அத்தியாயம்: 22
சொல்ல நினைப்பதை சொல்லி முடித்திட
இல்லை இல்லை துணிச்சல்
நெஞ்சில் இருப்பதை கண்கள் உரைப்பது
ரொம்ப ரொம்ப குறைச்சல்
ஒரு கேணி போல ஆச ஊறுதே
மருதாணி போல தேகம் மாறுதே
பக்கத்தில் வந்தது பாசம்
இனி வெட்கங்கள் என்பது வேசம்
உயிரே உறவே உனதே ..
திடீரென கேட்ட அந்த குரலின் இனிமை , வரிகள் ஒவ்வொன்றையும் ரசித்துப் பாடிய அவளின் மதி முகத்தைப் பாக்க வேண்டும் என்ற ஆவலை அதிகப்படுத்தியது..
அருகில் இருந்த ஜன்னல் வழியே ஏறி பரனின் உச்சியில் யாருக்கும் தெரிந்திடாதபடி மறைந்து கொண்டான்.. ஏனெனில் அவன் இருப்பது சென்னையில் புகழ் பெற்ற அதுவும் பாதுகாப்பும் கட்டுப்பாடும் அதிகம் உள்ள மகளிர் விடுதி.. பாலா ஹாஸ்டலில் பின்புறம் உள்ள உணவகத்தில் சாப்பிடுகிறேன் என்று கூறி அரைமணி நேரமாக தன் பைக்குடன் அமர்ந்திருக்க.. மணியும் ரிஷியும் உள்ளே சென்றனர்..
" டேய்.. சரியா ஒருமணி நேரம் தா அதுக்கு மேல ஒரு நிமிசம் கூட நா இங்க இருக்க மாட்டேன்.." பாலா .
" ஏன்டா பொழம்புற அதெல்லாம் வந்திடு வோம்.. நாங்க என்ன விருந்துக்கா வந்திருக்கோம்.. நீட்டி நெளிச்சுட்டு உக்காந்து மாமியார் வீட்டுல கத பேச..." ரிஷி
" நீ விருந்துக்கு வந்தியோ இல்ல பொண்ணு பாக்க வந்தியோ அதெல்லாம் எனக்குத் தெரியாது... நம்ம ப்ளான் போட்ட மாறி வந்திருங்க.." பாலா..
" ஒரு வேல நம்ம ப்ளான் சொதப்பிடுச்சுன்னா..." மணி.. பயம் அவனுக்கு..
" மூதேவி.. உன் காவாவாய தொறக்காம இருந்தாலே போதும்.. நீங்க மாட்டிக்கிட்டாளும் பரவா இல்ல.. எங்கேயும் எம் பேர மட்டும் சொல்லீடாதிங்க.. " பாலா
" ஏன்டா.. இவ்வளவு பயப்படுற.." ரிஷி .
" உனக்குத் தெரியாது மச்சான்.. இங்க வெளிநாடு , வெளி மாநிலம் அப்படீன்னு ஐஞ்சு வயசுல இருந்து பதினெட்டு வயசு வர எல்லா ஸ்கூல் பொண்ணுங்களும் இருக்காங்க.. எல்லாருமே பெரிய இடம்.. இது கூட ஏதோ கட்சிக்காரனுக்கு சொந்தமானது.. மாட்டுனோம்னு வை.. களி தா ஆயுசுக்கும்.." பாலா..
" என்ன நண்பா பயமுறுத்துற.. பேசாம நாம திரும்பிப் போய்டலாம்.. அந்த புள்ளைய வேறெங்கயாச்சும் பாத்துக்கலாம் வாங்க.." மணி..
" தப்பு பண்றவனெல்லாம் மாட்டிக்கிடுறது இல்ல.. தப்பக் கூட தப்பு தப்பு பண்ணா அவந்தா மாட்டிக்கிடுவியான்.. வா போய் அந்த மாடத்துல எந்த இளவரசி இருக்கான்னு பாத்தடலாம்.." ரிஷி.. இவர்கள் குடுக்கும் பில்டப்பே அவனை ' போனா என்ன பண்ணீடுவாங்கலாம் ' என்ற திமிரை கூட்டியது..
எவருக்கும் தெரியாமல் உள்ளே வந்தவர்கள் திசைக்கொன்றாக பிரிந்து சென்றனர்.. மணி அவனின் ஆள் இருக்கும் அறை எண்ணைக் கூறி அங்கே சென்று விட்டான்.. ரிஷி வராண்டாவில் நடந்து கொண்டிருந்த போது தான் கேட்டது அந்த பாடல்.. அது ஒரு ஹால்.. படிக்க , நடனமாட , இசை வாசிக்க என அனைத்தும் செய்ய ஏதுவாய் பெரிதாக இருந்தது.. அதில் உள்ள ஜன்னல் திண்டில் தான் அமர்ந்திருக்கிறான் ரிஷி.. பாடியவளின் முகம் காண..
ஜென்மம் முழுவதும் உந்தன் விழிகளில்
தங்கிக் கொள்ள வரவா
உன்னை விட ஒரு நல்ல மனிதனைக்
கண்டதில்லை தலைவா
கடிவாளம் ஏதும் காதல் ஓடமே
கிடையாது தோல்வி நாமும் சேரவே
முன்னுக்கு வந்தது மோகம்
சில முத்தங்கள் தந்திடு போதும்
உடனே வருவேன் சுகமே ...
அய்யையோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூரலில்
தேகம் மூழ்கிப் போகுதே
ஏதோ ஒரு ஆச
வா வா கத பேச
அய்யையோ
பாடலில் லயித்து விழி மூடி ரசித்துக் கொண்டிருந்தவனின் கவனம் பெண்களின் கரகோஷத்தால் திரும்பியது.. கரகோஷத்திற்கு மத்தியில் பார்த்தவன் அதிர்ந்து போனான்.. இன்பமாக.. அது அவனது பம்கின்..
" ப்பா.. நம்ம பம்கின்னா இது.. நல்லா டான்ஸ் மட்டுந்தா ஆடுவான்னு நெனைச்சேன்.. பார்டா.. செமையா பாடுறா.. என்னா வாஸ்டா இது.." ஆச்சர்யத்துடன்..
இடைவிடாது வைப்ரேட்டர் ஆனா தன் மொபைலை மனமே இல்லாமல் அட்டென் செய்தவன் பின் அவளை தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டு பெருமூச்சு விட்டபடி.. எப்படி வந்தானோ அப்படியே வெளியே சென்றான்..
" டேய் ஆள பாக்கனும்னு போனவன் பத்து நிமிசத்துல வந்துட்டான்.. நீ என்னடான்னா.. மைசூர் பேலஸ்ஸ சுத்திப் பாத்துட்டு வர்ர மாறி நிதானமா வார.. " பாலா .
" அதெல்லாம் விடு.. நீ பாக்க போன அந்த பொண்ணு கிட்ட பேசுனியா.. சீக்கிரமா வந்துட்ட.. என்ன சொன்னா.." ரிஷி மணியிடம்..
" அது.." மணி தயக்கத்துடன் இழுக்க .
" நீ வேற.. ஹாஸ்டல்ல யாரையோ பாத்து பயந்த போயி வந்துருக்கான்... மந்திருச்சு விட்டாத்தா சரியாவான் போல.. வாடா உன்ன தர்காக்கு கூட்டீட்டு போறேன்.. அங்கயாது தைரியமா வருவியா.. இல்ல பயந்து ஓடிடுவியா.." மணியை வார
" என்ன கேலி பண்றீங்கல்ல.. நா நிச்சயம் அந்த பொண்ணுக்கிட்ட பேசுவேன் பாருங்க... " மணி ரோசத்துடன்..
" பாக்கலாம்.. பாக்கலாம்.." கோரஸாக..
பாலா மணியை கேலி செய்த படி முன்னே நடக்க.. தரன் மட்டும் அவனின் நினைவுகளில் நிறைந்தவளை கண்ட மகிழ்ச்சியில் ஹாஸ்டலை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்றான்..
தினமும் அங்கு சென்றான் அவளைப் பற்றி தெரிந்து கொள்ள.. ஸ்கெட்ச் போட்டு அவளை தேடினான்.. அதாவது அவளின் உருவத்தை வைத்து பார்க்கும் போது எப்படியும் அவள் 11 இல்லன்னா 12 படிக்கும் மாணவி என்ற முடிவுக்கு வந்தவன்.. அவர்கள் தங்கும் அறைகளாய் பாத்து தேடினான்.. பாலாவின் உதவியோடு.. முதலில் மறுத்தவனை மிரட்டியே பணிய வைத்தான் தரன்.. தினமும் ஒரு மணி நேரம் என்ற நிபந்தனையுடன் சம்மதித்தான் பாலா..
கிட்டத்தட்ட அவனின் ஸ்டடி லீவ்வே முடியும் தறுவாயும் வந்து விட்டது.. ஆனால் அவனின் பம்கின்னை தான் கண்டுபிடிக்க முடியவில்லை..
" நா நாளைக்குத்தா நிம்மதியா இருப்பேன் மச்சி.. ஹப்பா தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்.. இன்னைக்கு மாட்டிக்கிவோமோ நாளைக்கு மாட்டிக்குவோமோன்னு நா பயந்தது எனக்குத்தா தெரியும்.. நாளைக்கோட நீ ஊருக்கு போய்டுவ .. ஐ ஆம் ஹப்பிடா மச்சான்.." பாலா மகிழ்ச்சியுடன் .
" ரொம்ப சந்தோஷம் படாத இன்னைக்கு அவள கண்டுபிடிக்கலைன்னா.. எப்படியும் ஒன் மன்த் குள்ள என்னோட எக்ஸாம் முடிஞ்சிடும்.. அடுத்து லீவ் தா.. அப்ப நீயும் நானும் சேந்து தேடலாம்.. " தரன் .
" மறுபடியும் மொதல்ல இருந்தா.." என்னவனை கண்டு கொள்ளாது உள்ளே சென்றவன் தன் தேடுதல் வேட்டையைத் தெடர்ந்தான்.. அவனது கெட்ட நேரம் அவனை ஒரு மாணவி பார்த்து " ஆ.. திருடன்.. திருடன்.. ஹாஸ்டல்ல குள்ள ஒரு பாய் வந்துட்டான்..." என அலறிவிட..
தப்பிக்க வழி தேடியவன் ஒவ்வொரு அறையின் கதவையும் திறக்க முயன்றான்.. எதுவும் திறக்காது போக.. 'மாட்டிட்டோமோ ' என நினைத்த நேரத்தில் ஒரு கதவு லாக் செய்யாமல் சாத்தி மட்டுமே வைக்கப் பட்டிருந்தது உடனே உள்ளே சென்று விட்டான்..
குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.. வெளியே எட்டிப் பார்த்தான்.. சில பெண்கள் அங்கும் இங்கும் பதட்டத்துடன் நடமாடுவதைக் காண முடிந்தது.. சிறிது நேரம் கழித்து வெளியே செல்லலாம் என்று நினைத்தவனுக்கு தண்ணீர் வடியும் சத்தம் நின்றதை கேட்டது.. உடனே அங்கிருந்த டிரெஸ்ஸிங் டேபிளின் இடுக்கில் மறைந்து கொண்டான்..
பாடல் ஒன்றை முணுமுணுத்த படியே வந்த ஒருத்தி மியூசிக் பிளேயரை ஆன் செய்து விட்டு கதவை லாக் செய்தாள்.. சிறிது நேரம் பாடிய பாட்டிற்கு நடனமாடியவள் இரவு நேர உடை மாற்ற அணிந்திருந்த உடையை களைய முற்பட்டாள்.. மேலே அணிந்திருந்த டீசர்ட்டை கலட்டியவள்.. மற்றவற்றில் கை வைக்கும் முன் சத்தமிட்டான் ரிஷி...
" ஏ..ய்... டோன்ட் டூ இட்.." என்க..
அதிர்ந்து போனவள் கத்துவதற்கு வாயைத்திறந்தாள் முடியவில்லை.. எப்படி முடியும் அவன் தான் அவளின் வாயை தன் கைகளால் மூடிய அவளுடன் சுவற்றில் சாய்த்து நின்றிருந்தானே..
தன் முகம் தெரிந்திடாத படி தன் முகத்தை துணி கொண்டு மூடியிருந்தான் அவன்.. கண்கள் மூக்கு வாய் மட்டுமே தெரிந்தது அவளுக்கு.. தரனின் விழிகள் கருப்பு நிறமாக இல்லாமல் சற்று சாம்பல் நிறம் கலந்ததாக இருக்கும்.. பூனையின் கண்களை போல்.. அதை உற்று பார்ப்பவர்கள் மயங்கி போவதுண்டு.. அவளும் சில நொடிகள் மயங்கி தான் போனாள்.. பின் தரன் மெல்ல தன் கையின் இறுக்கத்தை குறைத்து இதழ்களுக்கு விடுதலை தந்தான்.. ஒரு விரலை அவளின் உதடுகளில் வைத்தவன் சத்தமிடாதே என தன் கண்களால் மிரட்டினான்.. அதை தட்டி விட்டவள்..
" யாரு நீ.. திருடனா.. இங்க எதுக்கு வந்த.. அய்யையோ உன்ன யாரும் இங்க பாத்துட்டா என்ன ஆகும்.. நீ என்னோட ரூம்ல இருந்து போனேன்னா என்ன பத்தி எல்லாரும் என்ன நினப்பாங்க.. நா கெட்ட பொண்ணுன்னு தான் நினப்பாங்க.. இப்படித்தா வனியக்கா ரூம்லயும் ஒரு பாய் வந்திட்டதா சொல்லி அந்த அக்காவ ஹாஸ்டல்ல இருந்து மட்டுமில்ல படிக்குற ஸ்கூல்ல இருந்தும் தூக்கிட்டாங்க.. போச்சு.. போச்சு.. என்னையும் தூக்கிடுவாங்கலா.. சும்மாவே என்ன இங்க இருக்குற எல்லாருமே கேலி பண்ணுவாங்க.. இப்ப ஒரு பையன் கூட.. நா.. இந்த ராத்திரி நேரத்துல தனியா இருக்குறத பாத்தா அவ்வளவுதா.. என்னோட பேரே கெட்டு போய்டும்.. படிப்பும் கெட்டுடும்.."
மிக மெல்லிய குரலில் புலம்பினாள் அவனின் பம்கின்..
அவனின் விரல்கள் அவளின் இதழின் மென்மையை உணர்த்தியது.. அவளின் சிறு பிள்ளைத்தனமான பேச்சில் தன்னையே முற்றிலும் அவளுள் தொலைத்தவனின் பார்வை அவளை ஆராய்ந்தது.. பல தரப்பட்ட மாநிலங்களில் இருந்து பல பள்ளிகளில் அங்கு மாணவிகள் படிப்பதால்.. அங்கு ஐடி கார்ட் கட்டாயம்..
மையிடாத கண்கள்.. க்ரீம் ஏதும் போடாமல் ப்ளீச்சென இருக்கும் அவளின் முகம்.. சாயம் பூசாத உதடு.. சங்கு கழுத்து என ஆராய்ந்தவனின் பார்வை கழுத்தையும் தாண்டிச் சென்றது.. கழுத்தில் அணிந்திருந்த அவளின் ஐடி கார்டில் இருந்து பெயரை அறிந்து கொள்ள விழிகளை இறக்கினான் அவன்.. அந்த பார்வையை அவனின் பம்கின் கண்டு கொண்டாள்.. உடனே அவனை தள்ளிவிட்டு மூக்கு விடைக்க.. கோபமாக அவனைப் பார்த்து..
" வெளில போ.." என கத்தினாள் அவள்..
வட போச்சே என்ற சின்ன சிரிப்புடன் கதவை நோக்கிச் சென்றான் ரிஷி.. அவன் சென்றுவிட்டான் என எண்ணி சரமாரியாக அவனை திட்டித் தீர்த்தாள்..
" ப்ளடி ஸ்ட்ரீட் டாக்.. அழையுறான் பாரு.. எப்படா சான்ஸ் கெடைக்கும்னு.. பொம்பள பொறுக்கி.." என முணுமுணுக்க..
கதவை திறக்கும் சத்தமும் பின் லாக் செய்யும் சத்தமும் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்து தான் விட்டாள்.. சென்று விட்டான் என நினைத்ததற்கு மாறாக கண்களில் கோபத்துடன் அவளை நெருங்கி வந்தான்.. அவள் மிரட்சியுடன் பின்னே சென்று சுவற்றில் இடித்து நிற்க.. தனக்குப் பிடித்த பெண் தன்னை தவறாக நினைப்பதா என்ற கோபம் அவனுக்கு..
" என்ன சொன்ன பொறுக்கியா.. எந்த பொறுக்கியும் டிரெஸ் சேஞ் பண்ணுற பொண்ண சும்மா விட்டுடுட்டு போக மாட்டான்.. அட்லீஸ்ட் மொபைல்ல படம் எடுத்துப்பான்.. " என தன்னிடம் ஃபோன் இல்லை என பாக்கெட்டில் கையை விட்டு காட்டினான்.. லேடீஸ் ஹாஸ்டலுக்குள் செல்வதால் ஃபோனை பாலாவிடம் தந்துவிட்டு சென்றிருந்தான்..
" அப்புறம் என்ன சொன்ன அழையுறேன்னா.. " என ஏற இறங்க அவளைப் பார்த்தான்.. இம்முறை அவனின் பார்வையில் இருந்த வித்தியாசத்தை அவளால் உணர முடிந்தது..
' தப்பா நெனைச்சு திட்டிடோமோ.. உனக்கு அறிவே கெடையாது டி.. ' மனதிற்குள் சொல்லிக் கொண்டவள்..
" ஸ்..ஸாரி... " என்றாள் மெல்லிய குரலில்..
" ஸாரி எல்லாம் தேவையில்ல.. உன்ன பொறுத்த வர நா பொறுக்கி தா..." என்றவன் சில நொடிகள் அவளின் விழிகளையே உற்றுப் பார்த்தவன் அவளின் இதழை சிறை செய்திருந்தான்..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..