அத்தியாயம்: 31
நிமிர்ந்து நிற்பதெல்லாம்
பலம் என்றோ ....
வளைந்து கொடுப்பதெல்லாம்
பலகீனம் என்றோ ....
முடிவு செய்து விடாதீர்கள்
நிமிர்ந்து நிற்கும் வேலை விட
வளைந்து கொடுக்கும் வில்
அதிக தூரம் பாயும் .
- படித்ததில் பிடித்தது.
காலை நேரம் பெண்கள் அனைவரும் பரபரப்பாக இருக்க ஆண்கள் களத்திற்கு சென்றிருந்தனர் .
பிரகாஷ் கையில் நியூஸ் பேப்பரோடு அமர்ந்திருந்தான்..
" என்னோட ராசிக்கு என்ன போட்டிருக்குன்னு பாத்து சொல்லேன்ண்ணா.. மீனம் என்னோட ராசி.." பவித்ரா..
" உதவின்னு போட்டிருக்குமா உனக்கு.. யாருக்குமா ஹெல்ப் பண்ணப் போற.." பிரகாஷ்..
" நிச்சயம் ராகவ்க்கு தா..." கௌதம்..
" எப்படிண்ணே சொல்ற..." பிரகாஷ்..
" இங்க இருக்குற வர அவளால ராகவ் கிட்ட பேச முடியாதுல்ல.. அதுவே ஒரு உதவி இல்லயா.. இவளோட குரல கேட்காதது பேருதவி தான.. அப்படித்தான பவி.." என்றவனை முறைத்தாள் பவி..
" ஏஞ்சல்.. உங்களோட ராசி என்ன.. நா நல்ல பலனா சொல்றேன்.." கௌதம்..
" நா பாட்டுக்கு அமைதியா தான இருக்கேன்.. என்ன ஏன்டா வம்பிழுக்குற.." நங்கை..
" சும்மா சொல்லுங்க ஏஞ்சல்.." பிரகாஷ் இடமிருந்து பத்திரிக்கையை பிடிங்கியவன் கொஞ்சலாக கேட்டான்..
" டேய் அப்படில்லா பண்ணாத டா பயமா இருக்கு.." நங்கை .
" அத்தைக்கு மிதுனம்.. இந்த ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க ஒட்டிக்கிட்டு நிக்குமே அது தா.." பிரகாஷ் .
" ஏஞ்சல்..." என அலறியவன்.. "உங்க கிட்ட இல்லாத ஒன்ன போட்டிருக்காய்ங்க ஏஞ்சல்.. போட்டிருக்காய்ங்க.. ஐய்யோ நா என்ன பண்ணுவேன்.. நா என்ன பண்ணுவேன்.."
" என்னன்னு சொல்லித் தொலடா.." நங்கை..
" அறிவுன்னு போட்டிருக்காய்ங்க ஏஞ்சல்.. அறிவுன்னு.. உங்களுக்கு மூளைய வக்கவேண்டிய எடத்துல தலைக்கு எதுக்கு பாரம்ன்னு வெறும் காத்த மட்டும் தான கடவுள் வச்சான்.. இப்ப இல்லாத ஒன்ன போய் கேட்டா அது கெடைக்குமா.. கடவுளே என்ன சோதனை இது.." கௌதம் நடிக்க பிரகாஷ் சிரித்தான்..
அவர்களின் கலாட்டாவே உள்ளுக்குள் ரசித்தாள் வெளியே அதை காட்டாது அமர்ந்திருந்தாள்..
" ஏ க்கா மருமகங்கள இவ்ளோவு பாசமா பாக்குற.. யாரும் பாத்தா கண்ணு வச்சுடுவாங்க.. லுக்க மாத்துக்கா நீ.." கவியரசன்.
' வந்துட்டானா.. சாமியாடுற இவங்களுக்கு உறுமி அடிக்க..' நங்கை.
" சித்தப்பு உன்னோட ராசி எது.." கௌதம்..
" சித்தப்புக்கு எப்பையுமே சிம்ம ராசி தா.. என்ன சித்தப்பு.. ஊருக்குள்ள நீ சிங்கந்தான சித்தப்பு.." பிரகாஷ் .
" நா எப்படா அப்படி சொன்னேன்.. சும்மா எதையாவது கொளுத்திப் போடாதிங்கடா.." கவியரசன்.
" ஏ சித்தப்பு பதறுர.. நீ தா தீப்பொறி திருமுகத்துக்கே ரெண்டு விட்ட சித்தப்பா மகன்னாச்சே.." பிரகாஷ் .
" உங்க பலனும் வேணாம் ஒன்னும் வேணாம் நா வாரேன் என்னைய விடுங்கடா.." கவியரசன்.
" யாரு சித்தப்பு உன்னைய பிடிச்சு வச்சிருக்கா.. உனக்கு நாள் எப்படி இருக்கும்னு பாத்து சொல்லத்தா கூப்பிட்டோம்.. நீ என்னடான்னா வெட்டிக்கத பேசிட்டு இருக்க.. இந்தா உனக்கு என்ன போட்டிருக்குன்னா.. ஆ.. மகிழ்ச்சி.. இன்னைக்கு நீ ஹாப்பியா இருக்கப் போற சித்தப்பு.. வாழ்த்துக்கள்.." கௌதம்..
" மகிழ்ச்சி யா.. அத தொலைஞ்சு பதினெட்டு வருஷமாச்சு.. ஹீம் கிடைக்கவே இல்ல.. தண்ணீ பாக்காத வயக்காடு மாறி ஆகிப்போச்சு என்னோட வாழ்க்க.." கவியரசன் பெருமூச்சு விட்டபடி..
" ஏன் கொழுந்தனாரே.. வேணும்னா நாம பம்பு செட் வச்சு நெலத்துக்கு தண்ணீ ஊத்தலாமே.." மலர். இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தா இருந்தார்..
" எதுக்கு அக்கா வீண் செலவு.. தாமஸ் ஆல்வா எடிசனே வந்தாளும் ப்யூஸ் போன குண்டு பல்ப எரிய வைக்க முடியாது.. வயக்காடாம்.. தண்ணீயாம் ஹிக்கும்.." முகத்தை திருப்பிக் கொண்டு சென்றார் அவரின் மனைவி கிருபாவதி..
இளையவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்..
" சித்தப்பு, சித்தி உன்ன நல்லா வைச்சி செய்றாங்களே சித்தப்பு.." கௌதம்
" சித்தப்பா உன்னையப் போய் குண்டு பல்புன்னு.." என இருவரும் சிரிக்க அதில் நங்கையும் கலந்து கொண்டார்..
" அக்கா நீ கூட இவெங்ககூட சேந்துட்டேல்ல.. அவென் அவென் கல்யாணம் செஞ்சு பாருங்கடா.. அப்பத்தா தெரியும் குடும்பஸ்தன்னோட கவல.." கவியரசன்.
" எங்க அதுக்குத்தா வழியே இல்லாமா பண்ணீட்டாங்களே.. சீக்கிரம் பொண்ணப் பாருங்கடான்னு சொன்னா யாருடா கேக்குறா.." பிரகாஷ் .
" யாருக்கு மருமகனே பொண்ணு பாக்கனும்.. உனக்குத்தா பொண்ணு ரெடியா இருக்கே.. உடனே அண்ணன்ட பேசுறேன் மருமகனே.." என சிரிப்புடன் வந்தார் கிருஷ்ணம்மாள்.
" ஆஹா.. சம்மனில்லாம இந்த அத்த ஆஜராகும்னு தெரிஞ்சிருந்தா நா வாய்தா வாங்கிட்டு போய்ருப்பேனே.." என புலம்ப..
" ஏன்டா.. உனக்கு மதிய பிடிக்கலையா.." என்றவனின் குரலில் பதிலைத் தெரிந்தால் வேண்டும் என்ற ஆவல் இருந்தது..
" பிடிக்காம இல்ல.. ரொம்ப பிடிக்கும்.. ஆனா ஒன்னா வளந்ததாலயா இல்லையான்னு தெரியல.. அது மேல எனக்கு அக்கற மட்டும் தா வருது.. ஒரு வேலை கல்யாணம் பண்ணீட்டா காதல் வருமோ தெரியல.. ஆனா இந்து மனசுல வேற யாரே இருக்காங்க.. அது மட்டும் நல்லாவே தெரியும்.. அது யாருன்னு நிச்சயம் கண்டு புடிச்சு அவனுக்கே எங்கண்ணே கல்யாணம் பண்ணி வச்சிடும்.. அதுனால நோ ஃபீலிங்ஸ்.." பிரகாஷ் உற்சாகமாக..
கௌதம் தன் மனம் நிலையில்லாமல் தவிப்பதை உணர்ந்தான்.. ஏன் என்று தான் தெரிவில்லை.. தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை..
நாதனும் தரனும் வந்தவுடன் காலை உணவை பரிமாறினார் பெண்கள்..
" எங்கடா உன்னோட ஒட்டுப் புல்ல காணும்.." நாச்சியம்மாள் கௌதமிடம்.
" அதோ வாராளே.. சாப்பாட்டுக்கு போய் இவ்ளோ லேட்டா வந்தா என்ன அர்த்தம்.. தீந்து போய்டாது.. வா தட்ட எடுத்துட்டு சீக்கிரமா.." கௌதம்..
" ம்ச்.. பெரிய மாமா உங்க கிட்ட நா ஒன்னு கேட்டா செய்விங்களா.." ஹரிணி
" என்னம்மா விசயம் சொல்லும்மா.." நாதன் ஐயா..
தன் மூச்சை ஆழமாக இழுத்து விட்டவள்.. " மாமா நா நம்ம கௌதம் கல்யாண விசயமா பேசப்போறேன்.." என்றவுடன்..
" வேல வெட்டி இல்லாதவனுக்கு யாரும்மா பொண்ணு குடுப்பா.. வெட்டிப் பயளுக்கு கல்யாணம் தா ஒரு கேடு.." கலியபெருமாள் சொன்ன போது ஜோதியின் கண்களில் நீர் வடிய ஆரம்பித்தது..
" அதானே நல்ல வேலைக்கு போனப் பெறவு பாக்கலாம்.. மொதல்ல நம்ம இந்துமதிக்கும் பிரகாஷ்க்கும் எப்ப பண்ணலாம்னு சொல்லுண்ணே.. வயசு வேற ஏறிக்கிட்டே போது.. " கிருஷ்ணம்மாள்.
" ஓ.. அப்ப நீங்க ஹைக்கோட் ஜர்ஜ் க்கு உங்க மகள கட்டி வைக்க போறிங்களா என்ன.. பிரகாஷ விட கௌதம் வயசுல பெரியவன்.. " பிரகாஷ்ஷும் வேலை இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டினாள் ஹரிணி..
" எங்க வீட்டு பிள்ளைங்க கல்யாணத்தப் பத்தி பேச உனக்கு என்ன உரிம இருக்கு.. எம் மகளுக்கும் வயசாகுது.. இதோ இருக்காளே எங்கக்கா.. அவள மாறி எம்பொண்ணும் ஆகிடக் கூடாதுன்னு எம் மனசு படுற தவிப்பு இங்க யாருக்குத்தா புரியப் போது.." என வராத கண்ணீரை துடைப்பது போல் பாவ்லா செய்தார்..
" ம்ச்.. தேவையில்லாமல் எதுக்கு நீங்க நங்கை அத்தைய இதுல இழுக்குறிங்க.. அதா இந்துவோட கல்யாணத்துக்கு பெரியப்பா பொறுப்புன்னு வாக்கு குடுத்துருக்காருல்ல அப்புறம் எதுக்கு பயப்படுறீங்க.. அமைதியா இருங்க.." தரன்..
" கௌதம்மோட கல்யாணத்த பத்தி பேச என்னவிட இங்க இருக்குற யாருக்கும் உரிமை இல்லன்னு நா நெனைக்குறேன்.. என்ன ஜோதி ஆன்டி சரிதான.." ஜோதியும் சரி கலியபெருமாள்ளும் சரி பேச வில்லை..
" அவனுக்கு எல்லாமே நா தா எனக்கு எல்லாமே அவன் தா.. அதுனால அவனோட அம்மாங்கிற ஸ்தானத்துல இருந்து கேக்குறேன்.. என்னோட ப்ரெண்டுக்கு உங்க தங்கச்சி மக இந்துமதிய கல்யாணம் பண்ணித் தருவீங்களா.. அவென் நல்லா பாத்துப்பான் அவள.." ஹரிணி .
ஹரிணி சொன்னதைக் கேட்டு இந்துவின் முகத்தில் மின்னலின் ஒளி வந்தது.. இதை குடும்பத்தினர் அனைவரும் கவனித்தனர் கிருஷ்ணம்மாளைத் தவிர.. அவர் குதிக்க ஆரம்பித்து விட்டார்.. கௌதம் கருவேப்பில்லையை ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பாட்டுவதிலேயே குறியாக இருந்தான் யாருக்கு வந்த விருந்தே என..
கிருஷ்ணம்மாள் விடாது அவளை வசைபாட ஆரம்பித்தார்.. அனைத்தையும் பேசியவர் அவள் குடும்பத்தை பிரிப்பதாகவும் கௌதமிடம் வேலை இல்லை என வசைபாட அவரை தடுத்தான் தரன்..
" நீங்க பேசுறது என்னோட மனைவிங்கிறது நியாபகம் இருக்கட்டும்.. தப்பா எதாவது பேசுனிங்க..." என விரல் நீட்டி எச்சரித்தான் தரன்..
ஹரிணி கௌதமின் முன் சில காகிதங்களை நீட்டி.. " இது உனக்குத்தா உடனே ஸ்டாட் பண்ணீடு.." என்றாள் அவள்..
அவனும் அவளும் சேர்ந்து சிறிய அளவில் செய்து வந்த சாஃப்ட் வேர் பிஸ்னஸ்ஸை பதிவு செய்து நிறுவனமாக மாற்றியதற்கான அதிகாரப் பூர்வமாக டாக்குமெண்ட் அது.. அவனின் வேலைக்காக..
" என்ன இது ஹரிணி.. உங்கிட்ட நா இத கேட்டேன்னா.. ச்ச நீ பண்ற எதுவுமே எனக்கு பிடிக்கல.." என இந்துவை ஒரு பார்வை பார்த்து விட்டு எரிச்சலோடு சென்றான்கௌதம்..
கலக்கத்துடன் நின்று கொண்டு இருந்த இந்துவின் அருகில் சென்று அணைத்தாள் ஹரிணி.. " ஏ ஹரிணி அவருக்கு என்ன பிடிக்கலையா.." என கண்ணீருடன் கூறினாள்..
அவள் கூறியதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர் தரனைத் தவிர இந்து மனதில் கௌதம் எப்பொழுதிருந்து.. கிருஷ்ணம்மாள் அதன் பிறகு எதுவும் பேசவில்லை மகளின் மனம் தெரிந்து விட்டதல்லவா..
" எப்ப சொன்னான் பிடிக்கலைன்னு.." ஹரிணி .
" இதோ இப்ப தான சொன்னாரு.." இந்து..
" எவரு.. கௌதமா.." கேலியாக
" ஹரிணி ப்ளீஸ்.." சிணுங்கினாள் இந்து.
" சரி அவன்ட்ட இந்த கவர குடுத்து இத ஏ இத்தன நாளா பத்திரமா வச்சிருக்கிங்கன்னு கேளு.. உனக்கு தேவயான பதில் கிடைக்கும்.. ம் போ.." புன்னகையுடன் சொல்ல..
கவரை வாங்கியவள் மாடிக்குச் சென்றாள்.. அங்கு ஜன்னல் கம்பியின் மீது சாய்ந்து நின்று கொண்டு இருந்தான் கௌதம்..
இந்து உடனான திருமணம் சரியாக இருக்குமா என யோசித்தபடி இருந்தவனின் காதில் மெல்லிய கொலுசின் ஒலி காதுகளில் விழ பார்வையை வாயிலில் பதித்தான்..
பாவாடை தாவணியில், பால் வண்ணத்தில் நிறத்தில் , அமைதியான குட்டிப் பூனை போல் மிரட்சியுடன் வந்தவளை வழி அகற்றாது பார்த்தான் . இவளுடன் வாழ்ந்தால் தான் என்ன என்று தோன்றியது..
அருகில் வந்தவள் " எங்கம்மா பேசினது
தப்புத்தா.. அதுக்கு நா மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. நீங்க ஏ என்ன வேண்டாம்னு சொன்னீங்கன்னு தெரியல ஆனா நா உங்கள என்னைக்கும் மறக்கமாட்டேன்.. ஸாரி நா உங்கள் கஷ்டப்படுத்தியிருந்தா.." என்றாள் கண்ணீரோடு..
அந்த கண்ணீர் தனக்காகத் தான் என்று எண்ணும் போதே தேகம் சிலிர்த்தது அவனுக்கு.. அன்பைப் பெறுவதில் அநாதையாக இருக்கும் தன்னிடம் அதீத அன்பைப் பொழியும் இரு பெண்களையும் இழக்க அவன் தயாராக இல்லை..
அவளை நெருங்கி வந்தவன் தன் விரல்களால் வடியும் நீரை துடைத்தான்..
" ஏ.. ஏ உனக்கு என்ன பிடிச்சிருக்கு.. கீழ எங்கப்பா பேசினத கேட்டிருப்ப.. அதுக்கறமும் பிடிச்சிருக்கா என்ன.. எங்கப்பாவ பொருத்த வரைக்கும் நா சரி இல்லாதவன்.. பொறுக்கி.. " வேதனையுடன்..
" நீங்க எத சொல்ல வர்றீங்கன்னு புரியுது.. ஒரு பொண்ண பாதுக்காப்பா உணர வைக்குற எந்த ஒரு ஆம்பளையும் நம்பிக்கைக்கு உரியவன் தா.. நா உங்ககூட இருந்தது என்னமோ ரெண்டு மணி நேரமா இருக்கலாம்.. அப்ப நா பயப்படவே இல்ல.. எங்க அப்பா கூட இருக்குற மாதிரி ஃபீல் பண்ணேன்.. என்ன பத்திரமா பாத்துக்க எந்த ஒரு ரத்த சம்பந்தமும் இல்லாம நீங்க துடிச்சப்போ... இனி எல்லாமே எனக்கு நீங்க தான்னு முடிவு பண்ணீட்டேன்.. உங்களுக்கு பிடிக்கலைன்னா பரவாயில்ல.." கண்ணீருடன்.
" அழாத மதி.. உன்ன பிடிக்காதுன்னு நா சொல்லவே இல்லையே.. ஆனா ஹரிணியையும் என்னையையும் சேத்து..." என்றவனின் நெருக்கம் தந்த தைரியத்தால் பேசிக் கொண்டு இருந்த உதடுகளில் தன் விரலால் மூடினாள் .
" நம்பிக்கன்னு ஒன்னு வந்ததுக்கு அப்றம் சந்தேகம் வரக்கூடாது.. எனக்கு உங்க ரெண்டு பேர் மேலயும் நம்பிக்கை இருக்கு.. " என்றவளை அணைத்தான் கௌதம் .
"ஐ ஆம் இன் லவ் வித் யூ மதி.. யூ ஆர் மைன்.." என்று ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக சொன்னவன் அவளின் கன்னங்களை கைகளில் தாங்கி கொண்டான்.. விழிகளை அகல விரித்து பார்த்தவளின் செந்நிற இதழை முத்தமிட்டான்.. காதலுடன்..
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..