முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 36

அத்தியாயம்: 36 


பொய்யான கோபம் என தெரிந்தும் உண்மையாகவே தவிப்பது நட்பு !.......


கவரை ஆட்டிய படி ஹோட்டல் லாபியில் நடந்தவனை கோபமாக எதிர் கொண்டாள் ஹரிணி.. 


" நீ திங்ஸ் வாங்க போனியா இல்ல லோடு மேன் வேல பாக்க போனியா.. ஃபோன சைலெஸ்ல போட்டுட்டு எங்க ஊர் சுத்திட்டி வர்ரடா.. எரும.." 


" லோடு மேனா?.. பாக்க ஜிம் பாடி மாறி தெரிஞ்சாலும் அந்த கஷ்டமான வேல பாக்க நம்மலால முடியாதுபா.. இந்தா.. " சமாதானப்படுத்த சாக்லேட்டை திணித்தான் அவள் வாயில்..


" ஏ லேட்..." சாக்லேட்டை சுவைத்த படி.. 


" வர்ர வழில.. ஒரு பெண்ணு.. ஹெல்ப் பண்ணுங்க ஹெல்ப் பண்ணுங்கன்னு ஒரே கண்ணீரு.. அந்த புள்ளைக்கு ஃபாதர் தெரசா வா உதவி செஞ்சுட்டு.. நோபல் பரிசுக்காக காத்திட்டிருக்கேன்.." பெருமையாக.. 


" ஓ.. ஆம்பளங்கிறதுனால நீங்க ஃபாதர் தெரசா வா.. எங்க போய் யார்ட்ட வம்பிளுத்துட்டு வந்தியோ.. உன்னைய தெரியாதா எனக்கு..‌ " அவனின் நெற்றியில் வடிந்திருந்த சிறு இரத்தத்தை கண்டவள் துடித்துத்தான் போனாள்..


" என்னடா இது.. ஐய்யோ ரத்தம் டா.. வா.. எப்படிடா அடி பட்டது.. ஐய்யோ... வலிக்குதா.. பாத்து கவனமா இருக்கக் கூடாதா.. யாரு இத பண்ணா.." காயத்திற்கு மருந்திட்ட படியே கேட்டாள்.. கௌதம் நடந்ததை குட்டி ஃப்ளாஷ் பேக்காக சொல்லத் தொடங்கினான்..


ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.. சில அடி தூரத்திற்கு முன்பே , அந்த இளைஞர்கள் போடும் கும்மாளச் சத்தம் கேட்டது..


' எந்த ஆங்கிள் ல இருந்து பாத்தாலும் இவள பையன்னு  சொல்லவே முடியாது.. அந்த கொடுரக் கொரிலாக்கள் நம்பாதுகளே.. ஐய்யோ ஆண்டவா என்ன பண்ணப் போறேனோ.. பத்திரமா ரூம் போய் சேந்து படுக்கைல விழுந்துனும் டா சாமி..' என உள்ளுக்குள் வேண்டியவன்.. 


வெளியில்  ' வாங்கடா எவனா இருந்தாலும் பாத்துக்கலாம்.. ' என்பது போல் முகத்தை வைத்து கொண்டான்.. 


" ஏய்.. வா.." என கை காட்டினான் அவர்களுள் ஒருவன்..


தூரமாக அவளை நிறுத்தி வைத்து விட்டு இவர்களிடம் வந்தான் கௌதம் " சொல்லுங்கண்ணே.. என்ன வேணும்..." கன்னடத்தில்..


"  அது யாரு தூரமாக நிக்க வச்சிருக்க.. என்ன லவ்வா.." அவளை நோட்டமிட்டபடி..


" எம் பேரு ஹரி ண்ணா.. இந்த பக்கத்துல ஹோட்டல்ல தங்கிருக்கேண்ணா .. இது என்னோட ப்ரெண்டோ.....ட ப்.....பிரதர் ண்ணா.. ஆஆஆ....." 


" யார்ட்ட பொய் சொல்ற.. இத நாங்க நம்பிடுவோம்மா.." என கௌதமின் வயிற்றில் குத்தியவன் அந்த பெண்ணை நோக்கி நடந்தான்... 


பெப்பர்ஸ் ஸ்ப்ரேயை ரெடியாக வைத்திருந்தாள் பெண்.. கௌதம் குடுத்த சிக்னலில் வந்தவனின் கண்களைக் குறிபார்த்து அடிக்க.. இங்கு கௌதம் மற்றவர்களை வெளுத்துக் கொண்டு இருந்தான்..‌ அவனின் எண்ணம் முழுவதும் அவளை இங்கிருந்து அழைத்துச் செல்வதாக மட்டுமே இருந்ததால் சண்டையிடாமல்  அவன் அவர்களை சமாளித்து பஸ் ஏறிவிட்டான் அவளுடன்..


மூச்சு வாங்க ஏறியவள் சீட்டில் அமர்ந்து உடன் அழ ஆரம்பித்து விட்டாள் பெண்.. கண்டெக்டர் பயணிகள் அனைவரும் இவர்களை வித்தியாசமாக பார்க்க அசட்டு சிரிப்புடன் அவளின் அருகில் அமர்ந்தான்..


" எதுக்கு இப்ப டெம்ம ஓப்பன் பண்ற.. அதா சேஃப்பா வந்தாச்சில்ல நிப்பாட்டு அழுகைய.. எல்லாரும் நம்மள தப்பா நினைப்பாங்க.. " கௌதம் மெல்லிய குரலில் அரட்டினான்.. சத்தம் வராமல் அழுதாள் அவள்.. 


" என்னப்பா.. காதலர்களா..

வீட்டுல சொல்லலையோ.. ஹிம் ..... இந்தா காலத்து பிள்ளைகளுக்கு  அப்பா அம்மா படுற கஷ்டம் எங்க தெரியுது.. " கண்டெக்டர் கன்னடத்தில்.. 


" வீட்டுல சொல்லீட்டு வந்தோமா இல்ல சொல்லாம வந்தோம்மாங்கிறது உனக்கு தேவையில்லாததது.. டிக்கெட் கிழிக்குற வேலைய மட்டும் பாருங்க.. அடுத்தவங்க பேச்ச ஒட்டுக் கேட்டுட்டு... " கௌதம் பதிலாக கூறினான் கடுப்புடன்.. 


கோபமாக இருந்த அவனை பார்க்காமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தவளின் முகம் பிரகாசித்தது.. ஏனெனில் மாணவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்லும் வழியில் பேருந்து சென்றதால்.. ஸ்டாப் வரவும் இவனை கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள்.. சென்றே விட்டாள்... 


" ஹிம்.. ஃப்ளாஷ் பேக் ஓவர்.. கடைசி வரைக்கும் நா அந்த புள்ளையோட பேர கேட்கவே இல்லை.. இந்த காயத்த விட அது தா அதிகமா வலிக்கிது.. " நெற்றிக் காயத்தை காட்டினான் கௌதம்.. 


" சரி வா போலாம்... " 


" ஐய்யையோ.. இந்த நேரம் போய் அந்த பொண்ண தேடி கண்டு பிடிக்க போறோம்மா.. வேணாம் டார்லிங்...  கதவ தட்டுனோம்னா.. கண்ணி வெடி கன்ஃபாம்.." 


" உம் புத்திய.. ச்ச.. பொண்ண தேட இல்ல.. உன்ன அடிச்சவைங்கள பாக்க.. " 


" பாராட்டு விழா நடத்த போறீயா.. என்ன அடிச்சதுக்கு.. " 


" என்னோட ஃப்ரெண்டு மேல ஒருத்தன் கைய வச்சிருக்கான்.. அவன எப்படி சும்மா விட முடியும்... இப்படியே விட்டோம்னு வை ஊருக்குள்ள நம்ம பேரு கெட்டுப் போய்டும்.. வா.. இன்னைக்கு நா அவிங்கள தர்மாஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கல எம் பேரு ஹரிணி இல்ல.. வா டா.." 


" அப்டிங்கிற.. இரு நா நாலு சிப்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வாறேன்.. உக்காந்து ஆக்சென் ப்ளாக் பாக்க சரியா இருக்கும்.. " 


ஹரிணியும் கௌதமும் சேர்ந்து அவர்களை துவைத்து எடுத்து ஆஸ்பத்திரியில் காய போட்டனர்.. 


மைசூர்.. 


" இதோ பாரு.. மைசூர்ல நல்ல சந்தன கட்டையால செஞ்ச திங்க்ஸ் நிறையா கெடைக்கும்.. அதெல்லாம் விட்டுட்டு.. இதப் போய் வாங்கிறேன்னு அடம்பிடிக்குற.. அதுவும் ரேட் ஜாஸ்தியா இருக்கு.. உன்னோட சேவிங்ஸ் ஃபுல்லா காலியாகிடும் பரவாயில்லையா.." ஹரிணி .


" பரவாயில்ல.. நா சம்பாதிக்குவேன்.. பாரேன் எவ்ளோ அழகா இருக்கு.. இத போய்.. நீங்க பேக் பண்ணுங்கண்ணே.." கௌதம்..


அழகிய மெட்டல் வாட்ச் அது.. ஜோடியாக இருந்தது.. லேடீஸ் அண்டு ஜென்ஸ் என கப்பிளாக அணியக்கூடிய வெட்டிங் வாட்ச்.. விலை அறுபதாயிரம்.. அதனால் தான் ஹரிணி வேண்டாம் என்றாள்.. 


" யோவ் வெய்ட் பண்ணுய்யா.. மும்பைல இல்லாத வாட்சா.. கோல்ட் வாட்ச் கூட வாங்கித்தாறேன்.. இந்த மெட்டல் குவாலிட்டியா இல்ல.. சொன்னா கேளு.. வேண்டாம் இது.. " ஹரிணி கடைக்காரரை தடுத்தாள்.. 


" அண்ணா பேக் பண்ணுங்க..‌ இத என்னோட வொய்ஃப்க்கு ப்ரஷன்ட் பண்ணபோறேன்.. வாவ்.. சோ ப்யூட்டி.. " கற்பனையில் மிதந்த படி பில் போட்டான்.. 


" அதுக்கு மொத கல்யாணம் ஆகனும்..‌ ஹிட்லர் பண்ணி வைப்பாரா என்ன.. " பேசிய படியே அடுத்த கடைக்குள் சென்றனர்.. அது துணிக்கடை


" ஹரிணி நீ சேல கட்டி நா பார்த்ததே இல்ல.. அப்புறம் எதுக்கு உனக்கு இந்த விஷப் பரிச்ச... " கௌதம்.. 


ஒரு மணி நேரமாக கடையை பிரித்து மேய்ந்து ஐந்து புடவையை எடுத்தவள்  ஆறாவதாக எதை எடுக்கலாம் என தெரியாமல் கடைக்காரரை குழம்பிப் கொண்டு இருந்தவளிடம் கேட்டான் கௌதம்.. 


" சேல எதுக்கு வாங்குவாங்க கட்டத்தா.. இங்க பாரேன் க்ரீன் கலர் மை ஃபேவரேட் இது ஓகே வா.. " ஹரிணி..


" கட்டத் தெரியுமா உனக்கு.. வாங்கி வாங்கி செல்ஃப்ல அடுக்கித்தான வக்க போற..‌ எந்த கலரா இருந்தா என்ன.. " 


" ஏய்.. என்ன சொல்லிட்ட என்ன பாத்து.. இத ட்ரெடிஸ்னல் ஸ்டைல்ல தா கட்டனும்னு அவசியமில்ல..‌ இப்படி கூட கட்டலாம்.. " என சேலையை வெஸ்டன் மாடலில் கட்டி ஒரு ஃபேஷன் பரேட்டே நடத்திக் காட்டினாள் ஹரிணி..  


கடையில் உள்ளவர்கள் கை தட்ட.. "எல்லாத்தையும் முடிச்சுட்டு வா.. நா வெளில வெய்ட் பண்றேன்... " கௌதம்..


" ஓகே.. உன்னோட கிரெடிட் கார்ட மட்டும் எங்கிட்ட குடுத்துட்டு எங்க வேண்ணாலும் போ.. " ஹரிணி .


" எது.. " 


" பில்லு பே பண்ணிட்டு தந்திடுறேன்டா.. " ஹரிணி அப்பாவியாக.. 


" இனிமே கோடி ரூபா குடுத்தா கூட இந்த பொண்ணுங்க பண்ற ஷாப்பிங்கு வரவே கூடாது.. என்னம்மா அழைய விட்டு வேடிக்க பாக்குறாளுக..‌ இதுல ஹை லைட்டே வாங்குற எல்லாத்துக்கும் நம்மையே பில் போட வக்கிறது.. காப்பாத்து கடவுளே.. " என புலம்பிய படி வெளியே வந்தான்.. 


எதிர் கடையில் இருந்த மஞ்சள் வண்ண துப்பட்டா முன் தின இரவில் பார்த்த பெண்ணை ஞாபகப்படுத்தியது.. அவளின் ஷால் தன்னிடம் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவன் கடைக்கு சென்று அவளுக்கென புது துப்பட்டாவை வாங்கினான்.. 


" ஹிம்.. வாங்கியாச்சு.. ஆனா எங்க  எப்படி அந்த பொண்ண பாத்து இத நா அது கை ல சேத்து.. " என்றவன் தன் கையில் இருந்த கவரில் அதை போட்டான்..


தன் உள்ளுணர்வு எதோ உறுத்த திரும்பிப் பார்த்தவன் கண்களுக்கு தரிசனம் தந்தாள் அந்த முன்தின தேவதை.. 


" இது தா கும்பிடும் போன தெய்வம் குறுக்க வர்ரதுங்கிறதா.." என்றவன் அவளின் முன்னே‌ போய் நின்றான் . 


" ஹாய்.. " 


திருதிருவென முழித்தவள் பின் சிரிப்புடன் " ஹாய் " என்றாள்.. 


" நல்ல வேல ஹாய் சொன்ன.. எங்க என்னப் பாத்து ‌'யாருடா நீ ' அப்படின்னு கேட்டு பொது ஜனங்கள்ட்ட அடிவாங்கி விட்டுடுவியோன்னு நெனச்சேன்.. ஞாபகம் இருக்கு.. நல்லது தா.. இந்தா.. உனக்குத்தா.. " கவரை நீட்டினாள்.. 


அதை வாங்காமல் " உங்கள மறக்க முடியுமா ஸார்.. ஸாரி.. அன்னைக்கு நா ரொம்ப டென்ஷனா இருந்தேன்னா.. உங்ககிட்ட தேங்க்ஸ் கூட சொல்லாம கெளம்பிட்டேன்.. ரொம்ப ஃபீல் பண்ணேன்.. ஸாரி அண்டு தேங்க்ஸ்… இது எதுக்கு.." கவரை காட்டி கேட்டாள்.. 


" இது உன்னோட ஷால்.. உங்கிட்ட இருந்து வாங்கிட்டு போனேனே.. ஸாரி மா அது கிழிஞ்சு போச்சு.. அதா புதுசா வாங்கினேன்.. டேக் இட்.. " என்றவனிடம் இருந்து வாங்கிக் கொண்டாள்.. 


 " நீ தனியாவா வந்த மைசூர்க்கு..... " 


" இல்ல ஸார்.. அதோ அங்க இருக்காங்க ஃப்ரெண்ட்ஸ்.. அவளுங்க கிட்ட சொல்லிட்டு தா வந்தேன்.. தூரத்துல பாக்குறப்பே நீங்க தானான்னு சந்தேகமா இருந்துச்சு அதா பக்கத்துல பாக்கலாம்னு வந்தேன்.. உங்களோட டிரெஸ்ஸ நா எடுத்துட்டு வரலையே.. என்ன பண்ண பணம் தரவா.. " தயங்கியபடி..


" பணமெல்லாம் தேவயில்ல.. அதுக்கு பதில் எனக்கு வேற ஒன்னு வேணும்.. " குறும்பாக.. 


" என்....ன....." 


" பயப்படாத.. ஏடா கூடால்லாம் கேக்கல.. " என்றவன்‌ சுற்றிமுற்றி பார்த்து விட்டு அருகில் வந்து " உன்னோட பேர் என்னனு மட்டும் சொல்லிட்டு போ... ஏன்னா ஊரு பேரு தெரியாத பொண்ணுக்காக அடிவாங்குனா அது கெட்ட பேரு.. பேரு தெரிஞ்சா..' பாருங்க டா நா இந்த பொண்ணுக்க தா அடிவாங்கினேன்னு ' வீரத் தழும்பு காட்டலாம்ல.. அதா சொல்லு சீக்கிரம்.. " கண்சிமிட்டி அழகாய் கேட்டவனின் முகம் மனதில் ஆழமாய் பதிவில்லை என்றால் தான் ஆச்சர்யம்.. 


அவன் கேட்ட தோரணையில் அவள் சிரித்து விட்டாள்... சில நொடிகள் அந்த சிரிப்பில் மயங்கி போனான் கௌதமன்.. 


" இந்துமதி.. என்னோட பேரு.. " 


" ஹரிஹர கௌதமன்.. இது என்னோட பேரு.. " என கை நீட்டினான்.. 


கை குடுக்கவா வேண்டாமா என யோசித்தவள் பின் புன்னகையுடன் கை குலுக்கினாள்.. 


கைகளை பிரிக்க மனமில்லாமல் இருவரும் பிரித்தனர்.. பின் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்தபடியே வேறு வேறு திசையில் சென்றனர்.. 


கௌதமின் மனதில் இந்து, மதியாக இடம் பிடித்து விட்டாள் என்பதை உணரவே அவனுக்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது.. அதுவும் அவளை கிராமத்தில் பார்க்கவில்லை எனில் காதலை உணர்ந்திருக்க மாட்டான்.. 


என்றோ யாரோ ஒருவரால் நம் விதி தீர்மானிக்கப் படுகிறது.‌. அதை மாற்ற நினைத்தால் முடியுமா..‌


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  

 அன்பே 37

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...