அத்தியாயம்: 11
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்… வண்டுகள், தேனீக்களின் ரீங்காரம் சத்தம் நிறைந்திருந்தது அவ்விடத்தில்.. ஆனால் அவற்றிற்கிடையே எவ்வித சண்டையும் நிகழவில்லை.. ஏனெனில் தேனெடுக்க அங்கு மஞ்சள் , நீலம் , சிவப்பு , வெள்ளை என அனைத்து வண்ணங்களிலும் மலர்கள் இருந்தன.. அவை பொக்கே ஃபளார் என சொல்லப்படும் பூச்சொண்டுக்கு வைக்கப்படும் மலர்கள்..
சில பூக்களுக்கு சூரிய ஒளி தேவை , சிலதுக்கு குளிர் தேவை , சிலதுக்கு அதிக நீர் தேவையில்லை , இப்படி ஒவ்வொரு மலர்களும் வளர்வதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலையை கண்டறிந்து அதன்படியே வளர்க்கப் பட்டு வருகிறது அந்த நறுவீச் செடிகள்.. சுருக்கமாக சொன்னால் பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஊட்டி பொட்டானிக்கல் கார்டனை சிறிய இடத்தில் அடைத்து வைத்ததைப் போல் இருந்தது..
அனைவரும் மலரின் அழகை ரசிக்க ஒருவர் மட்டும், " கலர் கலர் ப்ளவர்ஸ்ல என்ன இருக்குன்னு இப்படி பாக்குறாங்க.. ஸ்டுப்பிட் பெலோஸ்.. " என தன் கண்முன்னே விரிந்திருக்கும் அழகை ரசிக்காது , ஐ ஃபோனில் முகம் புதைத்துக் கொண்டாள் காவ்யா..
காவ்யா.. அபிநயாவின் தங்கை.. காதல் மணம் புரிந்த வேல்ராஜ் அபிநயாவின் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்தது..
அபிநயாவின் தந்தை ரவிச்சந்திரன் வேல்ராஜை வீட்டோட மாப்பிள்ளையாக மாற்ற எண்ணினார்.. அதனால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே.. மகளை நாதன் குடும்பத்தினர் கொடுமை படுத்துவதாக கூறி புகார் ஒன்றை பஞ்சாயத்திற்கு முன் வைத்தார்..
" இவரு சொல்லுற மாதிரி எல்லாம் ஒன்னும் பண்ணீடல.. சிட்டில வளந்த அவங்களுக்கு இங்க பாக்குற சின்ன சின்ன வேலை எல்லாம் பெருசாத்தா தெரியும்.. சும்மா தேவையில்லாம பொய் பழி போட்டுட்டு இருக்க கூடாது..." என விரலை நீட்டி எச்சரித்தான் தரன்..
பஞ்சாயத்துக்கு நடுவே நின்று அவன் பேசிக்கொண்டு இருக்க.. அவனை யாரும் தடுக்க வில்லை.. ஏனெனில் இருபத்தி மூன்றே வயதான அவனின் பேச்சில் அதிகாரம் நிறைந்திருக்கும். எதிர்த்து பேசவே இயலாத படி கட்டன் ரைட்டாக வார்த்தைகள் வந்து விழும்.. அதிலும் அவனின் குடும்பம் என்று வரும் போது எரிமலையாக வெடிப்பான்..
ஊருக்கு ஒரு பிரச்சனை எனும் போது அவனின் நிதானமான பேச்சும்.. தெளிந்த சிந்தனையும்.. அதை செயல்படுத்தும் வேகமும்.. பார்ப்பவர் அனைவரைக்கும் சத்தியமூர்த்தியின் மறுபின்பம் அவன் என பறைசாற்றும்..
ஆயிரம் பேருக்கு முதலாளியான தன்னை ஒரு பொடியன் விரல் நீட்டி அவமதிப்பதா என கோபம் கொண்டவர்.. " சம்பாதிக்க வக்கில்லாத ஓ அண்ணனுக்கு எதுக்குடா குடும்பம். ஒன்னுமில்லாத *****பய.. " என ஏச..
" யோவ் யாரப் பாத்து ஒன்னுமில்லாதவன்னு சொல்ற.. எங்க ஐயாவுக்குத் தெரியும் யாருக்கு எது எப்ப குடுக்கனும்னு.. எவனும் வந்து கேக்க கூடாது.. கண்டவன்லாம் வந்து பேசுனா பயந்துடுவோமா.." என விரட்டி விட்டான் அவன்..
அன்று சொன்னது போல் தன் அண்ணனுக்கு கோவையில் ஒரு கம்பெனியில் வேலைக்கு ஏற்பாடு செய்தான்.. குடும்பத்துடன் கோவையில் தஞ்சமடைந்தான் வேல்ராஜ்...
திருவிழா சமயம் மட்டுமே ஊர் பக்கம் வருவார் வேல்ராஜ்.. எந்த பிரச்சனை வந்தாலும் ஒன்று கூடி நிற்கும் அவர்களின் குடும்பத்தை பிரிக்க தன் இளைய மகளை தரனுக்காக பேசி முடிக்க திட்டமிட்டு மகளை அனுப்பி வைத்துள்ளார்.. நினைப்பது எல்லாம் நடந்துவிடாமா என்ன..
அது கிளாஸ் ஹவுஸ்.. அங்கு இருந்த ஒவ்வொரு பூக்களுடனும் சேர்ந்து செல்ஃபீ எடுத்து வந்த ஹரிணியின் கவனத்தை ஈர்த்தது அந்த மரம்.. ஐந்து பேர் ஒன்று சேர்ந்தால் தான் அந்த மரத்தை கட்டிப்பிடிக்க முடியும் என்ற அளவுக்கு அகலமாகவும் ,உச்சியில் இருந்து பார்த்தால் ஊரே தெரியும் அளவுக்கு உயரமாகவும் இருந்தது.. உச்சியில் சிறிய மரவீடு ஒன்றும் இருந்தது.. அந்த மரத்தில் சிற்பி செதுக்கியது போன்று சில வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டு இருந்தது.. சுற்றி இருந்த மல்லிகைப் பந்தலின் மணம் அவளைக் கிறங்கடிக்க மரத்தின் உச்சியில் இருக்கும் வீட்டிற்கு செல்லும் வழியை யோசிக்கலானாள்..
" என்ன இங்கையே ரொம்ப நேரமா நிக்குறமாறி தெரியுது.. நடக்க மனசில்லையோ.. " கௌதம்
" டேய் அங்க பாரேன்.. மர வீடு.. நா அதப் பாக்கனும் டா.. வா.." என கைகளை இழுத்தவளை நிறுத்தி..
" அதப் பாத்தா வீடு மாறியே தெரியல.. வாசலும் இல்ல.... ஐன்னலும் இல்ல.. சோ இது வீடே இல்ல.. வா போலாம்.. " கௌதம்..
" இது வீடு தான்.. அத்தான் தா இத கட்டுனது.. இதுக்குள்ள போறதுக்கு வழி அவருக்கு மட்டும் தா தெரியும்.. இது மட்டுமில்ல இந்த கார்டனே அவர் தா டிசைன் பண்ணி தந்தாங்க.. சூப்பரா இருக்குல.. " இந்து தரனின் பெருமை பேச...
" ஓ.. உன்னோட அத்தான்ட்ட கேட்டு என்ன அங்க கூட்டிட்டு போகச் சொல்லுறியா.. ப்ளீஸ்.." ஹரிணி ஆவலாக..
" ம்.. சரி.. " என தலையசைத்தாள் இந்து..
" என்ன இங்கேயே நேரத்தப் போக்கிடலாம்னு பாக்குறீங்கலா.. இன்னும் நாம சோளக் காட்டுக்கு போய்ட்டு கோயிலுக்கு போவோம்.. வாங்க சாயங்காலத்துக்குள்ள வீட்டுல இருக்கனும்.. இல்லைன்னா எல்லாரும் சேந்து ஆத்து ஆத்துன்னு ஆத்து வாங்க.. சொற்பொழிவ.. " என அவர்களை இழுத்துச் சென்றான் பிரகாஷ்..
தயங்கியபடியே ஆடவனின் முகம் பார்ப்பதும் பின் நிலம் பார்ப்பதுமாக வந்தாள் இந்து.. கௌதமிடம் பேச முயற்சி செய்து கொண்டே இருக்கிறாள்.. ஆனால் பேசும் தைரியம் தான் வரவில்லை.. அவன் அதை கவனிக்காமல் செல்கிறான்..
சுற்றி வயல்.. எங்கும் பசுமையாய் இருந்த அந்த ஊரின் வயலில் கிடந்த மக்காச்சோளம் , கம்பு , கடலை இப்படி சாப்பிடக் கூடிய எல்லாவற்றையும் கைகளில் அள்ளிக்கொண்டு , வாயில் அசைபோட்ட படியே சென்றனர்.. சேனையம்மன் கோயிலுக்கு.. கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தொலைவு காட்டிற்குள் நடந்து செல்ல வேண்டும்..
சிறு ஒற்றையடி ஓடப் பாதையில் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்று கொண்டிருந்தனர்.. " இன்னும் எவ்வளவு தூரம் இப்படியே போறது.. கால் வலிக்குது பா... ஏய் உன்னத்தா கேக்குறேன் பதில் சொல்லுடி.. " பவி லதாவிடம் கேட்டாள்..
" யாருக்குத் தெரியும்.. இவுங்க பின்னாடியே போக வேண்டியதுதான்.." இந்து
" என்ன உனக்குத் தெரியாதா.." அதிர்ச்சியுடன் பவி..
" அக்கா மதினி இங்கல்லாம் வந்தது இல்ல.. இதுதான் முத தடவ.." சுதா..
" ஏன்.." ஹரிணி..
" அவா சரியான பயந்தாங்கொள்ளி ஹரிணி... அந்த வீட்ட விட்டு எங்கேயும் நகல மாட்டா.. இந்த தோட்டம் அப்புறம் இவா படிப்பு எல்லாமே அண்ணா இருந்ததால கிடச்சது.. இல்லைன்னா.. ஹிம் என்ன சொல்ல.. " பிரகாஷ்.
" ஆமா.. எனக்கு எல்லாமே என்னோட அத்தான் தான்.. போடா.." இந்து.. கதையளந்தவாறு கோயிலை அடைந்தனர்..
தேர் போன்ற அமைப்பில், இருபறமும் இருபது தூண்கள், நடுவில் இருந்த கருவறையில் அமைதியா அமர்ந்திருந்தார் சேனையம்மன்.. சோலையை காக்கும் காவல் தெய்வம்.. கம்பிகளால் வேலி போடப்பட்டு இருந்தது.. அதன் ஒரு கோடியில் சிறிய குடிசை.. அங்கு கோயில் சேவையில் ஈடுபடும் பூசாரியார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்..
இவர்களை பார்த்ததும் பூசாரி அம்மனுக்கு தீபாராதனை காட்டி பிரசாதம் வழங்கினார்.. திருவிழா சம்பந்தமாக பிரகாஷ் அவருடன் பேசிக்கொண்டிருக்க.. மற்றவர்கள் சுற்றிப்பார்க்கச் சென்றனர்.. கோயிலுக்கு அருகே கேட்ட சத்தம் அங்கு ஒரு நீரோடை உள்ளதை காட்டியது.. ஆர்வத்துடன் அனைவரும் சென்று கால்களை நனைத்தபடி விளையாடினர் இந்துவைத் தவிர.. அமைதியாக அமர்ந்திருந்தவளின் கவனத்தை ஈர்த்தான் பெரிய பாறை மேல் தனியாக கையில் கேமராவுடன் இருந்த கௌதம்.. இதுதான் சமயம் அவனுடன் தனித்துப் பேச என யாரிடமும் சொல்லாமலே சென்றாள்..
" உங்க.. கிட்ட.. ஒன்னு கேக்கனும்.." தனக்கு முதுகாட்டி நின்றவனை தன் குரலால் தன் பக்கம் திருப்பினாள்..
" என்ன விசயம்.. தனியாவா வந்த.. அவங்க கூட சேர்ந்து விளையாடாம இங்க எதுக்கு வந்து.. என்ன கேக்கனும்.." என படபடத்தவனின் குரலில் சிறு பயம்.. எங்கே யாராவது பார்த்து தவறாக சித்தரித்து விடுவார்களோ என.. காட்டிற்குள் கோயில் இருந்தாலும் திருவிழா நேரம் ஆதலால் ஆட்கள் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருந்தது..
" அது.. வந்து.." என தயங்கவளை..
" வா நடந்துகிட்டே பேசுவோம்.. " என தங்கைகள் இருக்கும் பக்கம் நகர்ந்தான்..
" ம்.. நாம.. இதுக்கு.. முன்னாடி.. பாத்திருக்கோமா.. உங்கள எங்கையோ பாத்தமாறி இருக்கு.." என தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்..
" ம்.. ஆமா.. நாம நேத்து தான பாத்தோம்..." விளையாட்டாக..
ஆமாம் என்றவுடன் மலர்ந்த அவள் முகம் நேத்து என்றவுடன் சுருங்கிக் போனது..
" இல்ல.. நேத்து இல்ல.. ஒரு ரெண்டு இல்லைன்னா மூனுவருசத்துக்கு முன்னாடி.."
" என்ன உலறுர.. பாத்திருக்கோமா பேசியிருக்கோமான்னு.. இன்னோரு மொற இப்படி தனியா பேச டிரைப் பண்ணாத.. அதுவும் பப்ளிக் பிளேஸ்ல.. யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க.. இதெல்லாம் உனக்குத் தெரியாதா.." கடுமையாக..
" ஸாரி.. தெரியாம கேட்டுட்டேன்.. " கண்களில் நீர் துளைக்க அதை அவனுக்கு காட்டாது அவனைக் கடந்து சென்றவளின் அபயக்குரல் கேட்டது..
" அம்மா.." என அலறல் கேட்டு திரும்ப.. அங்கு பாதையில் கவனம் செலுத்தாது சென்றதால் கால் வலுக்கி நீரில் விழுந்து கிடந்தாள் இந்து..
சற்றும் சிந்திக்காது தனது ஜெர்கினை கழட்டி விட்டு நீரில் இறங்கினான் கௌதம்.. அவளை கைகளில் ஏந்தியபடி கறை ஏறியவனை மற்றவர்கள் சூழ்ந்து கொண்டனர்..
" இந்து.. இந்து.." என பிரகாஷ் உள்ளிட்ட இளையவர்கள் பயந்து விட்டனர்..
ஹரிணி மயக்கத்தை தெளிய வைத்தாள்.. கௌதமின் ஜெர்கினை அவளுக்கு போர்த்தி விட அவள் அழுது கொண்டே இருந்தாள்.. எவ்வளவு கூறியும் அழுகையை நிப்பாட்டிவில்லை..
" போதும் நாம வீட்டுக்கு போய்டலாம் வாங்க.." என பயத்துடன் சொன்னான் பிரகாஷ்.. காரணம் வீட்டிற்கு தகவல் சென்றுவிட்டது.. உடனே திரும்பி வரும்படி ஃபோன் செய்திருந்தான் தரன்.. இன்டர்நெட்ட விட படு ஸ்பீடா இருக்காங்களே..
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..