முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 9


 

அத்தியாயம்: 9


எங்கும் மாம்பழ மணம் வீச ஒரு ஏக்கர் அளவுக்கு பெரியதாய் இருந்தது அந்த மாந்தோப்பு.. அதில் செந்தூர், கறுத்த கொழும்பான் , வெள்ளைக் கொழும்பான் , பங்கனப்பள்ளி  , மல்கோவா  , ருமானி என மாம்பழத்தின்  ஒவ்வொரு வகையும் தனித்தனியாக பிரித்து வளர்க்கப்பட்டுள்ளது.. தோப்பின் ஒருமுனையில் இருந்து மறுமுனை‌ செல்லவே முழுதாக ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகும்.. அவ்வளவு பெரியது அது.. 


ஒரு மரத்தின் அடியில் ஓவர் கோட் ஒன்று கீழே விரித்து வைக்கப்பட்டிருந்தது.. அதில் சில மாம்பழம் என்றும் சொல்ல இயலாது மாங்காய் என்றும் சொல்ல இயலாது இனிப்பிற்கும் புளிப்பிற்கும் நடுவில் இருக்கும் சுவையை ஒத்த பழங்கள்.. மரத்தில் இருந்து அப்போது தான் பறிக்கப் பட்டது போல் இருந்தது.. 


மல்கோவா பழங்கள் இருக்கும் இடம் அது.. அந்த மரத்தில் இருந்து குதித்தாள் பெண் ஒருத்தி.. ஒல்லியான உடல் வாகுடன் தோல் வரை மட்டுமே இருந்தது அவளின் குழல்.. கோதுமை நிறத்தில் இருந்தவள் இளஞ்சிவப்பு பனியன் மற்றும் சிவப்பு நிற லாங் ஸ்கெட் அணிந்திருந்தாள்.. உடலை இறுக்கிப் பிடித்த அந்த பனியன் அவள் கைகளை உயர்த்தும் போதெல்லாம் மெல்லிய இடையை ஒரு கோடு போட்டது போல் காட்டியது.. 


கையில் இருந்த பழத்தை அந்த ஓவர் கோட்டில் போட்டவள்.. " மொத்தம்.. பதினொன்னு ஆச்சி.. இப்ப நாமா.. ஆ.. அந்த மரத்துல ஏறலாம்.. " என முடிவெடுத்து தன் ஸ்கெட்டை தூக்கினாள்.. ஏறுவதற்குள் ஜல்.. ஜல்.. என ஒலியுடன் சேந்தன் வந்து கொண்டு இருந்தான்.. அவளின் ஆடையின்‌ நிறம் பளிச்சென அதன் கண்களுக்கு தெரிய சேந்தன் அவளை நோக்கி வர‌ ஆரம்பித்தது.. 


வேறு பக்கம் சென்றுவிடும் என  எண்ணியவளுக்கு.. அது தன்னை நோக்கி வரவும் பயம் வர ஆரம்பித்தது.. ஓடத் துவங்கி விட்டாள்.. சேந்தனும் அவளை விடாமல் துரத்தியது.. 


மான் போல் துள்ளி ஒடியவள் எதன் மீதோ மோதி கீழே விழப்பார்த்தாள்.. பின் சுதாரித்து நின்றவள்.. 'யார்டா அது.. நா ஓடி வர்ற பாதைல லாம்ப் போஸ்ட்ட நட்டு வச்சது..' என நிமிர்ந்து பார்த்தாள்.


அங்கு முறுக்கிய மீசையும் , மடித்துக் கட்டிய வேட்டியும் வயலில் வேலை பார்த்ததால் சேறு பூசிய சட்டையுடன் நின்றிருந்தான் ரிஷி தரன்.. 


அவனைப் பார்த்ததும் பேசாது நின்றவளின் செவியில் மீண்டும்  கேட்டது  சலங்கை ஒலி.. மிரண்டு போனவள் ஓட எதானிக்க அவள் கால் இடறியது.‌. கீழே விழுந்து விடுவோமோ என அச்சத்தில் கண்களை மூடியவளை தன் கரம் நீட்டி தாங்கிப் பிடித்தது பூமி மாதா.. ஆம் அவள் சேறு நிறைந்த அந்த வயலில் விழுந்து கிடந்தாள்..


தரன் அதை மென்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தான்.. அவள் எழுவதற்கு உதவி செய்ய கூட முன்வரவில்லை.. அவன் கரம் நீட்டி உதவுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே கிடைத்தது..‌


பின் தட்டுக் தடுமாறி எழுந்து நின்றாள்.. ஆனாலும் வலதுகாலை ஊன்ற முடியவில்லை.. காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது.. எனினும் சமாளித்து தன்னை துரத்திய மாட்டிடம் இருந்து தப்பிக்க எண்ணியவளின் கால் மீண்டும் இடறியது.. இம்முறை அவளை தரன் தாங்கிப் பிடித்தான்..


தன் வலக்கரத்தால் அவளின் இடக்கரத்தையும், இடக்கரத்தால் அவளின் இடையையும் இறுக்கி பிடித்திருந்தான்.. சேந்தன் இவர்களின் அருகில் வந்தது.. அவள் பயத்தில் அவனின் தோலில் முகம் புதைத்தவளின் சூடான மூச்சுக் காற்று அவனின் கழுத்தில் பட்டது.. அவனின் கை விரல் அவளின் வெற்று இடையின் மென்மையை உணர்த்தியது.. இரு விழிகளும் மோதிக்கொள்ள இருவரின் இதயத்துடிப்பும் அதிகரித்தது.. ஆனால் அதை கவனிக்கும் நிலையில் தான் இருவரும் இல்லை..


தரனின் அருகில் வந்த சேந்தன் வலியில் கத்தி கவனத்தை ஈர்க்க தரன் அவளை மேடான இடம் பார்த்து அமரவைத்து விட்டு சேந்தனை காணச் சென்றான்.. சேந்தனை தடவிக் கொடுத்து அதன் காயங்களைக் கண்டான்.. நல்ல வேளையாக காயம் பெரிதாக இல்லை.. எனவே சேற்று மண்ணை அதன் வாலில் வைத்தவன்.. காதில் ஏதோ சொல்ல அது சென்று விட்டது..


இதனை பார்த்துக் கொண்டே இருந்தவள்‌, " உங்களுக்கு பயமா இல்லயா‌.? இது உங்க மாடா..? ப்பா.. பாக்கவே பயங்கரமா இருக்கு.. " என்க..


அவளைத் திரும்பிப் பார்த்தவன்.. எதுவும் கூறாது நடந்து செல்ல ஆரம்பித்தான்.. 


" ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என்ன தோப்பவிட்டு வெளில ரோட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா.. வழி தெரியாம ரொம்ப நேரமா சுத்தீட்டு இருந்தேன்.. ப்ளீஸ்.. பக்கத்துல இருக்குற ஸ்கூல்ல என்ன விட்டுடுங்களே.. " என கண்களைச் சுருக்கி அழகாக கெஞ்சினாள்..‌


அவன் சரி என வாய் மொழியால் கூறாது.. கரத்தால் பின்னால் வருமாறு  கூறி அவளின் முன்னால் நடக்க அவளால் நிற்க மட்டுமே முடிந்தது.. அசட்டுச்சிரிப்புடன் அவள் நிற்க தன் கரம் நீட்டி நடக்க உதவினான் தரன்.. அவளின் இடையை தாங்கி நடக்க உதவியவனை இரு கருவிழிகள் கோபத்தோடு பார்த்தது.. கண்களில் லேசர் லைட் மட்டும் இருந்தால் அப்போதே தரன் சாம்பலாகி இருப்பான் என்பது போல் முறைத்துப் பார்த்தான் கௌதம்.. 


வேகமாக வந்தவன் தரனின் கைகளை வெடுக்கென்று தட்டிவிட்டு தோழியை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தான்.. உடம்பில் சேறுடன் காலை நொண்டியபடி இருந்தவளை கண்டு பதட்டத்துடன்..


 " என்னாச்சு ஹரிணி விழுந்துட்டியா? வேறெங்கயாச்சும் அடி பட்டுருக்கா.. " என படபடத்தான் கௌதம்..


" அடில்லாம் அதிகமா படல.. ஆனா வலிக்குது கௌதம்.. ரொம்ப.." என பாவமாக கூறினாள் பெண்..


அவனின் பின்னால் வந்தவர்களிடம் நடந்ததை கூறியவன்.. " பாக்க சுளுக்கு மாறி தெரியுதே.. எண்ண போட்டு தேச்சு விட்டா சரியாகிடும்.. வீட்டுக்கு போலாமா.." நங்கை..


" ம்.. சரிம்மா.. போலாம் வீட்டுக்கு.." என்ற போது நங்கை விழி நகர்த்தாது அவளைப் பார்த்தார்..‌


 "அத்த ஒரு நிமிசம்.. " என்றவன் முத்துவிடம் சேந்தன் பம்பு செட்டில் இருப்பதாக கூறி அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொன்னான் தரன்.. 


பின் நங்கையிடம் " நா ஜீப்ப எடுத்துட்டு வாரேன்.. நடந்து போக முடியாது.. தூரம் கூட.. இங்கையே இருங்க.."  


" ஐய்யையோ.. கௌதம் தோப்புல நா மாங்கா பறிச்சு வச்சுருக்கேன்.. எனக்காக எடுத்துட்டு வாயேன்.. " என்றவளை பவியும் , கௌதமும் சேர்ந்தே முறைத்தனர்..


" இப்ப அது ரொம்ப முக்கியமோ.." 


" ஆமான்டா.. எடுத்துட்டு வா.. போற வழில சாப்பிட்டுட்டே போலாம்.. இங்க பாரு மொறச்ச அப்புறம் உனக்கு பங்கு கெடுக்க மாட்டேன் பாத்துக்க.." என மிரட்டலாக சொல்ல..


" ஆமாண்ணா.. எடுத்துட்டு வந்திரு.." என பவியும் கேட்டாள்..


" இவ்வளோ பெரிய எடத்துல நா எங்கன்னு போய் தேடுறது.." 


" ஏய்.. இப்படியே நேராப்போ வரிசையா  நம்பர் போட்டு வச்சுருப்பாங்க.. எதுல  28 ன்னு போட்டுருக்கும் அதுக்குப் பக்கத்துல தான் என்னோட மாங்காயும் ஓவர் கோட்டும் இருக்கும்.. வழி மாறி போய்டாத.. அப்புறம் உன்னத் தேடி நாங்க ஆள் யாரையாவது அனுப்ப வேண்டியதிருக்கும்.. ஜாக்கிரதையா போய்ட்டு வா.. பேய் பிசாசுகள  பயமுறுத்திடாத.." என்றவளை பார்த்து சிரித்தபடி கௌதம் செல்ல.. தரன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான்..


' மாங்கா திருட வந்தவளா நீ.. வழி மாறி வந்திட்டேன்னு சொன்ன.. ' என்பது தான் அந்த பார்வைக்கான பொருள்.. 


ஜீப்பில் பவித்ரா அண்ணா அண்ணா என நிறுத்தாமல் பேசிக்கொண்டே வந்தாள்.. தரன் புன்னகையுடன் கவனித்து கொண்டுதான் வண்டி ஓட்டினான்.. கௌதம் ரிவர்யூவ் மிரரின் வழியே தரனை முறைத்துக் கொண்டு வந்தான்..


ஹரிணி நங்கையை அம்மா என அழைத்ததில் அவர் தாய்மை அடைந்ததைப் போல் உணர்ந்தார்.. அத்தை , பெரியம்மா என்ற அழைப்புக்கு மத்தியில் அம்மா என்ற அழைப்பு அவரை பரவசப்படுத்தியது.. ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தார்கள்.. 


வீடே நிசப்தமாக இருந்தது.. அனைவரும் சத்தியமூர்த்தியின் அறையில் இருந்து அப்போது தான் வெளியில் வந்தார் போலும்.. எல்லாரும் ஒன்று கூடி இருக்கும் போது அவர் மட்டும் இல்லாதது குடும்பத்தினரை கவலை கொள்ளச் செய்தது..  


அங்கு நிலவிய மௌனத்தைக் கலைக்கும் பொருட்டு நங்கையின் கைகளைப் பிடித்து வந்தவளின் கையை இடறி விட்டான் கௌதம்.. 


"ஆ.. எரும.. எரும.. ஆ.. நானே நடக்க முடியாம நடந்து வாரேன்.. நீ என்னடான்னா.. ஆ.." என கத்த ஆரம்பித்தாள் ஹரிணி..


அனைவரின் கவனமும் வாசலுக்குத் திரும்ப கலியபெருமாள் தன் மகள் மகனை அறிமுகம் செய்தார்.. ஹரிணியை  பவித்ராவின் தோழி என்றும் கூறினார்.. 


" ஹிட்லர் நல்லா பொய் பேசுறார்ல.. " என்றான் கௌதம் நக்கலாக.. 


" சும்மா இருண்ணா நீ அவர உசுப்பேத்தாத.." பவி


" ஆமா நாந்தேன் அவர ஏத்திவிடுறேன்.. இல்லைன்னா அவர் என்ன ஒன்னுமே சொல்ல மாட்டாரு.. வந்துட்டா ஹிட்லருக்கு சாம்ராணி போட.. " 


" ஏய்‌ என்னோட தம்பியத்தான் நீ ஹிட்லர்னு சொன்னியா.. அடப்பாவி.. என்ன பண்ணான் உன்ன.." நங்கை..


" இங்க தான இருக்கப் போறோம்.. பார்த்துப் பார்த்து தெரிஞ்சுப்பீங்க.. இப்ப முதல்ல இவா வாய மூட வழி சொல்லுங்க.. "  என்று ஹரிணியை நோக்கி கை காட்டினான்..


நங்கை நாச்சியம்மாளைப் பார்க்க அவர் ஹரிணியை இமைக்காது பார்த்துக் கொண்டே இருந்தார்.. திரும்பி கௌதமை பார்க்க இவன்‌ நாச்சியம்மாளை சைட் அடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.. 


" ண்ணா என்ன பண்ற..? " 


"இப்படி ஒரு தேவத இங்க இருக்குறத  யாருமே ஏங்கிட்ட சொல்லல.. ப்யூட்டி.. ஓ.. மை ப்யூட்டி..." என நாச்சியம்மாளின் அருகில் சென்று கட்டி அணைத்து தூக்கிச் சுற்றினான்.. 


" ஐயோ.. ஐயோ.. எந்த எடுபட்டபய என தூக்குனது விடுடா என்ன.. ஆ.." என கத்த அவன் இறக்கி விட்டான்..


" ப்யூட்டி.. நானும் வந்ததுல இருந்து பாக்குறேன்.. என்ன கண்டுக்காம இவளையை பாக்குற.. டூ பேடு.. ப்யூட்டி.. நாந்தா உம்பேரெ.." 


இறங்கிய நாச்சியம்மாள் ஆறடியில் நல்ல வெள்ளை வெளேர் என்றும் சிறிது ப்ரவுன் கலர் பூசிய முடியும் மீசை இல்லாமல் சவரன் செய்த முகமும் , காதில் ஒரு கடுக்கனும் , சிஸ்க் பேக் உடலும் , அதை  இறுக்கி பிடித்த கருப்பு நிற டீ சர்ட் , டிரக் பேண்ட் என கண்களை கவரும் அழகுடன் இருந்த கௌதமை ஏற இறங்கப் பார்த்தார்.. 


" ப்யூட்டி.." என அணைத்தவனை வாஞ்சையுடன் முதுகைத் தடவிக் கொடுத்துத்தார்.. 


" எப்படி ஐய்யா இருக்க.." என கண்கலங்கியவர் பின் " ஹவ்.. ஆரு.. யூ.." என்றார்..


" பாட்டி  அவனுக்கு தமிழ் நல்லா வரும்.. நீங்க சிரமப்படாதீங்க.. " பவி.


" வாடி ஏங் கொத்தமல்லி கொழுந்தே.. இப்பத்தா இந்த அப்பத்தால பாக்கனுமுன்னு தோனுச்சோ.. " 


" ஏன் அப்பத்தா வந்ததும் வராததுமா சின்னப் பிள்ளைட்ட வம்பிலுக்குற.. பவிமா நா‌னும் உன்னோட பிரதர் தான்.. பிரகாஷ் வக்கீலா இருக்கேன்.. " 


" எந்த திசைல கோர்ட் இருக்குன்னு கேளேன் வக்கீலு கரெக்டா சொல்லீடுவாரு.. " இந்து..


" வந்துட்டியா எங்க ஆள காணுமேன்னு பாத்தேன்.. இவா நம்ம கிருஷ்ண அத்தையோட பொண்ணு இந்துமதி.." என அறிமுகம் செய்து வைக்க..


பவி அவளிடம் ஹாய் என்று உரையாட கௌதம் நிமிர்ந்து பார்த்து விட்டு தலையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான்.. 


" எம்மா மலரு அந்த வெளக்கெண்னைய கெஞ்சம் கொண்டாம்மா.. காலுல என்னன்னு பாப்போம்.." என ஊஞ்சலில் அமர்ந்து சுளுக்கெடுக்க ஆரம்பித்தார்..


" நீயும் பெருமாள் ஊருல தா இருக்கியா.. உன்னோட பூர்வீகமும் அதான்னா.."


" ஆமா கிராணி.. நானும் மும்பை தான்.. நா பவி ஃப்ரண்ட்லாம் இல்ல கௌதம் ஃப்ரண்ட்.. கேர்ள் ஃப்ரெண்ட்.. என்னோட பூர்வீகம் ஆந்திரால குண்டூர் பக்கம்.. அம்மா பேரு வசுந்தரா.. தாத்தா பேரு கோவிந்தரெட்டி.." என தன்னை பற்றி சகலத்தையும் கூறினாள் பெண்..


" ஓ.. தமிழு நல்லா பேசுரீயேத்தா.. எங்க ஊரு திருவிழா நல்லாருக்கும்.. நீ வேண்டுரது எல்லாமே கெடக்கும் த்தா.." 


" ப்யூட்டி அவ்ளோ பவரா உங்க சாமிக்கு.. அப்ப நீங்க நல்ல பிள்ளயா பிறக்கனும்னு வேண்டிருக்கலாம்ல.. " கௌதம்..


" ஏம் புள்ளைக்கு என்னடா கொறச்சல்.. தங்க மாட்டம் இருக்காங்க.. நா பெத்த எல்லா புள்ளையும் எங்க ஆத்தா கொடுத்த வரம்டா.. " நாச்சியம்மாள்..


" ஓ.. அப்படி வேண்டியுமா உங்களுக்கு ஹிட்லர் புள்ளையா பெறந்தாரு.. எப்படி.." என யோசிக்க.. 


" யாருடா அந்த கிட்டாரு.. ?"


" வேற யாரு உங்க புள்ள என்னோட அப்பாவத்  தான் சொல்றேன்.." 


" ஐயோ.. ஐயோ.. ஐயோ..  இந்த பெருமாளு நா வச்சப்பேர மாத்தீட்டானாக்கும்.. உருப்புடாதபய.. " என வசைபாடியவரை நங்கை நிறுத்தினார்..


"ம்மா ஹிட்லர் கிறது ஒரு கொடுமக்கார ராஜா.. அது மாறி தான் தம்பியும் இவன கொடுமப்படுத்துரதா சொல்றான்.." என்க.. அப்படியா என்பது போல் பாட்டி திரும்பி பார்க்க.. அப்படித்தான் என்றான் கௌதம் கண்ணடித்து.. 


பிரகாஷ்ஷிடம்  லக்கேஜ்களை எடுத்து அவர்களுக்கு என்று ஒதிக்கிய அறையில் வைக்கச் சொன்னான் தரன்.. பின் அப்பத்தாவிடம் செல்ல..


" கண்ண மூடிக்கத்தா நா சுளுக்க எடுக்கப் போறோன்.. " என்க..


அவள் அருகில் நிற்பவர் யார் என்று கூடப் பார்க்காது தரனின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.. வலியின் மிகுதியால் பல்லைக்கடித்துக் கொண்டு இருந்தவளின் தோல்களை கௌதம் தொட அவள் அவனின் வயிற்றில் முகம் புதைத்தாள்.. 


" அவ்வளவு தான் தா.. செத்த நேரம் கழிச்சு எழுந்துரிச்சு போத்தா.." 


அங்கு இருப்பவர்கள் அனைவருக்குமே ஹரிணி கௌதமின் நெருக்கம் வித்தியசமாகவே பட்டது.. எனினும் எதுவும் கேட்கவில்லை.. அவர்கள் பட்டணத்தில் வளர்ந்தவர்கள் என எண்ணிக் கொண்டனர்..  


கண்களைத் திறந்தாள் அருகில் இருந்த இருவரையும் பார்த்தாள்.. கௌதம் அவளின் கால்களை பார்த்தான் என்றால்.. தரன் அவளின் கைகளை கண்களால் காட்டினான்.. பிடித்திருந்த கையை அவள் விடவில்லை.. விலக்க நினைக்கும் முன்னரை கௌதம் கைகளை பிரித்து விட்டான்..


'இவனுக்கு இதே வேலயா போச்சி.. ' 


அவனை கண்டு கொள்ளாது தன் புன்சிரிப்புடன் " அப்பத்தா பவியும் இந்த பொண்ணும் இந்துமதி ரூம்ல தங்கிகட்டும்.. நா மில்லுக்கு போறேன்.. " என்க..


"என்னோட பேரு ஹரிணி.. இந்த பொண்ணு அந்த பெண்ணுலாம் சொல்ல வேண்டாம்.. " என்ற ஹரிணி  தன்னிடம் பேசாதது போல் பாவித்து அவன் தோலைக் குலுக்கியவாறு சென்று விட்டான்.. 


" திமிரு புடிச்சவன்.." என நண்பர்கள் இருவரும் ஒருசேர முணுமுணுத்தனர்.. 


" ஹய்.. இங்க பாருங்க நா என்ன கொண்டு வந்திருக்கேன்னு.." பிரகாஷ்.


" ஆ.. மாங்கா.. சகோதரா.. என்ன மறந்துட்டியா.. அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி கூட நாம பேசீட்டு இருந்தோமே.. உன்னோட ப்ரோ டா.." என மாங்காய் இரண்டை அவன் கைகளில் இருந்து உருவினான் கௌதம்.. 


" அண்ணா எனக்குண்ணா.. எனக்கு.." என ஒரே நொடியில் ஹரிணி கஷ்டப்பட்டு பறித்த மாங்காய்கள் அனைத்தும் விற்றுவிட்டது..


" டேய்.. டேய்.. மாங்கா டா." என கரம் நீட்டி‌ ஹரிணி கண்களை சிமிட்டினாள்..


" என்னைய நீ மாங்கான்னு திட்டீட்ட சோ உனக்கு ஒன்னும் கிடையாது.. " என மாங்காயை பத்திரப்படுத்திக் கொண்டு நகர்ந்தான் கௌதம்..


" ம்மா.. பாருங்கம்மா.." என நங்கையிடம் சிணுங்கினாள் ஹரிணி..


" நீ கவலைப் படாதடா.. அம்மா பறிச்சுத் தரச் சொல்றேன்.. " என்று கூறி அணைத்தார் தாய்மையுணர்வோடு.. ஹரிணி அந்த குடும்பத்துடன் ஒன்றிப் போனாள்..


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...