அத்தியாயம்: 8
" ஏய் நீ லெஃப்ட் ல போ.. நீ ரைட்ல வா.. டேய் நீ முன்னாடி டூ ஸ்டெப் வா.. நீ கொஞ்சம் பின்னாடி இன்னும் கொஞ்சம் இன்னும் ஹாங்.. ஓகே... ஓகே.." என கையில் இருந்த மட்டையை தரையில் இருமுறை குத்தி விளையாட தயார் ஆனான்...
" ம்க்கு இவருக்கு என்னமோ தல டோனிக்கு தம்பீன்னு நெனப்பு.. இது வர ஒரு பால் கூட அடிக்கல.. அதுக்கு இவரு குடுக்குற பில்டப் இருக்கே.. சப்பா தாங்க முடியலடா சாமி.... " என ஸ்டெம்ப்பிற்குப் பின்னால் நின்ற சிறுவன் முணுமுணுக்க....
" அங்க என்ன டா சத்தம்.... "
"ஒன்னுமில்லண்ணா.. நீ செம்மையா ஆடிட்டு இருக்கன்னு சொல்லிட்டு இருந்தேன்.."
" ஹா.. அந்த பயம்... டேய் நீ போடப்போறியா இல்லையா.... சும்மா.. சும்மா.. அந்த பந்த தொடச்சுக்கிட்டு... போடுடா.. " என்றான் சலிப்பாக...
ஓடி வந்த அந்த சிறுவன் பந்தை எறிய, அது நின்று கொண்டு இருந்தவன் மட்டையில் படாமல் பின்னால் இருந்த மாணவனின் கைக்குச் சென்றது... அடித்து விட்டதாக நினைத்து ரன் எடுக்க ஓடப்போனவனின் காதில் கேட்டது சிறுவர்களின் ' அவுட்..' என்ற கூச்சல்... திரும்பிப் பார்த்தால் அங்கு கீப்பராக நின்றிருந்த சிறுவன் அவனை ரன் அவுட் செய்திருந்தான்...
" இல்ல.. இல்ல.. இது அவுட் இல்ல... இங்க பாரு நா இன்னும் கால கோட்ட விட்டு வெளில எடுக்கவே இல்ல.. சோ.. நா அவுட் இல்ல.. அவுட் இல்ல." என வாதம் செய்தான் அந்த இளைஞன்...
அங்கு பெரும் கூச்சலுடன் சிறுவர்களும் அவனுடன் வாதம் செய்தனர்... இவர்கள் பள்ளியின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்... இவர்களின் சத்தம் கேட்டு பாடம் நடத்த முடியாமல் ஆசிரியர் ஒருவர் வந்தார்...
" ஏம்பா பரிச்ச நேரம் படிக்காம இங்க விளாண்டுட்டு இருக்கீங்க.. மத்தவங்களயும் படிக்க விடாம சத்தம் போடுறீங்க.. " முதிய ஆசிரியர்..
" ஓகே.. ஓகே.. பெருசு டென்ஷன் ஆகாத.. இனிமே சத்தம் வராம நா பாத்துக்கிறேன்.. " நக்கலாக
கூறினான் அந்த இளைஞன்..
மாணவர்கள் சத்தமில்லாமல் சிரிக்க ,
' இவங்கள திருத்தவே முடியாது.' என வாய்விட்டு புலம்பியவாறு சென்றார் அவர்..
" திருத்தி என்ன பண்ணப் போறாராம்.. வாங்க டா நாம மேட்ச்ச கண்டின்யூவ் பண்ணலாம்.. "
" ஏண்ணே ஒரு பந்தக் கூட அடிக்க தெரியல.. நீயெல்லாம் எப்படிண்ணே இவ்வளவு பெரிய ஆளா வளந்த.. ".
" ஆங்.. தண்ணீ ஊத்தி வளத்தாங்க.. நா எப்பிடி வளந்தா உனக்கு எதுக்கு ஆராய்ச்சி.. உனக்கு ஒழுங்கா பந்து போடத் தெரியல இதுல பேச்சப் பாரு எகத்தாளமா..."
" நீ அவுட் ண்ணா குடுண்ணா பேட்ட.. "
" முடியாது டா.. போய் பந்தப் போடு.. பேட் உசரங்கூட இருக்கமாட்டான் இவனுக்கு பேட் வேணுமாம்.. போடா.."
" இந்த மெற யாவது அடிச்சுடுவியா இல்ல.." பின்னால் இருந்த சிறுவன் கேட்க..
" இப்..ப பாரு..டா.. அண்ணனோட ஆட்டத்த.. உனக்கு வேண்டியது ஃபோரா.. இல்ல சிக்சா.." என மட்டையை சுழற்றி அடித்தான்.. அது நேராக பந்தை எறிந்தவன் கைகளுக்கே சென்றது.. கேட்ச்... அவுட்.. என சிறுவர்கள் ஆர்பரித்தார்கள்..
" நோ.. நோ.. நா..." என கூறும் முன்னே சிறுவர்கள் ஓடி விட்டனர்..
" அந்த பயம் இருக்கனும் எம் மேல.. " என்பதற்குள் செவிகளில் கேட்டது அந்த சிரிப்பொலி..
யார் அந்த குயில் என திரும்பிப் பார்த்தான்.. வேப்பமரத்தின் அடியில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.. அருகில் சென்றவன் " வ்.......வாவ் வாட்ட ப்யூட்டி.." என கண்களில் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டியவன்..
" ஹாய் ஏஞ்சல் வாட்ஸ் யுவர் ப்யூட்டி ஃபுல் நேம்.. " என்க அவர் பின்னால் திரும்பிப் பார்த்தார்..
" ஹே.. நா உன்னத்தான் சொன்னேன் ஏஞ்சல்.."
கோபமாக வந்தவர், "யார் நீ? இது ஸ்கூல்.. இங்க படிக்கிற ஸ்டுடெண்ட் மட்டும் தான் இந்த கிரவுண்ட்ல விளையாடனும்.. வெளில போ முதல.."
"நோ.. நோ.. ஏஞ்சல் எல்லாம் கோபப்படக் கூடாது.. என்னால போக முடியாது ஏஞ்சல்.. ஏன்னா இது என்னோட தாத்தா கட்டின ஸ்கூல்.. சோ.. முடியாது.. முடியாது.."
" தாத்தா கட்டினதா.. யாரு உன்னோட தாத்தா.." என்றார் யோசனையோடு.. ஏனெனில் அது அரசு பள்ளி..
" சீ.. தர்.. அங்க.. அங்க.. ஆஆ... அதான் என்னோட தாத்தா.." என காமராஜர் படத்தைக் காட்டினான்.. அவர் முறைத்துக் பார்க்கவும்..
" லுக் எப்படியும் அவருக்கு நூறு வயசுக்கு மேல தான் இருக்கும்.. அதனால தாத்தா தான அவரு.. தாத்தாவ தாத்தான்னு சொல்லலனா தாத்தா கண்ண குத்திடுவாரு.. நைட் தூங்குனாலும் சுரண்டி எழுப்பி கண்ண திறக்க வச்சி குத்திடுவாரு.."
" என்ன நக்கலா.. வாட்ச்மென்.. வாட்ச்மென்.. " என கூவிக் கொண்டே கேட்டை நோக்கிச் சென்றார் நங்கை..
முதலில் அவர்கள் கூச்சலிட்ட போதே வந்துவிட்டார் நங்கை.. அது அவர் தலைமையாசிரியராக பணிபுரியும் அரசு பள்ளி.. அவன் மரியாதையின்றி பேசினாலும், பின் சத்தமிடாமலே விளையான்டான்.. அவன் பேசிய பேச்சிற்கு ஒரு ரன் ஆவது எடுப்பான் என பார்த்தால் எடுத்தது என்னமோ பூஜ்ஜியம் தான்.. நங்கை அதைப் பார்த்து சத்தமாக சிரித்து விட்டார்.. சிறுவர்கள் அவரைப் பார்த்ததும் எஸ்கேப் ஆகிவிட்டனர்..
வாட்ச்மென்னிடம், " எதுக்கு இவன மாதிரி ஆளுகள உள்ள விட்டீங்க.. கவர்மெண்ட் ஸ்கூல்னா யாரும் கேக்கமாட்டாங்கன்னு நினைச்சுடீங்களா.." என்றார் கோபமாக..
" ஏஞ்சல் டோன் கெட் ஆங்கிரி.. " என தோலில் கையைப் போட வந்தவன் அவர் முறைக்கவும் கீழே போட்டான்..
" இல்ல பெரிய டீச்சர்.. அது வந்து.. இவருக்கு உங்கள தெரியும்னு சொன்னாரு.. அதுமட்டுமில்லாம இவரோட பையன இங்க சேக்கனும் சொன்னாரு.. அதா டீச்சர் உள்ள விட்டேன்.."
அவனைப் பார்த்தால் பிள்ளையை சேர்க்க வந்தது போல் தெரியவில்லை.. வம்பு வழக்க வந்தவன் போல இருந்தான்.. தரனுக்கு கால் செய்யலாமா என அவர் எண்ணியபோது.. அங்கு வந்தாள் இருபது வயது மங்கை.. கருப்பு வண்ண ஜீன்ஸ் மற்றும் வெளிர் ஊதா வண்ண டாப்ஸ் ,காலில் ஸ்ஜூ ,முடியை தூக்கிக் காட்டி போனீடைல் என மாடன் யுவதியாக இருந்தாள்..
ஒரு கையில் முழு மாங்காய் ஒன்றை வைத்திருந்தாள்.. மற்றொரு கையில் இருந்த மாங்காயை கடித்து சுவைத்தபடியே இவர்களை நோக்கி வந்தாள்..
" டேய் அண்ணா இந்தா.. இத அவ உன்ட குடுக்கச் சொன்னா.. ம்.. ம்.. ரொம்ப நல்லா இருக்கு.. பக்கத்து தோப்புல இருந்து பறிச்சோம்.. ம்.. செம்ம டேஸ்ட்... " என ஒருகையில் இருந்ததை சுவைத்தபடி மற்றொரு கரத்தை நீட்டினாள்..
அது நாதனுக்கு சொந்தமான தோப்பு அதில் இவள் திருடிக்கொண்டு வந்திருக்கிறாள்..
" யார் நீங்க..? இங்க எதுக்கு வந்துருக்கீங்க..? என்ன வேணும் உங்களுக்கு..? " என படபடத்தார் நங்கை..
இம்முறை அவரின் முறைப்பையும் மீறி அவரின் தோலில் கையைப் போட்டவன்.. " ஏஞ்சல் எங்கள தெரியலையா.. நா கௌதம்.. இவா பவித்ரா.." என்றவனின் முகத்தை கூர்ந்து கவனித்தார்.. அவனின் பேச்சும் செயலும் தமிழன் போல் இருந்தாலும் வடமாநில இளைஞன் போல இருந்த அவனின் தோற்றம் நங்கையை குழப்பியது.. பின் பவித்ராவை பார்த்த உடனே தெரிந்து விட்டது அவர்கள் யார் என்று..
அவரின் முகத்தில் தோன்றிய புன்னகையை வைத்து தங்களை அடையாளம் கண்டு கொண்டார் என்பதை அறிந்த அவன் " ஏஞ்சல்.. கண்டுபுடிச்சுடீங்க போலயே.. நாங்க உங்க தம்பி பிள்ளைங்க.."
கலியபெருமாள் ஜோதி தம்பதியரின் பிள்ளைகள்.. பூரிப்புடன் அவர்களை ரசித்துக்கொண்டு இருந்தார்.. அவர்களின் கவனத்தை கலைத்தது அந்த ஜல்..ஜல்.. ஜல். என்ற சலங்கை ஒலி..
சீறிப்பாயும் புலியைப்போல் பாய்ந்து வந்து கொண்டு இருந்தது அந்த காளை.. ம்மா.. என பெருங்குரலுடன் கத்தியபடியே மிரண்டு ஓடி வந்த அதன் வாலில் இருந்த காயம் யாரோ பட்டாசை அதில் கட்டி வெடிக்க வைத்தால் வந்தது.. அந்த வாயில்லா ஜீவன் வலியைப் பொறுக்க முடியாமல் தறிகெட்டு ஓடியது..
அதன் பின்னாலேயே ஓடி வந்த முத்துவைப் பார்த்து, " யாரு பண்ண வேல முத்து இது.. " என்றார் நங்கை கோபமாக.. ஏனெனில் அது அவர்கள் வீட்டு ஜல்லிக்கட்டு காளை.. சேந்தன் அதனுடைய பெயர்..
" தெரியலம்மா.. வர்ர ரேக்லா போட்டிக்கு நம்ம களத்துல வச்சு பயிற்சி கொடுத்துட்டு இருந்தேன்மா.. அசந்த நேரம் பாத்து வால்ல கட்டி விட்டிருக்கானுங்க.. யாரு பண்ணுன வேலைன்னு கண்டுபிடிச்சுடலாம்மா.. அதுக்கப்புறம் இருக்கு அவனுக்கு.. தம்பி எங்கம்மா வயக்காட்டுலதான இருப்பாரு.. " என்க..
" ஆமா முத்து வா போய் பாக்கலாம்.."
"அத்த அந்த மாடு போய்டுச்சு எப்படி, எங்க போய் பிடிப்பீங்க.. " பவி
" நீ மாங்கா திருடுனியே அந்த தோப்ப தாண்டி போனா நம்ம வயக்காடு வரும்.. அங்க தா போயிருக்கும்.." நங்கை..
" எப்படி அவ்வளவு உறுதியா சொல்லுறீங்க ஏஞ்சல்.. " கௌதம்..
" சேந்தன அடக்குற ஒரே ஆளு நம்ம தரன் தம்பி தாங்க.. எங்க எப்படி போனாலும் தம்பிட்ட தாங்க கடைசில வந்து சேரும்.. பசுவ பாத்த கன்னுக்குட்டி போல. " முத்து வாஞ்சையுடன்.
" யாரையும் முட்டிடாதுல.. ஏன்னா அத பார்த்தாலே பயம்மா இருக்கு.." பவி..
" சொல்ல முடியாது பாப்பா.. அது இருக்குற கோபத்துக்கு எதுக்க யாரும் வராம இருந்தா சந்தோஷம்தா.. இல்லைன்னா ஆஸ்பத்திரில தா கெடக்கனும்.. சேந்தன் பயங்கரமானவன் பாப்பா.. " முத்து .
இருவரும் ஒருசேர " ஹரிணி.." என கத்தியபடி தோப்பிற்குள் ஓடினர்..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..