அத்தியாயம்: 10
இளங்காலை வேளை.. இருள் பிரிய மனமில்லாமல் மெல்ல தன் கரங்களை விலக்கிக் கொள்ள.. அங்கு சூரியன் தன் ஆட்சியை நிதானமாக நிலைநாட்டிக் கொண்டு இருந்தது..
சரியாக வைகறையில் எழுந்தவள்.. தன் காலை கடமைகளை முடித்து விட்டு திரும்பிப் பார்த்தால் அங்கு பவி இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தாள்.. இந்து எழுந்து விட்டாள்..
" ஹரிணி கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.. நானும் வந்திறேன்.. சேந்து போலாம் கீழ.."
" ம்.." என்றவள் வராண்டாவில் இருந்த ஜன்னலின் வழியே வேடிக்கைப் பார்க்கலானாள்..
பின் பக்கம் இருந்த தொழுவத்தை கிருபாவதி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.. மலர் அப்போது தான் குளித்திருப்பாள் போலும் தலையில் துண்டுடன் சாம்பிராணி புகை போட கரிக்கட்டையை எறித்துக் கொண்டிருந்தார்..
நான்கு பசு , மூன்று காளை , இரண்டு கன்னுக்குட்டி , ஒரு இராஜபாளையத்து நாய் மற்றும் சில நாட்டுக் கோழிகளும் இருந்தது தொழுவத்தில்.. மாட்டின் சாணத்தை எடுத்து இயற்கை முறையில் அதை உரமாக மாற்றி தன் வயலில் பயன்படுத்தி வருகின்றனர் போலும்.. அதை சேமித்து வைக்க ஒரு தொட்டி இருந்தது..
ஏதோ சத்தம் கேட்டு தலையை திரும்பியவள் கண்களில் பட்டது தரன்.. உடற்பயிற்சி செய்திருப்பான் போலும் வியர்வை வழிய பனியன் மற்றும் கைலியுடன் இருந்தான்..
" ஹாய்.. குட் மார்னிங்.. " என்றாள் ஹரிணி புன்னகையோடு..
பதில் தான் கூறவில்லை என்றுப் பார்த்தால் இவள் அங்கு இருப்பதைக் கூட பார்க்காது சென்று விட்டான் அவன்..
கோபமாக, " திமிரு பிடிச்சவன்.. வாயத்திறந்து பதில் சென்னா இவன் வாயில் சேந்து வைச்சிருக்கு முத்து எல்லாம் உதிந்துடுமாக்கும்.. ம்ஹிம்.. லம் போஸ்ட்.. ஒரு வேல இவனுக்கு காது கேக்காதோ.. ஐய்யோ.. பா....வம்......" என பரிதாபப்பட்டவள் இந்துவுடன் கீழே சென்றாள்..
இந்து கோலம் போட செல்ல ஹரிணி சமையல் அறைக்குச் சென்றாள்.. நங்கை மற்றும் கனகவள்ளி இருவரும் சமையலுக்குப் தேவையானதை அரிந்துகொண்டு இருந்தனர்.. மலர் வந்தவுடன் தான் சமைக்க ஆரம்பிப்பர்..
" வாம்மா காபித் தண்ணி குடிக்கிறியா.." நங்கை..
" குட் மார்னிங் ம்மா... ம்.. குடுங்க.. நா குடிக்கிறேன்.. " என்றவள் கையில் கருப்பட்டிக் காபியை திணித்தார் நங்கை..
" ம்.. சூப்பரா இருக்கு.. ம்.. " என பாராட்டியபடியே ரசித்துக் குடித்தாள் ஹரிணி..
" ஏட்டி சமயக்கட்டுக்குள்ள குளிக்காம கொள்ளாமலா வருவ.. போடி வெளில.. " மலர் கத்த..
" கோய்ச்சுக்காதீங்க ஆன்டி.. இதோ போட்டேன்.. " என இன்னொரு காபியை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்..
பத்திரிகையை பிரித்து படித்தவளின் காபி பறிபோனது.. " ஏய் குடுடா.. உனக்கு வேணும்னா உள்ள போய் வாங்கிக்கோ.. இப்பதான் மலர் ஆன்டிட்ட திட்டுவாங்கீட்டு வந்திருக்கேன்.. குடுடா.." என கத்திக் கொண்டு இருந்த நேரத்தில் காபியை காலி செய்தான் கௌதம்..
முறைத்துக் கொண்டே " உடம்புல இது ஒட்டவே ஒட்டாது.. புடுங்கி கிட்டு போகப் போது உனக்கு.. " என சாபமிட்டு விட்டு வெளியேறினாள்..
"இவா பெரிய கண்ணகிக்கு கசின் சிஸ்டர்.. வந்துட்டா சாபங்குடுக்க.. " என அவள் விட்டுச் சென்ற வேலையை தொடர்ந்தான் அதான் பத்திரிக்கையை கையில் வைத்துக் கொண்டு படம் பார்ப்பது..
"ப்ரெஷ்ஷா இருக்கு ஏர்.. ம். " என இரு கரம் விரித்து ஆழ மூச்சு இழுத்து விட்டவளின் கவனத்தை ஈர்த்தது அந்த சலங்கை சத்தம்..
வீதியில் பூம்பூம் மாட்டுக்காரன்.. அதைப் பார்த்தவுடன் கோலம் போட்டுக்கொண்டு இருந்த இந்துவிடம் சென்று.. " இந்து அங்க பாரேன்.. மாட்டுக்கு எவ்ளோ அழகா டெக்கரேட் பண்ணீருக்காங்கன்னு.. "
" அதுவா.. அது பூம்பூம் மாடு.. பக்கத்துல போனா நமக்கு ஏதாவது குறி சொல்லுவாங்கலா இருக்கும்.. நா இதுவரைக்கும் பக்கத்துல பாத்ததில்ல.."
" அப்போ இப்ப வா.. பக்கத்துல போய் பாக்கலாம்.."
" இல்ல இல்ல நா வரல.. எனக்கு பயமா இருக்கு.. அம்மா என்ன திட்டுனாலும் திட்டுவாங்க.. நா வரலப்பா.." என உள்ளே சென்றுவிட்டாள்..
" வீட்டு வாசலுக்கு போறதுக்கு பயமா.. வித்தியசமால்ல இருக்கு.. " என மாட்டின் அருகில் செல்லாமல் வாசலில் இருந்தே வேடிக்கைப் பார்த்தாள்.. மாடுன்னா ஹரிணிக்கு பயம்.. அதா எட்ட நின்று பார்த்துவிட்டு சென்றாள்..
பின்கட்டிற்குச் சென்றவளை சாம்பிராணி மணம் வரவேற்றது.. " ம்.. கிருபா ஆன்டி ஸ்மெல் நல்லா இருக்கு.. நா இதுகல தொடலாமா... என்ன ஒன்னும் பண்ணிடாதுல்ல.. " என மாட்டைப் பார்த்து கைகளை காட்டினாள் சிறு பயத்துடன்..
" என்ன மரியாத இல்லாம அது , இதுன்னு சொல்லுற.. இங்க பாரு இவா பேரு சுடர்கொடி , அவா சோலை, அப்புறம் இருக்காளே அவள்க பேரு வாகை , கயல். எல்லாருமே நாட்டு மாடுங்க. பச்சப் பிள்ளைங்க மாறி நல்லா பழகுவாளுக.. " என ஹரிணியின் கைகளால் மாட்டின் அழகில் தடவிக்குடுக்கச் சொன்னார்..
" ம்.. நைஸ்.. ஆன்டி இந்த மூனும் என்னப் பாத்து மொறைக்குதுங்களே.. ஏ.."
" இது சேந்தன், சீலன் , உத்ரன். இவனுங்க பொல்லாப் பயளுக.. தரன் பேச்சத்தா கேக்குங்க.. வேற யாருக்கும் அடங்காதுங்க.. மொரட்டுக் காளைங்க.. "
" ஓ..." என ஆர்வமாக கதை கேட்டுக்கொண்டிருந்தாள்.. அங்கிருந்த கோழி ஆடுகளுடன் விளையாடியவளின் பொழுது அழகாய் போனது..
காலை உணவு மேஜையில் அனைவரும் உணவுண்டு கொண்டிருக்க கௌதம் மட்டும் நங்கையின்அறைக்குள் செல்வதும் பின் வெளியேறுவதுமாக இருந்தான்..
" ஏப்பு சாப்பிட்டுடு வெளடலாம்ல.. வாப்பு.." என்ற நாச்சியாரின் அழைப்பு அவனை டைனிங் டேபிளுக்கு இழுத்து வந்தது..
" ஏஞ்சல்.. ம்ஹிம்..." என தலை தூக்குவதும் இறக்குவதுமாக இருக்க..
" என்ன கேக்கனுமோ அத கேளுடா.. சும்மா ஏஞ்சல் கோஞ்சல்னு கொஞ்சிகிட்டு.." நங்கை.
" அதுவா ஏஞ்சல் உங்க ரூம்ல பெருசு பெருசா அடுக்கி வச்சுருக்கீங்கலே அது எல்லாம் நீங்க படிச்ச புத்தகமா இல்ல ஸ்ஷோக்காக வாங்கிவச்சுருக்கீங்களா.. " என்றான்.
" அது நா படிச்சது தான் டா.. நா எம் பிள் பீஹச்டி முடிச்சவ.. அதுனால தான் ஒரு கவெர்மெண்ட் ஸ்கூலுக்கு ஹட் மாஸ்டர்ரா இருக்கேன்.. " என்றவளை அருகில் வருமாறு அழைக்க..
" எங்கிட்ட மட்டும் அந்த உண்மையச் சொல்லுங்க.. " என்றான் சீரியஸ்ஸான குரலில்..
" எந்த உண்மைய டா சொல்லனும்.. "
" நீங்க எப்படி பிட் அடிச்சுப் பாஸ் ஆனீங்க அப்படீங்கிற உண்மைய. ஆஆஆ..." அவனின் காதைப்பிடித்துத் திருகியவர் அவர்..
" நா ஒரு ஸ்கூலுக்கே ஹெட்டு என்னப் பாத்து.."
" ஏஞ்சல் கூல்.. கூல்.. எனக்கெல்லாம் அந்த புக்க தொரந்தா நெக்ஸ்ட் செக்கேண்டே தூக்கம் வந்திடுது.. நீங்கல்லாம் எப்படி அத படிச்சு.. பாஸ் பண்ணி.. நோ.. நோ.. தட் நாட் பாஸிபிள்.. அதனால தான் கேக்குறேன் எப்படி பாஸ் பண்ணீங்க.."
பிரகாஷ் ஓடி வந்து கௌதமை அணைத்துக்கொண்டு " தெய்வமே.. எந் தெய்வமே.. ஏ மனசுக்குள் இருக்குற இத்தன வர்ஷ சந்தேகத்த அப்படியே கேட்டுட்டீங்க.. இவங்க பேருக்குப் பின்னாடி அத்தன... டிகிரி போடும் போதெல்லாம் எனக்கு இந்த சந்தேகம் வரும்.. ஒரு டிகிரிக்கே நா நாலு வருஷமா போராடுறேன்.. இவங்க என்னடான்னா டிகிரிக்கு மேல் டிகிரின்னு.. ஏதோ கும்பகோணத்துக்குப் போய் டிகிரி காப்பி ஆர்டர் பண்ற மாதிரி வாங்கி வாங்கி அடுக்கும் போதே தெரியும் பிட் அடிச்சுத்தா பாஸ் ஆகிருப்பாங்கன்னு.. இவங்க பெரிய டீச்சர் அப்படீங்கிறதுனால நேக்கா பண்றாங்க போல.. அத்த எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்க.. ப்ளீஸ்.. நா வக்கீலாகனும் கோர்ட்டுக்கு போணும்.."
இருவரையும் வெட்டவா குத்தவா என பார்த்தவர், இருவரும் தன்னை வைத்து காலையிலேயே விளையாட ஆரம்பித்து விட்டனர் என நொந்து போனார்..
" எல்லாரையும் உன்ன மாறி நெனச்சுட்டியா ண்ணா.. அத்த மட்டுமில்ல பெரியப்பாவும் , அப்பாவும் கூட அந்த காலத்து டிகிரி கொல்டர்ஸ்.. " பவி
" அண்ணா பிட் அடிச்சா பாஸ் ஆனாங்க.. பொய் சொல்லாதீங்கக்கா.." சுதா.
" நா பிட்டெல்லாம் அடிக்கலடா செல்லம்.. அவா பொறாமைல பேசுறா.. அவள விட நா ஒரு டிகிரி கூட வாங்கிட்டேன்.. அதா வயித்தெரிச்சல்ல சாம்பலாக்கி பொசுக்குறா.." கௌதம்.
" ஸாரி.. ஸாரி.. பிட் அடிக்கல.. ஆனா..." என சொல்ல வருவதற்குள் அவளின் வாயைப் பொத்தினான் கௌதம்.. விரலை கடித்து விட்டு ஓடியவளை துரத்திச் சென்றான்..
" போனா போகுதுன்னு சும்மா இருந்தா.. நீ என்னப் பத்தி சொல்லி என்னோட இமேஜையா டேமேஜ் பண்ணுற.. உன்ன..." என துரத்திக் கொண்டு நடு கூடத்திற்கு சென்றான்.. அங்கு அவன் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தான்.. முன்னே ஓடிய பவியை காணவில்லை. அதற்குப் பதிலாக கலியபெருமாள் இருந்தார்..
'ச்சீ இந்தாளயா நாம துரத்திட்டு இருந்தேன்.. ' என அவன் நொந்து கொண்டு நகர..
அதற்குள் அவனை பார்த்து கடுப்பான பெருமாள்.. " எரும வயசாகுது இன்னும் ஓடி பிடிச்சு விளாண்டுட்டு இருக்க.. உனக்கு வெக்கமா இல்ல.." என வெறுப்பாய் மொழிந்து விட்டு செல்ல..
" வெக்கமா.. எதுக்கு நீங்க என்ன வயசு பொண்ணா.. உன்னப் பாக்க மாப்பிள்ளை வந்திருக்காப்ல கொஞ்சம் வெக்கப் பட்டு நில்லுண்ணா..." என அமைதியாக வந்தவனிடம் கேட்டான் பிரகாஷ்..
" எந்த ஊருலடா பொண்ணு வெக்கப்பட்டிகிட்டுருக்கு.. இப்பெல்லாம் பொண்ணுங்க நேருக்கு நேரா நின்று கண்டிஷன் போடுறாளுக.. நீ இன்னும் பொண்ணு வெக்கப்படுதுங்கிற பழங்காலத்துலயா இருக்க.. வாடா டுவென்டி பஸ்ட் சென்சரிக்கு.." கௌதம்
" அப்ப நாங்க வெட்கப்பட்டு நீங்க பாக்கவே இல்ல. அப்படித்தான.." ஹரிணி..
" சொல்லவே இல்ல நீங்க எல்லாரும் பொண்ணுங்களா.." என்றனர் கோரஸ்ஸாக..
" உன்னய.." என அடிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என சாமானைத் தேடினாள்..
" டேய் தம்பி சிக்கீடாத டா உன்னைய செதச்சுடுவாளுக.. ஓடிடுஉஉஉஉ...." . அவ்விடமே மங்கையர்களின் சிரிப்பொலியில் கலகலத்தது..
உணவு வேளை முடிந்தப் பின், " சித்தப்பா எங்க மில்லுக்கா நானும் வாரேன்.." என கௌதம் கவியரசனிடம் கேட்க..
" ஏய் நானும் வாரேன்.. சும்மா இருக்க போரடிக்கிது.." ஹரிணி.
" அங்க கூட்டிட்டு போனா சும்மால்லாம் இருக்க விடமாட்டோம்.. களத்து வேல பாக்கனும் என்ன சரியா.." பிரகாஷ்.
" நானும் சும்மால்லாம் வேல பாக்க மாட்டேன்.. நாள் கூலி தருவியா..."
" ஒரு 100 ரூபா தாறேன்.. ஓகே வா.. "
" டேய் அந்தப் பொண்ணு நம்ம விருந்தாளிடா.. அத போய்.. நீயும் வாம்மா.. அப்படியே சேனையம்மன் கோயிலுக்கும் போலாம்.." கவியரசன்.
" சித்தப்பா நானு.. அண்ணா என்னையும் கூட்டீட்டு போண்ணா.." பவி
" ஓகே டா செல்லம்.. போலாம்.. " கௌதம்..
" இவன நம்பியெல்லாம் போகாத.. கூட்டிட்டு போய் எங்கையாவது வித்துட்டுவான்.. **** பய.. " என்றார் கலியபெருமாள்.. அவரின் பேச்சில் வெறுப்பும் , கோபமும் அதிகமாகவே இருந்தது..
விரல்களை இறுக்க மூடி தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவனின் மலர்ந்த முகம் ஊசி குத்திய பலூன் போல் வாடியதுடன் , கண்கள் கோவைப் பழமாய் சிவந்தது.. அவனின் தோல்களில் கை வைத்து அமைதி படுத்த முயன்றவள்.. என் ஆதரவு உனக்குத் தான் என தன் செயல்களின் மூலம் உணர்த்தினாள் அவனின் உயிர் தோழியான ஹரிணி.
" பிரகாஷ் இந்தா.. தங்கச்சிகளையும் கூட்டிட்டு போ.. எது கேட்டாலும் வாங்கி குடு..." என சில இரண்டாயிரம் நோட்டுகளை கொடுத்தான் தரன்..
" அப்ப எனக்கு ண்ணா.."
" நீயும் வாங்கிக்க டா.. ஜாக்கிரதையா போங்க.. ஜீப்ப எடுத்துக்க , அப்புறம் இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேருங்க.. என்ன சரியா.." தரன்..
" டபுள் ஓகேண்ணா.." என்றான் ரூபாய் தாள்களை எண்ணியவாரு..
" யாரொல்லாம் வாரீங்க.. கைய்யத் தூக்குங்க பாப்போம்.. " பிரகாஷ்..
" நானு.. நானு ..." என சுதா , லதா இருவரும் போட்டி போட்டு கூறினார்..
இந்து இதை வேடிக்கை மட்டுமே பார்த்தாள்.. " நீ வரலையா ..." என கேட்ட ஹரிணிக்கு பதிலாக இல்லை என தலையை மட்டுமே அசைத்தாள் .
பயமா இருக்கு என்றவளை வற்புறுத்தி உடன் அழைத்துச் சென்றாள் ஹரிணி.. பிரகாஷ் செல்கிறான் என்ற உடன் பவியும் கிளம்பி விட்டாள்..
" ஐ ஆம் ஆல்சோ கம் வித் யூ " குரல் கேட்ட திசையை திரும்பிப் பார்த்தனர் அனைவரும்.. அங்கு பளிச்சென வெள்ளை நிறத்தில் , ஐந்தரையடியில் பார்ப்பவரை கவரும் ஜீரோ சைஸ்ஸில் ஒல்லியாக , ஜீன்ஸ் டீசட் என இன்றைய நவநாகரீக யுவதி ஒருத்தி நின்றுக்கொண்டு இருந்தாள்..
" ஹாய்.. ஐ ஆம் காவ்யா.. நானும் உங்க கூட வரலாம்ல.. எனி ப்ராப்ளம்.."
" நோ ப்ராப்ளம்... வெல்கம்.." என்றாள் ஹரிணி.. அவள் மட்டுமே வரவேற்றாள் மற்றவர்கள் அவளை வெறுப்புடன் பார்த்தனர்..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..