அத்தியாயம்: 13
சூரியன் தன் ஒளிக்கதிர்களை எல்லாம் திரட்டிக்கொண்டு மேற்கு நோக்கிச் செல்ல நிலமகள் பவனி வரும், நேரத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் மாலை வேளை அது..
முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தான் ரிஷி தரன்..
அருகே நின்று அவனுக்கு ஏதேதோ சொல்லி அவனுக்கு கோபத்தை ஏற்றிவிட்டு கொண்டிருந்தாள் காவ்யா..
" டேய் கைப்புள்ள.. இங்க சீரியல் சூட்டிங் ஏதாவது நடக்குதா என்ன.. எல்லாரும் போஸ் குடுத்துட்டு நிக்குறாங்க.. இவா என்னடா சீரியல் வில்லியாட்டம் லுக்கு விட்டுட்டே இருக்கா.. " கௌதம் சந்தேகமாக..
" சூட்டிங்லாம் ஒன்னுமில்ல ஆனா ரெண்டாவதா சொன்னீங்களே அது உண்ம.. சின்ன திருத்தம் காவ்யா சீரியல் வில்லிலாம் இல்ல அவ சீரியஸ்ஸாவே வில்லி தான்.. "
" வில்லிலாம் இப்ப ஹீரோயினாட்டம் அழகாத் தா இருக்காங்க.. ஆமா இப்ப என்ன வில்லத்தனம் பண்ணீட்டான்னு இப்புடி போஸ் கொடுத்துட்டு நிக்குறா.. "
" அதாவதுண்ணே.. எங்க தரன் அண்ணே இருக்காருள்ள ஹீரோ.. ஆஆஆ...." என அலற.. அவனின் தலையில் கட்டியிருந்தான் கௌதம்..
" அவன்லாம் ஹீரோ வா.. அப்ப நா யாருடா.. "
" ஐய்யய்யோ.. நீங்க யாரு என்னன்னு எங்கிட்ட எதுவும் சொல்லலையே.. இன்னா பண்ணுறது.. ஹா.. நீங்களே சொல்லுங்க கேப்போம்.."
" அழுக வர்ர மாறி காமெடி பண்ணக்கூடாது டா.. இப்ப நடந்தத மொதல்ல சொல்லப்போறியா இல்லையா.."
" ஓகே.. அண்ணனோட பைக்க காணும்.. "
" போலிஸ் ஸ்டேஷன் போக வேண்டியது தான..."
"யோவ்.. ஒரு ஃப்லோல போய்டுடிருக்கும் போது எதுக்குடா கட்டயப் போடுற… கேளுடா ஒழுங்கா.."
" இதுக்குத்தா சின்னப் பிள்ளைங்க சவகாசம்லா வச்சுக்கக் கூடாதுங்கிறது.. சைக்கிள் கேப்ல அண்ணன டா போட்டு பேசிட்டல்ல.. சித்தப்பு.. நீ சொல்லு சித்தப்பு.. என்னாச்சுன்னு.. " மரியாதையுடன் கேட்க..
" அவென் பைக்க யாரையும் தொடக்கூட விட்டதில்ல.. வீடு முழுக்க நமக்கு தெரிஞ்சவங்கதான்.. அப்படியிருக்குறப்போ பைக் எப்படி காணாமப் போயிருக்கும்.." கவியரசன்.
" அந்த காவ்யா.. உங்க ஃப்ரெண்டு ஹரிணி தா எடுத்துட்டு போய்டான்னு சொல்லுறா.." பிரகாஷ்..
" என்னது ஹரிணி பைக்ல ஊர் சுத்த கெளம்பீட்டாளா.. அதுவும் என்ன விட்டுட்டு.." அதிர்ச்சியுடன்..
" மகனே அப்படி எல்லாம் போயிருக்காதுடா.. அந்த காவ்யாவுக்கு வேற வேலையே இல்ல போல.. சும்மா பொய் சொல்லீட்டு திரியுது.. அத இந்த முட்டாப்பயளும் கேட்டுட்டு அம்பேலருந்து மூஞ்சிய தூக்கி வச்சுட்டுருக்கான்.. கேனப்பய்யேன்.. பொட்டப்புள்ள எப்படிடா புல்லட் வண்டியெல்லாம் ஓட்டும்.." என்றபோது சத்தம் கேட்டது..
டுபுடுபுடுபுடுபு..
ராயல் என்பீல்டு புல்லட்.. தொலைவில் வரும்போதே ஊருக்கே தன் வருகையை அறிவிக்கும் படி சத்தமிட்டுக் கொண்டே வந்தது.. வீட்டினர் வெளியே வந்து பார்த்தனர்.. பார்த்தவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போயினர்..
கருநீல ஜீன்ஸ் , இளமஞ்சள் நிற குர்த்தி , கண்களில் கூலருடன் படு ஸ்டைலாக பைக்கை ஓட்டிக்கொண்டு வந்தவள் ஹரிணி.. பின்னால் இந்து அமர்ந்திருந்தாள்.. புல்லட்டை நிறுத்தி ஸ்டைலாக கீழே இறங்கியவளிடமிருந்து கிட்டத்தட்ட பிடுங்கி ஸ்டான்டு போட்டு சாவியை எடுத்தான் தரன்..
" ஏய் அறிவிருக்கா உனக்கு.. எதுக்கு டி ஏம் பைக்க எடுத்துட்டு போன.." என கடுகடுக்க..
அவள் பதில் சொல்லாமல் வண்டியை சுற்றி வந்தாள்.. " இதுல உன்னோட பேரு இல்லையே.. ஒரு வேல உன்னோட பேரு ராயல் என்பீல்டா.." என நக்கலாக கேட்க..
அவன் முறைக்கவும், " அப்படித்தான இங்க எழுதீருக்கு.. அதா கேட்டேன்.." என பைக்கின் முன்பக்கத்தை சுட்டிக்காட்டினாள்..
" ஒருத்தவங்க வீட்டுக்கு கெஸ்டா வந்தா எப்படி நடந்துக்கனும்னு உனக்கு தெரியாதா.. மேனஸ்ஸே இல்லாம பிகேவ் பண்ணுற.. இரிடேட்டிங் இடியட்.. " காவ்யா..
" ஓ.. எனக்கு மேனஸ் இல்ல.. உங்க கிட்ட அப்படியே கொட்டிக்கெடக்குது போலயே…." என தன் கைகளை பின்னால் நின்று கொண்டிருந்த புல்லெட்டில் ஊன்றி தன் வலது காலை அதன் மீது வைக்கப் போக..
கடுப்பான தரன் அவளை பிடித்திழுத்து சில அடிதூரம் தள்ளி விட்டு.. " எங்கிட்டயிருந்து கொஞ்சம் தள்ளியே இரு.. நா எப்பையும் ஒரே மாறி நடந்துக்க மாட்டேன்.. அது உனக்கு நல்லதில்ல.." என விரல் நீட்டி எச்சரித்துச் சென்றான்.
" புரிஞ்சிருக்கும்னு நெனைக்குறேன்.. " காவ்யா ஒரு மார்க்கமாக..
" என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு இவா ஆட்டம் கொஞ்சம் ஓவரா தெரியல.." ஹரிணி..
" இனிமே அப்படித்தான்..." பிரகாஷ் சிறு கவலையுடன்
" ஒய்டா.. கைப்புள்ள.." கௌதம்..
" அவா தா எனக்கு அண்ணியாம்.. திருவிழா முடிஞ்சதுமே நிச்சயமாம்.. அப்பா காலைல தா சொன்னாரு.." பிரகாஷ்..
"நானும் உங்கூடவே தான இருந்தேன்.. இது எப்ப நடந்துச்சு.." கௌதம்..
" நீங்க ஃபோன் பேசீட்டுருந்த கேப்புல.."
" என் ஆழ்ந்த அனுதாபங்களை உங்க அண்ணனுக்கு சொல்லீடு.. பாய்.." என கை ஆட்டி விட்டு சென்றாள் ஹரிணி.
" ஃபீல் பண்ணாதடா.. நல்ல பொண்ணாப் பாத்து நா உனக்கு கட்டிவைக்குறேன்.."
" அட போண்ணே நீ வேற.. இந்த இம்ச அண்ணியா வரப்போதே அப்படீன்னு கவலப்பட்டுடு இருக்கேன்.. இதுல பொண்ணாம்.. கல்யாணமாம்.. கடவுளே எங்க குடும்பத்த காப்பாத்துங்க.."
புலம்பிய படியே சென்றான் பிரகாஷ்..
இன்று அம்மனை பல்லக்கில் ஏற்றி ஊருக்கு கொண்டுவரும் நாள்.. ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே அனுமதி.. எனவே இந்து , கிருஷ்ணம்மாள் , நங்கை வீட்டிலேயே இருந்தனர்.. அதிகாலையிலேயே கிளம்பிவிட்டனர்.. எப்பொழுதும் திரும்பி வரும்போது பார்ப்பது இந்துவின் கவலைதொய்ந்த முகத்தை மட்டுமே.. ஆனால் இன்று என்றுமில்லாமல் இந்துமதி அதிக மகிழ்ச்சியாக உள்ளாள்.. அவளது முகமே அவளின் சந்தோஷத்தின் அளவைக் காட்டிக் கொடுத்தது..
" என்னடி மூஞ்சு தைப் பிறை கண்டது போல ப்ரகாசமா இருக்கு.. " நாச்சியம்மாள் .
" ஒன்னுமில்ல ஆச்சி.. அத்த நா உனக்காக மாங்கா கொண்டாந்துருக்கேன்.. இந்தா இத ஊறுகா போடு.. இத நா சாப்பிட போறேன்.. உப்பு மெளகா போட்டு எடுத்துட்டு வாறேன்..." மலரிடம் மாங்காயைக் கொடுத்தாள்..
" இவளுக்கு எங்கருந்து இம்புட்டு மாங்கா கிடைச்சது.. நம்ம தோப்புக்கா போனா.. அதிசயமால்ல இருக்கு.. " மலர்..
"ஆமா மதினி.. நா அவா ஹரிணி மூனு பேரும் இன்னைக்கு ஸ்கூலுக்கு போனோம்.. அது முடிஞ்சதும் ரெண்டு பேரும் ஊர் சுத்திருக்குகாளுக. " நங்கை..
" அத்த இத முழுக்க நாந்தா மரத்துல ஏறி பறிச்சேன்... மரம் ஏறுறச்ச எப்படி இருந்து தெரியுமா.. நீயும் ஒருநா வாத்த.." என ஆவலுடன் அழைக்க..
" எள்ளுதா எண்ணெய்க்கு காயுதுன்னா எலி புளுக்க எதுக்கு காயனுமா.. " என்றார் நாச்சியார்..
" ஏய் கெழவி எங்கத்தையவா கேலி பண்ணுற... உனக்கு மாங்கா கெடையாது போ..." என அழகு காட்டிவிட்டு சென்றாள் இந்து..
" என்னைக்கும் இந்த பொண்ணு அப்ப மாறியே சந்தோஷமா இருக்கனும்.. ஆத்தா.. " மலர் இறைவனிடம் வேண்டினார்..
" ஒவ்வொரு திருவிழாக்கும் , பொறந்த வீட்டு சீறு எடுக்கும் போது.. எம்மகள்க ரெண்டும் இப்படி பட்டு போய் நிக்குறாள்களேன்னு வர்ர கவலைய விட.. இந்த புள்ள வாழ்க்கையும் அப்படி ஆகிடுமோ கிற கவல தா அதிகமா இருக்கு.. நம்ம குடும்பத்துக்கும் கல்யாணத்துக்கும் ராசியே இல்ல போல.." நாச்சியம்மாள் வருத்தமாக..
"அத்த நீங்க எத நெனச்சு கவலப்படுரீங்கன்னு எனக்கு தெரியுது.. அபியோட அப்பா பேசத்தான செஞ்சிருக்காக.. முடிவெல்லாம் பண்ணல.. எனக்கு அவரு மேலயும் தரன் மேலயும் நம்பிக்க இருக்கு.. " என்ற மலருக்கும் தரன் காவ்யாவின் திருமண பேச்சே பிடிக்கவில்லை
" அத்திப் பூவைக் கண்டவர் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர் உண்டா? நாளைக்கு நடக்கப் போறது தெரிஞ்ச மனுசனெல்லாம் மக்கித்தான் போவானுங்க.. எல்லா ஆத்தா பாத்துப்பா.." என் கவலையை கடவுளிடம் ஒப்படைத்தார் அவர்..
மறுநாள்
அம்மனுக்கு பொங்கல் வைப்பதற்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்..
" என்னடா இது எவளையும் காணும்.. நொடிக்கு நூறு வசனம் சொல்வாளுக இன்னைக்கு ஒரு வசனம் பேசக்கூட ஆளக்காணுமே.." சீக்கிரம் கிளம்பிய நாச்சியம்மாள் புலம்பிக்கொண்டிருந்தார்..
வீட்டின் மகள்களும் மருமகள்களும் அம்சமாய் தயாராகி வந்தனர்.."ஏன்டி கிழவீக நாம கெளம்பீட்டோம் , குமரீக வர நேரமாகுமோ.. " நாச்சியம்மாள்..
" ஏய் கெழவி நாங்களும் ரெடித்தா.. " என்ற குரலில் திரும்பிப் பார்த்த நாச்சியம்மாள் தன் பேத்திகளின் அழகில் சொக்கித்தான் போனார்.. பாவாடை தாவணியிலிருந்த பைங்கிளிகளை திருஷ்டி சுற்றினார் மலர்..
" கன்னுக்குட்டிங்க வந்தாச்சு நம்ம வீட்டு காளைகள இன்னும் காணலையே " கிருபாவதி..
" சித்தி நீங்க எங்கையும் தேட வேண்டாம்.. நாங்க இங்க தா இருக்கோம்.." மூன்று பேரன்கள் மட்டுமே இருந்தனர்.. தரன் இன்னும் வரலில்லை..
" எங்கடா தரன..." மலர்.
"ஏ.. நாங்க மூனு பேரும் வந்திருக்குறது உங்களுக்கு தெரியலையோ.. இல்லாத அவன எதுக்கு தேடுரீங்க.." கௌதம்..
" டேய் இல்லாதவங்களைத் தான் டா தேடுவாங்க.. ம்மா அவென் நைட் லேட்டாத்தான் வந்தான்.. அதான் கிளம்ப நேரமாகுது போல… வந்துடுவான்.. நீங்க பூஜைக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சுடீங்களா.." வேல்ராஜ் .
" எல்லா எடுத்தாச்சு.. இந்தா கொண்டு போய் வண்டீல ஏத்து.. அபியும் வருணும் எங்க.." மலர்..
" வந்துடுவாம்மா.." என சாமான்களை காரில் ஏற்றினான்..
" சித்தா..." என வேல்ராஜின் மூன்று வயது மகன் வருண் படிகளில் இறங்கி கொண்டிருந்தான்.. முதல் முறை வேஷ்டி சட்டை போடுகிறான்.. அதனால் வாண்டுவின் முகத்தில் சிறு வெட்கம் வந்ததிருந்தது..
" டேய் குட்டிப்பையா.. மை லிட்டில் ஸ்டார்.. செமயா இருக்கீங்க.. அப்படியே மாப்பிள்ளை மாறி.. இப்பவே சித்தா உனக்கு பொண்ணு பாக்கவா.." சிறுவனை தூக்கி சுற்றி பையில் இருந்த சாக்லேட்டை அவனிடம் நீட்டினான் கௌதம்...
எப்போது கேஸ்வல் டிரஸ் அணிந்திருப்பவன் இன்று ஃபார்மலாக டிரஸ் அணிந்திருந்தான்.. அவனின் வெளிர் நிறத்திற்கு பொருத்தமாய் இருந்தது அந்த ஷண்டல் ஃபேன்ட்டும் ப்ரவுன் ஷர்ட்டும்.. டிரிம் செய்த தாடியும் , எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறு மீசையும் , ஜெல் வைத்து அடக்கிய போதும் அடங்காமல் திமிறிக்கொண்டிருக்கும் சில முடிகளும் கௌதமிற்கு இன்னும் அழகு சேர்த்தது..
அவனை அவ்வபோது தன் கடைக்கண்களால் சைட் அடித்துக் கொண்டு இருந்தாள் இந்துமதி.. அதை அவனும் அறிந்திருந்தான்..
" சித்தா நீ யேன் வேட்டி கட்டல.. அதனால நீ நல்லாவே இல்ல.. உவாக்.."
" வரு என்ன பழக்கம் இது.. சே ஸாரி டூ சித்தா.. " அபி..
" இருக்கட்டும் அண்ணி.. புது மாப்பிள்ளை தா வேட்டி கட்டுவாங்க.. அதுமட்டுமில்லாம சித்தாக்கு இதுதான் கம்பட்டபுள்ளா இருக்கு.. அதா.. "
" ஹி.. ஹி..."
" எதுக்கு லிட்டில் ஸ்டார் சிரிக்குற.."
"தரன் சித்தா கூடத்தா மாப்பிள்ளை இல்ல.. ஆனா சித்தா கட்டிருக்காரே.. தரன் சித்தா உன்னவிட அழகா இருப்பாரு ..." என கூறிவிட்டு கைகளிலிருந்து நழுவிச் சென்றான்..
" அந்த சின்னப்பயலுக்கு இருக்குற தைரியங்கூட எனக்கு இல்லாம போச்சே.. எப்படி உண்மைய புட்டு புட்டு வக்குறான்.. இதுல ஹைலைட்டே இறங்கி ஓடுனதுதான்.." பிரகாஷ் சொல்லிச் சிரிக்க அபியும் அந்த சிரிப்பில் சேர்ந்து கொண்டாள்..
திடீரென கௌதம் பிரகாஷ்ஷிடம் கூளிங் கிளாஸை நீட்டி, "டேய் இதப் போட்டுக்க.. கண்ணு ரொம்ப முக்கியம் டா.. திருவிழா முடிற வர இத பத்திரமா வச்சுக்க.. தேவப்படும்.. "
"அண்ணி நகக் கட ஆரம்பிக்க போறீங்களா என்ன.. " என கண்ணாடி அணிந்து கொண்டிருந்த அண்ணனும் தம்பியும் கேட்க.. அவர்களை தன் பார்வையாலே எரித்துக் கொண்டே வந்தாள் காவ்யா..
ஜிகு ஜிகு வென கண்ணைப் பறிக்கும் வகையில் தங்க நிற லெகாங்கை தூக்கியபடியே வந்தாள்.. அவளின் ஆடையில் கற்கள் பதிக்காத இடமே இல்லை.. இதுபோதாதென்று தங்க வைர ஆபரணங்களை கழுத்திலும் காதிலும் அள்ளி எடுத்துப் போட்டிருந்தாள்..
" ஃபேஷன் தெரியாத இடியட்ஸ்... " என திட்டி விட்டு சென்றாள் அவள்..
"தெரிஞ்சிட்டு மட்டும் என்ன பண்ணப் போறோம்.. ஆமா ஃபேஷன்னா என்னாதுண்ணே.. "
"ட்ரெஸ்ஸ போட்டு கிழிக்கிறதுக்கு பதிலா கிழிச்சிட்டு வந்து போட்டுறதுக்கு பேரு தா ஃபேஷன்.. " கௌதம் சொல்ல..
"ஓ… அப்ப நமக்கு அது தேவையில்லாதது.." பிரகாஷ்..

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..