முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 24

 

அத்தியாயம்: 24


நட்ட நடு ஜாமத்தில்...

அந்த தனிமை..

கூட இனிமை சேர்க்கிறது... 

நானும் நீயும் பேசாமல்...

ஒருவரை ஒருவர்...

பார்த்துக் கொள்ளும் போது..


உறங்கும் மனையாளை விழிகள் அகற்றாது பார்த்தவன் இதழ்களில் ஒரு வெற்றிப் புன்னகை.. அதை கர்வம் புன்னகை என்றும் சொல்லலாம்.. தன் பம்கின் இப்போது அவனின் மனைவியாய் ஒரே அறையில் தங்கியிருப்பதால் வந்து அது..‌‌


மணியின் உதவியால் அவளைப் பற்றி அறிந்து கொண்டான்.. ஹரிணி , ஊர் ஆந்திரா என்றும் இரு உடன்பிறப்புகள்  உண்டு என்றும் இப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் பதினைந்து வயது மாணவி அவள் என்று அறிந்தான்.. தந்தை கூறி வயது அப்போது அவனுக்கு புரிந்தது.. அவளிடம் அத்து மீறியதற்கு சிறு குற்ற உணர்ச்சியும் வந்தது.. தான் நடந்து கொண்ட விதத்திற்கு வருத்தம் கொண்டான்.. 


 அவளிடம் பேச முயற்சிக்கவில்லை.. இந்த ஏழு வருடங்களில் எத்தனையோ முறை ஹரிணியை பார்த்திருக்கிறான் ஆனால் பழக நினைத்ததில்லை.. தள்ளி நின்றே ரசித்தான்.. 


கௌதமுடன் ஹரிணியையும் கிராமத்திற்கு அவனே திட்டமிட்டு வரவைத்தான்.. அது மட்டுமல்ல  விக்ரமின் உதவியால் திருமணமும் செய்து கொண்டான்.. யாருக்கும் அவளை விட்டுத்தரக் கூடாது என்பதற்காக.. 


கல்யாணம் விரைந்து முடிந்து விட்டது ஆனால் அவளுடனான இல்லறம் காதல் இல்லாமல் இருக்கக் கூடாது என நினைத்தான்... அவள் தன்னை காதலிக்கும் வரை பொறுமை காக்க நினைத்தான்... 


நினைத்ததெல்லாம் உடனே நடந்து விடுமா என்ன..


சூரிய ஒளி கண்ணில் பட தான் இருக்கும் இடம் எது என்று உணர்ந்தவள்.. விருட் என எழுந்து அமர்ந்தாள்.. கட்டிலைக் கண்டவள்,  தரன் இல்லாது போக குளியல் அறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு கீழே சென்றாள்.. அனைவரும் மும்மரமாக வேலை செய்ய, சமையல் அறைக்குள் சென்றாள் ஹரிணி..


" வாம்மா புதுப் பொண்ணு.. இவ்வளவு சீக்கிரம் எந்திருச்சிட்ட.." கிருபாவின் கிண்டலாக..


" ஆன்.. அத்த ரொம்ப டையர்டா இருந்துச்சா அதா.. நாளைக்கு சீக்கிரம் வாரேன்.." என்றவளின் கன்னம் வருடி..     


" போய் சாமி ரூம்ல வெளக்கேத்துடா.. நா வெளட்டுக்கு சொன்னேன்.." கிருபாவதி .


" ஏய் இந்தா இத குடிச்சுட்டு போ.." காபியை கையில் கொடுத்தார் மலர்.


" இன்னைக்கு குளிச்சுட்டு வந்துடேன்னு கைல காபி தர்ரீங்க அப்படித்தான.." என கேலியாக கேட்க..


" போடி போய் வேலை ஏதாது இருந்த பாரு.. வந்துட்டா வாயாட.. அதுவும் எங்கிட்டேயே..." மலர்.


புன்னகையுடன் அவர் சொன்ன வேலையை செய்தவள் நாச்சியம்மாளுடன் கதை பேச ஆரம்பித்தாள்.. 


" பெரிம்மா என்னதிது... அவா பா...ட்டுக்கு கத பேசிட்டுருக்கா.... இங்க நீங்க வேர்க்க விறுவிறுக்க வேல பாத்துட்டு இருக்கிங்க.. ச்சீச்சிச்சி.. பாருங்க எவ்ளோ வேர்த்திருக்குன்னு.. போய் நல்ல மாமியாரா அவ கொமட்டுலேயே இடிச்சு இழுத்துட்டு வந்து வேலை பாக்க சொல்லுங்க.. இப்ப இருந்தே அடக்கி வைங்க.. இல்லைன்னா மாமியாரான உங்கள மதிக்க மாட்டா.. பாத்துக்குங்க.. நல்லதுக்கு சொல்றேன் கேட்டுக்குங்க.. " கௌதம் மலரையும் கிருபாவையும் ஏற்றி விட்டான்..


" டேய் எதுக்குடா இங்க வந்த காப்பி குடிக்கத்தான.. வாங்கிட்டேல்ல போ.. எங்க வீட்ட பத்தி நீ கவலப்படாத.. அத இந்த வீட்டு மருமகளுங்க நல்லாவே பாத்துக்குவாங்க.. கெளம்பு சீக்கிரம்.." நங்கை விரட்ட..


" இன்னைக்கு நா ஊருக்கு போறேன்.. யாருக்குமே எம் மேல் அக்கற இல்ல.. பாசமில்ல.. துளியூ.......ண்டு கவல கூட இல்ல.. ஹிம்.. என்ன பன்றது நா வாங்கி வந்த வரம் போல..." கௌதம் பொய்யான கண்ணீருடன் உம் கவலையுடனும்..


" என்ன இன்னைக்கு நீங்க கெளம்புரீங்களா.. யாருமே சொல்லலயேண்ணே.. அண்ணா நீ இல்லாம நா எப்படிண்ணா இருப்பேன்.. எப்டி இருப்பேன்... அண்ணே.. ." பிரகாஷ் நெஞ்சைபிடித்துக் கொண்டே..


" தம்பீ.." என கரம் வியக்க..


" அண்ணா.." என பாய்ந்து வந்து அதில் சரண் புக..


" ஏய்.. சீ.. அங்குட்டு  போங்க.. காலங்காத்தால பாசமலர் படமோட்டிக்கிட்டு..." என பவி விளக்கி விட  உடன் இந்துவும் வந்திருந்தாள்.. கௌதம் சொன்னதை கேட்டு அவள் உள்ளம் துவண்டு போனது.. மனதின் வலியை மறைத்தபடி அவனைப் பார்த்தாள்.. அவன் வழக்கம் போல் கண்டுகொள்ளாமல் பிரகாஷ்ஷுடன் பேசி சிரித்துக் கொண்டு இருந்தான்..


கௌதம் அன்றைய சந்திப்புக்கு பிறகு இந்துவிடம் பேசவில்லை.. அவளின் காதல் அவனுக்கு புரிந்த போதும் அதை வளர்ப்பது நல்லதாக அவனுக்குப் படவில்லை.. எனவே அவளை பார்ப்பதையும் பேசுவதையும் ஏன் அவளிருக்கும் இடத்தில் கூட இருப்பதையும் அவன் தவிர்த்தான்..


உணவு மேஜையில் " இன்னைக்கும் நீங்க தா சமக்கனுமாங்கண்ணி.. புதுசா மருமகளா வந்திருக்கால்ல அவள சமக்கச் சொல்லுங்க.. மூத்தததா விட்டுட்டீங்க.. இவளையாது பழக்குங்க வீட்டு வேலைக்கு.. என்னம்மா சமைப்பேல்ல..." கிருஷ்ணம்மாள் குத்தலாக..


" ம்.. நல்லாவே சமப்பேன்.. நாளைல இருந்து நா சமக்குறேன் பெரியம்மா.. " ஹரிணி பவ்யமாக .


' என்னாது ஹரிணி சமக்கப் போறாளா' இருவருக்கு புரையேரியது.. இருமிய படியே தண்ணீரைக் குடித்தனர் கௌதம் மற்றும் தரன்..  


' நா இருமினேன்னா அதுக்கு காரணமிருக்கு , ஹரிணிக்கு சமக்கத் தெரியாதுங்கிறது எனக்குத் தெரியும்.. இவென் ஏ இருமினான்.. சம்திங் ஸ் ராங்.. கண்டுபுடிக்குறேன்.. எல்லா ராங்கையும் ரைட்டா மாத்துறேன்..' கௌதம் மனதிற்குள்.. 


‘ஃபிளாஷ் பேக்கே முடிஞ்சு போச்சு.. இனிமேலு இவரு கண்டுபிடிக்கப் போறாராம்..  ‘


சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தாள் பவி.." ஏய் சும்மா இருடி.. " ஜோதி மகளை அடக்கினாலும் அவரின் முகத்திலும் அடக்கப் பட்ட புன்னகை.. 


" ஓய்.. எதுக்கு நீ கெக்கபிக்கேன்னு சிரிக்குற.. அட சொல்லீட்டுத்தே சிரியேன்.." பிரகாஷ்..


" உங்கண்ணிக்கு.. ஹ...ஹ.. சுடுதண்ணி கூட வக்கத் தெரியாது.. ஹ..ஹ.. இப்படித்தா சமக்குறேன்னு சொல்லி எங்க வீட்டையே எரிச்சுட்டா.. ஃபயர் சர்வீஸ்ல இருந்து ஆள்ளாம் வந்தாங்க அத அணைக்க.. ஹ.. இங்க  சமச்சான்னா உங்க கதி என்ன ஆகப் போகுதே.. ஹ.. ஹ.. " பவி சொல்லி சிரிக்க..


அவளை தன் பார்வையாலே எரித்தவள்.. " அப்படில்லாம் இல்ல அத்த.. நா கத்துப்பேன்.. நீங்க எனக்கு டீச் பண்ணுங்க.. " ஹரிணி ரோசத்துடன்..


" ஏம் புருஷன் வாழ்ந்த வீடும்மா இது.. பழங்காலத்து வீடும் கூட.. இது கொஞ்ச நாளுக்கு நல்லாத்தா இருக்கட்டுமே.. மலரு இவள சமக்கட்டுக்குள்ள விடாத.. " நாச்சியம்மாள் சொல்ல ஹரிணி பவித்ராவை முறைபடியே உண்டு முடித்தாள்..


" கவனமா எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டியா.. ஆஃபீஸ்ல கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துக்கோ.. அப்புறம் யார்ட்டையும் வெட்டியா வம்பிலுக்காத என்ன.." ஹரிணி கௌதமின் பெட்டியை  அடுக்கிய படியே கூறினாள்..


" ஆமா.. நா இப்பத்தா ஸ்கூலுக்கு போற சின்னக் கெழந்தை பாரு.. ஜாக்கிரதையா இரு.. டிபன் பாக்ஸ்ஸ மிச்சம் வைக்காம காலி பண்ணுன்னுட்டு.. சும்மா இரேன் டார்லிங்.. " கௌதம் 


" ம்ச்.. லூசு..." முணுமுணுத்தவாரே நண்பனின் உடமைகளையும் உடைகளையும் அடுக்கி வைத்தாள் ஹரிணி..


" ண்ணே..‌ உங்கிட்ட இருந்து நா கெவியான ஒரு பெர்பாமென்ஸ்ஸ எதிர் பாத்தேன்.. நீங்க என்னடான்னா ஒன்னுமே பண்ணாம கெளம்புறீங்க.. ஐ ஆம் வெட்டிங்க.. எப்ப கெடைக்கும்ன்னு.." பிரகாஷ்.


" எப்படி பட்ட பெர்பாமென்ஸ்ஸ எதிர்பாத்த.."‌கௌதம் .


" எங்க தரன் அண்ணே கிட்ட போய்.. அவரு கையைப் பிடிச்சு.. ‘எங்கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்.. அதுலருந்து கண்ணீரு கிண்ணீரு..’ அப்படீன்னு ஒரு சென்டிமென்ட் சீன்ன  நா எதிர் பாத்தே..  ஹாங்.. அப்படி எதுவும் நடக்கலையே..

 வெய்.." பிரகாஷ் கையை பிசைந்து படி பாண்டு ஸ்டைல்லில் பேச..


" அப்படீங்கிற.. ஓகே.. லெட்.. ஸ்டாட்.." என ‌ஹரிணியிடம் சென்றவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு 


" ம்...மா... இந்த குடும்பத்தையே  நா உன்ன நம்பித்தாம்மா  ஒப்படைக்கிறேன்.. அவங்க கண்ணுல இருந்து கண்ணீர் மட்டும் தாம்மா வரனும் , இரத்தம் வந்திடக் கூடாதும்மா.. அவங்கள நல்லா பாத்துக்குவியாம்மா.." சிவாஜி சாரை காப்பியக்கிறேன் என்று ஏதோ பண்ண அவர்களின் கலாட்டாக்களைக் கண்டு  குடும்பமே ரசித்தது..


ஹரிணிக்கு  திருமணம் முடிந்த விசயத்தை அவளின் குடும்பத்தினருக்கு அவள் தெரிவிக்கவில்லை.. அவளின் பிறந்த வீட்டு சார்பாக அனைத்தையும் கௌதமே முன் நின்று செய்தான்.. தரனுடன் நடந்த திருமணம் பிடிக்க வில்லை தான் இருந்தாலும் கௌதம் தன் தோழிக்காக சீர்வரிசை செய்தான்.. ஆனால் தரன் ஏற்றுக்கொள்ள வில்லை..


" நீ குடுக்குற திங்ஸ் எல்லாம் காலியாகிடுச்சுன்னா என்ன பண்ண.. மறுபடியும் வாங்கீட்டு வரச் சொல்லி அவள நா துரத்தி விடனுமா.." நக்கலாக கேட்டவன்..


 பின் கோபமாக "என்ன நெனைச்சுட்டுருக்குற நீ.. இல்ல நீ என்ன சொல்லவர்ர.. நா உன்னோட ஃப்ரெண்ட பாத்துக்க முடியாத அளவுக்கு கையாளகாதவன்னா.. இல்ல  பொண்டாட்டிக்கி எதையும் செய்ய முடியாத அளவுக்கு வக்கில்லாதவன்னா.. தெளிவான சொல்லு அப்பத்தா நா இத வாங்கிக்கவா இல்ல வேண்டாமான்னு முடிவெடுக்க முடியும்.. "  தரன் காட்டமாக..


"கால காலமா இது பண்றது தான.. அவளுக்கு நான் தா எல்லாமே..‌ இத ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உன்னோட இஷ்டம்.. அப்புறம் ஒரு முக்கியமான விசயம்.. அவளுக்கு தேவையானத அவளே பாத்துப்பா... உன்னையும் சேத்தே பாத்துக்கிற அளவுக்கு எ டார்லிங்கிட்ட தைரியம் இருக்குது.." என எல்லாமே என்ற வார்த்தையே சற்று அழுத்தமாகவும்  திமிராகவும்  கூறினான் கௌதம்..


இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டே திரிந்ததனர்.. 


பஸ் ஏற இருந்த கௌதம் ஏற்றி விட வந்த ஹரிணி இருவரின் மனநிலையும் வேறு வேறாக இருந்தது.. பஸ் ஏறும் முன் கௌதம் ஹரிணியிடம் சென்று அவளை அணைத்து பிறை நெற்றியில் முத்தமிட்டான் மனநிறைவாக.. ஏனெனில் அவள் ரிஜெக் செய்த மாப்பிள்ளைகள் ஏராளம்.. திருமணத்தைப் பற்றிக் கேட்டாள் அவள் சிந்திப்பது மாப்பிள்ளையின்  குடும்பத்தைப் பற்றியே.. பின்தான் மாப்பிள்ளையை யார் என்று  கேட்பாள்... அவளுக்கு ஏற்றவாறு தன் குடும்பம் நிச்சயம் இருக்கும்.. தன் தோழி பாதுகாப்பாக இங்கு இருப்பாள் என்ற மனநிறைவு ஏற்பட்டது.. எனவே மகிழ்ச்சியுடன் செல்கிறான்..


ஹரிணியின் மனம் தான்  சிறிய சஞ்சலத்தில் தவித்தது.. தான் இல்லாமல் தன் நண்பன் ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்ளப் போகிறான் என உள்ளம் எச்சரித்தது.. அதனால் தான் அவனை ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னாள்..


ஒருவழியாக கலியபெருமாளின் குடும்பம் மும்பைக்கே திரும்பிச் சென்றது.. 


இரவில் தரனுக்காக காத்திருந்தாள் ஹரிணி.."ஹாங் நா உங்களுக்காக தா வெய்ட் பண்ணீட்டு இருந்தேன்.. நா அமேசான்ல சில திங்ஸ் ஆர்டர் போட்டிருக்கேன்.. அட்ரஸ் சரி தானான்னு பாத்து சொல்ல முடியுமா.. அப்படியே இங்க ஒரு சின்ன சைஸ்ல கட்டில் இருந்தா நல்லா இருக்கும்.. வித் இன் ஒன் வீக்குள்ள வந்திடும்.. " 


" ஸ்டாப்பிட்.. உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா.. இவ்வளவு நேரம் கொழாவீட்டு வந்தியே அந்த குடும்பத்துக்கிட்ட போய்  நாங்க ஹஸ்பெண்ட அன்டு  வைஃபா இருந்தாலும் நாங்க தனி தனியாத்தா படுத்திருக்கோம்னு சொல்லாம சொல்லப் போறியா.. அவங்களே கல்யாணம் பண்ணி வச்சது தப்பா சரியான்னு கொழப்பத்துல இருக்காங்க.. நம்ம லைப்ப பத்தி அவங்க கவலப்பட்டுட்டு இருக்குற இந்த நேரத்துல போய்.. ச்ச..." என வெறுப்புடன் கூறிவிட்டு குளியல் அறைக்குள் நுழைந்தான்...


கௌதம் கூறிய ' அவளுக்கு எல்லாமே நான் தான்.. ' என்ற வார்த்தை அவனை கடுப்பேற்றியது  என்றால் இங்கு  தன்னிடம் எதுவும் கேட்காமல் சொல்லாமல் கட்டிலுக்கு ஏற்பாடு பண்ணுகிறேன் என்றது அதை அதிகப்படுத்தியது.. வெளியே வந்தவன் சோஃபாவில் உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்துவிட்டு.. ' இனி உனக்கு எல்லாமே நானாத்தா இருக்கனும்.. ' என நினைத்துக் கொண்டு உறங்கச் சென்றான்..


எல்லாமுமாக இருப்பான் அதை அவள் ஏற்பாளா என்ன..


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  

அன்பே 23

அன்பே 25


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...