முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 33


 

அத்தியாயம்: 33


பிரிக்க முடியாத சொந்தம் 


மறுக்க முடியாத பந்தம் 


தவிர்க்க முடியாத உயிர் 


எல்லாம் உன் நட்பு 


மட்டுமே..



மும்பை மாநகரம்  இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்று.. உலகில் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களுள் மும்பைக்கு என்று தனி இடம் உண்டு.. அதில் குறுக்கும் நெடுக்குமாக பல தெருக்கள்.. 


ஒரு தெருவின் முனையில் பைக்கின் மீது அமர்ந்து யாருக்காகவோ காத்துக் கொண்டு இருந்தனர் அந்த இரு இளைஞர்கள்..


" என்ன டா இவ்ளோ நேரம்.. சீக்கிரம் வரச் சொல்லி ஃபோன் போடு.." மற்றவனை அவசரப்படுத்தினான் ஹிந்தியில்.. 


" இங்க தான்டா வரச் சொன்னான்.. ஒரு ஐஞ்சு நிமிசம் பாப்போம் இல்லைன்னா கால் பண்றேன் டா..." என்றவன் சுற்றி தன் பார்வையால் தேடினான்.. 


அங்கு பள்ளிச் சீருடையில் நின்று கொண்டிருந்த பெண்ணினைக் கண்டவன் மற்றவரிடம்   " டேய் மச்சி.. சூப்பர் பிகர் டா.. என்ன ரேட் இருக்கும்னு தெரியலையே..‌ நா போய் கேக்கப் போறேன்.." என்றவனை தடுத்தான் மற்றவன்.. 


" அறிவில்லயா உனக்கு.. இங்க எதுக்கு வந்தோமோ அத மட்டும் பாரு.." என திட்டியவன் அந்த பெண்னைப் பார்த்து கோபம் கொண்டவன்.. 'ச்ச என்ன பொண்ணு இது..' என நினைத்துக் கொண்டான்.. 


காரணம் அவன் பின்னால் அந்த பெண் இரு வாரங்களாக விடாமல் ஃபாலோ செய்கிறாள்.. அவர்கள் யாருக்காக காத்துக் கொண்டு இருந்தனரோ அவன் வந்த உடன் காசை கொடுத்து போதை வஸ்துக்களை வாங்கி கொண்டவன்  உடனிருந்தவனை அனுப்பி விட்டு அவள் அருகில் வந்தான்.. 


" ஏய்.. லூசா நீ.. எந்தெந்த எடத்துக்குத் தா வருவ.. உன்ன பாத்து மத்தவங்க என்ன நெனைப்பாங்க அப்படீங்கிற கவல இல்லையா உனக்கு.. ப்ராஸ்ட்யூட்டா நீ..  " கௌதம் பல்லைக் கடித்த படி சத்தத்தைக் குறைத்து காட்டமாக பேசினான்.. 


" ஐய்யோ.. அப்படி இல்ல ஸார்.. நா எதுக்கு உங்க பின்னாடி வர்றேன்னு உங்களுக்கே நல்லா தெரியும்ல ஸார்.. ப்ளீஸ் ஸார்.. எனக்காக  கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க..." என பெண் கெஞ்சலாக கேட்க.. 


" நான் தா முடியாதுன்னு சொல்லீட்டேன்ல.. அப்பறம் எதுக்கு யோசிக்கனும்.. தயவு செஞ்சு எம் பின்னாடி வராத.." என கையெடுத்து கும்பிட்டு சென்றான் கௌதம்..


மாநகரப் பேருந்தில் ஏறியவன் செல்ல வேண்டிய இடத்திற்கு டிக்கெட் எடுத்து முன்னால் போய் நின்றான்.. அவன் செல்லும் அதே இடத்திற்கு செல்ல டிக்கெட் எடுத்தவளை முறைத்துக் கொண்டே நின்றான்.. 


இறங்கிய இடம் மும்பையின் புகழ் பெற்ற கல்லூரி.. அவன் நடந்து சென்ற கால் தடங்களை பின்பற்றி கல்லூரிக்குள் நுழைந்தாள்.. எங்கிருப்பான் என அவளுக்கு தெரியும்.. 


" மச்சி.. வந்துட்டா டா.." சிவி.


" ம்ச்.. எங்க போனாலும் விட மாட்டேங்கிறாடா.. ஒரே இம்சையா இருக்கு.." கௌதம்..


" கூப்பிட்டு பேசி பாருடா.." சிவி .


" எத்தன தடவ நான் டா பேசுறது.." கௌதம் கடுப்புடன். 


" சரி நா பேசிப் பாக்குறேன்.. நீ அமைதியா மட்டும் இரு.." 


" ம்.. பேசு.. ஆனா அந்த பொண்ணு கேக்காது.." 


தூரத்தில் அவர்களைப் பார்த்து கொண்டு இருந்தவளை கை காட்டி அழைத்தான் சிவி..


" என்னம்மா இப்படி பண்ணீங்களேம்மா.. ச்ச.. எதுக்கும்மா அவன‌ நீ ஃபாலோ பண்ற.." 


" பையா.. உங்க ஃப்ரெண்ட் கிட்ட எனக்காக பேசி சரின்னு ஒரு வார்த்த சொல்லச் சொல்லுங்க.. எனக்கு டைம் ரொம்ப கம்மியா இருக்கு பையா.." தன் மெல்லிய குரலில் இயைந்து கேட்டாள் அப்பெண்..


" நான் தா முடியாதுன்னு சொல்லிட்டேன்ல.. உனக்கு வேற யாருமே கிடைக்கலயா.. ஏதோ சின்ன பிள்ளையா இருக்கியேன்னு பாக்குறேன் இல்லன்னா நடக்குறதே வேற.." கௌதம் நின்ற இடத்தை விட்டு நகராமல் கோபமாக கத்தினான்.. 


" பையா.. எனக்கு ஒன் மன்த் தா டைம் குடுத்தாங்க.. இப்ப ஏழு நாள் தா இருக்கு.. அதுக்குள்ள நா முடிக்கனும்.. இதுக்கப்புறம் இன்னோரு ஆள நா தேடி கண்டுபிடிச்சு பர்மிஷன் வாங்குறதுக்குள்ள முடிஞ்சு போய்டும்.. பையா நா வேணும்ன்னா ட்வெண்டி தவுசெண்ட் தாரேன்..  கொஞ்சம்‌ எனக்காக ரெக்கமெண்ட் பண்ணுங்க பையா.." பாவமாக..


" 20000 மா..."  சிவி வாயை பிளந்து திரும்பி தன் நண்பனை பார்த்தான் அவன்..


நான்கு மாதமாக சேவ் செய்யப்படாத தாடி.. வாரப் படாத சிகை.. அழுக்கேறிய ஜீன்ஸ்..‌ வெளுத்து போன டி சர்ட் காலையிலேயே போதை  என இருப்பவனின் கண்கள் மட்டும் தெளிவாக இருந்தது அதீத கூர்மையுடன்..


" இந்த பெட்டர் மாஸ் லைட் தா வேணுமா.. நா வேண்ணா ஹெல்ப் பண்றேனே.." சிவி.. அவனை ஏற இறங்க பார்த்தாள் . 


" பையா தப்பா நெனச்சுக்காதிங்க.. நீங்க அதுக்கு செட்டாக மாட்டிங்க.. உங்களுக்கு தெப்ப இருக்கு.. அது எனக்கு செட்டாகாது.. அவர் தா.." என கௌதமை கை காட்ட.. அதில் எரிச்சல் அடைந்தவன்..


" இங்கருந்து போ.." கோபமாகி அவளை விரட்டி விட்டான்.. வாடிய முகத்துடன் சென்றாள் அவள்.. 


"ஒரு உதவி தான்டா கேட்டுச்சு..‌ அத செய்ய உனக்கு என்னவாம்.." சிவி . 


" அத விடு.. இந்தா சன்டே பீச்ல பாக்கலாம்.. அடுத்த வாரம் வாங்குறதுக்கு காசு நீ தா குடுக்கனும்.." என வஸ்துவை சிவி கையில் திணித்துச் சென்றான்.. 


அப்போது ஐடி கடைசி ஆண்டு மாணவன் கௌதம்.. என்ன படித்தான் என்று கேட்டால் தெரியாது.. எதற்குப் படிக்கிறான் என்றால் ' ஹிட்லர் சம்பாதிச்ச காச என்ன‌விட்டா யாரு கரைப்பா.. அதா இருக்குறதுலேயே பெரியா பணக்கார காலேஜ்ல சேந்தேன்.. ' என்பான்.. ஹப்பா இத்தனை அரியர்ஸ்ஸா என்று கதறும் அளவுக்கு இருந்தது அவனின் படிப்பு.. 


ஊட்டியில் இருந்து பள்ளி படிப்பை முடித்துக் கொண்டு மும்பை வந்தவனை வரவேற்கத் தான் யாரும் இல்லை.. அதனால் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தான்..


சாதாரண காலேஜில் சீட் வாங்கிய போது.." எனக்கு நீ தான அப்பேன்.. ஐ மீன் பாதர்.. அப்ப தப்பில்ல  எனக்கு அந்த காலேஜ்ல தா சீட் வேணும்.. போய் வாங்கிட்டு வா இல்லைன்னு வச்சுக்குங்க.. நீ வேலபாக்குற இடத்துலே வந்து கலாட்டா பண்ணுவேன்.. சும்மால்லா இல்ல தண்ணியடிச்சுட்டுத்தா.. ஆமா .... ஊருக்குள்ள உனக்கு ஒரு மகென்னு ஒருத்தே இருக்கியாங்கிறத நீ சொல்லவே இல்ல போல.. நல்ல பேரு வாங்கிருக்கீங்க போல.. பாருங்க அது எப்படி பட்டம் மாறி பறந்து போதுன்னு.." என மிரட்டியே கல்லூரியில் சேர்ந்தான்..


இரண்டு நாட்கள் சென்றிருக்கும்.. சிவியின் அன்னைக்கு சிறிய ஆக்சிடென்ட்.. பணம் தேவைப்படவே அந்த பெண்ணை தொடர்பு கொண்டான்.. அவள் குடுத்த நம்பருக்கு டயல் செய்தவனை ஒரு இடத்திற்கு சரியாக பத்து மணிக்கு வரச் சொன்னாள்.. 


மறுநாள்..


 " ஹாய்.. ரொம்ப தேங்க்ஸ்.. வாங்க உள்ள போலாம்..." என ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றாள் அவள்.. 


பார்க்க சிறிய இடம் தான் ஆனால் பத்திற்கும் மேற்பட்ட சிறிய அறைகள் இருந்தது.. நீள வாக்கில் இருந்த ஸ்டுடியோவில் வெவ்வேறு செட்டுகள் போடப் பட்டது இருந்தது.. அதில் கடைசியாக இருந்த அறைக்கு அழைத்து சென்றாள் அவள்..‌ 


" அங்க ட்ரெஸ்சிங் ரூம் இருக்கு நீங்க போட வேண்டிய ட்ரெஸ்ஸும் இருக்கு.. உங்களுக்கு மேக்கப் போட ஆள் வந்துட்டாங்க.. சோ சீக்கிரம் மாத்திட்டு வாங்க.." என சிறிய கண்ணாடி அறைக்குள் அடைத்து கதவைச் சாத்தினாள் அந்த பெண்..


அவளுக்கு ஒரு ஆல்பம் வேண்டும்.. ஒரு பிரபலமான ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றில் சமர்ப்பிக்க.. டிசைன்ர் காஸ்ட்யூம் அனைத்தும் ரெடி..  அதை அணிந்து கொண்டு ஒயிலாய் போஸ் குடுக்க மாடல்களை தேடினாள்.. நான்கு உடைக்கு மட்டும் புதிதாக யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தவள் கண்களில் மாட்டினான் கௌதம்.. தன் விடா முயற்சியால் அவனின் சம்மதத்தை பெற்றுவிட்டாள்.. இனி ஃபோட்டோ ஷீட் மட்டும் தான்..


" ஸார்.. இப்படி.. ஹாங்.." என மாலை வரை ஷுட் செய்தவள்.. பத்து படத்திற்கு இருபதாயிரம் ரூபாய் பேசி இருந்தாள்.. 


" ஹிக்கும்.. மாடல்ஸ்கே நா இவ்வளவு தந்ததில்ல.. இவனுக்கு போய் இவ்ளவா.." என நொந்து கொண்டாள் .. 


" என்ன முடிஞ்சதா.. காச தா.." என்றவன் ஒருவித அசௌகரியத்தை உணர்ந்தான்.. காரணம் அங்கிருந்த மற்ற மாடலிங் கேள்ஸ் இவனைப் பற்றி பேசி சிரிப்பதால் அங்கிருந்து எப்போது செல்வோம் என்றிருந்தது அவனுக்கு.. 


" ஸார்.. காச நா நாளக்கழிச்சு இதே எடத்துல தந்திடுவேன் ஸார்..." என்றவளை .


" ம்ச்.. சொன்னதும் உடனே ஃபோட்டோக்கு அரேஜ் பண்ண தெரிஞ்ச உனக்கு காச அரேஜ் பண்ண தெரியலையோ.. யார்டட கத விடுர.. போய் எடுத்துட்டு வா இல்ல நீ வீடு போய் சேர முடியாது.." மிரட்டலாக .


" ஸார்.. ஸார்.. ப்ராமிஸ்ஸா நா தந்திடுவேன் ஸார் ஏமாத்த மாட்டேன்.. நம்புங்க ஸார்.. நம்பிக்கதா எல்லாம்.." என்றவளின் தேன் குரலில் மயங்கியவன் சரி என்றான் ஆனாலும் அவளின் அட்ரசை வாங்கி வைத்துக் கொண்டான் கூடவே அவளின் ஸ்மாட் ஃபோனையும் வாங்கிக் கொண்டான்..


" ஸார் அது அப்பிள் ஐ போன் ஸார் காஸ்ட் சிக்ஸ்டீ தவுசெண்ட் ஸார்.." 


" பராவால்ல இத அடமானம் வச்சதா நெனச்சுக்கோ.. காச தந்த உடனே இத குடுத்துடுவேன்.. இந்தா லாக் பண்ணீட்டு குடு.. நம்பலாம்.. உன்னோட ஃபோன்லருந்து நா எதையும்‌ திருடீடமாட்டேன்.. கடைசியாக சொன்னியே நம்பிக்கதா எல்லாம்ன்னு.. அதேயே தா நானும் சொல்லுறேன்.. பை.. சீக்கிரம் அரேஜ் பண்ணீடு.." கௌதம்..


நாளை மறுநாள் வந்தவன் பார்த்து பூட்டி இருந்த ஸ்டுடியோவைத் தான்.. மீண்டும் மறுநாள் வந்தவன்.. ரிசப்சென்னில் இருந்த பெண்ணிடம் கேட்டான்..


" ஸார்.. அவங்க நேம் ஸார்.." என்ற போது தான் உறைத்தது அவளின் பெயரே அவனுக்கு தெரியாதென்று.. வந்த நேரத்தை சொல்லி கேட்க..


" ஸார்‌ ஒரு நாளைக்கு இங்க ஆயிரம் பேருக்கு மேல் வாராங்க.. அட்லீஸ்ட் யாருன்னு‌ பேராது தெரிஞ்சிருக்கனும்ல ஸார்.." என மறுத்துவிடவே அவளின் செல்லுக்கு கால் செய்தான்.. ஃபோன் அடித்தது 


அவனது பாக்கெட்டில்.. "சரி ஒரு டூ டேஸ் வெய்ட் பண்ணுவோம் இல்லைன்னா அவா வீட்டுக்கே போய்ட வேண்டியது தான்.."


தன்‌ பைக்கை அடமானம் வைத்து அந்த பணத்தை சிவியிடம் கொடுத்தான்..


பைக் எங்கே என ஹிட்லர் வீட்டிற்குள் ஒரு குண்டு வெடிப்பே நடத்தி விட்டார்.. அவரை சமாளிப்பதற்குள்.. ஹப்பப்பப்பப்பா..


இருபது நாள் ஆகி விட்டது.. பைக்கையும் மிட்கவில்லை காசையும் வாங்க வில்லை..


அப்ப காசு வராதா...


பாவம் கௌதம்..


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


அன்பே 32


அன்பே 34



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...