முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 15


 

அத்தியாயம்: 15 


பறை இசையின் சத்தம் விண்ணைத் தொட்டது.. கௌதமும் பிரகாஷும் தாளத்திற்கு ஏற்றார் போல் ஆடிக்கொண்டே வந்தனர்.. கவியரசன் தீ சட்டியுடன் கோயிலை மூன்று முறை வளம் வந்து அக்னியை அங்கிருந்த செவ்வக வடிவ குழியில் கொட்டினார்.. 


" எதுக்கு இதுல கொட்டுறாங்க... " நங்கையிடம் ஹரிணி கேட்க.. மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பின்‌ தீ சட்டி எடுத்தவர்கள் இந்த பூக்குழியில் இறங்குவர் என்றார் நங்கை.. 


அனைத்தையும் வியப்புடன் பார்த்தாள் ஹரிணி.. அவள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் நங்கை முகம் சுளிக்காமல் பதிலளித்தார்.. வீட்டிற்கு

புறப்படும் நேரம் சுதா , லதாவின் முகம் வாடியிருப்பதைக் கண்டான் கௌதம். . 


" ஓய் ரசகுல்லாஸ்.. ஏ கண்ணுல சோகத்த தேக்கிவச்சுட்டு இருக்குறிங்க.. இவா உங்களுக்கு எதுவும் குடுக்காம திண்ணுட்டாளா.. அவா ஒரு சோத்து மூட்ட.. நீங்க கவலப்படாதிங்க.. அண்ணே வாங்கித்தாறேன்.. என்ன வேணும்..‌" என பவியை வார.. 


" அண்ணா இன்னைக்கு ராக்கூத்துல அபிமன்யு நாடகம் போடுறாங்களாம்.. "

      

" எங்களுக்கு அதப்பாக்க ஆசையா இருக்குண்ணா.." 


" வீட்டுல கேட்டா விடமாட்டாங்க.. " 


" போன வருஷம் தரன் அண்ணா கூட்டீட்டு போச்சு.."


" இந்த வருஷம் அண்ணாக்கு வேல அதிமா இருக்குறதுனால ஆளையே  பாக்க முடியல.."


" ப்ளிஸ் ண்ணா.." 


" எங்களுக்கு பாக்கனும்ண்ணா..." என மாறி மாறி கெஞ்சினார்...


" ஓகே.. வாங்க போலாம்.." என்றவன்  ஹரிணியை தேட..


" யாரத் தேடுறீங்க.. உங்க ஆளு அப்பவே கெளம்பிடுச்சு.. பல்லி மாறி நங்கை அத்த கூட ஒட்டிக்கிட்டே போய்டுச்சி..‌ இவளுகள பேச்ச கேட்டு கூத்துக்கு கூட்டீட்டு போனா சித்தப்பு நம்மல கஞ்சி காச்சீடுவாரு.. ஓய்.. ஒழுங்கா போய் வண்டில ஏறுங்களா.. உங்க ஸ்கூல்ல போடாததையா இங்க போட்டுடப்  போறாங்க.. கிளம்புங்கள.." என விரட்ட..


"கைப்புள்ள.. ஓவரா பொங்காம அடங்கு.. ஜீப்ப விட்டுட்டு பவிய மட்டும் கூட்டீட்டு போ.. அப்புறம் முக்கியமான வேல..‌‌ வீட்டுக்கு போயி நாங்க படுத்துட்டு தூங்கிட்டு இருக்குற மாறி தலவாணி வச்சு செட் பண்ணுற.. யாரு கேட்டாலும் நாங்க அப்பவே படுத்து தூங்கிட்டோம்ன்னு கேக்குறவங்க நம்புற மாறி பதில் சொல்லனும்.. என்ன சரியா.. இதெல்லாம் சரியா பண்ணுனா.. அண்ணே உன்ன ஸ்பெசலா கவனிப்பேன்..‌ ஓகே.. " என்க.. பதில் சொல்லாது நின்றவனை உளுக்கி..

 

"என்ன கைப்புள்ள இன்னும் ஏ முழிச்சுட்டுருக்க.. கெளம்புஉஉஉஉ...." அவனை பேசவிடாது துரத்தியவன் தங்கையை பத்திரமான இடத்தில் அமரவைத்து காவலாய் நின்றான்..


நள்ளிரவில் கூத்து முடிந்து யாருக்கும் தெரியாமல் வீட்டை அடைந்தனர்.. யாருக்கும் தெரியாது அப்படித்தான் அவர்கள் நினைத்துக் கொண்டனர்.. 


மறுநாள் மிகவும் முக்கியமான நாள்.. ஏழு ஊர் இளைஞர்களுக்கும் இது அவர்களின் மதிப்பையும் அதிகாரத்தையும் வழங்கக்கூடிய போட்டி.. அவர்களின் கௌரவப் பிரச்சனையும் கூட.. ரேக்ளா போட்டி  சிலம்பாட்டம்..  இரண்டிலும் எந்த ஊர் இளைஞர்கள் சிறந்தவர்கள் என இதில் தெரியவரும்..


தரன்‌ இந்த ஊருக்கு வந்த எல்லா  ஆண்டுகளும் அவன் மட்டுமே தனிக் காட்டு ராஜா வாய் வென்று வருகிறான்.. இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என சிலர் ஆசையோடு இருந்தால், சிலர் வெறியோடு உள்ளனர்..


சேந்தனும் உத்ராவும் ரேக்ளாவிற்கென சிறப்பாக பயிற்சி பெற்ற காளைகள்.. அவைகள் இதில் பங்கேற்க கூடாதென இத்தனை ஆண்டுகளும் இரண்டாவது இடம் பிடிக்கும் பாண்டியன் ப்ரதர்ஸ் சேந்தனின் வாலில் பட்டாசு கட்டி விட்டனர்.. உத்ராவிற்கும் காயம் படுபடியான சில ஈனச் செயல்களை செய்தனர்.. 


" ஏப்பா இன்னும் ஐஞ்சு நிமிசம் தா.. அதுக்குள்ள களத்துக்கு வந்துடனும்.. இல்லேன்னா போட்டில இருந்து பேர எடுத்துட்டுவோம்.. மல்லுக்கு எவனும் வரக்கூடாது.. சொல்லிட்டோம் பாத்துக்க.." என விழா கமிட்டி ஆள்கள் மைக்கில் கத்திக்கொண்டே இருந்தனர்..


வெள்ளை நிற கோடுகள் போடப்பட்டு வரிசையாக காளைகளும் வண்டிகளும் நின்றுகொண்டிருந்தனர்.. சுற்றி கட்டைகள் போடப்பட்டு அமர்வதற்கு ஏற்ப நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தது..


கலர் கலராக வண்ணம் தீட்டப்பட்ட வண்டிகளும் மாடுகளும் வெகு ஜோராக நின்றுகொண்டிருந்தனர்.. ஒரு வண்டியில் ஓட்டுபவர் மற்றும் உதவுபவர் என இருவர் கலந்து கொள்ளலாம்.. அனைவரும் தங்களை தயார் செய்து கொண்டு இருந்தனர்...


" எதுக்குத்தா இந்த போட்டி எல்லா வச்சு நேரத்தையும் காசையும் வேஸ்ட் பண்ணுறாங்களோ தெரியல.. எப்படியும் எங்கண்ணேந்தா ஜெயிக்கப் போறது.. எதுக்கு தேவையில்லாம மத்தவங்கள கூப்பிட்டு வச்சு அசிங்கப் படுத்தி‌ட்டு ச்சச்சச்ச.. எத்தன தடவ அசிங்கப் பட்டாலும் சிலதெல்லாம் திருந்தாதுங்க.. மறுபடியும் தோக்க வண்டி கட்டி வந்திட்டானுங்க.." பிரகாஷ் பாண்டியன் ப்ரதர்ஸ்ஸை தாக்கிப் பேச..


" ஏய்.. என்ன லந்தா.. போன வருஷம் மாறி இல்ல இந்த வருஷம்.. இந்த தடவ உன்ன மண்ணக்கவ்வ வைக்கல யென் பேரு.." விஜய பாண்டியன்..


" பாண்டியம்மான்னு மாத்திக்கிவியா.. வேணாம்டா.. அது பொம்பளைங்களுக்கே அசிங்கம்.." என்க.. பாண்டியன் ப்ரதர்ஸ் மல்லு நிற்க..


இருவரின் சண்டையையும் முடிவுக்கு கொண்டு வந்தது விழாக் கமிட்டியின்‌ அறிவிப்பு.. ஒருவரை ஒருவர் முறைத்தபடியே சென்றனர்..


துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் பாயும் வேகத்தைப் போல் கொடி அசைந்தவுடன் காளைகள் சீறிப் பாய்ந்தனர்.. தன்னை காயப்படுத்தியவர்களுக்கு பாடம் கற்பிக்க எண்ணியதோ என்னவோ.. சேந்தனும் உத்ராவும் படு வேகமாகச் சென்றது.. சாட்டையை சுழற்றி அதனை வேகமாகச் செல்ல உற்சாகப் படுத்துவது வழக்கம்.. ஆனால் தரன் ஏறி அமர்ந்தது முதலே தன் கைகளால் அதன் வாலைத்  தடவிக்கொடுத்தே ஊக்கிவித்தான்.. அந்த பாசத்திற்கும் பலனாக தன் எஜமானனை இதோ வெற்றி பெறச்செய்தும் விட்டனர் அந்தக் காளைகள்..


" ச்ச.. இந்த மெறையும் போச்சு.. உங்கிட்ட கொடுத்த வேலைய நீ சரியாகப் பாத்திருந்தா இன்னைக்கு நாம தா ஜெயிச்சுருப்போம்.." விக்ரம பாண்டியன்..


" ண்ணே நா சரியத்தா செஞ்சேன்.. பாருங்க அவிங்க உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்டாங்க.. பொழக்கும்னு நா நெனைக்களையே.." விஜய பாண்டியன் சேந்தனின் வாலில் பட்டாசு கட்டி விட்டதை சொல்ல..


" பங்காளிங்களா... எதுக்கு போனதப் பத்தி பேசிட்டு அடுத்து என்ன பண்ணணும் அதச் சொல்லுங்கப்பா..." கணேஷ் .


" ரேக்ளால கோட்ட விட்டுட்டோம்.. சிலம்பத்துல விடக்கூடாது..." விஜய்..


" அதுக்கு அந்த பயெ களத்துக்கு வரக்கூடாது..." கணேஷ்.


" அது மட்டுமில்ல.. அதிகமா வாய் பேசீட்டு திரியுற அந்த பிரகாஷ்க்கு ஏதாவது மறக்க முடியாத பரிசா கொடுக்கனும்.." விக்ரம்.


" ஊர்ல இருந்து வந்திருக்கானே இன்னொரு பேரன்னு சொல்லிட்டு.. அவன பண்ணலாமே‌..." விஜய் .


" இல்லடா.. வெளி ஊர்காரனப் போட்டா அவென் அடிவாங்கீட்டு ஊரைவிட்டு போய்டுவான்.. அப்புறம் நம்ம மேல பயமே வராது இவங்களுக்கு.. உள்ளூர் ஆளத்தா போடனும்.. ரிஷிய நாம ஒன்னும் பண்ண முடியாது.. அதனால பிரகாஷ் தா சரியான ஆளு..." விக்ரம்..


" மாப்ள பந்தி நடக்குற எடத்துல சண்டையப் போடு.. அப்ப தா அத கவனிக்கன்னு அவெ வருவான்.." விஜய் மற்றொரு நண்பனிடம்..


" அவன ரொம்ப நேரம் அங்கேயே நிறுத்தி வக்கனும்.. நீ கவனிச்சுக்கோ.." கணேஷ்ஷிடம்.. 


" இன்னைக்கு அவனுங்க ரெண்டு பேத்துல ஒருத்தன செஞ்ஜே ஆகனும்.." விக்ரம் வெறியோடு போட்டி நடைபேறும் இடத்திற்கு வந்தனர்.. 


பிரகாஷ் உடன் போட்டியிட தங்கள் பெயரைப் பதிவு செய்தனர்.. எல்லாம் அவர்கள் திட்டப் படியே நடந்தது.. ஆனால்.. எதிர் பாராத ஒன்றும் நடந்தது..


ஒருவருக்கு எதிராக ஒருவர் என நேருக்கு நேர் நின்று சண்டயிட  வேண்டும்.. விக்ரமும் பிரகாஷும் களம் கண்டனர்.. முதலில் சீராகச் சென்று கொண்டிருந்த போட்டி விக்ரமின் ஆவேசத் தாக்குதலால் விறுவிறுப்பானது… சிலம்பத்திற்கென்று சில விதிமுறைகளை வகுத்திருந்தனர் அவர்கள்.. விக்ரம் அதில் எதையும் கடைப்பிடிக்காமல் தாக்க.. சமாளித்து ஆடியவன் ஒரு கட்டத்தில் தடுமாற , எதிராளியின் சிலம்பு பிரகாஷின் வலது தோலை நன்கு பதம் பார்த்தது... சுற்றி இருந்தவர்கள் சளசளக்க போட்டியை நிறுத்துவதாக கமிட்டியார் அறிவித்தார்.. ஆனாலும் தாக்குவதை நிறுத்தவில்லை விக்ரம்..


வேகமாகச் சுழற்றி பிரகாஷின் நடு மண்டையில் அடிக்க சிலம்பை ஓங்கிய நேரம் , சிலம்பம் அந்தரத்தில்  நிறுத்தப்பட்டது.. யார் என கோபமாக திரும்பிவன் அங்கு கௌதம் நிற்பதைக் கண்டு ஏளனமாகப் சிரித்தான்.. 


" ஒருத்தன மட்டும் பலி குடுக்கலாம்னு நெனச்சேன்.‌‌. இல்ல என்னையும் சேத்துக்கோ அப்படீன்னு  வழிய வந்து தலைய குடுக்குறியேப்பா.. என்ன விலகி இருக்கப்போறியா... இல்ல.." 


" அதா கம்ப கைல எடுத்தாச்சில்ல.. என்னதா நடக்குதுன்னு மோதி தா பாத்திட்டுவோமே.." கௌதம்.


" பாத்துடலாம்.. பாத்துடலாம்.." என விக்ரம் கண்ணசைக்க கௌதமை சுற்றி மேலும் ஐந்து பேர் வந்து நின்றனர்.. சுற்றி கத்திக்கொண்டே இருந்த யாரையும் அவர்கள் கவனிக்ககூட இல்லை.. அவர்களின் குறி இப்போதும் பிரகாஷாவே இருந்தது..‌ 


கௌதம் லாவகமாக கம்பைச் சுலற்றி தன் தம்பியைக் காத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.. அருமையாக தன் திறமையை வெளிக்காட்டினான்.. ஒருவனுக்கு எதிராக அறுவரா.. எங்கேயோ கணக்கு  இடிக்குதே.. ஹா.. இதோ வந்து விட்டான் ரிஷி தரன்... அறுவரும் ஒரு நொடி அதிர்ந்தனர்.. பின் தங்களின் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.. 


கைதட்டல் ஒலி அவர்களைப் பரவசப்படுத்த ஆஹா.. அருமையான சண்டை.. அண்ணனும் தம்பியும் பூந்து  விளையாடி விட்டனர்.. ஆனால் யாருக்கும் ஆழமாக காயத்தை ஏற்படுத்த வில்லை அந்த சகோதரர்கள்.. 


" வேலண்ணா நீங்க கம்பு சுத்துவிங்களா.. உங்க தம்பிங்க கலக்குறாங்க.. நீங்க மட்டும் தனியா இருக்குறிங்க.. போங்க.. போய் சண்ட போடுங்க.. " ஹரிணி.. உற்சாகமாக நண்பனின் சண்டையை ரசித்து  கைதட்டிக் கொண்டு இருந்தாள்.. குடும்பத்தினர் சில அங்குதான் இருக்கின்றனர்.. முக்கியமாக பெண்கள் அங்குதான் இருந்தனர்.. நாச்சியம்மாளுக்கு பூரிப்பு தாள முடியவில்லை.. தன் பேரப் பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்கின்றனர் என மவுந்து தான் போனார்.. 


" இல்லம்மா.. எனக்கு சிலம்பம் விளையாட வராது.." வேல்ராஜ்..


" எதுக்குக்கா இப்படி சிரிக்குறீங்க.." சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்த அபியிடம் வினவ..


" அவரு கம்புன்னு பேப்பர்ல எழுதி வச்சுத்தா சுத்துவாரு..‌‌ நீ அவரைப் போய் சண்ட போட சொல்ற.. " என சொல்லிச் சிரித்தவளை முறைத்தான் அவளின் கணவன்.. அபியின் சிரிப்பு அவ்வளவு அழகாக இருந்தது.. 


ஒருவழியாக அண்ணனும் தம்பியும் எதிரிகளை பந்தாடிவிட்டு வெற்றி வாகையுடன் வந்தனர்.. பிரகாஷை கைத்தாங்கலாக இருவரும் அழைத்து வந்தனர்... தோலில் அடிபட்ட போதும் வலது கையை கீழே தொங்கவிட்டாலே அதிக வலி ஏற்பட்டது..‌ அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்..  


வீட்டில் அனைவரும் மகிழ்வுடன் இருக்க.. திருவாளர் கலியபெருமாள் மட்டும் அப்படி இல்லை.. கடுகை தூக்கி அவரின் மீது போட்டால் அது பொரிந்து விடு அந்த அளவுக்கு மிகுந்த கோபத்துடன் இருந்தார்.. மகனின் மீது.. அவர் கையில் மட்டும் கௌதம் சிக்கினான்..‌ அவ்வளவுதான்...


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...