அத்தியாயம்: 17
" என்ன செல்லம்.. மாமாவ மறந்துட்ட பாத்தியா.. " என்க அவள் நிமிர்ந்து பயங்கொண்ட பார்வை ஒன்றை பார்த்தாள்..
"அப்படி பாக்காத டி.. இந்த கண்ணு.. அதுல தெரியிற பயமும்.. இதுதா காந்தமா உங்கிட்ட என்ன இழுத்துட்டு வருது.. ஏன்டி புரிஞ்சுக்க மாட்டேன்கிற.. இப்ப கூட என்னால உன்ன என்ன வேண்ணாலும் பண்ண முடியும்.. ஆனா நா எதுவும் பண்ண மாட்டேன்.. ஏன்னா நா உன்ன வச்சிக்க ஆசப்படல கட்டிக்கலாம்ன்னு தான கேக்குறேன்.." அவளின் முகத்திற்கு வெகு அருகில் வந்தவன் அவனும் அவளும் மட்டும் தெரியும் படியாக க்ளோஸப்பில் தன் ஃபோனில் போட்டோ எடுத்தான்..
க்ளிக் என்ற சத்ததில் அதிர்ந்து நிமிர்ந்தவளிடம் " நீ என்ன பண்றன்னா.. விடியக்காலைல ஒரு ஐஞ்சு மணிக்கு அலாரம் வச்சு எழுந்து , மாமாவப் பாக்க இதே எடத்துக்கு வருவியாம்.. நாம ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிறோமாம்.. அப்படி இல்லைன்னா இந்த போட்டோவ நா நம்மூர் பெரியாளுங்க கிட்ட காட்டுவேனாம்.. அவிங்க கலந்து பேசி உன்னைய எனக்கே கட்டி வச்சுடுவாங்கலாம்.. என்ன.. உங் குடும்ப மனம் தா கொஞ்சம் சேதாரமாகும்.. பரவாயில்ல நீ தா நம்ம வீட்டுக்கு வந்துடுவேல்ல.. அப்றம் என்ன.. சொன்னது புரிஞ்சுதா.. நாளைக்கு இதே எடத்துக்கு வர்ர.." விஜய் .
" அப்படி வரலைன்னா.." குரல் வந்து பக்கம் பார்த்தனர் அனைவரும் திரும்பி பார்த்தனர்.. அங்கிருந்த மரத்தின் அடியில் நின்று மாங்காய் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் ஹரிணி..
" ஏய் யார் நீ.. இங்கெல்லா வரக்கூடாது.. கிளம்பு.. கிளம்பு.. " கூட்டாளிகளுள் ஒருவன் விரட்ட..
" யாரா இருந்தா உனக்கென்ன.. ம்.. சொல்லு வரலைன்னா.. என்ன பண்ணுவ.." ஹரிணி .
சுதாவும் இந்துவும் அவளின் அருகில் சென்று கைகளை பிடித்துக் கொண்டனர்.." ஏய் மரியாதையா இங்கிருந்து போய்டு.. இல்ல பசங்க உன்ன பிரிச்சு மேஞ்சுடுவாங்க.." விஜய்..
கை நீட்டி எச்சரித்தவனிடம் இருந்த செல்போனை லாவகமாக பறித்துக் கொண்டாள் ஹரிணி..
" ஏய் குடுடி.." விஜய் மிரட்டலாக..
" முடியாது டா.. உன்னால என்ன்ன்ன பண்ண முடியும்னு நா பாக்குறேன்.." அச்சம் என்பது சிறிதும் இன்றி நால்வருக்கு நடுவில் நின்றாள் ஹரிணி..
" பாக்கத்தான டி போற.." என ஹரிணியின் தாவணியில் கை வைக்க வந்தவனை ஒருகரம் தாடையில் குத்தியதென்றால் மற்றொரு கரம் அவனின் அடி வயிற்றில் நன்கு இறங்கியது.. பத்தடி தூரம் சென்று விழுந்தான் விஜய்.. ஏனெனில் அடித்தவன் கௌதம் ஆயிற்றே..
கூட்டாளிகள் தாக்க இவர்களை நோக்கி கோபமாக வர "வெட்......வெட்....வெட்....... ஃபஸ்ட் உங்க ஃப்ரெண்ட ஹஸ்பிட்டல் கூட்டீட்டு போங்க அப்புறமா வந்து நம்ம சண்டைய வச்சுக்கலாம்.."
என்ன உலறுரா இவா என திரும்பி நண்பனை பார்க்க.. அங்கு கஷ்டப்பட்டு எழுந்து நின்றவனின் உதடுகளில் ரத்தம் கசிய ஆரம்பித்து விஜய் மயங்கிச் சரிந்தான்.. அவனின் கூட்டாளிகள் அவனை அள்ளிக்கொண்டு செல்ல.. நடந்ததை வீட்டில் யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் எனக் கூறி இந்துவையும் மற்றவர்களையும் அழைத்து வந்தான் கௌதம்..
"ஹப்பா ஒரு வழியா நம்ம மேல தப்பு இல்லைன்னு நிருபிச்சாசு அடுத்து என்ன.. " என தட்டில் தோசையை வைத்துக்கொண்டு யோசித்தவன் கண்களில் , முறைத்துக் கொண்டு இருந்த கவியரசன் தெரிந்தார்..
" சித்தப்பு இவ்வளவு அன்பா நீ பாத்தன்னா சாப்பாடு தொண்டைக்குள்ள இறங்காது சித்தப்பு.. இப்ப என்ன வேணும் உனக்கு.."
" எதுக்குடா பிள்ளைங்கள ராக்கூத்துக்கு கூட்டீட்டு போன.. காலம் எவ்வளவு கெட்டுக் கடக்குன்னு உனக்கு தெரியும் தான.. பொம்பளப்பிள்ளைங்க வெளில போனா வீடு வந்து சேர்ர வரக்கும் இருக்குற பயம் பெத்தவங்களுக்குத் தா தெரியும்.. ஏதாவது ஒன்று கெடக்க ஒன்னு ஆகியிருந்தா என்ன டா பண்ண முடியும்.. லூசுப் பயளே.." என கோபமாகப் பேசினார்..
கௌதமின் புன்னகைத்த முகத்தில் சிறிய மாற்றம் வந்தது " சித்தப்பா நீங்க அவங்கள பாதுகாக்குறேன்ற பேருல ஐஞ்சறிவு ஜீவன் மாறி அடிச்சு வச்சு வளக்க நெனைக்குறிங்க.. அது தப்பில்லையா.. ஆண்களோட முக்கியமான வேல பெண்கள பாதுகாக்குறது.. அவங்க எவ்வளவு தூரம் தன்னோடு திறமையால முன்னேறி போறாங்களோ அவ்வளவு தூரம் நாமளும் போய் அவங்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் பாதுகாப்பையும் குடுக்கனுமே தவிர காப்பாத்துறேன் அப்படீன்னு கட்டிப்போடுறது கிடையாது.."
" சாத்தான் வேதம் ஓதுதோ.. பொம்பளைங்க பாதுகாப்புக்கும் உனக்கு என்ன டா சம்பந்தம் **** பொறுக்கி.. ****** " என கெட்ட வார்த்தையில் வசைபாடியவரின் முகத்தில் அருவெறுப்பு அப்பட்டமாக தெரிந்தது..
" வேதம் சொல்லுறவன் சாத்தானா கடவுளான்றது முக்கியமில்ல கேக்கறவன் சாத்தானா கடவுளான்றது தா முக்கியம்.. ஏன்னா.. கடவுளே நேர்ல வந்து சில விஷயத்த சொன்னாலும் சில சாத்தான்க அத கேட்காதுங்க.." என சாப்பிடாமல் எழுந்து சென்றான் கௌதம்..
எந்த ஒரு நிகழ்வையும் , நல்லதா கெட்டதா என்பதை பார்ப்பவனும் கேட்பவனுமே முடிவு செய்கிறான் என்றான் கௌதம்...
திங்கள் முகிலின் பின்னால் மறைந்து , இரவின் அழகை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.. சுவற்றின் மீது அமர்ந்து பெயரே தெரியாத அந்த நட்சத்திரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் கௌதம்.. திடீரென தோலில் ஒரு கரம் பதிய , யாருடையது என்பது அறிந்தும் அமைதியாக இருந்தான்..
" இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவ ஹிட்லர் என்ன திட்டீருக்காரு ஹரிணி.. ஆனா ஒவ்வொரு டைமும் கேக்கும் போதும் ஃபஸ்ட் டைம் கேக்குற மாறி வலிக்குது.. ரொம்ப கஷ்டமா இருக்குது.." என தோழியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்..
அவனின் கண்ணீர் அவளின் மடியை நனைத்தது.. அவனின் தோலில் தலை சாய்ந்தவள்..
" நீ அழுதேன்னா உன்னோட அப்பா சொன்னது உண்மைன்னு ஆகிடும் கௌதம்.. அதாவது நீ ஒரு பொம்பளப் பொறுக்கின்னு நீயே ஒத்துக்குற மாறி.."
" அந்தாளுக்கு என்னதா வேணுமாம்.. ஏற்கனவே பவிய ஏம் பக்கம் கூட அண்டவிடுறதில்ல.. இதுல இந்த சின்னப் பிள்ளைங்களையும்.. ச்ச.. அதுகளும் என்ன வெறுத்துடுமோன்னு கவலையா இருக்கு ஹரிணி.." குரலில் வலிகளுடன்..
" உன்ன புரிஞ்சு வச்சிருந்தாங்கன்னா உந் தங்கச்சிங்க யார் தடுத்தாலும் உன்ட பேசுங்க பழகுங்க.. நீ ஃபீல் பண்ணாத.." ஆறுதலாக..
இருட்டில் இருந்தவர்கள் மீது திடீரென ட்யூப்லெட்டின் ஒளி பட்டது.. யார் என பார்க்க அங்கு குடும்பமே நின்று கொண்டிருந்தது.. அவன் எழவில்லை ஹரிணியின் மடியில் இருந்து.. மற்றவர்கள் அதை பெரிது படுத்தாது கடந்து செல்ல.. கிருஷ்ணம்மாள் மட்டும் 'என்ன ஜென்மங்களோ தெரியல.. ஒழுக்கமே இல்லாம திரியுதுக.. ' என புலம்பிய படியே சென்றார்.. கௌதமின் அன்னை ஜோதி என்ன பேசுவதென்று தெரியாமல் கையை பிசைந்த படி நிற்க.. வருண் முன் வந்தான் கை நிறைய சாக்லேட்களோடு..
" சித்தா.. இந்தா.. நீ சரியா சாப்படலேல அதா எடுத்துட்டு வந்தேன்.. ஒன்னு ஒன்னு சாப்பிடு சித்தா இல்லைன்னா என்ன மாறி நீயும் உன்னோட அம்மாட்ட திட்டு வாங்குவ.. " கள்ளம் கபடமற்ற சிரிப்புடன்..
அவனை கட்டி அணைத்தவன் நெற்றியில் முத்தமிட்டு , " என்னோட அம்மா ஒன்னும் திட்ட மாட்டாங்க.. ஏன்னா இதுவரைக்கும் அவங்க எனக்கு சாக்லேட் வாங்கித் தந்தது இல்ல.. ஏ எதுவுமே தந்தது இல்ல.. தேங்ஸ் டா செல்லம் சித்தா சாப்பிடுறேன்.." என்றான் குரலில் வலியோடு..
ஜோதி அவனிடம் பேச முயற்சிக்க கௌதம்.. " நீங்க எது பண்ணுறதா இருந்தாலும் அத உங்க புருஷன் முன்னாடியே பண்ணுங்க.. உங்களுக்கு ஒரு பொண்ணு மட்டுந்தா பையன் செத்து பல வருஷமாகுது.." ஹிந்தியில் அவளிடம் கூறி எழுந்து சென்றான்.. ஜோதி கண்களில் நீருடன் நின்றார்..
" சித்தா.. பாட்டி நிலா சோறு சாப்பிடலாம்னு சொன்னாங்க.. " வருண் சாக்லேட்டை கௌதமிற்கு ஊட்டியபடி..
" வா.. நாமலும் போய் அந்த கூட்டத்தோட ஜாயின் பண்ணிக்கலாம்.. நிலாச் சோறு சாப்பிடலாம்.." என வருணைத் தூக்கி வந்தான் .
நடுவில் உணவு பதார்த்தங்கள் இருக்க வட்டமாக அமர்ந்து பெரிய சட்டியில் சாதமும் குழம்பும் இட்டு பிசைந்து அனைவருக்கும் உருண்டை பிடித்துக் கொண்டு இருந்தார் மலர்..
" அப்பான்னா அப்படித்தா இருப்பாங்க.. அதுக்குன்னு உன்னோட கோபத்த சாப்பாட்டுலயா காட்டுவ.. இந்தா.." ஊட்டிவிட்டார் மலர் கௌதமிற்கு..
" எம் மகனுக்கு புத்தி கொஞ்சம் கம்மிதா.. இல்லையா ராசா.. சாப்பிட வேண்டிய நேரத்துல கண்டத பேசிட்டான் கேணப்பையன்." நாச்சியம்மாள் .
" அண்ணா எங்களுக்கு உங்க மாறி சண்ட போட சொல்லித் தாறிங்களா.."
" தரன் அண்ணா கூட சண்ட போடும்.. ஆனா ரெண்டே அடில மயங்கி விழுற அளவுக்கு பண்ணாது இல்ல.."
" ஃப்ளீஸ்.. ண்ணா.." லதாவும் , சுதாவும் அவனின் இருபுறமும் அமர்ந்து கொண்டு கெஞ்சினார்..
" எதுக்கு தனியா சொல்லித்தரனும்.. அதா நீங்க படிக்கப் போற ஸ்கூல்லேயே எல்லாம் இருக்கு.. மகனே நீ நாளைக்கு இதுகள கூட்டீட்டுப் போய் அட்மிஷன் போட்டுட்டு வா.. இன்னும் மூன்று நாள் தா இருக்கு.. கடைசி ரெண்டு நாள் கூட்டமா இருக்கும் அதனால நீ நாளைக்கே போய் சேத்து விட்டுடு.." கவியரசன்..
" சரி சித்தப்பா..." என்ற போது கௌதமிற்கு கண்ணீரே வந்தது.. பெற்றவன் வைக்காத நம்பிக்கையை மற்றவர் வைத்தது..
" என்னடா சித்தப்பாங்கிற.." என மிரட்டலுடன் அவர் கேட்க..
" ஓகே சித்தப்பு.. நாளைக்கு நா தங்கச்சிங்கள கூட்டீட்டு போறேன்.. " புன்னகையுடன் சொன்னான்..
" ஹேய்.. கை கழுவீட்டு வர்ர கேப்ல செட்டில் ஆகிட்ட போலயே.." ஹரிணி..
தங்கைகளுக்கு நடுவில் அமர்ந்திருந்தவனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாள்.. மனநிலை சரியாக இல்லாத போது அவன் ஈசியா யாருடனும் பேசிவிட மாட்டான்.. இந்த குடும்பம் அவனிடத்தே காட்டிய அன்பு அவனை சந்தோஷமாக மாற்றியது.. அந்த குடும்பம் அவளையும் அதில் இழுத்தது.. நண்பனை தொந்தரவு செய்ய மனமில்லாமல் பிரகாஷின் அருகில் சென்றமர்ந்தாள்...
அங்கு அவன் ஸ்பூனுடன் சண்டையிட்டுக் கொண்டு இருந்தான்.. வலது கையில் அடிபட்டிருப்பதால் உணவை அள்ள முடியவில்லை..
" வாவ் நீ நல்லா கம்புச்சண்டதா போடுவேன்னு பாத்தா ஸ்பூன் சண்ட கூட போடுறியே.." ஹரிணி கேலியாக..
" கடுப்பேத்தாதமா.. நானே பசில உயிர் போய்டுமோன்னு பயந்துட்டு இருக்கேன்.. நீ வேற.. ஏ வயித்துக்குள்ள டோனியும் கோலியும் கிரிக்கெட் மேட்ச் வெளாடுறமாறி சத்தங்கேட்டுட்டே இருக்கு.. இத நா சாப்பிடலேன்னா.. இந்த பிரபெஞ்சத்துல ஏ உசுர காப்பாத்துறது ரொம்ப செரமமா இருக்கும்.. பாத்துக்க.." மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான்..
" கைபிள்ளயப் பிடிச்சு கை ஒடச்சு சாப்பிட சொல்லுகிற உலகம்.."
" ஆமா சாப்பிட சொல்லுகிற உலகம்..."
" அவன் எப்படி சாப்பிடுவாவான்.."
"அவன் எப்படி சாப்பிடுவாவான்.."
பவியும் இந்துவும் பாடுகிறேன் என்று அவனை வாரினர்..
" இந்த நாராசக் குரல கேக்குறதுக்கா கடவுளே எனக்கு காத வச்ச.. முடியல.." என்றவன் இருவரின் முறைப்பையும் பொருட்படுத்தாமல் மீண்டும் உண்ண முயற்சித்தான்.. முடியாது போக
" இந்தா.. சாப்பிடு.." என உணவை கைகளில் அள்ளி ஊட்டிவிட்டாள் ஹரிணி..
" ம்...ம்....ம் ஆஹா.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு செம டேஸ்ட் டா இருக்கு சாப்பாடு.. அது உங் கைய்யால சாப்பிடுறதுனாலன்னு நெனைக்குறேன் ஹரிணி.. ம்.." பிரகாஷ் ஹரிணியின் அன்பில் மயங்குவது போல் பாசாங்கு செய்ய...
" நெனப்ப.. நெனப்ப.." என்ற கௌதம் அருகில் இருந்த பாத்திரத்தை அவன் மீது வீசியெரிந்தான்..
உணவை முடித்து அனைவரும் கீழே சென்றிருக்க தரன் மட்டும் தனித்திருந்தான்.. ஏதோ யோசனை போலும்.. தன் பின் நிழலாடுவதைக் கண்டு திரும்பினவன் கண்டது ஹரிணியை.. புன்னகையுடன் தன் கையில் இருந்த விஜய்யின் மொபைலை அவனிடம் நீட்டினாள் அவள்..
" எல்லாத்தையும் நா டெலிட் பண்ணிட்டேன்.. நிச்சயம் அவிங்க சும்மா இருக்க மாட்டாங்க.. சோ.. பாத்துக்கங்க.."
என்றவளிடமிருந்து ஃபோனை வாங்கியவன் அதை இயக்க முயற்சித்தான்..
இன்னும் அவள் செல்லாமல் அங்கேயே நின்றாள்.. 'அதா குடுத்திட்டேல.. இன்னும் என்ன..' என தலை நிமிர்த்தி பார்த்தவன் அங்கு கை விரல்களை பிண்ணிக்கொண்டும் பொம்மை போல் நின்ற இடத்திலேயே அசைந்தாடியவாறு நின்றவளை கண்டு மெல்லிய புன்னகை வந்தது..
என்ன என தன் புருவம் ஒன்றினை ஏற்றி இறக்கியவனின் வசீகரத்தில் ஒரு நொடி அசந்து தான் போனாள். இருந்தும் சமாளித்து..
"அது.. இன்னைக்கு.. நீங்க.. உப்.. ஓகே.. ஓகே.. கூல்.. இன்னைக்கு கம்பு சுத்தி சண்ட போட்டிங்கள்ள அது சூப்பரா இருந்துச்சு.. உங்க மூவ்ஸ் எல்லாமே செம.. மேன்லியா.. பாக்க டெரிபிக்கா இருந்தது.. ஹாங்.. சொல்லனும்னு தோனுச்சு.. பை.. ஸ்வீட் டிரீம்ஸ்.." என்று விட்டு ஓடிச்சென்றாள் ஹரிணி..
தரன் புன்னகையுடன் " குட் நைட்.. மை.. ஸ்வீட் பம்கின்.." என்றான் இதழசையாது..
பம்கின்னா.. அப்ப ஹரிணி தா ஃபஸ்ட் எபில வந்த பம்கின்னா..
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..