முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 30

அத்தியாயம்: 30


வாழ்க்கையில் நாம்

           நினைத்தது 

எதுவும் நடக்காமல் போகும்         

           போதெல்லாம் 

ஆதரவாய் வந்து ஆறுதல் 

           சொல்வது 

  ' தனிமை ' 




அப்படி ஒரு தனிமையை நாடியே வந்திருந்தான் கௌதம்.. அவன் முகத்தில் இருக்கும் சோர்வே அவனின் துயரத்தின்‌ அளவை சொல்லும்.. 


ஹரிணி வீட்டிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே வந்து விட்டான்.. அவனிடம் வீட்டினர் எதுவும் கேட்கவில்லை காரணம் அவனின் வாடிய முகம் இருந்த நிலை.. வந்தவன் ஹரிணியை கேட்க அவள் வெளியில் சென்றிருப்பதாக சொல்லவே பின் பக்கம் தொழுவத்தில் இருந்த கிணற்று மேட்டில்  வந்தமர்ந்தவன்‌ அசையக் கூட‌ இல்லை..


" என்ன டிரைவர் நீங்க.. ஒழுங்கா ஓட்டவே தெரியல.. ஹப்பா அங்கங்க வலிக்குது.. நிப்பாட்டுங்க நா நடந்தே போறேன்..." ஹரிணி.


" இத நீ மொதல்லே சொல்லிருந்தா… இன்னேரம் நா வீடு போய் சேந்திருப்பேன்.. புளி மூட்டைய கட்டி இழுத்துட்டு போக யாருக்கு தா பிடிக்கும்.." தரன்..


சைக்கிளில் இருந்து குதித்தவள்.. " யாரப் பாத்து புளி மூட்டன்னு சொல்லுறிங்க.. இன்னைக்கு உங்கள நா பூவத்தட்ட போட்டு குடுக்கல.. பாருங்க இப்ப.. அத்த பூவத்த..” என கத்தியபடியே வீட்டிற்கு ஓடினாள்.. 


வீடு நிசப்தமாக இருந்தது.. மலரைத் தேட இந்து ஓடி வந்து ஹரிணியை அணைத்தாள் கலக்கத்துடன்..


" என்னாச்சு இந்து.. " 


" பின்..னாடி.." என கை காட்டினாள்.


என்ன என விரைந்து சென்றவள் கண்டது கௌதமை.. ஆனந்த அதிர்ச்சி..


" கௌதம்.." என ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் ஹரிணி.. தன் உற்ற தோழியின் அணைப்பு  அப்போது அவனுக்கு தேவையாய் இருந்தது.. 


அவளுடன் பழகிய இத்தனை வருடங்களில் பார்க்காது இருந்த இந்த நான்கு மாதங்கள்‌ மிக நீண்ட கொடிய நாட்களாக இருந்தது கௌதமிற்கு.. அதை அந்த அணைப்பு போக்காது என்றாலும் அவளின் ஆறுதல் தேவையான ஒன்றாக இருந்தது அவனுக்கு..


" ஏன்டா.. ஒரு ஃபோன் போட்டு சொல்லிருக்கலாம்ல.. எரும..          சாப்டியா.." நிச்சயம் ஹிட்லருடன் சண்டை போட்டு தான் வந்திருப்பான் என அறிந்தவள் அதை மாற்றும் பொருட்டு என்ன நடந்தது என கேட்காது வேடிக்கையாய் பேசினாள்.. 


அவன் இல்லை என தலையசைத்த உடன் வீட்டிற்குள் அழைத்து தட்டில் உணவை வைத்து ஊட்டி விட்டாள்..


‘க்கும் உள்ள நாள்ளயே நம்மல கண்டுக்க மாட்டா.. இதுல இவென் வேற வந்துட்டானா.. வெளங்குன மாறிதா...' அந்த காட்சியைப் பார்த்து கடுப்பானான் தரன்.. 


இருவரும் முறைத்துக் கொண்டு தான் திரிந்தனர்.. பிரகாஷ்ஷின் அறையில் தான் கௌதம் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.. 


இரவில்..


" என்ன டா ஆச்சு.. சண்டையா.. பரவால்ல விடு இது என்ன புதுசா.. சரியாகிடும்.." ஹரிணி சாதரணமாக..


பதில் சொல்லாமல் எழுந்து கூடத்திற்கு சென்றான்.. பின்னாலேயே சென்றவள் அவனின் கைகளைப் பிடித்து. " என்னாச்சு டா..." என்றாள்..


" என்ன வேணும் உனக்கு.." எரிச்சலாக சிடுசடுத்தான்..


" எனக்கு ஒன்னும் வேணாம்.. என்ன பிரச்சனைக்கு மட்டும் சொல்லிடு போதும்.." 


" எல்லாத்துக்கும் நீ தா காரணம்.. உன்னால தா நா இப்படி இங்க நிக்குறேன்.." உச்ச சுரத்தில் கத்தினான் கௌதம்.. வீட்டினர் அவனின் சத்ததில் கூடினர்.. 


அவனின் பேச்சில் அதிர்ந்து போனவள் " என்ன நடந்ததுன்னு  மொதல்ல சொல்லு.. அப்புறம் தா நா காரணமா இல்லையான்னு தெரியும்.. " கூலாகவே பேசினாள்.. இது அவர்களுக்குள் சகஜம் என்பது போல் இருந்தது..


வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.." இதோ வாராரே ஹிட்லர்.. அவரே சொல்லுவாரு.." என்றவன்..


 ' நானே அடி வாங்க தயாராகிட்டு இருக்கேன்.. இதுல இவா வேற.. உடம்ப இரும்பாக்கிக்கடா கௌதமா.. ம்.. ஸ்டார்ட்..' மனதிற்குள்..


அவன் நினைத்தது போலவே ஹிட்லர் ஆவேசமாக வந்தார்.. அவர் வாய் பேசத் தொடங்கும் முன்னே கை செயலில் இறங்கியது.. ஒன்று , இரண்டு , மூன்று.. மூன்றடிக்கு மேல் போனா திருப்பி அடிப்பது போல் எண்ணினான்.. நான்காவது அடி விழ வில்லை பிடித்து விட்டாள் ஹரிணி..


 'ஹப்பா பிடிச்சுட்டாகௌதமா..' கௌதம் மனதிற்குள். 


தரன் ' இன்னும் நாலு அடி விழுந்திருக்கலாம்.. ச்ச.. மிஸ்ஸாகிடுச்சு.. கொஞ்ச நேரம் கழிச்சி பிடிச்சிருக்காலாம்..' 


" எதுக்கு இப்படி அடிக்குறிங்கன்னு நா தெரிஞ்சுக்கலாமா.." ஹரிணி.. 


" இன்னும் அவென் எதுவும் சொல்லலையா.. எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிடுவானே.." என அவனை மீண்டும் அடிக்கச் சென்றவரை தடுத்தனர் குடும்பத்தினர்..


“அவெ எதுவும் சொல்ல.. “


" எப்படி சொல்ல முடியும்.. வெளில சொல்ல முடியாத அளவுக்கு..  எங் கௌரவத்தை பாழாக்குற அளவுக்கு செஞ்சிருக்கிறான் இவென்.. ஒரு தங்கச்சி இருக்கே.. அதுக்கு கல்யாணம் நடக்க போதே.. அத பத்தி எந்த கவலையும்  இல்லை.. இவென் மட்டும் சந்தோஷமா இருக்கனும்.. 


ஐஞ்சு வர்ஷமா நீயெல்லா ஒரு ஆளுன்னு மதிச்சு உங்கூட பழகுற இந்த பொண்ணுக்கு எப்படிடா துரோகம் பண்ண மனசு வந்துச்சு... " பேசிக்கொண்டே இருந்தார் ஹிட்லர் என்கிற கலியபெருமாள்.. 


கடைசி வாக்கியத்தால் தலை குனிந்தான் கௌதம்.. 


'ஐய்யோ.. இவெங்க என்ன பிரச்சினைன்னு கடைசி வரைக்கும் சொல்ல மாட்டாய்ங்க போலருக்கே..' பிரகாஷ்..


ஹரிணி கௌதமை பார்க்க..  "  அவென எதுக்குமா பாக்குற.. நீ உங்கண்ணே கம்பெனில இவனுக்கு வேல வாங்கி தந்தியே.. அங்க இவென் மூனு கோடியா  ஏமாத்திடானாம்.." கலியபெருமாள்..


"என்னது.. மூனு கோடியா.." பிரகாஷ் வாயைப் பிளந்துவிட்டான்..


" ண்ணே.. அந்த கோடியல்லாம் எடுத்துட்டு வேற எங்கயாது போயிருக்கலாம்லண்ணே.. இங்க ஏ வந்த.." கௌதமிடம். 


" ஒனக்கு தெரியுது.. பாரேன் அந்த முட்டாள்களுக்கு அது தெரியவே இல்ல.. கொள்ளயடிச்சவன் யாருடா உள்ளூருக்குள்ள இருக்கா.. லண்டன் , அமெரிக்கான்னு செட்டிலாகிடுறானுங்க.. நான் தா கோடிய ஆட்டைய போட்டுட்டு தெரு கோடில நிக்கிறேன் என்ன உலகமடா இது.." கௌதம் .


 கௌதம் படித்திருப்பது இம்பர்மேஷன் டெக்னாலஜி.. அதனால் தன் அண்ணனின் ஐடி கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்தாள் ஹரிணி.. 

ப்ரோகிராம் டிசைனராக இரண்டு ஆண்டுகள் வேலை செய்தவனுக்கு தனியாக பிஸினஸ் செய்ய ஆசை..


இப்போது பிரச்சினை என்னவென்றால் முக்கியமான ப்ராஜெட்டை எதிரி கம்பெனிக்கு இவன் விலைக்கு விற்றுவிட்டான்.. அதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப் பட்டுள்ளது.. இதனால் தான் ஹிட்லருக்கு கோபம்...


கௌதமை பார்த்தவள் தன் மொபைலில் கதிரவனை அழைத்தாள்.. கதிர் அவளின் அண்ணனின் பீஏ..  


“கதிர்.. அங்க என்ன நடக்குது.." 


" எத பத்திமா பேசுற.." கதிர். 


" எதுன்னு உங்களுக்கே தெரியும்.. என்னனு நோட்டீஸ் அனுப்பிருக்கிங்க.. எனக்கு அதோட காப்பிய உடனே‌ அனுப்புங்க.. இது எப்ப நடந்துச்சு.." 


"இப்பவே நா அத உனக்கு வாட்ஸ் அப் பண்ணுறேன்..‌ ஒன் மன்த் ஆக போதுமா.. ரெண்டு நாள்ல இந்த ப்ராஜெக்ட்ட ப்ரஷன்டேஷன்  பண்ணனும்.. முப்பது பேரோட , ஒரு மன்த்  ஹார்ட் வொர்க் இது.. பட் எல்லாமே வேஸ்ட்.. காரணம் அந்த யூஸ் லஸ் தா.." என ஏளனம் பொங்க குற்றம் சாட்டும் குரலில் கூறினான் கதிர்..  


" யாரு யூஸ் யாரு யூஸ்லன்னு எனக்கு தெரியும்.. நீ சொல்ல வேண்டியதில்ல..  ப்ரஷன்ட்டேஷன் பண்ண வேண்டிய டைம்ல அதவிட பெஸ்ட் டான  ப்ராஜெக்ட் உங்கைல கிடைக்கும்.. அதுக்கு நா பொறுப்பு.. அப்புறம் அவனோட வேலைய ரிஷைன் பண்ணுறதுக்கான பேப்பர்ஸ்ஸ நா மெயில் பண்றேன்.. " ஹரிணி சீரியஸாக பேசி வைத்தாள்..


" நீ இன்னுமாம்மா இவன நம்புற.." கலியபெருமாள். 


" ஆமா அங்கில்.. இவன நம்பாம வேற யார நம்பச் சொல்றிங்க.." என்றவள் கௌதமிடம்...


" லேப்டாப்ப  எடுத்துட்டு வந்திருக்கியா  இல்லையா.." என அதிகாரமாக கேட்க.. அவன் ஆம் என தலையசைத்த உடன்.. "சரி 36 ஹார்ஸ் இருக்கு நமக்கு.. ரெண்டு பேரும் சேந்தா எல்லாத்தையும் முடிச்சுடலாம்.. வா டைம் வேஸ்ட் பண்ணாம.. நாம இங்கேயே உக்காந்து வொர்க் பண்ணுவோம் க்குவிக்.." தன் மடிக்கணினியை எடுக்க சென்றாள் . 


தன்னிடம் சந்தேகமாக ஒரு கேள்வி கூட கேட்காத தன்‌தோழியின் நட்பை நினைத்து  உள்ளம் மகிழ பெருமை கொண்டான்..


இரவு முழுவதும் உறங்காமல் இருவரும் வேலை செய்தனர்‌.. இந்து அவர்களுக்கு கலைப்பு‌‌ தெரியாமல் இருக்க அவ்வபோது தேனீர் மற்றும் பதார்த்தங்களை கொடுத்து வந்தாள்..

சரியான நேரத்தில் அதை ப்ரஷண்டேஷன் செய்தனர்..


பின் அவனுக்கு அனுப்பிய நோட்டீஸ்ஸை  படிக்கலானாள்.. அதில் கௌதம்  ******** தேதி அன்று ******* கம்பெனிக்கு விற்றதாகவும் அதற்கு 50 லட்சம்  வாங்கியதாகவும் சாட்சியாக அஜிதா என்ற சக ஊழியர் இருப்பதாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது.. 


" ஹரிணி இங்க பாரோன்.. இந்த தேதில அண்ணே இங்க தான இருந்தாரு.. " பிரகாஷ்..


"  அப்பப்ப நா வக்கீல் , நா வக்கீல்னு ப்ரூப் பண்ணிகிட்டே இருக்கடா.." கௌதம் . 


" அந்த ப்ராஜெட்டோட வேல்யூவ விட ரொம்ப கம்மியா அடிமாட்டு விலைக்கு வித்துருக்க கௌதம்.. அதுவும் ஒரு டப்பா கம்பெனிக்கு.. வேற கம்பெனிக்கு பெஸ்ட் ரேட்ல டீல் பேசிருக்கலாம்.. ச்ச..." ஹரிணி.


" நீ வேற அப்படி ஒரு கம்பெனி இருக்குன்னு நா இவிங்க சொல்லித்தா கேள்விப்படுறேன்.." கௌதம் . 


" ஏய் அஜிதா ன்னா அந்த பிங்க் லகங்கா வா.." ஹரிணி. 


"ம்.. அந்த குந்தாணி தா.. அது கிட்ட பத்து வார்த்தை கூட நல்லா பேசிருக்க மாட்டேன்.. அது கூடப் போய் என்ன… ச்ச.." கௌதம் . 


" இப்ப அண்ணே மேல் இருக்குற கேஸ்ஸ என்ன பண்ணப் போறீங்க.. நா வேணும்னா இந்த கேஸ்ஸ காசு கொடுக்காம வாதாடித் தர்ரேன்.. ஓசி தா எங்கண்ணனுக்காக நா என்ன வேண்னாலும் செய்வேன்.." பிரகாஷ் பெருந்தன்மையாக .


" அதுக்கு அவசியமில்ல.. கேஸ் எதுவும்  போடல. கம்பெனிலருந்து‌ த்ரி மன்த் டயம் கொடுத்துருக்காங்க..‌ அதுக்குள்ள இத கௌதம் பண்ணலன்னு ப்ரூப் பண்ணனும்.. அப்புறம் இத யாரு பண்ணுனான்னும் கண்டுபிடிக்கனும்.. அவ்வளவு தா‌.." ஹரிணி . 


" ஓ.. ச்ச.. நம்ம அந்த கருப்பு கோட்ட போடுறதுக்கு நேரமே வர மாட்டேங்கிது.. என்ன பண்ண.." பிரகாஷ்.


" அஜிதா , ஜாயின் பண்ணி எத்தன நாள் ஆகுது.. எதுவும் ஃபோன் பண்ணாளா.." ஹரிணி .


" சிக்ஸ் மன்த்.. யாரோ அவள பிளாக் மெயில் பண்றாங்களாம்.. ஐ ஆம் ஸாரி.. என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டா.." 


" எனக்கு இதெல்லாம் பாத்தா ட்ராப் மாறி தெரியுது.." ஹரிணி  சந்தேகமாக .


" ட்ராப் தா.. எனக்கில்ல.. உனக்குதான்னு தோனுது.."  கௌதம் அழுத்தமாக கூறினான் . 


“ஏ அப்படி தோனுது... “


“தெரியல.. தோனுது..” 


"சரி எதுவா இருந்தாலும் நாம.. மும்பை போய் பாத்துக்கலாம்.. டிக்கெட் போடு.." மிடுக்காக கூறிச் சென்றாள்.. 


" என்ன.. மும்பைக்கா.." அதிர்ந்தான் கௌதம்.. 


" அண்ணே.. நீ யேண்ணே அலறுற.. ஹரிணி போய் அங்க எல்லாத்தையும் உண்டு இல்லைன்னு பண்ணீடும்.. நீ கவலப் படாதண்ணே.. நீ அப்ப ஹரிணிக்கு ஃப்ரெண்டு மட்டும் தா..  இப்ப க்ளோஸ் ரிலேட்டிவ்.. அதனால உன்னைய தனியா விட்டுடாதுண்ணே.. சோ டோன்ட் வொரி.. பீ ஹப்பிண்ணே.." பிரகாஷ் தோல்களில் தட்டிச் சென்றான்.  


ட்ராப்பா.. ஹரிணிக்கா.. மும்பைலயா.. எதுக்கா இருக்கும்.. யாரா இருக்கும்..


 தொடரும் ...



கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  

அன்பே 29

அன்பே 31


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...