முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 21


 

அத்தியாயம்: 21


நடுநிசி வேளையில் கடலில் தெரிந்த அந்த பௌர்ணமி நிலவின் அழகை காண கண்கள் பல வேண்டும்..


கடற்கரையில் தன் பைக்கை நிறுத்தியவள் அதில் அமர்ந்து கொண்டே பல்லவன் கட்டிய கடற்கரை கோவிலையும் நட்சத்திரத்தையும் ரசிக்களானாள்.. கடற்கரை ஆள் ஆரவாரம் ஏதும் இன்றி நிசப்தமாக காணப்பட்டது.. ஆங்காங்கே ஒன்றிரண்டு பேரின் நடமாட்டமும் இருக்கத்தான் செய்தது.. 


மணி ஒன்றை நெருங்கும் வேளையில் தன் கையில் வைத்திருந்த காகிதத்தில் ஏதோ எழுதினாள்.. பின் அதை ஒரு கண்ணாடி குடுவையில் இட்டவள், நிமிர்ந்து வானத்தைக் கண்டாள்.. நிலவுக்குப் போட்டியாக அங்கு ஏதோ ஒளிர்ந்தபடி வந்தது.. அது சூட்டிங் ஸ்டார்.. முகம் மலர மண்டியிட்டு வேண்டி அந்த குடுவையை கடலில் வீசி எறிந்தவள் திரும்பியும் பாராது தன் பைக்கில் சென்றுவிட்டாள்..


சூட்டிங் ஸ்டாரிடம் தன் ஆசையை வேண்டிக் கொள்ள இங்கு வந்துள்ளாள் போலும்.. செல்லும் அவளை இமைக்காது பார்த்தவன் கடலை நோக்கி நடந்தான்.. அங்கு அவள் வீசிய காகிதம் அலைகளால் கரைக்கு இழுத்துவரப்பட்டிருந்தது.. கைகளால் அதை எடுத்தவன் அந்த காகிதத்தின் வரிகளை படிக்க முயன்றான்.. நீரில் நனைத்து விட்டதல்லவா.. 



அம்மா நீ சென்றதினால்

அனாதை யாகிவிட்டேன்...

விழியுனை இழந்ததினால்

வீதியிலே நின்றுவிட்டேன்...

 நீ இருந்திருந்தால் இந்த

அவல நிலை எனக்கில்லை ...

எந்த நிலையில் இறந்தாயோ

என்னை நீ மறந்தாயே...

பாச மழை பொழிந்தாயோ

பாவி எனை பெற்றாயே...

உன் பிள்ளை எனக்காக -நீ

உயிர் பெற்று வாராயோ....

பிரிந்த உன்னை நினைத்து -என்

மனம் தவிக்கிறதே.....

அனாதை யாகிவிட்டேன்

அன்னை நீ சென்றதினால்....


ஆங்கிலத்தில் இருந்து அந்த கடித்தை மொழி பெயர்த்தவன் அறிந்து கொண்டது அவள் தாயற்றவள் என்று.. பேண்ட்டு பாக்கெட்டில் வைத்திருந்த கைபேசி விடாது வைப்ரேட் ஆவதை உணர்ந்தான்.. சைலென்ட் மோடில் இருந்ததால் சத்தமிடவில்லை அது.. யார் என பார்த்தவன் அட்டென் செய்து காதில் வைக்க..


" மாப்ள எங்க இருக்க நீ.. எத்தனவாட்டி போன் பண்ணுறேன் ஒருக்க கூட எடுக்க மாட்டியா..‌ ட்ரெயின் விஜயவாடா வரப் போகுது நீ என்னடா பண்ற.. ட்ரெயின்ல ஏறிருக்க ஆனா உன்ன சீட்ல காணும்னு சூர்யா சொன்னான்.. என்னடா ஆச்சு எதுவும் பிரச்சனையா.." அவனை பேசவே விடாது கத்திக் கொண்டு இருந்தான் சம்பத்.. ரிஷியின் நெருக்கிய நண்பன்..


" மச்சி என்னக் கொஞ்சம் பேச விடுடா.. நா ட்ரெயின மிஸ் பண்ணிட்டேன் மச்சி.." முடிப்பதற்குள்..


" எப்படி.. ட்ரெயினுக்கு உள்ள ஏறி உக்காந்ததுக்கு அப்றம் டிக்கெட்லாம் செக் பண்ணீட்டு உன்ன மட்டும் டீடிஆர் இறக்கி விட்டுடாறா மாப்ள.." நக்கலாக..


" என்ன பேச விட்டா தா சொல்ல முடியும்..." 


" எனக்கு தெரியாது மாப்ள.. டியூஸ்டே  நமக்கு எக்ஸாம்.. உருளக்கெழங்கு லாரில யாது ஏறி ஊர் வந்து சேரு.." சம்பத் கட் செய்தான்..


சனிக் கிழமை இரவு ரயில் ஏறி ஞாயிறு முழுக்க பயணம் செய்தால் திங்கள் கிழமையில் காலை நேரத்தில் டெல்லி சென்று விடுவது தான் ப்ளான்.. விஜயவாடாவில் சம்பத் அவர்களுடன் சேர்ந்து கொள்வான்.. இது கடைசி வருடம் என்பதால் ரயிலில் நாள் முழுவதும் நண்பர்களுடன் ஜாலியாக பயணம் செய்யலாம் என முடிவு செய்திருந்தனர்.. அனைத்தையும் கெடுத்து விட்டான்.. மணியைக் கண்டவன் டெல்லி செல்லும் வேறு  மார்க்கத்தை ஆராயளானான்..

 

" ஹாய் மச்சி ஏ லேட்.. பாரு உனக்கு முன்னாடியே நா வந்துட்டேன்.. நீ ஏ லேட்டு.. ட்ராபிக் ஜாஸ்தியோ.. " என்றவனை சம்பத் முறைத்தபடி நின்று கொண்டிருக்க.. அவனை கண்டு கொள்ளாமல் தன் உடைமைகளை பிரிக்கலானான் ரிஷி .


" என்னடா மௌன விரதமா.. இல்ல எக்ஸாம்காக வேண்டிக்கிட்டியோன்னு கேட்டேன்.. கண்ணுக்குத் தெரியாத கடவுள் கூட லஞ்சம் கொடுத்தா தா உதவி செய்யுமா..‌ சாமி கூட இப்பெல்லாம் பிஸ்னஸ் பண்ணுதே.. ஆ.." பேச விடாமல் அடித்தான் சம்பத் ..‌‌.


" உனக்கு கடவுள கேலி பண்ணுறதே வேலையாப் போச்சு.. ஏன்டா ட்ரெயின்ல வரல.. இதுதான நமக்கு லாஸ்ட் இயர் இப்ப விட்டா அடுத்து ப்ராஜெக்ட் அது இதுன்னு நாம அழையத்தா நேரமிருக்கும்னு எவ்வளவு ப்ளான் பண்ணிருந்தோம்.. இப்படி எல்லாத்தையும் கெடுத்துட்டியேடா.. பாவி.. நீ படுத்துன படுத்துல நா படிச்ச தெல்லாம் மறந்துட்டேன்.." விடாமல் அடித்தவனை கண்டு சிரிப்புத்தான் வந்தது அவனுக்கு..


"ஏன்டா இப்படி படிப்பு படிப்புன்னு ஆண் குலத்தையே அசிங்கப்படுத்துரீங்க.. நான்லாம் பன்னெண்டு அரியர் வச்சுருக்கேன்.. ஃபீல் பண்றேன்னா.. இல்ல எனக்கு வேலதா கிடைக்காமா போய்டுமா.. எதுவுமே கிடைக்கலைன்னா எங்கப்பங்கூட வயலுல இறங்கீட வேண்டியதுதா.. இருக்குறது ஒரு லைஃப் அத என்ஜாய் பண்ணுவோம்டா.. என்ன மச்சி சரிதான.." சூர்யா அவர்களின் ரூம் மெட்..


" உன்னைய மாறியா நா.. உங்கப்பா உனக்குன்னு கால் ஏக்கர் நிலத்த வாங்கி வச்சுருக்காரு.. இதோ இவனுக்கு சொல்லவே வேண்டாம் எங்க போனாலும் இவனுக்கு இருக்குற திறமைக்கு பொழச்சுக்குவியான்.. நா அப்படியாடா.. இந்த யுனிவர் சிட்டில எனக்கு எடங்கிடைச்சதே என்னோட அதிஷ்டம் டா மாப்ள.. அத நா தப்பா யூஸ் பண்ணிக்க கூடாது.. நல்ல வேலைக்கு போய் கை நெறைய சம்பாதிச்சு என்னோட ராணிம்மாவ நா ராணி மாறி பாத்துக்கணும்.. அதா மாப்ள என்னோட ஆச.."  தன் ஆசை நிறைவேறும் என்ற எதிர்பார்ப்புடன்‌ கூறினான் சம்பத்..


"ஆரம்பிச்சுட்டான்டா.. ராணிம்மா புராணத்த.." கோரஸ்ஸாக..


இருவரையும் முறைத்து பார்த்து விட்டு தன் புக்குடன் வெளியேறினான்.. ராணிம்மா சம்பத்தின் தங்கை.. அவன் பத்து வார்த்தை பேசினால் அதில் இரண்டு நிச்சயம் ராணிம்மா பற்றியதாக  இருக்கும்.. ராணிம்மாவை கேலி செய்தால் சம்பத்திற்கு கோபம் வரும்.. அதை ரசிக்கவே அவனிடம்  வம்பு வளர்ப்பான் ரிஷி.. எதை செய்யாதே என்று சொல்கிறோமோ அதைத் தான் செய்வேன் என அடம்பிடிக்கும் ரகம்.. 


ரிஷியால் தூங்க முடியவில்லை., எஸ்ஸாம் ஹாலில் முழு மனதுடன் எழுதவும் முடியவில்லை.. எப்போதும் அவளைப் பற்றிய நினைவுகளே நிறைந்திருந்தது அவனிடத்தில்.. குழந்தையென பைக் சாவியை பிடிங்கி வைத்துக் கொண்டு அடம்பிடித்த அவளின் செயல் , ரேஸில் ஈடுபட்ட அவளின் துணிவும் , தைரியமும்.. ரோந்து போலீஸ்ஸிடம் மாட்டிக் கொண்ட போது பல பொய்களை நம்பும் அளவிற்கு கூறி தப்பித்த சாதுர்யம் , இவை அனைத்திற்கு மேல்   ரோட்டோரம் வசிக்கும்  மனிதர்களை பார்த்தாலே முகம் சுழிக்கும் சில ஜீவன்கள் மத்தியில் அவர்களுடன் சிரித்து பேசி பழகி அவர்களின் உணவுண்ட அவளின் மேன்மையான குணம் என அனைத்தும் அவன் நெஞ்சில் நீங்காமல் ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது..


ரிஷியின் செயலில் இருந்தே அவன் அவனாக இல்லை என்பதை அறிந்து கொண்டான் சம்பத்.. எனினும் அவனிடம் ஏதும் கேட்க வில்லை.. சொல்லும் விசயமாக இருந்தால் அவனே சொல்லியிருப்பான்.. கட்டாயப்படுத்தி கேட்பது தவறு என்றவன் கேட்டிருந்தாலும் அவன் சொல்லியிருக்க மாட்டான் என்பதே உண்மை..


" ஹாய் கைஸ்.. லீவ்ல எதாவது ஃப்ளான் வச்சுருக்கீங்களா.. அப்படி ஏதும் இல்லைன்னா எங்கூட வாரிங்களா.." சாரா.. மெடிக்கல் காலேஜ் ஸ்டூடெண்ட் இவர்களின் நண்பியும் கூட.‌.


" ஏ.. உனக்கு கல்யாணமா.. யாரந்த இளிச்சவாயன்.." சூரியா


" கொன்னுடுவேன்.. உங்கிட்ட யார்டா பேசுனது.. அரவேக்காடு.. ஆர்டி நீ சொல்லு.. " ( ஆர்டி ரிஷி தரனின் சுருக்கம் சாரா அப்படித்தான் அழைப்பாள் அவனை)..


" ஏ.. எங்க கிட்டல்லாம் கேக்க மாட்டியோ.. அதென்ன அவன்ட்ட பேச்சு.. மாப்ள நீ எங்கையும் போகக்கூடாது.." சம்பத் .


" கோய்சுக்கிட்டியா.. உன்னையும் சேத்து தான்டா கேட்டேன்.. " 


" நாங்க வர்ரது இருக்கட்டும்.. நீ எங்க போறன்னு சொல்லு.." ரிஷி 


" ம்ச்.. கேம்ப் போட்டுருக்காங்கடா.. அதுவும் கரண்ட் கூட இல்லாத குக் கிராமத்துல.. ஒன் வீக் மேத்தா சார் கூட பத்து பேர் செலக் ஆகிருக்கோம்.." 


" அதுக்கும் லீவ் ப்ளானுக்கும் என்ன சம்பந்தம்.." சூர்யா...


" அடேய்..‌ நீர் மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கொரு முறை நிறுபித்துக் கொண்டே இரும்..." சாரா கடுப்புடன்..


" என்னடா கேரளா பெண்ண சுத்த தமிழ்ல பேச வச்சுட்டீங்க.. இருந்தாலும் ஓ வாயால தமிழ் பேசி கேக்கும் போது.. ஆ....ஹா.. தேன் வந்து பாய்ந்த மாறி இருக்குது.." சம்பத்..


" பாத்து டா மச்சி கொழவிங்க காதுல கூடு கட்டிட போது.. நீ என்னைக்குன்னு  சொல்லு நாங்க வாரேன்.." ரிஷி..


" டேட் இன்னும் கன்ஃபாம் ஆகல.. ஆனதும் டெக்ஸ்ட் பண்றேன் பாய்.. சாமு நீயும் அவங்கூட வந்திடு.. அந்த முறுக்கு சட்டிய கூட்டீட்டு வராதிங்க.. ஓகே.." என‌ சொல்லி சென்றாள்...


நாட்கள் நகர்ந்தது.. பரிச்சை முடிந்தது.. ப்ராஜக்ட் சம்மந்தமாக விடுப்பு கிடைக்க மீண்டும் சென்னைக்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.. தினமும் அன்று வந்திருந்த பள்ளிகளுக்குச் சென்று அவனின் பம்கின் தென்படுகிறாளா என பார்ப்பதே அவனின் வேலையாக இருந்தது..


" நண்பா இந்த ஒருமொற ஹெல்ப் பண்ணுடா.. ப்ளீஸ்.." மணி கெஞ்சலாக..


" முடியாதுடா.. நீ அங்க போய் எதாச்சும் பண்ணாக்கூட பரவாயில்ல.. நீயே சும்மாத்தா இருக்கப் போற இதுக்கெதுக்கு உனக்கு துண.. போடா.. என மறுத்தான் பாலா..


" எதுக்குடா அவன் கெஞ்சீட்டு இருக்கான்.." ரிஷி..


மணி பாலாவை விட்டு ரிஷியிடம் கெஞ்ச ஆரம்பித்தான்.. " எங்கூட வா நண்பா.. " 


" எங்க டா.." ரிஷி .


" ஏ ஆள பாக்க.." மணி .


"ஹா.. உனக்கு ஆளா.. எப்ப இருந்து.. "


"கொஞ்ச நாளுக்கு முன்னாடி தா.."


"யாரு அது.. எங்க இருக்கா.. என்ன பண்றா.." ரிஷி என விவரம் கேட்க..


" ரிஷி வேணாம் டா.. இவென் கூப்பிடுற இடம் ரொம்ப ரிஸ்க்கு.. மாட்டுனன்னு  வை கன்ஃபாம் ஜெயில் தா.. அதோட நம்ம பேரும் கேவலமா டேமேஜ் ஆகிடும்.. போகாத.." பாலா..


" அப்படி என்னடா ரிஸ்க்கான இடம்.. பாகிஸ்தான் பார்டரா.." ரிஷி .


" அப்படில்லாம் இல்ல நண்பா அவென் பொய் சொல்றான்.." மணி..


" ஏய் யாருடா பொய் சொல்றா நானா.. ரிஷி அவென் லேடீஸ் ஹாஸ்டல்க்கு போய் அவென் ஆள வேடிக்கப் பாக்க போறான்.. ரெண்டு  பேரும் லவ் பண்ணாகூட பரவாயில்ல.. அந்த பொண்ண விடாம ஃபாலோ பண்ணி டார்சல் பண்ண துணைக்கு  நம்மல கூப்பிடுறான்.." பாலா .


" டேய் என்னடா இதெல்லாம் அந்த பொண்ணுக்கு விருப்பமில்லைன்னா எதுக்கு ஃபாலோ பண்ற.. தப்பு டா.." என்றவன் சில பல அட்வெஸ்களை வாரி வழங்க.. 


" டார்சல்லாம் பண்ணல நண்பா.. அந்த பொண்ணுக்கும் என்ன பிடிக்கும்.. என்னப் பாத்து ஒருக்க கூட முகம் சுளிச்சதே இல்ல.. இன்னைக்கு எப்படியாது எம் மனசுல இருக்குறத நா சொல்லீடுவேன் நண்பா.. பிடிக்கலன்னு சொல்லிட்டா ஃபாலோ என்ன பாக்க கூட மாட்டேன் நண்பா.." என கெஞ்சிக் கூத்தாடி அவர்களை அழைத்துச் சென்றான்..


அங்கு ரிஷிக்கு ஒர் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது.. இன்பமான அதிர்வு..


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...