முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 35


 

அத்தியாயம்: 35


பறவை போல் 


பறந்து செல்ல ஆசை  !!


இறக்கைகள் இல்லையே  


விமானத்தில் செல்கிறேன் !! ....




பெங்களூர் விமான நிலையம்..

கைகளில் பெட்டிகளுடன் வந்திறங்கினர் சில இளைஞர்கள்.. 


" கௌதம் பெங்களூர்ல இருந்து மைசூர் த்ரீ ஹார்ஸ் தா ட்ராவல் டைம்.. அங்க பேலஸ் , பார்க் , ஜூ அப்புறம் மால் , கோயில் லாம் இருக்கு.. அப்புறம் தல காவேரின்னு சொல்லுற குடகுமலயும் பக்கம் தா.. அங்க பேலஸ்லாம் சூப்பரா இருக்கும்... பெங்களூர்லேயே Orion, Phoenix, Ascendas Park, Forum, Garuda Mall, எல்லாம் இருக்கு.. விதான சௌதாக்கு போய் ஒரு ஃபோட்டோ எடுத்துட்டு  wonderla water theme park போய்ட்டு.." ஹரிணி .


" ஸ்டாப் பிட்.. எனி டயம் பேசிட்டே இருக்கியே உனக்கு வாய் வலிக்காது.. டூரிஸ்ட் கைட்டு கணக்கா.. ஒன்னு தெரிஞ்சுக்க நாம இங்க வந்தது செமினார்காக.. சுத்திப்பாக்க இல்ல.. ஓகேவா.. இதுக்கப்றம் ஒருவார்த்த பேசுன.. வந்த ஃப்ளைட்லேயே திரும்பவும் உன்ன ஏத்தி விட்டுடுவேன்.. வாய் மூடீட்டு வா.. " சுமித்ரா.. கௌதமின் கிளாஸ் மெட்..


" என்ன சுமிக்கா இப்படி சொல்லிட்டாங்க.. எங்கையும் போக முடியாதா.." பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கௌதமிடம் கேட்க.. 


" உன்னோட இந்த எக்ஸ்பிரஷ்ஷன்ன  மாத்துறியா.. பாக்க சகிக்கல.." கௌதம் கேலியாக.. 


" அப்படில்லாம் இல்லடா..‌ நாம நல்லா சுத்தலாம்.." சிவி..


" ஆனா சுமிக்கா செமினார்க்கு மட்டும் தா வந்ததா சொன்னாங்களே..‌" 


" செமினார்க்கு மட்டும்னா நாலு நாளு முன்னாடியே யாராது வருவாங்களா.." சிவி


" ஃபோர் டேஸ் நாம என்ஜாய் பண்ணிட்டு.. த்ரீ டேஸ் அந்த செமினாரையும் அட்டென் பண்ணிட்டு ஒன் வீக்ல ஊருக்கு திரும்புறோம்.. ஃப்ளான் ஓகேவா.." கௌதம் உற்சாகமாக..


" ம்.. ஜாலி.. ஹே.." என கூச்சலிட்டபடி சென்றனர் அந்த இளைஞர்கள் கூட்டம்.. ஒரு ஆறு பேர் இருப்பார்கள்.. கூட லெக்சரர்‌ ஒருவரும் இருந்தார்..


முதல் இரண்டு நாட்கள் வெற்றிகரமாக கழித்தவர்கள் மூன்றாம் நாளின் விடியலுக்காக காத்திருந்தனர்.. மைசூர் செல்வதாக ப்ளான்.. ஹரிணிக்கு ஷாப்பிங் செய்ய வேண்டியுள்ளது.. கௌதமிடம் வேண்டியதை லிஸ்ட் போட்டு கொடுத்தனுப்பினாள்..


மாலில் புலம்பிய படியே பொருட்களை வாங்கி ட்ராலியில் போட்டு தள்ளிக் கொண்டே வந்தான் கௌதம்..


" ஹரிணி பெப்பர்ஸ் ஸ்ப்ரே எதுக்கு உனக்கு.. சமையலுக்கும் உனக்கும் தா ஆகவே ஆகாதே.. எதுக்கு வெட்டியா.. “ ஃபோனில் சந்தேகமாக கேட்டான்.. 


" ம்ச்.. உனக்கெதுக்கு அதெல்லாம்.. சொன்னா சொன்னத மட்டும் வாங்கிட்டு வா.. வரும்போது டார்க் சாக்லேட்.. பெருசு.. மறந்துடாத.. சரியா.. ஸ்வீட் பாய்.." கொஞ்சலாக.. 


" சாக்லேட்ன்னா மட்டும் பயங்கரமா கொஞ்சுராளே.. காரியக்காரிதா.‌‌." என அனைத்தையும் வாங்கியவன் பில் போட..


அங்கு ஒரு மூளையில் பெண் ஒருத்தி பயத்துடனும் கண்ணீருடனும் நின்றிருக்க அருகில் அந்த மாலில் பணி புரியும் ஊழியரும் இருந்தான்.. ஊழியனின் பார்வையில் கண்ணியம் என்பது மருந்துக்கும் இல்லை.. மழையில் நனைந்த பறவை போல் நடுங்கியபடி நின்றிருந்தாள் பெண்..


'என்ன' என பில் கவுன்டரில் கேட்க ' அது உங்களுக்கு தேவையில்லாதது ' என்றான் அவன்.. நடப்பது சரியில்லை என இருவருக்கும் அருகில் செல்ல முயன்றவனை பில் கவுன்டரில் இருந்தவன் தடுத்தான்.. அங்கிருந்த ரோவை கைகாட்டி அது வேண்டும் என்றான்.. கௌதமை ஒரு பார்வை பார்த்து விட்டு சரி என்றான் அவன்.. 


கன்னடத்தில் அந்த ஊழியன்‌ பேசியதை கேட்கவே காது கூசியது.. எதிரில்‌ நின்றவளுக்கு அது புரியவில்லை போலும் அவனைத் தவிர காப்பாற்ற யாராவது வருவார்களா என கண்களும் மனதும் அலை பாய்ந்தது.. கௌதம் அவனிடம் ' என்ன பிரச்சனை' என்று  கேட்க ' காதலர்கள் நாங்கள் ' என்றான்..


" ஆர் யூ லவ்வர்ஸ் ..‌‌" என ஆங்கிலத்தில் கேட்க.. அந்த பெண் " நோ.. ஐ டேன்ட் நோ கிம்.. ஐ ஆம்.. ஆம்.." என ஆங்கிலம் தெரியாது தடுமாற கௌமின் கைபேசி அடித்தது..

  

ஹரிணி  " வாங்கிட்டியா இல்லையா.. அந்த லெக்சரர் உன்ன காணும்னு போலிஸ்ஸ கூப்பிடுறதுக்குள்ள வந்திடு.." 


" வந்திடுறேன்மா.. நா என்ன எல்கேஜி பாப்பாவா வழி தெரியாம இருக்க.. அவர் என்ன எங்கன்னு கேட்டார்ன்னா எனக்கு கால் பண்ண சொல்லு.. பை.." 


" தமிழா ஸார் நீங்க.." மட்டற்ற மகிழ்ச்சி அந்த பெண்ணின் முகத்தில்..


" ஆமா.. இப்ப என்ன பிரச்சனைன்னு சொல்றிங்களா.." 


" ஸார் காலேஜ் டூர்.. இங்க ஒரு ஹோட்டல்ல தங்கிருக்கோம்.. ஃப்ரெண்ட்ஸ் கூட வந்தேன்.. அவங்கள காணும்.. நா அவங்கள மிஸ் பண்ணிட்டேன்.. எங்கிட்ட ஃபோன் கிடையாது காசும் இருநூறு ரூபாய் தா இருக்கு.. ஹோட்டல் பெயர்  **** . இந்தாளு நா ஏதே திருடிட்டேன்னு என்ன தனியா கூட்டிட்டு வந்து நிக்க வச்சுட்டான்.. நா சொல்ற எதையுமே கேக்க மாட்டிக்கிறான்.. இவனோட பார்வையே சரியில்ல.. பயமா இருக்கு சார்.. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.." கண்ணீருடன்..


'திருடிவிட்டாள் அதனால் மேனேஜர் வரும் வரை இங்கு தான் இருக்க வேண்டும்.. ' என்றவனின் பேச்சில் உண்மையில்லை.. இப்படி பட்டவனிடம் பெண்ணை தனியாக எப்படி விட்டு விட்டு செல்வது என கௌதம் யோசிக்க.. 


நெட்டில் அந்த மாலின் ஓனர் யார் என தேடி அவரின் ப்ரைவேட் இமெயிலுக்கு அதை புகாராகவும், சற்று முன் அவன் கன்னடத்தில் மிரட்டிய வீடியோவையும் அனுப்பினான்.. கூடவே இது வெளியே தெரிந்தால் மாலில் பெயருக்கு ஆபத்து என குறிப்பிட்டு விட்டு இவர்களை கவனித்தபடி வெளியே நின்றான்.. அடுத்த பத்து நிமிடம் தான் மேனேஜர் வந்து விட்டார் இருவரையும் திட்டியவர்  பெண்ணிடம் மன்னிப்பும் கேட்டார்..  அவள் விட்டால் போதும் என வந்து விட்டாள்.. ஆனால் ஹோட்டலுக்கு வழி யார் சொல்வது..


எங்கு செல்வது என தெரியாது திருதிருவென முழித்தபடி நின்றவளின் அருகில் சென்று " ஹலோ.. மிஸ் கொடமிளகா.. " கௌதம்.. 


யார் என பார்த்தவள் சிரிக்கவா வேண்டாம்மா என யோசிக்க " அங்க பாருங்களேன்.. ஒரு காஃபி ஷாப் தெரியுதுள்ள அங்க போய் காஃபி குடிச்சுட்டு போலாம் வாங்க.." கௌதம்..


தயங்கியவாறே நின்றவளிடம் " அது ஓப்பன் ஷாப் தா.. வெளில தா டேபில்ல சேர் இருக்கு.. கூடவே நிறைய பேர் அங்க உக்காந்திருக்காங்க பாருங்களேன்.. ரொம்ப டென்ஷனா இருக்கிங்க கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்.. ப்ளீஸ் வாங்க.." என்றவனின் பின்னால் சென்றாள் அவள்.. 


" டூ காஃபிஸ்.." 


" இல்ல எனக்கு வேணாம்.. கொஞ்ச நேரம் உக்காந்திருந்துட்டு போய்டுறேன்.. " 


" சாக்லேட் சாப்பிடுவிங்களா..." அவளின் எச்சரிக்கை உணர்வை நினைத்து  சிரிப்புடன்‌.. 


" ஹாங்.." 


" கவர் பிரிக்காத சாக்லேட்.. இதோ இது மாறி.. உங்களுக்கு ஒன்னு கொண்டு வரச் சொல்லவா.." தன்னிடம் இருந்த சாக்லேட்டை காட்டி கேட்டான்.. புன்னகை மாறவே இல்லை.. 


சில நொடிகள் யோசித்தவள் ' சரி ' என தலையசைக்க இரண்டு சாக்லேட் வாங்கி தந்தான்.. சாப்பிட்ட பின்னே இதயத்துடிப்பு சீராகுவதை போல் உணர்ந்தவள் தேங்க்ஸ் சொல்லி செல்ல முயன்றாள்.. 


" நா ஆட்டோ பிடிச்சு தரவா.. " 


" ஐய்யோ.. தனியாவா.. வேறெங்கயாது கூட்டீட்டு போய்ட்டா.. " என பயந்தவள் யாரை நம்புவது என்றே தெரியவில்லை.. 


" நீங்க தங்கியிருக்குற ஹோட்டல் இங்கருந்து டூ யூ த்ரீ கிலோ மீட்டர் இருக்கும்... இந்த ஸ்டெயிட் ரோட க்ராஸ் பண்ணிட்டா.. பஸ் ஸ்டாப் வரும் போய்டலாம்.. இந்த ரோட்ல நடந்து போறதுல எந்த பிரச்சனையும் இல்லன்னு நெனைக்குறேன்.. பாத்து போங்க .... " 


" பஸ் ஸ்டாப் வர கூட வாரிங்களா.. ப்ளீஸ்.." தயக்கத்துடன்..


" சரி வாங்க போலாம்.‌." என்றவன் தேடிப் பிடித்து ஒரு இரும்பு ராடை எடுத்து வந்தான்.. அவளின் அவநம்பிக்கையை போக்க..


" இந்தாங்க.. என்னோட வாய் சும்மாவே இருக்காது.. எடக்கு மடக்கா எதாவது கேட்டேன்னா.. ஒரே போட போட்டுடுங்க.. சரியா.." என்க . 


சிரிப்புடன் வாங்கி கையில் வைத்துக் கொண்டாள்.. இரவு  பத்து மணியை நெருங்கியதால் உணவும் உண்ட பின்னரே நடந்தனர் இருவரும்.. 

என்ன பேசினார்கள் என்றால் தெரியவில்லை.. ஸ்வீட் நத்திங்ஸ்.. 


நூறு மீட்டர் தொலைவில் ஸ்டாப்பிங்.. ஆனால் அதை கடந்து செல்வதில் சிக்கல்.. ஒரு பக்கம் மரங்கள் காடு போல் இருக்க.. மறு பக்கம் காங்ரீட் காடு.. அவளின் கைகளைப் பிடித்து அந்த காங்ரீட் காட்டின் ஓரத்தில் மறைந்து கொண்டான்.. 


" என்னாச்சு.." பெண் . 


" அங்க பாரேன்.." ஸ்டாபிங்கின் அருகில் ஏழு பேர்.. கடந்து செல்லும் பெண்களிடம் வயது வித்தியாசம் பார்க்காமல் வம்பிழுத்துக் கொண்டிருந்தனர்...


" ஐய்யையோ.. இப்ப என்ன பண்றது.. இங்க அப்பார்ட்மெண்ட்ஸ் குள்ள போய்  தப்பிக்கலாமா.." 


" இல்ல.. அது சரிவராது.." 


" ஏ.." 


“ஏன்னா செக்யூரிட்டி உள்ள விடமாட்டான்‌.. “


“அப்ப செடிக்குள்ள.. “


" செடியில்ல சின்ன சைஸ் காடு.. இந்த ஏரியால சிறுத்த அப்பப்ப நடமாடுமாம்.. மனுஷன கூட சமாளிக்கலாம்.. ஆனா அத.. முடியாது.. " 


" அப்ப அவிங்கள கடந்து தா போனுமா.." 


" இருங்க கொஞ்சம் யோசிப்போம்.." என்றவன் அவளை நோட்மிட்டான்.. 


நிலவுக்கு போட்டியாக ஜொலித்து அவளின் முகம்.. கலைந்து போன சிகையிலும் அவளின் அழகை சிறப்பாய் பறை சாற்றியது‌.. கோவைப் பழமென சிவந்த அதரங்கள் , மகர மீன் போன்ற கண்கள் , அர்ஜுனனின் வில்லுக்கு போட்டியாக இரு புருவம் , இரு முடிக்கற்றைகள் தவழ்ந்து கொண்டிருக்கும் பிறை நெற்றி என வர்ணித்துக் கொண்டே செல்லலாம் அவளை.. அப்படி ஓர் அழகு அவள்.. 


வெடுக்கென அவளின் துப்பட்டாவை பிடுங்கியவன்.. தான அணிந்திருந்த ஜாக்கெட்டை கொடுத்து.. 


 " உன்னோட குர்த்திய ஜீன்ஸ்குள்ள இன் பண்ணிக்க.. முடிய தூக்கி கொண்ட போட்டுக்க.. இத வச்சு தலைய கவர் பண்ணிக்க( கேப்).. அப்பறம் இந்தா.. இத ஜாக்கெட்டோட பாக்கெட்ல வச்சுக்க.. இத எப்படி  யூஸ் பண்ணணும்னு தெரியுமா... ஓகே.. முக்கியமா தோல்லையும் கண்ணுலயும் படுற மாறி அடி.. உம் பக்கம் வந்தா மட்டும் யூஸ் பண்ணு.." என பெப்பர்ஸ் ஸ்ப்ரேயை அவளிடம் தந்து அதை உபயோகிக்கும் முறையையும் சொல்லித்தந்தான்.. 


இரும்பு ராடை தன் டீ சர்ட்டுக்குள் மறைத்தவன் மரத்தின் மேலேறி சாலையைக் கண்டான்.. பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது தொலைவில்.. அது அவர்களின் ஸ்டாப்பிங் வரும் டைமிங்கை கணக்கிட்டு அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.. கௌதம்.. 


பத்திரமாக செல்வார்களா..


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி




கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...