முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 29

அத்தியாயம்: 29


ஒன் .....

டூ.....

த்ரீ......

.

.

.

.

.

நைன் ..

டென் ...



ஃபஸ்ட் க்ளாப்...


இருள் நிறைந்த அந்த அறையில் எல்ஈடி டீவியின் ஒளி மட்டுமே இருந்தது.. கதவுகளை மூடிக் கொண்டு விளக்கை எல்லாம் அனைத்து விட்டு டீப்பாயில் பாப்கார்ன், சிப்ஸ் என தின்பண்டங்கள் கடை விரித்து கிடக்க.. இரு கைகளையும் கொண்டு தலையணையை இறுக கட்டிபிடித்த படி தன் கட்டிலில் இல்லை சோஃபாவில் அமர்ந்திருந்தாள் ஹரிணி.. கான்ஜோரிங் படம் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.. பயத்துடன்..


செகண்டு க்ளாப்.. 


திடீரென அணைத்து வைக்கப் பட்டிருந்த விளக்குகள் மின்னி மறைந்தன.. உடனே படத்தை நிப்பாட்டியவள் " லைட்ஸ் எல்லாத்தையும் நா ஆஃப் பண்ணினேனே.. எப்டி ப்ளிங்க் ஆச்சு.. ம்ஹிம்.. எதுக்கும் ஆன் பண்ணீட்டே படத்த பாப்போம்.." என அணைத்து வைத்திருந்த விளக்கை ஆன் செய்து விட்டு படத்தை ப்ளே செய்தாள். 


க்ளாப்..


எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்டது.. அச்சத்துடன் போர்வையால் தன்னை மூடிக் கொண்டு படுத்திருந்தவள் காதுகளில் கேட்டது அந்த குரல்..


ஹரி..ணி..


ஐ ஆம் கோண கெட் யூ..


" ஹேய் யாரது.." போர்வையில் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி கேட்டாள் ஈனஸ்வரத்தில்..


" ட்ஸ் மீ.." என்றபடி அவளின் போர்வையை உருவியது..


அலறிய படி அவள் எழுந்து நிற்கவும் லைட்ஸ் ஆன் ஆகவும் சரியாக இருந்தது.. அவளின் போர்வை ஹங்கரில் தொங்கிக் கொண்டிருந்தது.. மெதுவாக சென்று அதை தொட அவளின் கையை ஒரு கை வந்து அழுத்தி படித்தது.. 


" ஆ.." என அலறியவளைப் பார்த்து சிரித்தான் ரிஷி தரன்.. 


" ஹா..ஹா.. கிட் உனக்குத் தா இருட்டுன்னாலே பயமே.. அப்புறம் எதுக்கு இந்த விஷப் பரிச்ச.. தனியா அதுவும் ஊஃபர் சவுன்ல பேய் படம்.. த்ரிலிங்கா இருக்கும்னு நெனைச்சியா.. ஆ.." தலையணையைக் கொண்டு அவனை அடிக்கலானாள்..


" ஸ்டுப்பிட் இடியட்.. என்ன பயமுறுத்துறதே  உனக்கு வேலையா போச்சுல்ல.. இன்னைக்கு உன்ன சும்மா விட்மாட்டேன்.." என அவனை துரத்தினாள்.. 


அடிவாங்காமல் இருக்க அறையைச் சுற்றி வந்தவன் ஒரு கட்டத்தில் கட்டிலில்‌ விழுந்தான்.. குப்புற விழுந்தவனை திருப்பி அவனின் மார்பில் ஏறி அமர்ந்தாள் ஹரிணி.. சட்டையின் காலரை பிடித்து  உ

உளுக்கியவள் ஞாபகம் வந்தவளாக..


 " ஏய் கதவ நா லாக் பண்ணீட்டு தான படம் பாத்தேன்.. எப்படி வந்த.. நீ வெளில போறத பாத்துட்டு தா நா லாக் பண்ணேன்.. இன்னோரு கீ வச்சிருக்கியா.. இல்ல சுவரேறி குதிச்சி பால்கனி வழியா வந்தியா.. பதில் சொல்லு.. “ என மீண்டும் உளுக்கினாள்..


" அது அப்படித் தா.. வந்த வழிய சொல்லக் கூடாது கிட்.. " 


"ம்ச்.. லைட்ஸ்ஸ எப்படி ஆன் பண்ண.. ஆஃப் பண்ண.. மரியாதையா சொல்லிடு.." 

மிரட்டினாள்.. 


தன் இரு கைகளையும் தலையணையாக்கியவன் அவளைப் கெத்தாக ஒரு பார்வை பார்த்து.. " அலெக்ஸா ப்ளே சம் ரொமாண்டிக் தமிழ் சாங்ஸ்.." என்ற உடன் டிஸ்கோ லைட்ஸ் ஆனாகி அறையை கலர் கலர் விளக்குகளால் மின்னச்ச செய்து..


 புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது.. என பாடல் ப்ளே யாக ஆரம்பித்தது.. விழி விரிய அதை ஆச்சர்யத்துடன் பார்த்தவளுக்கு மீண்டும் ஒரு சந்தேகம் எழுந்தது.. 


"நீ.. என்ன படிச்சிருக்க.." 


நவீன டெக்னாலஜி அதுவும் சிறிய கிராமத்தில்.. அறைக்குள் நுழைய அவன் ஃபிங்கர்ஸ் ஸ்கேனரை உபயோகித்திருக்கிறான்.. அறையில் இருந்த பாதி பொருள்கள் இந்த கால தொழில் நுட்பத்தால் ஆனவை.. வாட்ஸ் கோயிங் ஆன்.. காட்டானுக்குள்ள கம்ப்யூட்டர் நாலேஜ்ஜா..


" நமக்கு கல்யாணமாகி எத்தன நாள் ஆகுது..." 


" ம்ச்.. கேள்வி கேட்டா பதில் சொல்லனும்.. அதவிட்டுட்டு எதிர் கேள்வி கேட்டா என்ன அர்த்தம்.." 


" சொல்லுடி.. நமக்கு கல்யாணமாகி எத்தன நாள் ஆகுது .." வாயைத் திறக்காமல் பற்களுக்கிடையே வார்த்தைகளை மென்றபடி அவன் கூற..


அவனின் டி என்ற அழைப்பில் அவளது தேகம் சிலிர்த்தது.. இதுவரை அவளை டி என்று யாரும் சொன்னதில்லை.. மேடம் டார்லிங் போன்ற மரியாதை மிகு அழைப்புகளை ஏற்றவளுக்கு இது புதுவிதமான உணர்வை தந்தது.. அவனின் கண்களில் தன்னை தொலைத்துக் கொண்டே.. " நியர்லி ஃபோர் மத்ஸ்...".. 


" ஓ.. அவ்வளோ நாளாச்சு.. இப்பத்தா மேடத்துக்கு என்னப் பத்தி தெரிஞ்சுக்கனும்னு‌ தோனுச்சா.." என தன் விரலால் அவளின் மூக்கின் நுனியை உரசியபடி கேட்க.. அசையாது இருந்தவளிடம்


" ரிஷி தரன்.. வளந்தது ஸ்கூல் படிச்சது எல்லாமே சென்னை தா.. காலேஜ் டெல்லில  ***** யுனிவர் சிட்டி.. சிவில் இன்ஜினியர்.. இப்ப கொஞ்ச வர்ஷத்துக்கு முன்னாடி தா அக்ரிகல்சர் முடிச்சேன்.. இப்போதைக்கு இது போதும் உனக்கு.. " என்றவனின் விரல் அவளின் கன்னத்தில் கோலம் போட மதி மயங்கித்தான் போனாள் அவள்.. 


கன்னமெனும் களத்தில் விளையாட்டை முடித்து விட்டு இதழில் இளைப்பாற வந்து கொண்டிருந்த அவனின் விரல் திருத்தப்பட்டது கதவு தட்டப்பட்டதன் மூலம்..


  ‘ இவெங்க நம்மல ரொமான்ஸ் பண்ண விட மாட்டாங்களே..’ என எரிச்சலுற்றவன் எழவில்லை..


" கதவ தட்டுறாங்க.. " 


" காது நல்லாவே கேக்குது.." 


" அப்ப போய் தொறங்க.." சிணுங்கலாக.. 


" அப்ப நீங்க  எந்திரிங்கங்க.." அவளைப் போலவே..


" எதுக்கு.." 


" அரைமணி நேரமா நெஞ்சுலேயே உக்காந்திருக்க.. இன்னும் அரைமணி நேரம் இருந்த ஹாட்ட ஹாஸ்பிட்ல்ல  வச்சுத்தா பாக்கனும்..." என்றவுடன் எழுந்தவளின் முகத்தில் சிறிய வெட்கம்‌ வந்தது.. அன்று எதிர்பார்த்தது இன்று கிடைக்கவும்‌ ஆசை மேலோங்க நெருங்கியவனை கை பேசி அழைத்தது.. 


அழைத்து பிரகாஷ் " ண்ணே நா ரெடி.. வாண்ணே நேராகுது.." 


" ம் இதோ.." என நிமிர ஹரிணி அங்கு இல்லை.. பெருமூச்சு விட்டபடி சென்றான் தரன்.. 


பால்கனியில் நின்ற அவள் சிந்தனைவயப்பட்டாள்.‌. 'அவன் சொல்வதும் சரிதானே.. அவனைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முயற்சிக்கவே இல்லையே ஏன்.. ' என்றவளுக்கு ரிஷியை பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் உதயமானது..


" டேய் ராசு.. உமிய அள்ளீட்டுப் போக ராஜா வருவியான்.. அத தனியா மூட்ட கட்டு.. மேகம் யறங்கி வர்மாறி இருக்கு.. தூறுறதுக்குள்ள எல்லாத்தையும் அள்ளிடுங்கடா.." என்ற கவியரசனின் உத்தரவிற்கு இணங்க மதிய வேளையில்  அரிசி ஆலையில்  வேலை மும்மரமாக நடந்துக் கொண்டிருந்தது ...


கவியரசன் முன் தூக்குடன் வந்தார் காசி பாட்டி.. " ஏதோ ஒரு நாள் ஓ வீட்டு கஞ்சிய குடிச்சுடுச்சின்னு.. தெனோவும் கொண்டாருவியா ஆத்தா நீ.. " 


"தெனோவும் யாருய்யா கொண்டாந்தா.. வாரம் ஒருக்கத்தா.. புதன் கிழம அந்த புள்ள இங்க வரும் அதா எடுத்துட்டு வந்தேன்.. ரசிச்சு சாப்பிட ஆளு  இருந்தா பத்தூருக்கு சேத்தே சமப்பேன்ய்யா நானு..‌." பாட்டி .


" பத்தூருக்கு.. நீனு.. இன்னும் ஒம் மனசுல குமரின்னுதா நெனப்போ.. பாடைல போக வேண்டிய வயசுல பத்தூருக்கு சமக்குமால்ல இது.."


" மாமா.. எதுக்கு காசி பாட்டிட்ட வம்பு பண்றீங்க.." ஹரிணி . 


" வம்பு பண்றதுக்கு இது வயசு பிள்ளை பாரேன்.. ஆத்தா.. உம் பேத்தி வந்துடுச்சுல்ல அது கைலே கொடு.." கவியரசன்.. தூக்கை கையில் வாங்கியவளின் கண்கள் தரனை தேடியது.. 


" என்னம்மா தேடுற.. உம் பருஷனையா.. உரம் வாங்க போயிருக்கா.. வந்திடு வான்.." 


" பைக் நிக்குதே மாமா.." 


" உர மூட்டைகள பைக்ல வச்சு கொண்டாற ‌முடியாதும்மா.. அதா ட்ராக்டர்ல போயிருக்கான்.. வர்ற நேரம் தா.. நீ சாப்பிடு.." 


பாதியை மெதுவாக குடித்தவள்.. தரன் 

வந்து கொண்டிருப்பதைப் பார்த்து மீதியையும் குடிக்க முயன்றாள்.. 


" அம்மாடி உம் புருஷன் வந்துட்டான்.. அவனுக்கு குடுக்கலையா.." கவியரசன்..


" ம்ஹிம்.. குடுக்க கூடாதுன்னு தா வேகமா குடிக்குறேன்.." என்றவளிடம் இருந்து பிடிங்கினான் தரன்..


" மாமா பாருங்க இவர.." .


" டேய்.. என்ன விளாட்டுடா இது.." 


" சித்தப்பா.. இவா இப்படித்தா எப்பையும் பண்றா.. இவளுக்கு சப்போட்டா வராதிங்க.. " என்க அவர் கணவன் மனைவிக்கிடையே வரக்கூடாதென அமைதியாகி விட.. தூக்கை முழுவதும் குடித்து முடித்தவனை கண்டு முகத்தை திருப்பிக் கொண்டு ஹரிணி கிளம்புகிறேன் என்றாள்..


" தனியா வேணாம்மா.. மகனே கொண்டு போய் விட்டுட்டு வா.." 


" இவா என்ன பச்சை கொழந்தையா.. வந்த அவளுக்கு போகத் தெரியும் சித்தப்பா.." 


" நானே போய்க்குறேன் மாமா.. எனக்கு இவரோட தொண ஒன்னும் தேவயில்ல.." வீராப்பாக..


" மாமா சொல்றேன்ல நில்லும்மா.. டேய் வீட்டு ல பத்திரமா விட்டுட்டு வா.." என்றவரின் பேச்சை மீற முடியாமல் "வா..." என்றான் கடுப்புடன்..


" மாமா இவரு கடுப்போட பேசுறாரு.. போற வழியே இறக்கி விட்டுட்டா.. என்ன பண்ண மாமா.." 


" மாமாக்கு‌ ஒரு ஃபோன் பண்ணுடா.. மலரண்ணிட்ட சொன்னா போதும்.. இவென் அவங்களுக்குத் தா அடங்குவியான்..." 


" ஓகே மாமா.. நா பூவத்தைக்கு கால் பண்ணுறேன்.. பை.." 


அவளை பைக்கில் தூக்கி வைத்துக் கொண்டு புறப்பட பாதி வழியில் பைக் நின்றுவிட்டது.. என்ன ஆனது என இறங்கிப் பார்த்தவனுக்கு எதுவும் புரியாமல் குழம்பினான்.. பெட்ரோல் இருக்கிறது.. இருந்தும் ஏன் நின்றது என பார்க்க..


இறங்காமல் அமர்ந்திருந்த ஹரிணியின் முகத்தில் தோன்றிய கள்ளச் சிரிப்பு அவள் தா‌ இதற்கு காரணம் என சொல்லாமல் சொல்லியது..


" ஏய் என்னடி பண்ண வண்டிய.. மொத கீழ இறங்குடி.." 


" முடியாது டா.. நா வீடு வந்தா தான் டா இறங்குவேன்.. இல்லாட்டி பூவத்தைக்கு கால் பண்ணுவேன்.. இப்ப நா என்ன பண்ண இறங்கவா.. கால் பண்ணவா.."


" குட்டிச் சாத்தான்.. வண்டி ஸ்டாட் ஆகல.. தெரியலையா உனக்கு.. இறங்கி நடந்து போனும் வீட்டுக்கு.. இறங்கு கீழ.." சட்டமாக உட்கார்ந்து கொண்டு பேசியவளின்‌ மீதிருந்த கோபத்தில் கத்த.. 


" எனக்கு கண்ணு நல்லாவே தெரியுது.. பைக்க எப்படியும் தள்ளீட்டு தான போ போறீங்க.. என்னையும் சேர்த்து வைச்சு தள்ளுங்க.. என்னோட கால் கீழ் இறங்குனா அது நம்ம வீடாத்தா இருக்கனும்.."   


இம்சை என சில அடி தூரம் உருட்டியவனை பார்த்து.. " இன்கோம் இன்கோம் இன்கோம் காவாலே.. சாலே இனி சாலே..." என உரத்த குரலில் பாட..


" ஏய் நக்கல் பண்ணாமா வாய மூடீட்டு வா டி.. இல்லைன்னா சேத்துக்குள்ள உன்ன தள்ளி விட்டுடு வேன்.." 


" நா அப்படித்தா பாடுவேன் டாஆஆஆஆஆ.." 


" ஏய்.." ஆரம்பித்தவனை அவ்வழியே வந்த ஊர்காரர் ஒருவர் ஏறிட்டார்..


" என்ன தம்பி.. வண்டீல பிரச்சனையா.. நம்ம தோப்புல நிப்பாட்டீட்டு போங்க தம்பி.. சரிபண்ணி பெறவு எடுத்துக்கலாம்.. இப்ப நம்ம வண்டிய எடுத்துட்டு போங்க.." என தாராள மனதுடன் தன் சைக்கிளைத் தந்தார்.. மறுக்காமல் வாங்கியவன் ஹரிணியை ஏறச் சொல்ல அவள் பாடிய பாட்டையே மீண்டும் பாடினாள்..


" என்னோட கால் கீழ இறங்குனா அது நம்ம வீடாத்தா இருக்கும்.." என்றவளின் இடையில் கைவைத்து தூக்கியவன் கைக்கிளின் முன்பக்க கம்பியில் அமர வைத்து ஓட்டினான்.. பின் பக்கம் அமர வைத்தால் ரொமான்ஸ்ஸாக இருக்காது இல்லையா..


இருவருக்குமே அந்த பயணம் சொர்கத்தில் இருப்பது போல் தோன்றியது.. கன்னத்தில் விழும் அவனின் சூடான மூச்சுக் காற்று , அவ்வபோது இடையை தீண்டிச் செல்லும் அவனின் முழங்கை  இவை அனைத்தும் அவளுக்கு புதியதாக தெரிந்தது.. 


பைக்கிள் தன்னை உரசாது ஒதுக்கி  பார்த்து பார்த்து அமர்ந்த அவளை இப்போது தன் அணைப்பிலேயே கூட்டிச் சொல்வது அவனுக்கு சொல்லாவா வேண்டும்.. ஒவ்வொரு கணத்தையும் அவன் அணு அணுவாக ரசித்தான்.. 


ஆனால் அவனின் மகிழ்ச்சிக்கு குண்டு வைக்க அங்கு ஒருவன் காத்திருந்தான்.. யாரவன்..

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  

அன்பே 28

அன்பே 30

 

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...