முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 14

அத்தியாயம்: 14


படார்...... என கதவுகள் திறக்கப்பட்டன.. மெல்லிய கொலுசின் சத்தம் கேட்டதும் அனைவரின் கவனமும் அங்கே சென்றது..


இதுவரை மேக்கப் என்பதே செய்யாது அராத்து போல் இருந்த ஹரிணியா இது என நினைக்கும் வண்ணம் தேவதையின் அழகோடு வந்தாள் ஹரிணி..


இளம் பச்சை நிறத்தில் தாவணியுடன்   ஃப்ரவுண் வண்ண பூக்கள் கொடி போல்  கலந்திருக்க அதற்கு மேச்சாக ஜாக்கெட் அணிந்து அளவான ஒப்பனையுடன் இருந்தவளை பார்பவர்கள் மீண்டும் ஒருமுறை திரும்ப பார்க்கும் ஆவலை தூண்டிவிடும்.. நேர்த்தியாக இருந்தது அவளின் அழகு.. திருத்தப்பட்ட புருவம் அதன் மத்தியில் காண்போருக்கு தெரியும் படியான அளவு சிறிய பொட்டு , மை தீட்டிய விழிகள் , சாயம் பூசாமலேயே சிவந்திருந்த அதரங்கள் , காதில் தோலைக் தொடும் அளவுக்கு பெரிய தொங்கட்டான் , கழுத்தில் சிறிய சங்கிலி அவ்வளவு தான் அலங்காரம்.. 


" நா நல்லாருக்கேனா கௌதம்.‌." ஹரிணி என கௌதமின் முன் வந்து நின்றவளின் கன்னத்தை வழித்து திருஷ்டி சுற்றினான் அவன்.. 


" சூப்பரா இருக்க டார்லிங்.. லைக் மினி ஏஞ்சல்.." என்றவன் அவளின் தோல்களில் தன் கையை வைத்து லேசாக அணைத்தான்.. 


இது படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்த தரனின் பார்வைக்குள் பட்டது.. கரும்பச்சை நிற சட்டை , அதே நிறத்தில் பார்டர் வைத்த வெள்ளை வேட்டி , முறுக்கி விட்ட மீசை என பாந்தமாக இருந்தான் ரிஷி தரன்.. 


முழுதாக ஒரு நிமிடம் நின்று நண்பர்கள் இருவரையும்  அளக்கும் பார்வை பார்த்தவன் சிறு நக்கல் சிரிப்புடன் கடந்து சென்றுவிட்டான்..


" எதுக்கு உன்னோட அண்ணே இப்ப சிரிச்சாரு.. " ஹரிணி.. 


" அத நீ அவன்டே கேட்டு தெரிஞ்சுக்க.. அப்புறம் அவன எனக்கு அண்ணன்னு சொல்லாத.. என்னவிட 15 நிமிஷம் முந்தீட்டு பிறந்தவன நா அண்ணன்னு கூப்பிடனுமா.. முடியாது.. " என வெறுப்போடு கூறி சென்றான் கௌதம்..


"என்னாச்சி இவனுக்கு.. " என்ற யோசனையில் நின்றவளை மலரின் குரல் தடுத்தது.. 


" ஏண்டி கோயிலுக்கு போறோம்.. முடிய பேய் மாறி விரிச்சு விட்டிருக்க... கொண்டா சீப்ப.. நா கட்டி விடுறேன்.." என மலர் தலை சீவிவிட்டார்..


உச்சியில் சிறு முடியை மட்டும் எடுத்து கிளிப் குத்தியவள் மீதியை ஃப்ரியாக விட்டிருந்ததவளுக்கு தளர்வாக இரண்டொரு பின்னல் பின்னினார்.. 


"பூ இல்லாத  கொண்ட நல்லாவா இருக்கு.. இந்து இவளுக்கு அந்த நாக்காலி மேல இருக்கு.. வக்கச் சொல்லு..‌‌ நாங்க முத வண்டில போறோம்.. இளசுக பின்னால வாங்க...‌" நாச்சியம்மாள்..


" இந்தா.. பூவு.." நீட்டியவளின் கைகளில் இருந்த கண்ணாடி வளையல் மிகவும் பிடித்திருந்தது ‌ஹரிணிக்கு..


" ஏய் இந்து இது கண்ணாடி வளையல் தான.. இதெல்லாம் டிரெஸ் வாங்கும் போதே சொல்லக்கூடாதா.. பாரு நீ கை நெறைய்ய போட்டிருக்க.. நானு.. " சோகமாக தன் கையில் மின்னிய இரண்டே இரண்டு தங்க வளையல்களை காட்டினாள் ஹரிணி.. 


" இது போன திருவிழாக்கு வாங்குனது.. "  இந்து..


"கட நெறைய்யா இருக்கும் ஹரிணி... வா எல்லாத்தையும் வாங்கிடலாம்.. " பவி.. அதை கேட்டுக் கொண்டிருந்த கௌதம்..


' எல்லாத்தையுமா.., டேய் கௌதமா ஊர் போய் சேர்ற வரைக்கும் பர்ஷ்ஸ பத்திரமா பாத்துக்கணும்.. இல்லேன்னா சாப்பாட்டுக்கு சிங்கிதா அடிக்கனும்..' மனதுக்குள்..


பூனை போல் மெல்ல கௌதமின் அருகில் வந்த பவித்ரா.. " டேய் அண்ணா என்ன மறந்துடாத.. எது வாங்குனாலும் எனக்கும் அதுல பங்கு வேணும்.. " 


" அப்போ அடி வாங்குனா.." பிரகாஷ் 


" லதா ,சுதா உங்களுக்கு மூனு அண்ணன்க மட்டும் போதும்ல.. ம்ன்னு.. சொல்லுங்க இவன இப்பவே களனித் தொட்டிக்குள்ள தூக்கிப்  போட்டுடுறேன்.." கேலி செய்தாள் பவி..  ஒருவழியாக காரில் புறப்பட்டு சென்றனர் இளையவர்கள்..

 

பவிக்கும் ஹரிணிக்கும் இதுதான் முதல் திருவிழா.. எனவே ஒவ்வொன்றையும் அணு அணுவாக ரசித்து மகிழ்ந்தனர்.. ரங்க ராட்டினம் , பஞ்சுமிட்டாய், கலர் கலர்  கண்ணாடி , சேமியா ஐஸ்  என‌ ஒன்றையும்  விடவில்லை.. பிரகாஷ் தன் நண்பர்களுடன் சென்றுவிட , பெரியவர்கள் அனைவருக்கும் வேலை இருந்து கொண்டே இருந்தது.


24 மணிநேரமும் அன்னதானம்.. நாதன் குடும்பத்தின் சார்பாக அங்கிருந்த சமுதாயக்கூடத்தில் போடப்பட்டுக் கொண்டிருந்தது.. இரண்டடிக்கு ஒரு குப்பைத்தொட்டி , குடிக்க தண்ணீர் , கழிவறை வசதி , கடை போடுபவர்களுக்கு சண்டை வராதபடி  இடவசதி என அனைத்து சுகாதார வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..


" எனக்கு பச்ச கலர் தா வேணும் " ஹரிணி..


" மஞ்சக்கலர் கூட நல்லா தா இருக்கு.. " இந்து..


" எனக்கு இந்த நாலு கலர்லையும் வேணும்.. " என்றாள் பவி கண்ணாடி வளையல்களை கையில் அள்ளியபடி.. 


" சித்தா நாம எதுக்கு இங்க நிக்கிறோம்.. இவங்க எல்லாம் எப்ப வருவாங்க.. வா சித்தா போலாம்.." குச்சி ஐஸ்ஸை நக்கியபடி கேட்டான் வருண்.. பெண்களின் பாதுகாப்பிற்காக பாடிகார்ட் வேலை செய்து கொண்டிருந்த கௌதமிடம்.. 


" ஃபஸ்டு இன்னிங்சே இன்னும் முடியல.. இதுல மேட்ச் எப்ப முடியும்னு கேக்குற.. இவளுக எப்ப ஷாப்பிங்க முடிச்சு.. நாம எப்ப கெளம்ப.. ச்ச.. நம்மள இப்படி பாடி கார்ட் ஆக்கிட்டாளுகளே.." கௌதம் என புலம்ப..


" டேய் பர்ஸ்ஸ குடு.." ஹரிணி அதிகாரமாக கை நீட்ட.. 


‌" சம்பளம் போட்டு பத்து நாள் தா ஆகுது.. இன்னும் இருபது நாளுக்கு மேல சமாளிக்கனும்.. பாத்து மா.." பவ்யமாக சொன்னவன் பர்ஸை நீட்டினான் கண்ணீர் விடாத குறையுடன்..


" தங்கச்சிக்கு செலவு பண்ணுறத கணக்குல வச்சுக்க கூடாதுண்ணா... இன்னும் நா ரிப்பன் வாங்கனும் , அப்றம் வாட்டர் கன் , பபிள்ஸ் , காத்தாடி..." என பவி அடுக்கிக் கொண்டே போக..


" ஏய் என்ன லிஸ்டு ஹைவே மாறி நீண்டு கிட்டே போகுது.. உன்னமாறி ஆளுக்கு செலவு பண்ண ஆரம்பிச்சா அம்பானி கூட அரையனா காசுக்கு கஷ்டப்படுவாரு.. போமா கடுப்புகள ஏத்தாம..." என்றவுடன்  வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தாள் பவி.. 


திடீரென கலியபெருமாள் அங்கு வந்து பவித்ராவை இழுத்து சென்றார் . " நீ சொன்னா கேக்க மாட்டியா பவித்ரா.. அவன நம்பி அவெங்கூட எங்களையும் போகாதன்னு சொல்லிருக்கேன்ல... சொன்னா கேளுடா.. உன்னயும் என்னால இழக்க முடியாதுமா..." என கோபத்தில் ஆரம்பித்து கண்ணீருடன் முடித்தவர் மகளுடன் மற்ற பெண்களையும் சேந்தே இழுத்து சென்றார்..


உடன் பிறந்த தங்கையை கூட விலகி இருக்கச் சொல்லி தன்னை வில்லாக காட்டிப் போகும் தந்தையை எதுவும் சொல்ல முடியாத கௌதம் தன்‌ நிலையை எண்ணி வேதனையுடன் நிற்க.. 


 " டேய் 5000 எடுத்திருக்கேன்.. மீதிய‌ பத்திரமா வச்சு செலவு பண்ணு.. ஓகே வா.. டேக் கியர்.. பை.. " என ஹரிணி நடக்க..


" என்னது 5000 மா.. அதுல இருந்ததே பத்தாயிரம் தான.. பாதிய ஆடயப் போட்டுட்டு மீதிய பத்ரமா வச்சுக்கனுமாம்.. ஐயோ இந்த கொடுமைய நா எங்க போய் சொல்லுவேன்..." என புலம்ப..


" சித்தா இன்னோரு ஐஸ் வாங்கித்தாரியா.." என்றான் வாண்டு.. 


"எதுக்கு எங்கப்பன்ட்ட வாங்குனது பத்தாதுன்னு உங்கம்மாட்டையும் திட்டு வாங்கவா... ஐஸ் வேணாம் வேற வாங்குவோம்.. வா  இந்த பக்கமா போய் பாப்போம்.. " என தன் அண்ணன் மகனை அழைத்துக் கொண்டு சுற்றினார் கௌதம்..


புதிதாக முளைத்த ஆர்வத்தில் ஒவ்வொன்றையும் ஆவலுடன் பார்த்தபடியே வந்த ஹரிணியின் கண்களுக்கு தரனும் அவன் வயதுடைய சில இளைஞர்களும் நின்று சிறுவர்களுக்கு விளையாட்டு பொருட்களை இலவசமாக கொடுத்துக் கொண்டு இருப்பது தெரிந்தது.. 


"நோட் பேட்.. பழக கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும்.. பாக்க ஆழகாத்தா இருக்கான்.. க்யூட்டி பாய்.. " என்றது அவளின் இதழ்கள்..


நாளை கவியரன் தீச் சட்டி எடுப்பதால் அதற்காக இரவே மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தனர்.. பெண்கள் பூக்களை மாலையாக கோர்த்துக் கொண்டு இருந்தனர்..


பிஸ்ஸ்ஸ்......‌ பிஸ்....‌பிஸ்....... 


‘எங்கயிருந்து வருது இந்த சத்தம்..’ என இந்து தலைதூக்கிப் பார்க்க.. தூணின் மறைவில் இருந்து கௌதம் தான் சத்தமிட்டுக் கொண்டிருந்தான்.. இந்து முகம் பூவாய் மலர்ந்து.. 'என்ன' என கண்களால் அவள் கேக்க.. அவன் பக்கத்தில் இருந்தவளை அழைக்கச் சொன்னான்.. திரும்பி பார்த்தால் அங்கு ஹரணியையும் பவியையும் இருந்தனர்.. 


' பவிய கூப்பிட சான்ஸ் இல்ல ' என ஹரிணியை அழைக்கப் போனவளின் மீது சிறிய செவ்வந்தி பூவை எரிந்தான் அவன்...  ' இப்ப என்னவாம் ' என பார்க்க அவன் பவியை கூப்பிட சொன்னான்.. 


" பவி உன்னோட அண்ணே கூப்பிடுறாரு.. " காதுக்குள்.. 


" என்னண்ணா.." தலை தூக்கி சத்தமிடால் வாய்க்குள்ளையே கேட்டாள் அவள்.. 


" இத பிடி.. " என சிறிய கவரை தூக்கி எறிந்தான் அவன்.. அதில் அவள் வாங்க வேண்டுமென்று அடுக்கிய லிஸ்டில் இருந்த அனைத்தும் இருந்து..


" என்ஜாய்.." என வாய் அசைத்து சென்றான் கௌதம்.. 


" எதுக்கு இந்த மானங்கெட்ட பொளப்போ... ஹிம்.. " ஹரிணி சிறு கோபம் இருந்தது அவளின் குரலில்..  யாருக்கும் தெரியாமல் அண்ணனும் தங்கையும் கள்ளத்தனமாக செய்யும் வேலையால்.. 


" என்னோட அண்ணே எனக்கு செய்றான் உனக்கென்ன வந்தது.. " பவியும் அதே கோபத்துடன் கேட்டாள்..


" இத ஹிட்லர் முன்னாடி சொல்ல முடியுமா உன்னால.. என்னோட  அண்ணனன்னு.. ஹிம் அண்ணனாம் அண்ணெ.." என காரசாரமான இருவரும் விவாதிக்க..


" ஏய் யாருப்பா ஹிட்லர்.. " இந்து..


" அதுவா நம்ம திருவாளர்  கலியபெருமாள் அவர்கள் தான்.. உனக்கு தாய் மாமா.. இவளுக்கு அப்பாஆஆஆஆஆ.. " ஹரிணி..


" எங்க அப்பாவ மரியாதயில்லாம பேசாத... " என்றவள் கோபமாக எழுந்து சென்றாள்..


" முதல்ல உங்க அப்பாவ மரியாத குடுக்குற மாறி நடந்துக்குச் சொல்லு.. அப்றம் நானே அவருக்கு சிறந்த தந்தைன்னு பட்டம் குடுக்க ஏற்பாடு பண்றேன்.. "


ஹரிணிக்கு தன் நண்பனை குறை கொண்டே திரியும் கலியபெருமாள் மீது மதிப்பு என்பது சொல்லும் படியாக இருந்ததே இல்லை..


மொட்டை மாடியில் அமர்ந்து நிலவை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தவளிடம்.. 


" திருவிழா எப்படி இருக்கு.. உனக்கு டைம் பாஸ் ஆச்சா.." என்றபடி வந்தான் கௌதம்..


" எனக்கு இந்த ஊர‌ ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ ரியலி என்ஜாய் இட்.. பட்.. " என பேச்சி நிறுத்தினாள் சிந்தனையுடன்..


" எதுவும் பிரச்சனையா டார்லிங்..‌ " அக்கறையுடன் கேட்டான் அவன்.. 


" எனக்கும் இந்த ஊருக்கும்‌ ஏதோ சம்பந்தம் இருக்குன்னு நெனைக்குறேன்.. " 


" ஓ.. எப்பைலருந்து மும்பை சிட்டிய  தமிழ்நாட்டுக்குள்ள சேத்தாங்க.. " என்றவனை திரும்பி பார்த்து முறைக்க.. 


"நீ பொறந்தது ஆந்திரால , படிச்சது சென்னைல , வாழ்ந்துட்டு இருக்குறது மும்பைல.. இதுல இந்த கிராமத்துக்கூட சம்பந்தம் இருக்காம் சம்பந்தம்... கனவு காணாத.." 


" இல்ல டா.. ஒரு பாட்டி வந்து ஏங்கிட்ட என்னென்னமோ சொன்னாங்க.. சொன்னாங்க அப்படீங்கிறத விட என்ன திட்டுனாங்க.. ஆனா எதுக்குன்னு தா தெரியல.. " .


" ஏ நீ அந்த பாட்டிட்ட கடன் வாங்கிட்டு திருப்பி குடுக்கலையா.‌. " என்றவனை முறைத்தாள் ஹரிணி.. 


" என்ன லுக்கு..‌ வந்து ஒரு வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள என்னென்னமோ பேசுற.. " 


" நடந்தத தான்டா  சொன்னேன்.. அந்த பாட்டி என்ன திட்டுனாங்க.. நம்பு.. " 


" எதுக்கா இருக்கும்.. " . 


" தெரியல.. பாப்போம்.. திருவிழா முடியுற வர.." என்றவள் முகம் தெளிவில்லால் இருக்க.. 


" நாம வேணும்னா ஊருக்கு போவோமா.. " கௌதம் கவலையுடன்..


" இல்ல நாம திருவிழா முடிஞ்சதுமே கிளம்புவோம்.. எனக்கு இங்க இருக்குறது பிடிச்சிருக்கு..‌. இந்த ஊர்.. உன்னோட ஃபேமிலி.. எல்லாமே சூப்பரா இருக்கு.. " 


" ஓகே.. ஜாக்கிரதையா இரு.. எங்கூடவே இரு.." 


" ம்.. " என ஜிமிக்கிகள் தோலில் உரச அழகாய் தலையசைத்தாள் பெண்... 


வாஞ்சையுடன் தன் தோழியை அணைத்துக் கொண்டான் கௌதம்... 


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


அன்பே 13


அன்பே 15


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...