அத்தியாயம்: 16
ஹிட்லர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து வீட்டை அளந்து கொண்டு இருந்தார். காரணம் மகனின் மீது கோபமாம்.
சும்மாவே ஆள் சாமியாடுவார்.. அவரிடம் சென்று..
" பொட்டப்பிள்ளைங்கல கவனமா பாத்துக்க வேண்டிய காலத்துல ஓ மகென் ராக்கூத்து பாக்க கூட்டீயாந்துருக்கான்.. என்ன அண்ணனோ.. ஹிம்.." என பெருமூச்சு விட்ட பெரியவர் அவரின் கைகளில் வேப்பிள்ளையைக் கொடுத்தார் என்றால் மற்றவரோ..
" உங்க குடும்பம் நடத்துற திருவிழால ஓ மகனே இப்படி பண்ணலாமா.. ஊருல இருக்குற இளசுகள எல்லாம் சண்ட போடக்கூடாதுன்னு அடக்கி வச்சா. ஓ மகென்.. கோயில்ல வச்சு ஒருத்தன அடிச்சுருக்கான்.. அதுவும் உயிர் போற அளவுக்கு.. அவென் பெழப்பானா மாட்டானான்னு கூட தெரியல.. என்னய்யா பிள்ள வளத்துருக்க.. " என உடுக்கை வாசித்து விட்டார்..
ஹிட்லர் போர் நடத்த சரியான நேரத்தையும் இடத்தையும் நேர்ந்தெடுத்து விட்டார்..
ஹாஸ்பிடல் சென்று கட்டுகள் போடப்பட்டு நடக்க முடியாமல் சோர்வாக இருந்தவனை தரனும் கவியரசனும் கைத்தாங்கலாக அழைத்து வந்து சோபாவில் கிடத்தி வைத்து விட்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த பெருமாளை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.. மாலையில் நடந்த கலவரம் இவர்களுக்கு இன்னும் தெரியாது.. கலியபெருமாளின் முகம் பார்த்து ஏதோ நடத்திருக்கிறது என்பதை ஊகித்தார்கள்..
கார் நிற்கும் சத்தம் கேட்டவுடன் ஹிட்லர் வேகமாக வெளியே வந்தார்.. காரில் இருந்து முழுதாக இறங்கக் கூட விடாது இழுத்து வைத்து சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார் கௌதமை...
" எனக்குண்டு ஏன் டா பிள்ளையா வந்து தொலஞ்ச.....******பய.. நீயெல்லாம் உசுரோட இருக்கனும்னு யாரு அழுதா.. ***** " திட்டிய வரை பிடித்து நிறுத்தினர் கவியரசனும் நாதனும்..
" தோலுக்கு மேல் வளந்த ஆம்பளப் புள்ளய ஏன்டா இப்படி அடிக்குற.." நாதன்..
" அண்ணே இவனால நம்ம குடும்ப மரியாதையே போச்சு.. தறுதல தறுதல பண்ணுறது பண்ணீட்டு அப்புறானி மாறி நிக்குறான்.. *** பய.." கேட்கவே காது கூசும் அந்த அளவுக்கு இருந்தது வசை சொற்கள்..
" அண்ணே நம்ம பிள்ள மரியாதக் கொறவா நடந்துக்க மாட்டான்.. நீ ஏதோ தப்பாக புரிஞ்சுக்கிட்டன்னு நெனைக்குறேன்.." கவியரகன்..
" டேய்.. அவென் உம் பிள்ளைங்கள ராக்கூத்துக்கு கூட்டீட்டு போய்ருக்கான்.. இன்னைக்கு யாரையோ தேவயில்லாம அடிச்சுருக்கான்.. நம்ம குடும்ப கௌரவத்தை காத்துல பறக்க விட்டிருக்கான்.." என மீண்டும் கண்மண் தெரியாது அடித்தார் அவர்..
என்ன சொல்வதென்றே தெரியாமல் அனைவரும் முழித்தனர்.. ஆனால் தேவையில்லாமல் கை நீட்டியிருக்கமாட்டான் என்று அனைவருமே நம்பினர்… ஒருவழியாக ஹிட்லரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.. இல்லை அடித்து அடித்து அவரே ஓய்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்..
கூடத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ஹரிணியின் அருகில் சென்று அவளை உரசியபடி அமர்ந்து " டார்லிங்.." என்றான் கௌதம்..
அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள் பேசவில்லை..
" இப்பத்தா ஹிட்லர் அவரோட ஆட்டத்த முடிச்சுட்டு போயிருகாரு.. அடுத்து நீயா.. ஆமா அந்த ஒன்னுமில்லாத கைப்பிள்ளைக்கே அன்னைக்கி ஆதரவு கரம் நீட்டுனவ.. இன்னைக்கி எனக்கு சப்போட் பண்ணுவேன்னு பாத்தா.. இப்படி வேடிக்க பாத்துட்டு உக்காந்திருக்கியே.. மீ பாவமில்லையா.." என தோலில் கை போடா கையை கடித்து வைத்தாள் ஹரிணி..
" ஆ.. " என கத்தியவனிடம்..
" நீ என்ன ஹீரோவாடா.. ஹான்.. ஹீரோவா.. என்ன சொன்ன வேடிக்கப் பாத்துட்டு இருக்கியேன்னா.. ஹிட்லருக்கு கை வலிக்குமேன்னு கட்டையைத் தேடீட்டு இருந்தேன் டா.. உன்னோட நல்ல நேரம் எதுவும் கண்ணுல மாட்டல.. இல்ல உந் தம்பிக்கு பக்கத்துல நீயும் கட்டுபோட்டு உக்காந்திருப்பா.." என டைனிங் டேபிள்ளில் இருந்து கரண்டியால் அவனை அடித்தாள்..
" ஸ்..ஆ.. வலிக்குது டார்லிங்..."
" நல்லா வலிக்கட்டும்.. முட்டி போடு.. நீல் டவுன் பண்ணு.. பண்ணு..டா.."
" இது என்ன ஸ்கூலா.. " என்றான் முட்டி போட்டுக்கொண்டே..
" இன்னைக்குத் தா உங்கப்பா சரியான வேலைப் பண்ணிருக்காரு.. உன்னையா.. இடியட்.. ஸுப்பிட்.." கோபமாக திட்டினாள்..
முட்டியிட்ட படியே நடந்து அவன் தண்ணீர் டம்ளரை அவள் முன் நீட்டினான்.. அதை குடித்தவளின் கோபம் தான் கட்டப்படவில்லை.. அனைவரும் இவர்களை வித்தியாசமாகப் பார்த்தனர் என்றால் தரன் சுவாரஸ்யமாகப் பார்த்தான்..
" டார்லிங்.. ஹரிணி.." என கெஞ்ச..
" வாய மூடு.. கொலக்கேஸ்ல உள்ள போய்ருந்தா என்ன பண்ணீருப்ப.. கோர்ட்டுக்கே போகாத இந்த வக்கீல வச்சா வெளில வருவ.." என பிரகாஷை சுட்டிகாட்ட..
" அதுக்குத்தான் நீ இருக்கியேடா செல்லம்.." கன்னத்தை தொட வந்தவனை அடித்தாள் அவள்..
" இப்ப எதுக்கு சும்மா இருக்குற என்ன வம்பிளுக்குறீங்க.. உங்க ரெண்டு பேருக்கு நடுவுல நா எதாவது கருத்து சொன்னேனா.. சிவனேன்னு தான இருக்கேன்.. ஏ என்ன வம்பிளுக்குற.." பிரகாஷ்..
" நீ சும்மாவே தானயிருக்க.. அதா பிரச்சனையே.. இன்னேரம் நீ வந்து அண்ணனுக்கு ஆதரவா ஆஜராகி இருக்கு வேணாம்.. நீயேல்லாம் வக்கீலாகுறது ரொம்பக் கஷ்டம் டா..."
" யாரு.. இவெ.. உனக்கு சப்போட்டா ஆஜராகி.. ஹிம்.. வெளங்கீடும்.." ஹரிணி நக்கலாக சொல்ல..
" மொத என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க.. ஏதோ ஊம படம் பாக்குறமாறி ஒன்னுமே புரியல.. யார அடிச்சீங்க அண்ணே.. " பிரகாஷ்.
" அடிவாங்குனவன் பேரு தெரியலையே.. ஆ.. காலைல உன்ன இங்க அடிச்சான்ல அவெ தம்பின்னு நெனைக்குறேன்.." என தோலைச் சுட்டிக்காட்டினான் கௌதம்..
" இந்த வருஷம் உங்க கிட்டையா.. ஹா.. ஹா.. ஹா.. வருஷா வருஷம் பொங்கலுக்கு புது துணி வாங்குற மாறி தரன் அண்ணேங் கையால அடிவாங்கீட்டுப் போறது அவங்களுக்கு ஒன்னும் புதுசில்ல.. இதுக்கு தா இந்த கூத்தா.. அட போங்க ண்ணா.." பிரகாஷ்..
" அடுத்த வருஷமும் அடிவாங்குறதுக்கு அவெ முதல உயிரோட இருக்கனும்.. உங்கண்ணே அடிச்ச அடில அவென் எழுந்து உக்காரவே ஆறு மாசம் ஆகும்.. அதுக்கப்புறம் எழுந்து நின்னு.. நடந்து.. ஓடி.. ஹிம்.. கொறஞ்சது ரெண்டு வருஷமாச்சு ஆகும்.. ஆமா நீ எதுக்கு அங்க வந்த.. எதுக்கு அவன அடிச்ச.." ஹரிணி.
" கேக்கப் பட வேண்டிய நல்ல கேள்வி இது.. இதுக்கு உங்க பதில் என்னனு சொல்லுங்க கேப்போம்.." பிரகாஷ் .
குடும்பத்தினர் அனைவரின் முகத்தையும் உற்றுப்பார்த்தவன் , கடைசியாக ஊஞ்சலில் அமர்ந்திருந்த ரிஷி தரன் மீது வந்து முடிந்தது.. தரனின் இதழ்களில் தவழ்ந்த மென்னகை ' பெருசா என்ன சொல்லீடப் போற.. ' என்பது போல் இருந்தது..
" அதாவது ஒரு பெண்ணோட மனசு ஒரு பெண்ணுக்குத் தா தெரியும்கிற மாறி ஓரு பைய்யனோட நோக்கம் இன்னோரு பையனுக்குத்தா தெரியும்.. அவென் தப்பான இன்டென்ஷனோட உங்கிட்ட வந்தான்.. அதா அடிச்சேன்.." கடைசி வார்த்தையை தரனை பார்த்து சற்று அழுத்தியே சொன்னான்.. தன் தோழியிடம் நெருங்காதே என தரனை எச்சரிப்பது போல் இருந்தது..
" நீ எதுக்கு அவன்ட போய் வம்பு பண்ண.." கௌதம் காட்டமாக..
" யாரு.. நா.. அவன்ட.. எனக்கு வேற வேலையே இல்ல பாரு.. ஸ்ட்ரீட் டாக்ஸ் எல்லாம் நா திரும்பிக்கூட பாக்க மாட்டேன்.. அப்புறம் வம்பு பண்ணுனது நா இல்ல அவென்.. அதுவும் எங்கிட்ட இல்ல உன்னோட அத்த மக கிட்ட..."
அனைவரின் பார்வையும் இந்துவின் பக்கம் சென்றது.. அழுது சிவந்த விழிகளுடன் இருந்தவள் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை..
" பொம்பளப்பிள்ளையா அடக்கம ஒடுக்கமா இல்லாம.. அவென்ட என்னடீ பேச்சு வேண்டிகெடக்கு..." என கிருஷ்ணம்மாள் அடிக்க கையை ஓங்கிய நேரம் தரன் இந்துவிற்கு பாதுகாப்பாய் நின்றான்.. அவனின் முதுகில் கோழிக்குஞ்சு போல் ஒழுந்து கொண்டவளை கிருஷ்ணம்மாள் அடிக்க முடியாது போக.. தன்னை முறைத்துக் கொண்டு நின்றார் அவர்.. தரன் அதை கண்டுகொள்ளாமல் இந்துவின் தலையை ஆதரவாக வருடி அவளுக்கு பின் நின்று கொண்டிருந்த சுதாவை கண்களால் அழைத்தான்.
" என்ன நடந்தது சுதா ...." என விழிகளாலே கேட்க..
" அண்ணா.. அது மைனீ ஆத்தங்கரைல இருக்குற சிவசக்தி மரத்துல கயறு கட்டனும்ன்னு சொன்னாங்க.. நானு மைனீயும் போனோம்.. அவனுங்க தா சும்மா எங்ககிட்ட வம்பு பண்ணாங்க.. கை பிடிச்சு இழுத்தாங்க.. ஹரிணி அக்கா வந்தாங்களா அப்பத்தா நிம்மதியா இருந்துச்சு.." ஒன்பதாம் வகுப்பு செல்ல உள்ள சுதா தனக்கு புரிந்ததை கூறினாள்..
" என்னடா இவா கடப்பாரைய முழுங்குன மாறி பேசுறா.." நாச்சியம்மாள்..
" அதான ஒரு ஃப்லோல போனாத்தான ஃப்ளாஷ்பேக் புரியும்.. நீ வாண்ணே நாம காத்துல வட்டம் போட்டு பாக்கலாம்.." இளையவர்கள் மேலே பார்க்க காற்றில் கோலம் போட்டான் பிரகாஷ்..
அதாவது இந்து டென்த் படிக்கும் போதிருந்தே விஜய் அவளை காதலிப்பதாக கூறி பின்னே சுற்றினான்.. இந்துவின் பயந்த சுபாவத்தை வைத்தே அவளை அடைய நினைத்தவன் அவளுக்கும் அவனுக்கும் காதல் என பள்ளியில் பரப்பி விட , இவள் பள்ளி செல்ல மாட்டேன் என அடம் பிடித்தாள்.. தந்தையின் விபத்திற்கு பின் தரன் அந்த கிராமத்திற்கு வந்து சில மாதங்களே ஆனது.. தன் தங்கையின் இடத்தில் இருக்கும் இந்து விடம் ஏன் என்று விசாரித்தான்..
" அத்தான் , அவிங்க ரொம்ப மோசம் பண்ணுறாங்க.. காது கூசுர அளவுக்கு கெட்ட வார்த்த பேசுறாங்க.. பத்தாததுக்கு வா ஓடி போலாம்னு சொல்லி கையைப் புடிச்சு இழுக்குறாங்க.. இது பத்தாதுன்னு ஸ்கூல் முழுச்க நா அவனோட ஆளுன்னு சொல்லி வச்சுருக்கான்.. எனக்கு ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல.. நா போகமாட்டேன்.." அடம்பிடித்தவளை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றான்..
அங்கு விஐயை கவனித்த கவனிப்பில் அவன் மட்டுமல்லாது ஸ்கூலில் யாருமே காதல் என்ற வார்த்தையை பயன்படுத்த பயப்பட்டனர்.. அதிலிருந்து விஜய், தரன் உடன் இருக்கும் போது இந்துவை பார்ப்பதையும், பேச முயற்சிப்பதையும் விட்டான்.. ஆனால் பின் தொடர்ந்து கொண்டு தான் இருந்தான்..
இன்று பிரகாஷை மருத்துவமனைக்கி அழைத்து சென்ற தரன் திருவிழா நடக்கும் இடத்திலா இல்லை என்பதை உறுதி செய்த பின் தான் அவன் இந்துவை தனியாக சுற்றுப் போட திட்டமிட்டு தன் கூட்டாளிகளுடன் சென்றான்.. வழி மறித்து நின்றவனை காணாது விலகிச் செல்ல இந்து நினைக்க , அவன் ஆள்கள் சுதாவையும் இந்துயும் சுற்றி நின்று கொண்டனர்..
" அண்ணா வழி விடுங்கண்ணா.." சுதா பயத்துடன்..
" ஏய் எதாவது பேசுன உன்ன கொன்னுடுவேன்.." சின்னவளை மிரட்டியவன் பெரியவளிடம்..
" அப்புறம் ரொம்ப சந்தோஷமா இருக்கிங்க போலயே.. ஆறு வருஷமாச்சு நாம இப்படி தனியா பாத்து பேசி..."
நிமிர்ந்த பார்த்து அவனையும் அவனின் கூட்டாளிகளையும் பார்த்தவள் சுதாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..