அத்தியாயம்: 23
மூக்கு உரச..
மூச்சு கலக்க..
கண்கள் பேச..
கவிதை பிறக்குதோ..
உதட்டில் ஏக்கம்..
பிரிய தயக்கம்..
சேர்ந்த உதடுகள்..
பிரிய மறுக்குதோ..
இருவரின் முதல் முத்தம்.. வன்மையாக நெருங்கியவன் மென்மையையே கையாண்டான்.. மனமில்லை என்றாலும் வெகுநேரமாக தட்டப்பட்டுக் கொண்டிருந்த கதவை திறக்கக் தான் வேண்டுமே.. கதவை திறந்தாள் மங்கை..
" ஏம்மா கதவ தெறக்க இவ்வளோ நேரம்... நாங்க பயந்துட்டோம்.." வாடன்..
" இல்ல மேடம் நா பாத்ரூம்ல இருந்தேன்.. அதான்.. சாரி.." உள்ளே நுழைய விடாது வாசலை மறைத்து தயங்கியவாரே கூறினாள் ஹரிணி..
" ஏ முகம் ஒருமாதிரி இருக்கு.. யாரையாவது பாத்தியா.. பயந்த மாறி இருக்க.."
" ஹா.. ஹாங்.. இல்ல மேம்.. பாத்ரூம்ல காக்ரோச்.. அதா.."
" சரி சரி.. லாக் பண்ணீட்டு தூங்கு.. யார் வந்தாலும் ஹோல் வழியா பாத்துட்டு கதவைத் திற.. ம்.. குட் நைட்.." என்றவர் அறையில் யாரும் உள்ளனரா என பார்த்துவிட்டு தான் சென்றார்..
கதவை மூடிவிட்டு வந்தவள் "எங்க அந்த பொறுக்கி.. " என அறையின் ஒவ்வொரு இடமாகக் தேடினாள்.. அவனை காணவில்லை.. நடந்தவை அனைத்தும் ஒரு மாயையாகத் தோன்றியது.. இல்லை.. அப்படி இல்லை என்று உதட்டின் காயாத ஈரமும்.. கன்றிச் சிவந்திருந்த இடையும்.. மோதிரம் இல்லாத வெற்று விரலும் சொல்லியது மாயவன் ஒருவன் வந்தான் என்று.. குழம்பிப் போனவள்.. 'ம்ஹிம் இனியும் இங்க இருக்க கூடாதுபா...' என தன் தோழியின் அறைக்கு சென்றுவிட்டாள்..
வெளியே
பாலாவோ சத்தம் கேட்டதும் ரிஷியை நினைத்து கவலையுடன் காத்திருக்க.. மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் வந்த தரனை பார்த்து நிம்மதி அடைந்தான்..
" மச்சான்.. என்னடா ஆச்சு சத்தம் கேட்டுச்சே.. உன்ன பாத்துட்டாங்களா.. எங்க நீ மாட்டிக்கிவியோன்னு பயந்துட்டேன்டா.." படபடப்புடன் கேட்க அவனுக்கு புன்னகையையே பதிலாக தந்தான் தரன்..
" டேய்.. நீ தேடீட்டு இருந்த பொண்ண பாத்துட்டியா.. கேக்குறேன்லடா சொல்லு.." என்றான் நண்பனின் மகிழ்ச்சியின் காரணம் அறியும் ஆவலுடன்..
" பாத்துட்டேன் மச்சான்.. நல்லா பாத்துட்டேன்.." உதட்டில் உறைந்த புன்னகையுடன்..
" டேய்.. என்னடா அண்ணாமல படத்துல வர்ர ரஜினி மாறி பேசுற.. ஒரு வேலை.."
" டேய்.. உன்னோட கற்பனைக்கு கடிவாளம் போடு.. அந்த பொண்ண பாத்துட்டேன்.. அப்புறம் எந்த ரூம்னு தெரிஞ்சுடுச்சு.. மணியோட ஆள் கிட்ட சொல்லி யாருன்னு விசாரிக்கனும்.. நாம அடுத்த லீவ்ல வந்து பாப்போம்..
அய்யையையோ ஆனந்தமே.." பாடிக்கொண்டே சென்றுவிட்டான்.
" ஆனந்தமா.. இவங்கூட சேந்தா நமக்கு அது இருக்காதே.. ஐய்யையோ... கடவுளே இவன்ட்ட இருந்து என்ன காப்பாத்துப்பா.." பாலா..
வீட்டிற்கு வந்த மகனிடம் " என்னடா.. ரொம்ப சந்தோஷமா இருக்க.. என்ன விசயம்.. " . மூர்த்தி .
" நா எப்பையும் போலத்தா இருக்கேன்.. உங்களுக்கு தா கண்ணு சரியில்ல.." என்றவன் நின்றால் மேலும்
மேலும் கேள்விகளை கேப்பார் என அவரிடமிருந்து தப்பிச் சென்றான்.
மூர்த்தியின் சந்தேகம் வலுத்தது..அப்பா மகனுக்கும் இடையே கண்ணுக்கு தெரியாத ஒரு வித வேவ் இருப்பதால் மகனின் மனது தெளிவாக தெரிந்தது அவருக்கு..மகன் மறைக்கும் விசயம் என்ன என தெரிந்து கொள்ள சம்பத்திற்கு ஃபோன் செய்தார்..
" ப்பா.. என்னப்பா நல்லா இருக்கிங்களா.. " சம்பத் .
" நா நல்லாருக்கேன்பா ஆனா உன்னோட ஃபிரண்டு தா நல்லா இல்லைன்னு நெனைக்குறேன்.. அவன் ஏதும் பொண்ண லவ்வு பண்றானா என்ன.." மூர்த்தி சந்தேகமாக..
" இங்க அப்படி யாரையும் இல்ல.. சொல்லப்போனா அவன் பொண்ணுங்களையே கண்டுக்கிறது இல்லப்பா.. ஆனா இந்த ரெண்டு மாசமா சென்னையே கதின்னு இருக்குறத பாத்தா அங்க தா ஏதோ பண்றான்பா.. எங்கிட்ட ஏதும் சொல்லல.. இங்க வந்ததும் கேக்குறேன் பா.." சம்பத்..
" சரிப்பா நா வச்சுடுறேன்.. " என்றவர் பாலாவிற்கு ஃபோன் செய்தார்.. அவன் அத்தனையையும் தெள்ளத் தெளிவாக அவரிடம் சொல்லிவிட்டான்.. மகன் பெண்கள் விடுதிக்கு சென்றது அவருக்கு பிடிக்கவில்லை எனினும் சொன்னால் கேட்கும் ரகம் இல்லை தரன் எனவே அவனை அவனது போக்கில் விட்டுத்தான் பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்...
டெல்லி
" எங்க ராணிம்மாக்கு பச்சக் கலர்ன்னா ரொம்ப பிடிக்கும் அதுனால இத எடுத்துக்கலாம்.. அப்புறம் டாய் சாப்க்கு போகனும் டா.. ராணிம்மாக்கு நாய் பொம்மன்னா பிடிக்கும் வாங்கீட்டு போனும்.. அப்புறம்.." ஷாப்பிங் மாலில் சம்பத் ஒவ்வொரு கடையாகச் சென்று தன் தங்கைக்கு பிடிக்கும் என அனைத்தையும் வாங்கிக் கொண்டு இருந்தான்.. உடன் நண்பர்களும்..
" பொம்ம மட்டும் தா பிடிக்குமா.. ஏ நாய் பிடிக்காதா.. " சூர்யா.
" ஐஞ்சு வயசா இருக்கும் போது ராணிம்மாவ நாங்க வளத்த நாய் ஒன்று கடிச்சுடுச்சு அதுலருந்து அவங்களுக்கு நாய்ன்னா பிடிக்காது.."
" மச்சா எனக்கு ஒரு டவுட்.." ரிஷி.
" என்ன மாப்ள.. கடிச்சது என்ன டைப் நாய்ன்னுனா.." சூர்யா..
" இல்லடா.. இவென் நம்ம கூட பழகி நாலு வர்ஷம் ஆகுமா.. எப்ப பாத்தாலும் இவெ ராணிம்மாவோட ஐஞ்சு வயசு கதய மட்டும் தா சொல்றான்.. இவனோட ராணிம்மாக்கு ஐஞ்சு வயசுதா ஆகுதா என்ன.." ரிஷி..
" யாருக்குத் தெரியும்.. இவன் தா போட்டோல கூட தங்கச்சிய காட்ட மாட்டிக்கிறானே.. மச்சா இந்த வர்ஷம்மாச்சும் தங்கச்சிய கண்ணுல காமிப்பியா மாட்டியா.." சூர்யா..
" இப்பதான் டா டென்த் எழுதப் போறாங்க.. லீவ்ல பாக்கலாம்.. அதுவரைக்கும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுல்ல.." சம்பத் .
" ஆமா அப்படியே பத்தாப்பு பரிச்ச எழுதி பஞ்சாப்பையே வெலைக்கி வாங்கப் போறமாறி... இன்னா பில்டப் டா சாமி.. சகிக்கல.." சூர்யா முணுமுணுக்க..
" என்னடா சத்தத்தையே காணும்.. டேய்.. எங்க டா அவன.. " சம்பத் திரும்பி பார்த்து கத்தினான்..
ஏனெனில் இவர்களுடன் வந்த ரிஷியை காணாது போயிருந்தான்.. மாலில் அனைத்து இடத்திலும் பார்த்தவர்கள் எங்கும் காணாது பார்க்கிங்கை நோக்கிச் சென்றனர்.. அங்கு ரிஷி தங்கள் கல்லூரியில் படிக்கும் சக மாணவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்..
இருவரும் சென்று அவனை பிடித்து இழுத்து வந்தனர்.. அந்த மாணவனுக்கு மூக்கு வாயிலும் ரத்தம்.. நன்றாக அடித்து விட்டான் போலும்.. அடி வாங்கியவன் அவ்வூரின் முக்கியப் புள்ளியின் மகன்.. சும்மா இருப்பாறா... உடனே போலிஸ்ஸிடம் சொல்லி லாக்கப்பில் தள்ளிவிட்டார்.. மூர்த்திக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தகவல் சென்றது.. எவ்வளவு சொல்லியும் அந்த மனிதர் ரிஷியை தண்டிப்பதில் உறுதியாக இருந்தார்... ஆனால் அடிவாங்கியவனே நேரில் வந்து ரிஷி அடிக்க வில்லை என கூறிய பிறகே அவர் அமைதியானார்.. கேஸ் எதுவும் பைல் பண்ணவில்லை என்பதால் ஒரே நாளில் வெளியே வந்துவிட்டான்..
" மாப்ள அவெ ஏன்டா பொய் சொன்னான்.." சூர்யா .
" இவன்ட்ட மரண அடி வாங்கினப் பிறவு எவன்டா அத மறப்பான்.. அதா பயந்துட்டு கேஸ் போடாம விட்டுட்டான்.. அதுக்கப்புறம் மறுபடியும் அடி விழும்ல.. அதெல்லாம் விடு எதுக்கு அவன அடிச்ச.. மொதல்ல அத சொல்லு.." சம்பத் ரிஷியிடம் கேட்க..
" ஒரு சின்ன மேட்டர் மச்சி.. அவன்ட்ட ஒன்னு கேட்டேன்.. பணிவாத்தா கேட்டேன்.. முடியாதுன்டா.. அதா நம்ம ஸ்டைல்ல கேட்டேன.. உடனே கெடச்சுடுச்சு.." தரன் .
" என்ன கேட்ட.. எது கிடைச்சது.." சம்பத் சீரியஸ்ஸாக..
" அதுவா.. இதான் அது.." என கையில் ஒரு அழகிய தங்க பென்டன்ட்.. அதில் நடுவில் வைரக்கல் ஒன்று பிரகாசித்தது..
" யாரிதுடா இது.. " சம்பத் .
" அவன்ட்ட இருந்து வழிப்பறி பண்ணிட்டியா.. மாப்ள.." சூர்யா..
"ச்சச்ச.. இது என்னோடது.. இதோ பில்லப் பாரு.."
" அப்புறம் எதுக்குடா அவன அடிச்ச.." சம்பத் .
" அதுவா.. வாங்க ஒரு குட்டி ஃப்ளாஷ் பேக்.." ரிஷி..
இவர்கள் சென்று கொண்டிருந்த போது ஒரு தங்க நகைக் கடையைத் தாண்டிச் சென்றனர்.. அதிலிருந்த ஒரு டிசைன் இவனை ஈர்த்து.. உள்ள சென்றவன் அதன் விலையைக் கேட்டான்.. விலை அதிகம் என்ற போதும் அவனின் பம்கின்காக இதை வாங்க முடிவு செய்தான்.. அங்கிருந்த சேல்ஸ் கேர்ள்ளிடம் சொல்லிவிட்டு பணம் ஏற்பாடு செய்வதற்குள் அந்த மாணவன் வாங்கிச் செல்ல முயன்றான்.. சேல்ஸ் கேர்ள் தர இயலாது என்று சொன்ன போதும்.. அதிக பணம் தருவதாக மேனேஜரிடம் சொல்ல.. அவரும் இதை அவனுக்கே தர இருந்தார்..
ரிஷிதரன் தான் நினைத்ததையே சாதித்துக் பழக்கப்பட்டவன்.. எவ்விதமாயினும் அடைந்தே தீருபவன்.. தன் பாணியில் அவனிடமிருந்து அதை வாங்கிக்கொண்டான்.. அவ்வளவு தான்..
" யாருக்கடா இது.. அந்த பையனோட அப்பா நினைச்சுருந்தா உன்னோட கேரியரையே ஸ்பாயில் பண்ண முடியும்.. எதுக்குடா இந்த ரிஸ்க்.. உன்னோட அப்பாக்கும் இது பத்தி நியூஸ் போயிருக்கும்.. தேவையாடா இதெல்லாம்.." சம்பத்..
" ஃபார் மை பம்கின்க்குடா மச்சான்.. அவளுக்காக எவ்வளவு ரிஸ்க் வேணும்னாலும் எடுக்கலாம்.. நோ டவுட்.."
" அப்ப உன்னோட லைப் உங்கிட்ட இருக்காது பரவாயில்லையா..." மூர்த்தியின் குரல் அது..
அப்பா என எழுந்து நின்றான் ரிஷி.. காலேஜில் இருந்து மூர்த்திக்கு அழைப்பு வந்ததால் வந்திருந்தார்..
" சொல்லுடா.. அந்த பொண்ணு ஒன்னும் உங்கைல இருக்குற செயின் கிடையாது.. உயிருள்ள மனுசி.. அந்த பொண்ணுக்கு உன்ன பிடிக்கலைன்னா.. அப்ப என்ன பண்ணுவ.. இதோ இத அபகரிச்ச மாறி வேறெருத்தவெங்கிட்ட இருந்து பறிச்சிப்பியா.." என்றவர் மகனின் மீதிருந்த கோபத்தால் அவனின் கன்னத்தில் அரைந்தார்..
" காதலுங்கிறது தானா வரனும் கட்டாயப் படுத்தி வர வைக்கக்கூடாது.. அதுக்கு முன்னாடி முழு ஆண்பிள்ளையா வளர்ந்து நில்லு... சுயமா சம்பாதிக்குற பொறுப்பும் கடமையும் இருக்குறவனுக்கு இந்த காதல்லாம் வர்தே இல்ல.. பாரு வெட்டியா ஊர் சுத்துற உன்ன மாறி ஆளுகளுக்கு தா காதல் கேக்குது.."
தன் முகம் பார்க்காமல் தரையைப் பார்த்துக்கொண்டு இருந்த மகனை கண்டதும் கோபம் குறைந்தவராக தோலில் ஆதரவாய் கை கொடுத்தவர் " காதல் தப்புன்னு சொல்ல.. நீ காதலிக்கிறதையும் நா தப்பு சொல்லல.. ஆனா இந்த வயசுல வர்ரது தப்பில்லையா.. உனக்கு இருக்குறது காதலா.. இல்ல ஈர்ப்பான்னு உனக்கே சரியா தெரியது.. அப்படி இருக்குறப்போ எதுக்காக கனவுல கோட்டை கட்டி வாழுற.. உனக்கு வேல தேடி முதல்ல நீ சம்பாரி.. உன்னோட கடம எல்லாத்தையும் முடி.. அப்புறமும் அந்த பொண்ணோட நினப்பு உனக்கு இருந்ததுன்னா அவ தா எனக்கு மருமக.. இத மாத்த முடியாது.." என சத்தியம் செய்தவர்..
"அதுவரைக்கும் அந்த பொண்ண டிஸ்டப் பண்ணக் கூடாது.." என்றார்..
இந்த வயதில் வரும் ஈர்ப்பு தான் என நம்பியதால் அப்படி சொன்னார்.. ஆனால் மகனின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டவளை அவன் உயிர் உள்ளவரை மறக்க மாட்டான் என்பது அவருக்கு தெரியவில்லை.. மகனின் உறுதியும் தெரியவில்லை.. தெரியும் போது என்ன ஆகுமோ..
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..