அத்தியாயம்: 7
ஊரின் முக்கியஸ்தர்கள் சிலர் ரிஷிதரனை கண்டு எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்க , சிலர் தலையசைத்தனர்.. மீதி சிலரோ இவனுக்கு வந்த வாழ்வ பாருடா என்பது போல் இருந்தனர்.. நாதன் ஐயாவுக்கு பெருமையாக இருந்தது தனக்குப் பின் தன்னுடைய வாரிசாக இந்த ஊருக்கு தன் தம்பி மகன் ரிஷிதரனை அறிமுகப் படுத்துவதில்.. அனைவரும் சென்ற நிலையில் ஒருவர் மட்டும் தனித்து இருந்தார்..
" என்ன கணேஷா எதுவும் தனியா சொல்லனுமா.. " நாதன்..
" அது வந்து... " என அவர் இழுக்க..
" மறுபடியும் அந்த குமாரு எதுவும் பிரச்சனை பண்ணானா.. எதுவா இருந்தாலும் பாத்துக்கல்லாம் அண்ணா.. கவலைப் படாதீங்க.. " தரன்..
" இல்ல தம்பி அவிங்க திருவிழால ஏதோ பிரச்சன பண்ணப் போறாங்க போல.. முக்கியமா உங்களைத்தா வம்பிழுக்க போறதா பேச்சு.. அதா.. கொஞ்சம் நீங்க கவனமா இருங்கன்னு சொல்லலாம்னு காத்துருந்தேன்.. "
" போன திருவிழால வாங்குன அடியவே அவிங்க இன்னும் மறந்திருக்க மாட்டாய்ங்க.. அதுக்குள்ள அடுத்ததா.. கவர்மெண்ட் ஆஸ்பத்திரிய வர்ஷக்கணக்குல குத்தகைக்கு எடுத்து வச்சுருப்பாய்ங்க போல.. என்ன சித்தப்பு சரி தான இந்த முறையும் அவிங்க மண்டைல மாவிளக்கு போட்டுவோம்.. " பிரகாஷ் ஜாம்பமாக..
" இல்ல தம்பி.. குடும்பத்து ஆள்கள தான் குறி வச்சுருக்காங்க போல.."
" எங்கள மீறி அவனால எதுவும் புடுங்கீட முடியாது.. பாத்துக்கல்லாம்.. பாத்துக்கல்லாம்.." பிரகாஷ்..
அவர் தரனை பார்த்து சிறு தலையசைப்புடன் விடை பெற்றார்..
உணவு மேஜையில் அனைவரும் அமர்ந்திருந்தனர்.. மலர் , கிருபாவதி , இந்துமதி பரிமாற அனைவரும் உணவு உண்டு கொண்டு இருந்தனர்..
இந்து மட்டும் ' நானும் இவங்கூட உக்கார்ந்து சாப்பிட்டா இந்த வீட்டு கூர ஒடைஞ்சா விழுந்துடும்மா.. ரொம்பப் பண்ணுது இந்த அம்மா..' என அன்னையை முறைத்த படியே பரிமாறினாள்..
அவளின் கைகளைப் பிடித்து.. "நீயும் சாப்பிடு.. மில்லுக்கு போகும் போது உன்ன தோட்டத்துல இறக்கிவிட்டுடுறேன்.. " தரன்..
முகமலர்ச்சியுன் சரி என தலையாட்ட போனவள் அன்னையின் முறைப்பில் தலை குனிந்து நின்றாள்..
" இருக்கட்டும் பா.. அவளுக்கு எதுக்கு தோட்டம் அது இதுன்னு வச்சு குடுக்குற.. அவா பாட்டுக்கு வீட்டுல மதினி கூட ஒத்தாசையாக இருந்துட்டு போறா.. அதான் காலேஜ் முடிஞ்சுடுச்சில்ல.. எதுக்கு இந்த வெட்டி வேல.." கிருஷ்ணம்மாள்..
அவன் அத்தைக்கு பதில் தராது அழுத்தமாக இந்துமதியை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.. அவள் பதில் கூறவும் இல்லை அவன் கையை விடவும் இல்லை.. " அதா தரன் சொல்றான்ல உக்காரு மா.. " நாதன் சொல்ல அவளும் அமர்ந்தாள்..
கிருஷ்ணம்மாள் மனதிற்குள் ' இவன் எப்ப இந்த வீட்டுக்குள்ள வந்தானோ , அன்னைல இருந்து எம் பேச்சுக்கு மரியாதையே இல்லாம போச்சு.. ' என கருவிய படியே பேசாமல் இருந்தார்..
நாச்சியம்மாள், " டேய் கலியபெருமாள் எப்போ வருவான்னு தகவல் ஏதும் சொன்னானா.. இவனுக்காக எத்தன வருஷம் காத்திருக்க வேண்டி இருக்கு.. சும்மாவா சொன்னாங்க ஆண்பிள்ளையை அடித்து வள; முருங்கையை ஒடித்து வளனு.. இவன அன்னைக்கே அடிச்சு வளத்திருந்தா இன்னைக்கு இந்த குடும்பமே சிதஞ்சு போய் இருக்காது.. " என கூறி நங்கையை பார்த்து கண்கலங்கினார் நாச்சியம்மாள்..
நங்கை இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல், உணவு ஒன்றே குறி என தட்டை காலி செய்து கொண்டிருந்தார்.. மலர் தன் மகன் வேல்ராஜ்ஜின் வரவைப் பற்றி யாராவது கூற மாட்டார்களா என கணவன் மற்றும் மகன்களின் முகத்தையும் பார்த்தார்..
அன்னையாய் மகனைக் காண துடித்தது அந்த இரு உள்ளமும்.. நாச்சியம்மாள் கேட்டு விட்டார்.. மலர் கேட்கவில்லை அவ்வளவு தான்..
" ஊர் நெனப்பும் நம்ம நெனப்பும் இருந்தா வரவேண்டிய ஆள் எல்லாம் தன்னால வந்து சேருவாங்க.. நீ யென் அப்பத்தா கிடந்து லபோதிபோன்னு கத்துர... வருவாங்க எல்லாரும்.. சும்மா சும்மா கண்ண கசக்கீட்டு..." பிரகாஷ்.
தரன் " அப்பத்தா கொடியேத்துன மறு ஞாயித்துக் கிழம வர்ராராம்.. உங்க பேத்திக்கு அப்பத்தான் பரீச்ச முடியுதாம்.. வந்து இரண்டு வாரம் இருக்கப் போறாராம்.. "
" ஓ... பேத்தி மட்டும்தானா...? "என்றார் கவலையுடன்..
" இல்ல பேரனும் வாரானாம்.." என்றான் புன்சிரிப்புடன்..
" போடா போக்கிரி..." என செல்லமாக திட்டியவர், தன் பேரனைக் காண ஆவலாக இருந்தார்..
" ஆகா.. அற்புதம் ஊருக்குள்ள இந்த கைப்புள்ளைக்கு ஒரு அடிம கிடைக்கப் போகுதுன்னு சொல்லுங்க.. அந்த சின்னப் பையள வச்சுச் செஞ்சுடுவோம்.. " பிரகாஷ்.
" ஆசை இருக்கிறது ஏரொப்பிளேன் ஏற ; அதிருஷ்டம் இருக்கிறது எரும மேய்க்க.. " நாச்சியம்மாள்..
" சித்தப்பு யென் உங்க அம்மா எப்பப்பாத்தாளும் புரியாத மாறியே பேசுது.. எங்க நீங்க செஞ்சம் விளக்க உரை எழுதி போடுங்க பாப்போம்.. " பிரகாஷ்.
" டேய் அவன் உனக்கு மூத்தவன்டா.. அவ உனக்கு மூனாவது அண்ணன்.." என்க.. தங்கைகள் உட்பட அனைவரும் சிரித்தனர்..
அதை பார்க்கையில் ' இன்னைக்கு என்ன டேமேஜ் அதிகமா இருக்கு.. சரி சமாளிப்போம்.. '
"அப்ப நா அவரோட சங்கத்துல சேந்துடுறேன்.. " என்றான் சலிக்காமல்..
மலர் தரனின் முகத்தை பார்த்தபடியே இருக்க.. " அண்ணா திங்கட்கிழமை வந்துடுவாங்க பெரிம்மா.. "
" என்னம்மா உங்க பேரனும் வாரான் போலயே.." பிரகாஷ்.
" வாயமூடுடா அராத்து.. " என மகனின் தலையில் கொட்டினார் மலர்..
" அவங்க மூனுபேர் மட்டும் தானா இல்ல.." பிரகாஷ் இழுக்க..
" அண்ணியோட தங்கச்சி காவியாவும் வர்ரதா சொன்னாங்க.." சுதா
" காவியாவாஆஆஆ... "
" அண்ணா வாய்க்குள்ள ஈ போய்ட போது மூடுங்கண்ணா.." என லதா அவனின் வாயை மூடினாள்..
“ அதுங்க ஒரு வேஸ்ட் ஃபீஸ்ஸு அதுக்கு போய் வாய திறக்காதண்ணா..” சுதா சொல்ல..
" அத்த நா உங்கள ஸ்கூல் ல விட்டுடுறேன்.. வாங்க.. " என உண்டு முடித்து விட்டு நங்கையை அழைத்தான் தரன்..
" இல்லப்பா நா நடந்தே போய்கிறேன்.. " நங்கை.
"சும்மா போடி.. உன்னோட மருமகன் தான.." நாச்சியம்மாள்.
"சரி.." என்றார் தயங்கியபடியே..
" ம்ம்... வாத்தியார் மகன் மக்கு ங்குற மாதிரி யெம் மகா டீச்சரு யெம் பேரன்… ஹிம்.." என பெருமூச்சு விட்டார் நாச்சியம்மாள்..
" இந்த கிழவிக்கு கைப்புள்ள கூட விளையாடுறதே வேலையாப் போச்சு.. இருக்கட்டும் பாத்துக்கலாம்..".
" தனியா நின்று புலம்பாம ஏதாவது வேலையப் பாருடா.. படிப்பு தான் வரல வேலையாவது கிடைக்குமான்னு பாப்போம்.." கவியரசன்.
" ஹலோ... நீங்க யாருக்கிட்ட பேசீட்டு இருக்கீங்கன்னு தெரியுமா.. வருங்கால ஜர்ஜ் கிட்ட சித்தப்பு.. நாங்கல்லாம் பல பஞ்சாயத்துகள பாத்தவிங்க.. இன்னமும் பாக்க வேண்டியிருக்கு.. என்னையப் போய்... முத பிள்ள குட்டிங்கள நல்லா படிக்க வைங்க.. வந்துட்டாரு அட்வைஸ் பண்ண.." எங்கே நின்றால் இன்னும் ஏதாவது சொல்லி விடுவாரோ என்ற பயத்தை வெளிக்காட்டாமல் கெத்தாகவே சென்றான்..
தரன் கூடத்தில் ஒரு மூலையில் இருந்த அறைக்கு சென்றான்.. அங்கு கட்டிலில் சில வயர்கள் மற்றும் டிபூப்களின் உதவியோடு, உயிர் இந்த உடலை விட்டு போகாமல் இருக்க போராடிக் கொண்டு இருந்தார் சத்தியமூர்த்தி.. சில வருடத்திற்கு முன்பு நடந்த ஒரு ஆக்சிடென்டில் சத்தியமூர்த்தி கோமா நிலைக்குச் சென்றுவிட்டார்..
அவரின் மகள் வைசாலி அந்த விபத்திலிருந்து பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா என யாருக்கும் தெரியவில்லை.. கார் விழுந்த அந்த பள்ளத்தில் எவ்வளவு தேடியும் அவள் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.. இன்று வரை தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள் ஏதாவது தகவல் வராதா என்று..
கணவன் மட்டுமே உலகம் என்று இருந்த கனகவள்ளி இடிந்து போய் விட்டார்.. கணவன் தன் வீட்டாரின் மேல் வைத்திருந்த அன்பை உணர்ந்தவர் அவரை கிராமத்திற்கு அழைத்து வந்தார்.. இங்கிருந்தே மேல் சிகிச்சை நடைபெறுகிறது.. மகனுடன் வந்து ஆறு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.. கனகவள்ளி யாரிடமும் பழக முயற்சி செய்யவில்லை.. மூர்த்திக்கு பணிவிடை செய்வது மட்டுமே அவர் செய்யும் ஒரே வேலை.. அவள் சாப்பிட்டாளா இல்லையா என்பது கூட யாருக்கும் தெரியாது.. அவர் அறையை விட்டு வெளியே வருவது கூட இல்லை..
ரிஷி தரன் , சத்தியமூர்த்தி மற்றும் கனகவள்ளியின் ஒரே மகன்.. அவனின் குணாதியங்களை சரியாக விளக்க முடியாது.. ஏனெனில் அவன் சற்று வித்தியாசமாக அழுத்தக்காரன்.. அவன் மனதை தெளிவாக யாருக்கும் காட்டியதும் இல்லை விளக்கி கூறியதும் இல்லை..
தாய் பணிவிடை செய்ய தந்தையைக் கண்டவனின் கண்கள் சற்று கலங்கித்தான் போனது.. எப்பொழுதும் கம்பீரமாக வளம் வரும் தந்தையை சிறிய அறையில் , அதுவும் படுத்தப் படுக்கையாக காண்கையில் மகனாக அவன் மனம் வேதனை கொண்டது..
அவனது தோலில் கை வைத்து " எல்லாம் சரியாகிடும் வா.. மூர்த்திக்கு மனவலிமை அதிகம்.. அதனால கண்டிப்பா ஒரு நாள் எழுந்து நிப்பான்.. வருத்தப்படாத.." என கன்னத்தில் கை வைத்து ஆறுதல் வழங்கினார் நங்கை.. அன்னையிடம் எதிர்பார்த்த அன்பு அத்தையிடம் கிடைப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தான்..
இந்துமதி அழகான கிராமத்து பெண்.. தந்தையுடன் அதிகமாக பழகவில்லை எனினும் பாசம் வைத்திருந்தாள்.. தந்தைக்குப்பின் தன் அண்ணன்.. அவன் வெளிநாட்டிற்கு வேலை சென்ற போது அந்த இடத்தை நிரப்பியவன் ரிஷி தரன்.. வெளி உலகம் என்ற ஒன்று உள்ளது என்பதே தெரியாமல் வளர்க்கப்பட்டாள்.. பயந்த சுபாவம் உடைய அவளது வாய்துடுக்கு எல்லாம் வீட்டில் மட்டுமே.. அதுவும் கிருஷ்ணம்மாள் இல்லாத போது அவள் செய்யும் சேட்டைகள் ஆயிரம்..
பன்னிரெண்டோடு படிப்பை நிப்பாட்ட வேண்டும் என்று ஆடிய கிருஷ்ணம்மாளுடன் சண்டையிட்டு பட்டப்படிப்பு படிக்க வைத்தான் தரன்.. தாவரவியல் எடுத்து படித்த அவளுக்கு அலங்கார மலர் மேல் ஓர் ஆர்வம்.. அதை வளர்ந்து பராமரிப்பது உள்ளிட்டவற்றை விரும்பி கற்றாள்..
படிப்பை முடித்த கையோடு தரன் அவளுக்கு ஒரு தோட்டத்தை அமைத்து அதில் அவள் விரும்பிய மலர்களை வளர்க்க ஏற்பாடு செய்தான்.. கிருஷ்ணம்மாளுக்கு அதில் உடன்பாடில்லை.. ஆனால் வீட்டார் , தரன் மீதிருந்த நம்பிக்கையால் சரி என்றனர்..
கிருஷ்ணம்மாளுக்கு இந்த வீட்டில் தன் அதிகாரத்தை விட்டுக்குடுக்க மனம் இல்லை.. எனவே தன் மகளை அண்ணன் மகன்களில் ஒருவருக்கு மணம்முடித்து வைக்க வேண்டும் என்று ஆசை..
முதலில் ரிஷி தரனிடம் கேட்ட போது அவன் " எனக்கு வைசுவும் இந்துவும் ஒன்னுதான் அப்பத்தா.. இனி இதப்பத்தி எங்கிட்ட பேசாதீங்க.. எனக்கு விருப்பமில்ல.." என முகத்தில் அடித்தது போல் பேசியது கிருஷ்ணம்மாளுக்கு பிடிக்கவில்லை.. எனவே அவர் பிரகாஷிடம் முயற்சி செய்கிறார்.. அவன் மறுக்கவில்லை என்றபோதும் சரி என்கவும் இல்லை.. சின்னப் பையன் என விட்டு பிடிக்க முயல்கிறார்..
ஜீப்பில் செல்லும் போது.. " அத்த உங்க தம்பி வர்ரதுல உங்களுக்கு ஏதும் கஷ்டமா இருக்கா.." என கேட்டான் தரன்.. எனெனில் நங்கையின் திருமண விசயத்தில் சண்டையிட்ட வெளியே துரத்தப்பட்ட பின்.. தந்தை இறப்பிற்கு கூட வேண்டா வெறுப்பாக வந்து சென்ற கலியபெருமாளின் வரவு சிறு சங்கடத்தை ஏற்படுத்துமோ என கேட்க..
"கஷ்டம்னு எதுவும் கிடையாது தரன்.. நாங்க மூனு பேரும் ஒன்றாகவே வளந்தவங்க.. எனக்கும் அவங்களுக்கும் சில மாசம் தான் வித்தியாசம்.. நல்லாத்தா இருந்தது எங்க உறவு.. அது எப்ப இப்படி விசித்திரமான மாறுச்சின்னு தெரியல.. அப்பா இறந்ததுக்கு அப்றம் ரெண்டு பேருகீகுமே இந்த ஊரோட நினைப்பு இல்ல.. இருந்தாலும் ஏ தம்பிங்கள நா விட்டு குடுக்க மாட்டேன்.. " நங்கை..
" அப்ப சரி.. இந்த வாட்டி திருவிழா ஜேஜேன்னு இருக்கும்னு சொல்லுங்க.." தரன் கூற அவர் அழகாய் புன்னகைத்தார் .
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..