அத்தியாயம்: 28
உன்னை நேசிக்க
ஆரம்பித்த நிமிடம்
எனக்கு தெரியாது
ஆனால் இனி வாழப் போகும்
நொடிகள் அனைத்தும்
உன்னை நேசிக்க
மட்டும் தான் என்பது தெரியும்
இந்த காதல் எல்லோருக்கும் பொதுவானது
சிலருக்கு மட்டும் நெருக்கமானது
ஹரிணியுடன்னான தன் நெருக்கத்தை அதிகமாக்கினான் தரன்.. சின்ன சின்ன சண்டைகள் , சமாதானங்கள் என தங்கள் உறவை மேம்படுத்திக் கொண்டிருந்தான்..
" மலரம்மா ஹரிணிக்கு நீங்க அவளுக்குன்னு போட்டுத்தர்ற காபி பிடிக்கலையாம்.. என்னோடத டெய்லி பிடிங்கி குடிக்கிறா... எனக்கு மட்டும் ஸ்பெசல்ன்னு வேற கேக்குறா.. பதில அவட்ட சொல்லீடுங்கம்மா.." மலரிடம் போட்டுக் கொடுத்து விட்டு சென்றவன்... ஹரிணியை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு வேறு சென்றான்..
" எங்க அந்த கோணக் காலு சிறுக்கிய.. எம்பிள்ளைக்கு குடுக்குறதையா பிடிங்கி குடிக்குறா அவா.. இன்னைக்கு உன்னைய என்ன பண்றேன்னு பாருடி.." என சத்தமிட.. அதை கேட்டு வந்தவளை..
' வராதே ....போ ......' என கையசைத்தார் கிருபாவதி..
' எதுக்கு ' என தெரியாமல் சமையலறையின் வாசலிலேயே திரும்பி விட்டவளை பார்த்து விட்டார் மலர் .
" அடியே நில்லு டி.." மலர்..
" பூவத்த எதுக்கு என்ட கோபமா பேசுறீங்க.."
" அப்பராணி மாறி முஞ்சிய வச்சேன்னா சுடுதண்ணிய ஊத்தி விட்டுடு வேன் பாத்துக்க.. அதென்ன டி பழக்கம் வேலைக்கு போற பையன்ட இருந்து பிடிங்கி சாப்பிடுறது.. அறிவில்ல.. வேணுமா கேட்டு வாங்கனும்.. அத விட்டுட்டு இன்னொரு மொற இப்படி பண்ணனு தெரிஞ்சது நிஜமாவே உங் கால ஓடச்சி கோணக் காலாக்கிடுவேன்.. ஜாக்கிரதை.. போ.. அவென் கெளம்பீட்டான்.. காபி கூட குடுக்காம.. என்ன பொண்டாட்டியோ நீ.."
இப்படி அவள் வழிப் பறி செய்யும் காபிக்கு வேட்டு வைத்தான்.. மறைத்து வைத்திருக்கும் பைக் கீ யை இப்போது தேடுவதே இல்லை.. சாவி போடாமலேயே ஸ்டாட் செய்ய பழகிக் கொண்டான்.. பின்னே எத்தனை பைக் கீ வாங்குவது.. ஈரத் துண்டைக் கூட அவன் இப்போது கண்டு கொள்வது இல்லை..
"திருந்தீட்டானா என்ன.. இருக்காதே.. இன்னைக்கு ராத்திரி உன்ன கண்டிப்பா இந்த பெட்ல படுக்க விடமாட்டேன்டா.." என ஜக் நீரை பெட்டின் மேல் ஊற்றினாள்.. கடுப்பாவான் என்று பார்த்திருக்கு அவன் சிம்பிளாக உறையை மட்டும் மாற்றி விட்டு படுத்துக் கொண்டான்..
" எப்படி.." .
" கிட்.. வர வர உன்னோட பழி வாங்கும் படலம் எல்லாமே டல்லா இருக்கே காரணம் என்ன.. கிட் ல இருந்து எல்கேஜி பாப்பாவா நீ டி ப்ரமோட் ஆகப் போறியா.. உன்ன இம்ப்ரு பண்ணிக்க இல்லைன்னா எனக்கு போரடிக்கும்.. ஓகே கிட் குட் நைட்..." என உறங்கியவனின் மேலேயே தண்ணீர் ஊற்றும் அளவுக்கு கோபம் வந்தது..
ஆனாலும்.. " என்ன பண்ணீங்க.. எப்படி அந்த வாட்டர பெட் உரியாம போச்சு.." .
" அது என்னமோ வாட்டர் ப்ருப் சீட்டாம்.. சென்னைல விக்கிறதா சொன்னானுங்க.. அதா எவ்வளவு செலவானாலும் பரவா இல்லைன்னு போட்டு விட்டுட்டேன்.. இனி நீ என்ன வெறுப்பேத்துற மாறி பண்ணக்கூடாதுல..." . என கேலி பண்ணி சிரித்தான்..
" ஏ...ய் ..." என பல்லைக் கடிக்க மட்டும் தான் முடிந்தது அவளால்..
குளியலறையில் நீர் விழும் சத்தம் கேட்டது.. தரன் டவுன்னுக்கு செல் உள்ளான்..
" பெரிய பொண்ணு மாறி பிகேவ் பண்ணச் சென்னேல்ல அதா உன்ன லாக் பண்ணீட்டேன்... இனி ஐ ஆம் நாட் எ கிட்.. ஐ ஆம் அ கேர்ள்.. " என அவளை உள்ளே வைத்துவிட்டு குளியலறையின் தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு கீழே சென்றாள்..
" ஏட்டி.. எங்க அவன.. பெரியவன் எம்புட்டு நேரம் தா காத்துட்டு இருப்பான்.. எப்பையும் வெரசா வந்திடுவான்.. இப்ப காணுமே அவன.. " நாச்சியம்மாள் என ஹரிணியின் கேட்க..
" அத எதுக்கு கிராணி எங்கிட்ட சொல்றீங்க.." ஹரிணி .
" போய் அவன கூட்டீட்டு வான்னு அர்த்தம்.. எல்லாத்தையும் இவளுக்கு புளி போட்டு வெலக்கனுமாக்கும்.. போய் கூட்டீட்டு வா... " மலர் சத்தமிட .
" யாரு மலரம்மாவ காலங்காத்தாலையே டென்ஷன் ஆக்குனது.." என்றவாறு தரன் படியில் இறங்கி வந்தான்..
ஆ.. என வாயை திறந்தபடி நின்றவளின் தாடையில் விரல் வைத்து வாயை மூடினான் யாரும் அறியாதவாறு..
ஹரிணி வேகமாக ரூமிற்கு ஓடிச் சென்றாள்.. அங்கு பாத்ரூமின் லாக் உடைக்கப்பட வில்லை..
" லாக் உடைக்கல.. எல்லாருமே கீழ இருந்ததுனால யாருமே திறந்து விட்டிருக்கவும் வாய்ப்பில்ல.. எப்படி வந்திருப்பான்.. அந்த சுனைல குளிச்சதுல இருந்து இவென் ஒரு மாறித்தா நடந்துகிறான்.. மேஜிக் மேன்னாகிட்டானோ.." என புலம்பிய படியே பாத்ரூமை நோட்டமிட்டாள்.. வேறு சீக்ரெட் கதவு ஏதும் உள்ளதா என்று .
" இங்க இருந்து வெளில போக இந்த டோர விட்டா வேற வழியே எனக்கு தெரியலையே.." ஹரிணி யோசனையோடு நிற்க..
" நா வேண்ணா எப்படி வந்தேன்னு சொல்லவா.. " திடீரென தனக்குப் பின்னால் இருந்து கேட்ட தரனின் குரலில் அதிர்ச்சியானவள் சட்டென திரும்பினாள்..
தன் இதயம் ஒரு நொடி நின்று பின் தன்வேகத்தைக் கூட்டுவதை உணர்ந்தவளின் முகத்தில் இப்போது வியர்வை முளைக்க ஆரம்பித்தது.. ஏனெனில் இத்தனை அருகில் தரனை இதுவரை பார்த்ததில்லை..
ஆண்களின் அடையாளமாய் திகழும் முறுக்கேறிய மீசை.. இரண்டு அல்லது மூன்று சென்டிமீட்டர் அளவு மட்டுமே வளர்ந்து அவனின் கன்னம் மற்றும் நாடியில் பரவியிருந்த தாடி.. கஞ்சி போட்டு அயன் செய்த சட்டையின் வாசமும் வழலை கட்டியின் வாசமும் அவளைக் கிறங்கச் செய்தது.. அனைத்திற்கும் மேலாக அந்த சாம்பல் நிற கண்.. ப்பா.. அதில் என்ன வசியம் வைத்திருக்கிறானோ.. அது அவளை அவனுள் இழுத்துக் கொண்டிருந்தது..
தன்னை மீட்கும் பொருட்டு கால்கள் பின்னே நகர ஆரம்பித்தது.. அவள் பின்னே செல்ல அவன் அவளை நோக்கி முன்னேறினான்.. இருவரின் நடையும் சுவர் இருந்ததால் தடுத்து நிறுத்தப் பட்டது..
கைகளை சுவற்றில் வைத்து அவளை சிறை செய்தவன் " எப்படி இதுலருந்து வந்தேன்னு தெரிஞ்சுக்கனும் அப்படித் தான.." என அவளின் விழிகளைப் பார்த்தவாறு கேட்டான்..
அவள் ஆம் என தலையை மேலும் கீழுமாய் அசைக்க அங்கு ஓர் மூளையில் ஏழடி உயரத்தில் இருந்த சிறிய ஓட்டையைக் காட்டினான்.. அது வென்ட்டிலேட்டர் இருக்கும் ஓட்டை.. அதை பார்த்துவிட்டு தரனின் முகத்தை கேள்வியுடன் பார்த்தவளிடம்..
" ' ஹைட் பத்தாதே.. எப்படி வந்திங்க.. ரெண்டாவது மாடிலருந்து குதிச்சும் ஒன்னுமாகலையா.. ' அப்படீன்னு தான கேக்குப் போற .."
" ஆம்.. " என தலையை மீண்டும் ஆட்டினாள்..
" அத தெரிஞ்சுக நீயும் அது வழியா குதிச்சு வந்தா சரியா இருக்கும் ..." என நகர்ந்து அவளை உள்ளேயே வைத்து கதவை சாற்ற முயன்றவனை தன் பலம் கொண்டு தள்ளி விட்டாள்..
" இப்படில்லா பண்ணா கிராணிட்ட சொல்லிக்குடுத்துடுவேன்.." விரல் நீட்டி எச்சரித்தாள் .
" ஹய் கிட் உன்னோட கிராணி என்ன ஸ்கூல் ஹெட் மாஸ்டரா.. குச்சிய வச்சு அடிக்க.. " என சொல்லி சிரித்தவனை முறைத்தாள் ஹரிணி .
" ஓகே நாம இப்ப ஒரு டீல் வச்சுக்குவோம்மா.." தரன்
" ஏடாகூடமா டீல் வச்சா நா ஒத்துக்க மாட்டேன் பா.." ஹரிணி .
" ஏடாகூடமா டீல் வக்குற அளவுக்கு உம் மேல எனக்கு எந்த ஆசையும் இப்ப வரல.." என கடைசி வார்த்தையே அழுத்தமாக கூறியவனை மீண்டும் முறைத்தாள் ஹரிணி..
அவளின் முன் ரூபிக் க்யூப்பை வைத்தவன் " உன்ன சோஃபால படுக்கச் சொன்னதுதான இப்ப பிரச்சனை.. இத சால் பண்ணேன்ன.. உனக்கு தனியா.. பெட் அரேஜ் பண்ணுவேன்.. டூ வீக்ஸ் டைம்.. என்ன டீல் ஓகேவா... அதுக்குள்ள பண்ணலைன்னா.. " என அவளை ஒரு மார்க்கமாக பார்க்க.. அவள் திருதிருவென முழித்தாள்..
" ப்ராமிஸ்ஸா நீ விரும்பாத எதையும் நா செய்யச் சொல்ல மாட்டேன்.. டீலா.. நோ டீலா.. சீக்கிரம் சொல்லு.. ம்.. " கீழே தரனை அழைக்கும் ஓசை கேட்க.. அவளை யோசிக்க விடாமல் அவசரப் படுத்தினான்..
" ஓகே.. ஓகே.. டீல்.." என்றாள் சிறிய குரலில்.. இதில் உள்குத்து எதுவும் இருக்குமோ என யோசித்தவாறு..
சிந்தனையோடு இருந்தவளின் பிறை நெற்றியில் பூத்திருந்த வியர்வையை தன் விரல்களால் துடைத்து விட்டு புன்சிரிப்புடன் சென்றான் ரிஷி தரன்..
சிலையென அசையாது சில நொடிகள் நின்றவள் பின் தெளிந்து " இவெ என்ன டீவி சோ நடத்தப் போறானா.. விண் பண்ணா வீடு உனக்குத்தாங்கிற மாறி டீல் பேசிட்டு போறான்.. ஏதோ அழகா இருக்குன்னு வாங்கி வச்சிருப்பான்.. அத சால் பண்ற அளவுக்கு இவனுக்கு மூள இல்ல போல.. அதா என்ன சால்ட் பண்ண சொல்லூ கேக்குறான்.. காட்டான்..." ரிஷி தரனைப் பற்றி தெரியாமல்..
" ஏ.. ப்ளஸ்.. பீ...ப்ளஸ்.. சீ..இஸ் சீ...க்கொ....ல்டு..... " இழுத்துக் கொண்டு இருந்தான் கைப்பிள்ளை..
" ஏபீசி..." ஹரிணி என்றபடி அவனின் அருகில் அமர்ந்தாள்..
" வாம்மா ஆஃபர்ல வாங்கி வச்ச ஆடி காரே.. நாங்கள்ளா கண்ணுக்கு தெரியுரோம்மா என்ன.. “
“கண்ணுக்கு தெரியா எப்படி இருப்பீங்க.. “
“நீ இப்ப எங்கிட்ட வந்து பேசுறது அதிசயமாத்தா இருக்கு.. “
“ஏ.. “
“பெருச்சாலி மாறி பெருசுங்க கூடவே சுத்தீட்டு இருக்குற ஹரிணியா இப்ப வந்து பேசுறது..." . பிரகாஷ்..
" மூனு நாளா அரியர் எக்ஸம் எழுதப் போறேன்னு சென்னைலேயே தங்கிட்டா.. நாங்க எப்படி கண்ணுக்கு தெரிவோம்.. என்ன செம என்ஜாய்மென்டா .." கண் சிமிட்டிக் கேட்க..
" நீ வேற.. மூனு நாளுமே ஒரே ரூம்ல அடைஞ்சிருந்து மூச்சு முட்ட குடிச்சிட்டு அங்கையே வாந்தியையும் எடுத்துட்டு.. ஏதோ பீச்ல சன் பாத் எடுக்குறவன் மாறி பெப்பரப்பேன்னு படுத்துருப்பானுங்க.. வேறென்ன செஞ்சிருப்பானுங்க.. பாக்குறதுக்கு பத்து கொல பண்ணவங்க மாறி இருந்துட்டு, கேட்டா நாங்க வக்கீ.....லாம்.. இதுல கடமய காத்துல விடக்கூடாது , நீதிய நடுவீதில விடக்கூடாது , சட்டத்த பட்டத்துல பறக்க விடக்கூடாதுன்னு டைலாக்கு வேற..." அவனை வாரினாள் இந்துமதி..
" வாம்மா ஏ அத்த பெத்த ரத்திணமே.. எங்கிட்ட மட்டும் தா இந்த பேச்சு வெளில ஒன்னுமே இல்ல.. பயந்தாங்கொள்ளி.." பிரகாஷ் கேலி செய்தான்..
" ஏய் இனிமே இந்துவ அப்படி சொல்லாத.. அவளுக்கு கல்யாணமாகி அவளோட ஹஸ்பெண்ட் வந்துட்டா நல்லாருக்காது பாத்துக்க.." ஹரிணி..
" யாரு இவா ஹஸ்பெண்ட்.. அதுக்கு கல்யாணம் ஆகனும்ல.. பொண்ணு பாக்க வந்தவெ எல்லாம் ' ஐய்யோ காட்டேரி..’ ன்னு பின் பக்க வாசல் வழியா தப்பிச்சு ஓடிறானுங்க.. இத்தோட பத்தா பதினஞ்சான்னு தெரியல.. அத்தன பேரும் ஓடிட்டாங்க.. ஏன்னு தெரியாது.. ஆனா புத்திசாலிங்க அது மட்டும் தெரியும்.." பிரகாஷ் .
" ஆமாமா.. எனக்கு கல்யாணமே ஆகாது இவரு வரிசையா நாலு பொண்டாட்டி கட்டீட்டு வாழப் போறாரு.. உங்கூட படிச்ச அத்தன பேரும் இப்ப அப்பான்னு கூப்பிட குழந்தையோட நிக்குறானுங்க.. ஆனா நீ இன்னும் பத்தாங் கிளாஸ் கணக்குப் புத்தகத்தோட உக்காந்திருக்க.. வழக்கில்லாத வக்கீலு.." இந்து..
" எது புக்கு பத்தாங் கிளாஸ் இதா.. அதா ஒன்னுமே புரியலையா.. ச்ச நாங்கூட பெரிய சைசா இருக்கையும் என்னோட லா புக்குன்னு நெனச்சுட்டேன்.. நல்ல வேலை இத படிக்குறதுக்கு முன்னாடியே சொல்லிட்டிங்க இல்லைன்னா.."
" இல்லைன்னா என்ன பண்ணீருப்ப.." ஹரிணி.
" ஒரு வரி விடாம படிச்சு.. அத மனப்பாடம் பண்ணி.. அத அப்படியே நாளக் கழிச்சு நடக்கப் போற அரியர் எஸ்ஸாம்ல எழுதியிருப்பேன்.. " என்ற போது அந்த பத்தாம் வகுப்பு புத்தகத்தில் இருந்ததை சின்ன சின்ன துண்டு பேப்பரில் எழுதி வைத்திருப்பதை கண்டனர்..
" பிட் எழுதி வைச்சி பாஸ்ஸாக பாகுறான்.. " இந்து..
"அதுவும் டென்த் புக்க.. " ஹரிணி..
"டென்த்தோ லெவன்த்தோ எதையாவது ஒன்ன வச்சி இந்த வர்ஷம் கண்டிப்பா நா டிகிரி சட்டிஃபிகேட்ட வாங்கியே தீருவேன்.. தீருவேன்.. தீருவேன்.." என தரையில் அடித்து சபதம் செய்தவன் பின் மீண்டும் அந்த அல்ஜீப்ரா பார்முலாவையே துண்டு காகிதத்தில் எழுத... பெண்கள் இருவரும் தலையில் அடித்துக் கொண்டனர்..
" உன்னோட சபதம் நிறைவேற நா ஹெல்ப் பண்றேன்.. ஓகேவா.." ஹரிணி..
" ஓகே தா.. அப்படியே உன்னோட ப்ரண்ட்ஸ் நம்பர் இருந்த குடுத்துட்டு போ.. ப்ரீ டைம்ஸ் பேசி பழகி மைண்ட்ட ரிலாக்ஸ் பண்ணிப்பேன்.." என்றவனை தலையில் கொட்டிச் சென்றார்கள் மங்கையர்கள்..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..