முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 18

அத்தியாயம்: 18



காலை வேக வேகமாக சாப்பிட்டு விட்டு புறப்பட தயாரானான் கௌதம் ஒருவித குதுகலத்துடன்.. தங்கைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு செல்ல வேண்டும் அல்லவா.. அதான்..


மௌனமாக, கிளம்பும் அவனையே இமை மூடாது பார்த்துக் கொண்டே இருந்தாள் ஹரிணி.. முகத்தில் சின்ன கலக்கம்..


"ஏன்டி.. எங்கண்ணன சைட் அடிச்சுட்டு இருக்க.." பவியின் கேள்விக்கு முறைப்பை பதிலாகத் தந்தவள் எதுவும் பேசவில்லை..


" இங்க பாருண்ணா இவளுக்கு என்னமோ ஆச்சு.." 


" ஹாய்.. டார்லிங்.. ஒய் கண்ணுல சோகம்.. மீ அவுட் சைட் கோயிங்.. யு கம் வித் மீ.." கௌதம்..


" ஒழுங்கா பேசு.. இல்லைன்னா அடிவாங்கிச் சாவ.." கடுப்புடன் ஹரிணி.


" ஓகே.. நோ க்யூமர் சென்ஸ்.. ஏ சோகமா இருக்க.. என்னாச்சு.." கௌதம்..


" இன்னைக்கு நீ போகனுமா.." ஹரிணி..


" ஏன்டா.. " கௌதம்.. 


"எனக்கு ஏதோ தப்பாக நடக்கப் போற மாறி தோனுது.. காலைல எழுந்ததுல இருந்து ஹாட் பீட் ஜாஸ்தியா இருக்கு.. எங்கூட இன்னைக்கு முழுக்க இருக்க முடியுமா.." கடைசி வாக்கியத்தை சொல்லாமலேயே மென்று விழுங்கினாள்.. ஏனெனில் லதாவும் , சுதாவும் தயாராகி வந்திருந்தனர்..


" ண்ணா ஜஸ்கிரீம் வாங்கித் தாறேன்னு சொல்லிருக்கீங்க.. மறந்துடாதிங்க.." லதா


" வீட்ல மத்தவங்க வர டைம் ஆகும்.. சோ நாம தளபதி படத்துக்கு போய்டு வருவோம்.." சுதா 


" எங்கள ஷாப்பிங் கூட்டீட்டு போண்ணா.."   


" அப்பறம் ....." 


" என்ன லிஸ்ட் போட்டுட்டே போறிங்க.. நீங்க போறது ஸ்கூல்ல அட்மிஷன் போட.. அந்த வேலய மட்டும் பாத்துட்டு வீட்டுக்கு வாங்க.. புரியுதா.." அதட்டினார் கவியரசன்..


" சின்ன பிள்ளைங்க தான சித்தப்பு.. அண்ணன்ட்ட கிட்ட கேக்காம வேற யாருட்ட கேக்குங்க.." என்றவன்.. 'எல்லாத்தையும் முடிச்சிட்டு தா வீடு திரும்புவோம்..' என கண்ணைக் காட்ட உற்சாகம் அடைந்தனர் இருவரும்..


" அதுகளுக்கு வேற வேல இல்ல.. நீ ஏம்மா இப்படி உக்காந்திருக்க.. போய் கிளம்பு தேரோட்டத்துக்கு.. சரியா ஒம்போது மணிக்கு கோயில்ல இருக்கனும்.." கவியரசன்.


" இதோ கிளம்பிட்டேன் அங்கிள்.. " எழுந்து சென்றவள் செல்லும் முன்..


 " சீக்கிரம் வந்துடு கௌதம்.." என்றாள்.. குரலில் சிறு வேறுபாடு இருந்தது.. 


அவள் கூறிய தோரணையும் நடையில் தெரிந்த சோர்வும் அவனை யோசிக்கச் செய்தது.. பவியிடமும் , நங்கையிடமும் சென்று அவளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்‌ படியும் , அவளை விட்டு எங்கும் நகரக்கூடாது எனவும் கட்டளை இடும் குரலில் கூறிச் சென்றான்.. 


அவளிடம் மட்டும் ஏன் இந்த அக்கறை என்ற கேள்வி எழுந்த போதும் நங்கை மறுக்கவில்லை.. சரி என்றனர்.. இதோ புறப்பட்டுச் சென்றான் தன் தோழிக்கு நடக்கவிருப்பதை அறியாமல்..


வண்ண வண்ண மலர்களாலும் , காய் , கனிகளாலும் அலங்கரிக்க பட்டிருந்த தேரில் ஊர் ஊராக பவனி வந்துகொண்டிருந்தார் அம்மன்.. தேர் தண்டபாணி ஊரை நெருங்கியதும் , கையில் பூஜை சாமான்களுடன் ரெடியாக இருந்தனர் ஊர் மக்கள்...


" எம்மா சின்ன மருமகளே சோலையில பொங்கவக்க எல்லாத்தையும் எடுத்து வச்சியா.. ஏம்மா நீயும் உந் தங்கச்சியும் சேந்து பூவெல்லாம் கட்டி எடுத்து வச்சுட்டியா.. எங்கடி மூத்த மருமகள்கல காணும்.." நச்சியம்மாள் வீட்டின் மூத்த மனிதராக பரபரப்புடன் காணப்பட்டார்...


" நா இங்கருக்கேன் த்த.. எல்லாம் ரெடி.. தேரு வரவும் அத வடம் பிடிச்சுக்கிட்டே கோயிலுக்கு போக வேண்டியதுதா பாக்கி.." மலர்..


" அக்கா நம்ம இந்து எங்கக்கா..." கிருபா


" அதுக மூனும் அதோ ஜோடி போட்டுட்டு சுத்துதுங்க.. பிரகாஷ்கு ஃபோன் பண்ணி தேர் எங்க வந்துட்டு இருக்குன்னு கேளு.." நங்கை தன் தம்பி மனைவியிடம்..


" இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல வந்துருமாத்த.. இப்பத்தா வருண் அப்பா ஃபோன் பண்ணாங்க.." அபி 


" எங்கம்மா உந் தங்கச்சிய.." கிருபா .


" அவளுக்கு தல வலியாம்.. வீட்டுலேயே இருந்துக்கிறேன்னு சொன்னாத்த.." அபி..


" தேடத்தசை இருந்தும் அனுபவிக்க அதிர்ஷ்டம் இல்லை.. திருவிழாவுக்குன்னு வந்துட்டு தேர பாக்க அதுக்கு குடுத்து வைக்கல.. என்ன பிள்ளையோ.. ஏய் கழுதைகளா சிக்கிரம் வாங்க..  " நாச்சியம்மாள் கத்தி பேத்திகளை அழைக்க... 


'இந்த கெழவி வாயத் தொரந்தா மூடாதே.. எப்படி கத்துது பாரு.. ' என மனதிற்குள் தன் பாட்டியை  வசைபாடியபடி வந்தார்கள் பேத்திகள்..


ஹரிணியின் மனம் மட்டும் நிலையில்லாது கலங்கியது.. காரணம் சற்று முன் ஒரு வயதானப் பாட்டி அவளை பார்த்து,  " எங்க ஊரு குடியக் கெடுக்க‌ வந்த **** சிறுக்கி.. எங்க ஊரு நிம்மதியா இருக்குறது பொறாக்கலையோ.. ***** மகளே.. நல்லா இருப்பியா நீயெல்லாம்.. நாசமாத்தா போவ.‌‌..‌‌" என நெட்டித்தள்ளி வசை பாடினார்.. எதற்கென்று தெரியவில்லை ஆயினும் அவரின் சுடு சொற்கள் ‌‌கவலையை தந்தது..


தேரும் வந்தது.. அனைவரும் பயபக்தியுடன் சத்தமிட்டுக் கொண்டே அதை வரவேற்று வடம் பிடித்து இழுக்க சென்றனர்.. குழப்பத்துடன் வந்தவளை தேரை வடம் பிடித்து இழுக்கச் சொல்லி நங்கை  அழைக்க, அருகில் சென்று கயிற்றில் கை வைக்கும் முன் சிலரின் குரல் அவளைத் தடுத்தது..


அங்கு நாச்சியம்மாளின் வயதை ஒத்த முதியவரும் அவரின் குடும்பமும் அவர்களுக்குப் பின்னால் அவர்களின் ஊர் மக்கள் சிலரும் இருந்தனர்.. 


" எந்த ஊருலயும் நடக்காத அநியாயமாவுல இருக்கு இங்க.. இவள ஊருக்குள்ள விட்டதே தப்பு இதுல இந்த மகராசிய தேர வேற இழுக்கச் செல்லுறீங்க.. எங்கூருக்கு பிடிச்ச தரித்திரம் மத்தவூருக்கும் பிடிக்கவா.. ஏண்டி நாச்சியம்ம ஒனக்கு சூடு , சொறன மானம் இதுல ஏதாவது ஒன்னு இருந்திருந்தா அவள வீட்டுக்குள்ளயாவது விட்டுருப்பியா.. ஓ மாமங்காரன் செத்ததையும் , சொந்தக் காரப் பயலுக செத்ததையும் மறந்துட்டியா அதுக்குள்ள.. இப்ப நீ இவள ஊர விட்டு தொரத்தல.. மறுபடியும் கலவரமாய்புடும் ஜாக்கிரத.." ராமாயி பாட்டி..


" என்னாடி மெரட்டுறியா.. அந்தப் புள்ள ஏன்டி போனும்.. அவா எம் பேத்தி.. நீ சொன்னது மட்டும் நடந்தா கெட்ட குடியே கெடும்; பட்ட காலிலே படும் டி யாத்தா.. மறுபடியும் கலவரத்த ஆரம்பிக்காத அப்றம் உன்னோட வம்சமே இருக்காதுடி.." நாச்சியம்மாள் .


" ஆத்தா நீ சும்மா இரு இவளால தா எந்த தம்பி ஆஸ்பத்திரில கெடக்கான்.. அசலூர்காரியா இருந்துட்டு எந்த தம்பி அசந்த நேரம் பாத்து ஆள் விட்டு அடிச்சிருக்கா.. கோயில்ல இவள பாத்தப்பவே சந்தேகமா இருந்தது.. இப்ப தா தெரிஞ்சது யாரோட மவான்னு.. ஒழுக்கமில்லாதவ வாரிசு எப்படி ஆத்தா தேர வடம் பிடிக்கலாம்.. ஊருக்கு சாபம் வந்து சேரும்.. " விக்ரம்..


" அடியே.. உந் தம்பி என்னாத்துக்கு  ஆஸ்பத்திரில கெடக்கான்னு ஊருக்கே தெரியும்.. யாரப் பத்தி யார்ட்ட பேசுற.. ஏதே உழச்சி உழச்சி கலச்ச உத்தனமன தூக்கி போட்டு பந்தாடுன மாறி வந்துட்டான் பெருசா பேசுற.." பிரகாஷ்


" டேய் உன்னா..." அடிக்கப் போக , தரன், நாதன்  மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என்வென்க.. அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது..


அதாவது அவர்கள் கூறுவது என்னவென்றால் , ராமாயி பாட்டியின்   கணவர் இறந்ததற்கும் அவர்களின் ஊரில் தற்போது வரை இருக்கும்  பஞ்சத்திற்கு காரணமான குடும்பத்திலிருந்து  ஹரிணி வந்துள்ளதால்  உடனடியாக ஊரைவிட்டு அடித்துத் துரத்த வேண்டும் என்பதாகும்.. சும்மா இல்லை மொட்டை அடித்து கழுதை மேல் ஏற்றி ஊர் எல்லையில் விட வேண்டும்.. இல்லயேல் ஊரைவிட்டு வெளியே அனுப்பாது சிறை வைக்கப் போகதாக சுற்றி வளைத்து நின்று பெருங்குரலில் கூச்சலிட..


அப்படி இப்படி என்று பேசியவர்கள்  கடைசியாக ஹரிணியை விக்ரமிற்கு மணம் முடித்துத் தந்தால் உயிருடன் விடுவதாகவும் , போனால் போகிறத தென்று அவளை ஊரில் இருக்க அனுமதியும் தருவதாக பேசினர்....


பேச்சு செல்லும் திசையைக் கண்டு பிரகாஷ் உடனடியாக கௌதமிற்கு தகவல் அனுப்பினான்.. முடிவெடுத்து விட்ட உறுதியுடன் வேல்ராஜிடம் வீட்டில் பூஜையறையில் தண்டபாணி ஐயா படத்திற்கு கீழே உள்ள பையை எடுத்து வரச் சென்றார் நாச்சியம்மாள்..


கண்முன்னே நடப்பவை அனைத்தையும் மெகா சீரியலில் வரும் காட்சி என வியந்து பார்த்துக் கொண்டு இருந்தவள் விக்ரமுடன் திருமணம் என்ற பேச்சு வரவும் தெளிந்தாள்.. ஏதோ சதி தன்னைச் சுற்றி நடப்பது போல்  தோன்றியது ஹரிணிக்கு.. 


'அப்படி என்ன தா பண்ணீடப் போறாங்கன்னு பாப்போம்.. என்ன மீறி எவெ கல்யாணம் பண்ணி வைக்கிறானு.. ' என கூலாகவே நின்றாள்..


வேல்ராஜ் பையைத் தந்த உடன் ஹரிணியை இழுத்து ஊரின் முன்னே நிறுத்தியவர்.. " உன்னைய எம் பேத்தியா நெனச்சு கேக்குறேன் நீ கன்னாலம் கட்டிக்கிறியா.." என்றார் நாச்சியம்மாள்.. 


இப்படி ஒரு வார்த்தையை நாச்சியம்மாள் கூறுவார் என்று எதிர்பார்க்க ஹரிணி திருதிருவென முழித்தாள்.. அவர் மீண்டும் அதையே கேட்க.. ஏதோ மந்திரத்தால் கட்டுப்பட்டது போல் சரி என தலையசைத்தாள்..


விக்ரமுக்கும் , ராமாயி பாட்டிக்கும் மிக்க சந்தோஷம்.. திருவிழாவில் அழகோவியாமாய் திரிந்த அவளின் திமிரையும் விஜயை அடித்த கௌதமின் கொட்டத்தையும் அடக்கி வைக்க இந்த திருமணம் நல்ல வாய்ப்பு என விக்ரமிற்கும், அவளின் குடும்பம் செய்ததற்கு இவளை பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் என ராமாயி பாட்டிக்கும் பேரானந்தம்.. ஆனால் ஒரு நாழிகை கூட நீடிக்கவில்லை.. ஏனெனில் நாச்சியம்மாள் குங்குமத்தை எடுத்து ரிஷி தரனின் கையில் கொடுத்து ஹரிணியின் நெற்றியில் வைக்கச் சொல்லியதால்..


" எய்யா.. இந்த அப்பத்தா சொன்னா நீ கேப்பேல்ல.. உன்னோட தாத்தா செஞ்ச தப்ப நீ சரி பண்ணிடுய்யா.. இத அந்த புள்ள நெத்தில வச்சுவிடுய்யா.. அது தாய்யா உனக்கு பொண்டாட்டி.‌. இந்தாய்யா.. " என அம்மனின் குங்குமத்தை நீட்டினார் நாச்சியம்மாள்.. 


குங்குமத்தை எடுத்தவன் நாதன் , மலர் என வரிசையாக தன் குடும்பத்தினரைப் பார்த்தான்.. அவர்கள் சம்மதமாக தலையசத்தவுடன் ஹரிணியின் முகத்தினைக் கண்டான்.. முகத்தில் குழப்பரேகைகள் இருந்தபோதிலும் கண்கள் பயமற்ற ஜோதியாய் மின்னியது.. இதழ்களில் எப்போதும் போல் தோன்றும் மர்மப் புன்னகையுடனே அவளின் பிறை 

நெற்றியில் திலகமிட்டான் ரிஷி தரன்..


" ஊர் பெரியவங்க எல்லார்கிட்டையும் ஒன்னு சொல்லிக்கிறோம்.. பத்தரை மணில இருந்து பன்னெண்டு மணிவர நல்ல நேரம் இருக்குறதுனால சேனையம்மன் கோயில்ல வச்சு நடக்கப் போற எம் மகன் கல்யாணத்துக்கு அத்தன பேரும் வரனும்னும்.. எம் மகன வந்து எல்லாரும் ஆசிர்வாதம் பண்ணனும்னும் வேண்டிக்கிறேன்.." நாதன் என ஊர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்..


" ஏய் முத்து, வீரா, எங்கடா இருக்கிங்க.. போய் தேர் கோயில்குள்ள வர்ரதுக்கு முன்னாடி பந்தல போட்டு மணமேடைய ரெடி பண்ணுங்க.. பூ மாலை வாங்கியா..." என செய்ய வேண்டியதை அடுக்கினார் நாச்சியம்மாள்..


விக்ரமாலும் ராமாயி பாட்டியாலும் எதுவும் செய்ய இயலாத சூழ்நிலை . அவர்கள் நினைத்து என்ன..‌‌ நடந்தது என்ன.. இப்போது அவள் ரெட்டியின் பேத்தி மட்டுமல்ல, தண்டபாணி ஐயாவின் வீட்டு மருமகள்.. அனைத்திற்கும் மேல் அவள் ரிஷி தரனின் மனைவி.. இத்தனை நடந்த பின் அவரிடமும் மற்றவர்களிடமும் அவர்களின் ஜாம்பம் இனி பழிக்காது..


மலர் புதிதாக முளைத்து தம்பதியினரின் ஆடையில் திருப்தி அடைந்தார்.. மயில் வண்ண நிற பட்டுப் புடவையில் ஹரிணியும் , வெள்ளை நிற பட்டு வேட்டி சட்டையுடன் இருந்த ரிஷி தரனும் சரியானப் பொருத்தமாகவே அனைவரின் கண்ணுக்கும் தெரிந்தனர்.. 


எவ்வளவு வேகமாக வந்த போதிலும் கௌதம் வந்து சேர அரைமணி நேரத்திற்கு மேல் ஆனது.. தங்கைகளையும் இழுத்துக் கொண்டு வர வேண்டும் அல்லவா.. அவனுக்கு ஹரிணிக்கு திருமணம் என்று மட்டுமே சொல்லப் பட்டது , யாருடன் என்று தெரிவிக்கப்படவில்லை.. பிரகாஷ் முழுதாக தகவல் கூறாத நிலையில் தன் ஆயுளை இழந்தது கௌதமின் கைபேசி..


ஹரிணியின் கண்கள் கௌதமைக் காண ஆவலாக இருந்தது.. நொடிக்கு ஒருமுறை என கூட்டத்தை அலசியபடியே நடந்தாள் கோயிலை நோக்கி தேரின் பின்னால்.. மகிழ்ச்சியுடன் அனைவரும் கோயிலை நோக்கிச் சென்றனர்..


பார்வையை வேறு எங்கே வைத்திருக்க.. தடுக்கி விழாமல் இருக்கும் பொறுப்பை அவளை மணக்கப்போகும் மணாளன் ஏற்றிருந்தான்.. பாவையின் பூக்கரங்கள் ஆடவனின் வலிய கரங்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்ததன் மூலம். .


கூட்டத்தை முந்தியடித்துக் கொண்டு வந்தவன் கண்டது மணப்பந்தலில் அமர்ந்திருந்த ஹரிணியையும் ரிஷிதரனையும் தான்.. அதிர்ச்சி என்ற போதும் சமாளித்து நின்றான் கௌதம்..  


அத்தனை நேரம் குழம்பிய முகத்துடன் இருந்த மங்கையின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி கௌதமின் வரவை தரனுக்கு கூறியது.. தரன் நிமிர்ந்து விழி உயர்த்தி நேருக்கு நேராக கௌதமை கண்டு ஒருவித மந்திர‌ புன்னகையுடன் மங்கள நாணை கௌதமின் தோழியின் செங்கழுத்தில் சூட்டினான்.. அதை கண்ட கௌதமின் முகத்தில் எதையோ இழந்த வெறுமை குடிவந்தது..


இப்போது அவள் ஹரிணி வசுதேவ் இல்லை ஹரிணி ரிஷி தரன்..


ரிஷி தரனின் மந்திர புன்னகைக்கு என்ன அர்த்தம்.. கௌதமின் வெறுமைக்கு என்ன அர்த்தம்..  


 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  

அன்பே 17

அன்பே 19


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...