்தது அதுல." 


" ஸார், அவர் பொண்ணுங்க விசயத்துல கொஞ்சம் வீக். எஸ்டேட்ல வேல பாக்குற ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க போய், பிரச்சனை ஆகிடுச்சி. அதுனால அந்த எஸ்டேட் மேனேஜருக்கும் இவருக்கும் சண்ட வந்து, வேலைய விட்டுத் துரத்தி விட்டுட்டாங்க. வீட்டுல இந்த விசயம் தெரிஞ்சதுனால பொண்டாட்டி, குழந்தைகள கூட்டீட்டு அதோட அம்மா வீட்டுக்குப் போயிடுச்சி. அதுனால மன உளைச்சல இருந்தவர். தூக்க மாத்திர சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாரு. இப்ப இறந்து போன அந்தாம்மாவோட புருஷனுக்கு இரங்கல் கூட்டம் தா ஸார் உள்ள நடக்குது.‌" என விளக்கம் தர, அது நமக்குத் தேவையில்லாதது என நினைத்த விக்னேஷ் நடக்கத் தொடங்கினான். பின்,


" நா அந்த லெட்டர பாக்கலாமா?." என்க.


" அது ஹெட் ஆஃபில்ல இருக்கு ஸார். பாக்கலாம். அப்றம் ஸார் நீங்கப் பாக்கனும்னு சொன்னிங்ளே அந்தக் காப்பகத்தோட தலைவர். அவரு தா. தயானந்தன் ஐயா‌." என மண்டியிட்டு அமர்ந்து அழுதுக் கொண்டிருந்த பெண்ணின் அருகில் நின்ற ஒருவரை கைக்காட்டினார். 


அங்கு வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பாவுடன், ஒரு முடிகூட கருப்பாக இல்லாது தலை தாடியென அனைத்தும் நரைத்து ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரின் கையில் அந்தப் பெண்ணின் ஆண் குழந்தை இருந்தது. விடாமல் அழுத அந்தப் பெண்ணின் தலையில் கை வைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டே நடந்து வந்தார் அந்தப் பழுத்த பழம். 


இவர்களை நெருங்கவும், "ஐயா!. இவரு தாய்யா நம்ம சுருதி கேஸ்ஸ விசாரிக்க வந்தவரு. பேரு விக்னேஷ்வரன். சென்னைல ACP யா இருக்காரு." என அறிமுகம் செய்தார் வெங்கட்ராமன்.


" வணக்கம் தம்பி. நானே உங்கள பாக்கனும்னு நினச்சேன். எங்க பொண்ணு சுருதி எதுக்காகத் தற்கொலை பண்ணிக்கிச்சின்னு நீங்கக் கண்டுபிடிச்சி தரனும்னு கேக்கலாம்னு இருந்தேன். நல்ல வேல உங்கள நா இங்க பாத்துட்டேன். ரொம்ப நல்ல பொண்ணு அது. இருக்குற இடமே தெரியாம அமைதியா இருக்கும். அத போய் யாரோ தற்கொலை பண்ண தூண்டி விட்டுருக்காங்க. அவசியம் அது யாருன்னு நீங்கத் தா இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டனும் தம்பி." எனச் சுருதியின் அருமை பெருமைகளைச் சொல்லி, அவள் இல்லையென வருத்தப்பட்டார்.‌


" எனக்குச் சுருதியா பத்தி கொஞ்சம் விசாரிக்கனுமே." விக்னேஷ்


" நல்லா விசாரிங்க தம்பி. டேய் கதிரேசா. டேய்." என அழைக்க வேகவேகமாக ஒருவன் நடந்து வந்தான். 


" என்னங்கையா?." என்ற படி. 


" இவரு நம்ம சுருதிய பத்தி தெரிஞ்சிக்கனுமாம். நீ அவருக்கு வேண்டியத செஞ்சி குடு. சரியா. நா வர்றேன் தம்பி. நீங்க எதுனாலும் இவெங்கிட்ட கேளுங்க தம்பி." என விக்னேஷ் பார்த்துக் கைக்கூப்பி விட்டுச் சென்று விட்டார். அதுவும்,


" நீ எதுக்கும் கவலப்படாதம்மா. உன்னோட நல்ல மனசுக்கு பிள்ளைங்க ரெண்டும் அருமையா இருக்கு. அதுகல வளத்து பெரியாளாக்கு. உம்புருஷெ இன்ஷுரன்ஸ் எதுவும் போட்டிருக்கானா. உனக்கு எதுவும் தெரியுமா." என அந்தப் பெண்ணுடன் பேசிய படியே,


" என்ன ஸார் தெரிஞ்சிக்கனும் நீங்க?." கதிரேசன் சற்று மிரட்டலாக. 


" அது அந்தப் பொண்ணோட..." என விக்னேஷ் ஆரம்பிக்கும் முன்னே, 


" ஸார், அந்தப் பொண்ணுக்கு பத்து வயசு இருக்கும்போது அதோட அப்பாம்மா விபத்துல இறந்து போச்சு. ஐயா தா கூட்டீட்டு வந்தாரு. நல்லா படிக்கும். வெளி ஊரு காலேஜ்ல படிக்க வைக்கிறேன்னு சொல்லி அதுக்கு பிடிச்ச காலேஜ்ல தா சேத்து விட்டாரு ஐயா. என்ன அதுக்கு சரியான சம்பளத்துல வேல தா கிடைக்கல. அந்தத் துணிக்கடக் காரென் சரியில்லன்னு ஒருக்க சொல்லி அழுதுச்சி. ஆனா அந்தப் பொண்ணு காதலிக்கும்னு நாங்க நினைக்கல. அந்தப் பையன் வீட்டுல தா எதாவது சொல்லிருப்பாங்க. அதா மனசொடிஞ்சி போய் இப்படி பண்ணிக்கிச்சி. இதுல நீங்க என்னத்த விசாரிக்கி போறிங்க." எனக் கதிரேசன் விக்னேஷ்னை பேசவே விடாது அனைத்தையும் ஒப்பித்தார். 


"எப்படி இறந்தது சுருதி தான்னு உறுதி பண்ணிங்க. ஏன்னா உடம்பு தண்ணீல உப்பி இருந்ததுன்னு சொன்னாங்க. அப்றம் யாரு உங்க காப்பகத்துல இருந்து முதல்ல போய்ப் பார்த்தா." 


" நாந்தா ஸார் பாத்து அடையாளம் சொன்னேன். அந்தப் பொண்ணு ஒருக்க கேட் சாத்தும்போது கைய ஊடால விட்டுடுச்சி. அது இரும்பு கேட்டு. அதோட சுண்டு விரல் மொத்தமா நசுங்கி போச்சி. அத வச்சி தா சொன்னோன் ஸார்." 


"எந்தக் கை." 


" ம்ச்... வலது கை விரல் ஸார்." என்றார் முகம் சுண்டி.


" மாசா மாசம் உங்க காப்பகத்துக்கு வரும்மா அந்தப் பொண்ணு. "


"ஆமா ஸார். நாலு நாள் சேந்தாப்பல லீவ் குடுக்கமாட்டான் அந்தக் கடக்காரெ. அதுனால மாசத்துல ஒரு ஞாயிறு இங்க வந்து இருந்துட்டு போகும். வேறென்ன ஸார் வேணும்." 


" எனக்கு அந்தப் பொண்ணு தங்குன ரூம்ம பாக்கனும். நாம போலாமா உங்க ஆஸ்ரமத்துக்கு?." 


" அது முடியாது. எங்க ஆஸ்ரமத்த விட்டு வெளில வேலைக்கி போய்ட்டாங்க அப்படின்னாலே அவங்கள நாங்க தங்க அனுமதிக்கிறது இல்ல. வரலாம் பாக்கலாம் போய்டலாம். அவ்வளவு தா. தங்கல்லாம் கூடாது. அது வேலைக்கி போக ஆரம்பிச்சி மூணு வர்ஷத்துக்கு மேல ஆச்சி. அதுமட்டுமில்லாம தனி தனி ரூம் குடுக்க நாங்க ஒன்னும் ஹோட்டல் நடந்ததல. ஒரு ரூம்கு நாலு பேர். இப்ப அதோட பொருள்னு எதுவுமே எங்க ஆஸ்ரமத்துல கிடையாது. நீங்க அங்க வந்தா ஒன்னும் கிடைக்காது." 


"அப்ப இங்க வந்தா எங்க தங்குவாங்க." 


" அந்தப் பொண்ணு மாறியே எங்க ஆஸ்ரமத்துலேயே வளந்து வேலைக்கி போன நிறைய பேர் இங்க இருக்காங்க ஸார். அதோட ஃப்ரெண்டு கூட இங்க தா இருக்கு. பேரு நர்மதா. இங்க தா ஒரு எஸ்டேட்டுல வேல பாக்குது. அது வீட்டுல தா தங்கும். நீங்க நர்மதாவ பாக்கனும்னா உங்கள SI கூட்டீட்டு ‌போவாரு" என விக்னேஷ் கேள்வி கேட்கும் முன் பதிலைத் தயாராக வைத்திருந்தார்.


" ம்... ஓகே. நா எதுக்கும் நாளைக்கி உங்க ஆஸ்ரமத்துக்கு வந்து ஒருக்க பாக்குறேன். இப்ப நீங்கப் போலாம்." 


" ஸார், உங்களுக்கு எது வேணுமோ அத இங்கயை கேளுங்க. நா பதில் சொல்றேன். அத விட்டுட்டு அங்கல்லாம் நீங்க வரக் கூடாது. நாங்க போலிஸ்ஸ ஆஸ்ரமத்துக்குள்ள விடுறது இல்லை." 


" ஏ?. "


" ஸார், அதெல்லாம் சொல்ல முடியாது. எங்க காப்பகத்துக்குள்ள போலிஸ்கு அனுமதி கிடையாது. அவ்வளவு தா." என்றவரை எடை போடும் பார்வை பார்த்தான் விக்னேஷ். 


வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். சந்தன கலர் வேட்டி, அரக்கு நிற சட்டை முழு கைச்சட்டை. அதை மடித்து கூட விடாமல் கை முழுவதையும் மறைத்திருந்தார். முகத்தில் ஒருவித எரிச்சல். 'இவனுக்கெல்லாம் நா பதில் சொல்ல வேண்டி இருக்கு. ' என ஒரு சடைப்பு தன்மை அவரிடம் இருந்தது. அவரைப் போகச் சொல்லியவன், செல்லும் அவரைச் சந்தேகத்தோடு பார்த்தான்.‌


"‌நாந்தா சொன்னேல ஸார். ஆஸ்ரமத்துக்குள்ளலாம் விடமாட்டாங்கன்னு. எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சரி தயா ஐயா அவங்கள நேர்ல போய்ப் பாத்துதா பேசுவாரு.‌ அந்த அளவுக்கு மரியாதையான ஆளு ஸார்." 


" இந்தாளு தயானந்தன் கிட்ட என்ன வேல பாக்குறான்.?" 


" ஸார் அந்த ஆஸ்ரமத்துக்கு இவரு தா சார் எல்லாமே. மேனேஜர் மாறி. அங்க இருக்குற குழந்தைகளுக்குச் சாப்பாடு, துணி, தயா ஐயாக்கு சொந்தமான அறக்கட்டளைய பாத்துக்கிறது அப்படின்னு இவரு இல்லாம எதுவும் இல்ல. தயா ஐயாவோட கணக்கு வழக்கெல்லாம் இவரு தான் பாப்பாரு. அவரு இல்லாம அந்தக் காப்பகத்துல ஒன்னும் நடக்காது ஸார். ஐயாவோட நம்பிக்கைக்கு ஏத்த ஆளு ஸார்." 


" இப்ப இங்க இடத்துக்கு உங்க தயா ஐயா அவரோட அல்லக்கையோட வர்ரதுக்கு காரணம் என்ன." என நக்கலாகவே கேட்டான் விக்னேஷ். ஏனோ அவனுக்கு அந்தக் கதிரேசனை பிடிக்க வில்லை. 


" ஸார், அப்படி சொல்லாதிங்க ஸார்.‌ செத்துப்போன ஆரோக்கியராஜும் தயா ஐயா ஆஸ்ரமத்துல வளந்தவரு தா. கதிரேசனும் ஆரோக்கியராஜும் ஒரே வயசுக்காரங்க. ஆரோக்கியம் ஆஸ்ரமத்த விட்டு வெளில வந்து பல வர்ஷம் ஆனாலும் இன்னும் மறக்காம இருக்காரு தயா ஐயா. இது மட்டுமில்ல ஸார் அவரு ஆஸ்ரமத்துல இருந்து வெளில போனவங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா அவரே வந்து நிப்பாரு. இப்ப அந்த ஆரோக்கிய ராஜ் குடும்பத்துக்குச் செய்ற மாறி எல்லாருக்கும் நிறையவே செய்வாரு." என்க, விக்னேஷின் புருவம் முடிச்சிட்டது. 


" அப்ப உங்கய்யா ஆஸ்ரமத்துல சேந்தா அல்பாயுஸ்ல போக வேண்டியது தா. இல்லையா.!" 


" ஐய்யோ‌ ஸார்! அப்படில்லாம் இல்ல. அங்க படிச்சி வளந்த எத்தன பேரு பெரிய பெரிய இடத்துல எல்லாம் வேல பாக்குறாங்கன்னு தெரியுமா. எங்க தயா ஐயாக்கு சொந்தமா ஒரு ஸ்கூல் இருக்கு ஸார். எட்டு வரைக்கும் இந்த ஏரியால இருக்குற எல்லா பசங்களுக்கும் அவரு தா குறைஞ்ச கட்டணத்துல படிப்ப தர்றாரு. அதுமட்டுமில்லாம அவரோட பையன் போஸ் ஐயாவும், அப்பா மாறியே இங்க சுத்தி இருக்குற மக்களுக்கு இலவசமாக மாசத்துக்கு ஒருக்க மெடிக்கல் கேம்ப் நடத்தி மருந்து மாத்தர எல்லாம் தருவாரு. 


அநாதையா இருக்குற குழந்தைகளுக்குத் தனியா, மனவளர்ச்சி இல்லாத பசங்களுக்கு தனியான்னு, பல ஏக்கர் நிலத்துல மக்களுக்காகவே குடுத்து சேவ செய்றவரு ஸார் அவரு. இங்க சுத்தி இருக்குற ஜனத்துக்கு நல்லது செய்ற கடவுள் மாறி ஸார்.‌" எனப் பயபக்தியுடன் கூறினார். 


" மிஸ்டர் வெங்கட்ராமன். உங்களுக்குச் சம்பளம் குடுக்குறது யாரு. கவர்மெண்டா இல்லை உங்க தயா ஐயாவா?." 


" ஸார்." 


" தயானந்தத்தோட புகழ் பாட உங்களுக்கு ஒன்னும் சம்பளம் தரல. அது மக்களோடது. அவங்களுக்கு விஸ்வாஸமா நடந்துக்கங்க. பாதிக்கப்பட்ட வங்க பக்கம் இருந்தும் கொஞ்சம் யோசிச்சி வேல பாருங்க." 


"சாரி ஸார்." 


" எனக்கு அந்த ஆரோக்கிய ராஜ் இறந்தப்போ எடுத்த ஃபோட்டோஸ். அப்றம் அங்க கிடைச்ச திங்ஸ். போஸ்ட்மாட்டம்‌ ரிப்போர்ட்.‌ முக்கியமா அவெ எழுதுனான்னு சொன்ன லெட்டர். எல்லாம் வேணும். ஏற்பாடு பண்ணுங்க." 


" ஸார், அது முடிஞ்சி போன கேஸ் ஸார். எதுக்கு ஸார் தேவையில்லாதத கிளறுறீங்க." என்றவரை முறைத்தான் விக்னேஷ். 


" எது தேவன்னு எனக்குத் தெரியும். நீங்க நா கேட்டத ஈவ்னிங் குள்ள எடுத்து வைங்க." என்றவன் சிறு யோசனைக்குப் பின். 


"எனக்கு ஊட்டில கடந்த ஆறு மாசமா இறந்து போனவங்க லிஸ்ட் வேணும். கூடவே அவங்க யாரு என்ன எப்படி இறந்தாங்க, அப்றம் அவங்க எங்க படிச்சாங்கிறது வரைக்கும் எனக்கு ரிப்போட்டா வேணும்." என்றான் விக்னேஷ், அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்து விட்டு. 


" எஸ் ஸார். ஆனா நீங்க அத ஹெட் ஆஃபிஸ்ல தா ஸார் வாங்க முடியும்." என்றவர் உடனே ஹெட் ஆஃபிஸ்கு தகவல் சொல்ல, அவை அனைத்தும் விக்னேஷிற்காக எடுத்து வைக்கப்பட்டது. 


விக்னேஷிற்கு அந்தக் கதிரேசன் மீது சந்தேகம் வந்திருந்தது. அதுமட்டுமல்ல இந்த ஆஸ்ரமத்தில் எதுவோ நடக்கிறது என்ற எண்ணமும் கூடவே வந்தது. ஏனெனில் ஆஸ்ரம விதிகள் என்று போலிஸ்ஸை உள்ளே விடாதது சந்தேகத்தைக் கிளப்பியது. அதிலும் கதிரேசனின் மிரட்டும் தோரணை பேச்சும், சந்தேகம் கொள்ள காரணம்.


சுருதியின் தற்கொலை. அடுத்த சில நாளில் ஆரோக்கியராஜின் தற்கொலை. பின் வெங்கட்ராமன் சொன்னது என அனைத்தையும் ஒன்றாகக் கோர்த்து தன் சந்தேகங்களை ஃபோனில் உள்ள நோட் பேடில் குறிப்புபோல் எழுதி வைத்தான். தன் மொபைலை எடுத்து மனோகருக்கு ஃபோன் செய்தவன் அவனை உடனே ஊட்டி வரும்மாறு பணித்தான். 


மதிய உணவுக்காக விக்னேஷ் வீடு செல்ல, அது நிசப்தமாக இருந்தது. உள்ளே அவனின் மனைவி சோகமே உருவாய் அங்கிருந்து டீவியை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். 


அதை ஆஃப் செய்தவன், "என்னாச்சி பவதா. எதுவும் பண்ணுதா." என்றான் சிறு பயத்துடன். 


" இல்ல." என்றாள் ஒரே வரியில். மீண்டும் வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி என்பது போல் வேண்டாத நினைவுகள் வரச் சோகமாகிப் போனாள் பவதா. 


" வீட்டுக்குள்ளையே இருந்தா அப்படி தா பவதா இருக்கும். வாயே நாம சேந்து எங்கையாது போலாம்.‌ ம்." 


"ம்‌... "


" எங்க போலாம்.?"


" உனக்கு வேல முடிஞ்சதா?." 


" ம்... கிட்டத்தட்ட. ஈவினிங் போய்ச் சில பேப்பர்ஸ் வாங்கிட்டு வரனும். அவளோ தா. வேற எதுவும் இல்ல. நீ ஆறு மணிக்கி ரெடியா இரு. நாம டின்னருக்கு எதாவது ஹேட்டல் போவோம். ம்." என அவளுடன் சிறிது நேரம் பேசி உணவுண்ட பின் காவல் நிலையம் சென்றான். 


'ஃபஸ்ட்‌ நாம சுருதியோட கேஸ்ஸ முடிக்கிறதுக்கு பதிலா அன்னைக்கி ரோட்டுல பாத்த அந்தப் பொண்ண கண்டு பிடிக்கனும். அந்தப் பொண்ணுக்கிட்ட வாயாடப்போய் தா நா பழைய பவதாவ நேத்து பாத்தேன். அதுனால அந்தப் பொண்ண நாளைக்கி தேடனும். அவள பாத்தா மறுபடியும் இவா நர்மலாக வாய்ப்பிருக்கு' என முடிவு செய்து ஸ்டேஷன்க்கு செல்ல. அங்கு அவனுக்குத் தேடுதல் வேலை வைக்காது ஹரிணியும் கௌதமும் அமர்ந்திருந்தனர். அதுவும் கையில் வேகவைத்த வேர்கடலையை பொட்டலத்துடன். 


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி




கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...