அத்தியாயம்: 37
காலை 9 மணி
அறை முழுதும் உடைகள் அங்கும் இங்கும் இறைந்து கிடந்தது.. யானை புகுந்த வெண்கல கடை போல்..
" டேய்.. என்னடா பண்ணி வச்சிருக்க.. நீ இன்னும் கிளம்பலையா.. சிவி அண்ணால்லாம் கிளம்பி லாபில உக்காந்திருக்காங்க... நீ என்னடா பண்ணிட்டு இருக்க..." ஹரிணி கத்திக் கொண்டு இருக்க.. பதில் தராமல் கௌதம் எதையோ தேடிக்கொண்டு இருந்தான்..
" எத தேடுறன்னு சொன்னா.. நானும் சேந்து தேடுவேன்ல.."
" எல்லாம் உன்னால தா.. வாங்கும் போதே வாய வச்ச.. நல்லாவே இல்லன்னு... பாரு காணும்.. நீ தா காரணம்.. " கௌதம் கோபமாக..
" நானா.. ம்ச்.. எத காணும்னே எனக்கு தெரியாது.. அதுக்கு நான் தா காரணமாம்.. என்னோட சேரீ எல்லாம் இப்படியா தூக்கி எரிவ.. லூசு.. எரும மாடு... " ஹரிணி .
" எங்க என்னோட வாட்ச் ச.. உன்னோட ட்ரெஸ் கவர்ல தா போட்டதா நியாபகம்.. மரியாதையா விளையாடாம எடுத்து குடுத்துடு.. ப்ளீஸ்.. " கெஞ்சலாக..
" என்னது.. அறுபதாயிரத்த தொலச்சுட்டியா.. இது தெரிஞ்சா ஹிட்லர் உன்னைய பீரங்கி முனைல நிக்க வச்சு போட்டுட போறாரு.. எங்க டா வச்ச.. கடைசியா எந்த கவர்ல போட்ட.. யோசிடா.. "
" கடைசியா நீ ஃபேஷன் ஷோ நடத்துனியே அந்த கடைல தா பார்த்ததா நியாபகம்.. அப்பறம்... அப்புறம்... அய்யையோ.. " என தலையில் கையை வைத்தான்..
" என்னாச்சு.. "
"அன்னைக்கு காப்பாத்துனேன்னு சொன்னேன்ல அந்த பொண்ணுக்கு ஷால் வாங்கி குடுத்தேன்.. அந்த கவர்ல தா வாட்ச்சும் இருந்தது.. ம்ச்... அவ்ளோதா போச்சு.. " கவலையாக..
" சரி உனக்கு நா வேற வாங்கித்தாரேன்.. நீ இப்ப இந்த கோட்ட போட்டுட்டு வருவியாம்.. நாம செமினார்க்கு கிளம்புறோம்மாம்.. " சிறு பிள்ளையை சமாதானம் செய்வது போல் செய்து அவனை தயார் படுத்தினாள் ஹரிணி .
அனைவரும் கிளம்பி பெங்களூரின் ஒரு ஐடி நிறுவனத்திற்கு சென்றனர்.. அங்கு ரிசப்ஷனிஸ்ட் அவர்களை வரவேற்று மீட்டிங் ஹாலில் வெய்ட் பண்ணுமாரு கூறினர்..
"மிஸ்டர் வர்மா என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா.. வந்து கிட்டத்தட்ட ஒன்னவர் ஆகுது.. கொஞ்சம் கூட டைம் வேல்யூவே தெரியல.. வரட்டும் பாத்துக்கலாம்.. " ஹரிணி.. காத்திருக்கும் அளவுக்கு பொறுமை இல்லாமல் இருக்க..
" இது எம்பீஏ ஸ்டூடெண்ட் காக அரேஜ் பண்ணது.. உனக்கென்ன வேல.. ஃபஸ்ட் உன்ன உள்ளயே அலோ பண்ணக் கூடாது தெரியுமா.. வாய மூடிட்டு சும்மா இரு.. வர்மா ஸார் கோபக்காரராம்.. மூனு நாள் எங்க எல்லாத்தையும் அவரோட இன்டஸ்ட்ரியல் மேனேஜ்மெண்ட் பத்தி லைவ் டெமோ தரப்போறாரு... அத கெடுத்துடாத.. ப்ளிஸ் கொயட்.. " சுமித்ரா கடுகடுப்பாக..
" வரும்போது தெரு கடசீல இருக்குற கடைல மொளகா பஜ்ஜி வாங்கி சாப்பிட்டீங்களோ.. செம காரமா பேசுறீங்க.." கேலி செய்தவளை முறைத்தாள் சுமி..
" கௌதம் போரடிக்குது.. என்ன பண்ண.." ஹரிணி..
" என்னைய மாறி நீயும் ஃபோன்ல கேம் வெளாடு.. டயம் போறதே தெரியாது.. " கௌதம்..
" லூசு... "
" எஸ்க் க்யூஸ் மி... ஸ்டுடெண்ட்ஸ் மட்டும் இங்க ஸ்டே பண்ணுங்க.. மத்தவங்க வெளில வெய்ட் பண்ணுகளேன்.. ப்ளீஸ்... ஸார் வர்ர டைம் ஆச்சு.. ரெடி ஃபார் தேட்... " என கூறி ஹரிணியையும் மற்றவர்களையும் வெளியேற்றினாள் அங்கு பணிபுரியும் பெண் ஒருத்தி..
இருக்கையில் அமராமல் கண்ணாடி கதவு வழியே கௌதமை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தாள் ஹரிணி.. கௌதமிற்கு பாடம் நடத்தப்பட்ட போதும் இவள் கவனமாக கவனித்து தெரிந்துக் கொண்டாள்..
மூன்று நாட்களும் முடிய.. சுமி உள்ளிட்ட சிலர் ஊர் திரும்பி இருந்தனர்... கடைசி நாள் என வர்மா அவர்களுக்கு ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்.. பப்பில்..
நட்சத்திரங்களுக்கு போட்டியாக விளக்குகள் அங்கு எரிந்து கொண்டிருந்தது.. மகிழ்ச்சி கடலில் அனைவரும் இருக்க கௌதம் மட்டும் தத்தளித்தபடி வந்து ஹரிணியின் பின்னால் ஒளிந்து கொண்டான்..
" டேய் ஐஸ் பாய் விளாடுற இடமா இது.. யாருடா தொரத்திட்டு வர்ரா.. " ஹரிணி..
" யாருன்னு தெரிஞ்சா நீயும் டேபிள்க்கு கீழ ஒளிஞ்சுக்குவ.. " கௌதம்..
" ம்.. யாரது... " என பார்க்க அங்கு இருபத்தி ஒன்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் இவர்களை பார்த்த படி வந்து கொண்டிருந்தான்.. அவன் அஸ்வத்..
" ஹாய் பேபி.. யூ லுக்கின் கார்ஜியஸ்... " என்றவன் கைகளின் சோமபானம் கண்களில் மாதுவை கண்ட மயக்கம்..
' நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல ' என்பது போல் அலட்சியமாக திரும்பிக் கொண்டாள் ஹரிணி..
" இந்த திமிரு தான் பேபி எனக்கு உன்ட்ட பிடிச்சதே.. அத எப்படி அழிக்கனும்னு எனக்கு தெரியும்.. சீ யூ ஷூன்.. " என்றவன் கண்களில் பழிவாங்கும் வெறி இருந்தது..
இருக்காதா பின்னே ஹரிணி ரிஜெக்ட் செய்த மாப்பிள்ளைகளில் இவனும் ஒருவன்.. நல்ல படிப்பு ,நல்ல குடும்பம் , நல்ல வருமானம் , கிரேட் பிஸ்னஸ் மேனும் கூட.. கண்டது ஹரிணி மேல் அவனுக்கு ஒரு ஈர்ப்பு.. அதை காதலாக வளர்த்து கல்யாணம் வரை கொண்டு செல்ல திட்டமிட்டு பெண் கேட்டுச் சென்றான்.. அவளின் அண்ணன்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை .
அஸ்வத்திற்கு ஹரிணியின் கூடவே சுற்றும் கௌதமை பிடிக்கவில்லை.. அவனின் நட்பை துறந்தால் தான் கல்யாணம் என்றான்.. 'அப்படி ஒன்னு நீ எனக்கு தேவையில்லை..' என்று வந்துவிட்டாள்.. தன்னை வேண்டாம் என்றவளை பழிவாங்க நேரம் வரும் என காத்துக் கொண்டு இருந்தான் அஸ்வத்..
நேரம் வந்தது.. அவளின் கையில் வைத்திருந்த கூல் டிங்க்ஸ் கிளாஸ்ஸில் அவளுக்கும் கௌதமிற்கும் தெரியாமல் போதை மாத்திரையை கலந்து விட்டு வந்தான்.. அவள் அலட்சியமாக திரும்பிய சமயத்தை பயன்படுத்திக் கொண்டு.. அதனால் தான் சவால் விடுவது போல் பேசினான்..
போதையில் தடுமாறும் அவளை தனியாக அழைத்துச் சென்று அவள் பெண்மையை கபளீகரம் செய்வது... இல்லை எனில் நான் அடைய நினைத்ததை கௌதம் செய்வான்.. போதையில் இருக்கும் அழகான பெண்ணை அப்படியே விட்டுச் செல்லும் அளவுக்கு அவன் நல்லவன்னா என்ன.. இரண்டில் எது நடந்தாலும் ஹரிணியின் பெயர் கெடுவது உறுதி.. இது அஸ்வத்தின் திட்டம்.. கௌதமின் கண்ணியத்தைப் பற்றி தெரியாதல்லவா அதான் தவறாக கணித்து விட்டான்..
மறுநாள் காலை..
ஹரிணியின் அங்கங்கள் அனைத்தும் வேலை செய்ய மாட்டேன் என்று போராட்டம் பண்ணியது.. அதை அருகில் மேஜையில் இருந்த லெமன் ஜூஸ்ஸை குடுத்து சமாதானப் படுத்தியவள் எழுந்து அமர.. சோஃபாவில் கண்கள் சிவக்க கோபமாக அமர்ந்திருந்த கௌதமைக் கண்டாள்..
பொதுவாக கௌதம் ஹரிணி மீது கோப படமாட்டான்.. வந்து விட்டால் அதை போக்குவது வெகு சிரமம்....
" கௌத...ம்.. " என நடக்க முயன்றவள் தடுமாறி மீண்டும் படுக்கையில் விழுந்தாள்..
" டூ யூ ஹவ் எனி சென்ஸ்.. பொண்ணுங்களுக்கு நடக்குற அநியாயத்த பத்தி நாளுக்கு நாள் பேப்பர்ல , நியூஸ் லன்னு எவ்ளோ பாக்குற.. பொண்ணுங்க பாதுகாப்பு ஆம்பளைங்க கைல மட்டும் இல்ல அவுங்க கைல தா இருக்கு.. எப்பவும் நெருப்பு மாறி இருக்கனும்... தப்பான எண்ணத்தோட வர்ர எவனா இருந்தாலும் பஸ்பமாக்கிடனும்.. நீ என்னடான்னா.. ச்ச.. ட்ரிங்ஸ் பண்ண மாட்டேன்னு சத்தியம் செஞ்சவதான நீ.. மூச்சு முட்ட குடிச்சுட்டு.. பெனாத்திட்டு.. உன்ன ஷேப்பா கூட்டீட்டு வர்ரதுக்குள்ள நா பட்ட பாடு எனக்கு தா தெரியும்.. " என்றான் ஆத்திரம் பொங்க..
சும்மாவா கழுகு போல் ஹரிணியை கொத்தி தின்ன காத்துக்கொண்டிருந்த அஸ்வத்திடம் இருந்து.. இதற்காவே காத்திருக்கும் சில ஈனப்பிறவிகளிடம் இருந்து காப்பாற்றி.. அறையில் தனியாக அவளை விடவும் முடியாமல்.. கூட இருக்கவும் முடியாமல்.. அவன் பட்ட தவிப்பு அவனுக்கு மட்டுமே தெரியும்.. போதையில் இருந்த அவளுக்கு பார்கவி போல் எதாவது நேர்ந்து விடுமோ என்ற நினைப்பே மன அழுத்தத்தை தந்தது அவனுக்கு.. அதனால் தான் கோபம்..
" ஸாரி டா.. பட் நா ட்ரிங்ஸ் பண்ணல.. ப்ராமிஸ்... " சின்னக் குரலில்.
" பொய்யி.. பொய் வேற சொல்லுறியா.. ச்ச.. உன்ன என்னமோன்னு நெனைச்சேன் நீயும் மத்த பணக்கார பொண்ணுங்க மாறி.. ட்ரிங்ஸ் அடிக்க ஆரம்பிச்சுடேல்ல... " கோபத்தில் கத்தினான்..
" நா ட்ரிங்ஸ் பண்ணல.. " அழுத்தமாக..
" ஷட்.. அப்.. பேசாத.. என்ட்ட இனி நீ பேசவே பேசாத.. " என வெளியே சென்றான்..
" நம்புடா ப்ளீஸ்.. நா ட்ரிங்ஸ் பண்ணல... " என செல்லும் அவனை தடுத்தாள் ஹரிணி..
அவளை பேச விடாது தள்ளிவிட்டு செல்ல தரையில் விழுந்தவள்.. " கௌதம் பிளீவ் மீ.. நா பண்ணல.. " என கத்தினாள்..
சிறு நேரம் கழித்து எந்த சத்தமும் வராமல் இருக்கவே.. கௌதம் சென்று பார்த்தான்.. அங்கு ஹரிணி மணிக்கட்டில் கீறலுடன் ரத்தம் சொட்ட அமர்ந்திருந்தாள்..
கௌதமை பார்த்தவள்.. " நம்புடா.. நா ட்ரிங்ஸ் பண்ணல.." என்றபடி மயங்கிச் சரிந்தாள்..
இரண்டு மணி நேரம் அவனது இதயம் தன் துடிப்பை அதிகமாக்கிக் கொண்டு போனது.. பார்கவியின் நினைவு அவனுக்குள் அதிகமாகவே வந்தது.. தன் தங்கையென எண்ணும் ஹரிணியை இழந்து விடக் கூடாது என்பதே அவனின் வேண்டுதலாக இருந்தது..
" ஸார்.. சீ இஸ் ஆல் ரைட்.. நவ் யூ கேன் டாக் டூ ஹெர்.. " நர்ஸ் வந்து சொன்ன பின் தான் இழுத்த மூச்சை சீராக விட்டான் அவன்..
அறைக்குள் வந்தவனின் கண்களில் நீர்.. அதை துடைத்தவன் வேகமாக அவளின் அருகில் சென்று கன்னத்தில் ஓங்கி அறைந்தான்..
கன்னத்தில் கை வைத்தபடி அதிர்ந்து பார்த்தவளிடம் " லூசா நீ.. சூசைட் அட்டென் பண்ற அளவுக்கு இப்ப என்ன நடந்திடுச்சி... ச்ச.. " என கோபமாக கத்தியவனை மிரண்ட பார்த்துக் கொண்டிருந்தவளை தன் மார்போடு அணைத்தான்.. இதயம் தன் துடிப்பை சீராக்கி கொள்வதை உணர்ந்தனர் இருவரும்..
ஹரிணியும் கௌதமை அணைத்து " ஸாரி கௌதம்.. உன்ன நம்ப வைக்க எனக்கு வேற வழி தெரியல.. ப்ளீஸ்.. என்னோட லைஃப்ல நீ எனக்கு ரொம்ப இம்பாடென்ட்.. என்ன விட்டு எந்த சூழ்நிலையிலும் போய்டாத.. நீ இல்லாம நா நானே கிடையாது... போய்ட மாட்டேல்ல... " சிறு குழந்தையின் ஏக்கத்துடன் ஹரிணி சொல்ல..
" இல்ல டார்லிங்.. உன்ன விட்டு எங்கயும் போக மாட்டேன்.. நீ இல்லாம நானுமே கிடையாது.." கண்ணீருடன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு..
" இன்னோரு மொற இப்படில்லாம் பண்ணாத.. என்னால தாங்கிக்க முடியாது டார்லின்.. " என்றவன் ஹரிணி மீது வைத்த அன்பு தூய வைரத்தை ஒத்தது..
அவர்களின் நட்பு நம்பிக்கை சார்ந்ததாக மட்டும் அல்லாது ஒரு தாய்க்கு சேய் மீது இருக்கும் தாய்மையாக இருந்தது.. ஒருவரின் அணைப்பில் மற்றோருவர் பாதுகாப்பாய் உணர்ந்தனர்..
தாயிடம் கூட
சொல்ல முடியாத
விஷயங்களை
தோழியிடம் சொல்வதும்
பிரச்சினை என்றால்
என் நண்பன் துணை நிற்பான்
எனும் நம்பிக்கையே ஆண் பெண் நட்பு .
அதற்கு இலக்கணமாய் இருந்தனர் இருவரும்..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..