முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 27


 

அத்தியாயம்: 27


மாலை ஐந்தரை மணிக்கே அந்த காட்டில் இருள் சூழ்ந்துவிட்டது.. அந்த இருள் ஒருவித அமானுஷ்ய பயத்தை உண்டாக்கியது.. ஹரிணி கால்கடுக்க அந்த புளிய மரத்தை வெறித்துப் பார்த்தபடி தொலைவிலேயே நின்று கொண்டு இருந்தாள்.. அதைத் தாண்டி தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும் ஆனால் பயம் அவளை நகர விடவில்லை.. 


காட்டின் எல்லா பகுதிக்கும் செல்ல அனுமதி இல்லை , இதற்கு என்று சிறிய பகுதியை வேலி போட்டு கொடுத்திருந்தனர் வனத்துறையினர். காட்டு விலங்குகள் வராத இடமாய் பார்த்து..


மரத்தின் பின்னே நின்று கொண்டிருந்தவளின் தோலில் ஒரு கரம் பதிய அதீத பயத்துடன் கத்தினாள் ." ஆ......" 


" ஹா.. ஃபோன்ல ஜான்சிராணி மாறி பேசுன.. இப்படி பயப்படுறியே.. " தரன்.  சிரிப்புடன் நின்றவனை தாவிச் சென்று அணைத்தாள்.. 


" நா.. நா ரொம்ப பயத்துட்டேன்.." அவனின் மார்பில் முகம் புதைத்தவாறு.. அவளது அணைப்பில் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வழி தெரியாமல் நின்றான்..


" இங்க நின்னு எத எட்டி எட்டிப் பாத்துட்டு இருக்கா.." தன் உணர்வை மாற்றும் பொருட்டு கேலியாக வினவ..


" அங்க யாரோ நடமாடுன மாறி இருந்துச்சு.. அதா.. நீங்க வேற பின்னாடி சொரண்டி பயமுறுத்திடீங்க.." தலை நிமிர்த்தாமலேயே.. 


" இது பாதுகாப்பானா இடம் தா..   பயப்பட வேண்டிய அவசியமே இல்ல.. " நடுங்கிக் கொண்டு இருந்தவளை தோலில் கை வைத்து லேசாக அணைத்தவாறு கூற.. 


" இந்த மரத்துக்கு மேல கோஸ்ட் இருக்குமா.." தலை நிமிர்த்தி அச்சத்துடன் விழி விரிய வினவிய அவளை காதலுடன் இறுக அணைக்க அவனின் மனம் சொல்லியது..


இருந்தும் அவள் காதுகளில் " நாம வேணும்னா மேல போய் பாத்துட்டு வருவோம்மா..‌ என்ன சொல்ற.. மரம் ஏற தெரியுமா உனக்கு.." என புருவம் உயர்த்தி கேட்டவனை கண்சிமிட்டாது பார்த்தாள்.. 


" கிராணிக்கு ஃபோன் பண்ணி இங்க தங்க முடியாதுன்னு சொல்லுறீங்களா.. ப்ளீஸ்.. " 


" அதா நீயே சொல்ல வேண்டியது தான.." 


" ம்ச்.. காட்டுக்குள்ள உள்ள வர்றதுக்கு முன்னாடியே அந்த ஆஃபிசர் என்னோட மொபைல்ல பிடிங்கி வச்சுட்டான்.." சிணுங்கியவள் அவனின் அணைப்பை உணரவில்லை..


" ஓ அப்ப எங்கிட்ட மட்டும் விட்டு வைக்க அவென் என்ன எனக்கு மாமனா மச்சானா.. எங்கிட்டையும் இல்ல.. அப்பத்தா இன்னைக்கு நாம இங்க தான்னு ஸ்ட்ரிட்டா சொல்லிடுச்சு.. போலாம் வா.." .


" கொஞ்சம் முன்னாடி நடந்தா.. நா உங்கள ஃபாலோ பண்ணீட்டு வந்துடுவேன்.." 


" மேடம் என்ன விட்டா நல்லா இருக்கும்.. அப்போ தா என்ன ஃபாலோ பண்ணிட்டு வருவிங்க.." அவள் அணைத்திருப்பதை சுட்டிக்காட்ட.. சட்டென விலகிவள்.. 


" போங்க.." வெடுக்கென்று.. அவள்  வெட்கப் படுவாள் என்று  எதிர்பார்த்தவன் ஏமாந்து போனான்.. பாவம் அவனூன் அணைப்பு அவளுள் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை போலும்.. 


" உங்களுக்கு பேய் மேல பயம் இருக்கா.." பின்தொடந்து கொண்டே நடுங்கிய குரலில் கேட்க..


" ம்.. எம் பின்னாடியே வருதே ஒரு  மோகினி பேய்.. அத பாத்தா கொஞ்சம் பயமாத்தா இருக்கு.." கேலியாக..


" எங்க.." கலவரத்துடன் அவனை ஒட்டி நடந்தவள் பின்னே திரும்பி பார்க்க.. 


" மோகினின்னு உன்னத்தா  சொன்னேன்.. வா.." என்றவனை முறைத்துக் கொண்டே பின் தொடர்ந்தாள்..


ஓட்டு வீடு தான் இருந்த ஒரு அறையின்  சிறிய பகுதியை  தட்டிக் கொண்டு பிரித்து வைத்தான் அவள் உடை மாற்ற.. சிறிய கட்டில் அதை தனக்கென்று ஒதுக்கியவன் பாயை அவளிடம் இரவில் தூங்கிக் கொள் என பொருந்தன்மையாக கொடுத்தான்.. பின் இருவரும் கோயிலுக்குச் செல்ல ஆயத்தமாகினர்.. 


"எதுக்கு அத இங்க வச்சிருக்கிங்க.." தட்டியை சுட்டிக்காட்டி . 


" நைட் உனக்கு அவசரமா வந்தா அந்த அத்துவான காட்டுக்குள்ள தனியா போய்டுவியா..." 


" நோ.. நோ.. நா போ மாட்டேன் பா.." 


" அதுக்குத்தா இது.. பாத்ரூமா யூஸ் பண்ணிக்க.. கிளம்பு சீக்கிரம்.." 


" இப்ப நாம எங்க போறோம்..." 


" சுனை ல குளிச்சுட்டு கோயிலுக்கு போனும்.." 


" ராத்திரில சுனைல குளிக்கப் போறோம்மா.. வாவ்.. சூப்பர்.." என உற்சாக நடை நடந்தவளை நீரோடையின் சத்தம் வரவேற்றது.. 


மூலிகை செடிகளின் மணத்துடன் தெளிவாக இருந்த அந்த நன்னீரோடை இரவு பௌர்ணமி ஒளியில் வெள்ளியை உருக்கி வார்த்தது போல் இருந்தது.. 


அதில் நீராடி முடித்தவர்கள் நீராடி ஈரத்துணியுடன் கோயிலை அடைந்த போது அவர்களைப் போல் மேலும் பல ஜோடிகள் இருந்தனர்.. 


" நா மட்டும் தா இருக்கேன்னு  நெனைச்சு பயந்துட்டேன்.. இவ்வளோ பேர் இருக்காங்க..‌ இனி பயமில்லப்பா.." 


" அப்ப இவ்ளோ நேரமா உங்கூடவே இருந்த நா உங் கண்ணுக்கே தெரியலயா.." கருவறையில் நுழைந்தபடியே கேலியாக கேட்டான்..


' மனுஷனா இருந்திருந்தா கண்ணுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருப்ப.. நீ தா ட்ராகுள்ளா வாச்சே.. என்னோட தூக்கத்த கெடுக்குற ட்ராகன்..' மனதிற்குள் புலம்பியவள் மௌனமாகவே வந்தாள்..


" ம்.. பேசுமா பேசு.. எப்எம் மாறி நான்ஸ்டாப்பா பேசீட்டு இருப்ப..‌ என்னாச்சி உனக்கு..  திடீர்னு பேட்டரி போய்டுச்சா என்ன.." என நக்கலாக கேட்க..


' வேண்டாம் ஹரிணி நாம மனசுல நெனச்சத சொன்னா இந்த காட்டுக்குள்ளையே விட்டுட்டு போய்டுவான்..‌ வீடு போய் சேர்ர வரைக்கும் இவன்ட வாயக் குடுக்கக் இருக்குறது தா உனக்கு நல்லது.. ' .


" ஓய் பதில் இன்னும் வரல.." 


' பதில் சொல்லாம விடமாட்டான் போலயே ' திருதிருவென முழித்தவளை காப்பாற்றும் விதமாக குருக்கள் தீபாராதனை காட்ட கவனத்தை மூலவர் மீது செலுத்தினர்.. குருக்கள் குங்குமத்தை மனைவிக்கு கணவனை வைக்கச் சொல்ல தரன் தன் மோதிர விரலால் குங்குமத்தை எடுத்து ஹரிணியின் நெற்றி  வகிட்டில் வைக்க இருவரின் கண்களும் ஒன்று கலந்தன.. 


நடந்த திருமணத்தை திருமணமாக ஏற்றுக்கொண்டு ரிஷியை தன் கணவனாக அதில் செதுக்கி வைக்கத் தொடங்கினாள் பெண்.. காதல்என்று அடித்து சொல்ல முடியாத ஒரு உணர்வானது அவன்மீது அவளுக்கு உண்டு.. என்ன உணர்வென்று தெரியவில்லையானலும் அவனின் கண்களில் தன்னை தொலைப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள் ஹரிணி.. 


குங்குமமிட விரலை நெற்றி வகிட்டில் வைக்கும் போது விழி மீடி அதை ஏற்றுக் கொண்ட மனையாளின் பின்பம் மனதை நிறைத்தது.. ஹரிணி தன்னை நேசிக்கவில்லை என்றாலும் நிராகரிக்கவும் இல்லை என்பதை அவளின் கண்களின் மூலம் அறிந்தவனின் முகத்தில் இப்போது கர்வம் புன்னகை தோன்றியது..


தன் நெற்றியில் குங்குமம் இருக்க தரனின் நெற்றியில் ஒன்றுமில்லாமல் இருப்பதைப் பார்த்தாள்.. திருவிழாவின் போதும் அவன் நெற்றி வெறுமனே இருந்தது  நினைவு வந்தது.. அதை அவனிடம் ஏன் என்க..  " எனக்கு கடவுள் மேல நம்பிக்க ‌இல்ல.. " என்றான் அவன்..


" நம்பிக்க இல்லாமத்தா திருவிழாவையே எடுத்து  நடத்துனீங்களோ.." சந்தேகமாக.. 


முன்னே சென்று கொண்டிருந்தவன்  திரும்பி அவளை நேருக்கு நேராகப் பார்த்து, " எனக்குத்தா இல்லன்னு சொன்னேன்..‌ அதுக்காக‌ மத்தவங்க நம்பிக்கைய நா உடைக்க விரும்பல.. திருவிழா , இந்த பூஜ எல்லாமே அப்பத்தாக்காக தா.. மத்த படி அந்த கல்ல கும்புடுறதுல எனக்கு இஷ்டமில்ல.." மீண்டும் தன் நடையைத் ‌தொடர்ந்தான்.

 

" இருந்தாலும்.. " என பேச்சை தொடர்ந்தவளிடம்..


" ஸ்டாப் பிட்.. எல்லாத்துக்கும் உங்கிட்ட‌ விளக்கம் சொல்லனும்னு அவசியமில்ல.. நா இந்த வெளக்கம் கொடுத்ததே பெரிசு.. எனி டைம் என்ட கேள்வி கேட்டுக்கிடுடே இருக்காத.. உ நல்லதுக்குத்தா சொல்றேன்.. " சிடுசிடுத்தவன்‌ முன்னே சென்றான்.. 


மலங்க முழுத்தவள்.. " ஐய்யையோ.. விட்டுட்டு போய்டானே.. நா கேள்வி கேக்கல.. என்னையும் கூட்டீட்டு போங்க.. " என்ற படி கிட்டத்தட்ட ஓட  வேண்டியதாக இருந்தது‌ அவனின்‌ நடைக்கு ஈடுகட்ட.. 


வெகு நேரம் ஈர உடையில் இருந்ததால் , குளிர் எடுக்க  இருவரும் உடைமாற்றி தங்கள் போர்வைக்குள் தங்களை புதைத்துக் கொண்டனர்.. 


முதலில் கொசு பின் அமானுஷ்ய சத்தம் இப்போது வேறு சில சத்தங்கள்.. முடியவில்லை இருவராலும்.. சுற்றி இருக்கும் ஜோடிகள் தங்கள் காதல் உலகில் சஞ்சரிக்க இவர்கள் மட்டும் பொறுமையை இழந்தார்கள்.. ஏனெனில் ஒரு காதல் ஜோடி அவர்களின் ஓட்டு வீட்டிற்கு அருகில் உள்ள புதரில் இருக்கின்றனர் போலும்.. ஹஸ்கி இருவரின் வாய்ஸில் பேச்சும்.. இடை இடையே சிணுங்கல் சத்தமும் கேட்டது.. 


ஒன்று போல் எழுந்து அமர்ந்தனர் இருவரும்.. ஒருவர் முகத்தை ஒரு பார்த்துக் கொள்ள இருவரின் முகத்திலும் ஒரு கள்ளச் சிரிப்பு தோன்றியது.. விளையாட்டில் கலந்து கொள்ள முடியாத போது , ஆட்டத்தையே கலைத்து விடுவார்களே அது போல் இவர்கள் ஏதே செய்யப் போகிறார்கள் என்றுரைத்தது அந்த சிரிப்பு.. 


வெள்ளை நிற தன் போர்வையை போர்த்திக்கொண்டு தரன்‌ ஹரிணியையும் இழுத்துக் கொண்டு காட்டிற்குள் வேலியைத் தாண்டிச் சென்றான்..


" என்ன பண்ண போறோம்.. வேலி தாண்டினா அந்த ரேஜ்ஜர்ஸ் க்கு தெரிஞ்சிடாதா.." மெல்லிய குரலில்.. 


" ஸ்.." என இதழில் விரல் வைத்தவன் .  மரங்கள் இருந்த கானகத்தில் ஊடுறுவி ஒரு மொட்டைப் பாறை மேல் ஏறினான்.. 


அவ்ஊஊஊ.. என ஓநாய் போல் விடாது  கத்தினான்.. அது பயம் கொள்ளும் படி இருந்தது.. 


" ரிஷி பயமா இருக்கு.. போய்டலாம்.. வாங்க.." கெஞ்சினாள் பெண்.. 


அவன் விடாது ஊளையிட அவனிற்கு பதில் கூறும் விதமாக  நிஜ ஓநாய்களும் ஊளையிடத் தொடங்கின.. எல்லாத் திசைகளிலும் ஓலமிடும் சத்தம் கேட்கவே அனைத்து ஜோடிகளும் பதறிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.. வனத்துறையினரும் என்ன நடக்கிறதென்று தெரியாமல் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்..


பாறை உச்சியில் இருந்து செல்லும் அவர்களை பார்த்து இந்த ஜோடிகளுக்கு குதுகலமாக இருந்தது.. தரன் புருவம் உயர்த்தி எப்படி என்க ஹரிணி தன் மூன்று விரல்களை உயர்த்தி சூப்பர் என்று சிரித்தாள் அவள்.. 


பௌர்ணமி நிலவின் ஒளி , 

தென்றலென மெல்லிய காற்று , 

உடலை ஊடுருவிச் செல்லும் அந்த விடிகாலைப் பனி, பக்கத்திலே தன் மனம் கவர்ந்த காதலி எந்த ஆண்மகனையும் சற்று தாபம் கொள்ளச் செய்யும்..


கலகலவென சிரித்த தன் காதலியை நோக்கி தன் வலக் கரம் நீட்டி  "ஃப்ரெண்ட்ஸ்.." என்றான்.. சற்று தயங்கியவள் பின் தன் வலக் கையை அவனிடம் நீட்ட பின் எடுத்துக் கொண்டாள்.. புருவம் சுருக்கி அவன்‌ என்ன என்பது போல் பார்க்க..


" ப்ரெண்டுங்கிறதுக்கா நா உன்ன பழி வாங்காம இருக்க மாட்டேன்.. என்ன சோஃபா ல‌ படுக்க வச்ச உனக்கு நிச்சயம் தண்டன குடுப்பேன்.. இதுக்கு சம்மதமா.."


புன்சிரிப்புடன் " ஓகே கிட்.. தாராளமா

வாங்கிக்க..." 


" ஐ ஆம் நாட் எ கிட்.." என்றாள் இரு கரத்தையும் கட்டிக் கொண்டு குழந்தைத் தனமாக.. 


" நீ எப்ப பெரிய பொண்ணு மாறி பிகேவ் பண்றியோ.. அப்ப நா உன்ன கிட்ன்னு  கூப்பிட மாட்டேன்..‌ அதுவரைக்கும் நீ எனக்கு கிட் தா... " என்றான் கண்சிமிட்டி..


பெரிய மனசு பண்ணி ஒத்துக் கொண்டு கரம் நீட்டினாள்.. ஆடவனின் வலிய கரங்களுக்குள் தன் பூக்கரத்தை புதைத்தாள் " ஃப்ரெண்ட்ஸ்.." என்று.. 


நண்பர்கள் காதலர்களாக மாற வேண்டிய அவசியமில்லை ஆனால் காதலர்கள் நிச்சயம் சிறந்த நண்பர்களாகத் தான் இருக்க வேண்டும்..


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


அன்பே 26


அன்பே 28


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...