அத்தியாயம்: 34
வீடா.. இல்லை அரண்மனையா என சந்தேகம் கொள்ளும் அளவுக்கு மிக மிகப் பெரியதாக இருந்தது அந்த பங்களா..
நவி மும்பையில் பிரம்மாண்டமாக பல சதுர அடிகள் பரப்பளவில் சகல வசதிகளும் கொண்டு கட்டப்பட்ட அந்த மாளிகையின் வாயிலில் வந்து நின்றான் கௌதம்..
" அரோ.. உன்கு சொன்னா புர்யாதா.. ஜீ ஊர்ல இல்ல.. ஜா வோ.." என விரட்டினான் வாட்ச் மேன்..
" ச்ச.. இவ்ளோ பெரிய வீட்டுக்கு சொந்தக்காரியா இருந்துட்டு.. ஏ எங்கிட்ட கெஞ்சீட்டு இருந்தா.. புரியலையே.. நானும் இருபது நாளா வந்து பாக்குறேன்.. அவா ஊர்ல இல்லன்னு மட்டும் சொல்லிட்டே இருக்கான் இந்த குர்கா.. இவன இருடா கைல காசு வரட்டும் உன்ன நாய விட்டு கடிக்க வைக்குறேன்.." என புலம்பிய படி சென்றவனின் கண்களுக்கு மாடியின் ஜன்னலில் ஏதோ அசைவது போல் தோன்ற வீட்டை நோட்டமிட்டான்..
வீட்டிற்கு வெளியே பன்னிரெண்டு சீசிடிவி கேமரா இருந்தது..
" சர்த்தா.. இன்னைக்கு ஒரு பூஜைய போட்டுட வேண்டியது தா.." என இரவில் வீட்டிற்குள் நுழையும் வழியை ஆராய்ந்த படி சென்றான்..
பதினொரு மணி..
ஒவ்வொரு கோமராவையும் சரியாக ஒரு சில நொடிகள் மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக செயலிழக்க வைத்தான் கௌதம்.. அவன் சிறந்த ஹேக்கர்.. தன் தனித்திறமையாக அதை வளர்த்துக் கொண்டான்..
முதலில் மதில் சுவர் " ஹப்பா.. மல மாறி ஒசரமா கட்டி வச்சிருக்காய்ங்க.. வீட்டுக்குள்ள வரனும்னா.. ' செவ்வல தாவூ டா தாவுன்னு..' தா தாவனும் போல.. ச்ச்.. ஏறி இறங்கிறதுக்குள்ள.. மூச்சு நின்னுடும் போலயே.." என பெருமூச்சு விட்டபடி தோட்டத்தில் நடந்தான்..
" நாய் ஏதும் இருக்கா.. நம்ம நல்ல நேரம் அது இல்ல போல.."
பச்சை போர்வையை போர்த்திய படி சம அளவுடன் புற்கள் அனைத்தும் வெட்டப்பட்டிருந்தது.. ஆங்காங்கே சிறிய உருவங்கள் வடிவிலும் புதர்கள் வடிவிலும் செடிகள் சீராக வெட்டப்பட்டு பராமரிக்கப் பட்டும் இருந்தது.. அதை கடந்து வந்தவனை வீட்டின் பின்புற நீச்சல் குளம் வரவேற்றது.. அங்கு வளைந்து நெளிந்த இரும்பு படிக்கட்டு அவனை மாடிக்கு அழைத்து சென்றது..
மாடியில், பக்கத்திற்கு ஒன்று என நான்கு அறைகள் பிரம்மாண்டமாக இருந்தது.. ஆனால் ஒரு மூளையில் மட்டும் இருட்டாக இருந்தது.. லைட் கூட போடாது இருக்கு கௌதம் அங்கு சென்றவன்..
" மறுபடியும் படிக்கட்டா.. யோவ் இத்தன பெரிய இடம் இருக்குறப்போ எதுக்குய்யா.. மாடி மாடியா கட்டுற.. இப்ப பாரு நா எத்தன படி ஏற வேண்டியதா இருக்கு.. இங்க ஏறுறதுக்கு நா கோயில்ல ஏறியிருந்தேன்னா புண்ணியமாது கிடைச்சிருக்கும்.. ஆமா இப்ப நா எதுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுத்து வந்தேன்.. ஹாங்.. அந்த ரூம்ல யாரோ கையாட்டி கூப்பிடுற மாறி இருந்துச்சு அது யாருன்னு பாக்கனும்.. எந்த ரூம்மா இருக்கும்.. தேடுவோம்.." என இருட்டில் சென்றான்..
சிறிது சிறிதாக பல அறைகள் இருந்த போதும் தனியாக ஒரு அறைக்கு மட்டும் கதவில் செவ்வக வடிவில் சிறிய ஓட்டை இருந்தது...
அங்கு சென்றவன் கதவிடுக்கில் " யாராது இருக்கிங்கலா.. சொல்லுங்க " என்க..
" ம் .. ம்..." என முனங்கல் மட்டுமே கேட்டது..
கதவை திறக்க முயன்றவன் முடியாது போகவே.. வேறு வழி யோசிப்பதற்குள் ஆள் வரும் ஆரவாரம் கேட்க தூணின் மறைவில் பதுங்கிக் கொண்டான்..
வந்தது ஒரு பெண்.. மிடுக்காய் செல்வந்த கலை முகத்தில் தவழ... தன் அணிகலன் உடை என அனைத்திலும் வைரகற்கள் பதித்திருந்தாள்..
' அற்பனுக்கு வாழ்வு வந்தா.. இப்படித்தா இருப்பான் போலா... நடமாடும் LED லைட்டு மாறில மின்னுறா.. ' கௌதமின் மைண்டு வாஸ்..
" எத்தன நாளைக்கு இப்படியே இருக்க போற.. சாப்பிடலேன்னா செத்துப் போய்டுவ.. அப்புறம் எனக்கு என்டர்டெயின்மெண்ட் இருக்காது.. ஒழுங்கா உங்கண்ணன்ட்ட ஸாரி கேட்டு அவர் சொல்லுற படி நடக்குறது தா உனக்கு நல்லது.. யோசிச்சுக்க.. " என தட்டில் இரண்டு சப்பாத்தியை மட்டும் வைத்து ஓட்டையில் தள்ளிவிட்டு சென்றாள்..
உள்ளே யாரையோ அடைத்து வைத்திருக்கின்றனர் என்பதை அறிந்தவன் மெதுவாக வந்தவன் கதவை உடைக்க முடியாது போனது.. மேலே இருந்த ஜன்னலின் கண்ணாடியை உடைக்க கனமான பொருளும்.. மேலே ஏற.. உள்ளே இறங்க கயிறும் தேவைப்படும் என அறைக்குள் செல்லும் மார்க்கை வகுத்தவனுக்கு தோட்டத்தில் அதை பார்த்த ஞாபகம் உடனை சென்று எடுத்து வந்து அறைக்குள் நுழைந்தான்..
அதிர்ச்சி..
நிச்சயம் இப்படி இருக்கும் என எதிர்பார்க்க வில்லை..
இருபது நாளில் ஒரு மனிதனின் உடல் பாதியாக குறையுமா..
குடுத்த சப்பாத்திகளில் எதையுமே தொட்டுக் கூட பார்க்க வில்லை..
நீர்.. சிறிய அளவில் மட்டுமே காலியாகி இருந்தது..
உயிர் உடலை விட்டு செல்ல மாட்டேன் என பிடிவாதமாக வாடகை கூட கொடுக்காமல் தங்கிக் கொண்டு இருந்தது..
குளிக்க வில்லை.. கசங்கிய உடை.. கண்களில் மட்டும் ஒளி.. நடக்கக் கூட தெம்பில்லை..
அருகில் சென்றவனின் மீதே தடுமாறி சாய்ந்தவள்.." கௌ....தம்... ஹெல்...ப் பண்ணேன்.. ரொம்....ப பசிக்கு...து.." .
அவளின் கன்னம் தட்டி " ஏய்.. பாப்புடு.. பாப்புடு..."
" ம்.. பாப்புடு இல்ல.. ஹரிணி..." என்றவளுக்கு பேச கூட முடியவில்லை..
துடித்து போய் விட்டான் கௌதம்.. குண்டு கன்னம்.. குழந்தை முகம்.. மழலை பேச்சு என ஹரிணியை பார்க்கும் போதெல்லாம்பார்கவியின் சாயலை கண்டதாளோ என்னவோ.. அவளை ஒதுக்கியே வைத்தான்.. ஆனால் இப்போது எலும்பும் சிறிய அளவில் தசையும் மட்டுமே இருந்தது...
அவளை தூக்கிக் கொண்டு தப்பித்து எப்படியோ வந்து விட்டான்.. ஆனால் எங்கே செல்வது.. பசி என்றவளுக்கு தன்னிடம் இருந்து சில நூறுகளை வைத்து அன்னமிட்டவன் தன் வீட்டிற்கே அழைத்து சென்றான்..
மணி இரண்டு..
வீட்டை டூப்ளிகேட் சாவியை கொண்டு திறந்தவன் அவளை தன் அறையின் கட்டிலில் கிடத்தினான்..
" ஹரிணிமா.. ஹரிணி.. இன்னும் சாப்பிட எதாவது வேணுமா.. இல்ல தூங்குறியா.." என கேட்க..
" இருந்தா கொண்டு வாயேன்.. நா சாப்பிடுவேன்.." என்றாள் ஈனஸ்வரத்தில்..
கீழே டேபிளில் இருந்த பழவகைகளையும் உணவுகளையும் தட்டில் நிரப்பியவன் அவளிடம் தர அவனுக்கு குடுக்காமல் அனைத்தையும் காலி செய்தாள்.. பின் தூங்கினாள்..
தூங்கினாள்.. தூங்கினாள்.. தூங்கிக் கொண்டே இருந்தாள்... எழவே இல்லை..
" என்னதிது.. இப்படி தூங்கிறா.. உயிரோட தா இருக்காளா இல்லையா.." சந்தேகமாக மூக்கில் கை வைத்துப் பார்த்தான்.. காரணம் இரண்டு நாட்களாக தூங்குகிறாளே… உண்ணுவது பின் தூங்குவது இது தான் அவளின் வேலையாகிப் போனது..
விழித்திரை மெல்ல திறந்தது...
"அப்பாடா.. எந்திரிச்சிட்டியா.. இப்பத்தா மூச்சே வந்தது.. ஆமா எதுக்கு உன்ன அடைச்சு வச்சாங்கா.. மொதல்ல அது உன்னோட வீடா இல்ல அங்க ஃபோட்டோ ஷூட் எடுக்குறேன்னு சொல்லி எதையாவது திருடிட்டியா... சரி அதெல்லாம் தேவயில்ல எனக்கு எப்ப காச தருவ.. " கௌதம் விடாது பேச .
" காச நா வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் தாறேன்..அது என்னோட வீடு தா.. ஓம் என்ன அடைச்சு வச்சுட்டான்..." ஹரிணி பாவமாக...
" ஓம் யாரு.. என்ன பண்ண அடைச்சு வக்குற அளவுக்கு.." கௌதம்.. இவள் எதாவது செய்திருப்பாள் என்ற சந்தேகத்துடன்..
"அண்ணா காபி கேட்டான்.. நா குடுத்தேன்.. லைட்டா.. கொஞ்சம் லைட்டா சிந்திட்டேன் அதான்.."
" வாட்.. காபி சிந்துனதுக்கு போய் சாப்பாடு குடுக்காம அடைச்சு வப்பாங்கலா.. என்ன.. ஆமா எதுல சிந்தின.. தரைலயா.. "
" இல்ல.. அது அவனோட லேப்டாப்ல.. அப்புறம் டாக்குமெண்ட் அதுமேலயும் சிந்திடுச்சு.. அதுனால பல கோடி லாஸ் ஆகிடுச்சாம்.. நா என்ன பண்ண முடியும்.. பந்தா அது கேட்ச் பிடிக்க.." பாவமாக..
அவளது பாவனை அவள் வேண்டுமென்றே செய்திருக்கிறாள் என்று கூறியது..
" சரி.. வீட்டுக்கு திரும்ப போ போறியா இல்ல போலிஸ் ஸ்டேஷன் ல கம்ளைண்ட் கொடுக்கனுமா.."
"கம்ளைண்டா.. இவங்களுக்கா.. நோ.. நெவர்.. நரிக் கூட்டத்த கலைக்க சிங்கத்தோட கர்ஜனையே போதும்.. நேர்ல வரனும்னு அவசியமில்ல.." .
" ஓ.. அப்ப நீங்க சிங்கம்..."
" எஸ்.. பொம்பள சிங்கம்.. எதுக்கு வந்த உடனே கிளம்பனும் சொல்ற.. ஒரு பத்து நாள் இருந்துட்டு போறேன்னே.. ம்.. சரி எனக்கு ட்ரெஸ் வேணும் மாத்திக்க.." அவன் சம்மதம் குடுக்கும் முன்னே உரிமையுடன் அவனின் அறையில் நடமாடினாள் ஹரிணி..
" ஆமா.. எங்கப்பென் ஹிட்லரு பெரிய பேலஸ் கட்டி வச்சிருக்காரு இருந்து நிதானமா சுத்தி பாத்துட்டு போ.. இந்தா இதுல சில ட்ரெஸ் இருக்கு.. என்னோட தங்கச்சி இது.. போட்டுக்க அப்புறம் வேற எதுவும் வேணுமா.. " கௌதம் .
" ம்.. ஒரு காபி... "
" சரி..." என கதவின் அருகே சென்றவனை ஹரிணி அழைத்தாள்..
" காபில.. சுகர் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கட்டும்.. அப்றம் டிக்காசின் ஸ்ட்ராங்கா இருக்கட்டும்.. பால் திக்கா இருக்கட்டும் .. அப்றம் சூடு.. " ஹரிணி அடுக்கிக் கொண்டே போக..
" ஏய்.. எங்க வீட்டுல எனக்கு பச்ச தண்ணீ கெடைக்குறதே கஷ்டம்.. இதுல இத்தன கண்டிஷனர் போட்டு ஆர்டர் பண்ணியே அந்த காபிய நா ரெடி பண்ணுறதுக்குள்ள... " என தலையில் அடித்துக் கொண்டவன் கதவை மூடும் முன்..
" பத்து நாள் தங்கப்போறதா சொன்னியே.. எங்கூட இருக்க உனக்கு பயமாவே இல்லயா.."
" எதுக்கு பயப்படனும்.." புரியாமல் கேட்டவளை குழப்பமனமில்லாமல் ' ஒன்றுமில்லை ' என ஜாடை செய்தபடி சென்றான்..
அவன் மனதில் தன்னை நம்பி ஒரு பெண் எவ்வித உறவும் இல்லாமல் தன்னுடன் தன் அறையில் தங்குகிறாள் அதுவும் பயமில்லாமல்.. இதை விட ஒரு ஆணுக்கு கர்வம் கொள்ளச் செய்யும் நிலை வேறே எதுவும் உண்டோ...
இருவாரங்கள் தங்கியவள் உடல் பழையபடி இல்லை என்றாலும் பலம் மட்டும் கூடியது.. இருவரும் தங்கள் உறவை நன்கு வளர்த்தனர்.. கொஞ்சம் பேச்சு கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் சண்டை கொஞ்சம் சமாதானம் கொஞ்சம் வருத்தம் என எல்லா உணர்வுகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்..
ஹிட்லர் இருக்கும் நேரம் வெளியே வந்து தன்னை கௌதமின் தோழி என அறிமுகம் செய்து கொண்டாள் ஹரிணி..
ஹிட்லர் இருவரையும் ஏளனமாக பேச கண்டு கொள்ளாமல் இருந்தனர் இருவரும்.. ஜோதி ஹரிணியிடம் பேச வர பேச விடாமல் ஹரிணியை இழுத்து வந்து விடுவான் கௌதம்.. பைக்கை மீட்டவன் அதில் அவளின் இல்லம் நோக்கி சென்றான் அவளுடன்..
திடீரென வந்து நின்றளை பார்த்து அதிர்ந்து போய் நின்றனர் வீட்டில் இருந்தவர்கள்..
" ஹரிணி.. இத்தன நாளாக எங்க இருந்த.. உன்ன நாங்க எங்கெல்லாம் தேடுனோம் தெரியுமா.." கதிர் பாசழை பொழிய..
" ஓ.. அது உங்களுக்கு தெரியாதா.. தீப்தி அக்கா சொல்லலையா.. பாவம்.. ரொம்ப அலஞ்சு தேடிருப்பிங்க போலயே.." மழையில் நனைய விருப்பமில்லாமல் குடை பிடித்தாள்..
" ஏதோ ஃப்ரெண்ட்ஸ் கூட டூர் போய்ருக்குறதா சொன்னா.." என தீப்தியை பார்க்க..
" ஆமா கதிர்.. இதோ இவங்கூடத்தா ஊர் சுத்திருக்கா போல... ஆள் தராதாரம் தெரியாம பழகுறதே இவளோட வேலையாப் போச்சு.. பாக்குறதுக்கு கோமாளி மாறி இருக்கியானே.. இவென் இவளோட ஃப்ரெண்டாம்.." ஏளனம் செய்தவளின் குரலில் அப்பட்டமாக தெரிந்தது பொறாமை.. ஹரிணிக்கு இவ்ளோ அழகான ஃப்ரெண்டா என..
பத்து நாளில் தலகீழாக மாற்றி இருந்தாள் ஹரிணி கௌதமை.. நீட்டான உடை , சேவ் செய்து பளீச் என முகம் , அவனின் பழக்கவழக்கங்கள் என முற்றிலும் தனக்கு பிடித்த படி அவனை மாற்றினாள்.. தோற்றத்தை மட்டும் அல்ல அவனின் குணத்தையும் சேர்த்தே மாற்றினாள்.. அவனும் அவளின் இழுப்பிற்கு எல்லாம் விரும்பி சென்றான்.. தன் பார்கவியே திரும்ப தன் உடன் வந்ததாக நினைத்தான்..
" ஹிஹிம்.. வெறும் ஃப்ரெண்ட் மட்டுமில்ல.. அதுக்கும் மேல.." ஐ பட பாணியில் சொன்னவள் தீப்தியை முறைத்துக் கொண்டே இருந்தாள்..
கதிர் சென்றவுடன் " தப்பிட்டன்னு நெனைக்காத.. நீ என்னைக்குமே என்னோட டாய் தா... என்னோட விருப்ப படி தா நீ ஆடியாகனும் அது உன்னோட தலயெழுத்து..." தீப்தி.
" கீ குடுக்குற பொம்மல்லாம் பழைய மாடல்.. இப்ப புதுசா இருக்குறதுன்னா.. ம்.. ஹூமெனாய்டு ரோபோ.. சிட்டி மாறி படச்சவன் தலைலையே கை வக்குற டேன்ஸ்ஜரஸ்ட் டாய்.. ஓகே வா...
கொஞ்சம் அசால்டா இருந்துட்டேன்.. இனியும் அப்படீல்லாம் இருக்க மாட்டேன்.. உன்னால என்ன பண்ண முடியுமே பண்ணு.." சவால் விடும் தோரணையில்..
தீப்தி முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள்.." பாப்பா சூப்பரா இருக்கே.. யாரிது.." கௌதம்.
" எனக்கு அக்கா மொறையாம்.."
" ஓ.. அதா மொறச்சுக் கிட்டே போதாம்.. ஒகே நா கெளம்புறேன்.. பை.."
" ஏய்..உன்னோட காச வாங்கீட்டு போ..." என பணத்தை கொடுத்தாள்..
" நா இந்த பதினஞ்சு நாளும் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. அதுக்கு காசெல்லாம் ஒரு மதிப்பே கிடையாது.. சோ.. இதுல உன்ன ஃபோட்டோ எடுத்தேனே அதுக்கான காசு இருக்கு.. உங்கூட ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு வேணும்.. பர்மிஷன் கெடைக்குமா.." என்றவளின் தலையை கௌதம் வருடினான் வாஞ்சையுடன்..
" நிச்சயமா.." என்றவனை சந்தோஷமாக அணைத்தாள் ஹரிணி .
பெண்ணவளின்
நம்பிக்கையை பெறுவதே
ஆணின் முதல் சம்பாத்தியம்..
அதுவே ஆண்மைக்கும் அழகு..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..