அத்தியாயம்: 32
ஒரு நல்ல நட்பிற்கு
வயது தடையில்லை ,
காசும், பணமும்
முக்கியமில்லை ,
கருத்து வேறுபாடு வந்தாலும்
பிரிவு வருவதில்லை
என்றும் மாறாத குணமும்
உரிமையுடன் பழகும் மனமும்
கொண்ட நட்பு இவ்வுலக
வாழ்வை அழகாக்கும்
கௌதம் 27 வயது இளைஞன் . பார்ப்பதற்கு வட மாநில சாயலில் தெரிந்தாலும் அக்மார்க் தமிழ் பையன் அவன்..
மலைகளின் இளவரசியாம் ஊட்டி.. அங்கு தான் கலியபெருமாளும் சத்தியமூர்த்தியும் பணி புரிகின்றனர்.
சத்தியமூர்த்தி வனத்துறை பாதுகாப்பு அதிகாரியாகவும் கலியபெருமாள் அங்கு உள்ள எஸ்டேட் ஒன்றில் அசிஸ்டெண்ட் மேனேஜராகவும் வேலை செய்கின்றனர்..
வடக்கே, செல்வந்தர் வீட்டு வாரிசான ஜோதி இனி எல்லாம் கலியபெருமாள் தான் என வீட்டை விட்டு வந்துவிட்டார்.. அத்துடன் தன் குடும்பத்தினரின் உறவும் இல்லாமல் போனது ஜோதிக்கு..
இரட்டையர்கள் இருவரும் ஒன்றாக வீடெடுத்து தங்கி வந்தனர்.. இருவருக்குமே தங்கள் மனைவிமார்கள் மீது அதீத பாசம் இருந்தது.. மூன்றாண்டு ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தவர்கள் ஒரே நேரத்தில் இப்போது தான் கருத்தரித்து இருக்கிறார்கள்..
என்னதான் கணவன் தாங்கினாலும் அன்னையின் அரவணைப்பு என்பது வேறல்லவா அதுவும் கர்ப காலத்தில்.. அதன் பொருட்டு ஜோதிக்கு ப்ரஸ்ஸர் அதிகமானது.. மசக்கையின் காரணமாக உடல் அசத்த குழந்தையை சுமக்கும் பொறுமையை இழந்து கொண்டே வந்தார் ஜோதி..
அவரை சோதிக்கவே பத்து மாதங்கள் முழுதாக ஆன பிறகும் குழந்தை பிரசவிக்கவில்லை.. எவ்வித கவலையும் இன்றி கருவை சுமக்கும் கனகவள்ளியை பார்த்தால் ஜோதிக்கு பொறாமை தான் வந்தது..
கனகவள்ளியை மருத்துவமனையில் சேர்த்தாகிவிட்டது.. குழந்தை பிறக்க சில மணி நேரமே இருக்கும் நிலையில் ஜோதி டாக்டரிடம் தனக்கு சிசேரியன் செய்யச் சொன்னார்.. மறுத்து விட்டார் டாக்டர்..
" மேடம் உங்க குழந்தை நல்லா ஆரோக்கியமா தா இருக்கு அதோட பொசிஷன் எல்லாம் கரெக்ட்டா இருக்கும் போது சிசேரியன் ரொம்ப ரிஸ்க் மேடம்.. ப்ளிஸ்.. டூ டேஸ்ல பிறந்திடும்.. கொஞ்சம் வெய்ட் பண்ணலாமே.." என்றார் மருத்துவர்..
ஜோதி டாக்டரையும் கலியபெருமாளை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார்.. விளைவு ஹைய் ப்ரசர் காரணமாக அவருக்கு பிக்ஸ் வந்துவிட மிகவும் சிரமப்பட்டார்.. மூன்று மாதங்கள் படுக்கையை விட்டு எழுந்திரிக்கவே சிரமப்பட்டார்.. அவரின் கஷ்டத்திற்கு காரணம் அந்த குழந்தை தான் என தவறாக நினைத்து கலியபெருமாள் அதை பார்க்க கூட இல்லை.. அடுத்தடுத்து நிகழ்ந்த சில சம்பவங்கள் அதாவது தந்தையின் இழப்பு வேலையில் கெட்ட பெயர் என அவருக்கு மன அழுத்தத்தை தர கௌதம் ராசியில்லாதவனாக ஒதுக்கப் பட்டான்..
அன்னை பிள்ளைக்கு தரும் முதல் அமிர்தம் தாய் பால் அது கௌதமிற்கு மறுக்கப்பட்டது.. கணவன் மனைவியை மட்டும் கவனிக்க பிள்ளை தனியானது.. கௌதமிற்கும் தரனுக்கும் பதினைந்து நிமிடங்களே வேறுபாடு..
சத்தியமூர்த்தி கனகவள்ளி இருவரும் கௌதமையும் தரனையும் வேறுபாடு காட்டாமல் வளர்த்தனர்..
ஆனால் தரன் வேறுபாட்டை அதிகமாகவே உணர்த்தினான் என்று தான் சொல்ல வேண்டும்.. தன் அன்னை தனக்கு மட்டுமே சோறூட்ட வேண்டும் தனக்கு மட்டுமே எல்லாம் செய்ய வேண்டும் என முடிவு செய்து கௌதமை படாத பாடு படுத்தினான் ரிஷி தரன்..
கலியபெருமாள் எப்பொழுதும் அவனை திட்டிக்கொண்டே இருப்பதால் அவரிடம் கௌதமை மாட்டிவிட்டு அடி வாங்க வைப்பது தரனின் வேலை.. இதற்கிடையில் ஜோதி மீண்டும் கருவுற்றார்..
இம்முறை தேவதையே பெண் என அவருக்கு பிறந்தாள்.. பார்கவி.. லட்டு போன்ற கன்னம் திராட்சை போன்ற கருவிழிகள் பவள வாய் என நாள் முழுக்க அவளை பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் பசி தூக்கும் எதுவும் வராது.. மூன்று வயது கௌதம் பார்கவியை எட்டி நின்றுதான் ரசிப்பான்.. பக்கத்தில் சென்றால் கலியபெருமாளின் சவுக்கு அவனின் முதுகுடன் பேச ஆரம்பித்து விடும்..
" இங்க வா.." என கௌதமை அழைத்தார் சத்தியமூர்த்தி.. கையில் இருந்த பார்கவியை அவனின் மடியில் கிடத்தியவர்..
" இது யாரு.. உன்னோட தங்கச்சி தான.. இவா மேல உனக்கு முழு அன்பு இருக்கா இல்லையா.. " என்க அவன் ஆம் என தலையசைத்தான்..
" அப்ப நீ இவள யாருக்காவும் விட்டுக் குடுக்க கூடாது.. உனக்கு மெத அவா தங்கச்சி.. அதுக்கப்புறம் தா மத்தவங்களுக்கு.. சரியா.." என்ற மூர்த்தியின் பேச்சு அவனின் மனதில் ஆழமாகப் பதிந்தது..
தன் இஷ்டத்திற்கு மகளை வளர்க்க நினைத்தார் கலியபெருமாள்.. அதனால் அவளை சிறிய வயதிலேயே ட்டியூஷன் ,டான்ஸ் என எல்லா பயிற்சி வகுப்பிலும் சேர்த்து விட்டார்.. மாட்டேன் என அடம் பிடித்தாள் அவளுக்கு திட்டு விழும்..
கலியபெருமாள் பார்கவியை அரட்டும் போதெல்லாம் தந்தையையே எதிர்த்து நின்றான் கௌதம்.. பரிசாக சில அடிகள் விழுந்த போதும் கவலைப்படவில்லை.. தரன் கௌதம் இருவருக்குமே பார்கவி செல்லப் பிள்ளையானால்.. வைசு பிறந்த பிறகும் பார்கவி தான் இருவரின் செல்லம்..
அந்த நாள் மட்டும் வராமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..
தன் நண்பனுக்கு பிறந்தநாள் விழாவிற்கு செல்ல வேண்டும் என்று கிளம்பி கொண்டு இருந்தான் எட்டு வயது கௌதம்.. தந்தைக்கு தெரியாமல்..
" ஹரிண்ணா நானும் வாரோனே.. ப்ளீஸ்.." ஐந்து வயது பார்கவி.
" பாப்புடு... வேணாமே.. அண்ணா மட்டும் போய்டு சீக்கிரமா வந்திடுவேன்.. நீ பத்திரமா வீட்டுக்கு ரிஷி அண்ணா கூட போ.. சரியா.. பை.." என்று கூறிச் சென்றவனை பின் தொடர்ந்தாள் தங்கை.. கௌதம் இதை எதிர்பார்க்கவில்லை..
பாதி வரை பின்தொடர்ந்தவள் பாதை மாறி காட்டிற்குள் சென்றாள் அச்சிறுமி.. நண்பனின் வீட்டில் சந்தோஷமாக ஆடிக்கொண்டு இருந்தான் கௌதம்..
தன் முதுகில் விழுந்த பிரம்படியில் சித்தம் கலங்கி நின்றவனை " வீட்டுல சொல்லாம வருவியா.. இந்த வயசுல உனக்கு என்ன பார்ட்டி வேண்டி கெடக்குது..." என மேலும் மேலும் அடித்தார் கலியபெருமாள்..
தப்பி வீட்டிற்கு வந்தவனுக்கு கலியபெருமாளிடம் போட்டுக் குடுத்தது ரிஷி தரன் என்று தரனின் சிரிப்பே சொல்லியது..
" பாப்புடு எங்க.." கௌதம்..
" எனக்கு எங்க தெரியும்.. அவளையும் கூட்டீட்டுதான போன நீ.. உம் பின்னாடி பாப்பு வந்தத நா பாத்தேன்.. எங்க அவள.." தரன்
" என்ன எம் பின்னாடி வந்தாளா.." அதிர்ந்தவன் தங்கையை தேட ஆரம்பித்தான்.. அனைவரும் பரபரப்புடன் தேடத் தொடங்கினர்..
மூன்று நாட்கள் ஆகி விட்டது...
பார்கவியை காணவில்லை..
போலீஸ் கேஸ் குடுத்தும் பலனில்லை.. ஜோதியை விட கனகவள்ளியே அதிகம் கலங்கிப் போனார்.. கிடைக்கவில்லையே.. பெண் குழந்தையின் தாயாய் இரு உள்ளமும் துடித்துப் போனது...
பள்ளிக்கு அருகில் இருந்த புதரில் சிறு முனங்கல் சத்தம் கேட்டது..
கௌதம் தான் முதலில் பார்க்க சென்றான்..
" பாப்புடு.." என்ற அலறல் சத்தம் மலைகளில் எதிரொலித்து அந்த பகுதி முழுவதும் கேட்டது..
மலரவே செய்யாத அரும்பு அங்கு கசக்கப்பட்டு தூள் தூளாக சிதைக்கப் பட்டிருந்தது..
அங்கங்கே கிழிந்து போயிருந்த உடையில் தங்கையை இரத்த வெள்ளத்தில் கண்டவன் அவளை மார்பில் கிடத்தி பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தான்..
"ஆ.. பாப்புடு.." இதயத்தை கத்தியால் கிழிப்பது போன்று உணர்ந்தான்..
" ஹ..ரி..ண்ணா.. வலிக்குது ண்ணா.. ப....சிக்...கு.." அதுவே அந்த அரும்பின் கடைசி வார்த்தை.. அதை முடிக்ககூட விடாமல் அவள் உயிரை உடலை விட்டு எமன் இழுத்துச் சென்றார்..
வீடே மயானமானது.. கலியபெருமாள் தன் மகளின் இந்நிலைக்கு காரணம் கௌதம் தான் என கூறி அவனை கைது செய்து சிறையில் அடைக்கச் செய்தார்.. அது தான் அவனுக்கு சரியான தண்டனை என நினைத்தார்.. இவர் செய்து கொண்டிருக்கும் குற்றத்திற்கு தண்டனை யார் கொடுப்பது..
இவை நடக்கும் போது சத்தியமூர்த்தி ஊரில் இல்லை.. கனகவள்ளி தரனிடன் " நீ பாப்பா போனத பாத்தேல்ல.. அப்ப நீ அவள தடுத்திருக்கலாம்.." என வினவ..
தன்னுடைய குணத்தால் குற்றவுணர்ச்சியில் தவித்தான் தரன்..
" ஸாரிம்மா.. நா இப்படி நடக்கும்னு எதிர் பாக்கல..." அவனும் சிறுவன் தானே..
அவனை 'போதும் ' என கை காட்டியவர் " இனி நா உனக்கு அம்மா கெடையாது.. நா உங்கிட்ட இனி பேசப் போறது இல்ல.." என்று சைகை செய்தார்..
பொதுவாக கனகவள்ளி யாரையும் தண்டிப்பதில்லை.. தண்டித்தால் மன்னிப்பதில்லை.. இன்று வரை அவர் தரனுடன் பேசுவதில்லை..
முழுதாக பதினைந்து நாட்கள் ஆனது... கௌதமை போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்திருக்க சொன்னார் கலியபெருமாள்.. கைதியாக நடத்தப் படவில்லை என்ற போதிலும் அந்த ஸ்டேஷன் அவனை பயமுறுத்தியது..
சத்தியமூர்த்தி வந்து அவனை அழைத்து செல்லும் வரை அந்த நரகத்தில் தான் இருந்தான் கௌதம்.. கலியபெருமாள் வேறு வேலை பார்த்து ஊரை விட்டு சென்றுவிட்டார் மூர்த்தியின் சட்டையிட்டு விட்டு..
கௌதமை தன்னுடன் அழைத்து செல்ல இயலாது என்றும் தனக்கிருக்கும் இன்னொரு குழந்தையை இவன் கொன்று விடுவான் என்றும் தேள் என விஷத்தை கொட்டினார் கலியபெருமாள்..
எட்டு வயது குழந்தையின் மனதை புண்படுத்துகிறோம் என்ற எண்ணமில்லாமல்.. ஜோதி அமைதியாக இருந்தது சத்தியமூர்த்திக்கு மேலும் வருத்தத்தை தந்தது.. தங்களுடன் வைத்திருக்க கனகவள்ளி மறுத்துவிட்டார்.. அவனும் குழந்தை இறப்பிற்கு ஒரு காரணம் தானே..
என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தவர் கௌதமை போடிங் ஸ்கூளில் சேர்த்து விட்டார்.. இனி +2 முடிக்கும் வரை பிரச்சனை இல்லை.. அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று..
தாய் தந்தை என அனைவரும் இருந்தும் தனியாய் வளர்வது எவ்வளவு கொடுமையே அதே அளவு கொடுமை அனுபவித்தான்.. தன்னை சுற்றி இருப்பவர்கள் தன்னை குற்றவாளியாகப் பார்ப்பது.. அவனின் வேதனையை அதிகமாக்கியது..
பதினைந்து வயதிற்குள் தண்ணி தம் கஞ்சா என அவனின் நல்ல குணங்கள் அழிந்தது தீய குணங்களாக மாறியது.. யாரையும் மதிக்காமல் திரிந்தான்.. ஆனால் பெண்கள் விசயத்தில் மட்டும் அவன் இராமனாகவே இருந்தான்.. தங்கைக்கு ஏற்பட்ட நிலை அப்போது புரியவில்லை எனினும் பருவ வயதில் நன்கு புரிந்தது.. காரணமானவர்களை கொலை செய்யும் அளவுக்கு வெறியும் வந்தது..
தவறு செய்யும் குழந்தைகளுக்கு அன்பாய் புரிய வைப்பதே தாய், தந்தை மற்றும் இந்த சமூகத்தில் உள்ள அனைவரின் கடமையாகும்.. அதை விடுத்து வெறுப்பை உமிழ்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகளை உருவாக்கும் சமூக விரோதிகள் ஆவர்..
அதற்கு கௌதமே ஒரு சாட்சி..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..