அத்தியாயம்: 26
பகலிலேயே பார்ப்பவர்களை பயங்கொள்ளச் செய்யும் அளவுக்கு அடைந்து விரிந்திருந்தது அந்த புளிய மரம்.. இதுவோ இரவு.. பயப் பந்து தொண்டையை அடைக்க சில அடி தூரம் எடுத்து வைத்தால் அங்கு சில பஷ ஓட்டு வீடுகள்.. அதில் ஏற்றப்பட்டிருந்த விளக்கின் ஒளி சற்று நிம்மதியைத் தருகிறதென்றால் , காதுகளில் கேட்கும் கோட்டான் மற்றும் ஆந்தையின் அலறல் சத்தும் நம்மை பயத்தின் உச்சிக்கே காசில்லாமல் அழைத்துச் சொல்லும்..
அப்படி ஒரு ஓட்டு வீட்டில் தான் ஹரிணி நித்திரா தேவியை வேண்டி இரு காதுகளையும் தன் தலையணையால் மூடிய படி தவம் இருக்கிறாள்.. சூரியன் தலை தூக்கிப் பார்க்க சரியாக இன்னும் இரண்டு மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில் தூக்கத்தையா வேண்டுகிறாள் இவள்.. இல்லையே பார்க்க அப்படி தெரியவில்லையே.. எதன் ஓசையோ தன் காதுகளை சென்றடையக் கூடாதென அப்படி படுத்திருக்கிறாள்.. எதுவாக இருக்கும்.. நம் காதுகளை நாம் கூர் திட்டினால் அங்கு காடுகளுக்கே உரித்தான பயங்கர அமானுஷ்ய சத்தம் அது..
" ஆ.. கொசுக் கடில்ல நா தூங்கவே ஒரு மணியாச்சு.. இதுல இது வேறையா.. ஹப்பா.. தாங்க முடியல.. இவென் என்ன பண்றான்.." என கட்டிலில் படுத்திருந்த தரனை எழுந்து உட்கார்ந்து எட்டிப் பாரத்தாள்..
அவனின் மூச்சு சீராக ஏறி இறங்கியது.. " என்ன தூங்குறானா.. காதுல பஞ்சு எதுவும் வச்சிருக்கானா.. இல்லையே.. இவனால மட்டும் எப்படி எதையும் கண்டுக்காம தூங்க முடியுது.. ரோபோ மேன்.. இந்த கொசுக் கடிலையும் நிம்மதியா தூங்குறான் பாரேன்.. எப்படி.." என முணுமுணுக்க..
" தூங்கனும்னு நெனைச்சா எங்க படுத்தாலும் தூங்கலாம்.. ஆந்த மாறி முழிச்சிருக்காம கண்ண மூடி தூங்க ட்ரைப் பண்ணு.." கண் திறக்காமல் கூறினான் ரிஷி..
"தூக்கத்துலையும் என்னைய வாட்ச் பண்ணீட்டுதா இருக்கான் போல.. லூசு தூக்கம் வராம தா முழிச்சிருக்கேன்டா கோட்டான்.." என முணுமுணுத்தாள் மீண்டும் முயற்சித்தால் தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் படுத்து..
அது அவர்களின் கானகத்து தோப்பு வீடு..
இவர்கள் எதற்கு இங்கு வந்தனர் இந்த நேரத்தில் என யோசித்தால் காரணம் நாச்சியம்மாள்..
ஒருவர் முகத்தை மற்றொருவர் நிமிர்ந்து கூட பார்க்காமல் ஹரிணியும் தரனும் திரிவது நாச்சியம்மாளை கவலைக் கொள்ளச் செய்தது.. எனவே தரனிற்கு செய்யும் சிறு சிறு வேலைகளை ஹரிணியை செய்ய பணித்தார்.. காபி கொடுப்பது மதியம் சாப்பாடு கொடுப்பது பரிமாறுவது என அவனின் முன்னால் அவளை நடமாடச் செய்தார் அவர்..
இரண்டொரு நாள் அதை செய்தவள் நாச்சியம்மாளின் சூது புரிய ஆரம்பித்தது.. ' அவன பழி வாங்க இது தா சரியான நேரம்.. கிராணி நேம்ம சொன்னா அவென் என்ன அவாய்ட் பண்ண மாட்டான்.. திருடனுக்கு தேள் கொட்டுன மாறி.. ஹா..' என ப்ளான் போட்டாள்..
முதலில் கணவனுக்கு குடுக்கச் சொல்லி கைக்கு வரும் காபியை ஆர அமர படிக்கட்டில் அமர்ந்து குடித்துவிட்டு அதன் கடைசி மிடறை மட்டும் அவனின் டேபிளில் வைத்தாள்..
" கிராணி கொடுக்கச் சொன்னாங்க.." என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு..
" எது டம்ளரையா.. காபியை யா.." என்றான் கடைசி மிடறையும் குடித்துக் கொண்டே..
" அத நீங்க கிராணிக் கிட்டையே கேட்டுக்குங்க.. அதென்ன உங்களுக்கு மட்டும் ஸ்பெசல்லா சுக்கு காபி.. வீட்டுல எல்லாருமே ஒன்னுதான.. அதனால எல்லாத்துக்கும் இதையே போடச் சொல்லுங்க... ம்.. பட் செம டேஸ்ட்." என நாக்கை தன் இதழ்களில் சுழல விட்டாள் ஹரிணி..
" ஏய் நீ குடிச்சியா.."
" நீங்க ரொம்ப லேட் பாஸ்.. பதில் தெரிஞ்சதுக்கு அப்புறம் கேள்வி கேக்குறீங்க.. போங்க..." என அவனின் காலை காபியை கபளிகரம் செய்வாள்..
" ஏம்மா காபிய அவா கைல கொடுத்திங்க.. இந்து தான வருவா எப்பையும்.. எங்க காணும் இந்துவ.. " தரன் கேள்விகளை அடுக்கியவாறு மலரின் முன் வந்து நிற்க..
"அடுத்த வீட்டுக்கு போகப் போறவ எதுக்கு டா உனக்கு வேல செய்யனும்.. அவன் அவன் நிழல் அவன் அவன தொடரும்ங்கிற மாறி.. அவா அவா புருஷனுக்கு அவா அவா பொண்டாட்டி தா வேல செய்யனும்.. இனிமே அப்படித்தா.." நாச்சியம்மாள் கறார்ராக..
" இருந்தாலும் அவள எதுக்கு அப்பத்தா.." என இழுக்க..
" உம் பொண்டாட்டி அங்கம் நோவ உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது.. போடா வேலயப் பாத்துட்டு.." என்க.. ஒன்னும் சொல்ல இயலாது படிக்கட்டில் நின்று சிரித்துக் கொண்டு இருந்த ஹரிணியைப் பார்த்து முறைத்தபடி சென்றான்..
மதியம் அவனால் வீட்டிற்கு வர இயலாத போது ஆலைக்கு சாப்பாடு கொடுத்துவிடுவது வழக்கம்.. மாலை நான்கு மணியாகியும் இன்னும் வரவில்லை.. வாயிலைப் பார்ப்பதும் பின் மூடையை பார்ப்பதும்மாக இருந்தான் தரன்.. பசிக்கிறது இல்லையா..
" ஏப்பு இந்த கூழையாது குடிய்யா.. உன்ன இம்புட்டு நேரமா வெறும் வயித்துல இருக்க விட்டது தெரிஞ்சா நாச்சியம்மா எங்கள உண்டு இல்லைன்னு பண்ணிடுவா.. இந்தாப்பு.." நாச்சியம்மாளின் தோழி பாட்டி.. இது வழக்கம் தான் என்ற போதும் தயங்கியவாறே தூக்குச் சட்டியை வாங்கினான்..
'வாம்மா நல்லாயிருக்கியா...'
' எப்படி இருக்க...' என நலம் விசாரித்தவர்களுக்கு பதிலளித்தபடியே கையில் கூடையுடன் வந்தாள் ஹரிணி.. இவனைப் பார்த்து புன்னகைத்தவள்.. " ஸாரி பாத தெரியாம ரொம்ப நேரமா சுத்திட்டேன்.. ரொம்ப லேட் ஆகிடுச்சுல்ல.. வாங்க சாப்பாடலாம் டைம் வேஸ்ட் பண்ணாம.." என அங்கிருந்த கணக்கெழுதும் அறையை நோக்கி நடக்க..
" இருக்குறதே நாலு ரோடு.. இதுல அவா பாத மாறிட்டாலாம்.. கதவிடுறா பாரேன்.." என்றபடி கையை பார்க்க அதில் தூக்கு இல்லை..
அறையில் வாழை இலை விரித்து அதில் பதார்த்தங்கள் அடுக்கப்பட்டிருந்தனர்.. " நீ சாப்டியா.." தரன் அக்கறையுடன்
" இல்ல இப்பத்தா.. ம்..." என கூழைக் குடித்தவள்.. " அந்த பாட்டிட்ட ரொம்......ப நல்லா இருந்ததுன்னு என்னோட சார்பாக சொல்லிடுங்க. " என்க..
" என்ன பாட்டிட்டையா.. நீ எப்ப வந்த இங்க..." வினாவ.
அவனை ஜன்னலின் அருகே நிறுத்தி " அதோ தெரியுதா.. அந்த மரத்துக்கு பின்னாடி கிட்ஸ் எல்லாரும் கிட்டிப்புல் வெளாண்டுட்டு இருக்காங்கல்ல அவங்க கூட சேந்து விளாண்டுட்டு இருந்தேன்.. பாட்டி உங்க கிட்ட தூக்க கொடுத்தாங்களா அதா உள்ள என்ன இருக்கும்னு பாக்க ஆவலோட வந்தேன்.. சூப்பரா இருக்கு.. லேட்டா வந்திருந்தா மிஸ் பண்ணீருப்பேன்ல.. ம்..ம்..." விரலை சப்பியவாறு .
" நீ எதுக்கு இப்படில்லாம் பண்ற... பைக் கீ ய மறச்சுவச்சுக்கிறது.. ரூம நீட்டா வச்சிக்காம குப்......ப்ப மேடு மாறி மாத்திவச்சுக்கிறது.. ஈரத் துண்ட வேணும்னே கொண்டு
வந்து பெட் ல போட்டுவக்கிறது முக்கியமா அந்த மூங்கில் ஊஞ்சல்.. அத எங்க வச்சிருக்கன்னு கூட எனக்கு தெரியல.. எதுக்கு என்னோட டென்ஷன கூட்டுறன்னு எனக்கு தெரிஞ்சாகனும்.." கடுப்புடன்..
" பிகாஸ் நா உங்கள பழி வாங்குறேன்.." கூலாக..
" என்ன.."
" எனக்கு பெட் ல இடம் தரலைல்ல நீங்க.. அதா.. கூடவே என்ன தேவையே இல்லாம திட்டுனதுக்கும் சேத்துதா.." குதுகலத்துடன்..
" ஹா.. ஹா.. ஓ.. இதுக்குத் தானா.. ஹா.." ஆலையின் இயந்திர இரைச்சலையும் மீறி கேட்டது அவனின் சிரிப்பொலி..
" ஹலோ.. நா ஒன்னும் ஜோக் சொல்லல.. இப்படி சிரிக்குற அளவுக்கு.. நிப்பாட்டுங்க.. ஸ்டாப் பிட்.." முகம் சிவந்து கத்தினாள் ஹரிணி..
" உன்னோட வயசென்ன.." சிரிப்புடனே..
" ட்வென்டி த்ரீ.. எதுக்கு.. "
" பெரிய பொண்ணா இருந்துட்டு.. இப்படி சின்னப் பிள்ள மாறி யோசிருக்கியா.. எனக்கு சந்தேகம் வந்திடுச்சு அதா கேட்டேன்.. நெக்ஸ்ட் டைம் கொஞ்சம் வயசுக்கு ஏத்தமாறி யோசிச்சு பழி வாங்கு சரியா.. போ வீட்டுக்கு.. அப்பத்தா ஃபோன் பண்ணிக்கிட்டே இருக்கு உன்ன காணும்னு.. பத்திரமா போ.. பாத மாறாம.." புன்னகையுடன் சென்றான் அவன்..
" என்ன இப்படி சொல்லீட்டான்.. இவன சாப்ட்டா ஹண்டில் பண்ணிருக்க கூடாது போல.. இனிமேல் பிளான் பி தான்.. ஒரு பொண்ணுக்கிட்ட கேட்கக்கூடாது கேள்விய கேட்டுட்டேல்ல.. உன்னோட கிரைம் லிஸ்ட்ல இதையும் நா சேத்துக்கிறேன்.. வாடா.. நீயா நானான்னு பாத்துக்கலாம்..." என முணுமுணுத்தபடி சென்றாள் அவள்.. பின்ன வயசு என்னென்னு கேட்டிட்டானேப்பா அதுவும் அவா கிட்ட.. ச்ச..
இந்த நிகழ்வுக்கு பின் இருவரும் பேசத் தொடங்கியிருந்தனன்..
இன்று பௌர்ணமி.. திருவிழா முடிந்த முதல் பௌர்ணமி அங்கு விசேஷமானது.. தரனின் கைபேசிக்கு அழைப்பு வந்தது.. பைக்கை ஓரமாக நிறுத்தியவன்..
" ஹலோ..." என்க..
" ஹாய்.. நா ஹரிணி.. ஞாபகம் இருக்கும்னு நெனைக்குறேன்.. "
"இல்ல.. எனக்கு அந்த பேர்ல யாரையும் தெரியாது.. " என கட் பண்ண.. அவள் மீண்டும் அழைத்தாள்.. ரிஷிக்கு அல்ல மலருக்கு..
நடந்ததை ஒரு வரி விடாமல் மலரிடம் ஒப்பித்தவள்.. " நா ஃபோன் பண்ண எடுக்க மட்டேங்கிறாரு.. " என புகார் செய்ய.. இம்முறை அவனிடம் இருந்து கால் வந்தது..
" ஹலோ.. இப்ப நா யாருன்னு தெரிஞ்சதா.. இன்னைக்கு ஈவ்னிங் என்ன பண்றீங்கன்னா.. இருக்குற வேலை எல்லாம் முடிச்சுட்டு ஒரு ஆறு ஆறரை மணிக்குள்ள நம்ம தோப்பு வீட்டுக்கு வந்திடுங்க.. நாம இன்னைக்கு அங்க தா தூங்கனுமாம் கிராணியோட ஆடர்.. அப்புறம் எட்டு மணிக்குள்ள கோயில்ல ஏதோ பௌர்ணமி பூஜன்னு ஒன்னு நடக்குமாம்.. பொங்கல்லாம் வைக்குறாங்கலாம்.. சீக்கிரம் வாங்க.. காலியா போய்டுச்சின்னா நா பொறுப்பில்ல.. சுத்தி நிறைய மரம் ஒரே காடு ஒரு என்டர்டைமேன்ட் கூட இல்ல.. அதுனால சீக்கிரம் வந்துடுங்க.. பை.." அவனை பேசவே விடாது ஃபோனை வைத்துவிட்டாள்..
" ஏய்.. ஹலோ.. ஹலோ.. " கேட்கத்தான் யாருமில்லை.. வீட்டிற்கு கால் செய்து " அப்பத்தா.. என்ன இது.. அவள எதுக்கு தோப்பு வீட்டுக்கு அனுப்புனீங்க.. என்னாலல்லாம் அங்க போக முடியாது.. எனக்கு வேல நெறையா இருக்கு.. அவள வீட்டுக்கு வரச் சொல்லுங்க.." சிடுசிடுத்தான்..
" மரியாதையா நா சொல்லுறத கேளுடா.. இன்னைக்கு பௌர்ணமி.. புதுசா கல்யாணம் ஆனதுங்க எல்லாரும் கோயில்ல தா தங்குவாங்க.. உனக்கு சிரமமா இருக்கும்னு தா தோப்பு வீட்டு சாவி கொடுத்து விட்டேன்.. புதுசா கல்யாணம் பண்றவங்க செய்யுறது தான இது.. இதுக்கு போய் கோய்சுகிற.. ஓ அண்ணன்லாம் அங்க போய் தங்கிருக்கான்.. போடா.. போய் வாழ்க்கை வாழப் பாரு.. வந்துட்டான் எங்கிட்ட மூஞ்சிய காட்ட.." என ஃபோனை வைத்தார் அவர்..
" ஏ அப்பத்தா.. எதுக்கு அண்ணன கஷ்டப்படுத்துற.. அங்க கட்டில் கூட கெடையாது.. கொசு கடில்ல.. ஃபேன் கூட இல்லாம எப்படி தூங்குவாங்க உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல அப்பத்தா.." பிரகாஷ்..
அவனைப் பார்த்து பெண்கள் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.. " அட போடா போக்கத்தவனே.. உந் தாத்தா மாசத்துல நாலு நாளு என்ன அங்க கூட்டீட்டு போய்டுவாரு.. ஆறு பிள்ள பெத்ததுக்கு அப்புறமும் நாங்க அங்க போறத நிப்பாட்டலையே.. உந்தாத்தாக்கு இருந்த தெறம உங்கண்ணனுக்கு இருக்கான்னு தா தெரியல.. ஹிம்.. அந்த சோலையாத்தா தா காப்பாத்தனும்.. " என சொல்லி செல்ல..
" ஏன் சித்தப்பு உங்காத்தா நா பேசுனா மட்டும் புரியாதமாறியே பதில் தருது.. அண்ணன எதுக்கு அனுப்புறீங்கன்னு கேட்டா.. இது தாத்தா கூட ஊர் சுத்துன கதைய சொல்லுது.. அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்.." புரியாமல்..
" டேய் தோப்பு வீட்ட சுத்தி புளியமரம் ஆலமரம்ன்னு அடர்த்தியா மரம் இருக்கும் டா.. காடு டா அது.. பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு கவர்மெண்ட் அனோன்ஸ் பண்ண காடு.."
"அதுக்கு.. "
" அந்த காலத்து லவ்வர்ஸ் பார்க் டா அது.. இப்ப காட்டுக்குள்ள தங்க கவர்மெண்ட் பர்மிஷன் தர்றது இல்ல.. திருவிழா முடிஞ்சு வர்ர பௌர்ணமி ல மட்டும் காட்டுக்குள்ள தங்க அனுமதிப்பாங்க.. அதுவும் கல்யாணமானவங்கள மட்டும்.. கூடாரம் மாறி போட்டு தங்குவாங்க.. உந் தாத்தா அங்க வீடே கட்டிவச்சுட்டாரு.. நீயும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் உம் பொண்டாட்டியோட போ.. என்ன.. " கவியரசன்.
" ஓ.. கிராமத்து மெரினா பீச்.. சர்த்தா.." பிரகாஷ்..
அந்த பீச்சில் தா இப்போது இருக்கிறார்கள்.. ஆனால் ரொமான்ஸ் நடக்குமா.. தெரியலையே..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..