முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 19


 

அத்தியாயம்: 19


தன் முன் கெட்டிக்கிடந்த தீவனத்தை கொண்டையை ஆட்டி ஆட்டி கொத்திக் கொண்டிருந்தது கோழிகள்..


கோழியைப் போலவே மண்டையை ஆட்டிக் கொண்டு இருந்தவளின் முன்னால் கோபமாக நின்றான் கௌதம்.. அவள் அவனின் கோபம் அறிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்தாள்.. அது நியாயமான கோபம் தானே எனவே அதை அவன் வெளிக்காட்டுவதில் தவறில்லை அதை ஃபேஸ் பண்ண தயாராகத் தான் இருந்தாள்..


" இந்த அளவு போதுமா இல்ல இன்னும் கொஞ்சம் போடனுமா.." 


'என்ன.. ' என அவள் முழிக்க ....


" இல்ல கோழிக்கு கேட்டேன்.." என கம்பை கைகளில் அள்ளினான்..


" போதும் போதும்..‌ ரொம்ப சாப்ட்ட டைஜிஸ்ட் ஆகாது.. பாவம்.. அதுக்கு சின்ன வயிறு தான இருக்கு.. ஒரு கை போதும்.." ஹரிணி என்க கடுப்பானவன் கையில் இருந்ததை அவளின் மேல் கோபமாக விசியவன்..


" எதுலையும் உனக்கு விளையாட்டு தானா ஹரிணி.. " என்ற போது இவன் எதை சொல்கிறான் என்ற குழம்பம் மேலோங்க.. 


'இரு நா வரிசையா வர்றேன்.. ' என்பது போல் ராமாயி கிழவியும் விக்ரமும் சேர்ந்து செய்த கலவரத்தை பற்றி ஆரம்பித்தவன் தரனுடன் நடந்த கல்யாணம் வரை திட்டி தீர்த்து விட்டான்.. அவனுக்கு தரனுடன் நடந்த திருமணத்தை விட விக்ரமும் ந்ந கிழவியும் ஊர் முன் தன் தோழியை அவமானப்படுத்தி பேசியது தான அதீத கோபம் வர காரணம்..


"ஏ உனக்கு வாயில்ல.. இல்ல பேசத்தா உனக்கு சொல்லித் தரனுமா.. அந்த நாயையும் கெழவியையும் பேசவிட்டு வேடிக்கப் பாத்துட்டு வந்திருக்க.. நடு ஊர்ல வச்சு அசிங்கப் படுத்திருக்கியான்.. சும்மா எப்படி விட்ட நீ அவன.." என கோபமாக கத்தினான்..


" டேய் நீ என்னடா எண்ணெய்ல போட்ட கடுகாட்டம் படபடங்கிற‌.. சூழ்நில அந்தமாறி ஆகிடுச்சு விடுவியாம்.. யாராலயும் எதுவும் பேச முடியல.. பேசவும் அவனுங்க விடல.. அதை புரிஞ்சிக்காம பிள்ளயப் போய் திட்டீட்டிருக்க.. கேனப்பயளே.." நாச்சியம்மாள்.. 


ரிஷி தரனின் மனைவியாக கோயிலில் இருந்து வீடு வந்தவளை விடாது முறைத்துக் கொண்டே வந்தான் கௌதம்.. மலர் சிலபல சடங்குகளை செய்து மணமக்களை உள்ளே அழைத்து செல்ல.. கௌதம் அவளை பின்கட்டில் இழுத்து வந்து திட்டத் தொடங்கினான்.. இன்னும் விடவில்லை..‌


" என்ன சூழ்நில கெழவி.. அப்படி என்ன சூழ்நிலன்னு கேக்குறேன்.. உன்ன யாரு தாலிய எடுத்து உம்பேர கைல குடுக்கச் சொன்னா.. உனக்கு எதுக்கு இந்த கல்யாண தரகு வேல.. " என உச்ச சொரத்தில் கத்த.. 


" அது வந்துடா.." என இழுக்க .


" கிராணி ஃப்ளாஷ் பேக்கா.. வீட்டுக்குள்ள போய் ஆன்டி ச்ச பூவத்த கையால் காபி குடிச்சுகிட்டே பேசலாமே.. என்ன நா சொல்லுறது.. ஹாங்.. பூவத்த எனக்கு ரெண்டு காபி.." ஹரிணி ராகம் பாடினாள். 


" இங்க ஒருத்தே கொதிச்சி போய் நிக்கிறேன்.. என்ன கூல் பண்ணாம சூட காஃபி கேக்குற பாறேன்.. ஆமா எங்க பெரிம்மாவப் பாத்தா உனக்கு எப்படி தெரியுது.. உனக்கு நேரத்துக்கு காபி போட்டுக் குடுக்க அவங்க என்ன ஹோட்டலா நடத்துறாங்க‌.. ஆர்டர் கெடுத்துட்டு உக்காந்திருக்க.." கௌதம் கடுப்பாக .


" சரி.. சரி.. பொங்காத வா.. உனக்கு மட்டும் கூலா வாங்கித்தாறேன்.. கோல்காபியா.." இழுத்து வந்தாள் கூடத்திற்கு தலையில் இருந்த தூசியை தட்டிவிட்டவாறே..


நடுக் கூடத்தில் நாச்சியம்மாள் அமர்ந்திருக்க சுற்றி குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்..


நாச்சியம்மாள் " அதாவது ரொம்ப காலத்துக்கு முன்னாடி.."


" ஏய் கெழவி.. ஆல் ரெடி நா கடுப்புல இருக்கேன்.. நீ வேற ரொம்ப காலம்.. கொஞ்ச காலம்.. அப்படீன்னு ஜவ்வா இழுத்த காதுல கடக்குற தொங்கட்டாண பிடிச்சி இழுத்து விட்டுடுவேன் பாத்துக்க.. சீக்கிரம் சொல்லு.." கௌதம்..


" அதுக்கு முன்னாடி என்னோட காபி வரலயே.. " என்றவளை மற்றவர்கள் முறைக்க கண்டுகொள்ளாமல் மலர் கொடுத்ததை ரசித்து குடிக்கலானாள் ஹரிணி..


" பேச்சியம்மா.. அதா இவளோட பாட்டி.. உந் தாத்தா அதா எம்புருஷெ அவரோட அத்த மக.. மெறப் பொண்ணு தா பேச்சி.. சின்ன வயசுல அப்பனையும் ஆத்தாலையும் இழந்துட்டு அநாதையா நின்னவள.. தாய்க்கு தாயா இருந்து பாத்தவரு அவளோட தாய்மாமா என்னோட மாமனாரு.. அவளுக்கு படிப்புன்னா உசுரு,. நர்ஸ்ஸா ஆகப் போறேன்னு சொன்னா.. எம்மாமாவும் படிக்க வச்சாக.. நம்மூர்லேயே பெரியாஸ்பத்ரில வேல கெடச்சி போய்டு இருந்தா..


சோமசுந்தரம் உந் தாத்தாவோட சிநேகிதன்.. அவனுக்கு தா பேச்சிய பேசி முடிச்சாங்க.. எல்லா நல்லாத்தா போய்டு இருந்துச்சு.. கல்யாணத்துக்கு மெத நாள் அவ வர ரொம்ப நேரம் ஆச்சா.. ஊர்க்காரங்க வேற மாறி பேச ஆரம்பிச்சாங்க.. ஒருவழியாக ராத்திரி ஒம்போது மணிக்குத்தா வந்தா கார்ல.. கார் ஓட்டீட்டு வந்தது கோவிந்தரெட்டி.. ஆந்திராகாரரு.. ஆஸ்பத்திரில பெரிய டாக்டரம்மாவோட பையன்..


படுபாவிங்க.. அந்த மனுசன மட்டும் தா பாத்தாங்க.. பின்னாடி இருந்த டாக்டரம்மாவ யாருமே பாக்கல.. இறக்கி விட்டுடு போய்டாங்க அவிங்க.. ஆனா பேச்சிய ஊரே தப்பா பேசுச்சு..‌ வலியோட வந்த பிள்ளத்தாச்சி பொண்ணுக்கு யாரும் இல்லாததுனால  இவா உதவியா கடைசி வர இருந்திருக்கா.. அதா வர நேரமாச்சுன்னு சொன்னா.. நம்பத்தா யாருமில்ல.. கல்யாணத்த நிறுத்திட்டான் அந்த சோமசுந்தரம்.. மானம் போச்சின்னு ஒரு வாரம் வீட்டுக்குள்ளேயே அடச்சி வச்சு அடிச்சின்னு.. ஹிம்.. அவ பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல..


பெரிய டாக்டரம்மா வந்து பாத்துட்டு ஊர்காரனுங்க கிட்ட பேசுனாங்க.. ஒரு பயலும் நம்பல.. அவளோட நடத்தைய பத்தி பேசி அதுக்கு அவுக உடந்தன்னு பேசி துரத்தி விட்டானுங்க.. 

வீட்டுக்கு வந்து பேச்சிய பாத்த அந்தம்மா 'இதெல்லா வேண்டாம்மா.. நீ எங்கூட வந்திடு..' ன்னு கூப்படாங்க.. கிடைச்சது விடுதலன்னு கிளம்பிட்டா.. நாந்தா அனுப்பி வச்சேன்.. அவள எப்படி அனுப்பலாம்னு சோமசுந்தரம் வந்து கலாட்டா பண்ண.. எம்புருஷெ எனக்கு ஆதரவாக நிக்க.. குடும்ப பிரச்சன ஊர் பிரச்சனையா‌ மாறி கலவரத்துல முடிஞ்சது.." என பெரு மூச்சு விட..


" இப்ப எதுக்கு பிரேக் விட்ட கன்டின்யூ பண்ண வேண்டிதான.." கௌதம்..


" ண்ணே கெழவிக்கு மூச்சு வாங்குதுண்ணே அதா.. இந்தா அப்பத்தா தண்ணீ குடிச்சுட்டு தெம்பா சொல்லு..‌" பிரகாஷ்..


"போங்கடா கேனப்பயளுகலா.." எழுந்து செல்ல முயன்ற நாச்சியம்மாளை நிறுத்தி வைத்தனர் பேரன்கள்..


" இந்தா கெழவி.. உனக்கென்ன வயசுப்பிள்ளைன்னு நெனப்பா..‌ புசுக்குபுசுக்குன்னு கோய்ச்சுட்டு போறா.. மீதிய சொல்ல நாள் நட்சத்திரம் பாக்கனுமா.. ஒழுங்கா சொல்லிட்டு கெளம்பு." கௌதம் .


" அப்பத்தா தேரோட்டத்துல அவிங்க பேசுனத பாத்தா இன்னும் பெருசா ஏதோ இருக்குது போலயே.. சீக்கிரம் சொல்லு அப்பத்தா.." பவி ‌.


" இருங்க டி.. நா தண்ணி குடிக்குற கேப்ல பேசிக்கிட்டே போறிங்க.. எங்க விட்டேன்.." என்றவருக்கு.. 


"கலவரத்துல.. " என கோரஸ்ஸாக கத்த..


"ஆ.. அந்த கலவரத்துல ஒன்னு ரெண்டு பேர் செத்துட்டாங்க.. ரெண்டு ஊரையும் கலெக்டர் வந்து சமாதானப் படுத்துனாக.. ஆனா அவிங்க வெறி அடங்கவே இல்ல போல.. ஏழெட்டு வருசம் கழிச்சு இங்க வந்தா பேச்சி.. கைலயும் வயித்துலயும் புள்ள.. அவா ரெட்டியையே கட்டிக்கிட்டா போலா.." 


ஹரிணியின் கன்னத்தை தடவி " நீ அப்படியே  உங்கம்மா மாறியே அழகு.. வசுந்தரா.. ஒரே ஒருக்க தூரத்துலதே பாத்தேன்.. எங்க கண்ணுக்குள்ளேயே இருக்கு அந்த பிஞ்சு முகம்.. ரெட்டி வியாபாரத்துக்காக இந்த ஊர் பக்கம் வந்திருப்பாரு போல.. ஊருக்கு வெளில இருக்குற அவுகளோட எடத்துல தங்குறதுக்கு ஏற்பாட்டு செஞ்சிருந்தாங்க..  


 வளத்த பாசம்.. எம் மாமானார இழுக்க.. போய்  பாக்க போனாரு.. பேச்சி இந்த பக்கம் வந்தது சோமசுந்தரத்துக்கு தெரியவர.. 'என்ன  வேண்டாம்னு சொன்னவா நல்லா வாழக்கூடாது..' அப்படீன்னு.." பெருமூச்சு விட்டவர்..


" வீட்டோட கொளுத்திட்டான்.. எந்த விதத்துலயும்  தப்பிச்சுட கூடாதுன்னு  சோத்துல விஷத்தையும் வச்சுருக்கான்.. எரியுற வீட்ட அணைக்கப் போய் எம் மாமனாரு உசுரையே விட்டுட்டாரு.. பேச்சிக்கு அப்ப ஏழு மாசம்.. புள்ளத்தாச்சின்னு கூட பாக்கல.. அவ்வளவு வெறி அவிங்களுக்கு.. அந்த தீ ல இவா ஆத்தா வசுந்தரா மட்டும் தா தப்பிச்சது.." கவலையுடன் கண்ணீர் சிந்தினார்.. சிறுவயதில் இருந்து தோழியாக பழகிய பேச்சியின் நினைவானது கண்முன்னே வந்து சென்றது..   


" சும்மா விட்டுருக்க மாட்டாறே ஆந்திராகாரரு.. மாஸ்ஸா எதாவது செஞ்சிருக்கனுமே.. அவிங்க கதறுறத வச்சிப் பாக்கும் போதே தெரியுது.. என்னனு வெரசா சொல்லு அப்பத்தா.." பிரகாஷ்..


" சும்மா சொல்லக்கூடாதுப்பூ.. ரெட்டி  பாக்குறதுக்கே நல்லா கம்பீரமா அந்த காலத்து ஜமீன்தார் கணக்கா இருப்பாரு.. அவர்‌ பேசி நா பாத்ததில்லைன்னாலும்.. ஆள் மிடுக்கா திரியுரத பாத்திருக்கேன்.. இவனுங்க மேல போலீஸ்ல கேஸ் எதுவுமே குடுக்கல.. அதுக்குப் பதிலா சோமசுந்தரத்தோட உசுர மட்டும் வச்சிட்டு மத்த எல்லாத்தையும் செல்லாகாசாக்கிட்டாரு.. தீ வச்ச ஊருக்கார பயலுகளையும் விடல.. அவிங்க ஊரையே தரிசா மாத்திட்டாரு.. எங்க எப்படி யாரும் பிடிச்சாருன்லாம் தெரியல.. அவிங்க ஊருக்கு தண்ணீ தர்ர டேமையே வெலைக்கு வாங்கிட்டாருன்னா பாத்துக்கையேன்.. காசு குடுத்து கூட தண்ணி வாங்க முடியாத அளவுக்கு சுத்தி இருக்குற அத்தன இடத்தையும் வாங்கி இவிங்கள தனி தீவுல அடச்சமாறி பண்ணீட்டாரு.. மழன்னு ஒன்னு பெஞ்சாத்தா தண்ணீ.. அதுனால தா எப்படியாவது ரெட்டிய குடும்பத்த பழிவாங்கனும்னு பிரச்சன பண்ணாங்க.. ஆனா முடியல.." நாச்சியம்மாள் தான் அறிந்ததை கூறினார்.


" ஓகே ஃப்ளாஷ் பேக் ஓவர்.. உடனே கூட்டத்த கலங்க.." பிரகாஷ் .


" அதெப்படி ஹரிணி பொறந்தது ஆந்திரால படிச்சது சென்னைல வாழ்ந்துட்டு இருக்குறது மும்பைல அப்படி இருக்குறப்போ இவா தா ரெட்டியோட பேத்தின்னு அந்த காட்டானுங்களுக்கு எப்படி தெரிஞ்சதாம்..." கௌதம் வினவ.. அவனின் கேள்விக்கு பதில் தான் கிடைக்கவில்லை..


நடந்த திருமணத்தில் யாரும் எந்த வித சங்கடமும் இல்ல.. சொல்லப்போனால் அனைவருக்கும் அதில் சந்தோஷம் தான்.. இல்லன்னா அந்த இடத்துக்கு காவ்யா வந்திருப்பாளே.. திருமணம் முடிந்த கையோடு அவளை பார்சல் கட்டி அனுப்பிய பிறகே நல்லவேளை என்று நிம்மதி பெருமூச்சை விட்டனர்..  


குடும்பத்தினர் முகத்தில் சந்தோஷ ரேகை இங்கு கௌதம் முகத்தில் மட்டும் சந்தேக ரேகை.. 


‘எப்படி இது நடந்ததிருக்கும்.. ஏதோ சதி நடந்திருக்கோமோ.. என்னவா இருக்கும்..’ என நடந்த திருமணத்தை ஏற்க முடியாது தவித்தான் கௌதம்.. 


" தாத்தா தப்பு பண்ணீட்டாரோ.. இது ரொம்ப பெரிய தண்டன இல்லயா.." ஹரிணி இரவில் நிலாவை பார்த்துக் கொண்டே கௌதமிடன் கேட்டாள் சிந்தனையோடு..


" அவிங்க பண்ணுனதும் தப்புதான..  அதுக்கு அவர் செஞ்சது சரிதா.." கௌதம்..


" எதுக்கும் டைம்ன்னு  ஒன்னு இருக்குள்ள.. அதுமட்டுமில்லாம ஒருசிலர் பண்ணுனதுக்கு ஊரையே தண்டிச்சது தப்பு தான.. நிச்சயம் தாத்தா இதுக்கு ஒரு எண்டு வச்சிருப்பாரு.. அது என்னன்னு ஊருக்கு போனதும் விசாரிக்கனும்.." 


" ம்ச்.. அதவிடு உனக்கு இந்த கல்யாணம் ஓகே வா..." 


" அதா முடிஞ்சு போச்சே.. இப்ப போய் கேக்குற.. “ 


“கல்யாணம் தா முடிஞ்சிருக்கு ஆனா லைஃப் இருக்கு.. சொல்லு அந்த லைஃப்ல அவெ இருக்கானா.. “


“எனக்கு தெரியல.. பட் ஐ அக்செப்ட் திஸ் மேரேஜ்..  அப்புறம் இந்த குடும்பம் இந்த ஊரு எல்லாத்தையும் ரொம்ப பிடிச்சிருக்கு..." 


"இந்த ஊரும் குடும்பமும் வேண்ணா பிடிச்சிருக்கலாம்.. ஆனா முக்கியமான ஆள உனக்கு பிடிச்சிருக்கா அதுக்கு பதில் சொல்லு.. " 


" பிடிச்சிருக்கு.. ஆனா.. " என இழுக்க..


" பிடிக்கல... என்ன வடிவேலு காமெடிய ரீ டெலிகஸ்ட் பண்றியா.. கல்யாணத்துக்கு தேவ லவ் மா.. அதா காதல்.. ஒரு பிடித்தம் க்ரெஸ்.. அது அவென்‌ மேல உனக்கு இருக்கா.. அத சொல்லு.. இல்லைன்னா இப்பவே இத கலட்டி தூக்கி போட்டுட்டு வந்திடு..‌ லேட்லாம் ஆகல.. நா எல்லாரையும் சமாளிச்சிக்கிறேன்..  " என கழுத்தில் கிடந்த தாலியை சுட்டிக்காட்ட..


" ஒரு உண்மைய சொல்லவா.. எனக்கு அவன பிடிக்கும் தா.. ஹண்சம் ஹை..  பட் லவ் பண்ற அளவுக்குலாம் இல்ல.. விட்டுட்டுறதா இருந்தா கிராணி கேக்கும் போது சம்மதிச்சிருக்க மாட்டேன்.. இதுவும் ஏ சம்மதத்த மீறி எங்கழுத்துல ஏறிருக்காது.." என கழுத்தில் கிடந்த மங்கல நாண்ணை காட்டியவள்.. 


"பாக்கலாம்.. காதல் வரும்மா வராதான்னு.. ஐ டோண்ட் நோவ்.. ப்யூச்சர்ல எதுவேண்ணாலும் ஆகலாம்.." என அசால்ட்டாக கூறி எழுந்து சென்றாள்.. 


எதையும் தைரியமாக செய்யும் குணம் கொண்டவள் ஹரிணி அவளால் தரன் விஷயத்தில் முடிவெடுக்க முடியவில்லை.. அவனை பற்றிய எதையும் அறியாமல் அவனின் குடும்பம் பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்தால் தாலியை வாங்கிக் கொண்டு மனைவியாகி விட்டேன் என்று கூறிச் சென்றவள் மனதில் எங்கோ ஒரு மூலையில் தரன் உள்ளான் என்பதை கௌதமால் அறிய முடிந்தது.. அதனால் அவளின் முடிவை சிரமப்பட்டு ஏற்றான் எனினும் இந்த கிராமத்தில் எவ்வாறு அவள் சமாளித்து வாழ்வாள் என்பதை அவனின் யோசனையாக இருந்தது...


கையில் வைத்திருந்த மொபைல் மின்னி மறைய அவனின் கவனம் அங்கு சென்றது.. அது ஒரு குறுந்தகவல் ஹரிணியின் பயோ டேட்டாக்களை தாங்கி வந்திருந்தது அந்த மெசேஜ்.. அனுப்பியவன் யார் என்றால் இதோ அவனே நேரில் வருகிறான்.. 


" என்ன உன்னோட கேள்விக்கு பதில் கிடச்சுருச்சா.." என கேட்டபடி வந்தான் ரிஷி தரன்.. அவனின் நடையில் சற்று இல்லை இல்லை அதிகமாகவே திமிர் காணப்பட்டது....


கோபமாக அவனின் சட்டையை பிடித்து உலுக்கிய கௌதம்.." ஏன்டா.. ஏ.. ஏ இப்படி பண்ண.. ஊர் முன்னாடி இப்படி ஏ டார்லிங்க அசிங்கப்பட வச்சுட்டேல்ல.. உன்ன சும்மா விட மாட்டேன் டா.. நீ யாரு என்னங்கிற உண்ம தெரிஞ்சா.. ஏ ஒரு சின்ன சந்தேகம் உம்மேல வந்தா கூட உன்ன சும்மா விட மாட்டாடா..." என கௌதம் முழங்க.. 


அசால்டாக அவனின் கையை தட்டிவிட்டவன்.. " உண்ம.. அத நீ போய் சொல்ல போறியா.. டார்லிங் டார்லிங் இந்த கல்யாணம் ஒரு ட்ராப்.. உன்ன சிக்க வச்சி கல்யாணம் பண்ணிட்டான் எ அண்ணேன்னு.. " என கேலியாக கூற அவனை ஆவேசமாக முறைத்தான் கௌதம்..


"சந்தேகம்.. அது எப்படி வரும்.. நீ போய் என்ன பத்தி சொல்லி எச்சரிக்க போறியா.. ம்.. அவளப் பத்தி டிட்டெயில்ஸ் கலெக்ட் பண்ணது நான்தா.. அத பாண்டி பிரதர்ஸ்   ஊர்காரங்க கிட்ட போட்டுக்குடுத்ததும் நான் தா.. ஏன்னு தெரியனுமா.. 


உ டார்லிங் இந்த ஊர் விட்டு ரெட்டி பேத்தியா உங்கூட அனுப்புறது எனக்கு பிடிக்கல.. இங்க எங்கூட எனக்கு பக்கத்துல வஞ்சிக்கனும்னு ஒரு ஆச.. அதுக்கு தா இந்த மேரேஜ்.. அது முடிஞ்சு போச்சி.. இப்ப சீ இஸ் மைன்.. ஒன்லி மைன்.. நாட் ஃபார் யூ..." என்றான் அழுத்தமாக..


" எங்கிட்ட இருக்குறத எல்லாத்தையும் எப்பையும் எடுத்துக்கிற மாறி இதையும் செஞ்சிருந்தா லாஸ் உனக்கு தா.. பிகாஸ்.. என்னோட டார்லிங் மனசுல எனக்குன்னு இருக்குற இடத்த எவென் வந்தாலும் அழிக்க முடியாது.. அண்டு ஒன் மோர் திங்.. பழி வாங்கன்னு சொல்லி அவள கல்யாணம் பண்ணிருந்தா அது நடக்காது.. " என மிரட்டி சென்றான் கௌதம்..


" ஓ.. உனக்கு அவ்வளவு முக்கியமா அவ.. அதையும் பாத்திடலாமே.." தரன்..


அவனின் முகத்தில் இருந்த புன்னகை எதையோ சாதித்த ஒன்றை காட்டியது.. கல்யாணங்கிறதே பெரிய சாதன தான.. 


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


அன்பே 18


அன்பே 20


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...